Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக-16

Advertisement

ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் -16

காலையில் எழுந்ததுமே வேணி கணவரிடம் மகன் நடந்து கொண்ட அனைத்தையும் கூறிவிட்டார் ,

"உன்னை யாரு பேச சொன்னது,"அவர் கடியவும்,

நேற்று மகன் திட்டி இருக்க ,தற்போது கணவரும் கடிந்து கொள்ள,முகம் தொங்கி போனது அவருக்கு,"நீங்க தானே என்னைய பேச சொன்னிங்க,"மிகவும் தளர்ந்திருந்தது குரல்.

"அதுக்கு இப்படி தான் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசுவியா,இனிமேல் இது விஷயமா எதுவும் நீ பேச கூடாது , எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்." என்றவர்.

"முக்கியமா உங்க அண்ணிக்கு போன் பண்ணி எதையாவது உளறி வச்ச அவ்ளோதான்," என்று விட்டு , அமைதியாக கிளம்பி கார்மென்ஸ் சென்றுவிட்டார்.

நேற்று எதுவுமே நடவாதது போல,வெகு இயல்பாக சர்வா இருக்க,உள்ளுக்குள் இருந்த பதட்டத்தை முயன்று மறைத்து கொண்டு, சிவாவும் நடமாடியவள். காலேஜ் கிளம்பி இருந்தாள்.

"என்ன வரேன்ன்னு சொன்னிங்க ,இப்போ வரலைன்னு சொல்றிங்க," என்று கனகா கேட்கவும் ,கணவர் சொல்லி சென்றிருந்ததால் ,"உடம்பு சரியில்ல, அதான்" என்று மழுப்பி இருந்தார் வேணி ,

அடுத்த நாளும் அவ்வாறே சிவன்யா கிளம்பி இருக்க,சர்வாவிற்கு அன்று விடுமுறை காலை உணவை முடித்ததும்,வெளியில் செல்ல முயன்றவனின் வண்டியில், "சர்வா,கோவிலுக்கு போப்பா" என்று பின்னால் அமர்ந்து கொண்டார். அவனின் தந்தை.



என்ன விஷயம் என்று அவனுக்கா புரியாது,புரிந்தது. இருப்பினும் அமைதியாய் வண்டியை அவிநாசி நோக்கி விரட்டினான். சிறிது நேர பயணத்தில் கோவிலை அடைந்தவர்கள்,இருவரும்அவினாசி அப்பனை தரிசித்துபிரகாரத்தில் ஓரமாய் அமர்ந்தனர் .

மகன் வாயை திறக்கமாட்டான் என்று உணர்ந்தவராக அவரே,ஜோதிடரை பார்த்து வந்த விடயத்தை பகிர்ந்தார்.பொறுமையாக கேட்டவன்.

"இதை எல்லாம் நீங்க நம்புறீங்களா,"ஒற்றை வார்த்தை தான் கேட்டான் ,

சங்கரிடம் ஒரு புண்ணகை,அவரிடம் இதற்கு பதில், " தெரியவில்லை" என்பது மட்டும் தான் ,"உண்மையோ பொய்யோ ,கல்யாணம்னா காலாகாலமா ஜாதகம் பாக்குறது நம்ம வழக்கம்,"

"எங்க அம்மா எனக்கு பாத்தாங்க ,உங்க அம்மா உனக்கு பாத்துருக்கா, இதை தான் என்னால சொல்ல முடியும்,இந்த ஜாதகத்தை வச்சி மட்டும்,நான் பேசலை , உன்னையும், பாப்பாவையும் நல்லா கவனிச்சு பாத்து தான் சொல்றேன், உங்களுக்குள்ள சரி வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"



"எனக்கு புரியுது கணேசன் குடும்பத்துக்கு துரோகம் பண்றோம்னு, நிஷாவையும் நாங்க தான் கல்யாணம் பண்ண சொன்னோம்,அப்பவும் நீ எங்களை ஒன்னும் சொல்லலை ,எங்க முடிவுக்கு நீ கட்டு படுற ,அதே மாதிரி உன்னோட முடிவுக்கும் நாங்க கட்டுப்படுறோம்,"

"நீ பாப்பா,நிஷா ரெண்டு பேருல, யாரை கல்யாணம் பண்ணிக்கறதுனாலும், எனக்கு பரிபூரண சம்மதம் , முடிவு உன்னோட கையில, யோசிச்சு சொல்லுப்பா,"என்று மகனின் வழியிலேயே சென்று விட்டார்.

