மனைவி 10

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 10

“ராமு... என்னப்பா அங்கேயே நின்னுட்ட? வெளில வா,” என்று கலையின் அதிகாரமும் பாசமும் கலந்த குரல் வாசலில் ஒலிக்க, அந்த அழைப்பிற்கு கட்டுப்பட்டவனாய் ஸ்ரீராம் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக வெளியே வந்தான்.

அவன் முகம் எதையும் காட்டிக் கொடுக்கவில்லை.

“சொல்லுங்கம்மா...” என்ற அவனது ஒற்றை வார்த்தையில் ஒருவிதமான நிதானம் கலந்திருந்தது.

அங்கே நின்றிருந்த அசோக், தன் மச்சான் ஸ்ரீராமையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்க்கும் ஸ்ரீராம், மாம்பழ நிறத்தில் மின்னினான். அடர்த்தியான கார்மேகக் கூந்தல், அவன் முகத்திற்கு ஒரு தனி கம்பீரத்தைத் தந்த அந்த எடுப்பான மீசை எனப் பார்க்கவே லட்சணமாக இருந்தான். முன்பை விட கொஞ்சம் ஒல்லியாகத் தெரிந்தாலும், அந்தத் தோற்றம் அவனுக்கு ஒரு ஆளுமையை தந்தது.

ஆனால், ஸ்ரீராம் மிகவும் அமைதியாக இருந்தான். அவன் பேச்சில் பழைய வேகம் இல்லை, ஒருவிதமான அதிர்வு கூட இல்லாமல் ஆழமான அமைதி மட்டுமே மிஞ்சியிருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு, சொந்த வீட்டிற்கு வருகிறோம் என்கிற எந்த ஆர்ப்பாட்டமும், உற்சாகக் கூச்சலும் அவனிடம் மருந்துக்கும் இல்லை.

'இவன் என்ன இவ்வளவு வித்தியாசமானவனாக மாறிவிட்டான்?' என அசோக் மனதிற்குள் வியந்து கொண்டான்.

அதுவும் அவன் வீட்டுக்குள் வந்ததிலிருந்து தன் மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை; அவள் எங்கே இருக்கிறாள் என்று தேடவும் இல்லை. இது அசோக்கிற்கு பெரும் புதிராக இருந்தது.

“அலர், சாப்பாடு எடுத்துட்டு வா,” என்று கலை தன் மகளுக்குப் கட்டளையிட,

சூழலின் இறுக்கத்தை உணர்ந்த அசோக் இடைபுகுந்தான்.

“அத்தை, எல்லாருமே ஒண்ணா சாப்பிடலாம். மச்சான் மட்டும் எதுக்குத் தனியா சாப்பிடணும்?” என்றான்.

“ஆமாம்மா, வாங்க எல்லாருமே ஒண்ணா சாப்பிடலாம்,” என மலரும் தன் கணவனின் கருத்திற்கு உடனே ஒத்து ஊதினாள்.

இவர்களின் பேச்சைக் கேட்ட ஸ்ரீராம் மெல்லத் தலைநிமிர்ந்து, “நீங்க யாருமே இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்டான்.

“இல்ல அண்ணா, உனக்காக அம்மா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. அம்மா கூட நாங்க வெயிட் பண்ணிட்டு இருந்தோம்,” என்று மலர் உருக்கமாகச் சொல்ல, ஸ்ரீராம் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

“சரி வாங்க,” என்றபடி அவன் மேஜையில் சென்று அமர, அவனைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டனர்.

அங்கே ஒரு கணம் மௌனம் நிலவியது. 'யார் பரிமாறுவது?' என்கிற கேள்வி எல்லோருடைய மனதிலும் ஓடியது.

அந்த வீட்டில் ராதை இருந்தவரை, அவள் தான் ஓடி ஓடி அனைத்தையும் பார்த்துக் கொள்வாள். ஆனால் இன்று அவள் அங்கே இல்லை.

