Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக. 11

Advertisement

சர்வா எப்போஇருந்து நீ இம்புட்டு பொறுமையா ஆன.... வேணி இனிமே உங்களுக்கு புரிஞ்ச சரி....
 
ஜெய் ஸ்ரீ ராம்

அத்தியாயம் 11

மீண்டும் இது போல வராமல் இருப்பதற்கு,மேலும் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து இன்ஜெக்ஷன் போட்டு,மற்ற அணைத்து பரிசோதனைகளையும் செய்து விட்டு தான் வேணியை அனுப்பி இருந்தனர் .

கணவர் ஊரில் இல்லாததால் ,பெண்ணை தனியாக விட்டு விட்டு வர முடியவில்லை என்ற காரணத்தோடு, அன்று மாலை தான் கனகா மருத்துவமனை வந்திருந்தார்.

வந்தவர் சும்மா வரவில்லை ,பலவகையான பழங்கள் ,ஹார்லிக்ஸ்,நட்ஸ் என்று அவர்களின் ட்ரைவர் தூக்க முடியாமல் தூக்கி வந்த பையை வாங்கி டேபிளில் வைத்து விட்டு ,

"நாட்டு கோழி சூப் உடம்புக்கு நல்லது,அண்ணிக்கு கொடுங்க" என்று சுகுணாவின் கையில் கொடுத்து விட்டு ,தனது கணவரோடு அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் .

சுகுணா சூப்பையும் கனகாவையும் மாறி மாறி பார்த்தவர் ."இன்னைக்கு பிரதோஷம் இல்லையா அசைவம் சாப்பிட மாட்டோம்." என்று அவரின் அருகிலேயே வைத்து விட்டவர்.அவர்கள் கொண்டு வந்த இரவு உணவை கூட தவிர்த்து விட்டு, சிவா கொடுத்து விட்ட சப்பாத்தியையும் ,குருமாவையும் தான் உண்டார்.

சரவணன் விஷயம் கேள்வி பட்டதும் அடித்து பிடித்து தானே கிளம்பி வந்தார் ,அவர் அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல வேண்டுமே ,அதனால் கனகா உள்ளூரில் தானே இருக்கிறார் ,அவர் வந்தால் மனைவியை கூட்டி கொண்டுதான் செல்லலாம்,இரண்டு நாட்கள் கழித்து விடுமுறை எடுத்து கொண்டு வரலாம் .என அவர் இருக்க ,

இங்கு கனகாவோ !அடுத்த வீட்டு மனுஷியை போல அல்லாவா, நடந்து கொண்டார். அதுவும் போகும் பொழுது ,"தனியார் ஹாஸ்பிடல் செலவு ஆகும் ,பணம் ஏதும் இல்லைனா கேக்க சங்கடப்படாதிங்க ,ஹாஸ்பிடல் பீஸ் நிஷா அப்பா கட்டிடுவாங்க அண்ணி "என்று தேன்தடவிய குரலில் வேணியிடம் கூறிவிட்டு போய்விட்டார்.

அதுவரை செலவு வைத்து விட்டோமே, கணவர் என்ன செய்வாரோ! என எண்ணிய வேணி அப்போது தான் நிம்மதி பெரு மூச்சு விட,

சரவணன் "டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் சுகுணா இங்க இருந்து பார்த்துப்பா , என்கிட்ட இது தான் அண்ணா இருக்கு," என்று தன்னிடம் இருந்த ஒரு தொகையை, வேண்டாம் என்று மறுக்க மறுக்க ,அண்ணனின் கையில் திணித்து விட்டு சென்றார் .

சிவா கொடுத்து விட்ட இரவு உணவை கொடுக்க வந்த சர்வாவும். அத்தை நடந்து கொண்டதையும் ,சித்தப்பா நடந்து கொண்டதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான் ,அவன் இப்போது தான் மெல்ல மெல்ல மனிதர்களை படிக்க ஆரம்பித்திருந்தான்.

