Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக 21-2

Advertisement

???

சர்வா ஒருவழியா மனசுல இருந்ததை எல்லாம் சொல்லிட்டான்..

 
???

சர்வா ஒருவழியா மனசுல இருந்ததை எல்லாம் சொல்லிட்டான்..

songs selection super ,indha husband and wife romancekku konjam ,rare song sugest pannunga ji,mutti pakuren ,modhi pakuren ,twenty epi koduththum ,romance seen kodukka mudilai :cry: :cry: :cry: atlest sangaiyaavathu poduvom
 
songs selection super ,indha husband and wife romancekku konjam ,rare song sugest pannunga ji,mutti pakuren ,modhi pakuren ,twenty epi koduththum ,romance seen kodukka mudilai :cry: :cry: :cry: atlest sangaiyaavathu poduvom
நீங்க சர்வா, சிவாவுக்கு ரொமான்ஸ் வைங்க, நானும் ரொமான்டிக்கா பாட்டு போடுறேன்....
 

இன்று சிவா விட வில்லை,அவனுக்கு சிறிது அவகாசம் கொடுத்தவள்.அறைக்கதவை தட்டினாள் ,அவன் திறந்ததும் ,"சாப்பிடலாம்" என்றாள்.


பெண்ணை அவன் பார்க்கவே இல்லை,படக்கென்று மீண்டும் கதவை அவன் சாற்ற போக, சிவா இரண்டு கைகளாலும் கதவை பிடித்து கொண்டாள்,இப்போது அவளை ஏறிட்டவனின் விழிகள் அனலை கக்க,"எனக்கு பசிக்குது" என்றிருந்தாள் பெண்ணவள்.

"பசிச்சா..... போய் கொட்டிக்கோ! தினமும் என் கூடவா சாப்பிட்ட, போடி" அவன் எரிச்சலாய் சொல்ல,"இனிமேல் அப்படி தான் ,நீங்க சாப்பிட வரலைனா, நானும் சாப்பிட மாட்டேன்,"இவள் அதிகாரமாய் சொல்ல ,

"ஹோ! அப்படிங்களா மேடம் வேலைக்காரி கூட எல்லாம் .நான் சாப்பிடறது இல்லை." இவன் நக்கலாய் கூற ,

"ஹலோ! வேலைக்காரியா,நான் உங்க வீட்டுக்காரி,"என்றவாறே உள்ளே கிடந்த தாலியை தூக்கி அவன் முன்னே ஆட்டியவளின் விழிகளில் அப்பட்டமான திமிர்,அந்த விழிகள், சண்டைக்கு வாடா என்று சவால் விடுவது போலிருக்க,அதை புரிந்து கொண்ட சர்வா சுயத்தை இழந்திருந்தவன். தானும் பேச இல்லை இல்லை சண்டையிட ஆரம்பித்திருந்தான்.

"ஆமா... ஆமா .....ஆசை பட்டு கட்டிக்கிட்ட மாதிரி பேசுற ,தாலி கட்டுன பின்னாடியும் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு தானே சுத்தி கிட்டு இருந்த,இவளுக்கு இஷ்டம் இருந்தா,இவளே எல்லாம் செய்வா ,இல்லைனா மூஞ்சிய தூக்கி மூலைல வச்சிக்கிட்டு, திரும்பி கூட பார்க்க மாட்டாள்,பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன். போடி அந்த பக்கம் "அவன் கடுப்படிக்க

"இவரு மட்டும் எனக்கு இவளை தான் பிடிச்சிருக்குன்னு, அவங்க அம்மா கிட்ட சொல்லி கட்டிக்கிட்டாரு பாரு , அப்பா அவ விருப்பம். அவளுக்கு பிடிக்கலைன்னா விட்டுடலாம்னு தானே சொன்னிங்க,"அவளும் அவனுக்கு சரி சமமாய் கத்த ,

"பின்னே! பிடிக்கலை, எனக்கு வேண்டாம்னு. நடுவீட்ல உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறவளை ,என்ன பண்ண சொல்ற,எத்தனை முறை, குழந்தைக்கு சொல்ற மாதிரி,நீதான் எனக்குன்னு சொன்னேன்,அதை எல்லாம் புரிஞ்சிக்காமல் நீ எப்படி பேசின,"அவன் எகிற

