Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.15.2

Advertisement

பேசாமல் கனகா அண்ணன் பையனுக்கு பார்கவியோட ஜாதகம் செட் ஆகுதானு பாருங்க பா... அந்த பிள்ளைக்கும் ஒரு நல்ல life அமையட்டும்.... சிவா உனக்கு யாரும் சூனியம் வைக்க வேண்டாம் நீயே போதும்...

அடேய் சர்வா நீயும் நிஷாவும் சேர்ந்து ஏதோ வேலை பாக்குறீங்க அது மட்டும் தெளிவா புரியுது....
 
"புதன் அன்று என்னால் வரமுடியாது .வெள்ளி வருகிறேன்" என்று சதா சொல்லவும்.புதன் கிழமை கனகாவின் அண்ணன் மகனுக்கும், சிவன்யாவிற்கும் ஜாதகத்தை பார்க்க,கணவரோடு சேலம் கிளம்பி விட்டார் வேணி,

அங்கே சரவணனும் சுகுணாவும் பெண்ணின் ஜாதகத்தோடு வந்து இணைந்து கொள்வதாக ஏற்பாடு , இந்த ஜோதிட குடும்பத்தினர் தான், தலை முறை தலை முறையாய் ,சங்கர் குடும்பத்திற்கு ஜோதிடம் பார்பவர்கள்.

அவர்கள் சொன்னால் நிச்சயம் நடக்கும் என்ற அளவிற்கு ,மிக மிக நம்பிக்கையானவர்கள்.அந்த வயாதானவர் முன்பு தான் இரண்டு தம்பதிகளும் அமர்ந்திருந்தனர்,

ஏதேதோ கணக்குகளை போட்டு பார்த்தவர் ,"ரெண்டும் ஒரே ராசி ,நட்சத்திரம் அப்படி பண்ண கூடாது" என்றுவிட்டார்,மற்ற மூவருக்கும் கவலை என்றால் ,இந்த திருமணத்தில் முதலில் இருந்த ஆர்வம் ,தற்போது தொலைந்து போயிருந்த வேணிக்கு ,பரம திருப்தி , இப்போதைக்கு சிவா எங்கும் போகமாட்டாளே............

அடுத்தாததாய் சர்வா,நிசா ஜாதகத்தை எடுத்து வேணி நீட்டவும் ,சங்கர் மனைவியை கண்டனமாக பார்த்தார்."சின்ன வயசுலயே முடிவு பண்ணிட்டோம் ,இப்போ ஜாதகத்துல ஏதாவது குறை சொன்னால், கல்யாணத்தை நிறுத்தவா முடியும்,தேவை இல்லாத மனசங்கடம், அதை எடுத்து வீட்ல வை,"என்று கிளம்பும் பொழுதே கூறி இருந்தார் ,

வேணி தான் 'இவ்ளோ தூரம் இதுக்குன்னு வரோம், இவங்களுதையும் பார்ப்போம்' என்று கொண்டு வந்திருந்தார்.

இரண்டையும் சேர்த்து பார்த்த ஜோதிடரின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட ,வேணிக்கு பதட்டம் ,"சொல்லுங்க சாமி ,"என்று அவர் அவசரபடுத்த,

"சுத்தமாய் பொருத்தம் இல்லை ,இந்த பொண்ணுக்கு ரெண்டு மாங்கல்யம் இருக்கு,முதல் கணவரோட விவாகரத்தும் ஆகலாம் ,இல்லை இறந்தும் போகலாம்,ரெண்டாவது முறை அமையுற வாழ்கை தான் சிறக்கும்,"

நால்வரின் முகத்திலும் ஈஆட வில்லை ,சரவணன் தான்" பரிகாரம் ஏதும்" என்று கேட்க

"என்ன பண்ணாலும், இது தான் நடக்கும்,"கறாராய் அவர் கூறிவிட

வேனியால் ஏற்று கொள்ளவே முடியவில்லை,இன்றா,நேற்றா அவரின் இருபத்தைந்து வருட கணவாகிற்றே !

