மிதுன் சொன்னதைக் கேட்டு மணிக்கு நெஞ்சுவலி வராத குறை தான். அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தவள், “என்னணா சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல. அபி அக்காவுக்கு குழந்தை இருக்கு, ஆனா நீங்க என்னடான்னா கல்யாணம் ஆகலன்னு சொல்றீங்க. என்கிட்ட சொன்ன மாதிரி வேற யார்கிட்டயும் சொல்லாதீங்க அண்ணா. அக்காவோட கேரக்டரை உடனே எல்லாரும் தப்பா நெனைச்சுப்பாங்க. என்னணா இப்படி இருக்கீங்க, அக்கா மேலே உங்களுக்கு என்ன கோபம் வேணாலும் இருக்கலாம், அதுக்காக இப்படி எல்லாம் சொல்லுவீங்களா? அக்காவுக்கு கல்யாணமாகி அவங்க ஹஸ்பண்ட் அவங்கள விட்டுட்டு போயிட்டாங்க, இல்லன்னா அவங்க இறந்து போயிட்டாங்கன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனா நீங்க என்னடான்னா அக்காவுக்கு கல்யாணமே ஆகலைங்கிற மாதிரி சொல்றீங்க. கல்யாணம் ஆகாம குழந்தை எப்படி அண்ணா இருக்கும்? ஏன்ணா இப்படி எல்லாம் பேசுறீங்க..” என்று மனது பொறுக்க மாட்டாமல் கேட்டாள்.
அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரகரவென்று கண்ணில் வழிய அவளைப் பார்த்து மிதுனோ, “என் தங்கச்சியோட கேரக்டரை பத்தி நீ தப்பா நினைக்கணும்னு இதை நான் சொல்லல மணி. அவளை தப்பா சித்தரிக்கணும்னோ, அவளோட கேரக்டர தப்பா காட்டணும்னோ நான் இப்படி பேசல. என்றதும் மேலும் குழம்பினாள் அவள்.
"எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்கண்ணா. என்னால எதையுமே யோசிக்க முடியல. நீங்க சொல்றதை எப்படி எடுத்துக்குறதுன்னு கூட எனக்கு புரியல.."
“எங்க வாழ்க்கையே எல்லாருக்கும் ரொம்ப விளையாட்டா போயிருச்சு மணி. ஆசை ஆசையா எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுவோம் ஆனா கடைசில எல்லாமே தலைகீழா மாறிடுச்சு..”
“அதுதான்னா என்ன ஏற்பாடு பண்ணுனீங்க, என்ன தலைகீழா மாறிடுச்சுன்னு தெளிவா சொல்லுங்க. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல அண்ணா.
"நான் சொன்னா மட்டும் எல்லாரும் சரியா புரிஞ்சுப்பாங்களா? இது வரைக்கும் யாரும் புரிஞ்சுக்கல, நீயா புரிஞ்சுக்க போற. ஆயிசு முழுக்க கூட வருவான்னு நினைச்சவளே நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்காம என்னை எடுத்தெறிஞ்சு பேசிட்டு போயிட்டா, நீ மட்டும் சரியா புரிஞ்சிக்க போறியா என்ன.." என்றவாறு அவன் தோளைப் பற்றி உலுக்கியதும் தான் ஏதோ தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் சட்டென்று கண்களைச் சிமிட்டி தன்னிலைப் பெற்றவனாய், “விட்டுடு மணி எதையும் சொல்லும் நிலைமையில நான் இல்லை..” என்றான் விரக்தி நிலையில்.
“இப்படி சொன்னா எப்படி அண்ணா. சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லுங்க. அபி அக்கா பத்தி நீங்க என்னென்னமோ சொல்றீங்க, ஏன் இப்படி சொல்றீங்கன்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியல. எதுவா இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நான் புருஞ்சுக்க முயற்சி பண்றேன். ஆனா இப்பவும் கூட அபியக்காவ சத்தியமா என்னால தப்பா நினைக்க முடியல. என்று நா தழுதழுக்க கேட்டவளை அத்தனை மன தாங்கலொடு பார்த்தான் மிதுன்.
