Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-27

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-27

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:

"சாய்பாபா காலனியில் ஸ்டேட் பேங்க் எதிரில் மிக பிரம்மாண்டமாய் இருக்குமே அந்த ஹோட்டலாம்மா...?." என்று கேட்டார் கால் டாக்சி டிரைவர்.

" ஆமாங்க அதே ஓட்டல் தான் கொஞ்சம் சீக்கிரமா போங்க..."என்றவள் கால் டாக்ஸியில் ஏறி அமர்ந்தவுடன் கார்த்திக்கு போன் பண்ணி வந்துகிட்டே இருக்கேன் 20 மினிட்ஸ்ல வந்துருவேன் என்றுதான் வருவதை அபிநயா கன்ஃபார்ம் பண்ணினாள்.

சரியாக இருபது நிமிடங்களில் கார்த்திக் வர சொன்ன 'நம்ம வீடு வசந்த பவன்' ஹோட்டலில் போய் இறங்கினாள் அபிநயா.

முதலில் வரவேற்பது ஸ்வீட் ஸ்டால் மற்றும் பார்சல் பகுதி. அதை கடந்து சென்ற போது,
வெயிட்டிங் ஹாலில் இவளுக்காக காத்திருந்தான் கார்த்திக்.

"ஹலோ...ஹாய்..."என்று இருவரின் முகமும் மலர, ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்தப்படி, உள்ளே சென்றனர்.

ஆட்டோமேடிக் கதவுகள் திறக்க, ஏசியின் சில்லிப்பை உணர்ந்தபடி உள் நுழைந்தார்கள்.

" வாங்க மேடம் வணக்கம் மேடம் நல்லா இருக்கீங்களா...?" எதிர்ப்பட்ட ஒரு நபர் இவளை விசாரிக்க,

" நல்லா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.." என்று முகமலர்ச்சியோடு அவருக்கு பதில் சொல்லியபடி கார்த்திக்குடன் இணைந்து நடந்தவள்.,

" என்ன தெரிஞ்சு வச்சிருக்கார் ஆனா எனக்கு அவரை யாருன்னு தெரியல…?" என்று கார்த்திக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில் கூறினாள்.

" மேடம் நீங்க ஒரு விஐபி இந்த மாவட்டத்துக்கே கலெக்டர் அம்மா. உங்களை யாருக்காவது தெரியாம இருக்குமா? உங்க கூட வரத்துக்கு எனக்கு தான் கொஞ்சம் பயமா இருக்கு?" என்று பயப்படுவது போல் முக பாவனை செய்தான்.

" எங்கூட வரதுக்கு நீங்க எதுக்கு பயப்படனும்..? என்று புன்னகை மாறாமல் கேட்டாள் அபிநயா.

" அது வேற ஒண்ணுமில்லேங்க அபிநயா "நம்ம ஊரு கலெக்டர் ஒரு அழகான இளம் வாலிபனோடு மிகவும் நெருக்கமாக நடந்து சென்றார்!!" என்று எவனாவது ஒருத்தன் கண்ணுலே நாம மாட்டி அதை போட்டோ எடுத்து பேப்பரில் போட்டு விடுவார்களோன்னு பயமாகவே இருக்கு அதனால கொஞ்சம் டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ணலான்னு நினைக்கிறேன்."என்று முகத்தை சீரியஸாக வைத்தப்படி கூறினான் கார்த்திக்.

கார்த்திக்கின் அந்த செய்கையை பார்த்த அபிநயாவுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்தது.

"கார்த்திக் ரொம்ப எக்ஸ்ட்ரிமா யோசிக்கிறீங்க.. கார்த்திக் உங்களுடைய இந்த நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு.." என்றாள் புன்னகையோடு.

" அப்படியா தேங்க்யூ.. தேங்க்யூ..!!"

இருவரும் பேசிக்கொண்டே உணவக ஏரியாவுக்குள் நுழைந்தார்கள். மிக விசாலமாக இருந்தது ஹால். இன்டீரியர் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். சீருடை அணிந்த யுவதிகள் அழகாய் பரிமாறிக் கொண்டிருக்க,. சோபாக்கள் இடப்பட்ட டேபிள்கள் அனைத்தும் நிரம்பியிருந்தன.

இருக்கைகளை அதிகம் பெண்மணிகளே ஆக்ரமித்து இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரு டேபிளை அடைந்தனர். முதலில் மெனு கார்டு இல்லை.. இல்லை.. ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு போனார் சீருடை அணிந்த சர்வர் ஒருவர். புரட்டிப் பார்த்ததில் சைவத்தில் இத்தனை மெனுக்களா என ஆச்சர்யப்பட்டு போனான் கார்த்திக்.

