Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 9

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காற்று விசுவிசுவென வீசிட அந்த குளுகுளு காற்றாலும் கூட பெண்ணை பெற்றவர்களின் மனபுழுக்கத்தை போக்க முடியாது போக காற்றும் கவலையை சுமந்து சென்றது.


அம்மன் சிற்ப மேடையில் வீற்றிருக்க. அவளுக்கு மேல் கூரை ஏதும் இல்லாது வெட்டவெளியில் வன்னிமர நிழலில் தான் அமர்ந்திருந்தாள்.

அவளின் பெயர் பொறித்த பலகை ஒன்று சாயம் போனதாக நின்றது.அதில் அவளின் நாமம் 'கருமாரி' என பொறிக்கப்பட்டிருக்க

அதைக்கண்ட கன்னிகா

"அம்மா தாயே கருமாரி! உனக்கு என் மேல இரக்கமே இல்லையா சொல்லுமா? நான் என்ன பாவம் பண்ணினேன் என் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசபட்டது குத்தமா அம்மா!?

பாரும்மா அவளுக்கு கல்யாணமே ஆகாதுன்னு சொல்றாங்களே இப்போவே சொந்தம்பந்தம்,அக்கம்பக்கம் எல்லாம் என் பிள்ளையை ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுறாங்களே!

அவங்க பேசுற பேச்சுக்கும் கேட்கிற கேள்விக்கும் என்னால பதில் சொல்லமுடியலை தாயே!

இந்த மனுசனும் இப்படி நிலை குளஞ்சு போய் உட்கார்ந்துட்டாரே நான் என்னத்த பண்ணட்டும்மா!?"

புலம்பலோடு அழுகையும் வெடிக்க ஆளில்லா கோவில் மனகிலேசத்தை வார்த்தையாக கொட்டித் தீர்க்க ஏதுவாக அமைய

முந்தானையை உருவி வெடுக்கென உதறி மூக்கை சிந்தியவர் தன் புலம்பலை மட்டும் நிறுத்தினார் இல்லை.

"சரிவிடு கனி பிள்ளைங்க முன்ன எதையும் காட்டிக்காத. நம்ம நாளைக்கு காலைல விடியலுக்கு முன்ன என் பிரென்ட் சொன்ன வேற ஒரு இடத்தில் போய் ஜாதகம் பார்க்கலாம் சரியா!?"

அவ்வளவு நேரம் மனைவி மனம் அமைதி பெறட்டும் என புலம்பலையும் பொறுமையாக கேட்டிருந்த ராகவன் ஜாதகம் பார்க்க கஜினி முகமதாய் மாறினார்.

எல்லாம்,"மகளின் வாழ்வு கண்டிப்பாக சிறக்கும் என யாராவது ஒருவர் கூறிவிட மாட்டனரா?" என்ற நப்பாசை தான் காரணம்.

கவலையை சுமந்து அம்மனிடம் முறையிட்டிருந்த நேரம் அவர்களின் காதுகளில் வந்து விழுந்தது ஓர் சிரிப்பு சத்தம்.


"அஹாஹா.....ஹாஹாஹா.... ஹாஹாஹா.."

அசைந்தாடும் மரக்கிளைகள் எழுப்பிய ஓசையோடு; தாங்கள் பேசிய வார்த்தைகள் மட்டுமே கேட்டிருந்த இடத்தில் திடீரென்று நிறைந்த சிரிப்பொலியை கேட்டு
தம்பதியர் அரண்டே போயினர்.

மேலும் அவ்வொலி திகிலைக் கிளப்ப.

சுற்றிலும் யாரும் இல்லாது கேட்கும் ஓசை அமானுஷ்யமான சூழலை உருவாக்க.

காற்றில் கூட ஏதோ ஒரு மங்கள மணம் கலந்து வந்த பிரேமை இருவருக்கும்.

"யாருங்க அது சிரிக்கிறது !?"

பயத்தில் வியர்க்க விறுவிறுக்க கணவனிடம் கன்னிகா கேட்க.