"நான் அப்படி தான் பேசுவேன்,இனிமேலும் பேசுவேன்.எனக்கு வலி பெருசு ,அதுக்காக உடனே !என்னை போக சொல்லுவிங்களா,அப்புறம் எப்படி சொன்னிங்க, குழந்தைக்கு சொல்ற மாதிரியா,நல்ல வந்துடும் எனக்கு"

"அத்தனை பேரு இருக்குற மேடைல வச்சி, கையை எவ்ளோ டைட்டா பிடிச்சீங்க,மைசூர் பாகை முழுசா ஊட்டிவிடுறிங்க,அப்புறம் நடுராத்திரி காபி கேக்குறீங்களேன்னு போட்டு கொடுத்தால் ,அதை தூக்கி சுவத்துல எறிஞ்சிட்டு ஏதோ! டைலாக் பேசுறீங்க,இருபது வயசு பொண்ணு எனக்கே புரியலை,இதுல குழந்தைக்கு புரியுமாக்கும்." என்று கடுப்படித்தவள்.

"ஒரு நாளாவது, அன்பா ரெண்டு வார்த்தை பேசிருப்பிங்களா ,இல்லை பாசமாய் தான் பாத்திருப்பிங்களா,என்னை பிச்சைக்காரின்னு தானே சொன்னிங்க ,எவளுக்கோ வாங்கிட்டு வந்த ட்ரெஸை கொண்டு வந்து எனக்கு கொடுத்திங்க தானே!"அவள் ஆவேசமாய் கேட்க,



"சும்மா சும்மா அதையே சொல்லாதடி ,எனக்கே கஷ்டமா இருக்கு ,உன்னை கூட்டிட்டு வர கூடாதுன்னு, அம்மா விட்டல சண்டை ,அப்பா அம்மாவை முதல் முறை அடிச்சாங்க தெரியுமா,"

"அப்படி பட்ட நேரத்துல,அதுவும் அப்பா யாரையாவது ஒருத்தரை தான் கூட்டிட்டு வர சொன்னாங்க,நான் தான் நீ வரணும்னு ஆசைப்பட்டு உன்னை கூப்பிட்டேன் , நீ என்னடான்னா ,வரமாட்டிங்குற,அதுவும் எப்படி,"

"அண்ணா உங்க வீட்டுக்கு நான் வரலை. எங்க மாமா வீட்ல இருக்கேன்னு சொல்ற, சித்தப்பா வீடு, உங்க மாமா வீடுன்னா, அப்போ எங்க வீடு, நாங்க யார் உனக்கு,அதுவும் அண்ணா சொல்ற, எனக்கு எவ்ளோ கோவம் வரும்,"

"அப்போ எனக்கு உன்னை, என் கூட கூட்டிட்டு போகணும்னு இருந்துச்சு. என்ன பண்றதுன்னு தெரியல,கோவம் வேற. அதுனால தான் அப்படி சொல்லிட்டேன்.அப்போ நானும் சின்ன பையன் தானே!பேச தெரியாமல் பேசிட்டேன், தப்பு தான் மன்னிச்சிக்கோ!"அவன் குற்றஉணர்வோடு சொல்ல,

அவன் நக்கலை தாங்குபவளால்,இதை தாள முடியவில்லை,முன்பு திமிர் ஏறியிருந்த விழிகள் இப்போது கலங்கி விடுவேன் என்க ,

அதற்குள் சர்வாவே "அப்படி சொன்னதுக்கு சமாதானம் பண்ண தான்,ரெண்டு ஜூஸ் வாங்கி கொடுத்தேன்.அப்போ மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு,இப்போ வந்து சண்டை போடுற,"ஏகாந்தமாய் கேட்க





அவனை முறைத்தவள் "ஆமா,பிடிச்சி கூட்டிட்டுப்போறவங்க,எதுக்கு? பஸ்ல ஒளிஞ்சி நின்னு என்னை பயமுறுத்துணிங்க,"இவள் பொய் கோபத்தோடு சொல்ல,

அன்றைய நினைவில் அவளை பார்த்து புன்னகைத்தவன்.மென்மையாய் "லூசு நீ அழுதுட்டு இருந்தியா,உனக்கு எப்படி சமாதானம் சொல்லன்னு தெரில,அதனால் உன்னை திசை திருப்புனும்னு தோணிச்சு.ஒளிஞ்சு நின்னேன் .நான் நினச்ச மாதிரியே நீயும்,என்னை தேட ஆரம்பிச்சிட்ட,திருப்பூர் வர்ற வரைக்கும்,உன் கவனத்தை என் மேல வச்சிருந்தேன்."

