Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 8

Advertisement

Admin

Admin
Member

8​

"எங்கக்காவுக்கு ஒரு வழி சொல்லுங்க டாக்டர்........ தானுண்டு தன் படிப்புண்டுன்னு இருந்தவளைக் கவிதையால வளைச்சுப் போட்டு நீங்க காதலிக்க வெச்சதால இப்போ அப்பா அவளைக் கல்யாணம் பண்ணி தள்ளி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பார் போல......எனக்கு பயமாயிருக்கு."​

அப்பாவின் தீவிரமான ஏற்பாடுகளைத் தடுக்கும் வழி தெரியாமல் தவித்த வனிதா, அடுத்த கணமே ஓடோடி வந்தது ராஜீவிடம் தான்.​

அவனும் தான் பாவம் என்ன செய்வான்? கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போல் ஒரு தடுமாற்றத்தில் திகைத்துப் போனான்.​

காதலிக்கும் பொழுது உலகமே உள்ளங்கையில் இருக்கிறார்போல் ஒரு பிரமையில் உலா வருபவர்கள், இறக்கைகள் இல்லாமலேயே வானத்தில் பறந்தவர்கள், விஷயம் தெரிந்து பெற்றவர்கள் வானத்திற்கும் பூமிக்குமாய்க் குதிக்கும் பொழுது தான் கனவிலிருந்து விழித்தது போல் நிஜத்தின் நிதர்சனத்தையே உணர்கிறார்கள்.​

ஒரு பிரச்னை எப்பொழுது தீவிரமடைகிறதோ அப்பொழுது தான் அதன் நல்லது கெட்டதுகளை அலசி ஆராயும் புத்தி வருகிறது.​

பயிறசி மருத்துவராகப் பணிபுரியும் இந்த நேரத்தில் ராஜீவ் சத்தியமாய் திருமணம் பற்றியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. மதுரா இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்ற காரணம் ஒரு புறமிருக்க, தன் காதலால் தங்கை வித்யாவின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற எச்சரிக்கையும் இருக்க, ராஜீவ் வெகு கவனமாய் தான் திட்டமிட்டிருந்தான்.​

தான் மருத்துவ மேறபடிப்பு முடித்து தங்கைக்கும் திருமணம் முடித்த கையோடு பெற்றவர்களிடம் சொல்லி தன் காதலை கல்யாணமாய் நிறைவேற்றிக் கொள்ளும் உத்தேசத்தில் ராஜீவ் இருக்க,​

மதுராவின் வீட்டில் நடந்த ஏற்பாடுகளோ அவனுடைய உறுதியை உருக்குலைத்தன.​

மதுராவின் இலக்கும் மருத்துவப் படிப்பு என்பதால் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு தான் நினைத்ததை நிறைவேற்ற அவகாசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜீவ்வின் கனவில் ராகவன் மதுராவின் திருமண ஏற்பாடுகளின் மூலமாய் மண்ணை அள்ளிப் போட்டார்.​

"என்ன டாக்டர் பதிலே பேசலை? விஷயத்தோட விபரீதம் உங்களுக்குப் புரியுதா இல்லையா? எங்கப்பா ஒரு விஷயத்தில் இறங்கிட்டார்ன்னா அதை முடிக்காமல் விட மாட்டார். மது ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அப்பாவை வேதனைப்படுத்திட்டோமேன்னு குற்ற உணர்ச்சியில் ஏற்கெனவே புழுங்கிட்டிருக்கறவ, இனிமேல் அவர் பேச்சுக்கு மறு பேச்சுப் பேச மாட்டா.​

