Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 31

Advertisement

daisemaran

Well-known member
Member
நீதான் எந்தன் அந்தாதி.!"
அத்தியாயம் 31

வால்பாறையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ரிசார்ட்டுக்கு திரும்பிய அபிநயாவிற்கு அங்கே மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
***

சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் வால்பாறையின் பனிபடர்ந்த அழகினை மெருகூட்டும் விதமாக அந்த ஹோட்டலில் மாலை நேர மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ரோஜா குவியலின் அருகில் செயற்கை நீரூற்றுக்கு பக்கத்தில் சிமெண்ட் இருக்கையில் வேழவேந்தனின் அம்மா லக்ஷ்மியும், கார்த்திக்கின் அம்மா சுந்தரி அம்மாளும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த காட்சியை கண்ட அபிநயாவின் கால்கள் தயங்கி முன்னேற முடியாமல் முரண்டு பிடிக்க அப்படியே சிலையாய் நின்றாள்.

இவங்க எப்படி இங்கே வந்தாங்க!! என்று ஆச்சரியப்படுவதற்கு பதில்..., இவங்க ரெண்டு பேரும் இப்படி ஒண்ணா பேசிக்கிட்டு இருக்காங்களே?? என்று அவர்களின் சந்திப்பு அபிநயாவை அதிர்ச்சியடைய வைத்தது. எப்படி இது சாத்தியம்.. வாய்ப்பே இல்லையே?? இவள் மனதில் கேள்விக்கு மேல் கேள்வி எழுந்து முகமாற்றத்தை உண்டாக்கியது.

"வாம்மா மருமகளே என்ன அங்கேயே நின்னுட்டே இங்கே வாம்மா..." என்று வாயெல்லாம் புன்னகை தழும்ப எழுந்து நின்று வரவேற்றார் சுந்தரி அம்மாள்.

சுந்தரி அம்மா எப்பவுமே இப்படித்தான். இவளை சந்திக்கும்போதெல்லாம் எழுந்து நின்று வரவேற்பது அவர்களின் குணம். என்னதான் சொந்தக்காரப் பெண்ணாக இருந்தாலும், தனக்கு வரப்போற மருமகளா இருந்தாலும் அபிநயா ஒரு பெரிய கலெக்டர், அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுக்கணும் இல்லையா? அதுவும் நாலு சுவற்றுக்குள்ளோ வீட்டுக்குள்ளோ இருந்தாலாவது பரவாயில்லை, பொது இடத்தில் சந்திக்கும் போது கண்டிப்பா மரியாதை கொடுக்கணும். இப்படிப்பட்ட கருத்து உடையவர்தான் சுந்தரி அம்மா. ஆனால் அபிநயாவிற்கோ இந்த முறை சற்று கூடுதலான மரியாதையோடு தன்னை வரவேற்றது போல் தோன்றியது.

ஆனாலும் அதையெல்லாம் கடந்தும் கூட அபிநயாவின் இதயம் குதிரை வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. காரணம், சுந்தரி அம்மாள் இங்கே வந்தது பெரிய அதிசயமில்லை. நிம்மி அத்தையும் சுந்தரி அம்மாளும் ஒரே கிளாஸ்மேட். அதுமட்டுமல்ல தூரத்து உறவும் கூட அதனால் தன்னுடைய பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு இவர்களை அழைத்திருக்கலாம். ஆனால் இந்த லட்சுமி அம்மா இங்கே எப்படி வந்தார்கள்??!! என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏன் வந்தாங்க எப்படி வந்தாங்கன்னு பெருசா கவலைப்படா விட்டாலும், இருவரும் ஒன்றாக அமர்ந்து இவளைப்பற்றி பேசி இருப்பார்களோ?? என்ற அச்சம்தான் அவளுடைய இந்த அதிர்ச்சிக்கும் தயக்கத்திற்கும் காரணம்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த மனநிலையில்தான் அபிநயாவும் இருந்தாள்.

