Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக. 31,final &epilogue

Advertisement

Nice. நல்ல feel கொடுத்தது உங்க Story. 2 days la எல்லா epis படிச்சிட்டேடேன் Story முடியற வரை வைக்க வே தோணல.

Superb

All the Best
 
Rombha arumayana azhaghana edharthsmaana kadhai sister. Niraivaa iruku padika. Best wishes. Vetri pera manamaarndha vaazhthukal.
 
அத்தியாயம் -31

சில வருடங்களுக்கு பிறகு


சிவண்யா இரண்டு வயது பெண் குழந்தையை இடுப்பில் வைத்து கொண்டு,சேலத்தில் இருக்கும் அவர்களின் சரஸ்வதி சூப்பர் மார்க்கெட்டில் நின்றபடி,அப்போது தான் வந்திறங்கிய பொருட்களை பார்வையிட்டு கொண்டிருந்தவள்.கையில் உள்ள அலைபேசியில்

"அக்கா நேரம் ஆகுதுடி,ருத்ரா மாமா இன்னும் சாப்பிடலையான்னு,திட்ட போறாங்க,நீ சாப்பிடு நான் அரைமணிநேரத்துல வந்திடுறேன்,"என்க

சூப்பர்மார்க்கெட்டை ஒட்டி இருந்த சரஸ்வதி ஹோட்டலின் கல்லாவில் அமர்ந்திருந்த பார்கவி, "ஜூஸ் குடிச்சேன் சிவா பசிக்கலை.நீயும் வா பிள்ளைங்களோட சேர்ந்து சாப்பிடலாம்.பாவம் சரண் வேற அவங்களை எப்படி சமாளிக்கிறாளோ" என்க,

"ஒன்னும் பிரச்னை இல்லை ,ஈசன் எல்லாரையும் பார்த்துப்பான்."என்ற சிவாவும்.இங்கே முடிந்ததும் பொறுப்பை மேனேஜரிடம் கொடுத்துவிட்டு.

குழந்தையோடு சேர்த்து ஐந்து மாத கர்ப்பிணியான அக்காவையும்,தனது காரில் அழைத்து கொண்டு ஊரில் உள்ள தங்களின் பூர்விக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் அவளே தான் செல்ப் ட்ரைவிங்,"வீட்டில் வண்டி இல்லை நான் ஒருத்தி, என்ன செய்வேன்."என்று கேட்டிருந்தாலோ!அன்றே சர்வா அவளுக்கென,ட்ரைவரோடு புது கார் வாங்கி நிறுத்தியிருந்தான்.

ஏற்கனவே சதா அவளுக்கு டிரைவிங் சொல்லி கொடுத்திருக்க,பிள்ளை பெற்ற பிறகு ட்ரைவரை நிறுத்தி விட்டு சிவா தானாகவே ஓட்டிக்கொண்டாள்.

ருத்ராவின் தந்தை சொன்னது போலவே!சிவாவிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களின் கடையும்,அதை ஒட்டி இருந்த வீட்டையும் கொடுத்துவிட்டிருக்க,கணவனின் மேற்பார்வையில் கடையை சூப்பர்மார்கட்டாக சங்கரின் பெயரில் மாற்றி கொடுத்த சிவன்யா,

வீட்டை ஹோட்டலாக சரவணன் பெயரில் மாற்றி கொடுத்திருக்க,அதை இப்போது சஞ்சய் நிர்வகிக்கிறான்.

இத்தனை வருடம் என்ன தான் வேலை செய்து பொருள் ஈட்டினாலும்.இந்த இடத்தில் கிடைக்கும் நிம்மதி இல்லாமல் தவித்து கொண்டிருந்த சங்கருக்கு மனம் நெகிழ்ந்து போனது.வயதே திரும்பி விட்டதுபோல அத்தனை சுறுசுறுப்பாக கடையில் வளைய வந்து கொண்டிருக்கிறார்.

