Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 2 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 2

மறுநாள் தன் கைபேசியின் சத்தத்தில் தான் ரிஷி கண்விழித்தான். இந்த நேரத்தில் யாரு அழைப்பது என்ற எரிச்சலில் அதை எடுத்து பார்க்க..... அழைப்பது நேகா என்றவுடன் உடனே எடுத்தான்.

“ஹாய் டார்லிங் ! என்ன காலையிலேயே போன்.... ஷூட்டிங் போகலை....”

“என்னை அப்புறம் விசாரிக்கலாம், நீங்க முதல்ல பேப்பர் பாருங்க.” நேகா படபடப்பாகப் பேச.... நேற்று அவனும் அவளும் சந்தித்ததைப் பற்றி எவனும் கிசுகிசு எழுதி இருப்பான் என நினைத்த ரிஷி, பொறுமையாகவே எழுந்து சென்று பேப்பரை எடுத்து பார்க்க....

அங்கே மூன்றாவது பக்கத்தில் அவனும் சாதனாவும் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு “எதிரி வீட்டு இள சிட்டுக்கள் இரண்டும் காதலா....” என்று தலைப்பில் ஆரம்பித்து,

“அப்பாக்கள் இருவரும் தான் எதிரிகள். பிள்ளைகள் இல்லை போல.... நள்ளிரவில் காதல் செய்யும் இவர்களின் காதல் ஜெயிக்குமா...” எனப் பாதிப் பக்கத்திற்கு ரிஷியும் சாதனாவையும் காதலர்கள் எனச் சித்தரித்து எழுத பட்டிருந்தது.

எவன்டா இப்படித் தீயா வேலை செய்தது என ரிஷி வியக்கும் போதே மீண்டும் நேகா அழைத்து விட்டாள்.

“என்ன ரிஷி இது? நைட் அந்தப் பொண்ணை எதுக்குப் பார்த்தீங்க?” நேகா கோபம் குறையாமல் கேட்க....ரிஷி எல்லாவற்றையும் விளக்கினான்.

“இப்ப என்ன ரிஷி பண்றது?”

“எதுக்கு இப்ப டென்ஷன் ஆகிற? என்ன நடந்துச்சுன்னு எங்க ரெண்டு வீட்டுக்கும் தெரியும். ரெண்டு நாள் போனா எல்லோரும் இதை மறந்திட்டு வேற பேசுவாங்க.”

ரிஷி சொன்ன சமாதானத்தை ஏற்று நேகா போன்னை வைக்க.... ரிஷி குளித்துத் தயாராகிக் கீழே வந்த போது.... அவன் வீட்டினர் அவனை எதிர்ப்பார்த்து இருந்தனர்.

“நீ பண்ணி வச்ச வேலைக்கு... நான் எல்லார்கிட்டயும் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு....இன்னும் கட்சி ஆபீஸ் போனா என்னென்ன கேட்பாங்களோ.... ” ராஜ்மோகன் ரிஷியை பார்த்து முறைத்துக் கொண்டே பேச....

“என்ன என்னவோ என்மேல தப்பு மாதிரி பேசுறீங்க? வெற்றி என்னை அடிக்க ஆள் அனுப்பினான். அதைச் சொல்ல அவன் தங்கச்சி வந்தா... சரி வந்ததுக்கு நமக்கு ஒரு உதவி பன்னட்டுமேன்னு நினைச்சேன். இப்படி ஆகும்னு எதிர்ப்பார்க்கலை...”

ரிஷி சொன்ன காரணத்தைக் கேட்டு அவன் தங்கை ப்ரீதாவிற்கு ச் சிரிப்பு வர... அவள் அதை அடக்கியபடி தந்தையும் தமையனும் பேசுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“உனக்கு உதவி செய்ய அந்தப் பொண்ணு வந்தா.... அப்ப நீ என்ன பண்ணனும் அவளைப் பத்திரமா திருப்பி அனுப்பனுமா இல்லையா.... அவளோட நைட் நேரம் தனியா கார்ல போனா.... ஊர் தப்பா தான் பேசும்.”