"சரிப்பா கணேசன் மாமாவை எப்படி சமாளிப்பிங்க," சர்வா கேட்கவும்."சமாளிச்சு தான் ஆகணும், முடிஞ்சா நிசா கல்யாணம் முடியறவரை வெய்ட் பண்ணி தான் உங்க கல்யாணத்தை பண்ணனும்."அவர் மனத்தாங்களுடன் கூற

"ஓகே ,யோசிச்சி சொல்றேன்" என்றவன் அடித்து கொண்டிருந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தவாறு, பிரகாரத்தில் இருந்து வெளியேறி சென்றான்.

சங்கரும் கோபுரத்தை வணங்கி விட்டு,மகனின் பின்னோடு வெளியில் சென்றார். தந்தையை வீட்டில் விட்டவன், வாசலோடு அப்படியே சென்று விட்டான்."என்ன சொன்னான்" என்று வேணி ஆவலாய் கேட்க,

"யோசிக்கிறேன்னு சொல்லிருக்கான்,அவனை எதுவும் கேட்காத, அவனே சொல்லுவான்" என்றுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

அடுத்து ஒருவாரம் இப்படியே கழிய வேணி எதிர்பார்த்து ஏமாந்தவர் ,கணவனிடம் மல்லுக்கு நிற்க, "அமைதியா இரு சொல்லுவான்"என்று வேணியைத்தான் அமைதி படுத்தி கொண்டிருந்தார்.சங்கர்

என்ன தான் அவன் ஒத்து கொள்ள மாட்டான் என நினைத்தாலும் ,மனதின் ஓரம் சிவாவிற்கு சிறு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் போலும், அத்தை ஏதேனும் சொல்வாரா என்று ஏக்கமாய் பார்த்திருந்தவள். அவர் எதுவும் சொல்லாமல் போக ,ஒரு கட்டத்தில் தன்னைத்தானே வெறுக்கும் நிலைக்கு ஆளாகி இருந்தாள்.

முன்பு அவனை ஆசையாய் பார்ப்பவளுக்கு இப்போது அவனை பார்க்க கூட முடியவில்லை ,நிராகரிப்பின் வலி உச்சத்தில் இருந்தது ,'ஏன் உனக்கு என்னை பிடிக்கவில்லை,' என்று அவனின் சட்டையை பிடித்து கேட்கவேண்டும் போல ஒரு வேகம்,

அவனின் மேல் அவள் கொண்ட அன்பு, அவளை மெல்ல மெல்ல காவு வாங்கி கொண்டிருந்தது,அவளுக்கு சிறு மாற்றம் தேவை பட ,"வார கடைசியில் சேலம் சென்று வருகிறேன்," என்று அத்தையிடம் வாய் விட்டே கேட்டு விட்டாள்,

வேணி அனுப்பத்தான் இல்லை,இரவு சமைத்து கொண்டிருக்கையில் 'பார்கவியிடம் சொன்னால் அவள் வருவாள்,நான் போக கூடாதுன்னு சொன்னதும், உன்னோட அக்காவை வர சொல்றியா ,என்று வேணி சண்டைக்கு வந்து விட்டாள். என்ன செய்ய,'என்ற பயத்தோடு யோசித்து கொண்டிருந்தவள்,

சட்டென விசில் வரவும் ,அந்த புறம் திரும்பியவள் ,கவனிக்காமல் கையை குக்கரில் சுட்டு கொண்டாள்,உடனே தண்ணீரில் காட்டவும்,எரிச்சல் சற்று மட்டு பட்டிருந்தது, இது எல்லாம் அவளுக்கு பெரிய காயம் இல்லை ,

சமயங்களில் தோன்றும்,' சூடாய் இருக்கும் தோசை தவாவில் ,கைவைத்து விடலாமா, அந்த வேதனையில் இந்த வேதனை சற்று மட்டுப்படும் அல்லவா என்று ,இன்றும் அதே போல தோன்றியது,எங்கே சிறிது நேரம் நின்றாலும் தோன்றியதை செய்துவிடுவோமோ! என்ற பயம் ஆட்டி படைக்க,'அடுப்பை அணைத்து அவ்விடம் விட்டு அவளின் அறைக்குள் ஓடிச்சென்று விட்டாள்.

