Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மங்கை2 . 1

Advertisement

Elampooranidesigan

New member
Member
பெங்களூர் ஏர்போர்ட் சர்வதேச விமான பயணிகள் வெளிவரும் வெளியில் காத்திருந்தான். பலதரப்பட்ட மக்கள் பரபரப்பான சூழ்நிலை அங்கிருந்த எதுவும் அவனை பாதிக்கவில்லை.அவன் பதட்டமாக இருந்ததால் விமானம் வந்துவிட்ட அறிவிப்பையும் பயணிகள் வெளியேறியது எதையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் முதுகில் பளார் என்று அறை விழுந்தது யார் என்று பார்த்த போது அங்கு விஷ்வா நின்றுகொண்டிருந்தான். விஷ்வா கம்பீரமான ஆறடி ஆணழகன். கிளீன் ஷேவ் செய்யப்பட்ட கன்னமும், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி என அழகாய் இருந்தான். ஆனால் அந்த உதடுகள் சிரிப்பை மறந்து இருந்தன.எப்போதும் இறுக்கமான முகபாவமும் பெண்களை இரண்டடி தள்ளியும் வைத்திருப்பான். அவன் கூர்மையான பார்வை எதிராளியை நிமிடத்தில் எடை போட்டு விடும்.என்னடா நான் வந்தது கூட பாக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கேன். வா மச்சி சீக்கிரம் வா சொல்றேன் வா என்று கூறிக் கொண்டே விஷ்வாவை அவசரமாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். காரில் ஏறிய பின்னும் தேவ் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தான் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தான். உடனே விஷ்வா டேய் வந்ததும் கடுப்பாகாம என்ன விஷயம் சொல்லு சுத்திமுத்தி எதுக்கு பார்த்துகிட்டே இருக்கே. காரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே தேவ் விஷ்வா கிட்ட நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான். ஏன்டா இவ்ளோ விஷயம் நடந்திருக்கு எனக்கு சொல்லவே இல்ல. நாங்க சாதாரணமா அந்த பொண்ணு யாராவது கார்ல இடிச்சுட்டு நிக்காம போய்ட்டாங்கனு நினைச்சோம்.இன்னிக்கு தான் எங்களுக்கு முழு விஷயமும் தெரியும். வரும்போது கூட என்னோட காரை யாரோ தொடர மாதிரி இருந்துச்சு அதனால தான் நீ வந்ததையும் கவனிக்காமல் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். இந்த பொண்ண நாங்க காப்பாத்தினது யாராவது பார்த்து இருக்கலாம்.ஹாஸ்பிடல் எங்களை பத்தின எந்த டீடெயில் இல்ல டெலிட் பண்ணிட்டாங்க . காலையில் போன் பேசியவர் சொன்னார் என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். இப்ப எந்த காரும் நம்மளை பின்தொடர்ந்து வரலையே. ம்ம்ம் அதான் தெரியல. பாக்கலாம். கவி கிட்ட இத சொல்ல வேணாம்.ரொம்ப பயந்து போய் இருக்கா.சரி தேவ் அந்த சூழ்நிலையில் இரவின் அமைதியும் ஏகாந்தமும் பெங்களூரின் குளுமையும் எதுவும் அவர்களை சிந்தையில் பதியவில்லை.
 
Thambi Vishwa pennugalae randu aadi thalli niruthuviyamae yeen unnaku covid19+ suspect yethum irruka.
Nice epi
 
பெங்களூர் ஏர்போர்ட்
சர்வ தேச விமான பயணிகள் வெளிவரும் வெளியில் காத்திருந்தான்.
பலதரப்பட்ட மக்கள்
பரபரப்பான சூழ்நிலை
அங்கிருந்த எதுவும் அவனை பாதிக்கவில்லை.
அவன் பதட்டமாக இருந்ததால் விமானம் வந்து விட்ட அறிவிப்பையும் பயணிகள் வெளியேறியது எதையும் கவனிக்கவில்லை.
அப்போது அவன் முதுகில் பளார் என்று அறை விழுந்தது
யார் என்று பார்த்த போது அங்கு விஷ்வா நின்று கொண்டிருந்தான்.
விஷ்வா கம்பீரமான ஆறடி ஆணழகன்.
கிளீன் ஷேவ் செய்யப்பட்ட கன்னமும், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி என அழகாய் இருந்தான்.
ஆனால் அந்த உதடுகள் சிரிப்பை மறந்து இருந்தன.
எப்போதும் இறுக்கமான முகபாவமும் பெண்களை இரண்டடி தள்ளியும் வைத்திருப்பான்.
அவன் கூர்மையான பார்வை எதிராளியை நிமிடத்தில் எடை போட்டு விடும்.
என்னடா நான் வந்தது கூட பாக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கே
வா மச்சி
சீக்கிரம் வா
சொல்றேன் வா என்று கூறிக் கொண்டே விஷ்வாவை அவசரமாக அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
காரில் ஏறிய பின்னும் தேவ் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தான்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தான்.
உடனே விஷ்வா "டேய் வந்ததும் கடுப்பாக்காம என்ன விஷயம் சொல்லு"
"சுத்தி முத்தி எதுக்கு பார்த்துகிட்டே இருக்கே"
காரை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டே தேவ் விஷ்வா கிட்ட நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான்.
ஏன்டா இவ்ளோ விஷயம் நடந்திருக்கு
எனக்கு சொல்லவே இல்ல.
நாங்க சாதாரணமா அந்த பொண்ணு யாராவது கார்ல இடிச்சுட்டு நிக்காம போய்ட்டாங்கன்னு நினைச்சோம்.
இன்னிக்குத்தான் எங்களுக்கு முழு விஷயமும் தெரியும்.
வரும்போது கூட என்னோட காரை யாரோ தொடர மாதிரி இருந்துச்சு
அதனாலதான் நீ வந்ததையும் கவனிக்காமல் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன்.
இந்த பொண்ண நாங்க காப்பாத்தினது யாராவது பார்த்து இருக்கலாம்.
ஹாஸ்பிடலில் எங்களை பத்தின எந்த டீடெயில்ஸும் இல்ல
டெலிட் பண்ணிட்டாங்க
காலையில் போன் பேசியவர் சொன்னார் என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.
இப்ப எந்த காரும் நம்மளை பின்தொடர்ந்து வரலையே.
ம்ம்ம் அதான் தெரியல.
பாக்கலாம்.
கவி கிட்ட இத சொல்ல வேணாம்
ரொம்ப பயந்து போய் இருக்கா.
சரி தேவ்
அந்த சூழ்நிலையில் இரவின் அமைதியும் ஏகாந்தமும் பெங்களூரின் குளுமையும் எதுவும் அவர்களின் சிந்தையில் பதியவில்லை.
 
Last edited:
Top