"இந்த ஹோட்டல் இங்கு ரொம்பவும் ஸ்பெஷல்..,கார்த்திக், நான் அப்பா,அம்மாவோடு இரண்டு மூன்று முறை இங்கே வந்திருக்கிறேன்..'" என்றாள் அபிநயா.

"ஓ....!!"

" சார்...ஸ்டார்டரில் இருந்து ஐஸ்கிரீம் வரைக்கும் அத்தனையும் இருக்கிறது." என்று மெனு புத்தகத்தை கொடுத்துவிட்டுப் போன இரண்டாவது நிமிடமே சர்வர் கையில் டேப்போடு வந்து நிற்க,

"என்ன பாஸ்..இவ்ளோ பெரிய புத்தகத்தை படிக்க வேணாமா..போய்ட்டு லேட்டா வாங்க..." என அவரை அனுப்பிவிட்டு, ஆற அமர எல்லா மெனுக்களையும் பார்த்தபின், அபிநயாவை பார்த்து,

" ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாமா...?" என கார்த்திக் கேட்க, அதையே முடிவு செய்து ஆர்டரும் செய்தனர்.

முதலில் வெஜ் கார்ன் சூப் வந்தது.அதை முடித்தவுடன் தட்டில் வாழை இலை போட்டு அழகாய் வரிசையாய் பொரியல், குழம்பு சாம்பார் ரசம் இருக்கிற கிண்ணங்கள் ஒரு பத்து பன்னிரண்டு வைக்கப்பட்டு, நடுவில் ஒரு சப்பாத்தியும் இருக்க, அந்த தட்டினை டேபிளில் வைத்துவிட்டு போக, கூடவே பெரிய அப்பளம் ஒன்றும் ஒரு கிண்ணத்தில் சாதமும் வந்து சேர்ந்தது. எதையாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்.

இவள் அவன் பேச்சை செவி மடுத்ததோடு சரி, மற்றப்படி அமைதியாகவே சாப்பிட்டாள்.

கடைசியாக பாசிபருப்பு பாயசம் சுவையோ சுவை.பாசிப்பருப்புடன் சுண்டலை உடைத்து வேக வைத்து சேர்த்திருக்கிறார்கள்.செம டேஸ்டாக இருக்கிறது.-நடு நடுவே திராட்சை பல்லில் பட செம டேஸ்டாய் இருக்கிறது. எனக்கு பாசிப்பருப்பு பாயாசம் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு செய்ய தெரியுமா அபிநயா" என்றான்.

ஆனால் அவன் பேச்சையோ!! அவன் கேள்வியையோ!! இவள் கவனிக்காமல் சாதத்தை கொறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சிந்தனை மட்டும் சிறகில்லாமல் பறந்து வேறு எங்கோ சென்று அமர்ந்தது.

"அபிநயா... பாசிப்பருப்பு பாயாசம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி சாப்பிடனும் தெரியுமா.. சூடா சாப்பிடக்கூடாது. ஃபிரிஜ்ல வச்சி சில்லுனு எடுத்து சாப்பிடனும்..." என்று ஒரு முறை வேழவேந்தன் சொன்னது நினைவுக்கு வந்தது.

"ஏய்...அது என்ன ஐஸ்கிரீம்மா ஃபிரிஜ்ல வச்சு சாப்பிட...? அது பயாசம். சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்." என்று வேழவேந்தன் சொன்னதை மறுத்து அவனோடு வாக்குவாதம் பண்ணியது அபிநயாவுக்கு நினைவுக்கு வந்தது.

என் மனம் ஏன் இப்படி எல்லாம் நினைக்க வைக்கிறது. முடிந்துபோன விஷயத்தை எல்லாம் நினைத்து இருக்கிற நிம்மதியை கெடுத்துக் கொள்கிறேனே...? எனக்குள் எப்போதும் ஒரு விதமான விவரிக்க முடியாத உள்ளுணர்வுகளின் தொகுப்பு இருந்துகொண்டே இருக்கிறது, அது என்னால் நம்பப்படும் விஷயங்கள், என் முன் நடக்கும், நடந்த மற்றும் என்னால் நடத்தப்படும் நிகழ்வுகள் இவை அனைத்தும் அடங்கிய காரணிகளாகவே இருக்கிறது.

