Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻




அத்தியாயம் 30

வெங்கட்ராமன் முதன்முதலில் ராதாவைப் பெண்பார்க்க வீட்டிற்கு வந்த பொழுது பேச்சுவாக்கில் சந்தியா பற்றி விசாரிக்க,அவள் மருத்துவம் படிக்க உத்தேசித்திருப்பதை அறிந்ததும் பாராட்டுதலாய் தலையசைத்தவர் தன்னாலான உதவிகளை செய்வதாய் வாக்களித்தார்.



உண்மையில் புரொபஸர் சயன்ஸ் டிபார்ட்மென்டை சேர்ந்தவராக இருந்ததால்

சந்தியாவிற்கு அடுத்த நாளிலிருந்தே நீட் தேர்விற்கான பிரத்யேக கோச்சிங்கை கொடுக்க ஆரம்பித்தார். பாலசந்தர் தன் கல்வித்தகுதிக்கு பொருந்தாத சாதாரண வேலையில் இருப்பதை தெரிந்துகொண்டவர் அவன் ப்ரொபைல் ரெஸ்யூம் வாங்கி ஒரு நல்ல எம் என் சி கம்பெனியில் தன் செல்வாக்கை பயன்படுத்தி அவனுக்கு நல்ல சம்பளத்துடன் ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.



இத்தனையும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் வெங்கட்ராமன் செய்து கொடுத்தார். ஆனால் ராதாவோ

அவரைத் தப்பாகத் தான் புரிந்து கொண்டாள்.



'சந்தியாவிற்கு இலவசமாய் நீட் தேர்விற்கு கோச்சிங் கொடுத்து பாலு அண்ணாவிற்கு நல்ல வேலை ஏற்பாடு பண்ணி அப்பாவை சீர் வரதட்சணை வேண்டாம் என்று சரிக்கட்டினால் ராதா அவர் மகனை திருமணம் செய்ய சம்மதித்து விடுவாள் என்ற நினைப்பில் தான் இவ்வளவும் பண்ணுகிறாரா புரொபஸர் ? ஹௌவ் ஸ்டுபிட் ? '

என்று ஏளனமாக நினைத்த ராதாவை தன் பெருந்தன்மையான பேச்சால் ஹௌவ் க்ரேட் என்று சொல்ல வைத்தார் வெங்கட்ராமன்.



"சந்தியாவோட படிப்புக்கு ஒரு நல்ல வாத்தியாரா உதவியிருக்கேனே தவிர வேற எந்த பிரதியுபகாரமும் எதிர்பார்த்து பண்ணல. சந்தியான்ற அறிவுச்சுடர் இன்னும் பிரகாசமாய் ஒளிர்றதுக்கு என் முயற்சியா துளி எண்ணெய் விட்டிருக்கேன்.அவ்வளவுதான்.அப்புறம் பாலசந்தர் அவன் தகுதிக்கேற்ற வேலை அவனுக்கு கிடைக்க நான் வெறுமனே சிபாரிசு தான் பண்ணினேன்.அவனுக்கு நடந்த இன்டர்வ்யூ வில் திறமையாக புத்திகூர்மையுடன் பதிலளித்து அந்த வேலையை தக்க வைத்துக் கொண்டது அவனுடைய ஸ்மார்ட்நெஸ்தானே தவிர நான் அங்கேயும் ஒரு ஏணியாத் தான் செயல்பட்டிருக்கேன்.தடுமாறாமல் ஏறி உயரம் தொட்டது முழுக்க முழுக்க பாலுவின் திறமை தான் .உன்னை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க இந்த உதவிகள் பண்ணினதா நீ தப்பாய் நெனச்சுடக்கூடாதுனு தான் இவ்வளவும் சொல்றேன்.அவ்வளவு தான்.மத்தபடி உன் அப்பாவிடம் கல்யாணம் பற்றி இனி நான் பேசவே மாட்டேன். அவர் அதைப்பற்றி பேசினால் எப்படி சமாளிப்பதுன்னும் எனக்குத் தெரியும். முக்கியமாய் உனக்கு இஷ்டமில்லைன்ற விஷயம் உங்கப்பா காதுக்கு போகாமல் வேறு காரணம் சொல்லி கல்யாணத்தை தடுத்து விடுகிறேன்.சரியாம்மா?"



வெங்கட்ராமனின் ஒவ்வொரு வார்த்தையிலும் பெருந்தன்மை மிளிர்ந்ததை புரிந்து கொண்ட ராதா மனம் நெகிழ்ந்து போனாள்.கூடவே அப்பாவை சமாளிக்க வேண்டிய தர்மசங்கடத்தை அவருக்கு ஏற்படுத்தாமல் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லாததை அப்பாவிடம் தானே சொல்லிவிட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தாள்.ஆனால் அந்த தீர்மானம் இன்று தேவகியின் மறுப்பால் ஆட்டம் கண்டிருந்தது.