குழப்பமான மன நிலையோடு அவர்கள் அருகில் சென்றவளின் கரத்தை பற்றி,

"அபிம்மா எப்படி இருக்க? நல்லா இருக்கியா!!..?? என்று அன்பொழுக பேசினார் சுந்தரி அம்மாள். பிறகு தனக்கு அருகில் நின்றிருந்த லக்ஷ்மி அம்மாவிடம்,

" அம்மா இவ தான் என்னுடைய மருமகள், பாக்கணும்னு ஆசைப்பட்டீங்க இல்லே நல்லா பார்த்துக்கோங்க... என்னுடைய மருமக எப்படி இருக்கிறா??" என்ற கேள்வி ஒன்றை கேட்டு வைத்தார்.

" இவங்களுக்கு என்னம்மா பாக்குறதுக்கு மகாலட்சுமி மாதிரி எல்லா ஐஸ்வர்யத்துடன் அழகா, லட்சணமா இருக்கிறாங்க.., உண்மையிலேயே நீங்க ரொம்பவும் கொடுத்து வச்சவங்க தான்..." சொல்லும்போதே லட்சுமி அம்மாவின் குரல் கரகரத்தது.

சின்ன சிரிப்போடு இவள் தன்னுடைய கைகளை ஒன்றாக இணைந்து வணங்கி விலக்கியப் போதும் இருவரின் பார்வைகள் மட்டும் விலகாமல், மனதில் இருக்கும் ஆதங்கத்தை மொழிகள் அற்ற வரிகளாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இவள் எப்படியோ ஆனால் லட்சுமி அம்மாவின் கண்கள் கிட்டத்தட்ட கலங்கி கண்ணீரை வெளிப்படுத்த தயாராகிக் கொண்டிருக்க, அந்த இரவின் தொடக்கத்தில் அவர்களின் கண்களில் மின்னிய விழி நீரை இவளால் காண முடிந்தது.

அந்தக் கண்ணீரில் வெறுப்போ.. வேதனையோ.. இல்லவே இல்லை. ஆதங்கம்.. ஆதங்கம் மட்டுமே!!, பசி வயிற்றோடு பந்தியில் அமர்ந்திருக்க பக்கத்து இலை வரை வந்த உணவு தன் இலையருகே வந்தப்போது, முற்றிலும் காலியாகி விட்டால் நம்முடைய மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு என்ன ராசியோ என் கிட்ட வரும்போதுதானா தீர்ந்து போக வேண்டும்? என்று தமக்குள் ஒரு சலிப்பு தம்முடைய துரதிர்ஷ்டம் இப்படிப்பட்ட தானே கணிப்பில் நம் மனம் தவிக்கும் அப்படியான ஒரு ஆதங்கம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

என்ன பேசுவது என்று புரியாமல் இவள் தவிக்க,

" சரிங்கம்மா மருமக ரொம்ப டயர்டா வந்து இருக்காங்க அவங்க போயிட்டு பிரஸ்சாயிட்டு வரட்டும். அதுவரைக்கும் நாம காலாற நடந்துவிட்டு வரலாம் வாங்க..." என்றாள் சுந்தரி அம்மாள். அதற்கு லக்ஷ்மி அம்மா "சரி" என்று தலையசைக்க, விட்டால் போதும் என்று அவர்கள் இருவரிடமிருந்தும் தப்பித்து தன் அறைக்கு வந்தாள் அபிநயா.

நல்ல வேளை அபிநயாவை மட்டும் ரிசார்ட்டில் தங்க வைத்துவிட்டு அவளுடைய அப்பாவும் அம்மாவும் அத்தை நிம்மியுடன் பாஸ்கர் அண்ணா வீட்டில் தங்கியிருந்தார்கள்.

இன்றைய மொத்த சந்தோஷமும் கவிழ்த்து வைத்த வெற்று குடமாய் காணாமல் போய்விட, மனதின் சோகம் உடம்பில் சோர்வை வெளிப்படுத்த,

முதலில் யோகா, யோகாவிற்கு பின் சிறு குளியல் என அன்றாட பழக்கத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய அறைக்கதவை திறந்து உட் புகுந்தாள்.