இதைச் சொன்ன தன் அம்மா ஜோதியை ரிஷி முறைக்க.... “அங்க என்னடா பார்வை? நீயே சொல்லு நான் கேட்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”

ராஜ்மோகனின் கேள்விக்கு ரிஷிக்குப் பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.

“எல்லாம் அவளால... அவளை யாரு வர சொன்னா...” ரிஷி கடுப்புடன் தன் கோபத்தைச் சாதனாவின் மீது காட்ட....

“அவளைக் குறை சொல்லாத... பாவம் அவ உன்னைக் காப்பாத்த தான் நினைச்சா... அதுக்கு மேல இழுத்து விட்டுகிட்டது நீ தான்.” ஜோதி பேச....

“என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும். அவ வந்ததுனால தான் இவ்வளவு பிரச்சனையும்.” ரிஷி மீண்டும் சாதனாவை குறை சொல்ல...

“சரி உனக்கு அந்த நேரத்தில அங்க என்ன வேலை?”
தன் தந்தையின் கேள்விக்கு ரிஷியால் பதில் சொல்ல முடியவில்லை....

இவருக்குத் தெரியாதாக்கும் என மனதிற்குள் நினைத்தவன், வெளியே ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“இவன் செய்யறது எதுவும் சரியில்லை... நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு... உன் பையனை பார்த்து இருந்துக்கச் சொல்லு....” எனத் தன் மனைவி ஜோதியை பார்த்து சொன்ன ராஜ்மோகன் அங்கிருந்து விரைந்து சென்றார்.


சாதனா வீட்டில் வெற்றி அங்கே வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருந்தான்.

“போச்சு... போச்சு... மானமே போச்சு.... இனி ஒவ்வொருத்தனும் என்னை நிக்க வச்சுக் கேள்வி கேட்பான். உன் தங்கச்சி அந்த நேரம் எப்படி அவன் கூடப் போனான்னு.”

“ஏய் ! நான் அவனை அடிக்கத் தான் ஆள் அனுப்பினேன். அவனைக் கொல்ல இல்ல.... அது கூடத் தெரிஞ்சிக்காம இந்த அம்மா பரதேவதை அவனைக் காப்பாத்த போய்ட்டாங்க. நான் தெரியாம தான் கேட்கிறேன், உனக்கு அவன் மேல என்ன அவ்வளவு அக்கறை?”

நேற்று இரவில் இருந்து இந்தக் கேள்வியை வெற்றி ஒரு ஆயிரம் முறையாவது சாதனாவை பார்த்து கேட்டிருப்பான். அவள் பாவமாகத் தன் தந்தையைப் பார்த்தாள்.

சந்தானத்திற்கும் மகள் மீது கோபம் தான். ஆனால் அவள் தான் அவரின் உயிர். அதுவும் தாய் இல்லாத குறை தன் மகளுக்குத் தெரியக்கூடாது என... அவள் மீது மிகுந்த பாசம் காட்டி வளர்த்தார்.

“விடு டா... அவ என்னவோ வேணும்னே போன மாதிரி சொல்ற.... நீ அவனைக் கொல்ல சொன்னியோன்னு நினைச்சு பண்ணிட்டா....”

“எல்லாம் உன்னால தான். நீ மட்டும் கொஞ்சம் அவசரப்படாம இருந்திருந்தா.... இப்படி நடந்திருக்காது.”

“எப்பவும் உங்க செல்ல மகளை விட்டு கொடுக்க மாட்டீங்களே.... ஏன் உங்க கிட்ட சொல்ல வேண்டியது தான.... இவ எதுக்குத் தனியா கிளம்பி போனா....அதுவும் வீட்டு சுவர் ஏறி குதிச்சு போய் இருக்கா....”

“அதுவும் யாருக்காக அந்த ரிஷிக்காக. அவன் நம்மை அழிக்கனும்னு சுத்திட்டு இருக்கான். போயும் போய் அவனைப் போய்க் காப்பாத்தியிருக்கா....”

“வெற்றி, திரும்பத் திரும்ப நீ கோபப்படுறதுனால நடந்தது எதுவும் இல்லைன்னு ஆகப்போறது இல்லை. முதல்ல நம்ம பொண்ணு பேரு பேப்பர்ல போட்டவனைப் போய் உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வா....”

