Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.-10

Advertisement

அத்தியாயம் -10

சிவா அன்று எப்போதும் போல கல்லுரி கிளம்பி கொண்டிருக்கையில் அவளின் அலைபேசி ஒளிர்ந்தது .அழைப்பது அவளின் அத்தை வேணி தான்,பார்த்தவளுக்கு அப்படி ஒரு புன்னகை ,

அவர் எதற்கு அழைக்கிறார் என்று தான் தெரியுமே ,எடுத்தவள்." சாப்பிட்டேன் அத்தை நாலு இட்லி ,ஒரு டம்ளர் பால்" என்றாள் ,

"படிக்கிற புள்ளைக்கு எப்படி பத்தும், இன்னும் ரெண்டு சாப்பிடறது" என்று அதற்கும் கடிந்து கொண்டார்.

"சரி நாளைக்கு சேர்த்து சாபிட்றேன்" என்று உடனே ஒத்து கொண்டாள்.

உண்மையில் வேணியை பற்றி சிவா அத்தனை புரிந்து வைத்திருந்தாள்,அப்படி ஒன்றும் அவர். ஆஹா ,ஓஹோ என்று புகழும் அளவிற்கு நல்லவர் இல்லை தான்.

நான் ......எனது ...... என்னுடைய பிள்ளைகள் என்ற சுயநல குணம் கொண்டவர் தான் ,

இங்கு வந்த ஆரம்ப நாட்களில் அவள் மேல் பிரியம் இல்லாமல் நடந்து கொண்டவர் தான்,

சரியான நேரத்துக்கு உன்ன அழைக்கமாட்டார் தான், ஆனால் வீட்டில் எத்தனை பதார்த்தங்கள் செய்தாலும் ,வீட்டில் இல்லாத ஒருவருக்காக நாம் தனியாக எடுத்து வைப்போமே! அப்படி தான் அவளுக்காக எடுத்து வைத்திருப்பார் ,

என்ன ஒன்று "உனக்காக எடுத்து வச்சேன், சாப்பிடு" என்று அன்பாக கூறமாட்டார்,அதே நேரம் அவர் எடுத்து வைத்த அளவு சற்று அதிகமாக இருந்து இவளால் உன்ன முடியாமல் திணறி கொண்டிருந்தாள் ,

"இதை கூட சாப்பிடமுடியல, வயசு பொண்ணுன்னு தான் பேரு ,எல்லாத்தையும் காலி பன்னிட்டு தான் எந்திரிக்கணும்" என்று அதட்டுவார் ,அதற்கெல்லாம் ஆரம்பத்தில் சிவா கவலை கொண்டிருக்கிறாள் .

பிறகு தான் தெரிந்தது ,அக்கறையை கூட இப்படி காட்டுகிறார் என்று , அத்தைக்காகதான் கனகா அன்று சாப்பாட்டை குறை என்று திட்டிய பொழுது ,இவள் அமைதியாக இருந்தாள் .

அன்று அத்தையும் அமைதியாக தானே இருந்தார் ,அடுத்த நாள் இருந்து உணவை குறைத்து விடுவார் என்று பார்த்தால் ,அப்படி ஒன்று நடக்கவே இல்லை,காலை உணவு,மதிய உணவு ,மாலை பள்ளி முடிந்து வந்தால் ,

தேனீரோடு ஏதேனும் கொறிக்க கொடுப்பார் , அடுத்து இரவு உணவு ,அவரின் மகன்கள் கூட இரவில் பால் அருந்த மாட்டார்கள் ஆனால் அவர் குடிப்பார்,அவருக்கு கலக்கும் பொழுது இவளுக்கும் ஒன்றை கலந்து கொடுத்து விடுவார் ,







இத்தோடு சேர்த்து இன்னோரு உண்மை ஒன்றும் உள்ளது ,சிவா அவரோடு சகஜமான பின்பு அவளின் அடுத்த தாயாக தான் அவர் அவளை கவனித்து கொண்டார்.

ஏற்கனவே பூசிய உடல் வாகுடைய சிவா ,இவரின் கவனிப்பில் கொழுக் மொழுக் அழகியாய் மாறிவிட்டதை தான் கனகாவால் தாள முடியாமல் போனது.