" என்ன அபி சைலன்டா ஆயிட்டீங்க..ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்களா...? வெண்ணிலா ஐஸ்கீரிம் விலை கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது." என்றான் கார்த்திக்.

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் இருந்து சிலர் வந்து சாப்பிட இடமில்லை என்று திரும்பி செல்வதை கவனித்த இருவரும் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பிட வேண்டும் என்ற முடிவோடு சாப்பிட்டதற்கே உரிய பணத்தை செலுத்தி விட்டு வெளியில் வந்தார்கள்.

"அபிநயா எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா...? என்றான் கார்த்திக்."

" சொல்லுங்க கார்த்திக் என்ன ஹெல்ப் வேணும்...?"

" அது வந்து அண்ணனுக்கு அண்ணிக்கும் நாளைக்கு மறுநாள் வெட்டிங் டே அண்ணிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கி தரனும். அண்ணனுக்கு ஆல்ரெடி வாங்கிட்டேன். ஆனா இந்த லேடிஸ் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒன்னும் தெரியாது. அதுதான் நீங்க கூட வந்தீங்கன்னா அண்ணிக்கு ஏதாவது வாங்கலாம். ஒரு ஹாஃப் அன் ஹவர் ஸ்பென்ட் பண்ண முடியுமா?" என்றான் கார்த்திக்.

"ஓகே நோ ப்ராப்ளம் கார்த்திக் ஆனா என்ன வாங்க போறீங்க அப்படின்னு சொன்னா தான் அதுக்கு தகுந்த மாதிரி கடைகளை செலக்ட் பண்ணலாம்..."

" அதுதான் என்ன வாங்குவது என்று தெரியல நீங்க ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்களேன் என்னுடைய பட்ஜெட் ஒரு பத்தாயிரத்துக்குள்ளே..."

" அப்போ சில்க் சாரி ஏதாவது எடுக்குறீங்களா சாப்ட் சில்க் சொல்வாங்களே அந்த மாதிரி மெட்டீரியல்..."

" ஓகே அபிநயா அந்த பொறுப்பு உங்களுடையது நீங்களே கலர் எல்லாமே செலக்ட் பண்ணிடனும் எந்த இடம் சொல்லுங்க கால் டாக்ஸி புக் பண்றேன்."

அபிநயா சொன்ன கடைக்கு ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி இருவரும் சென்று அங்கே நான் இறங்கியபோது கடைக்கு உள்ளே இருந்து வெளியில் வந்தார் சைக்ரியாடிஸ் டாக்டர் மாதவி.

" ஹாய் மேடம் எப்படி இருக்கீங்க ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க என்று இருவரும் மாற்றி மாற்றி விசாரித்துக் கொண்டனர்.

"இந்த பக்கம் அதுவும் நீங்க...?"

" ஒரு சில்க் சாரி எடுக்கணும்..."

" இவர் யார் உங்க...?

" எங்க ஃபேமிலி பிரெண்ட் பேரு கார்த்திக் இவருடைய அண்ணிக்கு ஒரு சாரி எடுக்கணும் அதுக்காகத்தான் வந்தோம்..."

"ஓகே ஓகே நான் வேற என்கிட்ட சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டீங்களோன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன். அது எப்படி நான் இல்லாம உங்களுக்கு கல்யாணமா...?" என்று அபிநயாவின் காதருகே குனிந்து கிசுகிசுத்தாள். அந்த அந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் மாதவி.

தர்ம சங்கடத்துடன் நெளிந்தாள் அபிநயா.

"ஓகே அபிநயா உள்ள போய் பர்ச்சேஸ் பண்ணிக்கிட்டு இருங்க, என்னுடைய மொபைலை காரிலேயே விட்டுட்டு வந்துட்டேன் அதை எடுத்துட்டு வந்துடுறேன்." என்று கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள் அந்த மாதவி டாக்டர்.

பெண்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க சற்று தள்ளி நின்று யாருக்கோ கால் பண்ணி கொண்டிருந்தான் கார்த்திக்.

அபிநயாவை பார்த்துவிட்டு அருகில் வந்து " பேசி முடிச்சாச்சா கடைக்கு உள்ள போகலாமா...?" என்றான்.

