Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 24 2

Advertisement

Admin

Admin
Member
மெதுவாக அவளை விட்டவன், அவளுக்கு முத்தத்தின் கிறக்கம் தீரும் முன்னமே பேச ஆரம்பித்தான், “என்னை ஏண்டி இப்படி கொல்ற. எனக்கு இதெல்லாம் பத்தாது. என்னை சித்திரவதை பண்ற, உன்னை யார் இப்போ என்னை இதை கொண்டு வர கேட்க சொன்னா, கொஞ்சம் கூட என்னை நினைக்கவே மாட்டியா? இவ்வளவு தொந்தரவு பண்ணாத என்னை” என்று சொல்லி அவன் சென்று விட..

அப்படியே நின்று விட்டாள்.

“இவனுக்கு பத்தாதுன்னா எனக்கு மட்டும் பத்துமா? இவனை பத்தி மட்டும் தான் நினைப்பானா, இருடா உன்னை என் பின்னே கதற கதற சுத்த விடறேன்” என்று அவ்வளவு கோபமாய் நினைத்தாள்.

அவன் கிளம்பிய பிறகு கேட்டை பூட்டி உள்ளே வந்தவள், விளக்கை அணைத்து அப்படியே வாசலில் அமர்ந்து கொண்டாள்.

அவன் வீடு போய் சேரும் நேரத்தை கணக்கிட்டு, “உங்களை தொந்தரவு பண்ணனும்னு எனக்கு எண்ணமில்லை. உங்களை பார்க்கணும் போல இருந்தது அது தான் பிடிவாதமா வர சொன்னேன். நான் உங்களுக்காக சாப்பிடாம தான் காத்துட்டு இருந்தேன், சாரி இனி பண்ணவே மாட்டேன், இப்போ இருக்குற கோபத்துக்கு நேர்ல பார்த்தேன், உன் உதடை ரத்தம் வர்ற அளவுக்கு கடிக்காம விடமாட்டேன். என் முன்னே நானே கூப்பிட்டாலும் வந்திடாத” என்று வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு, ராஜராஜன் அதை பார்த்த குறியீடு கிடைத்ததும், மொபைலை அணைத்து விட்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

சில நிமிட யோசனைகள் மனதில், “நான் எங்காவது தவறு செய்கிறேனா?” என்று

அவளுக்கு தெரியவில்லை, புரியவில்லை, அவள் வளர்ந்த விதத்தில் இப்போது அவள் நடந்து கொள்வதே மிக அதிகமான கட்டுப் பெட்டி தனம் தான்.

“யார் இவன் ?எதற்காக இத்தனை நாள் நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன், இப்போதும் இவன் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறேன்”

“கணவன் என்றால் அவன் சொல்வதை எல்லாம் கேட்கவேண்டுமா? முடியாது! நான் வேண்டுமென்றால் அவன் வரட்டும் இனி. ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டேன்” என்று முடிவெடுத்தவள், உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

அங்கோ அவளின் மெசேஜை பார்த்தவன், அவளை அழைக்க, “அதுவோ சுவிச் ஆஃப் என்று வர, “ரத்த காட்டேரி” என்று செல்லமாய் திட்டி கொண்டே வந்தான். அவளை மீண்டும் பார்க்க மனம் பேராவல் கொண்டது.

உள்ளே வந்தவன் தில்லை இன்னும் அமர்ந்திருப்பதை பார்த்து,

“மா, மில்லுக்கு அவசரமா போகணும். நீங்க தூங்குங்க. நான் வந்து சாப்பிட்டுக்குவேன். எதுக்கு உட்கார்ந்து இருக்கீங்க. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கறது இல்லை” என்று சொன்னவனிடம்,

“என்னடா சாப்பிடற நீ , இன்னைக்கு அங்கை என்ன நிக்க வெச்சு தான் கேள்வி கேட்டா? என்னால உன்னை பார்த்துக்க முடியாதா? ஏன் உன்னை இப்படி விட்டேன்னு. நான் என்ன சொல்வேன். என்னால அவளுக்கு பதில் சொல்ல முடியலை” என்று சொல்லும் போதே அவரின் கண்கள் கலங்கி விட,

“அம்மா அவளை உனக்கு தெரியாதா? அவ பேசினதுக்கு வருத்தப் படுவியா?” என்றான் சமாதானமாக.

