Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 12

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
வியாழன் மாலையே தணிகாவை அழைத்து தங்கள் விருப்பம் தெரிவித்திருந்தார் ராகவன்.

'காரணம்!'

தயாளன் கூறிய தகவல்கள் அனைத்தும் இவர்களுக்கு உவப்பாக இருக்க
ஒப்புக்கொண்டனர்.

அதுமட்டும் அல்ல சித்தரின் வாக்கும் 'பெரும் காரணமே!'


மாலை பள்ளி முடிந்து வந்த ரித்துவை நிறுத்திய பெற்றோர்

"ரித்துமா..!"

"சொல்லுங்க அப்பா!?"

"உனக்கு ஒரு வரன் வந்திருக்கு.
எங்களுக்கு மனசுக்கு சரின்னு தோனுது.ஆனா...!"

தந்தை தயங்கி நிறுத்த, தாய் தொடர்ந்தார்

"ஆனா அந்த பையனால நடக்க முடியாதாம்டி ரித்து!" என்றார்.

மாப்பிள்ளையின் உடல் நிலை பற்றி மகளிடம் குறிப்பிட.

அவளுக்கு மனதில் வந்து நின்றவனோ அவளை கொத்தோடு கொல்லும் 'கூர்விழியன்' தான்.

'உன் எண்ணம் எல்லாம் சரியே!' என்பதாய் வந்த பிரவீன்

"அக்கா ஓகே சொல்லுக்கா அவரு வேற யாரும் இல்லக்கா அன்னைக்கு எக்சிபிஷன்ல பார்த்தோம் இல்ல அவரு தான்கா என்னோட அயர்ன் மேன்!" என்றான் துள்ளாலாய்.

அதை கேட்ட பிறகு பெண்மனம் துள்ளாட்டம் கொண்டு கொண்டாட்டம் கொள்ள...

ஒன்றும் அறியா பாலகி போல "சரி"என்று மெதுவாய் தலை அசைத்தவள் எண்ணம் எல்லாம் அவனே நிறைந்தான்.

"கண்டிப்பாக இதை யாரிடமாவது சொல்ல வேண்டும்!"

கிறிஸ்டிக்கு அழைப்பு விட

"சொல்லுடி என்ன இந்நேரம் எல்லாம் லோகோ ரெடி பண்ண போய் இருப்ப.இன்னைக்கு என்ன உன் பிசி டைம்ல கால் பண்ணி இருக்க!?"

"இல்ல கிறிஸ்டி அது வந்து...!"

"சொல்லுடி எதுவந்து...? உனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா?"

"அது எப்படி உனக்கு தெரியும்!?"

"அதுதான் உன் குரல்ல இருக்க வெட்கமே சொல்லுதே! மாப்பிள்ளை என்ன பண்றாரு!?"

தோழி கேட்ட பின்பு தான் அவளுக்கே ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஆசை கொண்டாள் ரித்து.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றாங்களாம்!" என்றதோடு பேச்சை வளர்க்காது துண்டிக்க.

"சில்லி கேர்ள் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு வெட்கபடுறா பாரு பேபி!?" என்றால் தன் அருகில் அமர்ந்து காஃபியை சுவைத்திருந்த ஜோவிடம்.

**********************************

வெள்ளிக் கிழமை காலை வேறு ஒரு அழைப்பு வந்தது.

"ஹலோ மிஸ்டர்.ராகவன் நான் சௌந்தர்யா சுந்தர்!"


கம்பீர பெண்மணியின் குரலில் ஒரு கணம் திகைத்து போனார் ராகவன்.

எப்படியும் தணிகா தான் இரு குடும்பத்திற்கும் இடையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என நம்பி இருக்க.

நேரடியாக சௌந்தர்யாவே பேசுவார் என்பதை அவரே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்க.பேச்சு தடையானது அங்கே.

"ராகவன் லைன்ல இருக்கீங்களா!?"

"சொல்லுங்க மேடம் நீங்களே நேரடியாக பேசுவீங்கன்னு நினைக்கலை அதுதான்!"