இரவு பறிமாறுகையில் சர்வா கவனித்து விட்டான் ,"என்னடி ஆச்சு" என்று அவளின் கை பிடித்து பதறி விட்டான்,"ஒன்னும் இல்லை" என்று அவசரமாய் கூறிவிட்டு, அவளின் கையை விளக்கி கொண்டாள்.

முன்பானால் எப்படியோ ,இப்போது அவர்களுக்கு திருமணம் பேசி அதை அவன் மறுத்து, என்னவோ! அவனின் சாதாரண தொடுகையை கூட ஏற்க முடியவில்லை அவளால்,. இத்தனைக்கும் வீட்டினர் வேறு இருக்க,அவனிடம் இருந்து தள்ளி நிற்க தோன்றியது.

அவளை புரிந்துகொள்ளும் நிலையில் அவன் இல்லை போலும்,"என்ன ஆச்சுன்னு கேட்டேன்" குரல் சற்று அழுத்தமாயிருக்க, "சுட்டுகிட்டேன்,"ஒற்றை வரி பதில் அவளிடம்,

"ஏன்? இப்போ தான் புதுசா சமைக்க கத்துக்கிறியா,"நக்கல் வழிந்தது குரலில்,'உன்னை நினைச்சிகிட்டே சுட்டுகிட்டேன்,' என்று கத்தி சொல்ல வேண்டும் போல ,ஒரு ஆவேசம்,அவனின் விழியோடு விழி கலந்து,தீயாய் முறைத்தவளின்,கண்ணில் இருந்து நொடியில் கண்ணீர் சரசரவென வழிந்தது.



சர்வா அதிர்ந்து பார்க்க,வந்த அழுகையை உதடு கடித்து அடக்கியவள்,சாதரணமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அழுத களைப்பில் அவள் உறங்கி விட்டிருக்க,இங்கு இவன் தான் அவளால் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான்.

கண்ணை மூடினால் ,உதடு கடித்து அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தவள் பிம்பமே கண் முன் தோன்ற ,முடியவேயில்லை. அந்த அழுத்தக்காரனுக்கே! அழுத்தம் கொடுத்து கொண்டிருந்தாள் சிவன்யா,

எத்தனை புரண்டும் உறக்கம் வராமல் போய்விட,எழுந்து வெளியில் சென்றவன்,சிவன்யாவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான்,

விடி விளக்கின் வெளிச்சத்தில்,கசங்கிய உடையோடு, மெலிதாக வாயை பிளந்து உறங்கி கொண்டிருப்பவளை,மெல்லிய புன்னகையோடு சிறிது நேரம் பார்த்திருந்தவன்,

அவளின் வெண்ணிற கரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த காயத்தையும் பார்த்து விட்டு,சிறு பெருமூச்சோடு ,அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்,அப்போதும் உறக்கம் வந்த பாடில்லை,

நள்ளிரவு வரை பல வித யோசனைகளோடு,படுக்கையில் புரண்டவன்,அதன் பின்பே உறங்கியிருக்க,வழக்கமான நேரத்திற்கு விழிப்பு வந்தாலும், படுக்கையிலேயே படுத்து கிடந்தான்.



இங்கு ஒரு ஜீவன் 'இன்னேரம் ஜிம் கிளம்புவாங்களே! ஏன் இன்னும் வரவில்லை,' என்று அவனின் அறையை யோசனையோடு பார்த்திருப்பதை அறியாமல்,அந்த ஜீவன் காலேஜ் கிளம்பி செல்லும் நேரத்தில் தான் வெளியில் வந்திருந்தான்,

'ஹப்பாடா இப்போவாவது வந்தாங்களே!' என்று அவனை அவசரமாக கண்ணில் நிரப்பிக்கொண்டு பேருந்தை பிடிக்க ஓடியிருந்தாள்,அவனின் வருங்கால மனைவி.