“அவ பேசினதுக்கு வருத்தம் இல்லைடா , அவ சொன்ன மாதிரி உன்னை சரியா கவனிக்கலையோன்னு மனசு தவிக்குது, எப்படி இருப்ப தெரியுமா , இப்போ நீ பார்க்கவே நல்லா இல்லை!” என்றவர் கண்ணீர் உகுத்தார்.

“மா பாரு, இன்னும் ஒரு வாரத்துல எப்படியாகிறேன்னு” என்று சொல்லி அவரை உறங்க அனுப்பி, மனம் கேளாமல் அங்கையை பார்க்க திரும்பவும் அந்த இரவில் வந்தான்.

அவளோ அப்போது தான் விளக்கணைத்து படுத்தாள்.

வீடு நிஷப்தமாய் இருக்க, பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல். அங்கை அலைபேசியை அணைத்துவிட்டிருக்க, அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் ராஜிக்கு அழைக்கவும் முடியவில்லை. மிகுந்த கோபம், ஏமாற்றம். இட்ட முத்தம் இன்னம் உடலில் தகிக்க, தணியாதவனாய் தான் வீடு திரும்பினான்.

வீடு திரும்பியவனுக்கு உண்ண பிடிக்கவில்லை, இப்படியாக அவளும் உண்ணவில்லை அவனும் உண்ணவில்லை.

இன்னும் சிக்கல்கள் முளைத்து விட்டன!

காலையில் உணவு மேஜை மேல் இரவு வைத்திருந்த உணவு அப்படியே இருக்க, தில்லை அதனை பார்த்ததும், அப்படி ஒரு கோபமாய் ராஜராஜனை பேசி விட்டார்.

“என்னடா செய்யற நீ? நான் வந்து சாப்பிட்டுக்குவேன்னு தானே சொன்ன. இப்போ சாப்பிடவேயில்லை. என்ன தாண்டா உன் பிரச்சனை?” என்று கோபத்தில் கத்தி விட்டார்.

அந்த வீட்டில் சத்தமாய் பேசவே அனுமதி இல்லை. இதில் கத்தினால்... அவரின் மகன் அவன் உடம்பை கெடுத்துக் கொள்கிறான் என்ற ஆதங்கம் கத்தலாய் வெளியில் வந்தது .

நாச்சி, வாசுகி வந்து விட, பூஜையறையில் இருந்த சுவாமிநாதன் வந்து நிற்க, அண்ணனின் பூஜையை தில்லையின் பேச்சு கலைத்த காரணத்தால் அதை பார்த்த தமிழ் செல்வன் தில்லையிடம் பாய்ந்தார்.

“என்ன இவ்வளவு சத்தமா பேசற, வீட்ல பொம்பளைங்க எப்படி பேசணும்னு தெரியாதா, உன் மருமக சாரல் உனக்கும் அடிக்குதோ? என்ன அந்த புள்ள கத்தி பேசின மாதிரி நீயும் பேசறியா? நேத்து அங்க போயிட்டு வந்தல்ல, அதுதான் அந்த ஓதம் அடிக்குதோ” என்று சொன்னார்.

அவர் பேச பேச ராஜராஜனின் முகம் அப்படியே மாறியது.

அதனை உணர்ந்த ஸ்வாமிநாதன், “தமிழ் பேசாத” என்று தம்பியை அடக்க முற்பட்டார். ஆனால் அதை புரிந்து கொள்ளாத தமிழ்செல்வன் இன்னும் பேசினார்.

“என்ன அண்ணா பேசாத சொல்றீங்க? அவ இந்த வீட்டை விட்டுப் போயிட்டா , இவ போய் அவளை பார்த்துட்டு வர்றா? யார் கிட்ட சொல்லிட்டு போனா?” என்று அவர் பேச...