அந்த அறை ஏ . ஸி . செய்யப்பட்டிருப்பது போல் இதமாக இருந்தது . அந்தப் பெரிய அறையில் , ஒரு மூலையில் அழகான மெத்தையுடன் கூடிய படுக்கை . அதன் மேல் தூய வெண்ணிற விரிப்பு , தலையணை. அறை முழுதும் தரையை மறைத்து பதிக்கப் பட்டிருந்த மிருதுவான கார்ப்பெட், ஒரு மூலையில் பாத்ரூம் இணைப்புடன் கூடிய டாய்லெட். இன்னொரு மூலையில் ஒருபக்க சுவரை ஒட்டி , எழுதுவதற்கும் படிப்பதற்கும் வசதியாக பெரிய டேபிள். அதன்மேல் டேபிள் விளக்கு. அவசரத் தேவைக்கு என்று டெலிபோன். அதன் அருகே இரண்டு நாற்காலிகள். மூன்று பேர் உட்காரக் கூடிய சோபா ஒன்று, சுவரில் பொருத்தப்பட்டிருந்த அழகான கடிகாரம். அதில் பொருத்தப்பட்டிருந்த மரத்திலான இரண்டு சிட்டுக்குருவிகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மணிக்கு ஒருமுறை முத்தமிட்டுக் கொள்ளும் மோன நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ரிசார்டின் முன்பக்கத்தைப் பார்க்கும் வசதியுடன் இரண்டு கண்ணாடி ஜன்னல்கள். திரைச்சீலைகளை விலக்கி விட்டு கண்ணாடி கதவை திறந்தால் சில்லென்று முகத்தில் மோதும் பனிக்காற்று அதில் பரவிவரும் தேயிலைச் செடியின் மணம் நாசியைத் தாக்கி இதயத்திற்கு இதம் கூட்டியது. கிட்டத்தட்ட நட்சத்திர ஹோட்டல் அறையில் உள்ளது போன்ற வசதிகள். அறையில் மெலிதான நறுமணம். ஏதாவது ' ஸ்ப்ரே உபயோகப் படுத்தியிருக்க வேண்டும் . அந்த சோர்வான மனநிலையிலும் அபிநயாவால் இதையெல்லாம் ரசிக்க முடிந்தது .

யோகாவை முடித்துக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தவள் ' ஷவருக்கு முன் நின்று தண்ணீரைத் திறந்தாள். இதமான சூட்டுடன் தண்ணீர் உடம்பில் பட்டது. வெந்நீர் மற்றும் சாதாரண தண்ணீர் அது தேவையென்றாலும் , நமது தேவைக்கேற்ப கலந்துகொண்டு உபயோகிக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஆனாலும் அந்த ஊரின் சூழ்நிலை எப்போதுமே வெந்நீரின் தேவைதான் அதிகமாக இருக்கும் என்று எண்ணினாள்.

' ஷவரிலிருந்து வெளிப்படும் தண்ணீரின் வெப்பத்தைச் சரிசெய்ய ' ரெகுலேட்டர்கள் இணைக்கப்பட்ட குழாய் அமைப்பு . . சலவை செய்யப்பட்ட துண்டு தயாராக இருந்தது . ' ராஜபோக வாழ்க்கைதான் என்று தோன்றியது. ஆனால் அது சுகபோக வாழ்க்கையில்லை. எப்போதுமே கவனத்துடன் இருக்கக்கூடிய வெறும் வசதி செய்யப்பட்ட . சிறைவாழ்க்கை என்று அடுத்த நிமிடமே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.

குளியலை முடித்து இரவு உடையை அணிந்து, அதற்கு மேல் குளிருக்கு இதமாக ஒரு ஸ்வெட்டரையும் அணிந்துகொண்டு, அபிநயா அறையை விட்டு வெளியில் வந்த போது பாஸ்கர் இவளுக்காக காத்திருந்தான்.

"என்னம்மா வால்பாறை எல்லாம் சுத்தி பார்த்தாச்சா!!? என்னால தான் உங்க கூட வர முடியல, பங்க்ஷன் மட்டும் இல்லேன்னா கண்டிப்பா வந்து இருப்பேன் ரொம்ப சாரிம்மா."

