Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.15.1

Advertisement

சிவா க்கே தெரியலை,இதில் சர்வாக்கு என்ன கோபம்?????

Interesting update ❤️
 
இப்போ ஒன்னும் மோசம் இல்ல வேணி இன்னொரு பையன் பெத்துகொங்க.... போமா அங்குட்டு....
 
வேணி அக்கா சொன்ன அந்த மண்டோதரி குண்டோதரி செம
 
ஜெய் ஸ்ரீ ராம்


அத்தியாயம் -15





அடுத்த நாள் ஞாயிறு என்பதால் சற்று மந்தமாக விடிந்திருக்க எட்டு மணிக்கு தான் ஒரு ஒருவராய் எழுந்து வந்திருந்தனர்.சமையல் கார அக்கா காலை சமையலை மட்டும் முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.


ஞாயிறு மதியம் அசைவ சமையல் ,எப்போதும் சிவாவினது தான்,நேற்றே சதா மட்டன் பிரியாணி கேட்டிருக்க,அனைவரும் காலை உண்டு முடித்ததும் , பாத்திரங்களை ,ஒதுக்கி போட்டு விட்டு ,அதற்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.மேல் வேலை செய்யும் அக்கா வந்தவர் ,


பாத்திரங்களை தேய்த்து கொண்டே!" யார் பாப்பா, நேத்து வந்தது ,உங்க சொந்தக்காரங்களா" என்க , அவளுக்கு தெரியவில்லை ,வேணியின் அக்கா சென்னையில் வசிப்பவர் தான் ,வருவதாக கூறியிருந்தார் ,


'அவரும் இனி தானே வர போகிறார் ,உள்ளுரில் இருக்கும் யாராயினும் இருக்குமோ' என எண்ணினாலும் . 'இந்த அக்காவிற்கு உள்ளூர் உறவுகள் அனைவரையும் தெரியும்.'என்று யோசிக்கையில் தான் ,நேற்றிரவு சர்வாவிடம் பேசுகையில், "அவங்க போனதும் போனவன், இப்போ தான் வர்ற ,"என்று வேணி சொன்னது நினைவு வர,


"தெரியலையே அக்கா ,நான் காலேஜ் போய்ட்டேன்,"என்று இவள் சொல்லவும். "பாப்பா.ஒரு அம்மாவும் , ஐயாவும் கார்ல வந்தாங்க ,நல்லா பெரிய ஆளுங்க போல அந்த அம்மா கழுத்துல அவ்ளோ நகை ,நெறய பழம் பூ எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க ,என்கிட்ட தான் தாம்பளத்தட்டு வாங்கி அடுக்கி கொடுத்தாங்க,"


"நான் தான் டீ வச்சி கொடுத்தேன் ,கல்யாண பத்திரிகை வச்சிட்டு ,ஜாதகம் ஒண்ண கொடுத்துட்டு போனாங்க ,உங்க அத்தையும் சிரிச்சி சிரிச்சி பேசுனாங்க,அதோ! அவங்க கொடுத்த பத்திரிகை, அங்க இருக்கு பாரு" என்று அவர் ,டீவி முன்னே இருந்த டீபாயை காட்டவும்,


'அடுத்த வீட்டு விஷயத்தை ஏன் இவ்ளோ உன்னிப்பா கவனிக்குறாங்களோ!' என நினைத்தாலும் ,சிவா அவரை ஒன்றும் சொல்லவில்லை ,அந்த அக்கா பாவம்,சின்ன வயதிலேயே கணவரை பறிகொடுத்தவர்.அவரின் பெண்ணுடன் வசித்து வருகிறார்,இவள் சத்தம் போட்டு வேணிக்கு தெரிந்தால் வேலையை விட்டு நிறுத்தி விடுவார்,இவரும் வேணியின் முன்பு அடக்கி தான் வாசிப்பார்,


மீதமுள்ள உணவை எடுத்து கொட்டாமல் கொடுப்பதோடு,அவள் படித்த புத்தங்களையும் , போடாத ஆடைகளையும். அவரின் பெண்ணுக்கு இலவசமாக கொடுப்பதால் அவர் சிவாவின் விசுவாசி.