திருப்பூர் வரவே மாட்டேன் என்று அவர் மட்டும் சேலத்தில் உள்ள வீட்டில் தங்கி,கடை பார்த்துக்கொள்ள,கணவன் இல்லாமல் வேணி இருப்பாரா என்ன,அவர் பெரிய மகனிடம் புலம்ப, அவன் தந்தையையே அதட்டி."ஆள் வைத்துவிடலாம் ,வாரத்தில் ஒரு நாள் நீங்கள் சென்று பார்த்தால் போதும்" என்றிருக்க,

"சரிப்பா" என்ற மனிதர் அப்போதும் மட்டும் அப்படி இருந்தவர்.பின் வந்த நாட்களில் ஐந்து நாட்கள் சேலம் .இரண்டு நாள் திருப்பூர் என்றிருக்க,

சரவணன் சேலத்தில் இருந்த வாடகை வீட்டை காலி செய்துமொத்தமாக ஊருக்கே வந்துவிட்டவர்.வேலையையும் ரிசைன் செய்து விட்டு, மகனோடு ஹோட்டலில் அமர்ந்து கொண்டார்.





மனைவிக்கு கொடுத்த வாக்குப்படி சர்வா பணம் திரட்டி கொண்டிருந்த நேரம் .சதா, சஞ்சய் ,தகப்பன்கள் இருவரும். என அனைவருமே அவர்களிடம் இருந்த தொகையை கொடுத்து அனைத்து சொத்தையும் மீட்டிருந்தனர்.

அதில் விவசாயமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, வீட்டினர் அனைவரும் வாரம் ஒரு முறை ஊர் வருவதால்.சதா,சர்வா இருவரும் இணைந்து பழைய வீட்டிற்கு எதிப்புறம் புதியதாய் ஒரு வீடு கட்டியிருந்தனர்.

இன்னும் மூன்று நாளில் சஞ்சய்க்கு திருமணம்,ருத்ராவின் மாமன் பெண்,கனகாவின் ஒன்று விட்ட தங்கை பெண் தான் மணமகள்.தீடீரென உறுதியானதால் வீட்டினர் அனைவரும் திருமண வேலையாய் சென்றிருக்க அக்காவும் ,தங்கையும் அவர்களின் கடை பார்க்க சென்றிருந்தனர்.

பார்கவிக்கு ஏற்கனவே இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்திருக்க,பிரசவத்தில் அவள் அழுது கரைந்ததில் பயந்திருந்த ருத்ரா ,இனி பிள்ளையே வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் .

"உன்னை போல ஒரு பெண் வேண்டும்" என்று என்றோ அவன் சொல்லியதை நினைவில் வைத்திருந்தவள் இப்போது பெண் பிள்ளையை எதிர்பார்த்து கர்ப்பமாய் இருக்கிறாள்.அவர்களின் பள்ளியிலேயே தலைமை பொறுப்பிலும் இருக்கிறாள்.

என்னதான் இவர்கள் மாமன்களின் பெயருக்குகடையை மாற்றிக்கொடுத்திருந்தாலும். வருடத்திற்கு ஒரு முறை லாபத்தில்,ஒரு பங்கு இவர்களின் வங்கிக்கு வந்துவிடுகிறது.

ஆக சிவன்யாவின் வட்டி தொழில் எந்த பாதகமும் இல்லாமல் செழிப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.



இவர்கள் வீட்டை அடைந்த நொடியில் இருந்து,பிள்ளைகள் தங்களுக்குள் நடந்த யுத்தத்தின் சாராம்சங்களை,கால் மணி நேரம் வரிசையாக விளக்க அத்தனைபேருக்கும்.ஒப்புதலாய் ஒரு தலையாட்டல் கொடுத்த சிவா.

"என்ன டையர்டாகிட்டயா,இனி நான் பார்த்துகிறேன்,நீ ரெஸ்ட் எடு" என்று முதலில் கவனித்தது.சரண்யாவை தான்.



பின்னே அவள் ஒருத்தி தானே காலையில் இருந்து ஆறு பேரையும் சமாளிக்கிறாள்.அனைத்தும் ஆண்பிள்ளைகளே சேட்டைக்கு குறைவே இருக்காது,

ஆம் ஆறு பேர் சரண்யாவின் இரண்டு ஆண்பிள்ளைகள்.பார்கவியின் இரட்டை புதல்வர்கள்.சிவாவின் மகன் ஆகிசன்,அடுத்தவன் தீனரீசன்.