"எல்லா முடிவும் பண்ணிட்டோம் சாமி,இப்போ நிறுத்த முடியாது,ஏதாவது சொல்லுங்களேன்," என்று மன்றாட

"வேணும்னா,நாற்பத்தியெட்டு நாள் ராகுகாலத்துல அம்மனுக்கு விளக்கு போட சொல்லுங்க ,"என்று அவர் கூறவும்.

"ஓகே! வாழ்க்கை முழுசும் கூட விளக்கு போடுறேன் ,பையன் உயிருக்கு ஒன்னும் ஆகாது இல்லை,"என்று தாயாய் அவர் பதற,

"உங்க திருப்திக்கு தான் பரிகாரம் சொன்னேன்,நடப்பதை நம்மளால மாத்தமுடியாது,எல்லாம் அவன் செயல் , உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா வேற இடத்துல கூட போய் பாருங்க,"என்றவர் கை கூப்பி விடை கொடுக்க,

வேணி என்ன நினைத்தாரோ! சர்வேஸ்வரன் ,சிவன்யா ஜாதகத்தை எடுத்து நீட்டி விட்டார். இப்போது கணக்கிட்டு பார்த்த ஜோதிடர்,"செம்மண் நிலத்தே பெய்த மழை நீர், அம்மண்ணோடு கலந்து அத்தன்மையை அடைவது போல,அர்தநாரிஸ்வரர் போல அத்தனை அருமையா பொருந்தி இருக்கு,"

"இப்போவே பண்ணி வச்சாலும் அமோகமா வாழ்வாங்க ,இந்த பொண்ணு ஜாதகப்படி பையன் கோடீஸ்வரனாக போறான்.என்ன ஒரு அஞ்சு வருசத்துக்கு பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் ரெண்டும் இருக்கும்,"

"அப்போ அஞ்சு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாமா சாமி ,"வேணியே மீண்டும் கேட்க

"இப்போ விட்டால், கங்கண பொருத்தம் ,பையனுக்கு முப்பத்தஞ்சி வயசுல தான் இருக்கு, பாத்துக்கோங்க." என்று அவர் விடை கொடுக்க ,அனைவரும் ஒரு ஒரு மனநிலையில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

'அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது' என்ற பயம் வேணிக்கு இருந்தாலும், மகனின் உயிர் முன், அது எல்லாம். அத்தனை பெரிதாய் தெரியவில்லை,இப்போது அவருக்கு இருக்கும் பயமே! மகனிடம் எப்படி சொல்லி சம்மதம் வாங்குவது என்று தான்.

கணவரிடம் ஓயாமல் அவர் புலம்பி கொண்டே வர ,சங்கருக்கும் கணேசனை எவ்வாறு சமாளிப்பது ,நிஷாவை என்ன செய்வது, என்று சிறிது பதட்டம் இருக்க தான் செய்தது.

முதல் வேலையாக கனகா அண்ணன் வீட்டில் ஜாதகம் பொருந்த வில்லை, என்று தகவல் சொல்லியவர்கள்,வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

இரவு எல்லாம் வேணி புலம்பியதாலும்,பேருந்து பயணத்தின் விளைவால் உடலும் சோர்வாக இருக்க,சங்கர் இன்று கார்மன்ஸ் செல்லவில்லை,வேணி இன்னும் உறங்கி கொண்டிருக்க,

அவர் மட்டும், காலேஜ் கிளம்பி கொண்டிருந்தவளிடம் ,"சிவாம்மா ஒரு காபி கிடைக்குமா," என்று கேட்டவாறே கூடத்தில் வந்து அமர்ந்தார்.சமையல் கார அக்காவிடம் பாலை அடுப்பில் வைக்க சொல்லி ,தனது பையை கொண்டு வந்து மாமா அருகே வைத்துவிட்டு ,காபியை கலந்து வந்து நீட்டியவள்,

சர்வாவின் அறையை பார்த்து கொண்டே! தலையை பிண்ணி கொண்டிருந்தாள், சங்கரும் காபி அருந்தியபடியே தங்கை மகளை கவனித்து கொண்டிருந்தார்.