சிவன்யா சென்று அந்த பத்திரிகையை எடுத்து பார்த்தாள், அதற்கு அடியில் ஒரு ஜாதக பேப்பர்,கவர் செய்யப்பட்டு,குப்புற திருப்பி வைத்திருந்ததால் ,பெயர் தெரியவில்லை,


அதை விடுத்து பத்திரிகையை படித்து பார்த்தாள் ,கனகா அண்ணன் மகளின் திருமண பத்திரிகை ,ஆக வந்து சென்றது .கனகாவின் அண்ணன் குடும்பம்.அவங்களுக்கு பையன் இருக்கான். என்று தெரியும் ,


'அப்போ அந்த பையனை தான் பார்கவிக்கு கேட்டிருக்காங்க ,' என்று புரியவும் சத்தமில்லாமல் அதை வைத்து விட்டு,அவளின் வேலையை பார்க்க சென்று விட்டாள்.


அவர்களை சிவாவிற்கும் தெரியும். வேணி உடல்நிலை சரியில்லாத பொழுது நிறைய தரம் பார்க்க வந்திருந்தனர் . அல்லவா ..........


அந்த அத்தை சிவாவிடம் மிக மிக நன்றாகவே பேசுவார் , அவரை பார்த்ததும் இவளுக்கும் பிடித்தது , கோவையில் வழிவழியாக துணிக்கடை வைத்திருக்கிறார்கள்.


'அண்ணாமலையாரே! அக்காக்கு ஜாதகம் பொருந்த்தணும்,'என்று வேண்டியபடி வேலை பார்த்து கொண்டிருந்தாள்,சிவா அறியவில்லை, அந்த ஜாதகம் வந்தது அக்காவிற்கு இல்லை இவளிற்கு என்று ,


ஆம், கனகாவின் அண்ணிக்கு சிவாவை மிகவும் பிடித்து விட்டது ,வளர்த்த அத்தைக்கு இத்தனை செய்கிறவள்,நாளை அவளின் குடும்பத்திற்கு எவ்வளவு செய்வாள்,அவருக்கு இருப்பதோ ஒற்றை மகன்,நாளைக்கு தனக்கு ஏதேனும் ஆனால் குடும்பத்தை பார்த்து கொள்ள ,இது போன்ற குத்து விளக்கை தான் வெகு காலமாக தேடி கொண்டிருக்க ,அவர் கண்ணில் சிவா பட்டு விட்டாள்.


அழகிற்கு அழகு, குணத்திற்கு குணம், இந்த தங்கத்தை தட்டி தூக்கி விட, அவரின் பெண்ணிற்கு வரன் அமையும் வரை காத்திருந்தவர்,பத்திரிகை கொடுக்கும் சாக்கில் மகனின் ஜாதகத்தையும், தூக்கி கொண்டு வந்து விட்டார்.


சிவாவின் ஜாதகத்தை வாங்குவது தான் அவரின் எண்ணம் , வேணி "இங்கு இல்லை,மாமியார் வாழ்ந்த வீட்டிலிருக்கிறது" என்றதும் ,


"சரி நீங்க பார்த்துட்டு சொல்லுங்க" என்று மகனதை கொடுத்து விட்டு சென்றார்.அப்போது சர்வாவும் வீட்டில் தான், நடப்பதை பார்த்தபடி இருந்தான்.


அவர் வந்து சென்ற பின் வேணியின் கால் தரையில் படவில்லை ,"அடடா எத்தனை அதிஷ்டம், இந்த குட்டிக்கு" என்று ,சங்கரிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்,


இதில் கனகாவிற்கு வேறு அழைத்து பகிர ,அவருக்கு காதில் புகை வராத குறை தான் , அவர் வர்ஷாவை அல்லவா அங்கு கொடுக்க விருப்பம் கொண்டிருந்தார்,அவரால் இங்கு ஆடுவது போல அங்கு ஆட முடியாது , அவரின் அண்ணி இவரை கண்டுகொள்ளவே மாட்டார், அதனால் அவர் கணவரிடம் சென்று புலம்ப ,


கணேசனுக்கு பெரும் மகிழ்ச்சி,' இப்படியே பார்கவிக்கும் நல்ல வாழ்க்கை அமைந்து விட வேண்டும்,' என்று அவசரமாக .... ஒரு ரகசிய பிரார்த்தனையை வைத்து விட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டார்.மனிதர்