அவரோ," தெரியலை கனி இருந்தாலும்; சத்தம் மரத்தோட அந்தப்பக்கம் இருந்து வர்ற மாதிரி இருக்கு!"

தனக்குள்ளும் சூழல் பயத்தை விதைத்தாலும்; அதை வெளியே காண்பிக்காது சத்தம் வந்த மரத்தின் பின்புறம் நோக்கி சென்றார் மனிதர்.

ராகவன் முன்னால் செல்ல, அவரை தொடர்ந்து தானும் பின்னால் சென்றார் கன்னிகா.

மெதுமெதுவாக எச்சரிக்கை உணர்வோடு மனைவியை பின்னிறுத்தி முன்னோக்கி நகர்ந்தவர் கண்கள் ஆராய்ச்சியாக சுழன்றது.

புடவை முந்தானையில் வியர்வையை துடைத்து கொண்டு அடிக்கொருமுறை எச்சிலை விழுங்கிக் கொண்டே பயத்தோடு நடந்தார் பெண்மணி.

'அசரிரீ' போல் கேட்ட சிரிப்பொலி கேட்டு இருவரும் ஓசை வந்த திசையில் முன்னேற.

அழுக்கில் மூழ்கிய துணி மூட்டையும் முகம் தெரியாத அளவிற்கு காடாய் மண்டிக் கிடந்த தாடியும்.

பராமரிப்பின்றி பெரிதாக வளர்ந்து நின்ற நகங்களும்.சதையே இல்லாது ஓட்டிய எலும்பும், தோலுமான ஓர் இளைஞனை கண்டனர் இருவரும்.

கண்டிப்பாக ஆண்டுகள் பல கேட்பாறற்று கிடக்கும் நிலம் போல இருந்த அவன் தோற்றம் இருவரையும் சிந்தனைக்குள் மூழ்கடிக்க.

இளையவர்கள் மெடிக்யூர், பெடிக்கியூர் ஹேர் கட், ஹேர் சீரம் தெரபி, ஃபேஷன், டிரெண்டி என்று கிழிந்த ஆடைகளை 'நாகரிகம்' என அணிந்து கொண்டு சுற்றும் காலத்தில்.

தங்கள் முன் அமர்ந்திருந்த இளைஞனை கண்டு கண்கள் விரிவதை அவர்களாலேயே தடுக்கமுடியவில்லை.

இன்னும் விடாது பைத்தியம் போல சிரித்திருந்த இளைஞனை கண்ட ராகவன் தான் முதலில் அந்த இளைஞனை நோக்கி பேச்சைத் தொடங்கினார்.

"தம்பி யாருப்பா நீ எதுக்கு இப்போ தனியா உட்கார்ந்து விடாம சிரிச்சுட்டு இருக்க!?"

மனதில் தோன்றியதை கேட்க

வாலிபனோ சிரிப்பை நிறுத்தாது,இன்னும் இன்னும் அதிகமாக சிரித்த இளைஞன் பேசத் தொடங்கினான்.

"நான் யார் என்பது இருக்கட்டும் மூளை இல்லா முட்டாளாய் மாறிய மூடனே! உன் மகளின் தலையெழுத்து இன்னும் சில தினங்களில் மாறிவிடும்!

நீ தேடும் மாப்பிள்ளை நீ தேடாமல் உன்னை தேடி வருவான். அவன் குறை காணாது நிறை கண்டு உன் மகளை அவனிடம் கொடு!"

பார்ப்பதற்கு வயதில் சிறியவனாக இருந்தவன் தன்னை கண்டு மூளை இல்லாதவன்,முட்டாள், மூடன் என ஏசியதை கேட்ட ராகவனுக்கு முதலில் கோபம் பொத்துக் கொண்டு வர.

பதிலுக்கு எகிற சென்றவர்,அந்த இளைஞனை மனைவி கைதொழுது நிற்பதை கண்டு அமைதியுற்றார்.

அப்பொழுது தான் இளைஞனின் கண்களில் மிளிரும் 'தேஜசை' கண்டார் மனிதர்.