சர்வா தனது லேப்டாப் பேகோடு,கிளம்பி அறையில் இருந்து வெளியில் வரவும்,தலைக்கு பேண்டய் மாட்டியவள்,கையை கழுவிக்கொண்டு ,அவசரமாய் தட்டில் இட்லி வைத்து கொடுக்க ,

தந்தையை பார்த்தும் ,"என்னப்பா சாப்பிட்டீங்களா ,கார்மன்ஸ் போகலை,"என்று கேட்டவாறே சர்வா உண்ண ஆரம்பித்தான் .

"இல்லைப்பா,நீ சாப்பிடு, கொஞ்ச நேரம் போகட்டும் ,இண்னைக்கு வீட்ல தான் ,நீ என்ன சீக்கிரம் கிளம்பிட்ட போல,"

"ஆமாப்பா,டீம் மீட்டிங் இருக்கு,"

"ஹோ ,சரிப்பா" என்றவர் ,நியூஸை போட்டு கொண்டு அமர்ந்தார்,கவனம் மொத்தமும் இங்கு தான் , தொலைக்காட்சி ஒரு சாக்கு ,சர்வா மூன்று உண்டு முடியும் வரை, அருகிலேயே நின்றவள் ,அடுத்து ஒன்றை வைக்க வர ,அவன் போதும் என்று கைகாட்டவும் ,எடுத்ததை ஹாட்கேஸில் வைத்து விட்டு, சட்னி, சாம்பார் ஊற்றி விட்டு நகர்ந்தவள், அவளின் மதிய உணவை பேக் செய்ய சென்று விட்டாள்.

சர்வாவும் உண்டு முடித்தவன் பேக்கை கொண்டு போய் வெளியில் வைத்து விட்டு ஷூ போட்டு கொண்டிருந்தான்,மேல் வேலை செய்யும் அக்கா,"சிவா பாப்பா" என்று அழைத்தவாறே வந்தார்.

"என்ன அக்கா சீக்கிரம் வந்துட்டீங்க"என்று கேட்டவாறே!சிவா ஹாலிற்கு வந்தாள்.

"இல்லை பாப்பா ,வீட்ல பொண்ணுக்கு உடம்பு சரியில்லை,ஹாஸ்பிடல் போகணும்,பணம் இருந்தா கொடேன், அடுத்த மாசம் சம்பளத்துல கழிச்சிக்கோ!" என்று கேட்கவும்.

வீட்டு செலவிற்கு பணம் வைக்கும் செல்பில் சிவா சென்று பார்க்க,இரு நூரு ரூபாய் தாள்கள் மட்டுமே இருக்கவும் ,சங்கர் 'அறைக்குள் இருக்கும் பர்ஸிலிருந்து, கொண்டு வந்து கொடுப்போம்' என்று எழுவதற்குளாகவே ,

வெகு இயல்பாக சிவாவின் பார்வை வாசலில் இருந்தவன் மீது படிய,அவன் புரிந்தது போல பர்ஸை எடுத்து திண்டின் மேல் வைத்து விட்டு, அடுத்த காலுக்கு சாக்ஸ் மாட்டி கொண்டிருந்தான் .

விறு விறுவென வெளியில் சென்றவள்,இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அந்த பெண்மணியிடம் கொடுத்து,"போதுமா அக்கா,"என்று கேட்டவாறே ,அவனையும் பார்க்க ,

சர்வா அவளை நிமிர்ந்தும் பாராமல்,"கொடு" என்பது போன்று தலை அசைக்கவும் , இன்னும் இரண்டு ஐநூறு ரூபாய் தாளை கொடுத்து அவரை அனுப்பியவள்.

பர்ஸை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு உள்ளே நுழைந்து விட ,பர்ஸையும் தனது பேகையும் எடுத்து கொண்டவன்,ஹெல்மட்டை மாட்டிய படி , முன்னும் பின்னும் எதையோ தேடி கொண்டிருக்க,

கீ ஸ்டாண்டில் இருந்த அவனின் சாவியை கொண்டு போய் அவனருகில் வைத்து விட்டு, இவள் உண்ண அமர்ந்துவிட்டாள்.

