நேற்று பார்த்த நிலா முகம் – 22

Advertisement

சரியா சொன்னீங்க சிஸ் ❤️❤️
கடவுள்...கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் ஆனால் கை விட்ருவாரு 😰😰😰 நல்வங்களை சோதிப்பாரு ஆனால் கை விட மாட்டார் என்பதெல்லாம் சுத்த பொய் மா 😓😓😓

நல்லவங்களை சோதிக்கிறாரு சோதிக்கிறாரு சோதிச்சிட்டே தான் இருக்காரு 😥😥😥 கெட்டவங்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்று உணர வாய்ப்பு கொடுக்காமல் அமோகமாக வாழ வெச்சுட்ருக்காரு 😨😨

இது என்ன மாதிரியான டிஸைன் என்று புரியல....????
ஆமா, நல்லவங்க தொடர்ந்து தோத்துகிட்டே இருந்து கெட்டவங்க ஜெயிச்சுட்டு இருக்கிறது ஒரு bad example ஆக மாறும் ஆபத்தும் இருக்கு இதுல!
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ராமு & ப்ரியா.... நீங்க எதை விதைச்சீங்களோ அதை அறுவடை பண்ணிட்ருக்கீங்க 😡😡😡😡

யாருக்கு என்ன ஆச்சு...???
Thank you. ராம் பிரியா தம் தவறுகளை உணர ஒரு சந்தர்ப்பம்! Atleast கதையிலாவது!!
 
நான் பார்த்த வரை இப்படி ஒன்று நடக்கல பத்து மா 😍😍

சோதிக்கட்டும், கஷ்டபடுத்தட்டும்... ஆனால் காரணத்தை சொல்லிட்டு செஞ்சாலாச்சும் மனசை தேத்திக்கலாம் ☹️☹️☹️☹️

காரணமே தெரியாமல் அடி வாங்கும் போது ரொம்ப வலிக்குது ☹️☹️☹️

உதாரணத்திற்கு.... ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது அப்படி மனசு வலிக்குது ☹️☹️ அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க 😨😨😨

குழந்தை வரம் கிடைக்காமல் வருட கணக்கில் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அலையும் எத்தனை தம்பதிகளை பார்க்கிறோம் 😰😰😰
அவங்களுக்கு அந்த குழந்தை செல்வத்தை கொடுத்துருக்கலாம் 🙁🙁🙁

எங்க வீட்டில் என் தம்பி திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகுது... இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் நாங்க படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை 😨😨😨 ஏன் எனக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிள்ளை வரம் கிடைச்சது....!!!
இது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருக்குது.

நீங்களாவது பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்த்து இருக்கீங்க.

கொஞ்ச வருடம் முன்னாடி வரை நான் எங்கள் ஊரில் ஆற்றில் போடப்பட்ட சிசுக்களை பற்றி கேள்வி பட்டு இருக்கேன். குளித்து விட்டு வரும் பெண்கள் சொல்ல கேட்டு இருக்கேன்!

அத்தனையும் தவறான உறவுகளால் பிறந்த குழந்தைகள்! வேண்டாம் என்று நினைக்கும் அவர்களுக்கு ஏன் குழந்தை உண்டாக வேண்டும்! வேண்டும் என்பவர்களுக்கு வேதனை , நெடிய காத்திருப்பு.. இப்படி பல.. உங்களை மாதிரித்தான் எனக்குள்ளும் கேள்விகள்!
 
உங்க பிள்ளை ராஜா மாதிரி இருக்கான். பிறகு ஏன் வருத்தம்.உங்க தம்பிக்கும் நல்ல காலம் பிறக்கும்னு நம்புங்க.
கண்டிப்பாக விரைவில் கிடைக்கும்!
What happened?
Wait n see(read)!
 
நான் பார்த்த வரை இப்படி ஒன்று நடக்கல பத்து மா 😍😍

சோதிக்கட்டும், கஷ்டபடுத்தட்டும்... ஆனால் காரணத்தை சொல்லிட்டு செஞ்சாலாச்சும் மனசை தேத்திக்கலாம் ☹️☹️☹️☹️

காரணமே தெரியாமல் அடி வாங்கும் போது ரொம்ப வலிக்குது ☹️☹️☹️

உதாரணத்திற்கு.... ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது அப்படி மனசு வலிக்குது ☹️☹️ அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க 😨😨😨

குழந்தை வரம் கிடைக்காமல் வருட கணக்கில் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அலையும் எத்தனை தம்பதிகளை பார்க்கிறோம் 😰😰😰
அவங்களுக்கு அந்த குழந்தை செல்வத்தை கொடுத்துருக்கலாம் 🙁🙁🙁

எங்க வீட்டில் என் தம்பி திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகுது... இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் நாங்க படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை 😨😨😨 ஏன் எனக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிள்ளை வரம் கிடைச்சது
தம்பிக்கு சீக்கிரம் குழந்தைகள் பிறப்பாங்க. கவலைப்படாதீங்க தங்கப்புள்ள.

என்னோடு சேர்ந்து தான் என் சின்ன நாத்தனார்க்கும் கல்யாணம் நடந்தது. பதினாளு வருஷம் அவங்களுக்கு குழந்தையே பிறக்கல. எத்தனை வேண்டுதல், மருத்துவம் ... கவலை... வலிகள்... கஷ்டங்கள்....


ஆனால் எங்க வேண்டுதல் வீண் போகல.. ஒரே நேரத்தில் மூணு குழந்தைங்க குறை பிரசவத்தில் பிறந்தாங்க... லோ வெயிட்... மூணு மாசம் இன்குபேட்டரில் வச்சு தான் காப்பாத்தினோம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் வளர்த்தோம். இப்போ ஏழு வயசு... கஷ்டம் கொடுத்த கடவுளே சந்தோசத்தையும் கொடுத்தாரு. கொடுப்பாரு... நம்பிக்கையோடு வெயிட் பண்ணுங்க...
 

Advertisement

Advertisement

Back
Top