கனகா கணவரோடு தினமும் ஒரு முறை வருவார் .ஆனால் சுகுணாவிடம் "நீங்களே இருக்கீங்களே ,வீட்டுக்கு போயிட்டுவாங்க, நான் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துகிறேன்," இது போன்று எல்லாம் ஏதும் சொல்லவோ! செய்யவோ! மாட்டார்.

எந்த வேளையில் வருகிறாரோ அந்த வேளைக்கான உணவோடு வருவார் ,சிறிது நேரம் இருந்து பார்த்து விட்டு செல்வார்.அவ்வளவு தான் ,

வேணியை கழிவறை எல்லாம், ஒரு ஆள் கூட்டி கொண்டு தான் போகவேண்டும்,அதிலும் ரத்த ஓட்டம் சீராக மாத்திரை கொடுத்திருக்க ,இன்னும் வேணிக்கு ப்ளீடிங் நிற்கவில்லை அதனால் ,எப்போதும் சிவா ,அல்லது சுகுணா என இருவரில் ஒரு பெண்கள் அவரோடு இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் .

ஆக இவர்கள் இருவரும் தான் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்தனர்.

"என்ன பண்றதுன்னு தெரியலை ,என்னையும் ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டுட்டே இருக்காங்க ,சிவாவும் காலேஜ் போகணும் ,இங்க யாரவது ஒருத்தங்க கூடவே இருந்தாகனும். ஆம்பிளைங்க கிட்ட எப்படி விட்டுட்டு போறது ,சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க,"என்று

இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யும் நாள் அன்று வந்திருந்த கணவனிடம்,அறைக்கு வெளியே சற்று தள்ளி நின்று சுகுணா புலம்பி கொண்டிருக்க

அதை கேட்ட படி வந்த வந்த கனகா ,"வீட்ல ஒரு நர்ஸ் வச்சு பாத்துக்க சொல்லுங்க,இங்கயே ஹோம் நர்ஸ் இருப்பாங்க ," என்றதும்

சுகுணா தர்ம சங்கடமாய் புன்னகைத்தவர்." செலவு அதிகம் ஆகும் இல்லைங்க" என்று அவரின் கணவரிடம் தான் கேட்டார் .

"ஹாஸ்பிடல் பீஸ் தான் கட்ட முடியும்,எல்லாத்தையும் நாங்களேவா பாத்துக்க முடியும்" என்று கனகா வெடுக்கென கூறிவிடவும்,மெடிக்கலில் இருந்து மருந்து பையோடு,இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சர்வாவை கண்டு,'தம்பிக்கு கேட்டிருக்குமோ' என்று சுகுணாவிற்கு தான் பதட்டமாகி போனது ,

சுகுணாவிற்கு தெரியும் ,தனது மூத்தாரை போன்று சர்வாவும் சொல் பொறுக்காதவன் என்று, அதனால் அவனை ஜாடையாய் காட்டியவர், "பேசாதீங்க" என்று கனகாவிற்கு சைகை செய்ய ,

கனகாவும் அவனை கண்டவர். அப்போது தான் வேண்டுமென்று, அவனை சீண்டும் பொருட்டு இன்னும் பேசினார் ,

"இதுக்கு தான் நாங்க அப்போவே கார்மென்ஸை வந்து பாத்துக்கோன்னு சொன்னோம்.எங்க பேச்சை கேட்டிருந்தா இன்னேரம் கையில் பணம் இருந்துருக்கும். இப்போ அய்யோ காசு இல்லையேன்னு புலம்பினால், நாங்க என்ன பண்ண முடியும்,எவ்ளோ பணத்தை தான் நாங்களும் சும்மா தூக்கி கொடுக்க முடியும். இங்க என்ன விளையுதா" என்று வார்த்தையை விட்டு விட்டார்.

சுகுணாவிற்கு தர்மசங்கடமான நிலை ,சரவணனுக்கு கோபமான கோபம் அடுத்த வீட்டுப்பெண்மணியை அவரும் என்ன சொல்ல முடியும் ,அமைதியாக அங்கு வந்த சர்வாவின் தோளில் கைபோட்டு அவனை தனியாக அழைத்து கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார் .