முதலில் பைத்தியமாய் தெரிந்த இளைஞனை,லட்சோப லட்ச மணி தீபங்களை சுமந்திருந்த கண்களை கொண்டு அவன் அடுத்து கூறிய வார்த்தைகளில் ராகவன் மனதில் பைத்தியத்தை சித்தனாய் மாற்றியது.

"செல் இனி இந்த வெற்றி காகிதங்களை ஏந்திக்கொண்டு எங்கும் யாசகம் செல்லாதே!"

கன்னிகாவின் கரமதில் மஞ்சள் பையில் சுற்றி இருந்த ஜாதகத்தை குறிப்பால் உணர்த்த.

தன்னிடம் பதில் பேசவந்த தம்பதியர் முன்பு தன் கைகளை நீட்டி பட்டென்று பேச்சை நிறுத்துமாறு கைகாண்பித்து அழுக்கு மூட்டையை தோளில் சுமந்து கொண்டு நடையைக் கட்டினார்.

நீண்ட காலமாய் பீடித்த பீடை விலகிய உணர்வு.

இவ்வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசத் தோன்றாது அந்நேரத்தின் ஆச்சர்யத்தை மௌனத்தால் மரியாதை செய்து, அங்கீகரித்து வீடு திரும்பினர்.

பிள்ளைகளிடம் கூட இருவரும் இதை பற்றி கூற முனையவில்லை.

†***********†**********†**********†


"மேன்லி மேன்.."

"சொல்லுடி விணுமா!"

"புஜ்ஜு பாய்..."

"இம்... சொல்லு விணு குட்டி.."

"ஏய் ஹெண்ட்சம்..."

பலவாறு கணவனை கொஞ்சி இருந்தாள் வீணா.

"என்னடி கேட்டாலும் கிடைக்காதது இன்னைக்கு கேட்காம மழையா பொழியுது!"

"என்னது...!?"

"எல்லாம் உன் அன்பு மழைதான் செல்லம் சொன்னேன்!"

உரைத்தவன் மனதிலோ

'ஆத்தி இன்னைக்கு எந்த தேரை இழுத்து தெருவுல விட காத்திருகான்னு தெரியலையே!?' என்றவாறு முழித்திருந்தான் ரக்ஷன்.

'பொறுமையாக இருப்போம்!'

என்னதான் சொல்லப்போகிறாள் என்பதை கேட்க காத்திருந்தான்.

"அது வந்து..."

"இம்... சொல்லுடி.."

"என் பிரெண்ட் இருக்கா இல்ல"

"யாருடி அந்த முட்ட கண்ணியா!?"

"ஏய் அவளை அப்படி சொல்லாதடா!"

"ஆமாம் எப்போ என்னை பார்த்தாலும் கண்ணை முழிச்சு முழிச்சு பார்த்தே பயம் காட்டறா.அப்போ அவளை நான் என்ன சொல்லட்டும்!?"

"சரி இப்போ அது விசயம் இல்ல!"

'ஆகா பூனைக்குட்டி வெளிய வரப்போகுதுடா ரக்ஷா சிக்கிறாதடா சின்னக்குட்டி!'

தனக்கு தானே தைரியம் வழங்கியவாரு

"சொல்லுடி விணு"

"அவளோட பையனுக்கு பர்த்டே வருது"

"சரி"

"என்னடா வெறும் சரின்னு மட்டும் சொல்ற!?"

"ஹாஹா...ஹோஹோ... ஹேஹே.. ஜாலி சரி இப்போ விசயம் என்ன சொல்லு!?"

கிண்டலாக கேட்க

"டேய்! என்ன நக்கலா?"

"இப்ப நீ சொல்லுவியா மாட்டியாடி!?"

"அந்த பையன் பர்த்டேக்கு கிஃப்ட் வாங்கணும்.அப்பறம் எனக்கும் கூட கொஞ்சம் பர்சேசிங் பண்ணணும்!"

மனைவி கேட்ட உடன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கார்டை கடைசியாக ஒருமுறை தடவிக் கொண்டான்.