கண்ணுக்கு கண்ணான ஒரே மகன் என்பதால் பிள்ளையின் விருப்பத்திற்கு தேவகி தடை சொல்ல மாட்டாள் என்று ராதாவின் அடிமனதில் இருந்த துளி நப்பாசையும் தேவகியின் கடுமையான வார்த்தைகளில் கரைந்து போனது. துணிகளை உலர்த்துவதற்காக மாடிக்குச் சென்றவள் தேவகியின் கோபக்குமுறலில் உலர்ந்த சருகாக கீழே இறங்கினாள்.



"அக்கா!! கோவிலுக்கு போகனும்னியே. போகலாமா?"



சந்தியாவின் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்த ராதா பாலை பால்தூக்கில் ஊற்றி வைத்து விட்டு உடையையும் தலையையும் சீர் செய்து கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள்.



தெருமுனையை கடந்தபொழுது அந்த இடத்தில் முதன்முதலாக நந்தகுமாரை சந்தித்த ஞாபகம் வந்து மனம் கனத்துப் போனது. சில தெருமுனைச் சந்திப்புகளைப் போல சொற்ப காலத்தில் கலைந்து போகும் ஒன்று தானா அவர்கள் உறவும்?



"ராதா நல்ல பொண்ணாவே இருந்தாலும் அவளை மருமகளாக்கி ரிஸ்க் எடுக்க நான் விரும்பல.புருஷன் தான் பரிதவிக்க விட்டுப் போய்ட்டார்.புள்ளையாவது மகாலஷ்மி மாதிரி மருமகளோட தீர்க்காயுசா வாழனும்னு நான் ஆசைப்படறதில் ஏதும் தப்பிருக்கா சொல்லு"



தேவகி மகனிடம் பரிதவித்தது இப்பொழுது நினைவிற்கு வர,சொல்லத் தெரியாத சோகமாக உணர்வுகள் நெஞ்சை அடைத்தன.



'மகாலஷ்மி மாதிரி மருமகள் வரனும்னு நீங்க ஆசைப்படறதில் தப்பேயில்ல மாமி.

என் தகுதிக்கு மீறி உங்க மகன் மேல ஆசைப்பட்டது என் தப்பு தான்.ரொம்பப் பெரிய தப்பு.'

'தேவி!! மனம் போல் மாங்கல்யம் வேணும்னு நான் உன்னை கேட்கல. மனசுக்கு நிம்மதி வேணும்னு தான் கேட்கறேன். இந்த துக்கிரிப் பெண்ணிடம் நீயாவது கருணை காட்டக் கூடாதா?'



அம்பாளின் முன் கண்களை மூடி நின்று பிரார்த்தனை செய்தபொழுது, மூடிய இமைகளை மீறி கண்ணீர் கசியவும் யாருமறியாவண்ணம் அதை சேலைத் தலைப்பால் ஒற்றியபடி நகர்ந்தாள். பிரகாரம் சுற்றிவிட்டு கோவிலுக்கு வெளியே அவர்கள் வந்தபொழுது நன்கு இருட்டிவிட்டது. டோக்கன் கொடுத்து மிதியடியை வாங்கி கால்களில் மாட்டிக் கொண்டு ராதா நிமிர்கையில் சந்தியா மெதுவாக சொன்னாள்.



"அக்கா!! புரபஸர் சாரோட பிள்ளை வந்திருக்கார் .உன்னைப் பார்க்கத் தான் காத்துண்டிருக்கார் போல. நீ வேணா அவர்கிட்ட பேசிட்டு வர்றயா? நான் தெரு

முனையில வெய்ட் பண்றேன்.சரியா?"



சந்தியா ராதாவின் பதிலை எதிர்பார்க்காமல் நடக்க, நேரெதிரே அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த முரளியைக் கண்டு ராதா பயத்தில் உடல் நடுங்கிப் போனாள்.



'இவன் எதற்காக இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறான்? சினிமா தியேட்டரில் அவனை அவமானப்படுத்தியதற்கு பழி வாங்கவா? கடவுளே! நான் என்ன செய்வேன்? இந்த அசட்டு சந்தியா வேறு இவன் குணம் அறியாமல் என்னை தனியாய் தவிக்க விட்டுப் போய்ட்டாளே! '



ராதாவின் முகத்தில் பயம் பரவியிருந்ததை அந்த அரையிருட்டிலும் முரளி இனம் கண்டு கொண்டான்.கூடவே காலையில் அவன் அப்பா சொன்ன விஷயம் இப்பொழுது நினைவில் வந்து அவனை எள்ளி நகையாடியது.