"இங்க வந்த பிறகு உன் கூட சகஜமா இருக்கணும்னு தோணும் ,எங்கே சதா மாதிரி அண்ணா சொல்லிடுவியோன்னு பயம்.அதுனால ஒதுங்கியே இருந்தேன்.அன்னைக்கு பார்க்ல இருந்து ஒரு பையன் பார்த்துட்டு இருந்தான்.எனக்கு தெரியும், நீ அவனை பார்க்கலைன்னு ஆனாலும். கால போக்குல அவனை பார்க்க ஆரம்பிச்சிடுவியோன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம்."

"அதான் ஏதேதோ பேசி,ஜன்னலை சாத்தின்னு... லூசு போல நடந்துக்கிட்டேன்.இனி சகஜமா நடந்துக்கணும்னு நெனச்ச நேரம் பெயிலாகி வந்து நிக்கிற, கடுப்பாகிடுச்சு,அதை விட உங்க அக்காவை கோவில்ல பார்த்ததும் என்னை அம்போன்னு விட்டுட்டு ஊருக்கு போய்ட்டா தானே! நீ ..."குற்றம் சாட்டியவன்

"அப்புறம் ஒரு மாசம் கழிச்சு வந்து நின்னாள் ,மடில உக்ரவச்சி கொஞ்சுவனா,உன் மேல கொலை வெறில இருந்தேன். ஆனால் நீ என்னை ,முழுங்குற மாதிரி பார்த்தியா,பயபுள்ள விழுத்துருச்சின்னு எனக்கு கன்பார்ம் ஆகிருச்சு,"

"அதான் உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்த ட்ரெஸை கொண்டு வந்து கொடுத்தா நேரம் அம்மா வந்துட்டாங்க, என்ன சொல்லன்னு தெரியல,பதட்டத்தில் நிஷாக்கு வாங்கிட்டு வந்தேன்னு சொல்லிட்டேன்."

"நீ என்ன பண்ணின ,அதை கொண்டு போய்,மூலைல விட்டெரிஞ்சிருக்க,என்னோட பாக்கெட் மணியை சேர்த்து வச்சி,உனக்காக வாங்கிட்டு வந்தேன், அடுத்து என்னோட கழுத்துலயே கத்தி வைக்குற நீ,"என்று அவளின் மண்டையில் கொட்டியவன்.





"ஏண்டி, தெரியாமல் தான் கேக்குறேன்,அவளோட சைஸ்... எஸ் ,உன்னோடது எல்,உண்மையா அவளுக்கு வாங்கிட்டு வந்திருந்தால், அதை அவகிட்ட கொடுத்து ஆல்டர் பண்ணி போட்டுக்கோன்னு .சொல்லி இருக்கமாட்டேனா,"அவன் கண்டிக்கும் தொனியில் கேட்க ,

"ஹோ!எண்றவாளோ அதான்,அடுத்து வந்த என்னோட பர்த்டேக்கு, உங்க அம்மாகிட்ட சொல்லி போட வச்சிட்டீங்க தானே!" அவள் வீம்போடு கேட்க,"ஆமா"என்று கெத்தாக சொல்லியவன்.

"அடுத்து மாமா வந்து கார்மென்ஸ் கூப்பிடவும்,அவங்களுக்கு பொய்யான நம்பிக்கை கொடுத்துட்டு அங்க போக பிடிக்கலை,வீட்ல அம்மா விடலை ,அப்பாவும் நிஷாவை தான் கல்யாணம் பண்ணனும்னு, எனக்கு மறைமுகமா சொல்லிட்டே இருந்தாங்களா,"

"எனக்கு குழப்பம். அதை விட எல்லார் மேலயும் கோவம்,உன் மேலயும் சேர்த்து தான். என்னை கேட்க்காமல் இவங்களாவே முடிவு பண்ணி,அதை என் மேல திணிக்க பாக்குறாங்கன்னு,"

"உனக்கு என்னை பிடிச்சாலும் வீட்ல சொல்லி ,எனக்காக நின்னு நீ கல்யாணம் பண்ற எண்ணத்துல இல்லை,ஈஸியா நிசாகிட்ட தூக்கி கொடுத்துட தான் நினைச்சிட்டு இருந்த ,நீயும் சின்ன பொண்ணு சண்டை போட்டு கல்யாணமா பண்ணிக்க முடியும் என்ன பன்ணணு தெரியலை,அதனால் தான் அப்படியே கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன்."