சங்கர் வேலைக்கு செல்ல தயாராக இருந்தவர் ,வாயிலில் யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்தார் ஹாலில் அமர்ந்திருந்த தாயை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றவனுக்கு, காபி குடிக்க வேண்டும் போல இருந்தது. அவனுக்கு வாய்த்த அடிமை தான் அங்கு இல்லையே!

அதனால் காலை உணவை கூட உண்ணாமல், அவன் வெளியேற முனைய,"சர்வா" என்று வேணி பிடித்து கொண்டார்,

தாய் அழைத்ததால் அவன் அப்படியே நிற்க,"உன்கிட்ட கேட்டு எத்தனைநாள் ஆகுது, உனக்கு இருபத்தாறு வரதுக்குள்ள ,முடிக்கணும். இல்லைனா பத்து வருஷம் ஆகிடுமாம்,"என்று அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே!

"ம்ம்ச்" என்றவன் வாசலை நோக்கி நடக்க, வேணி மகனின் கையை எட்டி பிடித்து கொண்டார். "அம்மா" என்று அவன் கர்ஜிக்க ,"தம்பி ப்ளீஸ் டா ,சொன்னால் புரிஞ்சிகோயேன்,உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெத்தவளா, எனக்கும் ஆசை இருக்குறது நியாயம் தானே,"என்று அவர் கெஞ்சவும்

மனைவி இவ்வாறு மகனிடம் கெஞ்சுவது பிடிக்காமல், "வேணி" என்று சங்கர் மனைவியை அதட்டி கொண்டே வர,"இது எனக்கும் அவனுக்கும் நடுவுல, நீங்க வராதீங்க" என்றவர்.

"இன்னைக்கு எனக்கு முடிவு தெரிஞ்சாகணும் சொல்லு," என்று அவனை நெருக்க,தாயிடம் இருந்து தனது கரத்தை பிரித்தெடுத்தவன்,"என்னமோ பண்ணுங்க உங்க இஷ்டம்,"என்று விட்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"எதற்கு அவனை இப்படி நெருக்கி சம்மதம் வாங்கினாய் ,கொஞ்ச நாள் போயிருந்தால் அவனே சம்மதம் சொல்லி இருப்பான்" என்று சங்கர் மனைவியை திட்ட,

"அவன் ரொம்ப அழுத்தக்காரன், இப்படி கேட்கலைன்னா எத்தனை நாள் ஆனாலும் சம்மதம் சொல்லி இருக்கமாட்டான்,அரைக்கிழவன் ஆனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கலாமா," என்று கணவர் மேல் வேணி எரிந்து விழுக .

சங்கர் பதில் ஏதும் சொல்லாமல் நிற்க ,அலுவலகம் கிளம்பி கொண்டிருந்த சர்வா வெளியில் இருந்தபடியே! "அப்பா" என்றுஅழைத்திருந்தான்,அவனிடம் வந்த தந்தை மகனை கேள்வியாய் பார்க்க ,

"கணேசன் மாமாவை நேருல பார்த்து சொல்லிடலாம்ப்பா,அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் ,வீட்ல இருக்காங்களான்னு கேக்குறேன்."என்று அவனின் அலைபேசியை எடுத்தவன், கணேசனுக்கு அழைத்திருந்தான்,

தந்தை மகன் இருவரும் கணேசன் கார்மன்ஸில் அவரின் முன் அமர்ந்திருந்தனர். வரும் பொழுதே சர்வா, "ஜாதகம் விசயத்தை சொல்லி அவங்களை குழப்ப வேண்டாம்ப்பா,அதை ஒரு காரணமா வச்சி சொந்த தங்கச்சி குடும்பமே நம்பிக்கை கொடுத்து ஏமாத்திட்டாங்களேன்னு,மாமா கஷ்ட பாடுவாங்க,நான் சிவன்யாவை லவ் பன்றேன்னு சொலிட்றேன் ,நீங்க அமைதியா கூட இருங்கப்பா,"என்று சொல்லி தான் அழைத்து வந்திருந்தான்.