கலை, “அலர்... நீ போய் எழுந்து எல்லாருக்கும் பரிமாறு,” என்று கலை சொல்ல, அலர் தன் அதிருப்தியை மறைக்க பல்லைக் கடித்தபடி சமையலறைக்குள் சென்றாள்.

அங்கிருந்த பாத்திரங்களை எடுத்து வந்து மேஜை மீது படபடவென்று அடுக்கினாள்.

கலை தன் கையாலேயே மகனுக்குப் பரிமாறத் தொடங்கினாள்.

“அண்ணா, அம்மா உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாமே காலையிலிருந்து சமைச்சாங்க. எல்லாம் உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் தான்,” என்று மலர் அப்பட்டமாகப் பொய் கூறினாள்.

அங்கிருந்த எவருக்குமே அந்தப் பொய்யை மறுத்துக் கூறும் எண்ணம் இல்லை.
ஆனால் ஸ்ரீராம் எதையுமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அவன் தட்டில் இரண்டே இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டான். தொட்டுக்கொள்ள கொஞ்சம் தக்காளி சட்னியை வைத்துக் கொண்டு மிகவும் நிதானமாக சாப்பிடத் தொடங்கினான்.

“ஸ்ரீராம், என்ன ரெண்டு இட்லி மட்டும் வைக்கிற? அம்மா உனக்கு நிறைய வச்சிருக்கேன் பாரு,” என்று கலை பதறினாள்.

அவனோ அந்தத் தட்டை மெல்லத் தள்ளித் தன் தாயின் பக்கம் வைத்தான். “அம்மா, எனக்கு இவ்வளவுக்கெல்லாம் வேண்டாம். எனக்கு ரெண்டு இட்லி போதும், நீங்க எல்லாரும் சாப்பிடுங்க,” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, தனக்குத் தேவையானதை மட்டும் உண்டு கொண்டிருந்தான்.

அவனது இந்த மாற்றத்தை கலையும் அவன் தங்கைகளும் ஒருவித அச்சத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். உணவு என்றால் ஸ்ரீராமிற்கு அத்தனைப் பிரியம். ஒரு காலத்தில் தட்டு நிறையச் சாப்பிட்டவன், இன்று வெறும் இரண்டு இட்லிகளோடு நிறுத்திக் கொள்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இருந்தாலும், ஸ்ரீராமின் விழிகள் மட்டும் அவ்வப்போது வாசலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாகத் தன் தேடலை அவன் நிகழ்த்திக் கொண்டிருந்தான்.

'ஏன் இந்த பயம்? ஏன் இந்தத் தயக்கம்? அவள் இவன் மனைவி தானே? உரிமையாக அவளைத் தேடலாமே, அவள் எங்கே என்று கேட்கலாமே? அதையெல்லாம் விட்டுவிட்டு எதற்கு இந்தப்பொய்யான நாடகம்?' என அவன் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

இன்னொரு பக்கம் கலை, 'என் பிள்ளை வந்து இவ்வளவு நேரம் ஆகுது, இதுவரைக்கும் அவ எங்கன்னு கூட இவன் தேடல. ஒரே ஒரு வார்த்தை கூடக் கேட்கல. அப்போ இவன் மனசுல அவ கிடையாது. இது ஒண்ணு போதும், ஈஸியா அவளை வெட்டித் தூக்கி வெளியே போடுவதற்கு,' என்று தன் மனதில் வஞ்சக வலை பின்னி வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தார்.

“அண்ணா, நீங்க வந்து இவ்வளவு நேரம் ஆகுது, ஆனா அண்ணி இதுவரைக்கும் வீட்டுக்கே வரல. நாங்க எதுவும் சொல்லக்கூடாதுன்னுதான் இத்தனை வருஷம் எதைப் பத்தியும் பேசல. அண்ணி நடவடிக்கை கொஞ்சம் கூடச் சரியில்லை அண்ணா,” என்று அலர் கரண்டியைத் கையில் உருட்டியபடி விஷத்தைக் கக்கினாள்.