பொங்கி வந்த அழுகையை சிரமப்பட்டு தனக்குள் விழுங்கியவனாய், “அபிக்கு கல்யாணம் ஆகல, நீ சொன்ன மாதிரி எந்த ஒரு இன்ஸிடெண்டும் நடக்கல. அதேசமயம் லட்டு பையன் அபியோட பையன் தான், அபி பத்து மாசம் சுமந்து பெத்த பையன் தான்..” என்று மீண்டும் சொல்ல,
“நீங்க சொல்றதை என்னால புரிஞ்சுக்கவே முடியலண்ணா. எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறதுன்னு கூட எனக்கு தெரியல. எப்படி இதெல்லாம் சாத்தியம்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியல. ஒருவேளை அபியக்காவ யாராவது லவ் பண்ணி, நம்பிக்கை தந்து ஏமாத்தி விட்டுட்டு போயிட்டாங்களாண்ணா..” என்று கேட்க, அதற்கும் இல்லை என்றே தலையசைத்து வைத்தான்.
“பைத்தியம் பிடிக்க வைக்கிறீங்க அண்ணா.தயவு செஞ்சு உண்மையை சொல்ல போறீங்களா இல்லையா?” என்று மணி அதட்டலாய் கேட்டதும், இவனும் உண்மைய சொல்ல வாய் திறந்தான். ஆனால் அதே சமயம் கடைக்கோடியில் இருந்த பாத்ரூம் கதவு திறக்கப்பட்டதும் சட்டென்று வாயை மூடிக்கொண்டான். மணியும் கூட அபியை வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாது என்பதால் அதோடு அந்த பேச்சை விட்டு விட்டாள். ஆனால் மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். இப்படி இருக்குமா? அப்படி இருக்குமோ? எதை வைத்து அவன் இப்படி சொல்கிறான்? என்று எதையோ நினைத்துக் கொண்டு குழம்பி நின்றாள்.
அவர்கள் அருகில் வந்து நின்ற அபியைக் கண்டு மிதுன் உள்ளம் வெதும்பிப் போனான், மணியோ அதிர்ந்து போனாள். வெகுநேரம் அழுததற்கு அடையாளமாய் அபியின் கண்கள் சிவந்து கன்றி, கண்ணின் ரப்பை கூட தடித்துப் போயிருக்க, முகமும் லேசாக வீங்கியது போல் இருந்தது. அதை எல்லாம் மறைப்பதற்காக என்னதான் தண்ணீர் வைத்து முகத்தை அழுந்த கழுவி இருந்தாலும் கூட அப்படியே அவள் வெண்மை நிறத்திற்கு முகச்சிவப்பு தெரியத்தான் செய்தது. ஆனாலும் இருவரும் எதுவும் கேட்கவில்லை..
கல்லாவின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவள், “நீ ஏன்டி இப்படி நிக்கிற உள்ள வேலை இருந்தா போய் பாரு போ. அப்புறம் இதுவும் உங்க அண்ணன் கிட்ட சொல்லிரு. எங்காவது கண் காணாத இடத்துக்குப் போயிடுவேன். ஆனா என்னோட பொறுமையும் ஒரு எல்லைக்கு தாங்கிறதை உன் அண்ணனுக்கு சொல்லி புரிய வை. அதையும் சோதிச்சா கண்டிப்பா யாரைப் பத்தியும் யோசிக்க மாட்டேன் கிளம்பி போயிட்டே இருப்பேன். ஏன்னா லைப்ல தனியா வாழ்றது எனக்கு ஒன்னும் பெரிய விஷயமே கிடையாது. இந்த வரைக்கும் அப்படித்தான் வாழ்ந்துட்டு இருக்கேன், இதுக்கு மேலயும் அப்படியே வாழணும்னு விதி இருந்தா பரவாயில்லை அப்படியே இருந்துட்டு போயிடுறேன்..” என்று சொன்னவள் கடைக்கு வந்த அழைப்பை ஏற்றாள்.