அதன் படி தான் காதலிப்பதாக சர்வா சொல்லவும் ,கணேசன் அதிர்ந்து பார்த்தார்."என்ன பேசிட்டு இருக்கன்னு தெரிஞ்சு பேசுறியா,நான் உங்க கல்யாணதுக்கு மண்டபம் வரைக்கும் பிக்ஸ் பண்ணிட்டேன், இப்போ வந்து இப்படி சொல்லிட்டு இருக்க,"

"எனக்கு தெரியும், நீ முதன் முதல்ல கார்மென்ஸ் வர மாட்டேன்னு சொல்லும்பொழுதே இப்படி ஏதாவது இருக்கும்னு, அப்போவாவது வாயை திறந்து சொன்னியா,"என்று அவனின் சட்டையை பிடித்து அவர் உலுக்க ,

"தப்பு தான் மாமா,அப்போ பயத்துல சொல்ல முடியலை," அவன் தலை குனிந்து நிற்க அவருக்கு எரிச்சல், எதிர்த்து பேசினால் ,திரும்ப பேசலாம்,தப்பு தான் என்று ஒத்துக்கொள்பவனிடம் என்ன சொல்ல,

"என்ன மாப்பிள்ளை இது, இவன் தான் சின்ன பையன் நீங்க சொல்ல கூடாதா, இருங்க நான் வேணி கிட்ட சொல்லி, இவன் கிட்ட பேச சொல்றேன்." என்று கணேசன் படபடக்க,

சங்கர் எழுந்து மகனை அவரிடம் இருந்தது பிரித்து விட்டவர் ,கணேசனின் கையை பிடித்து கொண்டார். "தப்பு தான் மச்சான்,உங்களால ஏத்துக்க முடியாது,எனக்கும் புரியுது ,வேறவழியில்ல,தப்புன்றதை விட துரோகம் தான் மன்னிச்சிடுங்க ,சர்வா விருப்பத்துல வேணிக்கும் சம்மதம் தான்,"

"நிஷாக்கு, நீங்க கல்யாணம் பண்றவரைக்கும், சர்வா கல்யாணத்தை தள்ளி போடுறோம்,இதை தவிர வேற என்ன பண்ணணு எனக்கும் தெரியலை."என்று கையெடுத்து கும்பிட ,கணேசனுக்கு பயங்கர கோபம்

"இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லை, நான் என்னை சுத்தி இருக்குறவங்களுக்கு, என்ன பதில் சொல்லுவேன்,வெளில தலை காட்ட முடியுமா என்னால, ஏற்கனவே நான் பயங்கர பிரச்னையில் இருக்கேன்,"என்று அதீத பதட்டத்தில் படபடத்தவர்,

"நிஷாவிற்கு என்ன பதில் சொல்ல போற,"என்று சர்வாவை கூர்ந்து பார்த்தவாறு கேட்க,அவரின் பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவன்,"அதை நிசா என்கிட்ட நேரா கேட்கட்டும் மாமா,நான் சொல்றேன்," என்று விட்டான்.

கணேசனுக்கு இனி என்ன பேச என்று தெரியவில்லை,"இது தான் உங்க முடிவா என்று அவர் சங்கரையிடம் கேட்கவும் ,ஆமாம் என்பது போல சங்கர் தலை அசைக்க,தனது கையை எடுத்து கும்பிட்டவர் ,"வெளியே போங்க" என்று கைகாண்பித்தார்.

தந்தையும் ,மகனும் ஏதும் பேசாமல் வெளியேற போக ,"என்னோட பொண்ணு கல்யாணம் வரைக்கும், நீங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை,அவள் வாழக்கையை நாங்க பாத்துப்போம்." என்று கறாராக கூறிவிட்டார்.

"வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன்," என்பவனை ,அவரும் வேறு என்ன செய்ய முடியும்.முடியும் அவரால்,அவன் மீதும் ,அவன் தம்பியின் மீதும் பொய் கேஸ் போட்டு உள்ளே அனுப்ப முடியும்,அவன் தந்தையின் வேலையை பறிக்க முடியும்,

ஒரே நாளில் அவர்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைக்க முடியும்,சர்வா என்று ஒருவன் இருந்தான் என்ற தடையமே இல்லாமல் அவனையும் அவன் விரும்புபவளையும் அழிக்கமுடியும்,அவரும் செய்திருப்பார்,