சிவாவின் இடுப்பில் இருப்பவள்.சதா,வர்ஷாவின் செல்வமகள் ஆதன்யா,பெண்ணே இல்லாத வீட்டில்.முதலாவதாய் தனது பாட்டி வேணியின் ஜாடையில் பிறந்திருக்கும் பெண்ணரசி.

தனக்கு தான் இரண்டும் பெண்கள்,அவர்களுக்காவது பையன் பிறந்திருக்க கூடாதா,அதுவும் ஆதன்யா அவர்கள் வீட்டில் மூன்றாவது பேத்தியாயிருக்க கனகாவுக்கு தான் இதில்பெரும் குறையாகிப்போனது

இங்கே அதற்கு நேர்மாறாய்,அனைவரிடத்திலும் அத்தனை செல்லம்.ஆனால் அவளின் செல்லம் அவள் பெரியம்மா தான்.பின்னே நாள் முழுவதும் சிவாவிடமே இருப்பதால்,நடு இரவில் கூட தாயை தேடாமல் பெரியம்மாவை தேடுபவள்.



"எங்க அம்மா, நான் தான் பர்ஸ்ட் "என்னும் ஆகிஷன் ,இவளின் முகாரி ராகத்தில் கடுப்பாகி தாயை விட்டு கொடுத்து விடுவான்.

ஏன் சர்வா கூட ,"ஏண்டி ஏற்கனவே ரெண்டு பேர் எனக்கு போட்டிக்கு இருக்கானுங்க,இடையில் உன் அக்கா பசங்க,இதுல இவள் வேறயா" என்று புலம்பினாலும்.

மனைவியை விட்டு தள்ளி படுத்து ,இருவருக்கும் இடையில் இவளை படுக்க வைத்து கொள்வான்.

தீனரீசன் அப்படியே தகப்பனை கொண்டு பிறந்த அழுத்தக்காரன்.இன்னது வேண்டும் என்று வாயை திறந்து கேட்கவே மாட்டான்.சிவன்யாவாக அனைத்தையும் கவனித்து செய்ய வேண்டும்.மற்ற பிள்ளைகள் இவள் பின்னால் அலைந்தால். அவன் மட்டும் தாயை அவனின் பின்னோடு அலையவிடும் வசியக்காரன்.

என்ன ஒன்று ஈசனும்,ஆதன்யாவும் பாட்டி என்றாலே எட்டிக்காயாய் முகம் சுருக்க இவன் மட்டும் தகப்பனை போல வேணியிடம் பாசம் கொண்டவன்.அவர் பேச்சை தட்டாமல் கேட்பவன்.அவருக்கும் சர்வாவை உரித்து வைத்திருக்கும் தீனா என்றால் கொள்ளை பிரியம்.



"அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி,ஈசன் எல்லாரையும் பார்த்துக்கிட்டான்,"சரண் சொல்லவும் ,

"எல்லாரும் சாயங்காலம் வந்துடுவாங்க,வா சாப்டுட்டு நாளைக்கு தேவையானதை எடுத்து வச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்" என்று பார்கவி அழைக்க

பிள்ளைகளை மீண்டும் ஒரு முறை குளிப்பாட்டி ,உண்ணவைத்து,உறங்க அனுப்பிய சிவாவும், இவர்களோடு அமர்ந்து உண்டு எழுந்தாலும்.கணவனுக்கு அழைத்து "சாப்பிட்டீங்களா" என்று மறக்காமல் கேட்டிருந்தாள்.

"பிள்ளை வளர்க்கும் ஆயா,எனக்கும் குழந்தை பிறந்தால் நீ தான் வளர்க்கணும்."என்று சஞ்சய் கூட அடிக்கடி சிவாவை கிண்டல் செய்வான்.அவனின் கிண்டலுக்கு முதுகில் நாலு கொடுத்தாலும்."நீ பெத்து மட்டும் குடு, எனக்கு வேற என்ன வேலை" என்பாள்.