' இது நாள் வரை அவர்களிடம் இருந்து பத்து பைசாகூட வாங்கியிருக்கவில்லை , அதற்குள்ளாக ஏன் இப்படி பேசுறாங்க' என்று சர்வாவிற்கோ அப்படி ஒரு ஆத்திரம்.

அவர் கூறியதை சர்வா மட்டும் கேட்க வில்லை ,நேற்று இரவு மருத்துவமனையில் தங்கி விட்டதால் ,சுகுணா வந்ததும் வீடு செல்ல வெளியில் வந்த சிவா ,அவளை வீட்டில் விட வந்த சதா,என இருவருமே கேட்டுவிட்ட்டனர்.

சதா எப்போதும் கலகலப்பு ஆசாமி ,சர்வா அளவு அழுத்தமானவன் இல்லை தான் , அதற்காக குறை சொல்பவர்களுக்கு பதில் கொடுக்காமல் வருபவன் கிடையாது,

கனகா அப்போதுதான் சிவாவை கவனித்தவர்,"தோ! இது வேற ஒரு தண்ட செலவு , இவ படிக்கலைன்னு யார் அழுதா,போன மகராசி கூட்டிட்டு போயிருக்க கூடாது" என்று தேள் கணக்காய் கொட்டிவிட்டார் ,

' எங்கள் வீட்டு பெண்ணை ,இப்படி பேசும் தைரியத்தை,இவருக்கு யார் கொடுத்தது ,' என்று இப்போது சுகுனாவிற்கே கோபம் வந்து விட்டது ,

இந்த இடத்தில் சங்கர் அல்லது சரவணன் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் கூட , இவர்களின் உறவு அன்றோடு முடிந்திருக்கும்,என்பது முற்றிலும் உண்மை ,

சிவா சிறு பெண் தானே ,அவளை தனியாக விட முடியாமல் , சங்கர் இரவு முழுமைக்கும் இங்கு மருத்துவமனையில் இருந்தவர். சற்று முன்பு தான் வீடு சென்று குளித்து விட்டு ,சுகுணாவை அழைத்து வருகிறேன். என்று கிளம்பியிருக்க ,

அவரின் எதிரில் சதா சித்தியை அழைத்து கொண்டு வருவதை கண்டவர் ," நீ சிவாவை கூட்டிட்டு வந்துடு,டாக்ட்டர் ரவுண்ஸ் வரதுக்குள்ள நான் வந்துடுறேன்" என்று விட்டு சென்றிருந்தார் ,

என்னவோ அன்று சீக்கிரமே ரவுண்ஸ் வந்த மருத்துவர் ,டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி விட்டார் ,

சிவாவை இப்படி சொல்லவும் சதாவிற்கு அப்படி ஒரு கோபம் ,ஆனால் வயதில் பெரியவரை என்ன சொல்லி அடக்குவது என்று அவனுக்கும் தெரியவில்லை ,

ஆனாலும் "அத்தை "என்று அவன் ஆரம்பிப்பதற்குள்

"என்னங்க பேசுறீங்க நீங்க ",என்று சுகுணா கூந்தலை கொண்டையாக்கியபடியே ஒரு அதட்டல் போடவும், சதா அமைதியாகி விட்டான் .மனைவியின் சத்தம் கேட்டு மகனை சமாதானம் செய்து கொண்டிருந்த சரவணன் .

"என்ன ஆச்சு" என்று பதறியபடி இவர்களிடம் வர ,"ரொம்ப பேசுறாங்கங்க"என்ற சுகுணாவிற்கு, கண்கள் கலங்கி போனது ,இந்த பெண்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட மாட்டோமா? என்று நாங்கள் படும் பாட்டை ,இந்த பெண்மணி அறிவாரா ,என்று மேலும் வேதனையாகி போனது ,

இதற்கும் மேல் நடந்ததை கூறினால் விபரீதம் நிகழ்ந்துவிடும் , என்றெண்ணி "வாங்க" என்று கணவரின் கையை பிடித்து இழுத்து கொண்டு, வராண்டாவில் மறுகோடிக்கு அழைத்து சென்றவர் ,