" சாரி எல்லாம் எதுக்கு அண்ணா சொல்றீங்க..? இது என்ன புது இடமா? ஏற்கனவே இரண்டு முறை வந்த இடம் தானே!! உங்க கல்யாணத்தப்ப ஒருமுறை வந்தேன் அப்போ சின்ன பிள்ளையாய் இருந்தேன். அதுக்கப்புறம் இரண்டாவதாக வேலையில ஜாயின் பண்ணின புதுசுல ஒரு முறை இங்கே வந்திருக்கேன். மலை வாழ் மக்களிடம் கோரிக்கைக்கையை ஏற்று பார்வையிட ஒரு முறை வந்திருக்கிறேன். அதனாலே அறிமுகமான இடம் பழக்கமான மக்கள்தான் ஒன்னும் பிரச்சினை இல்லை.." என்று புன்னகைத்தாள்.

".........."

" ஓகே நா நான் ஒரு வாக் போயிட்டு வரேன்னு வந்து நைட் டின்னர் சாப்பிடுறேன்."

"கார்த்திக் சாரோட அம்மா வந்திருக்காங்க பார்த்தீங்களாம்மா...?"

" வரும்போது பார்த்தேன் அண்ணா..."

" உங்களுக்கு என்ன டிபன் வேணுமுன்னு சொல்லிட்டீங்கன்னா நீங்க வரதுக்குள்ளே ரெடி பண்ண சொல்லிடுவேன்..?"

"நைட்ல ஹெவியா எதுவும் வேணாம்ணா, 'நாண், அல்லது சப்பாத்தியை' இப்படி ஏதாவது ஒன்னு இருந்தா போதும்..."

" சரிம்மா தலைக்கு ஸ்கார்ப் கட்டிக்கோங்க, பனி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க..."

"சரி" என்ற தலையசைத்து விட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள் அபிநயா.

கொஞ்ச தூரம் நடந்த பிறகு தான் பாஸ்கர் அண்ணாவிடம் லட்சுமி அம்மாவை பற்றி கேட்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருப்பாரோ? என்ற சந்தேகம் தலை தூக்கியது.

சரி திரும்பி வரும்போது ஞாபகமாக இதை பற்றி அவரிடம் விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் சுந்தரி அம்மாளிடமாவது இதை பற்றி கேட்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

உள்ளன் ஸ்கார்ஃப் ஸ்வெட்டர் இவற்றை தாண்டி பனிக்காற்று முகத்தில் ஊசியாய் இறங்கியது. சற்று தூரம் நடந்தவள் தொடர் தும்மலால் தொடர்ந்து நடக்க முடியாமல் தங்கியிருந்த இடத்திற்கே திரும்பினாள்.

கையில் வைத்திருந்த செல்போனின் அழைப்பை உணர்ந்து ஆன் பண்ணி காதில் வைத்த போது மறுமுனையில் அமைச்சர் பேசினார்.

"என்னம்மா லீவுல இருக்கீங்களா? வால்பாறைக்கு போயிருக்கிறதா சொன்னாங்க இப்ப பேசலாமா ஃப்ரீயா இருக்கீங்களா...?"

" வணக்கம் சார் ப்ரியா தான் சார் இருக்கேன் சொல்லுங்க சார், ஏதாவது முக்கியமான விஷயமா சார்...?"

"ஆமாம் நீங்க இருக்கிற இடத்துலதான் ஒரு விபத்து நடந்திருக்கு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எம்எல்ஏ, எல்லாம் ஸ்பாட்ல தான் இருக்காங்க. நீங்களும் ஒருமுறை போய் பார்த்திட்டீங்கன்னா நல்லா இருக்கும். இப்ப போகவேண்டாம் காலையில போனா போதும்..." என்றார் அமைச்சர்.

