Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல்-(காட்டு ரோஜா)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அந்த ஒற்றையடிப் பாதை மிகவும் குறுகலாக இருந்தது.

இருபுறம் இந்தச் செடிகள் உரசி உராய்ந்து கொண்டு தான் இறங்க வேண்டியதாய் இருந்தது.

நான்கு அடிகள் தான் இறங்கியிருப்பாள்.

கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு ஒரு முதியவர் அவசரமாக நடந்து வந்தார்.

நில்லு தாயி! எங்கே போகிறாய்?

அ.... அதோ அந்த ஏறிக்கிட்டே போகலாம்னு ஆசைப் பட்டு.....

அவள் முடிப்பதற்குள் இடைமறித்தார் முதியவர்.

தனியாகப் போக வைத்தாய் சாரல் அடிக்குது யானை சிறுத்தை திடீர் திடீர்னு நீங்க வந்து தொலைக்கும் வயசு பெண் ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதே.

கனிஸ்ரீவின் அழகிய முகம்.. அனிச்ச மலராய் வாடியது.

சரி ஐயா....! நமக்கு என்னென்னு போகாம..... அக்கறையோ கிட்ட வந்து நல்லதை எடுக்க சொல்றீங்க....... நன்றிங்க ஐயா.....!

வேடிக்கை பார்ப்பதற்கு ...... ஆயிரம் இடம் இருக்கு தாயீ....! வேணும்னா அந்தப் பக்கம் போய் பாரு..... எப்பவும் கவனமா தாய் சொல்லிவிட்டு ...... அந்த முதியவர் விலகி நடந்தார்.

நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன் சருமத்தை தான் நீங்க பார்த்துக்கோங்க என்று முதியவர் யாரிடமும் செல்போனில் பேசியது கனிஸ்ரீ செவிகளில் ஸ்பரிசத்தது.

சரிவின் மீது ஏறிக் கொண்டிருந்தவளை மீண்டும் ஒருமுறை நோட்டம் மிட்டார் முதியவர்.

இவர் அவரை எரித்ததும் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்ட நடை போட்டார் முதியவர்.

அவளது மனதில் சின்னதாக ஒரு சந்தேகம் எழுந்தது.

நம்மைப் பற்றி இந்தப் பெரியவர் யாரிடமோ சொல்வது போல் இருக்கிறது ?

முன்பின் தெரியாத என்னை பற்றி ....... சொல்வதற்கு என்ன இருக்கப்போகிறது?

தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாலும் ...... உள்ளே ஒரு சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது.

யாரோ என்னை கவனிக்கிறார்கள் போலிருக்கிறதே? இனம் புரியாமல் உள்ளுணர்வு எச்சரிக்கிறது?

அவள் சுற்றும் முற்றும் பார்வை பார்வையால் தேடினால் ஈ, காக்காய் நடமாட்டம் இல்லை.

அந்த முதியவர் வெகு தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சுற்று வட்டாரத்தில் யாரும் தென்படவில்லை அப்புறம் ஏன் எனக்கு இப்படி ஒரு உறுத்தல்?

நான் தான் ஆனா அனாவசியமாக கண்டதும் நினைத்து குழம்புகிறான்? அப்படித்தான் இருக்க வேண்டும்.

என்னை வேவு பார்த்து யாருக்கு என்ன ஆகப்போகிறது?

நிம்மதியாக ரசிப்பதை விட்டுவிட்டு எதற்கு வீணாய் குழம்புகிறேன்?

சரி சிறிது தூரம் நடத்தலாம்......

அவர் பத்தடி தூரம் நடந்து இருப்பாள்.

சாலை ஓரத்தில் அந்த பிரம்மாண்டமான உருவத்தில் மிளகு கொடி படர்ந்து இருப்பதை பார்த்தாள்.

மரத்தின் பின்னால் இருந்த அடர்சிவப்பு செண்டாய் காட்டு ரோஜாக்கள் மலர்ந்து.... காற்றில் தலையாட்டிக் கொண்டிருந்தன.

அப்பப்பா....! என்ன ஒரு அழகு? எவ்வளவு பெரிய காட்டு ரோஜா? கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்குதே?

? காட்டுரோஜா ?























பெரிய தாமரைப்பூ சைசுக்கு பூத்திருக்கிறது?

ஒரே பூ மட்டும் தொட்டுப்பார்த்து மகிழ்ந்தால் என்ன?

மனதில் தலையை தூக்கி ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆர்வமாய் புள்ளிகள் பெரிய அவளையுமறியாமல் புன்னகை பூத்தபடி அந்த மரத்தின் அருகே சென்றாள்.

காட்டு ரோஜா செடியின் கிளை....
தூரத்தில் இருந்து பார்த்த போது மரத்துக்கு வெகு அருகில் இருந்தது போல் இருந்தது.

அருகில் வந்து பார்த்தால் கிளை கைக்கு எட்டவில்லை.

மரத்தின் பின்னால் சரிவு இருந்தது.

இந்தக் கிளையில் இருக்கும் பூவை தொட்டு பார்க்க வேண்டுமென்றால்.... சரிவில் காலை வைத்து இறங்க வேண்டும் போலிருக்கிறதே?

மழைத் தண்ணீர் பட்டு இருப்பதால் வழுக்கலாய் பாதை தெரிகிறதே?

களிமண் கலந்த பாதை என்பதால் வலிக்கு விடும் அபாயம் இருக்கிறதே ?சரிவின் கீழே சலசலப்பை ஓடை ஓடுகிறதே?