சங்கருக்கு தான் யோசனை பார்கவி இருக்கும்பொழுது சிவன்யாவிற்கு எப்படி என்று,"உடனே வா பண்ண போறோம், ஜாதகம் பொருந்தி போனால் ,குட்டிக்கு நிச்சயத்தை முடிச்சிட்டு,அடுத்து அவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் ,
அதான் உங்க தம்பி சொல்றாங்களே!நெறய வரன் வருதுன்னு சீக்கிரம் முடிச்சிடலாம்.குட்டியை இங்க தான் கொடுக்குறோம்" என்று முடித்து விட்டார் ,





ஜாதகம் பொருந்தி வரும் வரை பெண்ணுக்கு தெரிய வேண்டாம் என்று அவர்கள் நினைக்க ,இது ஏதும் அறியாத இவளோ! இங்கு பிரியாணியை கிண்டி கொண்டிருந்தாள்.அணைத்தும் முடிந்த நேரம்.


"என்னடிம்மா, எங்களை எல்லாம் மறந்துட்டியா" என்று கேட்டவாறே வேணியின் அக்கா வந்தார், அவரின் கணவரோடு ,


"அச்சோ! அப்படி எல்லாம் இல்லை அத்தை, எப்படி இருக்கீங்க ," என்று கேட்டு வேணியிடம்,இவர்கள் வந்துவிட்டதாக சொல்லி, அவருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தவள் ,





சமீபத்தில் தான் சுகர் அதிகமாகி ஹாஸ்பிடல் சென்று வந்திருந்ததால் ,அவரின் கணவருக்கு மட்டும் தண்ணீரை நீட்ட ,செல்ல முறைப்போடு வாங்கி கொண்டார் அவர்.


அக்கா தங்கை இருவரும் அரட்டையில் அமர போக ,"சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிட்டு பேசுங்க அத்தை," இவள் குரல் கொடுக்கவும் ,பெரியவர்கள் நால்வரும் உணவிற்கு அமர ,


பிரியாணியை பார்த்ததும், வந்திருந்த மனிதருக்கு முகம் தொங்கி போனது,கண் வேண்டும் என்கிறது, ஆசைக்கு உண்டு மருத்துவமனை செல்லும் எண்ணம் இல்லை.அமர்ந்துவிட்ட கட்டாயத்தில் அவர் இருக்க , மற்றவர்களுக்கு பரிமாறியவள் ,


அவருக்கு ஹாட்கேஸை திறந்து, ராகி களி..... ஓர் பெரிய உருண்டையும் ,நாட்டு கோழி குழம்பை, சற்று அளவாகவும் வைக்க ,மகிழ்ந்து போனார் மனிதர் .


"அடடா விருந்தென்றால், இது அல்லவோ!" என்று "ஆஹா! ஓஹோ!" என்று புகழ்ந்து தள்ளி விட்டார்.


யாரையும் புகழாத அக்காள் கணவர், சிவாவை புகழவும் பெருமை பிடிபடவில்லை வேணிக்கு,முகமெல்லாம் மத்தாப்பு சாரல் தான் ,


உண்டு முடித்து ஆண்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க ,அக்காவும் தங்கையும் படுக்கையறைக்கு சென்று குடும்ப விவகாரம் அடுத்து சர்வா திருமணம் என வெகுநேரம் பேசிக்கொண்டிருக்க ,


வேணி சிவாவை பெண் கேட்டு வந்ததை பற்றி மகிழ்ச்சியாய் பேசவும் ,அக்காள் திட்ட ஆரம்பித்து விட்டார் ,


"அவ்ளோ பணக்காரங்க,பையனும் சொக்க தங்கம், அவங்களே வீடு தேடி வந்து பொண்ணு கேக்குறாங்கன்னா நம்ம பொண்ணு வைரம்னு புரியுதா ....உனக்கு ,உன் வீட்டு மகாலக்ஷ்மிய ,அடுத்த வீட்டுக்கு அனுப்பிட்டா நாளைக்கு உனக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா யார் பாப்பாங்க ,"


"நிசா பாப்பான்னு கனவுல கூட நினைச்சிப்பாத்துடாத , இத்தனை வருசமா இப்படி உட்காந்து இருக்கியே! உனக்கு ஒரு டீ வச்சி குடுத்துருப்பாளா ,"என்று சாடவும்


"அவ ஏன்கா ,எனக்கு வச்சி கொடுக்க போறாள்,அவளுக்கே வேலை காரி தான் வச்சி கொடுப்பா ,"என்று வேணி சொல்லவும்