"ஷ்யூர் சார்... காலையில ஸ்பாட்டுக்கு போய்ட்டு என்னென்னு பார்த்துட்டு அங்கிருந்தே உங்க கிட்ட பேசுறேன் சார். மத்த டீடைல் எல்லாம் இங்க நானே கலெக்ட் பண்ணிக்கிறேன் சார்.." என்று அமைச்சரிடம் சொல்லிவிட்டு வேகவேகமாக தன்னுடைய அறைக்கு வந்து லேப்டாப்பை எடுத்து அங்கு நடந்த விபத்து பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி படித்துப் பார்த்தாள். அடுத்து எம்எல்ஏவை தொடர்பு கொண்டு அவரிடம் பேசினாள். லோக்கல் இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது, அவர் சொன்ன தகவல் இதுதான்.

"அதாவது வால்பாறை குருமலை காட்டுபட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 22 பேர் அங்கிருக்கும் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர்.

காடம்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மினி லாரியின் ஓட்டுநர் ராமுவுக்கு ஓட்டுநர் உரிமமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மலைகிராமங்களில் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புற மக்கள் மினிவேன்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

அங்கே போதுமான வசதிகள், மருத்துவ வசதிகள் இல்லாததால் இது போல் நிறைய உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. என்று வேதனையுடன் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். அரசு தமிழக மலைவாழ் மக்கள் நலன் கருதி இனியாவது மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்." என்றார் உள்ளூர் இன்ஸ்பெக்டர்.

அடுத்து வால்பாறை தாசில்தாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினாள். ஒருவழியாக அந்த விஷயத்தை பற்றியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தர்வர்களின் உடல் நலத்தைப் பற்றியும் விசாரித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் பேசி முடித்துவிட்டு, ஒருவழியாக அவள் தூங்க சென்றபோது மணி பனிரெண்டு கடந்திருந்தது. நல்ல வேளை இவள் ஏதோ முக்கியமான வேலையில் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட பாஸ்கர் அண்ணா அவள் அறைக்கே உணவை கொடுத்து அனுப்பினார். ஒரே ஒரு சப்பாத்தி ஒரு கிளாஸ் பாலோடு இரவு உணவை முடித்துக் கொண்டாள். தூங்குவதற்கு முன் அறைக்கு வந்து குட்நைட் சொல்லிவிட்டு போனார் கார்த்திக்கின் அம்மா சுந்தரி.

அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து துரிதகதியில் ரெடியானவள் டிரைவரை அழைத்து காரை எடுக்க சொன்னாள். சற்று நேரத்தில் காரில் ஏறி அமர்ந்து அந்த ரிசாட்டை விட்டு வெளியில் வந்தபோது எதிரில் கார்த்திக்கின் கார் வருவதை கவனித்தாள்.

டிரைவரிடம் காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி விட்டு கீழே இறங்கினாள் இவளை கவனித்த கார்த்திக்கும் காரின் வேகத்தை குறைத்து உள்ளே செல்லாமல் காரை ஓரம் கட்டினான்.

" ஹலோ குட்மார்னிங் அபிநயா எப்படி இருக்கீங்க எங்க அவசரமா கிளம்பிட்டீங்க...?" என்று கார்த்திக் ஆர்வத்துடன் கேட்டான்.

அந்த விபத்தை பற்றிய விவரத்தை சொல்லி விட்டு அங்கேதான் போகிறேன் என்றாள் அபிநயா.

" ஓகே ஓகே நேத்து வரைக்கும் இங்க வர்ற ஐடியா இல்லை. அம்மா தான் ரொம்ப போஸ் பண்ணி வர சொன்னாங்க, சரி ஊரை சுத்தி பார்த்துட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலான்னு கிளம்பி வந்துட்டேன். நான் வந்த நேரம் நீங்களும் கிளம்பி போயிட்டு இருக்கீங்க.. ஓகே நமக்கு வேலை தான் முக்கியம் போயிட்டு வாங்க வந்தவுடன் பேசிக்கலாம்."

" ஓகே கார்த்திக் நான் போயிட்டு அனேகமா லஞ்சுக்கு வந்துடுவேன் வந்தவுடனே மீட் பண்ணலாம். இங்கேதானே தங்கப்போறீங்க...?"