அவன் வேறு பெண்ணை விரும்பி இருந்தால்,ஆனால் அது சிவண்யா எண்ணும் பொழுது,அவருக்கு எதுவும் செய்ய தோன்றவில்லை ,அமைதியாக அமர்ந்து கொண்டார்.அதற்காக கோபம் இல்லை, என்று எல்லாம் அர்த்தம் கிடையாது,

சங்கர் வெளியில் வந்ததும்,"மாமா பேசுவதை, மனசுல வச்சிக்காதப்பா,எனக்கு இருக்குற கவலை எல்லாம் நிஷாவுக்கு ஒரு நல்ல வாழ்கை அமஞ்சிடணும்ன்றது தான்" என்க

சர்வாவின் இதழ்களில் ஒரு வறட்டு புண்ணகை,"நீ கவலை படாத தம்பி ,நேரம் கூடி வந்தால் எல்லாம் தானா நடக்கும்" என்க,

"ம்ம்ம் கிளம்பலாம்பா ,வேலைக்கு போறிங்களா,வீட்டுக்கா" மகன் கேட்க,

"இனி எங்க வேலைக்கு போக வீட்டுக்கு தான்" என்றவர்,"நீ ஆபிஸ் போறதுன்னா என்னை மெயின் ரோடுக்கிட்ட எறக்கி விடுப்பா, நான் போய்க்கிறேன்,"என்றதும் அதன் படி சர்வா இறக்கி விட்ட நேரம்





"சர்வாப்பா சிவண்யாவை பிடிச்சிருக்குள்ள,"என்று அவர் கேட்டிருக்க,"இனி இந்த கேள்வி தேவை இல்லாததுப்பா ,அடுத்து என்னன்னு பாருங்க,எவ்ளோ ஆகும்னு கணக்கு போட்டு வைங்க,லோன் போட்டுக்கலாம்."என்று விட்டு நகர்ந்து விட்டான்.





சங்கர் முகத்தில் புண்ணகை,' இப்போ கூட சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறானே!'என்று இருப்பினும் ஒரு நம்பிக்கை, சிவா வின் மேல் ஒரு பொறியாவது இருக்க போய் தான் மகன் ஒத்து கொண்டான் என்று,

அதே மகிழ்ச்சியோடு வீடு வந்தார், மனைவியிடம்,அங்குநடந்ததை சொன்னார். விசயம் அறிந்து கனகா வீட்டிற்கே வந்து சண்டையிட்டார்,உள்ளுரில் இருக்கும் நெருங்கிய உறவுகளை அழைத்து வந்து பஞ்சாயத்து வைத்தார்.

வேணி மகன் சொன்னதையே வலுவாக பிடித்து கொண்டு ,"கட்டினால் அந்த குட்டியை தான் கட்டிக்குவேன், இல்லைனா காவி தான்னு சொல்றான் ,நாங்க என்ன பண்ணட்டும்," என்று உறவுகளின் முன், தான் நல்லவராகவே காட்டி கொண்டார்.

ஆனால் வேணியை பொறுத்தவரை, 'மகன் அவர் கேட்டதால் தான் திருமணத்திற்கு வேறுவழியில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறான். சிவாவின் மேல் அவனுக்கு எந்த எண்ணமும் இல்லை.' என்று தான் எண்ணி கொண்டார்.

நெருங்கிய உறவுகளுக்குள் விஷயம் கசிய கணேசன் மனைவியை கடிந்து வீட்டில் அமரவைத்தார்.இத்தனைக்கும் அடிப்படை காரணமான வானிசாவிற்கும் விபரம் சொல்ல பட்டிருக்க , அவளின் சென்னை அபார்ட்மெண்ட் ,அறையில் படுத்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்தாள்.அவளின் விழிகள் கலங்கி போயிருந்தது.

இங்கு யாருக்கும் காத்திராமல் அனைத்தையும் நடத்தி கொண்டிருந்தார் வேணி,அதன் படி கொழுந்தன் குடும்பத்திற்கு விடயத்தை பகிர்ந்தவர்,நாளைக்கே ஜோதிடரை சென்று பார்த்து திருமண நாளை குறித்து வர சொல்லி இருந்தார்.