கொடுக்கவில்லை என்றால் அன்னை இல்லம் சென்றுவிடுவாள்;ஒரு வேளை கொடுத்தும் பணம் போதவில்லை என்றாலும் அன்னையின் வீட்டிற்கு பெட்டியை கட்டிவிடுவாள்.

அவன் வாழ்வில் அவன் செய்த தவறும் அவள் தான்; அவன் செய்த சரியும் அவள் தான்.

அருகில் இருந்து 'இம்சை' எனும் பட்டம் பெறுபவள்,அன்னை இல்லம் செல்லும் நாட்களில் 'ராட்சஸி' பட்டம் பெறுவாள் உற்றவனிடம்.

'இப்பொழுது என்ன செய்வது?' என நினைத்திருக்க

இதெல்லாம் என்ன பிரமாதம் அவள் அடுத்து எறிந்த குண்டு தான் அணுகுண்டு.

"ஆனா ரக்ஷா..எனக்கு அதெல்லாம் விசயம் இல்ல.போன முறை நான் பார்த்து வச்சுட்டு வந்தேன் இல்ல அந்த சாரியும், ஜூவல்ஸும் வந்துடுச்சாம் ரக்ஷா!" என்றாள் பணிவாக.

'ஆகா சோலியவே முடிக்க பிளான் பண்ணி இருப்பா போலயேடா சோன முத்தா!!' அதிர்ந்தவன்

"அதெல்லாம் இப்போதைக்கு வாங்க முடியுமா தெரியலையே விணு!?"

"நீ தானே போன டைம் கேட்டப்போ இந்த மன்த் கண்டிப்பா வாங்கி தருவேன் சொன்ன இல்ல!?"

"சொன்னேன் தான் ஆனா வீட்டு லோன் இருக்கேடி!?"

"இப்படி ஒவ்வொரு டைம் கேட்கும் போதும் சாக்கு சொல்லு எங்க அம்மாகிட்ட கேட்டா எங்க அப்பாகிட்ட போய் கேட்கணும்.ஆனா எங்க அப்பா அவ்வளவு வச்சிருந்தாலும் உன் வீட்டுக்காரர் சம்பாதிக்கறதை வச்சுட்டு வாழுன்னு சொல்லிட்டாரு!"

"நீ ஏன் உங்க அம்மாகிட்ட போய் கேட்ட!?"

"ஹோ உனக்கு நான் கேட்டது வாங்கித்தர முடியாதது பெருசா தெரியலை.ஆனா எங்க அம்மாகிட்ட கேட்டது தான் பெருசு இல்ல!?"

"அப்படி இல்லடி! நமக்கு இடையில இருக்கதை எதுக்கு பெரியவங்ககிட்ட போய் சொல்லிட்டு இருக்க அதுக்காக கேட்டேன்"

"அப்போ நான் வேற யார்கிட்டேயும் சொல்லாம, கேட்காம பைத்தியமா அலையணுமா!?"

"ஹேய் பைத்தியம் மாதிரி சம்மந்தமே இல்லாம என்னடி பேச்சு இது!?"


"ஆமாம் நான் பைத்தியம் தான் அதுக்கு இப்போ என்ன!?"

இருவரும் ஒருவரோடு ஒருவர் வார்த்தையாட;வார்த்தையாடல் சண்டையாய் மாறி கடைசியாக பெட்டியை தூக்கிக் கொண்டாள் மகராசி.

"நீ சென்றால் எனக்கென்ன குறைந்தது!?" என்று இவனும் வேலைக்கு கிளம்பி சென்றிருந்தான் அவன்.

**********************************

"கண்ண வீசி கண்ண வீசி
கட்டிப்போடும் காதலி
கன்னம் ரெண்டும்
முத்தம் கேட்குதே...."

பாடல் இசைக்க.

தன் கைபேசியை எடுத்தான் சாத்விக்.

"சார்..."

அவன் செல்ல சிட்டு குயிலாய் கூவியது காதில்.