வர்ஷா முன்பு போல எல்லாம் சிவன்யாவிடம் அலட்சியம் காட்டுவதில்லை.பின்னே அவளுக்கு இங்கே இருக்கும் முக்கியத்துவத்தை கண்ணார கண்டவள் ஆகிற்றே!அதுமட்டுமில்லை,

நிஷாவினால்,வர்ஷாவிற்கு வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போயிருக்க,சென்னையில் இருக்கும் வேணியின் அக்கா,இங்கே வந்திருந்தவர் "சதாக்கு பண்ணிவைக்கலாமா," என்றதற்கு

"இங்க வந்தப்போவே அவள் எடுத்தெறிஞ்சி பேசுனா,குடும்பம் பண்ண சரியா இருக்காது வேண்டாம்." என்று முதலில் மறுத்தது வேணி தான்.ஆனால் வர்ஷா சதாவிற்கு ப்ரொபோஸ் செய்தால் என்றும், அதை அவன் மறுத்து விட்டதாகவும் சிவன்யாவிடம் சொல்லியிருக்க,

சிவன்யா வீட்டினரிடம் பேசி சம்மதிக்க வைத்திருந்தாள்.அன்றிரவே தனிமையில் சர்வா "அக்கா வாழ்க்கையை கெடுத்ததற்கு,தங்கை வாழ்க்கையை சரிசெஞ்சி பிராயச்சித்தம் தேட பாக்கறியா," என்று சரியாய் கணித்து கேட்க,சிவா மாட்டிக்கொண்ட தினுசில் முழித்தவள் "ஆம்" என்று தலையசைத்தாலும்.

"அண்ணாகிட்ட கேட்டுட்டேன்.அவங்களுக்கும் ஓகேதான்" என்று சொல்ல

அவளுக்கு இன்னும் நிஷாவின் காதல் தெரிந்திருக்கவில்லை.சர்வா மீண்டும் ஒரு முறை சொல்ல,"பெண்ணும் பெண்ணும் எப்படிங்க" அவள் புரியாமல் விழிக்க,"அதெல்லாம் அப்படி தான் நீ வாடி" என்று தன்னை நோக்கி இழுத்திருந்தான்.

சர்வா, சதாவிடம் "வர்ஷாவை பிடித்திருக்கிறாதா" என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்து வைத்திருக்க,

"அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள்.நீ இப்படி இருக்கிறாயே" என்ற கனகாவின் புலம்பலும்,அவிநாசின் அகிம்சையான காத்திருப்பும். நிஷாவை இங்கே விடாமல் கோவையை நோக்கி ஈர்த்திருக்க,

வர்சாவிற்கு முன்பே அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.அந்த பிள்ளைகளின் காதணி விழாவிற்கு இவர்கள் குடும்பமாய் சென்றிருந்த நேரம்.தான்

சஞ்சய் பார்கவியிடம் "ரொம்ப நாளா, யாரையும் பிடிச்சா சொல்லு சொன்னிங்கள்ல உங்க கல்யாணத்துல பார்த்தேன்கா,எனக்கு ஓகே" என்று ஒரு பெண்ணை காட்டி சொல்ல,அவள் சிவாவிடம் சொல்ல,

சிவா ,அவள் வர்ஷாவின் தங்கை தான் என்று விசாரித்து அத்தைகளிடம் சொல்லியவள். சாதாரணமாய் பெண்ணை அழைத்து பேச்சு கொடுத்து பார்க்கவும்,பெண்ணை அனைவருக்கும் பிடித்திருக்க,இரு வீடும் சொந்தங்கள் தானே திருமணம் அங்கேயே முடிவாகி இருந்தது.

"அதென்ன உன் பொண்ணு, எப்போ பாரு அவகிட்ட இருக்கா,நீ கூப்பிடு, உன் மேல எப்படி பாசம் வரும்."என்று கனகா சொல்வதை எல்லாம் வர்ஷா கண்டு கொள்வதே இல்லை.