"வரேன்பா" என்றவன் ,வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தாலும் ,வண்டியை முறுக்கி கொண்டு அப்படியே தான் இருந்தான்,தட்டில் இருந்து சிவா ஒரு நொடி நிமிர்ந்து பார்க்க,சர்வாவின் பார்வையும், அவளை தீண்டிய அடுத்த நிமிடம்,அவனின் வண்டி கேட்டை விட்டு வெளியில் சென்று விட்டது,

வாயால் சொல்லவில்லை ,தலை அசைக்க வில்லை ,ஒற்றை பார்வை தான்,அன்பாய் இவள் விடை கொடுத்திருக்க ,அழகாய் அவன் விடைபெற்றிருந்தான் ,கவிதையான காட்சி ,

'அம்மாடியோ' என்று தான் பார்த்திருந்தார் சங்கர்,இத்தனை வருட அவரின் வாழ்வில், வேணி பணம் கேட்டால், எப்போதும் இவர் தான் எடுத்து கொடுப்பார்,பர்ஸை அவரிடம் கொடுத்தது எல்லாம் இல்லை,

தாலிகட்டவில்லை ,ஊரறிய திருமணம் செய்யவில்லை ,இவர்களின் செய்கைகளை எல்லாம் பார்த்தால் , மனமொத்து பல வருடம் ஒன்றாக வாழ்ந்த தம்பதிகளை போல அல்லவா இருக்கிறது ,எப்படி இத்தனை நாள் , என் கண்ணில் படாமல் போனது.

ஒரு வேளை,கண்ணில் பட்டு கருத்தில் பதியாமல் போனதோ!ஆக இறைவனின் கணக்கு புரிந்துவிட்டது , மனிதருக்கு ,

"வரேன் மாமா" என்று பேருந்து நிலையம் செல்ல போன மருமகளோடு,மருமகள் தான் மூத்த மருமகள் , முடிவெடுத்து விட்டார் மனிதர் ,சிவாவோடு தானும் உடன் நடந்தார்,ஏதும் பேசவில்லை ,அவள் காலேஜ் பஸ்ஸில் ஏறியதும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு, நடந்தே வீடு வந்து சேர்ந்தார்.

மாலை காலேஜ் முடிந்து வந்தவள்,மாமனும் ,அத்தையும் அமைதியாய் அமர்ந்திருப்பதை அதிசயமாய் பார்த்தவாறு தான், தனது வேலைகளை செய்து கொண்டிருந்தாள்,

'நாளை நிஷாக்கா வீட்டுக்கு போறதுன்னு சொன்னாங்க ,சதா அண்ணா எப்போ வருவாங்க ,சித்தப்பா,சித்தி வருவாங்களா,புடவை எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க,வாங்கிட்டாங்களா,' என்று பல்வேறு யோசனைகள்.

விளக்கேற்றி இவள் வெளியில் வரவும் ,"சிவாம்மா, மாமா ஒன்னு கேட்பேன்,செய்வியா" என்று சங்கர் தொடங்க வேணிக்கு அவசரம் ,"

"என்னங்க இழுத்துட்டு இருக்கிங்க,குட்டி உனக்கும் ,சர்வாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.இன்னும் ஒரு மாசத்துல எக்ஸாம் வருதுல்ல, எக்ஸாம் முடிஞ்ச கையோட கல்யாணம்," என்று அவர் முடித்து விட ,

தனது காதில் விழுந்தது சரிதானா என்பது போல ,அதிர்ந்து அத்தையை பார்த்திருந்தாள் சிவன்யா,"என்ன குட்டி சொல்றது புரியுதா" என்ற வேணியின் அதட்டலுக்கு, புரிந்தது என்பது போன்று சிவன்யா தலை அசைக்க,

சங்கர் "பாப்பாவை பயப்படுத்தாதே" என்று மனைவியை கடிந்தவர் ,"சிவாம்மா நாங்க முடிவு பண்ணி இருக்கோம் ,அதுக்காக நீ யோசிக்ககாத ,உனக்கு இஷ்டம் இருக்கா,"என்ற கேள்வியில்,உலகம் நின்று விட்ட உணர்வு,ஆனந்தத்தில் திக்குமுக்காடி போன நேரம். 'ரொம்ப சந்தோச படாதே' என்று மூளை சொல்லவும். மனதை அதட்டி அடக்கியவள்.