“இனி ஒரு தரம் அவனுக்கு நம்ம குடும்ப விஷயத்தைப் பத்தி பேப்பர்ல போட தைரியம் வரக் கூடாது.”
சந்தானம் சொல்ல வெற்றி வீறுகொண்டு கிளம்பினான். வெற்றியின் ஆட்கள் பத்திரிகை அலுவலகம் சென்ற போது... அங்கே ஏற்கனவே ரிஷியின் ஆட்கள் வந்து அந்த நிருபரை இழுத்துக்கொண்டு சென்றிருந்தனர்.

“ஏன் டா உனக்குப் பரபரப்பா நியூஸ் போடணும்னா.... எவன் வீட்டு விஷயத்தை வேணா போட்டுடுவ.... யாரு என்னன்னு தெரிஞ்சிக்க மாட்ட....” ரிஷி அந்த நிருபரை மிரட்டி கேட்க....

“சார்... போட்டோ எடுத்தது மட்டும் தான் நான்னு.... எனக்கு அவங்க சந்தானம் சார் பொண்ணுன்னு தெரியாது சார். ஆபீஸ்ல போட்டுட்டாங்க சார் நான் என்ன பண்றது?”

“நான் யார் கூடவும் இருப்பேன். ஊர் சுத்துவேன் அதெல்லாம் என்னோட சொந்த விஷயம். அதை எதுக்குடா நீ போட்டோ எடுத்த... பண்றதையும் பண்ணிட்டு... உனக்குத் தெரியாதுன்னு வேற சொல்ற...” என்றபடி ரிஷி அவனை அடித்து நொறுக்கினான்.

தனக்கு முன்பே ரிஷி நிருபரை அழைத்துச் சென்றது வெற்றியின் கோபத்தை இன்னும் அதிகமாக்க... அவன் ஆட்களை அழைத்துக்கொண்டு ரிஷியை தேடி சென்றான்.

ரிஷி அவர்களின் பாக்டரியில் இருக்க... அங்கே வந்த வெற்றியை பார்த்தவன் “நானே உன்னைப் போட வரணும்னு தான் இருந்தேன். நீயே வந்திட்டியா மாப்பிள்ளை...” என்றவன், வெற்றியின் மீது பாய..... அவனும் இவன் மீது பாய... இருவர் ஆட்களும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ள.... பெரிய கைகலப்பு ஆனது.

பாக்டரியில் இருந்த வேலை ஆட்கள் ராஜமோகனுக்கும் சந்தானத்திற்கும் தகவல் சொல்ல.... இருவரும் உடனே கிளம்பி வந்தனர்.

ரிஷி வெற்றி இருவருக்கும் அதிகக் காயம். அதைப் பார்த்த இருவரின் தந்தைமாருக்கும் அவ்வளவு கோபம் வந்தது.

“சந்தானம், நீ உன் பையனுக்குச் சொல்லி வை... நியாயமா நாங்க தான் கோபப்படனும். உன் பையன் தான் முதல்ல ரிஷியை அடிக்க ஆள் ஏற்பாடு பண்ணது.”

“பின்ன உன் பையன் எங்களை எதுவுமே செய்ய விடக்கூடாதுன்னு நினைக்கிறான். அப்ப நாங்களும் என்ன பண்றது?”

“தொழில்ல போட்டின்னா அதை அதோட வச்சுக்கணும். ஆள் வச்சு அடிக்க ஏற்பாடு பண்ணா... அப்புறம் நாங்களும் சும்மா இருக்க மாட்டோம்.”
 
இதுக்கெல்லாம் எதுக்கு நீ கவலைப்படுறே, சந்தானம்?
உன் பொண்ணு சாதனாவை ரிஷிக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்து ராஜ்மோகன் பொண்ணு ப்ரீத்தியை உன் பையன் வெற்றிக்கு கல்யாணம் செஞ்சு வைச்சால் ப்ரோப்ளம் சால்வ்டு, சந்தானம்
 
Last edited:
Top