அன்று மாலை காலேஜ் முடிந்து வெளியில் வந்த நேரம், சிவாவின் எண்ணிற்கு பார்கவியின் எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது,

தங்கை ஏற்றதும் "சிவா அங்க என்ன நடக்குது, என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டியா நீ,அந்த அத்தைக்கு எங்க இருந்து வந்துச்சாம் ,இந்த ஞானஉதயம் ,இப்போ நாம மேனாமினுக்கிக்கங்களா தெரியலையா, அவங்களுக்கு,"

"அவங்க பையன் அந்த மிஸ்டர், பெர்பெக்ட் ,நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளான்னு தானே பாத்துட்டு போவாங்க, இப்போ எப்படி ஒத்துக்கிட்டாராம்."என்று பார்கவி அடுக்கி கொண்டுபோக ,

ஒன்றும் புரியவில்லை சிவாவிற்கு ,"டீ க்கா ,என்னடி சொல்ற ,தெளிவா தான் சொல்லேன் ,வேணி அத்தைக்கு என்ன,அவங்க பையனுக்கு என்ன" என்று கேட்கவும்.

அப்போது தான் தங்கைக்கு இன்னும் விபரம் பகிர படவில்லை என்பது புரியவும் பார்கவிக்கு பாவமாகி போனது ,"அடிப்பாவி உன்னை கூட கேட்க்காமலா, கல்யாண ஏற்பாடு பண்றாங்க,அவங்க வீட்ல வளர்ந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்களா," என்று பார்கவி பேசி கொண்டிருக்க ,

இங்கு சிவன்யாவிற்கு மெல்ல மெல்ல புரியதொடஙகி இருந்தது ,'நிஜமா ,நிஜமே நிஜம்மா ,அவங்க ஓகே சொல்லிட்டாங்களா,'ஒரு நொடி தான் அதற்குள் ஓராயிரம் எண்ணங்கள்.படபடக்கும் இதயத்தை கையால் அழுத்தி பிடித்து கொண்டே!

"அக்கா ,டி கொஞ்சம் தெளிவா சொல்லேன்" என்க,

கண்டேன் சீதையை ,என்றது போல...." உனக்கும் சர்வாக்கும் மேரேஜ் அரேஞ் பன்னிருக்காங்க,நாளைக்கு சின்ன மாமா தேதி பார்க்க போறாங்க," என்று அவள் சொல்லி கொண்டிருக்க ,"அவங் ...."என்று நிறுத்தி மூச்சை ஆழயெடுத்தவள். "ச...ர்....சர்வா...விற்கு ஓகே வாமா" என்று தடதடக்கும் மனதோடு கேட்க

"ஹ்ம்ம், ஓகே தானாம் ,எப்படி ஓகே சொன்னாங்கன்னு தான் எனக்கும் டவுட் ,"என்று அவள் கூறிக்கொண்டிருக்கையிலே !

"டீ அக்கா நா...நான் அப்புறம் கூபிட்றேன்," என்று வைத்திருந்தாள் சிவன்யா,



சர்வமும் நின்று அவளின் முன் அவள் சர்வேஸ்வரன் மட்டுமே,'கிடைக்கவே கிடைக்காது, என்று சென்ற நிமிடம் வரை அவள் எண்ணியிருந்த, அவளின் சொர்க்கம் கிடைத்தே விட்டதா,நடந்துவிடுமா,வாழ்ந்துவிடுவேனா அவனோடு ,அவன் எனக்கே எனக்கா,'

'சுகுணா அத்தை, சரவணன் மாமா.. கண் பார்த்து நடந்து கொள்வது போல ,நானும் அவங்க கண்ணா பார்த்து புரிஞ்சி நடந்துப்பேனா ,சங்கர் மாமா வேணி அத்தைகிட்ட அனுசரிச்சு போகுறமாதிரி, அவங்க என்கிட்ட நடந்துப்பாங்களா ,நாங்களும் ஆதர்ச தம்பதிகளா வாழ்ந்துடுவோமா,'

'கனவில் மட்டும் நான் வாழ்ந்த வாழ்க்கை, இனி நிஜ்ஜாத்தில் வாழ போகிறேனா,நினைவே தித்திப்பாக இருத்தது.'அப்பப்பா... இந்த நொடி இறந்து போக சொன்னாலும் அத்தனை இன்பமாய் இறந்து போவாள் சிவன்யா .......