உண்மையாக 'அவள் தானா!?' அல்லது உறக்க கலக்கத்தில் தான்தான் அவ்வாறு 'கற்பனையில் மிதக்கிறோமா!?'என கைபேசியை பார்த்தவன்

அழைத்திருப்பது தன்னவள் தான் என்பதை உணர்ந்து.

ஆர்வத்தை அடக்க முடியாது பரபரப்பாக

"என்ன பேபி கால் பண்ணி இருக்க!?" என்க.

"சார் உங்களை தேடி உங்க பிரெண்ட் ஒருத்தர் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு!"

"நான் உங்க லேண்ட் லைன் நம்பருக்கு கால் பண்ணினேன் அது நாட் ரீச்சபில் அதுதான் உங்க பெர்சனல் நம்பருக்கு கால் பண்ணினேன்!"

சூழல் இது என்று விளக்கியவள்

"அவன் என் பிரெண்ட் தான் என் ரூமுக்கு அனுப்புங்க!" என்று கூறிட.


இதுதான் செய்தி கூறிவிட்டேன்; வைத்துவிட்டேன் என்று பட்டென்று வைத்துவிட்டாள்.

"பாவி இவளுக்கு இரக்கமே கிடையாது என்மேல!"

நொந்து கொண்டவன் தான் செய்த திருகு வேலையை மறந்து போனான்.

ரிசப்ஷன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு வேண்டும் என்றே தன் லேண்ட் லைனை கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தவன்

கண்டிப்பாக,"கபில் வந்தான் என்றால்; தன்னை அழைக்க தன்னவள் தனக்குத் தானே அழைக்க வேண்டும்!" என்று காத்திருந்தவன் தன்னையும் அறியாது சோஃபாவில் உறங்கிவிட.

இப்பொழுது அவளாக அழைக்கவும் இவன் செய்த திருட்டு வேலையை தெளிவாய் மறைத்துவிட்டு நாடகம் ஆடினால்

"நாம் ஏமாறுவோமா என்ன!?"

"வா கபில் என்ன ஆச்சு!?"

"ஐ. எம். ஏ புதுசா ஒரு நியூஸ் விட்டிருக்காங்க பார்த்தியா இந்த வருசம் நம்ம அதுல ஃபர்ஸ்ட் வரணும் சாத்வி!"

"நானும் பார்த்தேன் கபில் அதனால தான் உன்னை இங்க வரசொன்னேன் என்கிட்ட நிறைய ஐடியா இருக்கு அதை இம்பிளிமென்ட் பண்ணலாம்!" என்றவன் தன் யோசனைகளை கூற

பொறுமையாக கேட்டிருந்த கபில் "எல்லாமே ஓகே பட் அங்கிள் அதுக்கு ஒத்துக்கணும் இல்ல!?"

"அதுதான் டா எனக்கு சேலென்ஜிங்கா இருக்கு!"

"நீ அங்கிள் கிட்ட பெர்மிஷன் வாங்கு நான் மத்ததை பார்த்துக்கறேன் ஓகே!"

"ரைட்டு மச்சான் "

"சரி சாத்விக் அப்போ நான் கிளம்பறேன் சரிதானே!"

"வா மச்சான் உன்னை அப்படியே வாசல் வரை கூப்பிட்டு போறேன்"

"எதுக்கு ரிசப்ஷன் வரைக்கும் கூப்பிட்டு போய்ட்டு அங்க இருந்து என்னை கழட்டி விடவா இருக்கட்டும் நானே போய்ப்பேன்!" கபில் கிளம்ப

"அப்படி எல்லாம் சொல்லப்படாதுடி செல்லம்.நான் தான் உன்னை கூப்பிட்டு போவேன்!"

என்றபடி நண்பனின் தோள்களில் கையைபோட்டு அன்பாய் கைது செய்து அழைத்து சென்றான்.

இதை சாக்காய் வைத்து தன் ஆளை காக்காய் பிடிக்கும் வேலை தான் வேறு என்ன

††††††††††††††††††††††††††††††††††††††††

"இப்போ நீ வரியா இல்லையா ரித்து!?"