மனம் தாளாமல் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார் , அப்போதும் "மாமாகிட்ட சொல்லிடாதிங்க சர்வாக்கு அவங்க பொண்ணை கட்ட போறதா பேசிக்குறாங்க, நம்மளால ஒரு பொண்ணோட வாழ்க்கை பாழாக வேண்டாம்" என்று விடவும்.சரவணனும் கனத்த மனதோடு அமைதியாகி விட்டார் ,

இங்கு சுகுணா போட்ட அதட்டலில் கடுப்பான கனகா ,வேணியின் அறைக்குள் நுழைந்து,"உன்னோட ஓர்படிக்கு திமிரு ஜாஸ்தி ,மனுஷங்களை மதிக்க தெரியலை , என்னை அதட்டுனா தெரியுமா ,"என்று புகார் வாசிக்க தொடங்கிவிட்டார் ,

வேணி மற்ற நேரமாக இருந்தால் ,சுகுணாவிடம் சண்டைக்கு சென்றிருப்பார் ,ஆனால் இந்த ஐந்து நாட்களாக ,அவரின் வேலை ,பிள்ளை ,கணவர் என அனைத்தையும் விட்டு விட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இவருக்கு அல்லாவா சேவகம் செய்கிறார் ,

கனகாவின் மனம் கோணாமல் "சரிங்க அண்ணி, நான் சொல்லி வைக்கிறேன்" என்று விட்டார் ,சித்தப்பா சென்றதும் தம்பியிடம் வந்த சர்வா "என்ன சொன்னாங்க" என்றிருக்க

சிவாவை வைத்து கொண்டே !சதாவும் சொல்லிவிட்டான் ,சர்வா சிவாவை ஆழ்ந்து பார்த்தான் ,அழுகையை அடக்கி கொண்டு நிற்பது புரிந்தது ,ஐந்து நாட்களாய் அவனும் பார்கிறானே!

இந்த பெண் எத்தனை வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்கிறாள் .என்று அதிலும் அன்று இவள் மட்டும் அழைத்து சொல்லவில்லை, எனில் அன்னையின் நிலை என்ன ஆகியிருக்குமோ !

மருத்துவர் கூறினாரே !சீக்கிரம் சிகிச்சை அளித்ததால் இதோடு போனது, நேரம் கடந்திருந்தால் ,மூளைக்கு செல்லும் ரத்தம் தடை பட்டிருக்கும்,கோமாவிற்கு கூட சென்றிருக்கலாம் என்று ,

இத்தனைக்கும் பிறகு அவர்களிடம் இருந்து பணம் வாங்க சுத்தமாய் விருப்பம் இல்லை,

ஏற்கனவே அட்வான்ஸ் தொகையை சங்கர் தான் கட்டி இருந்தார் ,மீத தொகையை.... தான் காட்டுவதாக கணேசன் கூறிவிட்டதால்.

சங்கரும் பணத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை ,என்று சர்வாவிற்கு தெரியும்,தலையை அழுந்த பிடித்து கொண்டான் , "ஹோ" என்று கத்த வேண்டும் போல இருந்தது ,

'என்ன செய்ய, என்ன செய்ய' என்று அவனின் மூளையும் ,மனமும் ஹைடெசிபலில் அலறிக்கொண்டிருக்க ,அப்போது அவனின் முன்னே ஒரு வளை கரம் நீண்டது

"வயசு பொண்ணு ,கழுத்துல ஒன்னும் இல்லாமல் இருக்க கூடாது." என்று சிவா காலேஜ் சென்ற நேரம் ,வேணி இரண்டு பவுன் தங்க சங்கிலி ஒன்றை , "இது சர்வா பிறந்திருக்கும் பொழுது ,உங்க அப்பா போட்டது" என்ற தகவலோடு அணிவித்து விட்டிருந்தார் .