பிறவி பலனை அடைந்தது போலான இன்பம் ,"ஹோ" என்று கத்தினாள், சத்தம் போட்டு சிரித்தாள் ,தீடீரென அழுதாள்,இவளை கடந்து போவோர் எல்லாம் விசித்திரமாய் இவளை பார்த்து விட்டு சென்றனர், இது எதையும் கவனிக்கும் நிலையில் கூட அவள் இல்லை ,

மனம் முழுவதும் ஆனந்தத்தில் இருக்க ,தான் என்ன செய்கிறோம், என்றே உணராமல் ஏதேதோ செய்து கொண்டிருந்தாள்.எத்தனை நேரம் ஆனதோ,வேணி அலைபேசியில் அழைத்தவர்,"காலேஜ் பஸ் இன்னேரம் போயிருக்கும், நீ என்ன, இன்னும் வீட்டுக்கே வரலை," என்று சத்தம் போடவும் தான்,

தான் பஸ்ஸை தவறவிட்டிருக்கிறோம் என்பதே நினைவில் வர ,

"அது அது" என்று தடுமாறியவள்," அது ஸ்பெஷல் க்ளாஸ் அத்தை" அவள் திணறி கொண்டே சொல்ல,

"என்ன கிளாஸோ சீக்கிரம் வந்து சேரு ,கல்யாண பொண்ணு, நேரத்துக்கு வீடு வர பாரு," என்று விட்டு அலைபேசியை வைத்து விட்டார்.

முகம் கொள்ளா புன்னகையோடு,"கல்யாணப்பொண்ணு"என்று சொல்லி பார்த்தவளுக்கு தெவிட்டாத மகிழ்ச்சி ஊற்று ,

சிவன்யா

weds

சர்வேஸ்வரன்

சொல்லி பார்த்து கொண்டாள்,அவளுக்கு பிடித்த ஆரஞ்சு மிட்டாயை விட இது தேனாய் இனித்தது ,அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று ஆவல் கிளர்ந்தெழ, முடியாதே! அவன் தான் கோவையில் இருக்கிறானே!இவள் எண்ணி கொண்டிருக்கியிலே அலைபேசி ஒலித்தது, சர்வா தான்,

வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது ,இதயம் வேகமாய் துடித்தது ,பின்னால் இளையராஜா bgm கூட ஒலித்தது,அம்மம்மா இது என்ன இப்படி ஒரு இன்ப அவஸ்த்தை,

அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்,பேச்சு வரவில்லை காரிகைக்கு,வெட்கம் பிடுங்கி தின்றது மங்கையவளை ,அதற்கு மேல் முடியாமல் இழுத்து பிடித்திருந்த மூச்சை சற்று வேகமாக விட ,

"என்னடி உங்க காலேஜில ரன்னிங் காம்பிடேசனா,இப்படி மூச்சு வாங்குற,நீ உருண்டு போய் சேர்ரத்துக்குள்ள கேம் முடிஞ்சிடுமே"என்று எடுத்ததுமே அவன் நக்கலாய் கேட்க,

பெண் முகம் செல்லமாய் சுருங்கி போனது,"ம்ஹ்ம்"என்று இவள் சினுங்க ,அந்த புறம் இவளை விட வேகமாய் மூச்சு சத்தம், ஓரிரு நிமிடம் இருவருக்கும் இடையே ஆழ்ந்த மௌனம்.

"அம்மாக்கு மாத்திரை தீர்ந்துடுச்சாம்,நான் வரதுக்குள்ள அவங்க தூங்கிடுவாங்க பணம் அனுப்புறேன்,போகும் பொழுது வாங்கிட்டு போ"

"ஹ்ம்ம்"இப்போதும் இவள் முனங்கல் சிணுங்கலாய் சிதற....

"சிவண்யா"என்று மென்மையாக அழைத்தவன், சிறு இடைவெளி விட்டு "பார்த்து போ"என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்,குரல் சற்று

குலைந்திருந்ததோ .............












பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்




சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் ,கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள்,


அப்புறம் சர்வேஸ்வரன் ,சிவண்யா,திருமண விழாவிற்கு ,அனைவரும் வருக வருக என, வேணி ஆர்மியின் சார்பாக வரும் ஞாயிற்று கிழமை வரவேற்கப்படுகிறீர்கள்


Super ?
 
Top