"நீ தான வந்து பேசின ,அப்புறம் அப்பா நிதர்சனத்தை சொன்னாங்க ,அப்புறம் நிஷாட்டா பேசினேன், அவளுக்கும் என் மேல அத்தை மகன்றதை தாண்டி எந்த ஈடுபாடும் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டா,"

"திரும்ப படிச்சேன்,உன்னையும் படிக்க வச்சேன்,நீயும் ஓரளவுக்கு மார்க் வாங்கி சென்னைல சேர்ந்த, எனக்கு சந்தோஷம்,நானும் இதை முடிச்சிட்டு பின்னாடி அங்க வந்து ஜாப் சேர்ந்து, உன்கிட்ட என்னை சொல்லி,நீ படிச்சு முடிச்சதும்,கல்யாணம் பண்ணிக்கலாம்னு கனவு கண்டுட்டு இருந்தேன்."

"அது கடவுளுக்கு பொறுக்கலை போல ,அம்மாக்கு ஸ்ட்ரோக். வந்து நீ வீட்டோட நின்ன,அது எல்லாம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத கஷ்டமான நாட்கள்.அந்த நேரம் நீ இல்லைனா..... நாங்க ,எங்க குடும்பம். என்ன ஆகிருப்போம்னு தெரியல,"

"அதுவும் அம்மாவை அன்னைக்கு பெட்ல வச்சி அப்படி பார்த்தப்போ,நான் நிஜமா பயந்து போய்ட்டேன்டீ , அன்னைக்கு உன்மேல காதலை தாண்டி, ஒரு மரியாதை வந்திருச்சு ,அதை விட எனக்கு பயமா இருந்துச்சு," என்று அன்றய நினைவில் இன்றும் முகம் சுணங்கியது அவனுக்கு ,

"அப்புறம் ஏன்? என்கிட்ட பேசாமால்,முகம் திருப்பிட்டு போனீங்க,"அவள் மிரட்டலாய் கேட்க,

"ம்ம்ச்" என்று இப்போதும் முகம் திரும்பியவன்."அது உன்கிட்ட அழுதுட்டேனா, உன்னை பார்க்க கொஞ்சம் சங்கடமா, இருந்துச்சுட,அதான்."தலையை கோதிக்கொண்டே அவன் சொல்ல,பெண்ணின் இதழ்களில் புன்னகை.

"அப்புறம் சென்னை போனேனா, அது நான் வேலைக்கு போய் சம்பாதிக்க போறேன்னு சந்தோஷம் ,அத்தை உன்னை பேசினதை என்னால தாங்க முடியல , அப்புறம் வந்து உன்னை படிக்க சொன்னால் ,நீ மாட்டேங்குற,"அவன் முறைப்போடு சொல்லியவன்.

"சரி உனக்கு பிடிக்கலை, காலம் முழுசும் உனக்கு சம்பாதித்திச்சு போட தானே! நான் இருக்கேன்.நீ ஏன் படிக்கணும்.அதுனால் நீ என்ன படிக்க நினைக்கிறாயோ! படின்னு விட்டுட்டேன்."அவன் சொல்ல

'ஹோ!அன்னைக்கு கொடுத்த அந்த எக்ஸ்பிரசன். அதுக்கு தானா' என நினைத்தவள். அவனை பார்த்தபடியே நிற்க,

"இங்க வந்த பிறகு என்னமோ! உன்னை விட்டு தள்ளி இருக்க மாதிரி தோணுச்சு, அதோட நான் வரும் பொழுது சாப்பாடு நல்லாவே இருக்காது,அட்ஜெஸ்ட் பண்ணலாம்னு நெனச்சேன்,நான் வர்ற வரை நீ தூங்காம வெயிட் பன்றேன்னு தெரியும்,என் பொண்டாட்டி..எனக்காக முழிச்சிருக்கும் போது. நான் ஏன் ஆறி போனதை சாப்பிடணும்,"அவன் உரிமை குரல் எழுப்ப,