அதை தான் அவனிடம் கழட்டி நீட்டியிருந்தாள் சிவன்யா ,சர்வா நிமிர்ந்து அவளை ஒற்றை பார்வை பார்த்தான், வாங்கு என்பது போன்று, நீர் விரைந்த விழிகளோடு அவள் தலை அசைக்க,

என்னமோ ,அவனின் கண்களும் இதோ கலங்கி விடுவேன் ,என்று கட்டியம் கூற.ஆழ மூச்சிழுத்து விட்டவன் ."இல்லை இது உன்னோட அப்பா வாங்கினது ஆச்சே,அதை எப்படி "அவன் தயங்க ,

ஒரு வருத்தமான.....விரக்தி புன்னகை புரிந்தவள் ,கண்ணீர் தாடையை தாண்டி பயணிக்க,வாய் திறந்து பேச முடியமால் ,பிடிங்க என்பது தலை அசைத்தாள், சத்தியமாய் சர்வாவால் இவளை எதிர்கொள்ளவே முடியவில்லை .

'லூசு அவங்க எல்லாம் ஒரு ஆளுன்னு, அவங்க சொன்னா நீ அழுவியா, உனக்கு எப்போவும் நாங்க இருப்போம் ,'என்று அவளை அணைத்து ஆறுதல் படுத்த ,'என்னை எப்படி சொல்லிட்டாங்க பாத்தியா' என்று அவளிடம் ஆறுதல் தேட ஒரு உந்துதல்.

ஆனால் முடியவில்லை ,அத்தனை சீக்கிரம் உணர்வுகளை வெளியில் காட்ட வரவில்லை அவனுக்கு ,அப்படியே இமைக்காமல், அவளை பார்த்தவாறு நின்றிருந்தான் ,

ஒரு நொடி கடந்திருந்தாலும் நினைத்ததை நடத்தி இருப்பானோ! என்னவோ! அதற்குள் அவன் நினைத்ததை அவன் தம்பி செய்திருந்தான் ,

"அண்ணா அதான் பாப்பு சொல்றா இல்லை, வாங்கிக்கோ அண்ணா ,நாம சம்பாதிக்கும் பொழுது, பாப்புக்கு இதே மாதிரி பெருசா வாங்கி தரலாம்." என்றவாறு அவளை தன் தோளோடு அணைத்து பிடித்தவன் ,

"அவங்க உனக்கு யாருமே இல்லை ,சரியா.... அவங்க சொன்னா, என்னை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லைனு சொல்லிடு போவியா,அழுகுறா லூசு" என்று கடிந்தபடி அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் ,

"எங்கே சிரி " என்கவும் ,கண்ணீரோடு அவள் புன்னகைக்க, அந்த காட்சி சர்வாவின் நெஞ்சில் பச்சக் என்று ஒட்டி கொண்டது ,

சதா "என் செல்ல பாப்பு" என்று கன்னம் கிள்ளி கொஞ்சி கொண்டவன் ,"இன்னைக்கு மதியத்துக்கு சித்தி சமச்சிட்டாங்க ,ரசம்ன்ற பேருல, நீ குடுக்குற விஷத்துல இருந்து விடுதலை விடுதலை" என்று அவளை வாரியவாறே ,

அண்ணனிடம் தலை அசைத்து விட்டு, அவளை தன்னுடைய அணைப்பில் வைத்தவாறே, வெளியில் நடத்தி சென்றான்.

"அண்ணா" என்ற சிவாவின் சிணுங்கல் , அந்த நேரம் சர்வாவிற்கு ஒரு இனிமையை தர, அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை. அவர்களையே பார்த்திருந்தவன்.

பிறகே தலையை உலுக்கி கொண்டு ,கேஸ் கவுண்டரை நோக்கி சென்று ,எவ்வளவு கட்ட வேண்டும் என்று விசாரித்து ,சங்கிலியை விற்க மனமில்லாமல் ,அடகு வைத்து விட்டு வந்தவன்.