"அவங்களுக்கு தெரியுமா ,கேட்டீங்களா மாமா" என்று கேட்கவும் ,

"இல்லைடா அவன் வந்தால் தான் கேக்கணும்,"

"முதல்ல அவங்க கிட்ட கேளுங்க மாமா ,அவங்க சொல்றது தான்,எப்படி சொல்றங்களோ அப்படி ,"

"இது என்னடா பதில் உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா,"சங்கர் அதிலேயே நிற்க, 'எங்கே இல்லை என்று சொல்லி விடுவாளோ!' பயந்தவராய் வேணி "அதான் சர்வா முடிவு தான் அவளோடதும்னு ,தெளிவாத்தானே சொல்றா ,நீ போ குட்டி"என்று உள்ளே அனுப்பி வைத்து விட்டார் .



'தனது வாழ்வில் வரவே வராத ஒரு தருணம்.' என எண்ணியிருந்தது ,கண் முன்னே நிகழ்ந்தும் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை ,அவளுக்கு தான் தெரியுமே!தினமும் அவன் நிஷாவோடு பேசுவது ,'சர்வா ஒத்து கொள்ள மாட்டான்.' என்று ஆர்ப்பரிக்கும் மனதை அடக்கி கொண்டு வீட்டில் வளைய வந்தாள்.

சங்கர் சின்ன மகனுக்கு அழைத்து,காரணம் சொல்லாமலே ,"நீ வர வேண்டாம்" என்று மட்டும் கூறிவிட்டார்.

நேரம் சென்றது ,சிவா விடம் தன்மையாக பேச விடாததால், அவர் மேல் கோபத்தில் இருந்த கணவனிடம்,"எப்படிங்க சர்வா கிட்ட சொல்றது," என்று மனைவி நச்சரித்து கொண்டே இருக்கவும்.

"என்னை கேட்டா, நிசாக்கும் அவனுக்கும் கல்யாணம்னு, நீ பேசுன,இல்லை தானே இப்போ மட்டும் ஏன்? என்னை கேக்குற,நைட் வருவான் நீயே சொல்லு" என்றவர் உண்டு உறங்க சென்று விட்டார் ,

எப்போதும் போல தாமதமாக, வீடு வந்து சேர்ந்திருந்தான் சர்வேஸ்வரன்,வரும் பொழுதே கோபமாக இருப்பது போன்று தோன்றியது வேணிக்கு,உண்மையில் அவன் சாதாரணமாக தான் இருந்தான் ,

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாம்,அந்த நிலை தான் வேணிக்கு,ஏதும் பேசவில்லை அமைதியாக அமர்ந்திருந்தார் சோபாவில் ,கைகால் கழுவி உண்ண வந்தான்.

சிவா உணவு வைக்க வந்தவள் ,அத்தையையும் அவனையும் மாறி மாறி பார்த்து கொண்டே ,கைகள் நடுங்க சப்பாத்தி வைக்கவும்,அவளையும் ,கையையும் பார்த்தவன், "குடிச்சிருக்கியா" என்க ,

என்ன கேட்கிறான் என்றே உணராமல்," இல்லையே" என்று வேகமாய் அவள் பதில் உரைக்க. அதிலேயே!வேறு ஏதோ நடந்திருக்கிறது, என்று புரிந்தது அவனுக்கு ,

"குடிக்கலைன்ற ,உன் கை ஏன்? இப்படி நடுங்குது,"அவளை ஆழ்ந்து பார்த்தவாறு அவன் கேட்க,அதற்கும் அவள் "இல்லையே" என்க ,

"சரி தான்" என்று இருபக்கமும் தலை அசைத்தவன்,"போம்மா, சப்பாத்தி கொண்டுவா" என்று அனுப்ப,