அலைபேசி வாயிலாக சொல்லப்பட்ட ஆர்டர்களை வைத்துக்கொண்டு, அதை எல்லாம் டெலிவரி செய்வதற்காக தனியாக எடுத்து பேக் செய்ய ஆரம்பிக்க, உதவிக்கு மணியும் சென்று விட்டாள். அப்படியே சிலையென சமைந்து நின்றிருந்த மிதுனோ வேதனை தாள முடியாமல் பெரும் மூச்சுகளாக இழுத்து விட்டுக்கொண்டு, பொங்கி வந்து அழுகையையும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். அவனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. தங்கைப் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல, அது அவனுக்கும் தெரியும். அவள் இந்த வேதனையில் இருந்து மீண்டும் வர வேண்டும், அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவன் போராடுகிறான். ஆனால் அவன் எப்படிப்பட்ட முயற்சி எடுத்தாலும் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும் தங்கையின் எண்ணங்களும் சரி, முடிவுகளும் சரி பெரும் எரிச்சலையும், கோபத்தையும் தான் கொடுக்கிறது.
இதோ இப்போது கூட வந்திருந்த அந்த வரன் மீது அதீத கோபம் தான். அவன் பார்த்திருந்தால் நிச்சியம் இப்படிப்பட்ட வரனைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டான். அது தங்கைக்கும் தெரியும் அதனால் தான் அவள் எதுவும் சொல்லாததில் சற்று ஆசுவாசமாக உணர்ந்தான். எதற்காக இப்படி ஒரு வரனைப் பார்த்தாய் என்று அவள் ஒரு வார்த்தை கேட்டிருந்தாலோ அல்லது ஒரு பார்வை பார்த்திருந்தாலோ கூட அந்த இடத்திலேயே மறித்துப் போய் இருப்பான். ஆனால் அப்படி அபி பாக்காததே அவனுக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது. அங்கிருந்து கிளம்பியவன் நேராக சென்றது தன் நண்பனிடம் தான்.
சென்ற வேகத்திலேயே பட்டு பட்டென்று அவன் கன்னத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொடுத்தவன், “எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு கிழவனை என் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா அனுப்பி வச்சிருப்பா? ஏன் தங்கச்சி இடத்துல உன் தங்கச்சி இருந்தாலும் இப்படித்தான் பண்ணுவியா. கண்டுட்டு இருந்தேன்.அந்த கனவெல்லாம் சிதைஞ்சு போற மாதிரி நீ இப்படி பண்ணிட்டியேடா.
“அப்புறம் வேற எப்படிப்பட்ட மாப்பிள்ளையப் பார்ப்பாங்களா? உன் தங்கச்சி ஆல்ரெடி கல்யாணம் ஆகாம புள்ளைய கையில வச்சிருக்கா. அதுவும் முறை தவறி புள்ள பெத்துட்டு திமிரா வேற சுத்திக்கிட்டு இருக்கா, அவளுக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை தான் அமையும்..” என்றதும் பெரும் அதிர்வு மிதுனிடம்.
“மச்சான் என்னடா இப்படி பேசுற..”
"வேற என்னை எப்படி பேச சொல்ற.."
“நீ இப்படி பேசுவன்னு நான் நினைச்சு கூட பாக்கல. ஏன்டா இப்படி பண்ற, என் தங்கச்சி உன் தங்கச்சி மாதிரி இல்லையாடா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும், அவ நல்லா வாழணும்னு நான் நினைக்கிற மாதிரி நீயும் நினைக்கலையாடா?” என்றதும் அவனை விட்டு தூரமாய் தள்ளி நின்றிருந்த அவன் நண்பன் கனகவேலோ, “என்னது உன் தங்கச்சி என் தங்கச்சி மாதிரியா....” என்று சொன்னவாறு விழுந்து விழுந்து சிரித்தவன்,
“எங்க இன்னொரு தடவை சொல்லு. உன் தங்கச்சி என் தங்கச்சி மாதிரியா?” என்றவாறு விழுந்து விழுந்து சிரித்தவன் சட்டென்று சிரிப்பதை நிறுத்தி விட்டு, “என் தங்கச்சி ஒன்னும் உன் தங்கச்சி மாதிரி கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்னாடி பிள்ளைய வாங்கிட்டு வந்து நிக்கல. அதுவும் சொல்ல கேட்காம எல்லா பேரையும் எதிர்த்து அந்த பிள்ளையை பெத்தெடுத்துட்டு திமிர்த்தனமா ஊர்ல அலையல. தங்கச்சிக்கு கிடையாது..” என்றதும் திகைப்பாய் நண்பனைப் பார்த்தான் மிதுன்.