"என்னைக் கேட்காமல், என் சம்மதம் இல்லாமல் நீங்க எப்படி என் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்? நான் இப்பவே போய் அந்த சுந்தரத்திடம் எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லேன்னு சொல்லிடப்போறேன்."

காலையில் அவன் வானத்திற்கும் பூமிக்குமாய் எகிறிக் குதித்தபொழுது, வெங்கட்ராமன் அவனை லட்சியமே செய்யாமல் ஏளனமாய் சிரிக்க வேறு செய்தார்.



"யூ ஆர் டூ லேட்..உனக்கு முன்னாலயே அந்த .பொண்ணு எங்கிட்ட தனக்கு இஷ்டமில்லனு சொல்லிட்டா. முன்னெல்லாம் பொண்ணு பார்க்கறேன்னு போய் ஆண்கள் தான் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டு அப்புறமா பொண்ணை

பிடிக்கலன்னு சொல்லிட்டு வருவாங்க.இப்போ காலம் மாறிப்போச்சு.பொண்ணுக்கு டிமான்ட் இருக்கறதால அதுவும் நல்ல அடக்கமான பொண்ணெல்லாம் கிடைக்கறது இப்போ குதிரைக் கொம்பு தான்.ராதாவுக்கு இஷ்டமில்லேன்றதை வெளியே சொன்னால் நமக்குதான் அவமானம்னு நான் சொல்லாமலிருந்தேன்.இப்போ நீயே சொல்ல வெச்சுட்டே…"



முரளி இதை எதிர்பாத்திருந்தான் தான் என்றாலும் அப்பாவின் ஏளனத்தில் ராதாவின் மீது வன்மம் பிறந்தது.



'என்னை நிராகரிக்க அவளுக்கு எவ்வளவு திமிரும் தெனாவெட்டும் இருக்கவேண்டும்.

அந்த நிமிஷமே அவளை எப்படியாவது தன்வயப்படுத்திவிட வேண்டும் என்ற தீர்மானம் பிறக்க,அதை உடனே செயல்படுத்த தான் ராதாவைத் தேடி வந்தான்.



அவளோ ஆணியடித்தாற் போல் சிலையாக அசையாமல் நிற்கவும், முரளியே அவள் அருகில் நெருங்கினான்..

"ராதா!! "

மிகவும் தழைந்த குரலில் அவன் அழைக்க, ராதா மிரட்சியுடன் அவனை ஏறிட்டாள்.அவன் கண்களில் வழக்கமாய் குடி கொண்டிருக்கும் விஷமம் தொலைந்து போய் இப்பொழுது வருத்தம் தெரிந்தது.



"என்னை மன்னிச்சுடு ராதா. என்னையறியாமலேயே நான் சில தப்புக்களை பண்ணியிருக்கலாம் .ஆனால் என்னிக்கு உன்னைப் பார்த்தேனோ அன்னிக்கே உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். அதான் அப்பா கிட்ட என் விருப்பத்தை சொல்லி உன்னைப் பெண் கேட்டு வந்தோம். ஆனால் நீ அப்பாகிட்ட உனக்கு இஷ்டமில்லனு சொல்லிட்டதா அப்பா சொன்னாரு. பிலீவ் மீ ஆர் நாட் மை லைஃப் வில் பீ டோட்டலி ப்ளாங்க் வித்அவுட் யூ. நான் திருந்தி புது மனுஷனா வாழ்றதுக்கு ஒரு சான்ஸ் கொடு ராதா. நீ மட்டும் எனக்கு மனைவியாகலேன்னா என் வாழ்க்கை இப்படியே அர்த்தமில்லாமல் வீணாகவே போயிடும் ராதா.இன்னும் வெளிப்படையா சொல்லனும்னா நான் வாழ்வதும் சாவதும் ரெண்டுமே உன் கையில் தானிருக்கு.இது சத்தியம். என்னை ஏமாத்திடாதே ராதா ப்ளீஸ்….நான் வரேன்…."



படபடவென்று பேசிவிட்டு , விரைந்து நடந்து இருளில் சென்று மறைந்த முரளியைப் பார்த்துக் கொண்டு, நடப்பதெல்லாம் கனவா நனவா என்று புரியாத மாயையில் குழப்பத்துடன் திகைத்துப் போய் நின்றாள் ராதா.
 
சாத்தான் வேதம் ஓதுது.....
சாக்கடை எண்ணம்
சந்தனம் வசனம் பேசுது.....
சுதாரித்துக் கொண்டாலும் சதி செய்கிறது விதி..... 😭😭😭
 
சாத்தான் வேதம் ஓதுது.....
சாக்கடை எண்ணம்
சந்தனம் வசனம் பேசுது.....
சுதாரித்துக் கொண்டாலும் சதி செய்கிறது விதி..... 😭😭😭
அதே அதே. விதியும் சூழலும் மதியை மயக்கினால் பாவை என் செய்வாள்
 
Top