இப்போ நீங்க தான் முடிவெடுக்கனும்......."​

வனிதா படபடவென்று பொரிந்து தள்ள, ராஜீவ் அவஸ்தையுடன் நெளிந்தான்.​

"என்னை என்ன பண்ணச் சொல்றே வனிதா? உங்கக்காவைக் கூட்டிட்டு ஓடிப் போகச் சொல்றியா? பொறுப்பான ஒரு டாக்டர் பண்ணக் கூடிய காரியமா அது? நான் டாகடர்ன்றதால அப்படிச் சொல்லலே. இயல்பாகவே அப்படியரு காரியம் பண்ண எனக்கு மனசு வராது. எங்கம்மா என்னை அப்படி வளர்க்கலே. நம்ம ரெண்டு குடும்பத்துக்குமே தலைகுனிவை ஏற்படுத்தறார்போல ஒரு காரியத்தை நான் செய்வேன்னு எப்படி நீ எதிர்பார்க்கறே?"​

"அப்போ அப்பா ஏற்பாடு பண்ற மாப்பிள்ளைக்கு மது கழுத்தை நீட்டினால் உங்களுக்குப் பரவாயில்லையா? அவளை வேறோருத்தனுக்குத் தாரை வார்க்கத் தான் அப்படி வலியக்க வந்து விழுந்து விழுந்து காதலிச்சிங்களா?"​

கோபத்தின் உச்சியில் குமுறினாள் வனிதா.​

"ஐய்யோ என்னை தப்பாப் புரிஞ்சுக்கறேம்மா நீ.......இப்பவும் எனக்கு மது மேல இருக்கற காதல் இம்மியளவு கூடக் குறையலே. ஆனால் எங்க கல்யாணத்தைப் பற்றி யோசிச்சுக் கூட பார்க்கமுடியாத நிலைமையில் நான் இருக்கேன் வித்யா கல்யாணம் முடியாமல் நான் கல்யாணம் பண்ணிண்டால் என்னை விட சுயநலக்காரன் வேற யாரும் இருக்க முடியாது."​

"அப்போ உங்க தங்கை தான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? எங்கக்கா வித்யா அளவிற்கு முக்கியமாய் உங்களுக்கு படலே அப்படித்தானே?"​

"மறுபடியும் மறுபடியும் தப்பாவே புரிஞ்சுண்டு பேசினால் நான் என்ன செய்யட்டும் வனிதா? என் வாழ்க்கையில் கல்யாணம்னு ஒண்ணு நடந்தால் அது உன் அக்காவுடன் தான் அந்த உறுதி எனக்கு என்னிக்குமே இருக்கும். எனக்கிருக்கற இந்த உறுதியும் நம்பிக்கையும் உங்கக்காவுக்கும்​

இருந்தால் பிரச்னையேயில்லை. அந்த உறுதியும் நம்பிக்கையுமே அவளை உங்கப்பாவுக்கு எதிராய் போராட வைக்கும்...."​

ஆனால் ராஜீவின் கணிப்பு மதுராவின் விஷயத்தில் தவறாய் தான் போனது.​

மதுராவிற்கு ராஜீவ் மீதிருந்த காதலை விட பெற்றவரின் மீது வைத்த பாசம் தான் அதிகமாயிருந்தது அதனால் தான் காதலுக்காக போராடுவதை விட அப்பாவின் மனம் கோணாமல் அடுத்தவனுக்கு கழுத்தை நீட்டுவது என்றாலும் ஆண்டவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டாள்.​

மதுராவின் நல்லநேரம்.......அப்பா அவளுக்காக அவசரத்தில் தேடிய மாப்பிள்ளை அற்பாயுசுக்காரனாய் இருந்தது தெயவ சங்கல்பம் என்று தான் சொல்லவேண்டும்.​

இன்னார்க்கு இன்னாரென்று முடித்துப் போடுவது அந்த ஆண்டவன் அல்லவா?​

இல்லையென்றால் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு புறப்பட்டுப் போன மாப்பிள்ளை வீட்டார் விபத்தில் சிக்கி குடும்பத்தில் மற்றவர்கள் எல்லாம் சிறிய பெரிய காயங்களுடன் பிழைத்துக் கொள்ள, மாப்பிள்ளை பையன் மட்டும் அடிபட்டு ஸ்தலத்திலேயே உயிரை விடுவானேன்?​

செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்று நம்மூர்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் ஆனால் உண்மையில் செத்துப் போன மாப்பிள்ளை மதுராவிற்கு நன்மை தான் செய்தான்.​

"நல்லவேளை ராகவா உன் பொண்ணு கழுத்தில் தாலி ஏறும் முன் இப்படியரு விபத்து நடந்தது. இதுவே கல்யாணமானபின் நடந்திருந்தால் நம்ம மது வாழ்க்கை என்னாகறது? தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சுன்னு நிம்மதியா இரு......மதுவுக்குன்னு ஒருத்தன் இனிமேலா பொறக்கப் போறான்? ஒருத்தன் பொண்டாட்டியை இன்னொருத்தன் கட்ட முடியாதுன்னு​

சொல்றதெல்லாம் நூறு சதம் உண்மையான பேச்சு. இப்ப மதுவிற்கு என்ன வயசாயிடுச்சுன்னு நீ அவ கல்யாணத்திற்கு இவ்வளவு அவசரப்படறே? பேசாமல் இந்த கல்யாண விஷயத்தைக் கொஞ்ச காலத்திற்கு ஆறப் போடு......"​

இந்த கல்யாண ஏற்பாடுகளின் உள் விவரம் தெரியாமல், ராகவனை சமாதானப்படுத்திய சில நல்ல மனிதர்களும் இருக்கத் தான் செய்தார்கள். ஆனால் நாலு நல்லவர்கள் இருக்கும் இடத்தில் நெல்லிடைப்பட்ட பதராய் ஒரு விஷச்செடியும் இல்லாமலா போய்விடும்?​

"தாலி கழுத்துல ஏறுறதுக்கு முன்னாலயே எம்புள்ளையக் காவு வாங்கிட்டாளே பாதகத்தி அவ நல்லாயிருப்பாளா? என் பெத்த வயிறு பத்தி எரியுதே......"​

மாப்பிள்ளை பையனின் தாயின் சாபமும் புலம்பலும் மதுராவின் வாழ்க்கை வேருக்கு வெந்நீரை ஊற்றியது என்றால் அது மிகையில்லை.​

அந்தத் தாயின் புத்திர சோகம் தாங்க முடியாத இழப்பு தான். ஆனால் விதி முடிந்து உயிரிழந்த மகனுக்காக, உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பலிகடாவாக்குவது எந்த ஊர் நியாயம்? பெண்ணுக்குப் பெண்ணே பகையாவது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான்.​

நல்ல விஷயங்கள் ஊரைச் சென்றடையத் தான் நாட்களாகுமே தவிர தீய சங்கதிகள் தீயை விடவும் வேகமாய் பரவி விடும் வாய்ப்புகள் உண்டு.​

அப்படித்தான் மதுராவிற்கு ராசியில்லாதவள் என்ற பட்டப்பெயரை ஊர் அவளுக்கு வெகு சுலபமாய் சூட்டி வசை பாடியது.​

"ராகவன் எதற்கும் உங்க பொண்ணு ஜாதகத்தை சரியாப் பார்த்துடுங்க. களத்திர தோஷம் இருந்தால் தான் இப்படி கட்டியவனைக் காவு வாங்கும்னு சொல்வாங்க."​

களத்திர தோஷம் கட்டியவனைத் காவு வாங்கும் சரி. நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையையுமா காவு வாங்கும் என்று திருப்பிக் கேட்கலாம் தான். விபத்தில் அடிபட்டு சாகிறவர்கள் வியாதி வந்து செத்தவர்கள் எல்லாம் எந்த தோஷத்தினால் செத்துப் போனார்கள் என்றெல்லாம் கூட அடித்து பேசி கேள்வி கேட்கலாம் தான் ஆனால் என்ன பிரயோஜனம்?​

நரம்பில்லாத நாக்குகள் நாலும் பேசத் தான் செய்தன. அந்த ஏச்சையும் பேச்சையும் பொறுக்க மாட்டாமல் வனிதா பொங்கி விட்டாள்.​