இப்போதும் சிவா "இல்லையே!"என்க ,

"அடிங்க,"என்று அடிப்பது போல அவன் எழ,

"ஸ்ஸ்" என்று நாக்கை கடித்தவள் ,"சாரி, கொண்டு வரேன்" என்றுவிட்டு போக ,

அவள் சப்பாத்திக்கு தொட்டுக்க கூட எதையும் வைக்காமல் ,சென்று விட்டிருக்கவும் , சர்வா பக்கத்தில் இருந்த பாத்திரத்தை திறந்து,அதை ஊற்ற போனால், அதுவோ ரசம்."அடியேய்" என்று பல்லை கடித்தவன் "சிவன்யா" என்று வீடே அதிரும் வண்ணம் கத்தவும் ,

'இதற்குமேல் அமைதி காத்தால், இந்த குட்டி சொதப்பியே ஆட்டத்ததை களைத்து விடுவாள்,' என்று தெரிந்து கொண்ட வேணி ,கோதாவில் இறங்கி விட்டார்,

மகனின் அருகே அமர்ந்து ,"சர்வாப்பா,நேத்து ஜாதகம் பார்க்க போனோம் இல்லையா , அதுல நிசாக்கும் உனக்கும்,பொருத்தம் இல்லை,மீறி கல்யாணம் பண்ணா டிவைஸ் ஆகிடும் இல்லை உன்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாங்க,அதுனால..." என்று அவர் இழுக்க

"அதுனால,"என்று மகனும் தாயை கூர்ந்து நோக்க ,"உனக்கும் சிவாக்கும் பொருத்தம் பார்த்தோம் ,நல்லா பொருந்தி இருக்கு,அதான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு, நானும் அப்பாவும் முடிவு பண்ணிருக்கோம்."என்று ஒருவராய் அவர் சொல்லி முடித்துவிட ,

அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை , என்ன சொல்ல போறானோ என்று பயந்து கொண்டிருந்தவர் , அவனின் இந்த அமைதியில்,மீண்டும் "சர்வாப்பா" என்றழைக்க





"எப்படி தாலியாவது இவள் கழுத்துல கட்ட சொல்லுவிங்களா ,இல்லை மணவறைல வேற பொண்ணை உட்கார வைப்பிங்களா,"மிக நிதானமாய் அதே சமயம் படு நக்கலாய் அவன் கேட்க ,

"இல்ல சாமி, அம்மா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்," என்றது தான் தாமதம் , அவன் முன்னே இருந்த தட்டு டங் என்று சத்தத்துடன் ,கீழே உருண்டு கொண்டிருந்தது,

அத்தனை ஆவேசத்தோடு இருக்கையில் இருந்து எழுந்தவன்."என்னை பார்த்தால் எப்படி தெரியுது உங்களுக்கு நேத்து வரைக்கும் நிசா, இன்னைக்கு இவள், நாளைக்கு எவளோ !எல்லாமே நீங்க என்னோட நலனுக்காக சொல்லுவீங்க, நான் கேட்டுக்கணுமா,"

"வாழப்போறது நான் ,என்னை கேட்டா நிசாக்கும் எனக்கும், கல்யாணம்னு பேசுனீங்க, நீங்களா தான பேசுனீங்க,இப்போ நீங்க வேண்டாம்னு சொன்னதும் ,உங்க பேச்சை கேட்டு நான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நிஷா நிலை என்ன,ஊருல நாலு பேர் காரி துப்பமாட்டான் "என்று அவன் கேட்க, பதில் இல்லை வேணியிடம்,அப்படியே மகனை பார்த்திருந்தார்.

"இதுக்கு மேல, கல்யாணம் அது, இதுன்னு என்முன்னாடி வந்து நின்னிங்க, மனுஷனாவே இருக்கமாட்டேன். பாத்துக்கோங்க," என்று கர்ஜிக்க ,

"அது இல்லை கண்ணு ,அம்மா ஏன் சொல்றேன்னா ,இப்போ விட்டா" என ஆரம்பிக்க , "தயவுசெஞ்சு போயிடுங்க மா,"என்றுஅதீத ஆத்திரத்தில்,அவன் கண்ணை மூடிக்கொள்ள ,

பயந்து போன வேணி, விட்டால் போதுமென அறையினுள் சென்று கதவடைத்து கொண்டார் .