“என்னடா கனகு இப்படியெல்லாம் பேசுற..”
“வேற எப்படி பேச சொல்ற.ஜஸ்ட் உன் தங்கச்சி பாக்க அழகா இருக்காளே, தனியா இருக்காளேன்னு நான் துணையா இருக்கட்டுமான்னு தான் கேட்டேன்.நீ என்ன நினைச்சாலும் சரி ஓபனா உன்கிட்ட சொல்றேன், இவ்வளவு தூரம் ஆனது அப்புறம் இதை மறைச்சு நான் என்ன பண்ண போறேன்.
ஆமாடா அவளை அப்ரோச் பண்ணுனேன் மேரேஜுக்கு கிடையாது, செட் தோசை மாதிரி வச்சுக்கிறதுக்கு. பதிலுக்கு திமிரா பதில் சொன்னவ செருப்ப கலட்டி அடிச்சுட்டா. அதான் அவளை மாதிரி திமிரா திரியிறவளுக்கு , இந்த மாதிரி மாப்பிள்ளை தான் அமையும்னு தேடி புடிச்சு அனுப்பி வச்சேன். அவளை எல்லாம் செகண்ட் சேனலா வச்சுக்க வேணா என்னை மாதிரி ஒருத்தன் வருவான். கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறதுக்கெல்லாம் பிரஷ்ஷா எவனும் கிடைக்க மாட்டான்னு அவக்கிட்ட போய் சொல்லு. அவளுக்கு இந்த ஜென்மத்துல கண்டிப்பா கல்யாணமே நடக்காது.
வேணும்னா இன்னொரு வாய்ப்பு வேணா தர்றேன். எனக்கு ஓகே சொல்லு நல்லபடியா வச்சிக்கிறேன் செட்டப்பா..” என்று சொன்னவன், மிதுன் திகைத்து நின்றிருப்பதை பொருட்படுத்தாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட, மிதுன் நிலைகுலைந்து போனான். என்று எண்ணி அவன் உள்ளம் வேதனையில் குமைந்தது..
அதே சமயம் எங்கோ தொலைவில் இருந்த அந்த வீட்டின் அறையில் அழகோவியமாய் அபியின் புகைப்படம். ஒருபக்க சுவரை நிறைத்திருந்தது ஆள் உயரத்தில் இருந்த அபியின் புகைப்படம். அந்த புகைப்படத்தை வருடி குனிந்து முத்தமிட்டான் அவன். கரங்களோ அழுத்தமாய் அந்த புகைப்படத்தின் காலில் வரையப்பட்டிருந்த கொலுசை நிஜமானதென எண்ணி வருடி தழுவியது. அக்கரத்தில் குடிகொண்ட பிளாட்டினம் வாட்ச் மினுமினுத்து அவன் செல்வ செழிப்பை பறைசாற்றியது... வாட்சின் முனை கீறி விடுமென அதைக் கழட்டி துச்சமாய் தூக்கி எறிந்தவன், மலரிதழின் மென்மையோடு அப்புகைப்படத்தை மீண்டும் வருடலானான்..
யாரிவன்? அபியின் புகைப்படத்திற்கு கூட இத்துனை முக்கியத்துவம் ஏன் தர வேண்டும்?
- நேசத்தூறல் தொடரும்..

Last edited: