Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

படித்ததில் பிடித்தது...

Advertisement

praveenraj

Well-known member
Member
படித்ததில் பிடித்தது... #just sharing
"எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு விடுவது என்பது எப்போதும் புத்திசாலித்தனமான காரியம்தானே?
பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டதன் விளைவுதானே?
இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும் கடவுளுக்கு முகமூடியும் உண்டு.
இழந்தும் பெற்றும் தான் வாழ முடியும் போலிருக்கிறது.
நெருக்கடியில், சோதனை காலத்தில், தன்னில் சிறிது இழந்து, மற்றொன்றில் சிறிது பெற்று, பெற்றதையும் தன்னில் சீரணம் செய்து கொண்டு அழிந்து போகாமல் நிலைத்துவிடும் காரியம், மதங்களுடைய காரியமாகவும் நாகரீகங்களுடைய காரியமாகவும் பாஷைகளுடைய காரியமாகவும் இருந்து வந்திருக்கிறது அல்லவா?
அது தான் இயற்கையின் நியதி போலும்!"
-சுந்தர ராமசாமி -'ஒரு புளியமரத்தின் கதை' என்னும் நூலில் இருந்து.(1959)
 
படிக்கும் போது எங்களுக்கும் பிடித்தது :):):)
ரொம்ப நாளா வாங்கணும்னு நெனச்சு இந்த bookfair ல தான் இந்த புத்தகத்தை வாங்கி படிச்சிட்டு இருக்கேன். எனக்குத் தெரிந்து இதுபோல் ஒரு கதையை ஒரு எழுத்து நடையை ஒரு சொல்லாடலை எங்கும் கண்டதில்லை. பதினைந்து அத்தியாயத்தில் நான்காம் அத்தியாயம் போய்க்கொண்டிருக்கிறது...
 
Top