Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 2

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 2

சேகர் குடும்பதொடு டெல்லி சென்று விட்டார். யமுனா விளையாட்டுத் தனமாய் இருந்தாலும் படிப்பில் கவனம் சிதறாமல் நன்றாக படித்தாள். சேகரும் அடிக்கடி போன் பேசுவார் இப்படியே நாட்கள் சென்றது மூன்றாவது ஆண்டு இறுதியில் இருந்தாள் அப்போது காம்பஸ் இன்டர்வியூ வில் தேர்வாகி பெரிய மல்டிநேஷனல் கம்பெனி யில் மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தேர்வானாள். தன்னுடைய வெற்றியை தன் மாமா விடமும் பகிர்ந்து சந்தோஷப்பட்டாள். கல்லூரி வாழ்க்கை இனிதே முடிந்த அவளுக்கு வேலைக்கு செல்ல ஆர்வமும் சந்தோஷமும் இருந்தது.

ஒர்க்கிங் விமன்ஸ்(working women's) ஹாஸ்டலில் சேர்ந்தாள் யமுனா அங்கு தான் இவள் திவ்யாவை சந்தித்தாள் எப்போதும் சோகமே உருவான முகத்தைக் கண்டதும் இவளுக்கு மனதில் கஷ்டமானது. திவ்யா விடம் இவளே பேச்சு கொடுத்தாள் அவளிடம் எதாவது கதை அடித்துக் கொண்டு இருப்பாள் அவளை சிரிக்க வைத்தாள் இப்படியே இருவரும் நெருங்கிய தோழி ஆனர். திவ்யாவும் ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை பார்க்கிறாள்.

நாட்கள் சென்றது. திவ்யாவின் முழுக்கதை யமுனா விற்கு தெரியும் தனக்காவது பாசத்தை காட்ட மாமா இருக்கார் ஆனால் இவளுக்கு யாரும் இல்லையே என்று ரொம்ப பரிதாபப்பட்டாள். இப்படி இருக்கும் சமயத்தில் தான் ஒரு நாள் திவ்யா யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தாள் அவள் யமுனா விடமும் பேசவில்லை ஏதோ பெரிய பிரச்சினை என்று யூகித்தாள் யமுனா கொஞ்ச நேரம் கழித்து திவ்யாவை சாப்பிட கூப்பிடுவதற்காக அவள் அறைக்கு சென்றாள் அங்கு பார்த்த காட்சியைக் கண்டு அதிர்ந்தாள் திவ்யா வின் கையில் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தாள். கத்தி கூச்சலிட்டு அனைவரின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தாள். திவ்யா எமெர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். குறித்த நேரத்தில் வந்ததால் திவ்யாவின் உயிரைக் காப்பாற்றினர்.

திவ்யா கண் விழித்ததும் அவளை பலார் என்று அறைந்தாள் யமுனா. "ஏன்டி இப்படி பண்ண எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லிருக்கலாம்ல தீர்வு இல்லாத பிரச்சனை வாழ்க்கையில் எதுவும் இல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு" என்றாள். "என் வாழ்க்கையே போச்சு யமுனா நா இனிமேல் உயிரோடு இருக்கிறது ப்ரோஜனம் இல்ல" என்றாள். "இப்படி பேசாம என்ன நடந்திச்சுனு சொல்லு" என்றாள்.

"நான் ஆறு மாசம் முன்னாடி அவுடிங் போனேன்ல ஆபிஸ் பிரண்ட்ஸ் கூட அப்பொ எல்லா போர்ட் மெம்பர்ஸும் வந்திருந்தாங்க ஏனா அது பெரிய ப்ராஜெக்ட் சக்சஸ். எங்க கம்பெனி எம்டி யோட தம்பியும் போர்ட் மெம்பெர்ஸ்ல ஒருத்தர். அவர் அந்த சக்சஸ் மீட்ல பேசும் போது எல்லார் முன்னாடியும் திடீர்னு என்ன ப்ரபோஸ் பண்ணிட்டாரு எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னு தெரியல நா அத அப்படியே விட்டுட்ட. அப்பறம் என்ன துரத்தி லவ் பண்ண ஆரம்பிச்சாரு அதுல எனக்கும் அவர் மேல காதல் வந்திருச்சு நாங்க ரெண்டு பைரும் உயிராகக் காதலிச்சோம் அப்போ தான் போன மாசம் என் பிறந்த நாள் வந்த போது அவர் கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு போனாரு எனக்கு நிறைய பரிசு கொடுத்தாரு அப்படியே நேரம் போக போக கொஞ்சம் கொஞ்சமா என்ன நெருங்கினார் நா எவ்வளவு தடுத்தும் என்னால முடியல நான் என்ன இழந்துட்டேன் என்று அழுதாள். அடுக்கு அப்புறமும் நல்லா போச்சு எங்க வாழ்க்கை என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னார் ஆனா....
~மாயம் செய்ய வருவான் ~
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அறிவுகெட்ட திவ்யா
முதலாளியுடன் பழகி எல்லை மீறி விட்டாளா?
குழந்தை வந்து விட்டதா?
இதுக்கு யமுனா என்ன செய்ய முடியும்?
 
Top