"அவங்க மேல பாசம் தான், அதுனால என்னோட பிள்ளை இல்லைன்னு ஆகிருமா,அவங்க இல்லைனா இன்னைக்கு எனக்கும் என் பொண்ணுக்கும் வாழ்க்கையே இல்லையே!"என்று அவளின் நெஞ்சம் விம்மும்.

ஆம் அண்ணண்,தம்பி இருவரும் சொந்த தொழில் வைத்திருக்க, தான் மட்டும் மாத சம்பளத்திற்கு வேலை செய்ய பிடிக்காமல்.வர்ஷா பிள்ளைப்பேறுக்காக தாய் வீடு சென்ற நேரம்.

பழைய நண்பனோடு சேர்ந்து சொந்த தொழில் வைக்கிறேன் என்று சதா வேலையை விட்டு விட்டு,இத்தனை வருடம் சேர்த்து வைத்த பணத்தை போட்டு சென்னை சென்று தொழில் தொடங்கியிருக்க....

இரண்டு மாதத்தில்,உடன் இருந்தவன் அனைத்தையும் எடுத்து கொண்டு அவன் வாங்கிய கடனிற்கும்இவனையே கைகாட்டி சென்றிருக்க,சதா பயந்து போனான். சர்வாவிற்கு போன் செய்து தான் சாக போவதாக புலம்பியவன்.

தூக்க மாத்திரையை விழுங்கி வைத்திருக்க,இறுதியில் சர்வா தான் அவன் நண்பனை அனுப்பி தம்பியை மீட்டவன்.தானும் கிளம்பி வந்திருந்தான்.

ஆரம்பத்திலேயே "ஆழம் தெரியாமல், அனுபவில்லாத தொழில் காலை விடாதே!" என்று தம்பியிடம் எச்சரித்திருந்தான்.சதா கேட்டிருக்கவில்லை.வேறுவழியின்றி அனைத்தையும் செட்டுல் செய்து ஊர் அழைத்து வந்தவன்.விஷயத்தை ருத்ராவிடம் பகிர்ந்திருக்க.

அவன் அடுத்த ரெண்டு நாளில் ஓடியவனை, தட்டி தூக்கி வந்து,பணத்தோடு சதா காலில் வீசியிருந்தான்.பணம் வந்த பிறகும் சதா கொஞ்ச நாள் எதுவுமே செய்யாமல் சும்மா சுத்திக்கொண்டிருந்தான்,இப்போது தான் வீட்டைகூட பார்க்காமல் அண்ணா,ஏன்?தொழில் தொழில் என திரிந்தான் என்ற நிதர்சனம் புரிந்திருந்தது.

கணேசனுக்கு உடம்பு முடியாததால் கார்மென்ஸை பார்த்து கொள்ள சதாவை அழைக்க,அங்கும் செல்லாமல் பிள்ளை,மனைவி என்று யாரையும் பார்க்காமல்,அவன் ஏதோ போலிருக்க,

சிவண்யா தான் ஏதேதோ சொல்லி ,வர்ஷாவையும் மகளையும் இங்கே அழைத்து வந்தவள்.பெண்ணை தான் பார்த்து கொள்வதாய் சொல்லி வர்ஷாவை கார்மென்சிற்கு அனுப்பியவள்.

குழந்தையை சதாவின் கையில் திணித்திருந்தாள்.கூடுமானவரை மகன்களையும் சித்தப்பனையே கவனிக்க வைத்திருந்தாள்.வேணி என்னேரமும் மகன் பின்னாடியே காவல் காத்தார்.



சதா மெல்ல மீண்டு வெளியில் வந்தவன். பழைய வேலைக்கு இண்டெர்வியூ செல்ல,"உங்களுக்கு தொழில் வைக்க தானே ஆசை.கொஞ்ச நாளைக்கு ஸ்டோர்ஸ் போங்க," சிவா சொல்லியிருக்க,

வர்ஷாவும்,வீட்டினரும் அதை ஆமோதிக்க,அன்றிலிருந்து தந்தை மேற்பார்வையில் அங்கேயே தொழில் கற்றவன்.மூன்று மாதத்திற்கு முன் தான் திருப்பூரில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் இன்னொரு கிளை திறந்திருந்தான்.