"ம்ம்ம் இப்போ புரியுதா, எல்லா நேரமும் வேலைக்காரியே செய்வாளா,அப்படியே செஞ்சாலும் ,எல்லாம் சரியாகிடும்னு கடமைக்கு சொல்லிட்டு செய்வா ,வாழ்க்கைக்கு அது மட்டும் பத்தாது,"


"உன்னோட உணர்வுகளை வெளிக்காட்டி, நீ நாலு திட்டு திட்டினால் ,உன் வேலையும் வேண்டாம் ,ஒன்னும் வேண்டாம்னு போயிட்டே இருப்பாள் ,அதே அக்கறை வச்சவங்க எத்தனை சொன்னாலும் ஏத்துக்கிட்டு நிப்பாங்க , வாழ்கை ஒரே மாதிரி,ஏறு முகமாவே போகாதுன்னு,பட்டு அனுபவிச்சுமா உனக்கு புரியலை,"


"எல்லா நேரமும், நீ சிவாவாகிட்ட அன்பாவேவா இருந்துருக்க,கோவம் வந்தால் பேசுவ தானே.என்னைக்காவது அந்த பிள்ளை உன்னை ஏதும் எதிர்த்து சொல்லி இருக்கா,போக்கிடம் இல்லை. அதுனால பல்லை கடிச்சிட்டு இருக்குன்னு நினைக்காத,நீ திட்றதை உன் புருசன் கிட்ட சொன்னால்,அவரு உன்னை சும்மா விடுவாரா.அதுக்கு மட்டும் கோபம்,ஆதங்கம் இருக்காதுன்னு நினைக்குறியா இருக்கும்,"


"ஆனால் நம்ம அத்தைன்னு பொறுத்து போகுது ,வளர்த்த பாசம் ,அமைதியா இருக்கு , நாளைக்கு ஒன்னும் இல்லாத வீட்டுக்கு போனால் கூட,அது பொழச்சிக்கும் மத்தவங்களை அனுசரிச்சு போகும் ,அதால குடும்பம் கெடாது ,"


"உன் அண்ணா பொண்ணு அப்படி கிடையாது ,பணத்துலயே பொறந்து வளந்தவ,இது இப்படி தான்னு அப்படியே அடிச்சி பேசுறவ,அவங்களுக்கு சமமாஇருக்கறவங்களுக்கு மட்டும் தான் மரியாதையே தருவா,சென்னைல பொட்டிக் வைக்க போறாளாம்,உங்கிட்ட சொன்னாளா,"


"சர்வாஅவங்க வீட்டோட வரமாட்டான்னு புரிஞ்சி,சென்னையில் அபார்ட்மெண்ட் வாங்க பாத்துட்டு இருக்காங்க,கல்யாணம் ஆனதும் ,கொஞ்ச வருஷம் அங்க தனியா வைக்க பிளான்,இவளை மாதிரியே இன்னொரு மருமகளும் வந்துட்டா என்ன பண்ணுவ,சென்னைக்கும் பெங்களூருக்கும் மாத்தி மாத்தி போய்ட்டுவருவியா"


"நம்ம காலம் மாதிரி எல்லாம், இப்போ இருக்க பிள்ளைங்க குடும்பத்தை அட்ஜஸ்ட் பண்றது கிடையாது,புருஷன் பொண்டாட்டியையும், பொண்டாட்டி புருஷனையும் அட்ஜஸ்ட் பண்ணி,டைவஸ் வாங்காமல், வந்தாலே! போதும்னு விலகி போகுற அப்பா அம்மா தான் இப்போ அதிகம்,நாங்களே அப்படி தானே தனியாஇருக்கோம்"


"உன்கிட்ட சொல்ல என்ன ,போன மாசம் உன் மாமாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தோம்,வீட்டுக்கு வந்துருக்காளே மண்டோதரி ,யாரையோ மூணாவது மனுஷனை பாக்குற மாதிரி வந்து அஞ்சு நிமிஷம் நின்னு பாத்துட்டு போய்டே இருந்துட்டா,"


"அதுலயும் நான் பெத்துருக்கனே குண்டோதரி ,அவ ஹாஸ்பிடல்க்கு கூட வரலை ஆஃபீஸ்ல லீவ் குடுக்கலைன்னு . டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகு வந்து பாத்துட்டுப்போறாள்."


"சிவா உனக்கு செஞ்ச அத்தனையும்,பெத்த பொண்ணுங்க கூட தாய்க்கு செய்யமாட்டாங்க ,புரிஞ்சி பொழச்சிக்கோ!"என்று கூறவும் .