தன் அமைதிக்கு காரணம் கூற.

"பிள்ளைக்கு ஒரு நல்லது பண்ண பெத்தவங்க தானே முன்னால் வந்து நிற்பாங்க மிஸ்டர்.ராகவன்!" நேரிடையாக பேச்சிற்கு தாவினார் அவர்.

"அது சரிதாங்க மேடம்.ஆனால்...!"

ராகவன் ஓர் நொடி தயக்கம் "ஏன்!? எதற்கு!? எதனால்!?" என்பதை அறிந்தார் போலும் அதனால்

"அடுத்த நொடி யாருக்கு என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது ராகவன்! அப்படி இருக்கப்போ எதை பற்றிய கவலையும் எனக்கு கிடையாது. காசு,பணம்,வீடு,வாசல் சொத்து சுகம் இது எதுவுமே எனக்கு முக்கியமா தெரியலை!" என்றார்

"தன் குடும்பம் எங்கே!? அவர்களின் தோரணை!?" எங்கே என தயங்கிய ராகவனுக்கு நெற்றி அடியாக பதில் உரைத்தார் சௌந்தர்யா.

அத்தோடு தாங்கள் மாலை ஆறு மணிக்கு வருவதாக கூறி அழைப்பை துண்டிக்க, புயல் அடித்து ஓய்ந்த உணர்வு.

"இந்த அம்மா என்ன அவங்களா கால் பண்ணாங்க, அவங்களா பேசினாங்க, நருக்கா பேசிட்டு வச்சுட்டாங்க!"

யோசனையில் இருந்தாலும் மகனின் மீதான அவரின் 'அன்பு' வெளிப்படையாக அறிய முடிந்தது.

கண்டிப்பாக மகளின் சிறு குறைகளும் அங்கே 'மறைந்து போகும்' எனும் நம்பிக்கை பிறக்க.

வீட்டிலும் நண்பரிடமும் நடந்ததை கூறி தன் உணர்வை கூற.

வேறு என்ன விழா கோலம் தான்.

ராகவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

பெண்ணை பிடித்திருப்பதால் இன்றே தாம்பூலம் மாற்றிக் கொண்டு நேரே கல்யாணமே செய்துவிடும் முனைப்பில் இருந்தார் சௌந்தர்யா.

பெண் வீட்டில் இன்று மாலை வருவதாக தகவல் கூறிய சௌந்தர்யா மகனிடம் இன்னும் பெண்பார்க்கும் படலம் பற்றி கூறவே கிடையாது.

இந்த அழகில் ராகவன் பம்பரமாய் சுழல தொடங்கிவிட்டார்.

அவர் வெளிப்படையாக சுழன்றால்;அவர் பெற்ற புதல்வி உள்ளுக்குள்ளே சுற்றி சுழன்று ஆடினாலும்

உணவுக்கு இடையில் கிடக்கும் சிறு கல்லை போல

அவனுக்கு,"உன்னை பிடிக்கவில்லை என்றால்!?" என்ற எண்ணம் வந்து பாடாய் படுத்த.

அதை எல்லாம் ஓரமாய் ஒதுக்கிக் கொண்டு,"அவன் தன்னை பெண் பார்க்க வருவதே தனக்கு புண்ணியம் தான்!" என எண்ணிக் கொண்டாள்.

இன்னும் கிறிஸ்டி,கீர்த்தி இருவரிடமும் கூறவில்லை மாப்பிள்ளை 'ஷ்ரவன்' தான் என்று.

முதலில் அவன் விருப்பம் கூறட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் இது அவளது எண்ணம்.

"ஷ்ரவன் கண்ணா!"


ராகவனிடம் பேசிய பிறகு மகனை அழைத்தார் பெண்புலி.

அன்னை அன்பாய் அழைப்பதில் காரணம் உள்ளதை புரிந்தவன்

"சொல்லுங்கம்மா!" என்றவாறு தாயின் முகம் நோக்க

"இன்னைக்கு ஈவ்னிங் ஒரு ஃப்போர் ஓ கிளாக் வரமுடியுமா கண்ணா!?"