அப்போதும் "தனியா வந்துடுங்க" என்று கனகா சொன்னார்.வர்ஷா எள்ளளவும் தாயை மதிக்கவில்லை.கனகாவை போன்ற சிலர் அப்படி தான், என்ன சொன்னாலும் திருந்த மாட்டார்கள்.

உறவுகள் ஒன்று கூடி சஞ்சய் திருமணம் கோலாகலமாய் நடந்து முடிந்திருக்க, அனைவரும் வீடு திரும்பியிருந்தனர்.அவர்களின் இயல்பான வாழ்க்கை ஆரம்பமாகி இருந்தது.

நேரம் இரவு பத்து மணி,அண்ணா,தம்பி இருவரும் இன்னும் வீடு வரவே இல்லை.சிவா அவர்களுக்காக காத்திருக்க,வர்ஷா,நீண்ட நேரமாக மகளை உறங்க வைக்க முயற்சித்து கொண்டிருந்தவள்.முடியாமல்

"அக்கா அவங்க வந்தால் ,நான் சாப்பாடு போடுறேன்.இவளை தூங்க வைங்களேன்" என்று கெஞ்ச,சிவாவிடம் புன்னகை, அமைதியாக பெண்ணை வாங்கி தோளில் போட்டவள்.

வர்ஷாவின் அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்த ஆதன்யாவின் அறை சென்று பெண்ணோடு படுத்து கொள்ள,அவளும் பெரியம்மாவிடம் கதை கேட்ட படி விழி மூடியிருந்தாள்.

"ஏன்? வர்ஷா தினமும் அவள் தானே தூங்க வைக்கிறா,பசங்களுக்கு சளி பிடிச்சிருக்கு பொண்ணுக்கும் ஒட்டிக்கும். இன்னைக்கு ஒரு நாளைக்கு,உங்க கூட தூங்க வைன்னு சொன்னால்,அதுவும் முடியலையா, உண்ணலா..... என்று வேணி திட்ட......

"என்கிட்ட தூங்கமாட்டீங்குறா அத்தை" என்ற வர்ஷா,வீடு வந்த கணவனுக்கு உணவு எடுத்து வைப்பவள் போல கழண்டு கொண்டாள்.

வேணி ஒரு பாட்டம் மகனிடம் வர்ஷாவை பற்றி குறை பாடி முடித்து, வீடு வந்த சர்வாவிடமும் பேச்சு கொடுத்து,,உறங்குகிறேன் என்று அறை சென்று விட்டார்.



சர்வா,வர்ஷா பரிமாறிய உணவை உண்டு கொண்டிருந்தாலும்.பார்வை நொடியில் வீடு முழுவதும் வளம் வந்தது.எங்கே அவள் என்ற எண்ணம் தான் மனம் முழுவதும்.

அமைதியாய் அறை சென்றான்.உறங்கும் மகன்களை பார்த்து,பெட்சீட் போத்தி மீண்டும் வெளியில் வந்தான்.சிவா எங்கும் இல்லை,இவனின் தேடல் வர்ஷாவிற்கு சுவாரஸ்யமாய் இருக்க,

"நீங்களும் இருக்கீங்களே!நான் இல்லைன்னா சந்தோசம்ன்னு கவுந்தடிச்சி தூங்கிருப்பிங்க," என்று சதாவிடம் நொடிக்க,

"ஆமா இந்நேரம் சிவா இருந்திருந்தா ஆம்லெட் போட்டு கொடுத்திருப்பா,நீ இருக்கறதை சாப்பிட்டு தூங்குன்னு சொல்ற,"அவன் குறை பட ,

"ஆம்லெட் தானே வேணும்,நீங்க போய் எனக்கும் சேர்த்து போட்டுட்டு வாங்க," என்று விட்டு ஜம்பமாய் அவள் அமர்ந்து கொள்ள ,

சதா,நமக்கெதுக்கு வம்பு என்று அவன் தட்டில் இருந்த இட்லியில் கவனம் வைப்பது போல குனிந்து கொண்டான்.