"ஹான்! அப்போவே பொண்டாட்டியா" என்று இவள் விழிக்க ,அப்போவா அதுக்கு முன்னாடியே, நான் அங்க இருக்க வரைக்கும் உன்னை கையில வச்சிட்டே சுத்துவேன்,திடீர்னு இங்க வந்துட்டோம்,உன்னை கேட்டு அம்மாகிட்ட அழுதேனா, இனி இவள் தான் உனக்குன்னு, அம்மா நிஷாவை கூட்டிட்டு வந்து சொன்னாங்க. அவள் உன்னை விட பெரியவள் இல்லையா,"

"என்னவோ! அவள்கிட்ட என்னால ஒட்ட முடியலை ,வீட்ல வேற எங்களுக்கு கல்யாணம் சொன்னதும் சுத்தமா பிடிக்கலை ,அதுக்கப்புறம் நான் அவக்கிட்டயிருந்து ஒதுங்கிட்டேன்,அனாலும் உன் நினைப்பு மனசுல அப்படியே இருந்துச்சு,பசங்க ஸ்க்கூல்ல லவ் பத்தி பேசும் பொழுது, அடிக்கடி உன்னை நினைப்பேன்,"

"பாக்கணும்னு தோணும் அம்மா விட மாட்டாங்க ,அப்போதான் நீ பெரிய பெண்ணாகியிருந்த, என்னால போக முடியாது .நீ போயிட்டுவான்னு அப்பா சொல்லவும் .சந்தோசமா கிளம்பி வந்தேன்.

"நான்,நீ குட்டி பொண்ணா இருக்கும் பொழுது உன்னை பார்த்தது.அப்பா... எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்ட தெரியுமா,அப்படியே உன்னோட கையை பிடிச்சி,என் கூட கூட்டிட்டு வந்துடணும்னு தோணுச்சு."

"அதுக்குள்ள பார்கவி மாமா சொல்லி ,அம்மா ஏதோ பேசி,எனக்கே கஷ்டமாகிருச்சு,ஆனால் நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசிருந்தால் அம்மா அதுக்கும். உங்களை தான் திட்டி இருப்பாங்க அதான் அமைதியா வந்துட்டேன்."என்று முகம் கசங்க கூறியவன்.

"ஆனால் அப்போ என்னோட உள்மனசு சொல்லுச்சு,சர்வா உன் பொண்டாட்டி, இவள் தாண்டான்னு,இங்க வந்த பிறகும் உன் நினைப்புல சுத்திட்டு இருந்தேன்,எங்கே உனக்கு என்னை பிடிக்காமல் போயிடுமோன்னு , உள்ளுக்குள்ள ஒரு பயம் .ஒரு பாதுகாப்பு இல்லாத தன்மை இருந்துட்டே இருந்துச்சு,அதுதான் ஆரம்பத்துல உங்கிட்ட நான் கடுமையா நடந்திகிட்டத்துக்கான காரணம்."

"ஆனால் உனக்கு என்னை பிடிக்கும்னு தெரிஞ்ச பின்னாடி,எப்படி இருந்துச்சு தெரியுமா,அது ஒரு விதமான பீல்."என்று உல்லாசமாய் சொல்லியவன் "நான் உன்கிட்ட தானா வந்து பேசலை தான். ஆனால் நீ பேசி என்னைக்காவது பதில் சொல்லாமல் போயிருக்கேனா,இல்லை படிப்பை தவிர வேற எதுக்காவது திட்டி இருக்கேனா,"அவன் கேட்க....

இல்லை என்று தலை ஆட்டியவள்,"அப்போ ஏன் கிட்ட,பிடிக்குனு சொல்லலை" ஏக்கமாய் கேட்க ,

"எப்படி சொல்ல முடியும்.ரெண்டு பேருக்குமே சின்ன வயசு. அதுலயும் நீ ஸ்க்கூல் பொண்ணு,உன் மனசை கெடுத்து படிக்க விடாமல் பன்னிட்டேனோன்னு,அடிக்கடி தோணும் அதுனாலயே! அதிகமா தள்ளி இருந்தேன்."என்றவன்.