"ஏம்மா எதுவும் ஃபங்ஷன் போகணுமா!?"

"ஆமாம்! கண்ணா ஆனா நீ இல்லாமல் அங்க போக முடியாதுடா"

"அப்படி என்னம்மா ஃபங்ஷன்? நான் இல்லாமல் போக முடியாத ஃபங்ஷன்!?"

"எல்லாம் உனக்கு பொண்ணு பார்க்க தான் அந்த தடியன்களையும் வர சொல்லிடு புரியுதா!?" என்றதோடு பேச்சு முடிந்தது என்பதாய் நழுவிக் கொண்டார் அவர்.

எல்லாம் மகன் மறுப்பதை ஏற்க முடியாது என்பதால் தான்.

ஒருமுறை அவளை சென்று பார்த்தாள் கண்டிப்பாக மகனுக்கு பிடிக்கும் எனும் நம்பிக்கை அவருக்கு.

மாலை ஆறு மணியாக வெண்ணிலா, பிரவீன்,கீர்த்தனா, கிறிஸ்டி நால்வரும் மாடி பால்கனியை ஆக்ரமித்து இருந்தனர்.

ரித்துவை அறைக்குள் விட்டுவிட்டு இவர்கள் மட்டும் வந்திருந்தனர்.

எல்லாம் வரும் மாப்பிள்ளையை காணத் தான்.

"ஏன்டா பிரவீன் மாப்பிள்ளை ஃபோட்டோ பார்த்தியா!?"

"நான் அவரை நேர்லையே பார்த்திருக்கேன்!" என்றான் அவன் பாய்ந்து கொண்டு.

"என்னடா சொல்ற!?"

"ஆமாம் கீர்த்தி அக்கா.அவரு தான் என்னோட...!"

"அயர்ன் மேன்.. அதுதானே!"
அவனுக்கு முன்பு வெண்ணிலா பதில் கூற.

"அக்கா இவன்கிட்ட ஏன் இந்த கேள்வியை கேட்டீங்க காலைல வந்ததுல இருந்து இதையே சொல்லி என் காதை கரைச்சுட்டான் பாவி!" நிலா அலுத்துக் கொள்ள

"போடி பம்பரகட்டை..!" என அவளின் பின்னந்தலையில் தட்டிவிட்டு ஓடிவிட்டான் கீழே.

'ஏனென்றால்!?'


கார்களின் அணிவகுப்பு தெரு முனையில் வருவதை கண்டவன் நேரே வரவேற்கும் ஆவலில் கீழே சென்றிருந்தான்.

ராகவனின் தங்கைகள் இருவரும் ஓரமாக நின்றிருந்தனர்

"அப்படி எந்த சீமையில் இல்லாத மாப்பிள்ளை,அதுவும் நடக்கவே முடியாத மாப்பிள்ளை வருகிறான்!?" என்பதை காண காத்திருந்த இருவருக்கும் பெருத்த அவமானம்.

விலை உயர்ந்த காரில் 'படாடோபமாக' வந்திறங்கினர் மாப்பிள்ளை வீட்டார்.

அண்ணன் ஶ்ரீனிவாசன் குடும்பத்தோடு வந்திருக்க.ஜோ உடன் ஶ்ரீயும் இணைந்து கொள்ள அன்னையின் அருகே தன் கருங்களிற்றை நிறுத்தினான் ஷ்ரவன்.

மேலிருந்து பார்த்திருந்த தோழி பெண்கள் இருவருக்கும் "இந்த கும்பல் இங்க என்னடி பன்றானுங்க!?" என்பதாய் இருக்க.

கீர்த்தி காதிற்கு அருகே குனிந்த நிலா

"கீர்த்தி அக்கா அந்த மெருன் கலர் சட்டை ஆளு பார்க்க ஸ்மார்ட்டா இருக்கான் இல்ல!?" என்க.

அவள் கூறிய மெருன் கலர் சொக்காவில் சோக்காய் நின்ற ஶ்ரீயை கண்டு கோபம் கனன்றது காரணம் இன்றி.

"போடி இவளே அவன் சரியான ஜொள்ளு!" என்றவள்

"உங்களுக்கு எப்படி தெரியும்!?" என்ற நிலாவின் கேள்வியை ஒரு முறைப்பில் அடக்கிவிட்டு

"இவனுங்க இங்க என்னடி பண்றானுங்க!?" கிறிஸ்டியிடம் கேட்க

அவளோ இவளுக்கு மேல் திருதிருத்து
"எனக்கு என்னடி தெரியும் !?"

தோழிக்கு பதில் வழங்கினாலும்.

"மகனே ஜோ உனக்கு இருக்குடா!" என்பதாய் நினைத்துக் கொண்டு கீழே சென்றனர் மூவரும்.

அங்கே அறிமுக படலம் ஓடிக் கொண்டிருக்க.

மணபெண்ணின் தோழியாய் அறிமுகம் செய்யப்பட்ட பெண்களை பார்த்ததும் பதற்றம் தான் அங்கே.

"அப்போ பொண்ணு யாரு!?" என்ற கேள்விக்கு இடமில்லாது

கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் சொல்லாமல் சொன்னது மணப்பெண் 'ரித்து எனும் பிரீத்தா' தான் என்பதை.

"நாங்க கூட என்னவோன்னு நினைச்சோம். மாப்பிள்ளை இப்படின்னு தெரிஞ்சும் காசுக்கு ஆசைப்பட்டு எங்க அண்ணன் மகளை கொடுக்குது போல!"

முதலில் தொடங்கினார் ராகவன் முதல் தங்கை

"மீனா அமைதியா இரு!" என்று அண்ணன் கண்டித்தும் கேட்காது பேச தொடங்க.

"நீங்க விடுங்க அண்ணா நான் கேட்கிறேன்!" என்றார் சௌந்தர்யா.

அவருக்கு குடும்பத்தை பார்த்த பின் உண்மையாகவே பிடித்திருந்தது.அதனால் தானே உவந்து 'அண்ணா' என்று அழைக்க.

அவரின் பெருந்தன்மையில் பூரித்து போயினர் பெண் வீட்டு மக்கள்.

"அதுதான் அவங்களே சொல்லிட்டாங்க இல்ல அவங்களும் தெரிஞ்சுகட்டும்!" என்றவர் மேலும் தொடர்ந்தார்.

வீட்டின் அமைப்பை பார்த்த தேவியும், வீணாவும் முகம் சுழிக்க அமர்ந்திருந்தனர்.

அவர்களுக்கு அது குருவிக் கூடாக தோன்றியது.ஆனால் ரித்துவின் அத்தை பேச தொடங்கியதும் சுவாரஸ்யமாக கேட்க தொடங்கினர்.

என் அண்ணனுக்கு எங்க பசங்களை தான் ரித்துக்கு கட்டி வைக்க ஆசை.என் பிள்ளை மூத்தவனுக்கும், ரித்துக்கும் ஜாதகம் பொருத்தம் இல்லை.

ஆனா என் தங்கச்சி பையன் சின்னவன் கிட்ட நான் கேட்டேன்" தம்பி நம்ம ராகவன் மாமா மகளை கட்டிக்கோ?" அப்படினு கேட்டேனே

"ஓஹோ அதுக்கு உங்க தங்கச்சி பையன் என்ன சொன்னார்!?"

பாவம் சௌந்தர்யா பற்றி அறியாது நாம் சொல்லும் கதையை 'ஒரு பெரிய வீட்டம்மா கேட்கிறார்!' என்று நம்பி கதைகதையாம் புது கதையாம்னு பாடத் தொடங்கிவிட்டார் முத்து.

என்ன சொன்னானா,எங்க புள்ள நல்லா ஜிம்முக்கு எல்லாம் போயி உடம்பை கட்டா வச்சிருக்கான்.

இந்த புள்ள நல்லா கொழுகொழுன்னு குள்ளமா இருக்கா.அவனுக்கு பிடிக்குமோ!
அவன் சொல்லிட்டான்,"பெரியம்மா அவளை நான் கட்டிகிட்டா போற இடத்துக்கு எல்லாம் ஸ்டூலோடையா போக முடியும் சொல்லிட்டான்! அவனுக்கு இவ எப்படி ஒத்து வருவா!?" என்று சொல்லி சிரிக்க.

"ஓ! அப்பறம்.." என்றார் சௌந்தர்யா

இன்னும் இன்னும் அளந்துகட்ட

"இவ்வளவு நல்ல மனசா உங்களுக்கு!?" என்ற சௌந்தர்யா


"எங்க இணைந்த கைகள்ல வேலை இருக்கு போறீங்களா!?"என்றார்

பயிற்சி மையம் என்பது வேறு ; இணைந்த கைகளில் வேலை என்றால் அது வேறு சௌந்தர்யாவை ஏமாற்றி கடுக்காய் கொடுக்க நினைக்கும் பெண்களுக்கு அங்குதான் வேலை.

சக்கையாய் பிழிந்து எடுத்த பிறகுதான் 'வெளி உலகம்' காண அனுமதி கிடைக்கும்.

"அங்க என்ன வேலைம்மா இருக்கும்!?" என்று முத்து ஆர்வமாக கேட்க

ஷ்ரவன் பட்டென்று கூறினான் "ஆயம்மா வேலை!" என்று

குடும்பத்து இளசுகள் பட்டென்று சிரிக்க.

அத்தோடு ராகவனின் தங்கை முத்துவின் வாய் பூட்டு போட்டு கொண்டது.

"பெண்ணை அழைச்சுட்டு வாங்கம்மா!" என்றார் ஶ்ரீனி.

நந்தவன தேராக அசைந்து வந்த மகளை கண்ட கன்னிகா மனதில் "மகள் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்!" என்பதாகவே இருந்தது.


பார்வதி காபி தட்டை ரித்துவிடம் கொடுக்க.
அதனை வாங்கியவள் ஒவ்வொருவராக கடந்து அவனை நெருங்கினாள்.

'ஆம்!'

அவனின் வாசனையை எப்பொழுதோ தன் நாசிக்குள் நிறைந்திருந்த ராகமாலிகை.

அவன் முன் தட்டை நீட்டி தலையை குனிந்தவாறு மேல் பார்வை அவள் பார்க்க அவனோ டம்ளரை எடுக்கும் சாக்கில் அவளை கீழ் பார்வை பார்த்திருந்தான்.

பார்வை இரண்டும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ள.

யாரும் அறியாது பற்றிக் கொண்டது அங்கே 'ஆசை தீ!'

ரித்துவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்.

"தம்பிக்கு பொண்ணை பிடிச்சிருக்கா!?" என்றார் ராகவன்

அதை எல்லாம் முந்திக் கொண்டு "பொண்ணுக்கு என்ன போடுவீங்க!?" அதுவரை அமைதி காத்த தேவி கேட்க.

ராகவன் முகம் வாட்டமுற,"ஐம்பத்தி ரெண்டு பவுன் பொண்ணுக்கு எட்டு பவுன் மாப்பிள்ளைக்கு போடுவோம்மா அதோட சீர் சிராட்டு எல்லாம் எந்த குறையும் இல்லாமல் செய்வோம்!" என்றார்.

"ஓகோ அப்ப அறுபது பவுன் தான் போடுவீங்கன்னு சொல்லுங்க!" என்றவர் மேலும் ஏதோ கூற வர.

மனைவி காதருகே குனிந்த ஶ்ரீனி,"உங்க அப்பா வீட்ல உனக்கு எவ்வளவு போட்டாங்க!?" என ஒற்றை கேள்விதான் கேட்டார்.

அத்தோடு தேவியின் வாய் பூட்டிபோட்டுக் கொண்டது.

'ஏனென்றால்!?'

"பெண்ணுக்கு பத்து பவுன் போடுகிறோம்!" என்று திருமணம் செய்து கொடுத்த பிரகஸ்பதிகள் வெறும் 'ஐந்து பவுன்' மட்டுமே போட்டிருந்தனர்.

மீதி ஐந்து பவுன் 'ஸ்வாஹா' தான்.

அதனால் தான் தேவிக்கு அவரின் குடும்பத்தை நினைவு படுத்த வாயை 'பக்கென்று' மூடிக்கொண்டார் மானஸ்தி.



"இப்போ ஐப்பசி கடைசி நடக்குது கார்த்திகை கடைசில கல்யாணம் வச்சுக்கலாம்!" என்று நாள் குறிக்கப்பட.

மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தயாராக. சௌந்தர்யா தன் மருமகளை காண அவள் இருந்த அறைக்குள்ளே சென்றார்.

"என்னம்மா பிரீத்தா உனக்கு என் பையனை பிடிச்சிருக்கா!?" என்றார்.

அப்பொழுது தான் அங்கிருந்த அனைவருக்கும் ஒன்று புரிந்தது 'பையனுக்கு பிடித்துள்ளதா!?' என்று கேட்ட யாருமே அவளின் 'விருப்பம்' கேட்கவில்லை என்பது.

ராகவனுக்கே ஒருமாதிரி போனது.

ரித்துவும் கூட நினைத்தாள்..

தன்னை அழைத்து யாராவது,"உனக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளதா!?" என்று கேட்டால்;

யோசிக்காது உடனே சொல்லிவிட வேண்டும் "அவனை மட்டுமே பிடித்துள்ளது!" என்று கற்பனை செய்து கொண்டவளின் முன்பு வந்து சௌந்தர்யா நின்று கேள்வி கேட்க.

அவரை அன்றைக்கு புத்தக கண்காட்சியில் பார்த்த பிரமிப்பே நீங்காது அவளிருக்க.

இவரோ அதிர்ச்சி மேல் இன்பமாய் அதிர்ச்சியை வாரி வழங்கினார்.

"சொல்லுமா உனக்கு என் பையனை பிடிச்சிருக்கா!?"

கூடத்தில் இருந்தவன் மனம் தான் அவளின் வார்த்தைக்காக தவம் கிடக்க.

"எனக்கு பிடிச்சிருக்கு!" என்றாள் பட்டென்று.

"இம்.. தட்ஸ் குட்!!" என்றவர் அவளின் கன்னத்தில் அன்பாய் தட்டி கொடுத்து வெளியேற்றினார்.

அவரின் கம்பீர தோற்றம் அவளுக்கு அவளவனை நிலைநிறுத்த.கல்யாண கனவுகளில் மூழ்க.

ஜோ உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்ல.

ஶ்ரீயோ

"இன்னும் கொஞ்ச நேரம்
இருந்தாதா என்ன!?"

பாடாத குறையாக அவர்களை பின்தொடர்ந்தான்.

ரக்ஷனுக்கு நண்பன் மீது சந்தேகம் பிறக்க, மனைவியின் தாயை முறைத்துக் கொண்டே நடந்தான்.


"பாவி மாப்பிள்ளை யாருன்னு கேட்டப்போ என்னடி சொன்ன!?"

"இல்லடி என்னை விட்டுடுங்க உங்களுக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கும்னு தான் சொல்லலைடி!" என்று ரித்து ஜாகா வாங்கிட.

'பாவம்!ஜோ'

கிறிஸ்டி கையில் சிக்கிக் கொண்டான் அன்று மாலை நேர்
ந்த சந்திப்பில்.


"ஏன்டா அன்னைக்கு உன் கூட தானே இருந்தேன் அப்போ எல்லாம் நீ சொல்லவே இல்லையே? பாவி!"

"ஹேய் எனக்கே அப்போ தெரியாதுடி!"

"அதுக்கப்பறம் தெரிஞ்சது இல்ல அப்போ ஏன்டா சொல்லல!?"

"அதுக்கப்பறம் உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு நானும்,ரித்து மாதிரி நினைச்சேன்டி பிரின்ஸ்!" என்றவன் முதுகை மத்தளமாக தட்டி இருந்தாள் ஜோவின் பிரின்ஸ்.
 
Top