"அக்காவை தேடுறீங்களா மாமா,அவங்க ஆதான்யா கூட தூங்குறாங்களாம் ,நீங்க தம்பிங்களை பார்த்துபிங்களாம்." என்று வர்ஷா குரல் கொடுக்க

"ஹான்,"என்று சர்வா அதிர்ந்து விழித்தான்.அண்ணன் விழித்ததில் சதாவிற்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

அதே நேரம் சிவா,வெளியில் வந்தவள்.கணவனை பார்த்து புன்னகைக்க,"என்னக்கா மாமா சாப்டாங்க ,நீங்க போங்க ,பாப்பா முழிச்சிக்க போறா,"என்று மேலும் விளையாட.

"இல்லை, இல்லை .....வணி, எனக்கு டீ வேணும். நீயே போட்டு கொண்டுவா," என்று வேகமாய் சர்வா சொல்ல,சதா வெடித்து சிரித்தான்.வர்ஷாவும் சிரிக்க,தன்னை கலாய்க்கிறார்கள் என்று சர்வாவிற்கு புரிந்து போனது ......

ஒன்றும் புரியாமல் நின்ற மனைவியை அர்த்தமாய் பார்த்தவன்,தங்களின் அறைக்குள் புகுந்து கொள்ள,அவனின் பின்னோடு சென்ற சிவாவை வழிமறித்த வர்ஷா

"அக்கா டீ எடுக்காமல் போறீங்க" என்க,சிவாவிற்கு வெட்கமான வெட்கம்.அதே வெட்கத்தோடு அறைக்குள் ஓடியவள்.

"நீங்க டீ குடிக்க மாட்டிங்கன்னு,வீட்ல எல்லாருக்கும் தெரியும்.தேவையில்லாமல் எல்லார் முன்னாடியும் டீ கேட்டு, என் மானத்தை வாங்காதீங்க,இன்னைக்கு என்னை அசிங்கப்படுத்தினத்துக்கு தனியா தூங்குங்க " என்று சிலிர்த்து சொல்லி மகன்களின் அறைக்கு செல்ல பார்க்க

"ஹேய் வணி,"என்று அவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்."நம்மள பார்த்து அந்த சண்டை கோழிங்க ரெண்டுக்கும் பொறாமை."என்க

"யாரு நம்மளை பார்த்து அவங்களுக்கு பொறாமை" என்று சிவா முறைக்க ,"நமக்கு என்னடி குறை ,என் பொண்டாட்டி மாசில்லாத தங்கம்.நான் எள்ளுன்னா எண்ணையா நிற்ப்பா,"என்றவன்

"வணிமா,நாம புதுசா,இன்னொரு கார்மென்ஸ் ஆரம்பிக்க போறோம்ல,அதை நீ பார்த்துக்கிறியா,"சர்வா நைசாக கேட்க,

"அதானே"என்று அவள் முறைத்து பார்க்க,

"ஏண்டி இந்த வீட்ல என்னதான் வச்சிருக்க,அதான் பசங்க ஸ்க்கூல் போறாங்க இல்லை. நீ வாயேன்" என்று கேட்கும் பொழுதே

சிவண்யா,சர்வா வாயை தன் இதழ்களால் அடைந்திருந்தாள்.அவனின் விழிகளில் மர்ம புன்னகை,தான் எப்படி பேசினால்,தனக்கு சாதகமாக எதிர்வினை ஆற்றுவாள். என்று அவனுக்கு தெரியாதா என்ன

இருவரும் கூடி களைத்து உறங்கி இருக்க,நடு இரவில் சதாவின் அறையில் ஆதன்யா கத்தி ஊரை கூட்டியிருந்தாள்."வர்ஸு பாப்பா அழுகுறா பாரு அவன் சொல்ல,உங்க அம்மா சொன்னதுக்கு சப்போர்ட் பண்ணி என்னை திட்டுன இல்லை.நீங்களே பார்த்துக்கோங்க" என்றவள்.உறங்கி போக...

பால் ஆற்றி கொடுத்து,உறங்க வைக்க எடுத்த அத்தனை முயற்சியும் வீணாகி போக வேறுவழியின்றி, அண்ணன் அறை கதவை தட்டியிருந்தான் சதா..