"ஆமாம்... அபிநயா உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா? நான் வேணும்னா கூட வரட்டுமா...?" என்றான் தயக்கத்தோடு.

" அதெல்லாம் ஒன்னும் வேணாம் கார்த்திக். இந்த ஊர் என்னுடைய மாவட்ட எல்லைக்குள் தான் வருது. ஆல்ரெடி எம்எல்ஏ, எஸ் பி, இன்ஸ்பெக்டர், எல்லாம் ஸ்பாட்ல இருக்காங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல நானே போயிட்டு வந்துடுறேன். நீங்க இப்ப தானே வர்ரீங்க உங்களுக்கு எதற்கு வீண் அலைச்சல்? நீங்க ரெஸ்ட் எடுங்க ஓகேவா...?" என்று சொன்னாளே தவிர கார்த்திக் வந்தால் கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் என்று எண்ணியது அவளின் மனம்.

சுமார் அரை மணி நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் அபிநயா. அங்கிருந்த மற்ற அதிகாரிகள் இவளிடம் வந்து விபத்து நடந்த இடத்தையும் அதற்கான காரணத்தையும் விளக்கி சொல்லவும் மீடியாக்களும் தினசரி நாளிதழ்களும் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்ன அபிநயா இறந்தவர்களுக்கு அரசிடமிருந்து பணம் பெற்று தருவதாக உறுதியளித்தாள். மேற்கொண்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சைக்கான முழுத் தொகையும் அரசாங்கமே ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்துகு உரிய தொகையை பெற்று தருவதாக உறுதியளித்தாள்.

அபிநயாவை பார்த்தவுடன் அங்கு நின்றிருந்த மலைவாழ் மக்கள் கூட்டமாக இவளை சூழ்ந்து கொண்டார்கள். அதை கவனித்த காவல்துறையினர் மக்களை விலகிப் போகுமாறு கூறினார்கள்.

" பரவாயில்ல அவங்களை விடுங்கள் அவங்க சொல்ல வந்ததை சொல்லட்டும்." என்றாள் அபிநயா. அவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சொல்லி கண்ணீர் சிந்தினார்கள்.

அமைதியோடு அவர்கள் சொல்வதை செவிமடுத்தாள் அபிநயா.

கூட்டத்தில் ஒரு இளைஞன் முன்வந்து,

"உயிர் பயத்துடன் தினம் தினம் செத்து பிழைத்து வாழ்வதற்கு எதற்கு எங்களுக்கு அரசும் ஆட்ச்சியாளர்களும் நாங்கள் எங்கள் முன்னோர்களின் பாதையில் வாழ்வதே மேல் என்று அந்த இளைஞன் தன் கண் முன்னே தனது மக்கள் சாவதை தடுக்க முடியாத கோபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

கலெக்டரிடம் அளித்த மனு: உடுமலை, வால்பாறை தாலுகா எல்லைகளில், ஆயிரத்துக்கும் அதிகமான புலையர் இன மக்கள் வசிக்கிறோம். ஆதிவாசிகளான எங்களை, பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும். மின்வசதி ஏற்படுத்த வேண்டும்.இலவச ஆடுகள், தாட்கோ திட்டத்தில் கடனுதவி வழங்க வேண்டும். காடாம் பாறை, கரட்டூர், திருமூர்த்திமலை, அமராவதி பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியை, 8ம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும், என்று
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனமலைத் தொடர் அனைத்து ஆதிவாசி பழங்குடி மக்கள் அமைப்பச் சேர்ந்தவர்கள் கூறுகையில்,

'மக்கள்தொகையில் மத்திய அரசின் வனநிலை உரிமை அங்கீகார சட்டப்படி குடிமனை, பாரம்பரிய விவசாய நிலங்கள், சமுதாய வன உரிமைக்கான பட்டாவை உடனே வழங்கவும், கடந்தாண்டு ஏற்பட்ட கன மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நாகரூத்து, கல்லார் கிராமங்களுக்கு மாற்று இடம் மற்றும் நிலம் வழங்க கோரியும்.