கலை தன் மகளை ஆச்சரியமாகக் கேள்வியுடன் பார்த்தார். கலை யோசித்த விதம் வேறு, ஆனால் மகள் கதையைத் திருப்பிய விதம் இன்னும் காரமாக இருந்தது.

“ஆமாண்ணா, அண்ணி இப்படித்தான் வெளியே எங்கேயாவது போய்க்கிட்டே இருக்காங்க. யார் கூடப் போறாங்க, என்ன பண்றாங்கன்னு எங்களுக்குத் தெரியாது. வீட்டுக்கு லேட்டாதான் வருவாங்க. அதை மீறி அம்மா சத்தமா கேட்டா, கோவிலுக்கு போயிட்டு வந்தேன்னு சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. எங்க யாரையும் யோசிக்கிறதே இல்லை. அம்மாவைச் சுத்தமா மதிக்க மாட்டாங்க. அவங்க நடவடிக்கை எதுவுமே சரியில்லைண்ணா, நீதான் இதென்னன்னு கேட்கணும்,” என்று மலர் தன் அக்காவுடன் சேர்ந்து கொண்டு பின்பாட்டு பாடினாள்.

ஸ்ரீராம் எதற்கும் பதில் சொல்லவில்லை. மௌனமாக அந்த இரண்டு இட்லிகளையும் முடித்தவன், எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

சரியாக அந்த நேரம், ராதை அந்த வீட்டின் இரும்புக் கேட்டினைத் திறந்து கொண்டு மெதுவான நடையுடன் உள்ளே வந்தாள். சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ரீராமின் பார்வை அவள் மீது நிலைத்தது. பழைய காட்டன் புடவையில், உடல் மெலிந்து, முகம் வாடிச் சோர்ந்து போய் உள்ளே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்த போதே ஸ்ரீராமின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலி ஏற்பட்டது.

ஆனாலும், அவன் அவளை நோக்கி ஓடவில்லை. ஆசையாகப் பார்த்துச் சிரிக்கவும் இல்லை. யாரோ ஒரு அந்நியரைப் பார்ப்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசல் படியில் காலை வைத்த ராதை, உள்ளே தன் கணவன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். பல வருடங்களுக்குப் பிறகு அவனை நேரில் பார்க்கும் அவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

முன்பை விட அவன் இன்னும் அழகாகத் தெரிந்தான். நிறம் கூடியிருந்தது, ஆடைகள் உயர்தரமாக இருந்தன, அந்த முகத்தில் ஒரு புதிய கம்பீரம் குடி புகுந்திருந்தது. தன் கண்முன்னே ஒரு முழுமையான ஆண்மகனாக வீற்றிருக்கும் கணவனைக் காண அவளுக்கு இரண்டு கண்கள் போதவில்லை.
ஆனால், அவள் தன்னைத்தான் பார்க்கிறாள் என்று தெரிந்தும் ஸ்ரீராம் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் பார்வையைச் சட்டென்று வேறொரு பக்கம் திருப்பிக் கொண்டான்.

இதைக் கண்ட கலையும் அவர் மகள்களும் தங்கள் வெற்றியை எண்ணி மனதுக்குள் எக்காளமிட்டுச் சிரித்தனர்.

'என்னுடைய புள்ள உன்னைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டான்டி... என் வளர்ப்பு அப்படி,' என்று கலை தன் மனதிற்குள் தலைக்கனத்தை ஏற்றிக் கொண்டாள்.