நாள் முழுவதும் பிள்ளையோடு அலைந்ததில் சிவா அசந்திருக்க,சர்வா தான் எழுந்து வர,

"இந்தா பாப்பு தான் வேணுமுன்னு அடம் பண்றா,"என்று மகளை அண்ணன் கையில் கொடுக்க, அவள் செல்லவே இல்லை."பெரிம்மா பெரிம்மா" என்று வேறு சினுங்க,

சர்வா,வேறுவழியில்லாமல் "வணி, வணி"என்று எழுப்ப,

"ம்ம்ச் போங்க ,ஒரு நாளைக்கு ஒரு தரம் தான் .ப்ராமிஸ் பன்னிருக்கிங்க," என்று விட்டு சிவா கவிழ்ந்து படுத்து கொள்ளவும் ,சர்வா திருட்டு முழியோடு தம்பியை ஏறிட்டான்,

"அடப்பாவி" என்று நெஞ்சில் கை வைத்த சதா,அதே அதிர்ச்சியோடு மகளை உள்ளே விட்டு அவர்கள் அறை சென்றுவிட்டான்.

"ச்ச்ச மானத்தை வாங்கிட்டா குட்டச்சி "என்று புலம்பியபடி,சர்வா இருவருக்கும் நடுவே ஆதன்யாவை படுக்க வைத்து விழிமூட,



இதற்குள் ஈசன் "அம்மா" என்றழைத்து கொண்டே வந்தவன். தாயின் மறுபுறம் படுத்து கொள்ள,சிறிது நேரத்தில் எழுந்து வந்த தீனாவும்,தாயின் இருபுறமும் இடமில்லாததால்,அவளின் மேலேறி படுத்து கொண்டான்.

அமைதியாக இவர்களை பார்த்திருந்த சர்வாவிற்கு அனைவரையும் விளக்கி,அவளை இழுத்து தன் மேல் போட்டு உறங்கும் அவா எழுந்தது.என்னவோ சிவண்யா எண்ணும் ஆழ்கடலில் எத்தனை முறை மூழ்கி முத்தெடுத்து ,நிறைவு பெற்றாலும்.அந்த மோகம் தீர்ந்தபாடில்லை.

அவளையே ஏக்கமாய் பார்த்தபடி அவன் விழிமூட ,உறக்கத்திலும் கணவனின் மனதை உணர்ந்தவள் போல,

தனது இடது கையால் சர்வாவின் தலையை நீவி விட்டாள்.சிவண்யா,அவளின் கையை இழுத்து தனது நெஞ்சில் வைத்து,நிம்மதியாக உறங்கி போனான் சர்வேஸ்வரன்.



ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்…
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்…

உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்…
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்…
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்…
காலத்துக்கும் நீ வேணும்…





எனக்கு யாருமே இல்லை,நான் அநாதை எண்றதெல்லாம் சிவண்யாவின் முன் ஜென்மங்களாய்.இன்று அத்தனை உறவுகள் அவளை சுற்றி,அவள் ஏங்கிய அன்பான குடும்பத்தின் அச்சாரமாய் அவள் .... யாருக்கும் கிடைத்திடாதா பெருவாழ்வு ..........

சிவண்யா இன்று போலவே ,அனைத்து வளங்களும் பெற்று நலமாய் ....மகிழ்வாய் வாழ,அந்த அண்ணாமலையானும் ,அவளின் முன்னோர்களும் துணை நிற்க்கட்டும்,என்று வேண்டி விடைபெறுவோம்.

நிறைவுற்றது ...............



பாதியில் நிறுத்தி விடலாம். என நினைத்த நேரம் எல்லாம்.அப்டேட் கொடுங்க என்று கேட்டு ,என்னை ஊக்குவித்த அத்தனை நட்புகளுக்கும்.இத்தனை நாட்கள் சர்வா சிவாவோடு பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

ஓரளவு எல்லோருக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையோடு,அனைவரிடமும் விடைபெறுகிறேன்.



Superrrrrrrrrrrrrb story
 
Top