மேலும், அனைத்து வன கிராமங்களையும் வருவாய் கிராமமாக மாற்றி வன உரிமைச்சட்டத்தின் படி மாற்றம் செய்து குடிநீர், சாலை வசதி, மின்சாரம், கழிப்பிடம், கல்வி சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.


போராட்டம் குறித்த பேச்சு வார்த்தை வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது மேடம். தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், வால்பாறை எம்.எல்.ஏ., மற்றும் வனத்துறை அதிகாரிகள், பழங்குடியின மக்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். வனத் துறை அதிகாரிகள் பேசும் போது, 'பழங்குடியின மக்களின் கோரிக்கை, 15 நாட்களில் படிப் படி யாக நிறைவேற்றப்படும். எனவே, போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்,' என்றனர்.

ஆனால், பழங்குடியினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.பழங்குடியின மக்கள் நலவாழ்வு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'மத்திய அரசு அறிவித்துள்ளபடி பழங்குடியின மக்களுக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ், பட்டா வழங்க வேண்டும்.

அதிகாரிகளின் பேச்சை நம்பி ஏற்கனவே மூன்று முறை போராட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை திட்டமிட்ட படி வால்பாறையிலிருந்து கோவைக்கு, பழங்குடியின மக்கள் 500 பேர், 120 கி.மீ., துாரம் நான்கு நாள் நடைபயணமாக சென்று, கலெக்டரிடம் மனு கொடுப்பதாக திட்டமிட்டு இருந்தோம் நல்ல வேலை நீங்களே எங்கள் இடத்திற்கு வந்து விட்டீர்கள். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்,' என்றார்.

அது மட்டுமல்ல எங்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். எங்களுடைய பெண்பிள்ளைகள் தனித்து எங்கேயும் சென்றுவர முடியாத இக்கட்டான சூழ்நிலைகளில் இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் அதிகமாக பாதிக்கப்படுவோர் சிறு பிள்ளைகளாக தான் இருக்கிறார்கள். அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறது என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு என்றார் ஒரு பெரியவர்.

"அரசு அப்படியெல்லாம் அலட்சியம் காட்டாது. பாதிக்கப்பட்ட சிறு பிள்ளைகளாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அதற்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்பதில் அரசுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதற்கான முயற்சியை நானும் எடுக்கிறேன். பெண்களிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். தோல்விகளை கண்டு ஒரு போதும் துவண்டு போகக்கூடாது.
எல்லா பிரச்னைக்கும் தீர்வு காண சட்டத்தில் வழி வகை உண்டு. பெண்களுக்கு ஏற்படும் எந்த விதப்பிரச்னையானாலும் என்னிடம் தொலைபேசியிலோ, நேரிலோ தெரிவிக்கலாம்.
சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது. பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவிகள் படிக்கும் வயதில் திருமணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்று அறிவுரை வழங்கினாள் ஒருவழியாக மதியம் ஒரு மணி ஆகிவிட,

" மேடம் நீங்க ஏதாவது சாப்பிடுறீங்களா...?" என்று கேட்டார் அந்த தொகுதி எம் எல் ஏ.
அப்போதுதான் அபிநயா விற்கு சாப்பாட்டு நினைவே வந்தது.

" இல்ல சார் நான் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறேன்..."

என்று அங்கிருந்து கிளம்பி காரில் வரும்போது சற்று தூரத்தில் சாலையின் நடுவில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. டிரைவர் காரின் வேகத்தை குறைத்து ஹாரனை அலற விட்டார். அடுத்த நிமிடம் அங்கிருந்த யானைகள் ஆளாளுக்கு ஒரு திசையை நோக்கி ஓட ஒரு யானை மட்டும் காரை நோக்கி வேகமாக வந்து தன் தும்பிக்கையால் காரின் முன் புற கண்ணாடியை அடித்து உடைத்தது. அந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர் பார்க்காத அபிநயா, கார்டிரைவர் இருவரும் குரலை உயர்த்தி கூச்சலிட்டனர்.
 
Last edited:
Top