அகலமாய் ஒரு எட்டு வைத்தால் போதும்....

கிளையை எட்டிப் பிடித்து விடலாம்.

பேசாமல் போய் விடலாமா?

அரண்மனைத் திரும்பிவிட யோசித்தாள்.

பலம்வாய்ந்த காற்று வீழ்த்தியது காட்டு ரோஜாக்கள் அழகாய் தலைய அசைத்து

இதழ் மேல் நீர் துளிகளுடன் பார்ப்பதற்கே கொள்ளை அழகுடன் மனதை ஈர்க்கவே அவர் தீர்மானித்து விட்டாள்.

காட்டு ரோஜாவைத் தொட்டு பார்த்துவிடலாம் என்று துணிந்து வலதுகாலைத் தூக்கி சரிவில் வைத்தாள்.

வைத்தது தான் தாமதம்....!

கலி மண்சரிவு ஆயிற்றே?

சரக் என்று வழுக்கி விட்டது.

நிலைதடுமாறி பொத்தென்று விழுந்து விட்டாள் கனிஸ்ரீ.

சறுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டு போவது போல் அவளது மேனி வழுக்கியபடி மின்னல் வேகத்தில் பள்ளத்தை நோக்கி சென்றது.

இப்படி அநியாயமாக வழுக்கி விடும் என்று அவள் கனவிலும் கருதவில்லை.

அதீத அதிர்ச்சியில் வீலென்று அலறினாள் . அதிர்ச்சியில் கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் அலறிய அலறல் அந்த கணம் எங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.

வழிக்கியபடியே சென்று...... ஆற்றிலோ ஓடையிலோ விழுந்து சாகப்போகிறோம் என்று எண்ணினாள்.

பள்ளத்தில் நெருங்கியதும் தண்ணீர் சலசலத்து சத்தம் அதிகம் கேட்டது.

சாய் பாபா!"

பயத்தில் இஷ்ட தெய்வத்தை துணைக்கு அழைத்தால் அவள் பூமி அசுர வேகத்தில் வழிக்குக் கொண்டுவந்து மெத்தென்று எதன் மீது மோதியது.

ஆத்துக்குள்ளும் விழவில்லை. பாறையில் மோதி காயப்பட வில்லை.

எதன் மீது வந்து விழுந்திருக்கிறேன் ? லேசாய் சொரசொரப்பாய் சிறு சிறு முடிகள் இருப்பது போல் தெரிகிறதே?

அந்த ஓடைத் தண்ணீரின் கரையோரமாய்..... படுத்துப் புரண்டு எப்படி பசுங்கிளியை சர்வசாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தது யானையின் மீது தான் விழுந்தாள்.

கண்விழித்துப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் கனி ஸ்ரீ.

அலறக்கூட முடியாமல் வாயடைத்து போனாள்.

இன்னைக்கு எனக்கு கஜேந்திர மோட்சம் தான் முடிவு கட்டிவிட்டாள்.

இந்த யானை மட்டும் அல்ல நடு ஆற்றிலும் அக்கரை ஓரமாக மூன்று நான்கு யானைகள் குஷியாக ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தார்.

தும்பிக்கையை நீரை உறிஞ்சி தங்களது தலையிலும் முதுகிலும் பீச்சி அடித்துக் கொண்டது.

ஒரு இரண்டு யானைகள் நீரில் மூழ்கி தத்தளித்து வண்ணம் இருந்தது.

சற்றென்று அந்த யானை விட்டு இரண்டு அடி தள்ளி புரண்டாள்.

எழுந்து நிற்பது கூட அவளால் முடியவில்லை.

சப்த நாடியும் ஒடுங்கிப் போய் இருந்தது.

பயத்தில் இதயத்துடிப்பை தாறுமாறாக எகிறியது.

நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

கண்கள் சொருகி மூர்ச்சையாகிப் போனாள் கனி ஸ்ரீ.

? யார் அந்த எஜமான்? ?

? அந்த முதியவர் யாரிடம் செல்போனில் பேசினார்? ?

? கனி ஸ்ரீ உயிர்தப்பிலா??
 

Attachments

  • 68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652...jpeg
    68747470733a2f2f73332e616d617a6f6e6177732e636f6d2f776174747061642d6d656469612d736572766963652...jpeg
    38.6 KB · Views: 0
இந்த நாவல் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேப்பா
லட்சுமி பிரபா எழுதி படிச்சிருக்கேன்,
தஸீன் டியர்
ஹீரோயின் துர்காவின் மகள் இல்லைன்னவுடனே நேற்றே டவுட்டுதான்
இன்னிக்கு அந்த பெரியவர் ஹீரோவுக்கு போன் செஞ்சதும் கிளீயர் ஆகிடுச்சு
 
இந்த நாவல் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கேப்பா
லட்சுமி பிரபா எழுதி படிச்சிருக்கேன்,
தஸீன் டியர்
ஹீரோயின் துர்காவின் மகள் இல்லைன்னவுடனே நேற்றே டவுட்டுதான்
இன்னிக்கு அந்த பெரியவர் ஹீரோவுக்கு போன் செஞ்சதும் கிளீயர் ஆகிடுச்சு


அப்படியே எனக்கு தெரியல. இது வரைக்கும் நான்ன்் படிச்சது இல்ல.
எனக்குத் தோன்றுகிறது போடுறேன்
 
Top