Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல்- அகத்தியன் வரவு

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அவள் மரம் வீட்டில் இருந்து கீழே இறங்கி நினைத்த போது பக்கவாட்டில் இருந்து வந்து கொண்டிருந்தான் அகத்தியன்.

அகத்தியன் வந்ததை கனிஸ்ரீ கவனிக்கவில்லை.

அவள் தன் பயத்தை முதுகை காட்டியபடி படிக்கட்டு இறங்குகிறாள்

அவள் தயங்கியபடி இறங்கியதும் பார்த்தபோதே உஷாராகி விட்டார் அகத்தியன்.

நான்கு எட்டில் விரைந்து மர ஏணி அருகில். அவன் வந்து நிற்பதற்கும் அவள் விழுவதற்கும் சரியாக இருந்தது.

அவள் பீதியுடன் உயிர் பயத்துடன் அலறிய போது. அகத்தியனின் உள்ளம் பதறியது.

அவனது கரங்களில் புஷ்ப மூட்டை போல் பொத்தென்று விழுந்த அவள் பயத்தை போக்கும் விதமாய்..... ஒண்ணுமில்லை கனி ஸ்ரீ..... நான் இருக்கேன் நத்திங் டு வொர்ரி (northing to worry) என்று மென்மையான குரலில் கூறினான்.

விழுந்த பதற்றத்தில் அவளையும் அறியாமல் பயந்த சிறு குழந்தை போல் ..... அவனது கழுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

இவரைக் அம்மா இதற்காக தவம் கிடந்து போன்று..... அகத்தியன் அவளது அனைத்து மெய் மறந்து இருந்தான்.

அவனுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

அவனது இதய சாம்ராஜ்யத்தை.... காதல்தேவதை ஆட்சி செய்து கொண்டிருந்தவள் .....இப்போது அவனது கையில்.....!

சொர்க்கத்தின் பாதி பகுதியை பிரித்து.... யாரோ அவனது கையில் தந்துவிட்டார் போன்று..... சந்தோஷத்தில் தத்தளித்தான் அகத்தியன்.

சில கணங்களில் இருவரும் அசைவின்றி சிலைபோல் இருந்தனர்.

தூரத்தில் யானை பிளிறல் சத்தத்தை கேட்டதும் தான்.... சட்டென்று தன்னிலை மீண்டால் கனி ஸ்ரீ.

இத்தனை நேரமாய் பயத்தில் ஒரு அன்னிய வாலிபனை இருக்கமாக கட்டிக் கொண்டதே எண்ணி.... அவளுக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது.

பதறிய அவள் கைகளை விலக்கினாள்.

சா.....சாரி சார்....!

இட்ஸ் ஓகே கனி ஸ்ரீ.....

பொக்கிஷத்தை இறக்கி வைப்பது போல் பத்திரமாக இறக்கினான்...

அட..... என் பெயர் இவருக்கு எப்படித் தெரியும்? இவர் தான் என்னை காப்பாற்றினாரா? இவர்...... ஜமீன்தார் அகத்தியன் னா?

இவளுக்குள் கேள்விகள் உதித்தது.

"நீ...ங்க..... இளைய ஜமீன்தார் அகத்தியன் சாரா?"

அப்படி தான் எல்லாரும் சொல்லிக்கிறாங்க?

நீங்கதான் என்னை காப்பாற்றி சரிவில் இருந்து மேலே கொண்டு வந்தீர்களா?

நான் மேலே மர வீட்டிலிருந்து உன்னை கவனித்தால்.... தக்க தருணத்தில் வந்த மீட்டுக் கொண்டுவர முடிந்தது.

இல்லேன்னா ......நிலைமை மோசமா இருக்கும் . ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தனியாக வந்தது தப்பு....!

அதுல ஒரு பூ பறிக்கிறேன்னு என்று.... ஆபத்தை விலைகொடுத்து வாங்க பார்த்தியே?

நல்லகாலம்.... யானைகள் கூட்டம் வந்து இருந்தாலே நீ தப்பிச்சே!

இதுவே ஒத்தை யானை யாக இருந்தால்..... உன்னைத் துவம்சம் பண்ணி...... வேணாம்..... என் வாயில் அதை சொல்ல விரும்பவில்லை....

ரொ.... ரொம்ப ரொம்ப நன்றி சார்...! அந்த யானைகளை எப்படி என்னை விட்டு வச்சதுன்னு தெரியல. இத்தனைக்கும் சரிவுல சறுக்கிக்கிட்டு போய் நான் ஒரு யானையின் முதுகு மேல மோதி விழுந்தேன்....‌‌

ஓ இது வேறயா நல்ல அட்வென்சர் (adventure) தான் இல்ல...?