முன்பு "சிவன்யா" என்று அவன் கத்திய பொழுதே! சமையலறை வாசலில் வந்து நின்றவள்,அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க ,இப்போது அணைத்து ஆத்திரமும், அவள் மேல் வந்து விட்டது, அவனுக்கு ,சடாரென அவள் புறம் திரும்பியவன். "என்னடி" என்று கத்த

"சாப்பாடு" என்று அவள் கையில் இருந்த குருமா பாத்திரத்தை காட்டவும், வந்ததே அவனுக்கு,

"எப்போ பாத்தாலும் சாப்பாடு ,சாப்பாடு,அதை தவிர உனக்கு ஒன்னும் தெரியாதா , எனக்கு வடிச்சுக்கொட்ட தான் உன்னை பெத்தாங்களா,ஒரு நாளைக்கு சாப்பிடலைனா ஒன்னும் செத்துட்டா மாட்டேன்,போடி " என்றுவிட்டு அவனின் அறைக்குள் நுழைந்தவன் ,

என்ன நினைத்தானோ, அடுத்த நிமிடமே வெளியில் வந்தவன் ,"வை" என்று அமர்ந்து கொண்டான் ,பாவம் சிவா,அமைதியாய் சப்பாத்தி சுட்டு கொண்டு வர,இரண்டை எடுத்து வேறு தட்டில் வைத்தவன் ,அவளையும் அருகே அமர வைத்து,

"அவங்க சொல்றாங்கன்னு எல்லாம், நீ மனசை போட்டு குழப்பிக்காத ,ஒழுங்கா படி, கல்யாணம் பண்ண இன்னும் வயசிருக்கு,அப்போ பண்ணிக்கலாம் "என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல,சொல்லவும். அவள் குழந்தையை போன்று எல்லா புறமும் தலை ஆட்டிய தினுசில் புன்னகைத்தவன்.

தனது இடது கையால் அவளின் தலையை ,சிறு அழுத்தத்துடன் அழுத்தியவன்,உண்ட தட்டை எடுத்து கொண்டு சென்று விட்டான் ,

ஒரு வித மோனநிலையில் அவள் இருக்க ,மேசையில் இருந்த அவனின் அலைபேசி "நிசா" என்னும் பெயரில் ஒளிரவும் ,சிவாவின் முகம் கூம்பி போனது,

அலைபேசியின் ஒலியில் கைகழுவி வந்தவன் ,அழைப்பை ஏற்று ,"சொல்லு நிசா" என்றிருந்தாலும் பார்வை என்னவோ இவளின் மேல தான் ,இவள் ஏறிட்டு பார்த்ததும் "சாப்பிடு" என்று சைகை செய்தவன். அவள் உண்ணும் வரை அங்கேயே அவளை பார்த்தவாறே !அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

"ஒன்னும் பிரச்சனை இல்லை ,நாளைக்கு வரலை,சதாக்க்கு லீவ் இல்லை ,நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத ,நான் பாத்துக்குறேன்." என்று அவன் பேசுவதை காதில் வாங்கியவாறே ,உண்டு எழுந்தவள் ,பாத்திரங்களை ஒதுக்கி வைத்து வாசல் கதவடைக்க செல்ல ,

"நீபோ நான் பாத்துக்குறேன் ,குட் நைட் "என்று சத்தமில்லாமல் இதழசைத்து சர்வா சொல்லவும்.

கனத்த மனதோடு உறங்க சென்றாள் ,சிவன்யா ..............

காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதால் நான் பிறக்கவா!





வருவாள் ......................



சென்ற பதிவிற்கு லைக்ஸ் ,கமெண்ட்ஸ் கொடுத்த அனைவர்க்கும் நன்றிகள் ,பல .............ஹாப்பி ரீடிங்


Very nice
 
Top