அவன் தன்னைப் பார்வையால் கூடத் தவிர்ப்பதை ராதையால் தாங்க முடியவில்லை. அந்த நிராகரிப்பு அவள் நெஞ்சில் முள்ளாகத் தைத்தது. அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தாள். ஓடிச் சென்று அவனிடம் பேச வேண்டும் என்று அவளது மனம் ஏங்கியது. ஆனால், அவன் தன்னை மதிக்கமாட்டான் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. என்ன பேசுவது என்று புரியாமல் அவனைக் கடந்து செல்ல முற்பட்ட போது, ஸ்ரீராமின் முகம் கோபத்தில் இறுகிப் போனது.

“எங்க போயிட்டு வர ராதை?” என்று கலை மிகவும் அக்கறையாகக் கேட்பது போல் நடித்தார்.

கணவனின் அலட்சியத்தில் நொந்து போயிருந்த ராதைக்கு, கலையின் போலி நாடகம் புரியவில்லை.

“கோவிலுக்குப் போயிட்டு வரேன் அத்தை,” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவள் பாட்டுக்கு அவர்களைக் கடந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

மலர் சொன்னது போலவே ராதையின் நடத்தை இருப்பதாக ஸ்ரீராமிற்குத் தோன்றியது. அவன் முகம் மேலும் கறுத்தது.

மலர் உடனே அண்ணன் அருகில் ஓடி வந்தாள். “அண்ணா, நீங்களே பார்த்தீங்கதானே? அம்மா கேள்வி கேட்கறாங்க, அவங்க நின்னு கூடப் பதில் பேச மாட்டேங்கிறாங்க,” என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவளைப் போட்டுக் கொடுத்தாள்.

ஸ்ரீராம் தன் தாடையை தடவியபடி யோசனையில் ஆழ்ந்தான், பின் சட்டென்று எழுந்து வெளியே சென்று விட்டான்.

அறைக்குள் சென்ற ராதை சுவரோரம் சாய்ந்து விம்மி அழுதாள். அவளது கன்னங்கள் சிவந்து போயின.

'இப்படி அவரைப் பாத்துட்டு இருந்தா அவர் என்ன நினைப்பாரு? புருஷனா இருந்தாலும் நீ இப்படிப் பார்த்தது தப்பு ராதை. அவருக்குத்தான் உன்னைப் பிடிக்காதே, உன்கிட்ட பேசக்கூட மாட்டாரு. அவரைப் பார்த்ததும் இப்படிப் பயந்துகிட்டு நின்னா உன்னைப் பத்தித் தப்பாத்தானே நினைப்பாரு?' என்று தன்னைத் தானே கடிந்து பின்னர் சமாதானம் செய்து கொண்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டு கணவனைத் தேடி வெளியே வந்தாள்.

அங்கே அவன் இல்லை. கணவனுக்காக ஏங்கி நின்ற அந்தப் பெண்ணின் விழிகள் மீண்டும் கலங்கின. 'நான் உள்ளே வந்ததும் அவர் வெளியே போயிட்டாரா?' என்று நெஞ்சம் பதற, அவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை எடுத்துச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற துளி ஆசை அவனுக்கு இருந்திருந்தால், அவன் இந்நேரம் அறைக்குள் வந்திருப்பான். ஆனால் அவள் உள்ளே வேலை செய்ய, அவன் எட்ட நின்றான்.
 
அடக்கடவுளே இதென்ன இவன் ராதையை கண்டுக்காம போயிட்டான்🙄🙄🙄🙄🙄
 
இவரு 13 வருஷம் பேசவே மாட்டாராம். நேர்ல வந்தாலும் அவங்களை பாக்காம முகத்தை தூக்கி வேற பக்கம் வச்சிப்பாராம். அப்பவும் அவங்களா இவங்கட்ட வந்து பேசணுமாம். இல்லைன்னா கோவம் வருமாம். இது நல்லா இருக்கே!
 
அடேய் ஸ்ரீராம் நீ என்ன ஒரு மனிதன், இத்தன வருஷம் கழிச்சி வந்திருக்க, மனைவிய பார்த்து பேசல, உன்னால அவளுக்கு விடிவு காலம் வராது போல
 
Advertisement

Advertisement

Back
Top