அவன் பார்வையால் அவளை ஏற இறங்க அளவெடுத்தான்.

அவன் கேள்வி கேட்ட விதம்..... அவளுக்கு சிரிப்பு வரவழைத்தது.

சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள் ஸ்ரீ ‌.

தண்ணியில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த யானைமேல் வந்து விழுந்தேன் அந்த யானைக்கு கோபம் வரலை .

சொல்லப் போனா அது என்ன திரும்பி கூட பாக்கல அதுதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்!

நீ வந்து விழுந்தது தெரிஞ்சு இருக்காது என்று கூறினான் அகத்தியன்.

அது எப்படி தெரியாமல் போகும்? சின்ன குழந்தை என்ன பரவாயில்லை..... இந்த உருவம் விழுந்தது எப்படித் தெரியாமல் போகும்?

அதுவும் சறுக்கியபடி படுவேகத்தில் வந்த மோதினேன்? ஆச்சரியமாக இருக்கு.

விழிகளை அகல விரித்து சுவாரசியமாக அவள் பேசும்போது..... ஒரு ஓவியம் போல் இருந்து ரசித்துப் பார்த்தான் அகத்தியன்.

பேசும்போது இந்த அழகான இதழ்கள் நளினமாக அசைந்தது உன்னிப்பாக கவனித்தான்.

அவனது பார்வை அவளது இதயத்தை துளைத் எடுத்தது.

அந்தப் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல்... கனி ஸ்ரீ சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை கனிஷ்கா எனக்கே தெரியலையே? யானைக்கு எப்படி தெரியும்?

நமட்டு சிரிப்புடன் அவன் பேசியதை.... அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

குழப்பமாய் அவனை ஏறிட்டாள்.

நீங்க என்ன சொல்றீங்க சார்?

இல்ல .....இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன... இந்த உருவம்..... அழகான உருவம்.... என் கையில் வந்து விழுந்தது ?

புஷ்ப மூட்டை மொத்த விழுந்தது போல் இருந்தது வெயிட்டை (weight) தெரியலையே?

நுரையால் செய்த சிலைய என்கிற வைரமுத்து பாடல் வரிதான் ஞாபகத்துக்கு வந்துச்சு..

எனக்கே தெரியல அத்தனை பெரிய யானைக்கு எப்படி தெரியும்? ஏதோ ஒரு பூ முதுகு மேல் பட்டது மாதிரி இருந்திருக்கும்.

அதனால் தான் உன்னஉன்னை கண்டு கொள்ள போலிருக்கிறது.

கணிஷ் தீவின் அழகான முகம் குங்கும பூ போல் சிவந்து போனது.

அழகான உருவம்.... "புஷ்பம் முட்டை" "நுரையால் செய்த சிலைய " "பூ"என்று அவன் விதம் விதமாய் அவள் அழகை வர்ணித்து பேசியவிதம் வெட்கத்தை வரவழைத்தது.

ஊகூம் இதற்கெல்லாம் நாம் நெகிழ்ந்து போய் விடக்கூடாது.

எதையும் மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்.

பெரியம்மா வேற இவர் பற்றி சொன்னாளே?

என்னதான் தனது ஆசை நாயகி ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசுகிறார்.

நான் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வெட்கத்துடன் குழையப் பார்த்த மனதை இழுத்துப் பிடித்தாள்.

உள்ளுற உஷார் ஆனதும்... மெல்ல மெல்ல அவளுக்கு புரிந்தது.

இந்த மர வீட்டில் இருந்து என்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாரா?

அதனால் தான் யாரோ என்னை கவனிப்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டதா?

இந்த முதியவர் தழைத்த குரலில் யாரிடமும் பேசினார்?

அது இவருடன் தானா ? ஓ... இவர்தான் அந்த பெரியவரை அனுப்பி ஏறி போகவிடாமல் தடுத்தாரா?

ஜமீன்தார் ஆயிற்றே....! அதனால்தான் அங்கே இங்கே ஆட்கள் அமைத்து.... என்னை வேவு பார்க்கிறார்?

நோட்டமிட்டது நல்ல தான் போயிற்று.

இல்லை என்றால்.... சரிவில் வழுக்கி விழுந்தவர்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

சறுக்கிய போது களிமண் சேறு உடலில் அப்பிக் கிடந்ததே ?

என்னைத் தொட்டுத் தூக்கி சேற்றில் நன்கு கழுவிவிட்டு கூட தெரியாமல் அப்படி மயங்கி கடந்து இருக்கிறேன் ? சே....!

தன்னைத்தானே குற்றம் சாட்டி கொண்டாள்.

