Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 6

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
கிழக்கில் ஒழுகிய செங்கதிரை தனக்குள் இழுத்து தன்னை கரைக்கும் பனித்துளிகள் புவியின் ஒரு செல் தாவரத்தின் மீது பரவிய இதமான காலை வேளை.


கூரையால் வேயப்பட்டு நால்வர் அமரும் படி மேசையும், நாற்காலியும் சுகமாய் பதிந்திருந்த தோட்டத்து குடிலுக்குள் அமர்ந்து காலையின் சுகந்தத்தை அள்ளி பருகுவதை போல் ரசித்திருந்தார் சௌந்தர்யா.


தான் அன்றாடம் செய்திடும் சிறப்பு உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு.
அவரின் அருகே சென்று தன் சக்கர நாற்காலியை நிறுத்தி.

தானும் அன்னையோடு சேர்ந்து ஷ்ரவன் அதன் ஏகாந்தத்தை தேனீர் கோப்பையோடு ருசித்திருந்தான்.

தினசரி விடியல் பொழுது என்றுமே தாய்க்கும் மகனுக்கும் ஆராதனை நிறைந்ததாகவே தோன்றும்.

பரபரப்புகள் இல்லாத ஆடாது,அசையாது நதியில் மிதக்கும் மதகு போல; மெதுவாக நகரும் இந்த மணி நேரப் பொழுது தான் அன்றைய நாளுக்கான புது உத்வேகத்திற்கு உந்து சக்தியாக அமையும்.

"விடியலின் மோகனம் ஊக்கத்தை விதைத்து; நம்பிக்கை அளிக்கும்!" என்பது இவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; அதுவே உண்மையும் கூட.

இதோ இன்றைய நாளின் இனிய வேளை இதமாய் தொடங்கிட.

வீட்டின் வெளி வாயிலில் வாயிற்காவலர் கதவை திறந்துவிட,உள்ளே நுழைந்தது ஃபார்சூன் கார் ஒன்று.

அதில் இருந்து வெள்ளை வேட்டி சட்டையில் பக்தி பழமாக நெற்றியில் திருநீறு பட்டையும்,கழுத்தில் ஒற்றை முக உத்ராட்சம் ஒன்றை தங்க சங்கிலியில் கோர்த்து அணிந்திருந்த மனிதர் ஒருவர்

"ஆகா என்ன புன்னகை நிறைந்த முகம்!?" என்பது போல இறங்கினார்.

கைகளில் கருப்பு நிற தோல்பை ஒன்றை சுமந்திருந்தார்.

புன்னகை தவழும் முகத்துடன் வெள்ளை வேட்டி சரசரக்க தோட்டத்தில் இருந்த சௌந்தர்யாவை கண்டவர் அங்கிருந்தே இரு கரங்களை தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடு ஒன்றை போட்டவாறு வந்தார் தணிகாசலம்.

இது போன்ற கும்பிடு குரு சாமிகளைக் கண்டால் பெற்றவருக்கும் ஆகாது, பிள்ளைக்கும் ஆகாது.

ஆனால் தணிகாசலம் அவ்வாறு கிடையாது அவர் பெரிய மனிதர்கள் யாரைக் கண்டாலும் இப்படி கும்பிடும் பழக்கம் கொண்டவர்.

தலைக்கு மேல் இருந்த கும்பிடு இப்போது கழுத்துக்கு கீழே இறங்க "வணக்கம் அம்மா!" பண்பாக சௌந்தர்யா முன்பு பிரசன்னமானார் மனிதர்.

"வாங்க அங்கிள்!"

"ஆமாம் தம்பி!" எனும் பதிலை தணிகா தணிவாய் கூறவும்.

அவரை வரவேற்றதோடு அன்னையின் புறம் சிறு தலை அசைப்பை கொடுத்துவிட்டு தான் வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

"வாங்க தணிகா என்ன காலையிலேயே இந்த பக்கம்!?"

தன் கணீர் குரலில் "நீர் வந்ததன் காரணம் என்னவோ!?" எனும் ஓர் அரசியின் ஜோடனையில் சௌந்தர்யா கேட்க.

"இல்லங்கம்மா நம்ம தம்பியோட ஜாதகத்துக்கு பொருத்தமா ஒரு பொண்ணு ஒண்ணு இருக்குங்கம்மா.அதுதான் தகவலை சொல்லிட்டு ஜாதகம் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!"

தன் காலை வருகையின் கருப்பொருள் விளக்கிய நேரம்

இஞ்சியின் காட்டமும், ஏலத்தின் மயக்கும் மணமும் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டு காற்றில் கலந்து வந்து தணிகாவின் மூக்கை துளைக்க.

அங்கே அக்ஷய பாத்திரமாக தன் கைகளில் தேநீர் கோப்பையை சுமந்து கொண்டு வந்தாள் செவ்வந்தி.

அவள் கையில் இருக்கும் கோப்பைக்குள் இருக்கும் பூலோக அமிர்தமான தேனீரை "எப்பொழுது கைகொள்வோம்!?"என

தன்னை மறந்து கண்களை மூடி காற்றில் கரைய தொடங்கிய மணத்தை வெளியில் விடாது தன் நாசிக்குள் செலுத்தினார் தணிகாசலம்.

அவரின் செய்கையில் புன்னகை புரிந்த சௌந்தர்யா

"டீ எடுத்துக்கோங்க தணிகா செவ்வந்தி டீ தொண்டைக்கு இதமா இருக்கும்!"

தன் வீட்டு தேநீருக்கு இலவச விளம்பரதாரர் ஆகினார்.

"ஆகட்டுங்கம்மா..!"

பணிவாய் கூறிய மனிதர் செவ்வந்தி கொடுப்பதற்கு முன்பே நாவில் நாட்டியம் ஆடிய சுவை நாளத்தின் ஆட்டத்தில் பொறுமை இல்லாது; முதல் ஆளாக பாய்ந்து சென்று எடுக்க.

கோப்பையின் கடை துளியும் இன்பத் தேனாய் ருசிக்க.அதையும் விடாது,விட்டால் மனிதர் கோப்பையை நாவினால் சுத்தம் செய்யும் முனைப்பில் இருப்பவர் போல இருந்தார்.

தீர்ந்த பிறகும் கூட கோப்பையை கீழே வைக்க மனமில்லாது கைகளில் வைத்திருந்தார்.

'இன்னும் அதில் தேநீர் மணம் இருந்ததோ என்னவோ!?'

'இப்போ சொல்லுங்க!' என்பதாய் சௌந்தர்யா பார்வை வீச.

பெண்ணின் பிறந்த ஜாதகம் முதல் ருது ஜாதகம் வரை கொடுத்துவிட்டு. இன்றைய காலை வேளை 'பெண் என்ன செய்தாள்?' என்பது வரை ஒரே மூச்சாக கூறி முடித்தார் அவர்.

"ஜாதகம் எனக்குப் பெருசில்ல தணிகா.என் பையனுக்கு ஏத்த பொண்ணா இருக்கணும்.இந்த குடும்பத்துக்கு இருக்கற பேரை காப்பாத்த கூடியவளா இருக்கணும்" வரிசையாக தான் எதிர்பார்க்கும் குணவதியின் குணங்களை அடுக்கினார் ஓர் அன்னையாய்.

சௌந்தர்யா கூறிய வரிசைகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவற்றிற்கு எல்லாம் பொருந்தும் ஒரே குணவதி இந்த பெண் தான் என்று அடித்துக் கூறி; பெண் பார்க்கும் வைபவத்திற்கு தேதி குறித்து சென்றுவிட்டார் தணிகா.

தணிகாசலம் இந்த பக்கமாக நகர்ந்ததும் தன் உதவியாளருக்கு அழைப்பை ஏற்படுத்தி இப்பொழுது தணிகா கொடுத்து சென்ற பெண்ணை பற்றிய முழு தகவல் தனக்கு இன்னும் இரண்டு நாளில் வேண்டும் என்ற கட்டளையை பிறப்பித்தவர் வீடு நோக்கி நடந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பாராளும் அரசியின் கம்பீர சௌந்தரமாய் தயாராகி வந்தவர் உணவு மேசை முன்பு அமர்ந்தார்.

சரியாய் மணி எட்டு என கடிக்காரக் குயில் கூவி தன் கூட்டுக்குள் அடைந்த நேரம் சரியாக தன் கருங்களிற்றினை உதவியாளர் மூலம் நகர்த்தி வந்தான் ஷ்ரவன்.

அவன் கைகளில் கம்பெனியின் கோப்பை இருக்க,அதனை சரிபார்த்தவாரு வந்தான்.

மகன் அமர்ந்திருக்கும் தோரணையே இத்தனை கம்பீரம் எனில்," அவன் நடந்து வந்தால் எப்படி இருக்கும்!?" என அன்னை மனம் ஏங்கியது.

ஆனால் அதற்கு தான் வாய்ப்பில்லாமல் போனதே.

எத்தனையோ மருத்துவர்கள் வந்து பார்த்தும் இவனின் கால்களை சரி செய்ய முடியாது போனது.

அன்றைய சௌந்தர்யா அழுத கண்களோடு வேண்டாத தெய்வமில்லை.


ராகி இட்லி,சாம்பார் சகிதம் காலை உணவு எளிமையாக துவங்கிட,

மகன் புறம் திரும்பிய சௌந்தர்யா "ஷ்ரவன் கண்ணா..!" மெதுவாக மகன் புறம் வலை வீச முயன்றார்.

அன்னை விரிக்கும் வலையில் சிக்காது சிலிர்த்து பாயும் சிறுத்தையாய் மாறியவன்

"என்ன செய்வது!?" எனும் யோசனையில் இருந்த வேளை நண்பனை காக்க அழைப்பு விடுத்தான் ரக்ஷன்.


**********************************


காலை விடியலில் எழுந்து பல்லை மட்டும் துலக்கி விட்டு வீட்டிற்குள் இருக்கும் உடற்பயிற்சி கூடம் சென்றான் அவன்.

திரள் தோள் ஆயவனாய் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சிகள் செய்திட.

இளம் பெண்கள் அவனைக் கண்டு ஏக்க பெருமூச்சு மட்டுமே விடமுடியும்.அத்தகைய கட்டுடல் அவனுக்கு.

உடற்பயிற்சி முடிந்து நேரே சமையல் அறை சென்றான் ரக்ஷன்.

பாலை அடுப்பில் வைத்து காய்ச்சுவதற்கு முன்பே காஃபி ஃபில்டரில் டிகாசனை வைத்து தயார் செய்தவன் பாலை அடுப்பில் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான்.

அறைக்குள் நுழைந்தவன் கண்களில் பட்டு தெறித்தது மனைவியின் அழகிய நளினங்கள்.

மேடு பள்ளங்கள் எல்லாம் கண்கள் ஏறி இறங்க உறக்கத்தில் கூட விழித்து கொள்ளும் பெண் மனம் பட்டென்று போர்வையால் தன்னை மூடிக் கொண்டது.

"அதுதானே தூக்கத்துல கூட அலார்ட்டா இருக்கா பாவி!"

மங்களங்களை மறைத்த மனைவியை வசை பாடியவன் அவளின் அருகே சென்று அமர.

அவனை உணர்ந்தவள் அவன் மடிமீது தலை சாய்த்து இடையோடு இறுக்கிக் கொண்டாள்.

கணவன் மடியில் முகத்தை தேய்த்து பிள்ளையாய் அவள் உறங்க.அவளை கொண்டவன் நிலை தான் காலையிலேயே தறிகெட்டு ஓடத் தொடங்கியது.

மெதுவாக மடியில் தோய்ந்தவள் முகத்தை மேலும் அவனின் மடியில் தேய்க்க

அதற்குமேல் பொறுக்கமுடியாது போக "ஹேய்...!" என்றவன் நெற்றி முட்டி அவளை எழுப்பி இருந்தான்.

"வீணு எழுந்துக்கோடி"

"இம்.."என்றவள் மடியில் மீண்டும் முகம் தேய்க்க

"செல்ல ராட்சஸி எழுதுக்கோடி... !"

கொஞ்சலாய் எழுப்ப அவனை சத்தமிட்டு அழைத்தது அவன் மனைவி வீணா அல்ல; அவன் அடுப்பில் வைத்து வந்த பால் குக்கர்.

மனைவி தலையை தலையணை மீது பதித்துவிட்டு விரைந்தான் சமையல் அறை நோக்கி.

அவன் தந்த இதம் தலையணை கொடுக்கவில்லை போல அதனால் எழுந்துகொண்டாள் வீணா.

எழுந்த உடன் அவள் கண்களில் விழுந்தது என்னவோ அவளவனின் கைகளில் தவழ்ந்த காபி கோப்பை தான்.

"அழகன்டா நீயி!" என்றவள் அவனை கொஞ்சிக் கொண்டே அதனை பெற்றுக்கொள்ள.

அன்பாய் அணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் தனக்கு கொண்டு வந்த தேனீரை பருகத் தொடங்கினான்.


இவளோ பொறுமையாக காபியை குடிக்க அவனோ அலுவலக வேலைகள் சிலவற்றை கவனிக்க தொடங்கிட.குளிக்க வேண்டி குளியல் அறை சென்றாள் வீணா.

குளித்து முடித்ததும் சமையல் அறை சென்றவள் காலை உணவு செய்திட முனைய.

அவள் பாதி செய்திடும் போதே உதவும் கரம் நீட்ட வந்திருந்தான் கணவன்.

இருவரும் இணைந்து சமையல் அறையில் சமையல் மட்டுமே செய்தனர் என்று நான் கூறினால் நம்பும் நபர்கள் இருந்தால் 'கலியுகம் சிறக்கலாம்!'

அரை மணி நேரத்தில் முடிய வேண்டிய உணவு வேலைகளை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் செய்திருந்தனர் இருவருமாக.

"என்னே இணைகளின் நேர மேலாண்மை!!"

ஒருவழியாக சாப்பிட்டு முடிந்ததும் மனைவியை தனியே விடாது எப்பொழுதும் அவளின் பிறந்தகத்தில் தான் விட்டு செல்வான் என்பதால் இன்றும் அவ்வாறு அவளை விட்டுவிட்டு அலுவலகம் சென்றான்.

அன்றைக்கு புதிய கம்பெனி உடன் டையப் வைப்பதற்கான முக்கியமான மீட்டிங் ஒன்று இருப்பதால் அதனை நண்பனுக்கு நினைவு படுத்த அழைப்பை விடுத்தான் அவன்.

"மச்சான்!"

"சொல்லு ஷ்ரவா கிளம்பியாச்சா!?"

"இதோ கிளம்பிட்டேன்டா!"

"இன்னைக்கு அந்த ஸ்டீல் கம்பெனி கூட டையப் வைக்க ஃபர்ஸ்ட் மீட்டிங் இருக்கு ஷ்ரவா!"

"ஓகே ரக்ஷா ஐ ரிமெம்பர் தட்.இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்!" என்றவன்;

அவனையும் மீட்டிங் நடைபெறும் பிரபல உணவகம் ஒன்றுக்கு வந்துவிடுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க.

மகன் தன்னிடம் இன்று தப்பித்து விட்டான் என்பதை அவன் விகாரமான புன்னகையில் புரிந்து கொண்டவர்.

"ஈவனிங் கண்டிப்பா பேசணும் ஷ்ரவன் கண்ணா சீக்கிரமா வந்திடு!" என்று அவர் கூற

மகன் மறுத்து சொல்ல வாய்ப்பில்லாதவாறு; "உனக்கு டைம் இல்லைனா நைட் முழிச்சிருந்து நீ வர்ற நேரம் பார்த்து அம்மா பேசிப்பேன் கண்ணா .நீ இப்போ கிளம்பி!"என்றவர்.

தன் சொல்லால் 'நான் உனக்கே பேச கற்று தந்தவளடா!' என ஓங்காரமாய் ஒரு பார்வை பார்த்தார் மகனை.

அன்னை இரவு 'விழித்திருப்பேன்' என்ற பிறகு வராமல் போவானா என்ன?

"இல்லம்மா நான் ஈவெனிங் ஒரு மீட்டிங் போறேன் அது முடிஞ்சதும் சீக்கிரம் வர பார்க்கிறேன்.அப்படி என்னால் முடியலை என்றால் நாளைக்கு மார்னிங் பேசிக்கலாம் நீங்க நைட் ரெஸ்ட் எடுங்க!"

தன்னை வாழ்விக்கும் தெய்வத்தின் மீது அக்கறை கொண்டு கூறியவன் அலுவலகம் சென்றான்.


†********†*******†********†*******†


"அடியே என்னைக்கு ஊருக்கு போன என்னைக்கு வந்திருக்கடி!?"

"பேபி ஜோ நீ கேட்கற டோன் எப்படி இருக்கு தெரியுமா!?"

"எப்படி இருக்கு!?"

'எத்தன மணிக்கு உன்ன
வரச் சொன்னேன்டி?'
பாட்டு மாதிரி இருக்கு பேபி ஜோ.

"சை... அந்த பேபியை முதல்ல கட் பண்ணுடி!"

"முடியாதுடா என் பேபி ஜோ! பாரு நல்லா அமுல் பேபி மாதிரி.. பார்க்க வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கடா ராசா உன்னை போய் பேபின்னு சொல்லாம அதோ அங்க ஒருத்தன் இருக்கான் பாரு மொரட்டு பையனா அவனையா சொல்ல முடியும் சொல்லு!?"

காதலி கை காண்பித்த திசையில் பார்த்த ஜோ முகத்தை திருப்பிக் கொண்டான்.

'ஏனென்றால் !?'

அங்கே நின்றிருந்தவன் இவர்கள் நிறுவனத்தின் எதிரி நிறுவனரின் மகன் சாத்விக்.

'ஆம்'

அவன்தான் அவன் காதலியுடன் வந்திருப்பான் போல.

பொதுவாக இதுபோன்ற இடங்களுக்கு பகல் நேரம் வராத ஜோவை அனத்திக் கூட்டிக் கொண்டு வந்தது அவன் ஆருயிர் காதலி கிறிஸ்டினா தான்.

உறவினர் ஒருவரின் வீட்டிற்கு குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு வந்தவன்.

அந்த குழந்தையின் பக்கத்து வீட்டு பெண்மீது காதல் கொண்டு.அவன் பிள்ளைகளுக்கு அன்னையாக அவளை
மனதில் வரித்துக் கொண்டு இல்லம் சென்றான்.

முதலில் தெரியாமல் காண்பதை போல அதே உறவினர் இல்லத்தில் கண்டதும்; அப்படியே பேச்சு வார்த்தையாக மாற.

வெறும் வார்த்தைகள் எல்லாம் ஒன்றுக்கும் இல்லாத கறுகிய கடலைகளாக உருமாறி.

கடைசியில் அதற்கு 'காதல்'என்று பெயர் சூட்டி அவனுக்கு நேரம் கிடைக்கும் போது இவ்வாறு வெளியில் சென்று வருவர் இருவரும்.

முதல்முறை அவனிடம்,"ஜோ என்ன வேலை செய்ற!?" கிறிஸ்டி கேட்க.

"பைபிள் குற்றம்னு சொல்லாத வேலைய செய்றேன்!" என்றான் ஆத்மார்த்தமாக.

அதன்பின் அவனிடம் 'உன் வேலை எதுவென்று!?' அவள் கேட்டதில்லை.

அதுவே அவனுக்கு அவள் மீது அன்பை காதலாய் மாற்றி கனிரசம் பொழிந்தது.

"என்னடா எதுக்கு அந்த தாடிக்காரனை திருட்டு தனமா மெனு கார்டுக்கு பின்னாடி இருந்து பார்த்திட்டு இருக்க!?"

"அதெல்லாம் கேட்காத ஆனா அவனை பார்க்கவிடு என்னை!"

"அடேய் நல்லவன்னு நம்பி உன்னை லவ் பண்ணினேன்...!" புலம்ப தொடங்கினாள் கிறிஸ்டி

"இப்பவும் நான் நல்லவன் தாண்டி.!" காதலிக்கு நம்பிக்கை வழங்கியவன் பக்கவாட்டில் இருந்த சாத்விக்கை நோட்டமிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

"ஹையோ..!" என்று பெண்ணவள் கத்த தொடங்கவும் தான்

அவள் புறம் திரும்பியவன், "எதுக்குடி இப்போ கத்தீட்டு இருக்க!?"என்க.

"அப்பறம் என்னடா என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு.என்னை கூப்பிட்டு வந்த இடத்தில ஒரு பையனை நீ பார்த்துட்டு இருக்க!"

"அதுல என்னடி இருக்கு!?"

"ஹ.. அவன் என்ன உன்னோட ஆளா அவனை பார்க்க நான் இடைஞ்சலா இருக்கேனா என்னை பார்த்து என்ன சொன்ன நீ!?"

"நான் என்னடி சொன்னேன்!?"

'ஏன் இவ்வாறு கேட்கிறாள்?' புரியாது குழம்பினான் ஜோ.

"அவனை பார்க்கவிடுன்னு சொல்ற இதுக்கு என்ன அர்த்தம்!?"

"நான் அவனை பார்க்கறது ரொம்ப முக்கியம்னு அர்த்தம்!!" என்றான் அவன்.

அவ்வளவு தான் கை பையை வைத்து அவனை மொத்தி எடுக்க.

"ஹேய் பைத்தியம் அவன் எங்க புராஜக்டுக்கு எதிர் டீம் அதுதான் பார்த்தேன்!" என்றிட.

"எருமை இதை முன்னமே சொல்றதுக்கு என்னடா!?" என்றாள் ஏந்திழை

"சாரி பிரின்ஸ்! நம்ம டேட்டை ஒரு நாய்க்காக நான் மிஸ் பண்ண விரும்பலை வா நம்ம வேற எங்கையாவது போய் செலிப்ரேட் பண்
ணலாம்!" என அவளை கைபிடித்து அழைக்க.

அவளோ கை பையால் இன்னும் இரண்டு மொத்துக்கள் கொடுத்துவிட்டு அவனை தள்ளிவிட்டு ஓட.

அவளை துரத்திச் சென்றான் ஜோ.

யாரோ இரண்டு காதலர்கள் அடித்துபிடித்து விளையாடிக் கொண்டே ஓடுவதை கண்ட சாத்விக்

தன் முன் அமர்ந்திருந்த ரேமாவை பாவமாய் பார்த்திருந்தான்.
 
Top