ராஜராஜன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு “எவ” என்று கேட்டு நின்ற தோற்றம் சுவாமிநாதனுக்கு மனதினில் ஒரு அபாய மணியை கொடுக்க,

“விடு ராஜா, அப்பா ஏதோ கோபத்துல பேசறான்” என்று சொல்ல,

“என்ன கோபமா வேணா இருக்கட்டும். அதுக்காக என் பொண்டாட்டியை இவர் அவன்னு பேசுவாரா. எங்கம்மா என் பொண்டாட்டியை பார்க்க போனாங்க நான் கொண்டு போய் விட்டேன் யாரை கேட்கணும் அவங்க என்று நிற்க

தமிழ்செல்வன் அப்போதும் தில்லையை முறைத்து நின்றார்.

“இன்னும் ரெண்டும் அண்ணிங்களை அப்படி பேசிடுவாரா? மாட்டார்! ஏன் இவர் தங்கச்சி மகள்ன்ற இளக்காரமா?”

“எனக்கும் அங்கைக்கும் பிரச்சனையே இது தான், அவ இங்க என்னோட மனைவி மட்டும் தான், மருமகளை அவ இவன்னு எல்லாம் பேசுவீங்களா பெரியப்பா நீங்கள்ளாம்”

“இப்படி எல்லாம் பேசறதால, அவ வேண்டாம்னு நீங்க பண்ணலை பெரியப்பா. நான் வேண்டாம்னு தான் நீங்க பண்றீங்க , ஊருக்குள்ள குடும்பத்துக்கு அசிங்கமா போயிடக் கூடாதே, அங்கை வந்து குடும்பத்தை பிரிச்சிட்டான்னு கெட்ட பேர் அவளுக்கு வந்துடக் கூடாதேன்னு பேசாம இருக்கேன்.

இல்லை தெரியாம தான் கேட்கறேன் மத்த ரெண்டு அண்ணிங்க இப்படி போயிருந்தா விட்டுருப்பீங்களா, பஞ்சாயத்துக்கு போயிருக்க மாட்டீங்க?”

“எனக்கு நல்லா ஞாபகமிருக்கு, சின்ன அண்ணி வந்த புதுசுல இப்படி தான் ஏதோ பிரச்சனை. அண்ணி கோச்சிகிட்டு போயிட்டாங்க. உடனே நீங்க பின்னாடியே போயிட்டீங்க, அவங்களை கூட்டிட்டு வர, இதுக்கு அண்ணன் மேல எந்த தப்புமில்லை. ஆனாலும் குடும்பமே போய் நின்னு கூட்டிட்டு வந்தீங்க!”

“ஆனா இப்போ வரைக்கும் அங்கை ஏன் வரலைன்னு கேட்கலை. என்னையும் போய் கூட்டிட்டு வான்னு சொல்லலை! என் பொண்ணு இருக்கா, அதை கூட நீங்க யோசிக்கலை பெரியப்பா” என்று நிறுத்த, சுவாமிநாதன் பேச வகையில்லாது நின்றார்.

“அங்கை கிட்ட அவ ஊருக்கு போனதுல இருந்து நான் பேசலை. ஏன் அவளா என்னை பார்த்த பிறகு வர்றேன்னு சொன்னப்போ கூட நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“மரியாதை இல்லாத இடத்துல அவ இருக்க வேண்டாம் தான் நான் வர விடலை”

“அக்காங்களை அண்ணன்களை எல்லாம் கண்டிப்பா பூஜைக்கு வந்துடணும்னு நீங்க தான் பெரியப்பா சொன்னீங்க. நீங்க போய் அங்கையை கூப்பிடணும்னு கூட நான் சொல்லலை. ஆனா என்னை கூட கூப்பிட சொல்லலையே. வேணும்னா வரட்டும் தானே”

“வருவா பெரியப்பா வருவா கண்டிப்பா வருவா, எந்த வகையிலையும் அவளுக்கு பொறுத்தமே இல்லாத எனக்காக வருவா, என்னோட பொருந்தி போக அவ எவ்வளவோ விட்டுக் கொடுக்கறா, ஆனா நீங்க என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கலையே பெரியப்பா” என்றே விட்டான்.