வேணி குழம்பி விட்டார் ,"இப்போ நான் என்ன பண்றது"அவர் பாவமாய் கேட்க,
"பெரியவனுக்கு நிஷாவை கட்டி வச்சிட்டு, சின்னவனுக்கு சிவாவை கட்டி வை" என்று சுலபமாக அவர் கூறவும்.


"அதுங்க ரெண்டும் அண்ணா ,தங்கச்சியா இல்லை பழகுதுங்க"


"வாயில கூப்பிடறது எல்லாம் உறவு ஆகிடுமா ,சதா கிட்ட விருப்பமான்னு கேட்டு முடிச்சி வை," என்று அவர் முடித்து விட ,இதை கூறினால் மகன் என்ன செய்வானோ! என்ற பயம் இருந்தாலும்,வேணி "சரிக்கா பேசுறேன்"என்று விட்டார்.


நேரம் மாலை ஆனதை கவனித்து,"சரிடி நேரம் ஆகுது கிளம்புறேன்" என்றவர். வெளியில் வந்து கணவரை அழைத்து, சொல்லி செல்ல .....அவளின் அறைக்குள் இருந்த சிவாவையும் அழைக்க,


"இருங்க அத்தை டீ குடிச்சிட்டு போவிங்களாம்" என்றவள். அவசரமாய் கிட்சன் சென்று தேநீர் தயாரித்து , ஏற்கனவே செய்து வைத்திருந்த, எக் மப்பினோடு ஹாலுக்கு வந்தவள்.


அனைவருக்கும் கொடுத்து,அறைக்குள்வேலையாய் இருந்த சர்வாவிற்கும் கொடுத்து வர ,அக்காவின் பார்வை தங்கையை தொட்டு மீண்டது ,


'தான் கூட, டீ குடிச்சிட்டு போ' என்று சொல்ல மறந்திருக்க , சரியாய் சொன்னதும் இல்லாமல் ,இத்தனை சீக்கிரம் தயாரித்ததோடு .பம்பரமாய் சுழன்று அவரவர் இருக்கும் இடம் சென்று குடுப்பவளை தான் வேணி பார்த்திருந்தார்.


'உடல் நிலையை காரணம் கொண்டு, இத்தனை வருடம் ஒரு வேலையும் செய்யாமல் தான் இருக்க ,தண்ணை விட திறமையாய் வீட்டு நிர்வாகம் பார்க்கும் இவளை வேறு வீட்டிற்கு அனுப்பிவிட்டு, நான் என்ன செய்வேன்.' என்று அவருக்கு பயமாகி போனது.


'என்ன ஆனாலும் சரி ,என்னோட மருமகள் சிவாதான்,' என்று முடிவெடுத்த பிறகே அன்றிரவு வேணியால் நிம்மதியாக உறங்க முடிந்தது.


ஆனால் காலையில் எழுந்து கணவரிடம் அனைத்தையும் சொல்லி ,சதா ,சிவா திருமணம் என்று பேச,


"அறிவிருக்கா உனக்கு ,அண்ணன்,தங்கச்சின்னு கூப்பிட்ற , பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாளாம் , இதை அவங்க கிட்ட சொல்லிடாத ,அப்புறம் பாப்பா லெட்டர் எழுதி வச்சிட்டு, எங்கயாவது போய்ட போறாள், சதா உன்னை கொலை பண்ணாலும் பன்னிடுவான்."என்று , மிரட்டியவர்.


"சிவா மேல அவ்ளோ பாசம் இருந்தால் ,சர்வாக்கு பண்ணி வையேன் ,"என்று கடிந்து கொள்ள ,


"அது எப்படிங்க முடியும் ,அண்ணாக்கு வாக்கு குடுத்துருக்கேன் இல்லை" என்று இவர் சொல்லவும்.


கணவர் முறைத்த முறைப்பில், இவர் பஸ்பமாகதது தான் மிச்சம் ,அப்படியே வாயை மூடி கொண்ட வேணி,தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.


மனதிற்குள் 'குட்டியை அடுத்த வீட்டுக்கு அனுப்பிட்டால் ,நம்ம குடும்பம்' என்று வேதனை எழுவதை தடுக்க முடியவில்லை ,' பேசாமல் இன்னும் ஒரு பையனை பெத்துருக்கலாம் ,'என்று கூட நினைத்து கொண்டார்.


to be continued
Super ?
 
Top