தந்தைக்கு அழைத்து ,"நீங்க வர வேண்டாம் ,சித்தப்பா இருக்காங்க ,நாங்களே அம்மாவை அழைத்து வந்து விடுகிறோம்" என்ற கையோடு

கட்டணம் முழுமையும் கட்டி விட்டு ,மீதம் இருந்த தொகையில் அடுத்த ஒரு மாதத்திற்கு ஹோம் நர்ஸ் பணிக்கும் பணம் கட்டியவன் ,

அடுத்து கால்டேக்ஸி ஒன்றை அழைத்து வந்து வாசலில் நிறுத்தி விட்டு ,வாட் பாய் ஒருவரை வீல்சேரோடு அழைத்துக்கொண்டு ,

"கிளம்பலாம் சித்தி"என்றவாறே தாயின் அறைக்குள் நுழைந்தவன்.முன்பே அலைபேசியில் அவன் சொல்லி இருந்ததால் , சுகுணாவும் தயாராய் இருந்த பைகளை அவர் கணவரிடம் கொடுத்து விட்டு

வேணியை அவர் ஒரு புறம் வந்து பிடித்து கொள்ள ,சர்வா ஒரு பக்கம் பிடித்து மெல்ல எழுப்பி வீல்சேரில் அமர வைக்கவும், வாட் பாய் .வீல்சேரை காரை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார்.

"இன்னும் பணம் கட்டளையே "என்ற கனகாவை அங்கு கண்டு கொள்வோர் யாரும் இல்லை.

தாயை வாடகை காரில் சர்வா அமர வைக்கவும் ,"ஏன் சர்வா ,நம்ம காருல போகலாம்" என்று அவர் தடுக்க ,தடுக்க ,"ஒன்னும் பிரச்சனை இல்லை."என்று இழுத்து பிடித்த பொறுமையோடு கூறிவிட்டு காரில் எறியவன் ,ட்ரவரை நோக்கி கைகாட்டவும்,வண்டி நகர்ந்தது.

இங்கு கனகா தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ,அதிர்ந்து போய் நின்றிருந்தார் ,

பின்னே காலையில் கனேசன் செல்லும் பொழுதே அவரின் கார்டை கொடுத்தவர்,"பணம் எவ்ளோன்னு கேட்டு கட்டிடு,ஹோம் நர்ஸ்க்கும் ரெடி பண்ணிடு டிஸ்சராஜ் ஆனதும் நம்ம காருலயே கூட்டிட்டு போய் ,எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வா" என்றல்லவா கூறியிருந்தார் .

அதுவும் வேணி உடல் நிலை அறிந்து ஊரில் இருந்து வந்தவர் ,"ஏன் விஷயம் தெரிஞ்ச உடனே போகலை , வீட்ல எத்தனை வேலைகாரங்க இருக்காங்க,வர்ஷாவை பாத்துக்க சொல்லி வீட்ல விட்டு போயிருக்கலாம்,இல்லையா ,வர்ஷாவை கூட கூட்டிட்டு போயிருக்கலாம் ,இப்படி தான் விஷயம் தெரிஞ்சும் போகாமல் இருப்பியா ,"

என்று ருத்ர தாண்டவம் அல்லாவா ஆடியிருந்தார் ,'என்னோட புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை இவங்களுக்கு செலவு பண்ணனுமா ,என்பதிலும் .அத்தனை முறை அழைத்தும் கார்மென்ஸ் பாக்க வரமாட்டேன்.என்று சர்வா அவன் பிடியில் நின்றதிலும் உண்டான கடுப்பை ,

சின்ன பையன் தானே என்ன செய்து விட போகிறான். என்று அவர் காட்டிவிட்டிருக்க, சர்வா அவனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு சென்றுவிட்டான்.

கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..

வருவாள் ...............

லைக்ஸ் ,கமன்ட் கொடுத்த அனைவர்க்கும் நன்றிகள் ,அடுத்து முடிந்தால் சனி கிழமை வர பார்க்கிறேன் ,வரட்டா ..................

Super epi..
 
இனி புரிந்து கொள்வாங்க வேணி
யார் என்ன எப்படினு
 
Super ud ?
 
Super.. ❤️❤️❤️
ஒரு கஷ்டம் வரும் போது தான் உண்மையான உறவுகளை அறிய முடியும்..
 
கஷ்ட காலத்தில் தான் உண்மையான உறவுகளை தெரிந்துகொள்ளலாம் :love: :love: :love:
 
Top