யானைமேல் வந்து விழுந்துட்டு ...... மூச்சு பேச்சில்லாமல் மயங்கிடாடே .....

உன்னை தூக்கி ஒரு பாறையில் உட்கார வைத்து...‌‌ தண்ணீர் வாரி எடுத்து சேர்த்தை கழுவி விட்டும்.‌... உன் மயக்கம் தெளியலை.....

இங்கு கொண்டுவந்த மர வீட்டில் படுக்க வைத்தேன் .... சில பேர்க்கு இப்படித்தான்...

அதிகமா அதிர்ச்சியும் கஷ்டத்தையும் அவங்க தாங்கிக்க முடியாது .‌‌ மைண்ட் (mind) தற்காலிகமாக பிடிவாதமா ஆழ்ந்த மயக்கத்துக்கு போயிடும்.

நீயும் அந்த கேட்டகிரி (category) சேர்ந்தவள் என்று.... நான் புரிந்து கொண்டேன்...

சிரி.....தான்னால மயக்கம் தெளிஞ்சு எழுந்து வரட்டும் தான். கீழே இறங்கிவிட்டேன்.

அவளது மனதில் ஒரு எண்ணத்தை வாசித்து அறிந்து தினுசு அவன் பேசிய விதம் அவளுக்கு ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

எனக்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க. ரொம்ப நன்றி சார்!

ஆமா..... நீங்க மட்டும் தனியா எப்படி என்னை? அவள் பேசி முடிப்பதற்குள் இடைமறித்தான் அகத்தியன்.

ஆட்கள் இருக்காங்க ஸ்ரீ....!

மர வீடு பர்ணசாலை மாதிரி ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டு இருக்கீங்க.

மேலிருந்து பார்த்த பச்சைபசேலென எல்லாம் ரம்மியமாக பகுதியும் தெரிகிறது.

இவ்வளவு உச்சியில்.... காத்தும் அள்ளிக்கிட்டுப் போகுது. பட்சிகள் சுதந்திரமாக வீட்டில் உலாவுது...‌‌

ஒரு விருட்சதத்துக்கு மேல் ... இப்படி ஒரு மர வீட்டை அமைச்சு... இருக்கீங்களே ? உங்களுக்காக அலாதியான ரசனை தான்...!

"இயற்கை அழகை ஒன்றிப் போறது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம்....!"

அவன் இதை கூறிய போது..... அவனது விழிகள் காதலுடன் அவளை பார்த்தான் ‌.

அவன் இரு பொருள் படப் பேசியதும்..... அவளது இதயக் கூட்டிற்குள் மணிப்புறா மென்மையாய் சிறுகடித்தது.

அவனை ஏறிட்டுப் பார்க்க தெம்பின்றி பார்வை தழைத்துக் கொண்டாள்.

நீ மட்டும் என்னவாம்? உனக்கும் அலாதி ரசனை தானே? காட்டு ரோஜாவை எட்டி தொட ஆசைப்பட்டு தானே சறுக்கி விழுந்தே ?

ரெண்டு பேருக்கும் ஒரே ரசனை... ஒரே டேஸ்ட் இல்ல...? எனக்கு இதை பத்தி பேசும்போது ஒரு அழகான பாடல் தான் ஞாபகத்துக்கு வருது.

அது என்ன பாட்டுன்னு கெஸ் (guess) பண்ணு பார்ப்போம்.

"தெ.... தெரியலயே....."

"நானே சொல்லவா?"

"உம்..."

" உள்ளம் ரெண்டு ஒன்று...!

நம் உருவம் தானே ரெண்டு....

உயிரோவியமே.... கண்ணே!

நீயும் நானும் ஒன்று....!

மென்மையான குரலில் அழகாய் அவன் பாடுவான் என்று கனி ஸ்ரீ... கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

அவன் தன்னை பார்த்து தான் இப்படி உருகி உருகி பாடுகிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

எந்த ஆண் மகனிடம் அவள் இதுவரை நின்று நிதானித்து பேசியதில்லை.

பேசுவதற்கு இடம் அளித்ததும் இல்லை.

இவரிடமிருந்து சீக்கிரமாய் விலகி சென்று விட வேண்டும் என்று உள் மனம் எச்சரித்த படி இருந்தது.

அதே சமயத்தில் அவன் சிலாகித்து 'உயிரோவியமே கண்ணே!' என்றதும்.... மனதிற்குள் மகிழ்ச்சி நீருற்று பொங்கியது நிஜம்.....!

? அகத்தியன் தான் காதல் கூறுவானா? ?

?நாளை நடக்க போகும் வீதியின் விளையாட்டு இரு வருக்கும் தெரியா வருமா??
 
Top