“என்னடா ராஜா இப்படி எல்லாம் பேசற?” என்று சுவாமிநாதன் பதற

“யோசிச்சு பாருங்க எங்க கல்யாணம் நடந்து ரெண்டு வருஷம் அவ இங்கயே தான் இருந்தா ஆனா நீங்க கூப்பிடலை, ரெண்டு வருஷத்துக்கு பிறகும் அவங்கப்பா தான் கொண்டு வந்து விட்டார். இப்போவும் அப்படி தான் வேணும்னா வரட்டும்னு”

“இன்னும் நீங்க அவளை உங்க தங்கச்சி மகளா தான் பார்க்கறீங்க. அது தான் இத்தனை அலட்சியம். திரும்பவும் சொல்றேன் அவ இங்க என் மனைவி மட்டும் தான்”

“ஆனா ஒன்னு நல்லா தெரிஞ்சிகிட்டேன் பெரியப்பா. என்னோட வாழ்க்கை உங்களுக்கோ அப்பாவுக்கோ முக்கியமில்லைன்னு. ஆனா என்னால அப்படி சொல்ல முடியாது, அதனால தான் எனக்கு நானே தண்டனை குடுத்துக்கறேன்”

“பாருங்களேன் இது எனக்கு மட்டுமில்லை, என் மனைவிக்கும் தண்டனை. என் மகளுக்கும் தண்டனை” என்றவன் நிற்காமல் வெளியேறி விட...

சுவாமிநாதனுக்கு ஐயோ என்றானது.

“எல்லாம் உன்னால தாண்டி” என்று கோபத்தில் தில்லையை தமிழ்செல்வன் யாரும் என்ன ஏதென்று உணரும் முன்பே அடித்து விட்டார்.

“டேய் என்னடா பண்ற?” என்று நாச்சி சத்தமிட, “தமிழ் நீ பண்றது சரியில்லை” என்று சுவாமிநாதன் சத்தமிட,

“எனக்கு அப்பா அம்மா இல்லை, போக இடமில்லைன்னு தானே இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று அழுத படியே தில்லை சமையலறைக்கு சென்று விட,

வீடு வீடு போலவே இல்லை.

சுவாமிநாதன் அப்படியே நின்று விட, நாச்சி “எல்லாம் உன்னால் தான்” என்ற பார்வையை அவரை பார்த்து செலுத்தி ராஜராஜனுக்கு அழைத்து “டேய், உங்கப்பா உங்க அம்மாவை அடிச்சிட்டார்டா” என்று சொல்ல,

அடுத்த சில நிமடங்களில் வந்து விட்டான்.

வந்தவன் தமிழ்செல்வனை பார்த்து மிகவும் கோபமாக “உங்களுக்கு எங்கம்மாவோட குடும்பம் நடத்த இஷ்டமிருந்தா நடத்துங்க, இல்லை நீங்க பாட்டுக்கு இந்த வீட்ல ஒரு பக்கமா இருந்துக்கங்க” என பேச

சுவாமிநாதன் தான் இடையில் புகுந்து “விடு ராஜா, என்னவோ ஏறுக்குமாறா பண்ணிட்டு இருக்கான் அவன்” என்று சொல்ல,

ராஜராஜன் அவரின் புறம் திரும்பக் கூட இல்லை.

“நீங்க ஒரு நாள் கூட எங்கம்மாவை மரியாதையா நடத்தலை, உங்களுக்கு கீழ அவங்கன்ற எண்ணம் தான் உங்களுக்கு”

“எனக்கும் அங்கைக்கும் பிரச்சனை வந்தா அது ஊருக்குள்ள ஒரு விஷயம் கிடையாது. ஏன்னா நாங்க முன்ன இருந்து அப்படி தான்”

“ஆனா அம்மா அப்படி கிடையாது, குடும்ப மானம் போகக் கூடாதுன்னு தான் அவங்களை இங்க இருக்க விடறேன், நானும் இங்க இருக்கேன். அவங்களை கூட்டிட்டு தனியா போக எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா நான் செய்ய மாட்டேன். ஏன்னா ராயரோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்” என்று சொன்னவன்,