வெளியில் இருந்து வேணியை பார்க்க அவரின் வல்லென்று எரிந்து விழும் குணம் தான் அனைவருக்கும் தெரியும் ,





அதை தாண்டி அவருக்கு ஒரு அருமையான குணம் இருந்தது ,அவரை நம்பி ஒருவர் இருக்கிறார் எனில், என்றும் அவர்களை அவர் கைவிடமாட்டார்.

"நீங்கதான் எல்லாமே,உங்களுக்கு தெரியாததா" என்று யாராவது கூறிவிட்டாள் , பெருமையோடு அனைத்தும் எடுத்து கட்டி செய்பவர் வேணி ,அங்கு தான் சிவா தெளிவாக இருந்தாள்.

ஆம்,அவளின் அத்தையிடம் முழு சரணாகதி அடைந்திருந்தாள், ஆக அத்தை எது சொன்னாலும் சரிசரி என தலை ஆட்டும் ரகம்,இதற்கு காரணம்,தன்னை பிடித்து என்றாவது ஒரு நாள் அவரின் மகனை தனக்கு திருமணம் செய்து வைத்து விட மாட்டாரா, என்றநப்பாசை எல்லாம் இல்லை.

அவளின் பெற்றோர் இருந்திருந்தால் ,அவர்களின் பேச்சை கேட்டிருக்க மாட்டாளா அது போல தான் இவரின் பேச்சையும் கேட்கிறாள் ,அவர் தனக்கு எந்த கெடுதலும் நினைத்து விட மாட்டார் என்கிற நம்பிக்கையும் உண்டு பெண்ணுக்கு ,

இதோ இப்பொழுது கூட "நாளைக்கு பிரதோஷம் குட்டி அசைவம் சாப்பிட்டுடாத ," என்று அவர் அறிவுறுத்தவும் ,"ம்ம் சரி அத்தை" என்றிருந்தாள்,என்னவோ சிவாவிற்கு அவரின் குரல் சற்று சோர்வாக ஒலிப்பது போன்று தோன்றவும் ,

"என்ன அத்தை உடம்பு சரி இல்லையா ,குரல் ஒரு மாதிரி இருக்கு "என்று கேட்கவும் இங்கு வேணிக்கு கண்கள் கலங்கியது , அம்மாவிற்கு பிறகு தனது உடல்நிலையை பற்றி தானாக கூறாமல் ,கணித்திருக்கிறாள் ,சற்று முன்பு தான் அவரின் அண்ணியிடம் பேசி இருந்தார்.அவர் கூட இது போன்று கேட்கவில்லை



ஏன்? வீட்டிலேயே இருக்கும் அவரின் கணவன் பிள்ளைகள் கூட உடம்பு சரியில்லையா என்று கவனித்து கேட்கவில்லை ,பல மைல் தூரம் இருக்கும் இவளுக்கு என்னுடைய குரல் வித்தியாசம் தெரிகிறதா, ஆச்சர்யம் அவருக்கு ,

இதற்கு தான் வீட்டில் ஒரு பெண் பிறக்க வேண்டும் என்கிறார்கள் போலும் ,காலம் கடந்து தனக்கு ஒரு பெண் பிறக்கவில்லையே! என்ற கவலை தோன்றியது , அவருக்கு,

என்ன தான் அன்பாக இருந்தாலும் சிவா அடுத்த வீட்டுக்கு சென்று விடுவாள் அல்லவா,அப்போதும் ஒரு நம்பிக்கை ,நிசா இருக்கிறாள் இவள் போலவே பார்த்து கொள்வாள் என்று,

"ஆமா குட்டி ,மெனோபாஸ் ஆக போகுது போல , ஓவர் ப்ளீடிங் ஆகுது " என்றார்,

"அச்சோ! ஹாஸ்பிடல் போங்களேன் அத்தை ,"என்று இவள் பதறவும் ,

"இல்லடா மெடிக்கல்ல ஏதாவது மாத்திரை வாங்கி போட்டுக்குறேன் ,சரி ஆகிடும் இது வயசானா எல்லாருக்கும் வர்றது தான் "என்று கூறியவர் .சிறிது நேரம் பேசிவிட்டு வைத்து விட்டார் ,

சிவாவும் அத்தையோடு பேசிய படியே ஹாஸ்டலில் இருந்து நடந்து வந்து அருகே இருந்த காலேஜிற்குள் நுழைந்திருந்தாள்.

மதிய நேரம் உணவு இடைவெளியில் ,உடல் நிலை சரியில்லை என்றதால் எப்படி இருக்கிறார் என்று கேட்போம் ,என்று அவள் அழைக்க வெகு நேரம் கழித்து தான் எடுத்தார் வேணி ,

"சொல்லு குட்டி" என்ற வார்த்தை மிகவும் குளறி தான் வந்தது ,பெண்ணுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றவும்.

"என்ன ஆச்சு அத்தை" என்று பதட்டமாய் இவள் கேட்க,

"என்னமோ தெரில குட்டி ,முடியலன்னு மாத்திரை ஒன்னு போட்டுட்டு, படுத்தேன் ,ஒரு மாதிரி கைகால் எல்லாம் மறுத்த மாதிரி இருக்கு ,தூங்கி எழுந்தா சரி ஆகிடும்னு நினைக்கிறேன்." என்றவரின் குரல் மேலும் குளறலாய் ஒலித்ததும்.

"இல்லை அத்தை ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடுங்களேன்" என்று சிவா கூறிக் கொண்டிருக்கையிலேயே அலைபேசி அணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்க ,



ஏதோ சரியில்லை என்று மனம் உறைக்கவும், மீண்டும் முயன்று பார்த்தாள் ,அழைப்பு சென்று கொண்டே இருந்தே தவிர எடுக்க படவில்லை ,சிவாவிற்கு பதற்றம் தொற்றி கொண்டது,இரண்டு முறை முயன்று பார்த்து விட்டு எடுக்கவில்லை. என்றதும் சர்வாவின் எண்ணுக்கு அழைத்தாள்

சர்வாவிற்கு அன்று காலையோடு வகுப்பு முடிந்திருக்க ,தனது இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தவன் , செவியில் அழைப்பு கேட்டாலும்,அலட்சியம் செய்து பயணித்து கொண்டிருக்க ,

மேலும் அழைப்பு நிற்காமல் வரவும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு ,எரிச்சலோடு எடுத்து பார்த்தான் ,அழைத்திருந்ததோ சிவன்யா ,சென்னை சென்ற மூன்று மாதத்தில் இவள் அழைத்ததே இல்லை ,

இன்று ஏன் இத்தனை முறை அழைக்கிறாள்,என்ற யோசனையோடு ஏற்று அவன் காதில் வைக்கவும் ,

"சர்வா மாமா நான் சிவா ,அத்தை பேசிட்டே இருக்கும் போது,திடீர்னு போனை கட் பண்ணிட்டாங்க ,திரும்ப கூப்பிட்டால் எடுக்கலை,ஒரு மாதிரி பேசினாங்க ,உடம்பு வேற சரியில்லைன்னு சொன்னாங்க, நீங்க போய் பாருங்களேன்,"என்று பதற்றமாய் கூறவும் .அந்த பதற்றம் அவனையும் தொற்றிக்கொண்டது

காலையில் அவன் பார்க்கையில் நன்றாக தானே இருந்தார், என நினைத்தவன் "வீட்டுக்கு தான் போறேன், பாத்துக்குறேன்" என்று விட்டு வேகமாய் வீட்டை நோக்கி பயணிக்க தொடங்கினான் .

இதற்கு மேல் அவன் பார்த்து கொள்வான் என்ற நிம்மதியோடு உண்டு விட்டு வகுப்பிற்கும் சென்று விட்டாள்,மாலை கவிழ்ந்து இரவு நெருங்கியும் எப்போதும் அழைக்கும் அத்தை அன்று அழைக்காமல் விடவும்,'ஹாஸ்பிடல் போயிட்டு வந்து படுத்திருப்பாங்க,காலையில் பேசிக்கொள்ளலாம்' என நினைத்தவள் ,

பின்பு சர்வாவிர்கே அழைத்து கேட்போம் என்று தோன்றவும்,அழைப்பு எடுத்து விட்டாள்,அப்போது தான் காலை பதட்டத்தில் தன்னை அறியாமல் மாமா என்று அழைத்தது நினைவில் வரவும் ,



வைத்து விடுவோமா என்று எண்ணி முடிப்பதற்குள்ளாகவே,அவன் இணைப்பில் வந்து விட்டான் ,ஆனால் அவளிடம் ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை,அவனின் மூச்சு சத்தம் மட்டும் ,அத்தனை வேகமாய் அவளின் செவிமடலை தீண்டியது ,

சிவா இப்போது அத்தையை பற்றி விசாரிக்கும் நிலையிலேயே இல்லை ,என்னவோ அவன் அவளின் அருகிலேயே இருப்பது போன்று உணர்வு உண்டாகிவிட ,பேசி ஆக வேண்டிய கட்டாயத்தில்,

சற்று திணறலோடு "அத்தைக்கு இப்போ எப்படி இருக்கு, " என்றிருந்தாள்.

"ஹ்ம்ம் ,டாக்டர் பாத்துட்டு இருக்காங்க"

ஹோ இப்போது தான் அவர்கள் மருத்துவமனை போயிருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டவள்.

"நீங்களும் ஹாஸ்பிடல்ல இருக்கீங்களா "அவளின் கேள்விக்கு "ஹ்ம்ம்" என்ற பதிலே வரவும் ,"சரி வைக்கிறேன் "இவள் கூறவும் ,

சர்வா "எங்கே இருக்க "

சிவா "ஹாஸ்டல்ல "

"ஹோ " என்றவன் குரலில் ஒரு ஏமாற்றம் தெரிந்ததோ,அதன் பின் ஏதும் கூறாமல் அழைப்பை துண்டித்திருந்தான்.

'ஏன் கேட்டாங்க,' என யோசித்தவள் ,சிறு தோள் குலுக்களோடு,தனது வேலையை பார்க்க ஆரம்பித்திருந்ததாள்.

இரவு பத்து மணி போல அவளின் அக்கா அழைத்திருந்தாள்,"சொல்லுடீகா" இவள் கேட்டதும் "சிவா எங்க இருக்க" என்ற கேள்வியை தான் முதலில் வைத்தாள்,

"ஹாஸ்டல்ல தான் ஏண்டி,"

"ஹேய் நீ அத்தையை பாக்க போகலையா ."

"எதுக்கு"

"என்னடி,எதுக்குன்னு கேக்குற வேணி அத்தைக்கு ஸ்ட்ரோக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க ,அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு நீ தான் அவங்க பையனுக்கே கால் பண்ணி சொல்லிருக்க ,போய் பாக்க வேண்டாமா ." என்று அவள் பொறியவும்

"பாரு அவங்களுக்கு முடியலன்னு தான் தெரியும் ,அட்மிட் பண்ற அளவுக்கு முடியலைன்னு யாருமே சொல்லலை ,"என்று அவசரமாய் கூறியவள் ,

"இப்போ எப்படி இருங்கங்களாம் "என்றிருந்தாள் அழுகையோடு ,

"எமெர்ஜெண்சி வார்ட்ல தான் ,ஒரு கையும் ,காலும் அசைக்கவே முடியலையாம் , என்னை இங்க வீட்ல பாப்பாவையும், தம்பியையும் பார்த்துக்க விட்டுட்டு மாமாவும் , அத்தையும் காலையில தான் அவங்களை பார்க்க கிளம்புறேன்னு சொன்னாங்க .நீ போ சிவா அங்க என்ன நிலைமைன்னு தெரில ,"என்று பார்கவி கூறவும்

சிவாவிற்கு அழுகை நிற்காமல் வந்தது ,அதை விட சர்வா மேல் கோவமாய் வந்தது. எந்த மருத்துவமனை என அக்காவிடம் கேட்டறிந்து ,அழைப்பை துண்டித்த கையோடு தன்னுடைய உடைகளை எடுத்து பைக்குள் வைத்து கொண்டு கிளம்பி விட்டாள்.



சிவா அந்த மருத்துவமனையை அடையும் பொழுது நேரம் காலை ஏழு மணி ,அதுவரை வேணி எமெர்ஜென்சியிலேயே தான் இருந்தார்.பேருந்தில் வர வர புழுங்கி கொண்டே வந்த பெண்ணுக்கு,சர்வா "எங்கே இருக்க" என்று கேட்டது நினைவில் எழ ,

'தெரிஞ்சிக்கிட்டு வரலைன்னு நினைச்சி இருப்பாங்களோ !எனக்கு தெரியாது மாமா,எப்படி வராமல் போவேன் 'என்று மனதோடு பேசியபடி வந்தவளுக்கு



அங்கிருந்த உறவுககளை கண்டு கண் கலங்கி அழுகை முட்டி கொண்டு வந்தது .ஒரு இருக்கையில் அவளின் மாமா எங்கேயோ வெறித்தபடி அமர்ந்திருக்க ,சதா சுவற்றில் சாய்ந்து விழிமூடி இருந்தான் ,



தூரத்தில் சர்வா இவளுக்கு முதுகு காட்டி செவிலியரிடம் உரையாடி கொண்டிருந்தான் ,மாமாவின் அருகே சென்று மாமா என்று அழைக்கவும்.

"சிவாம்மா,வந்துட்டியாடா " என்று அவளின் கையை பிடித்து அழைத்து அருகே இருந்த இருக்கையில் அமர்த்தி கொண்டார் ,

தந்தை குரலை கேட்டு விழி திறந்த சதா ,இவளை கண்டதும் கண்களில் நீரோடு ஓடிவந்து , அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன் ,"பாப்பு அம்மா" என்றபடி அப்படியே அவளின் மடியில் முகம் புதைத்து அழுக ஆரம்பித்து விட்டான் .

அவனின் அழுகையில் சிவாவிற்கு கண்ணை கரித்துக்கொண்டு வந்தது அழுகையோடே "ஒன்னும் இல்லை ,சரி ஆகிடும்னா" என்று அவனின் முதுகை தடவி கொடுத்தவளுக்கு ,அப்போது அவளின் மற்றொரு புறம் இருந்த இருக்கையில், யாரோ அமரும் அரவம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.

அமர்ந்தவன் சர்வேஸ்வரன் தான் , 'போச்சு ஏன் முன்னரே வரவில்லை' என்று குற்றம் சாட்ட போகிறான் ,என்று இவள் அவனை நிமிர்ந்து பார்க்க ,

தந்தையை போல அவளின் கையை பற்றவும் இல்லை, தம்பியை போல கண்ணீர் சிந்தவும் இல்லை,இவள் எண்ணியது போல குற்றம் சாட்டவுமில்லை, ஆனால் அவன் கண்களில் அப்பாடா என்று ஒரு ஆசுவாசம் ,

இவளை ஒற்றை பார்வை பார்த்து விட்டு ,அப்படியே பின்னால் இருந்த சுவற்றில் சாய்ந்து கண் மூடி கொண்டான்,சிவாவிற்கு யாருக்கு என்ன ஆறுதல் சொல்ல ,என்று தெரியவில்லை ,அமைதியாய் அமர்ந்திருந்தாள்,

அவர்களுக்கும் இவளின் அருகாமையே போதுமானதாக இருந்தது போலும்,அப்போது தான் கணவரோடு அங்கு வந்தித்திருந்த சுகுணாவிற்கு ,ஆறுதலுக்காக சிவாவை சுற்றி அவர்கள் அமர்ந்திருந்த காட்சி தான் கண்ணில் பட்டது .

உண்மையில் ஒரு காலத்தில் அவர்கள் எத்தனை பெரிய குடும்பம் ,ஏன் இன்றும் அங்காளி பங்காளி என்று அவர்களுக்கு அத்தனை உறவுகள் இருக்கிறார்கள்.ஆனால் யாரும் இல்லாதவர்களை போல ,சிறு பெண்ணை சுற்றி அமர்ந்திருந்த காட்சி சுகுணாவிற்கு நெஞ்சை பிசைந்தது .

இவர்கள் அருகே சென்றதும்,சதா அவள் மடியில் இருந்து எழுந்து எதிரே இருந்த இருக்கையில் அமர ,சர்வாவும் சித்தப்பாவை பார்த்து தலை அசைத்தவன்,தம்பி அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"எப்படி இருக்காங்க"என்ற சரவணன் கேள்விக்கு

"இன்னும் கண்விழிக்கலை," என்று சங்கர் சொல்லவும் ,அதற்கு மேல என்ன பேச என்று தெரியாமல்,அண்ணன் அருகில் சரவணன் அமர்ந்து கொண்டார்.