"எனக்கு இன்னைக்கு வேலை இருக்குடி!"

"இன்னைக்கு மட்டும் நீ வரலை நம்ம பிரெண்ட்ஷிப் கட்டாயிடும் பார்த்துக்கோ!"

"ஹையோ! இவளோட ஆனா ஊனா இதையே சொல்லிட்டு சுத்தறா.நீ பேசாம வர்றேன்னு சொல்லேன்டி ரித்து!"

"கீர்த்தி அவ தான் புரியாம பேசறான்னா நீயுமா!?"

"லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் இப்போ வரமுடியுமா!? முடியாதா!?"

"கிறிஸ்டிடிடி........"

"சரி நீ ரொம்ப அழுத்துக்கர அதனால நான் ஜோகிட்ட சொல்லி அவன் பிரன்ட் அதுதான் அந்த ஃபேர் & ஹேன்ட்சமை கூட கூப்பிட்டு வர சொன்னேன் நீ வரலைன்னா வேண்டாம்!" என்றாள் ஷ்ரவனை குறிப்பிட்டு.

"ஹேய்...... எப்போடி!?" கீர்த்தி ஆர்வமாக வினவ

"பார்த்தியா பேபி இவ உனக்கு மேல படு ஸ்பீடியா இருக்கா பார்த்துக்கோ ட்ரயல் கூட ஸ்பீடியா பண்ணிடுவா போல!" என்க

"அப்போ கண்டிப்பா நான் வரணுமா!?"


தன்னவன் வருவதை அறிந்த உற்சாகத்தை மறைத்துக் கொண்டு கேட்பதாக நினைத்து அவள் உடனே 'வரவா?' என்று கேட்டது தான் அவளை காட்டிக் கொடுத்தது என்பதை அறியாது பிள்ளையாக ரித்து வினவ

"ஆமாம் தங்கம் நீ வந்தே ஆகணும் கண்ணு!" கிறிஸ்டி புன்னகையோடு அழைக்க.


"அப்போ சரிடி வர்றேன் ஓகே தானே!"

"ஓகே... ஓகே...!!"

"அப்போ நீ,கிறிஸ்டி கூப்பிட்டான்னு தான் வர்ற இல்லையா!?" கீர்த்தி வம்பளக்க

"அப்பறம் அவதானே என்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணினா அதனால தான் வர ஒத்துக்கிட்டேன்!"


"ரொம்பவும் பிகு பண்ணாதடி அப்பறம் உன்னோட ஃபேர் அண்ட் ஹேன்ட்சமை நான் தட்டிட்டு போயிடுவேன்!"மிரட்டல் விடுத்தாள் கீர்த்தி.

"அவங்க ஒன்னும் அப்படி எல்லாம் கிடையாது!"

"ஓகோ.. அப்போ அவங்க வேற எப்படியாம்!?"

தங்களுக்குள் சலசலத்த தோழியர் கூட்டம் நாளை செல்ல இருக்கும் ஜோவின் நண்பன் நிச்சயத்திற்கு தான் செல்வதாக உள்ளனர்.

"தனியே எப்படி செல்வது!?"

சங்கடமாக உணர்ந்த கிறிஸ்டி துணைக்கு ரித்து கீர்த்தியை அழைக்க.


கீர்த்தி "சரி"

தான் வருவதாக உடனேயே ஒப்புக் கொண்டாள். அவளைப் பொறுத்தவரை கொண்டாட்டங்கள் என்றாலே அவளுக்கு 'துள்ளலாட்டம்' தான்.

ஆனால் ரித்து இது போன்ற விழாக்களில் "தன்னை யாரும் விநோதமாக பார்ப்பார்களோ!?" எனும் எண்ணத்திலேயே கலந்துகொள்ள மறுப்பவள்

இன்று 'ஷ்ரவன் வருகிறான்!' என்ற ஒற்றை வார்த்தையில் மடங்கி தானும் வருவதாக கூறினாள்.
 
Top