"போதுமாப்பா இப்ப திருப்தியா? பெத்த பொண்ணை நம்பாமல் அவ வேற ஜாதிப் பையனைக் காதலிச்சான்ற ஒரே காரணத்துக்காக உங்களை மீறிப் போய் கல்யாணமும் பண்ணிடுவாளோன்ற சந்தேகத்திலும் ஆத்திரத்திலும் காலத்துக்கும் நெனச்சுப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய ஒரு வைபோகத்தை இப்படிக் கடனைக் கழிக்கறாப்போல ஏற்பாடு பண்ணதுக்கு கை மேல கெடச்ச பலனைப் பார்த்திங்களா? விதி முடிஞ்சு அந்த மாப்பிள்ளை செத்ததுக்கு நம்ம மது என்னப்பா பண்ணுவா? கல்யாணம்ங்கற பேருல மதுவை உயிரோட சாகடிச்சுட்டிங்கப்பா இதற்கு மதுவை நீங்க பாழுங்கெணத்துல பிடிச்சு தள்ளியிருக்கலாம்......"​

ராகவனும் கலங்கித் தான் போனார்.​

மகளுக்குத் திருமணம் முடிக்க ஜாதகப்பொருத்தமும் ஜாதிப் பொருத்தமும் பார்த்த ராகவன் மகளுக்கு மனசு என்று ஒன்றிருப்பதை மறந்து தான் போய்விட்டார்.​

ஊரார் காளஸ்திரிக்குப் போய் பரிகாரம் செய்தால் நல்லது பிரதோஷ வழிபாடு கை மேல் பலன் தரும் என்று பலதும் சொல்லி பேசுவதற்கு வேறு விஷயமே இல்லாதது போல் மதுராவின் ராசியின்மையையேப் பிடித்துக் கொண்டு தொங்கியதில் ராகவனுக்கே அது உண்மை தானோ என்ற பிரமை உண்டாகி விட்டது​

மீண்டும் மீண்டும் அழுத்திச் சொன்னால் பொய் கூட சமயத்தில் உண்மையாகிவிடுமாம்.​

அப்படித்தான் ஒரு கட்டத்தில் மதுராவிற்குமே தன் அதிர்ஷ்டங்கெட்டதனத்தில் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை வந்து அடிபட்டுப் போனவளாய் அப்பாவின் காலில் விழுந்து கதறினாள்.​

"ப்ளீஸ்ப்பா.....எனக்குக் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம். நான் படிக்கறேன்ம்ப்பா என்னைப் படிக்க வைய்ங்கப்பா .இனிமேல் படிப்புல மட்டும் தான்ப்பா என் கவனமிருக்கும். சத்தியமா வேற எந்த தப்புத் தண்டாவிற்கும் நான் போக மாட்டேன். என்னை நம்புங்கப்பா......"​

அடேயப்பா! அப்பாவை சம்மதிக்க வைக்க மதுரா தான் எவ்வளவு பாடுபட​

வேண்டியிருந்தது?​

வெளியூரில் கல்லூரி விடுதியில் தங்கி தான் ஆசைப்பட்ட படிப்பைத் தொடர்வதற்கு மதுரா அப்பாவிடம் பண்ணிக் கொடுத்த சத்தியங்கள் தான் எத்தனை?​

அந்த சத்தியங்களிலேயே அதி முக்கியமானது அவள் தன் கனவில் கூட காதலைப் பற்றியோ அல்லது காதலனைப் பற்றியோ நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதென்பது தான்.​

அந்த அதி முக்கியமான சத்தியத்தை வேரோடு அசைத்துப் பார்க்கவென்றே வந்து நின்றான் ராஜீவ்​

 
பாவம் மது அவள் தன் மருத்துவ படிப்புக்காக அப்பாவிடம் சத்தியம் செய்து படிக்கிறாள் இப்ப மீண்டும் ராஜிவ் காதல் சொல்லி இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
Top