வேணியின் அண்ணன் குடும்பத்தை எங்கே என்று ,சுற்றும் முற்றும் பார்த்த சுகுணா,சிவாவிடம் கேட்க "தெரியல அத்தை, நான் இப்போ தான் வந்தேன்"என்கவும்

தான் கொண்டு வந்த உணவு பையை அவளிடம் நீட்டியவர்,"நேத்து இருந்து சாப்ட்ருக்க மாட்டாங்க சாப்பிட சொல்லு "என்று கொடுத்து விட்டார் ,சிவா சென்று அண்ணன்,தம்பியை அழைக்கவும்.

"அம்மா முழிச்சாதான் சாப்பிடுவோம்" என்று இருவரும் மறுக்க,அதற்கு பிறகு அவளும் தொந்தரவு செய்யவில்லை,காலை பத்து மணி போல தான் வேணி கண்விழித்தார்

ரவுண்ஸ் வந்து பார்த்த மருத்துவர்கள் ,ரத்த போக்கு நிற்பதற்காக இவர் எதோ மாத்திரை போட்டிருக்க ,அது ஒட்டு மொத்த ரத்த ஓட்டத்தையும் தடை செய்து விட்டதால் தான் ஸ்ட்ரோக் வந்திருக்கிறது என்றனர்,

வேணியின் இடது கை ,இடது கால் இரண்டையும் அசைக்க முடியவில்லை,வாய் சற்று கோணலாய் இருந்தது,பார்வையும் நேராக இல்லாமல் ,எங்கோ பார்ப்பது போன்று இருந்தது.

சற்று நேரம் அப்சர்வேசனில் வைத்திருந்து .பிறகு அறைக்கு மாற்றினார்கள், தாயைக்கண்ட பிறகே மகன்கள் இருவருக்கும் நிம்மதி ஆனது.வேனி பேசவேண்டும் என நினைக்கிறார்,வார்த்தைகள் குளறி குளறி வரவும், சுயபட்சதாபாத்தில்,அவர் அழுக ஆரம்பிக்க,சிவா தான் "சரிஆகிடும் அத்தை அழாதீங்க" என்றதும்.

"ச.....ரிஆகி....டுமா கு....ட்டி" என்று திணறலாக கேட்டிருந்தார் ,"ம்ம்" என்று இவள் தலை அசைக்கவும் ஒரு விரக்தி புன்னகை அவரிடம் .

மருத்துவர் பரிந்துரைப்படி உணவு கொடுத்து ,மாத்திரைகளை போட்டதும் வேணி தூங்கி விட்டார் ,சுகுணா தான் பார்த்துக் கொள்வதாக கூறி சிவாவோடு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார் .

வேணி இல்லாத வீடு சங்கருக்கு வீடு போலவே இல்லை ,சர்வாவிற்கு தான் வரும் பொழுது படுக்கையின் விளிம்பில் கைகால் அசைக்க முடியாமல் பார்வை எங்கோ நிலை குத்தியிருந்த ,தாயின் தோற்றமே நினைவில் எழ முடியவில்லை அவனால் ,

எப்படியோ அனைவரும் ஒரு வித அழுத்ததில் குளித்து உடை மாற்றி சுகுணா கொண்டு வந்திருந்த உணவை விழுங்கி, கண்ணயர்ந்திருந்தனர்.



சிறிது நேரம் கழித்து கிம்பிய சங்கரிடம் சுகுணா சொன்னது போல வேணிக்கு தேவையான அனைத்தையும் பையில் போட்டு ,வேணிக்கு மருத்துவ மனையில் உணவு கொடுத்துவிடுவதால் ,இவர்களுக்கு மட்டும் யூடூப்பில் பார்த்து சமைத்திருந்த ரசம் சாதத்தையும் ,கேரட் பொரியலையும் அவர்கள் உண்ணும் அளவிற்கு கொடுத்து விட்டாள் சிவன்யா

வருவாள் .................




நானும் ரெகுலரா அப்டேட் குடுக்க நினைக்கிறன் ,நினைக்க மட்டும் தான் முடியுது ,கொடுத்திருக்க டைம்ல கதையை முடிச்சா போதும்னு குலதெய்வத்தை வேண்டிக்கிட்டு தான் டைப் பண்ண உக்காருறேன்















லைக்ஸ் ,கமெண்ட்ஸ் கொடுத்த அனைவர்க்கும் நன்றிகள் ,ஹாப்பி ரீடிங்
Very nice ?
 
Top