“கிழவி, உன் பையனை நீ பார்த்துக்கோ, எங்கம்மாவை இனி எதுக்கும் கூப்பிடக் கூடாது” என்றவன்,

“மா, நீ என்னோட மில்லுக்கு வந்து இரு கொஞ்சம் நேரம்” என்று அவரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

“அம்மா நீ பண்றது சரியில்லை, அவங்க ரெண்டு பேர் பிரச்சனையில நீ எதுக்கு ராஜாவை இழுத்து விட்ட” என்று சுவாமிநாதன் சொல்லவும்,

“என்னடா நான் பண்றது சரியில்லை. அப்படி தான் பண்ணுவேன், என் பேரனும் பேத்தியும் கஷ்டப்படுவாங்க. நீங்கல்லாம் சொகுசா இருப்பீங்களோ” என்று நாச்சி சொல்லி செல்ல,

ஊருகேல்லாம் பஞ்சாயத்து செய்பவரால் தன் வீட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
 
:love::love::love:

கணக்கு மில்லுல இல்லையா??? அங்கை கணக்கு தானா???
செம bulbடா உனக்கு.......
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க :p:p:p
ஜன்னலை தட்டியிருக்கலாம் தானே???

செமடா ராஜராஜா ??? அசத்திட்ட போ......
மரியாதை இல்லாத இடத்தில அவள் இருக்கவேண்டாம் :love::love::love:

அடடா குடும்பமே மாங்காய் மடையன் brothers எதிர்த்து நிற்குதே :p:p:p
அதுவும் தமிழ் ரொம்ப ஓவரா பண்ணுறார்...... இனி அம்மா கையாலேயே சாப்பிடட்டும்...... அப்போ தான் புத்தி வரும்....... ஆனால் இந்த தில்லை இருப்பாங்களா???

ராயரோட மரியாதை முக்கியம் தான்......
ஆனால் இழப்பது உன்னோட வாழ்க்கை......
ஏற்கெனவே 2 வருஷம் போயாச்சு....... இப்போவும் கொஞ்சநாள் ஆயாச்சு......
So இவங்க மரியாதைக்கு எதிர்பார்த்து நின்றால் நீங்க 3 பேரும் தான் பாதிக்கப்படுவார்கள்.....
அங்கையை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க...... உனக்கொன்னுனா ஓடிவர்றா...... ரொம்ப ஏங்க விடாதே..... சீக்கிரமாவே கூட்டிட்டு வாடா.......
 
Last edited:
:love: :love: :love:

அப்ப ஜாதி குதிரை
இப்ப ரத்த காட்டேரி

அடடா அங்கை நீ ஃபோன் switch off பண்ணி ராஜனை இப்படி தவிக்க
விட்டுட்டியே... :unsure::unsure:
எங்களுக்கும் ந‌ல்ல scene miss ஆயிருச்சே.. :p:p

ராஜா நீ பொங்கிட்ட ராசா...
நீ கேட்டது எல்லாம் சும்மா நச் நச் சூப்பர் போ... (y)(y)

தமிழ் செல்வனை பத்தி ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை...
அவராக பார்த்து திருந்தினால் தான் உண்டு

ராஜா உங்க பெரியப்பா, அப்பா எல்லாம் வாழ்ந்து முடித்தவர்கள்
ஆனா நீ உன்னோட பொண்டாட்டி மற்றும் பொண்ணு கூட சந்தோஷமாக
வாழ வேண்டியவன் அதனால நீ சீக்கிரமே நல்ல ஒரு முடிவு எடு

கொல்லாமல் கொன்று
செல்லும் தென்றல் என் காதல்
தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்
கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்
மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே
மெல்ல மெல்ல உன் மௌனம்
என்னை கொல்ல கொல்ல இந்த
காதலினால் காற்றில் பறக்கும்
காகிதம் ஆனேன்
 
Last edited:
Hi,
சூப்பர் எப்பி..
சொந்தத்துல பெண் எடுத்தா பாசம்
இரத்த பந்தம் இருக்கும் பார்த்தா
இவங்க மரியாதை கூட தராங்க இல்ல..
பாவம் RR.
 
Last edited:
Top