"நம்ம கல்யாணத்துல பார்கவி கூட. என்னை மாமா சொல்லிட்டா, நீஅம்மாக்கு உடம்பு முடிலைன்னு சொல்லும் போது, ஒரு முறை சொன்ன ,அப்புறம் சொல்லவே இல்லை. எப்போ சொல்லுவ,"என்று எதிர் பார்ப்போடு பார்க்க,சிவா அவனையே இமைக்காமல் பார்த்திருக்கவும்.



சர்வா பெரு மூச்சோடு தானே தொடர்ந்தான் ."நிசாவை கல்யாணம் பண்ண அம்மா கேட்டப்போ! அவள் ஒத்துக்க மாட்டாள்னு தெரிஞ்சி தான் ஓகே சொன்னேன், அப்போவாவது நீ ஏதாவது ரியாக்ட் பண்ணுவியான்னு பார்த்தால் ,சரியான அழுத்தகாரிடி நீ, மூச்சே விடலையே!" என்று அவளை வாஞ்சையோடு பார்த்தவன்.

"அப்புறம் அம்மா ஜாதகம் பார்த்துட்டு வந்து ,நமக்கு கல்யாணம் சொல்றாங்க ,நான் என்ன களிமண்ணா,அவங்களுக்கு பிடிச்ச மாதிரி. அப்போ அப்போ பொம்மை செஞ்சு விளையாட ,அதான் கோவம் வந்து கத்திட்டேன்,"

"கல்யாணம் பண்ணிக்க நான் இப்போ ரெடியா இல்லை,ரெண்டு பேருக்கும் இன்னும் வயசிருக்கு ,உன்னை mca படிக்க வச்சிட்டு ,நானும் கொஞ்சம் சேத்து வச்சி, வீடு கட்டிட்டு ,கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்.அதுக்குள்ள நீ கையை சுட்டு கிட்டு நிக்கவும்."

"எப்போவா இருந்தாலும், உன்கூட தானே பண்ணிக்க போறேன். அதான் உடனே பண்ணிக்கிட்டேன் ,அவ்ளோ தான்மா இதுக்கு மேலே என்கிட்ட சொல்ல எதுவும் இல்லை" என்று அவன் கைவிரிக்க.

அத்தனையும் கேட்டவளுக்கு, இப்போதும் போத வில்லை போலும்."இப்போ கூட நீங்க பண்ணதுக்கு விளக்கம் கொடுக்குறீங்களே தவிர,உன்னை எனக்கு பிடிக்கும்னு சொன்னிங்களா,எத்தனை நாள் உங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதான்னு எனக்குள்ள கேட்டுகிட்டு,புலம்பிட்டு இருந்தேன் தெரியுமா ,"அவள் சண்டைக்கு செல்ல

"நான் ஏண்டி சொல்லணும்,சொல்ல மாட்டேன் ,என்னைக்கும்,ஒரு முறை நான் சொன்னதுக்கு ,நீ என்ன சொன்ன,நல்ல வேலை உங்க அம்மாயில்லை.சொன்ன தானே!"





"பிடிக்காதவன் தான், நைட் நேரத்துல... கதவை தட்டி சாப்பாடு கேட்பானா ,இல்லை நீ நாள் முழுசும் சாப்பிடாமல் பட்னியா கிடக்குறன்னு புரிஞ்சிகிட்டு,அவன் தட்டுல இருந்து உனக்கு சாப்பிட கொடுப்பானா,தேவை இல்லாமல் நிஷாவையும் உன்னையும் சேர்த்து குழப்பிக்கிட்டா,அதுக்கு நானா பொறுப்பு."

"உன்னை வச்சிக்கிட்டே தானே அவகிட்ட பேசுவேன்.உன்கிட்ட பேசுற மாதிரி உரிமையா என்னைக்காவது பேசிருக்கேனா,இல்லை கொஞ்சி,குளவி பேசிருக்கேனா,"





"என்னை சொல்றியே !நீ என்கிட்ட சொன்னியா...... இல்லை தானே!அதுவும் அன்னைக்கு என்னை காதலிச்சது தப்புன்னு எவ்ளோ அழுத, அத்தனையையும் நானா தானே புரிஞ்சிக்கிட்டேன்,அதே மாதிரி புரிஞ்சிக்கோ!I will never tell you," என்று ஒரு வித அழுத்தத்தோடு அவன் கூறவும்.

சிவண்யாவோ படு கூலாக ,"ஓகே! நீங்க சொல்லவே வேண்டாம்,"என்று தோளை குலுக்கியவள்.

அவனின் விழியோடு விழி கலந்து ,"இந்த ப்ரொபர்ட்டி என்னோடதுன்னு ரெஜிஸ்டர் ஆகிருச்சு,"என்று அவன் நெஞ்சில் கைவைத்து சொன்னவள் ,"இனிமேல் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை"என்று விட்டு.

"வாங்க சாப்பிடலாம்" என்று முன்னே நடக்க ,"எது! நான் ப்ரோபெர்டியாடி உனக்கு" என்று அதிர்ந்து கேட்ட படி அவளின் பின்னோடு போனவன்."மேடம் எவ்ளோ கொடுத்து இந்த ப்ரோபெர்டியை வாங்குனீங்க" சற்று எகத்தாளமாய் கேட்க ,

அவனை ஆழ்ந்து பார்த்தவள்,"என்னோட காதல் ,தன்மானம் ,சுயமரியாதை,கவுரவம்" என்க,இத்தனை நேரம் இருந்த இனிமை,தொலைந்து சூழ்நிலை சற்று இறுக்கமாகிவிடவும் ,சர்வா வேதனையோடு "வணி" என்றழைக்க,

"நோ! ஹார்ட் பிலிங்ஸ்." என்றவள் கண்ணீரோடு புன்னகைக்க,அன்று மருத்துவமனையில் பார்த்தானே அதே தோற்றம்.இப்போதும் இழுத்து அணைக்க தோன்ற,அன்று போல இன்றும் ஆவலை அடக்கி கொண்டான்.

பின்னே வேறு வழி,அன்று உறக்கத்தில் கைபோட்டத்திற்கே எழுந்து ஓடிவிட்டாள் அல்லவா,இத்தனை பேசியவனுக்கு, அதை பற்றி பேச வரவில்லை .மற்றவை எப்படியோ!இந்த பேச்சு அப்படி இல்லையே ,மிக மிக நுணுக்கமானது.

இவளால் மட்டுமே தட்டி எழுப்ப பட்ட,இனியும் எழுப்ப படும் அவனின் உணர்வுகளுக்கு இவள் தானே வடிகாலாக போகிறவள்.'தான் ஏதேனும் கேட்டு,எங்கே முகத்தை சுளித்து விடுவாளோ!'என்ற பயம் உள்ளுக்குள்ள எழவும். அமைதியாய் அவளையே பார்த்திருந்தான்.

இங்கு சிவாவிற்கும் 'நிஷாக்கு இவங்களை அந்த அளவு பிடிக்காதுன்னு ,ஏன்? தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணாங்க,'என்ற கேள்வி இருந்தாலும் .'தான் அவளை பற்றி பேசினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும்.'அபாயம் இருப்பதால் அமைதியாக சமயலறை நுழைந்தவள்,உணவோடு வர

இருவருமே அமர்ந்து ஒன்றாக உண்டனர்.சிவாவை பொறுத்தவரை அறைக்கு அவனாக அழைத்தால் செல்லும் எண்ணம் தான்.உண்மையில் திரை மறைவில் என்ன நடக்கும் என்று தெரியாத பக்கா நைன்டிஸ் கிட் அவள்.



ஆனால் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவனுக்கு தான் பயமாய் இருந்ததே!உன்டு முடித்த பின்னும் ஒருவரின் அருகாமையை மற்றொருவர் வெகு நேரம் ரசித்திருந்தார்கள்.

பின் சர்வா தான் நேரமாவதை உணர்ந்து எழுந்தவன். "குட் நைட்" என்று விட்டு தனது தனது அறைக்குள் நுழைந்தாலும்,சிவா அவளின் அறை சென்று கதவடைக்கும் வரை பார்த்திருந்துவிட்டே வந்து படுக்கையில் விழுந்தான்.



வருவாள் ...............

லைக்ஸ் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்,சென்னைல இருந்து நேட்டிவ் வந்துருக்கேன்,லேபை கையில் எடுக்கவே நேரம் இல்லை.பயபுள்ளைங்க விட மாட்டிங்குதுங்க ,முடிஞ்ச வரை ரெகுலரா குடுக்க ட்ரை பண்றேன்.






















Super ?
 
Top