சரி என்று தலையசைத்தப்படி அவனுடன் கடைக்குள் சென்று சுமார் பத்து நிமிட தேடலில் ஒரு அழகான மயில் வண்ண நிறத்தில் சாஃப்ட் சில்க் சாரியை தேர்வு செய்தாள். அதுவரை அவன் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தான். புடவையைத் தேர்ந்தெடுத்து கொண்டு பில் போடும் செக்கனுக்கு சென்றபோதுதான் அவளோடு இணைந்து கொண்டான்.

"இந்த ரெண்டு புடவையும் சேர்த்து பில் போடுங்க..." என்று தன்னுடைய கையில் வைத்திருந்த இரண்டு புடவைகளை எடுத்து அவன் பில் செக்ஷனில் கொடுக்க இவள் யோசனையோடு அவன் முகத்தை ஏறிட்டாள்.

அவன் பில் போட்டு முடிக்கும் வரை இவள் பக்கம் திரும்பவே இல்லை ஓகே கிளம்பலாமா என்று வெளியில் வந்தபோது,

"அபிநயா அம்மாவுக்கு ஒரு சாரி எடுத்தேன் அப்படியே உங்களுக்கும் ஒரு சாரி எடுத்திருக்கேன். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்குங்க இது என்னுடைய பஸ்ட் கிப்ட் ப்ளீஸ் தயவுசெய்து மறுக்கக்கூடாது.." என்று அந்த புடவையை அவளிடம் நீட்டினான்.

"வேண்டவே வேண்டாம்... ப்ளீஸ் கார்த்திக்... இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கல்யாணத்துக்கு அப்புறமா வேணும்னா வாங்கிக்கிறேன் இப்போதைக்கு இது மாதிரி வாங்குவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல, என்னுடைய மன நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க...'" என்று இவள் மறுத்து கொண்டிருக்க, அவன் நீட்டிய கையை மடக்காமல் அப்படியே நிற்க அந்த கேப்பில் இவர்கள் அருகில் வந்தாள் டாக்டர் மாதவி.

" வாங்கிக்கோங்க அபிநயா உங்களுக்கு இந்த சாரியை கட்ட பிடிக்கலேன்னாலும் சும்மாவாவது வச்சுக்கோங்கோ..." என்றான் பிடிவாதமாக.

வேறுவழியின்றி அதை கையில் வாங்கியவள்,

"அப்போ நான் இப்படியே கிளம்பறேன்..." என்றாள்.

" நல்ல வேளை சாரியை வாங்கிகிட்டீங்க, ரொம்ப தேங்க்ஸ் அபிநயா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எங்கே நீங்க வேணாம்னு சொல்லி விடுவீங்களோன்னு தயக்கமா இருந்துச்சு..." என்றான் மலர்ந்த முகத்துடன்.

எப்படியாவது கார்த்திக்கிடம் தன்னுடைய பழைய காதலை பற்றி சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்த அபிநயா கார்த்திக்கின் ஜாலியான முக பாவனையை கவனித்துவிட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் தயங்கி நின்றாள்.

" அபிநயா நாளைக்கு ஒரு ப்ரோக்ராம் இருக்கு நாளை சண்டே தானே முடிஞ்சா வந்து கலந்து கொள்ளுங்களேன். ஏன்னா கமிஷனர் உங்கள பாக்கணும் னு சொன்னாரு அவருக்கு ஆல்ரெடி உங்கள தெரியுமாம். இருந்தாலும் இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கலாம் என்று பார்க்கிறேன். அதனாலதான் நீங்க வந்தீங்கன்னா நல்லா இருக்கும்.."

" நாளைக்கு எத்தனை மணிக்கு ப்ரோக்ராம் கார்த்திக்...?"

" ப்ரோக்ராம் காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு ஏழு மணி வரைக்கும் இருக்கு. ஆனா நீங்க அவ்வளவு சீக்கிரம் வர வேணாம் ஈவினிங் நாலு மணி போல வந்தா கூட போதும் ." என்றான்.

" சரி.. 'போர் ஓ கிளாக்'.. வரேன் அட்ரஸ் மட்டும் கொஞ்சம் மெசேஜ் பண்ணிடுங்க கார்த்திக்..."

சரி நாளைக்கு தான் கார்த்திக்கை சந்திக்க போறோமே.. நாளைக்கே அந்த விஷயத்தை பத்தி சொல்லி விடலாம். என்று எண்ணியபடி அவனோடு சற்று நேரம் பேசி இருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் அபிநயா.

"அபிநயா நானும் வீட்டுக்கு தான் போறேன் என் கூட வரீங்களா உங்கள வீட்ல டிராப் பண்ணிடுறேன்.." என்றாள் அந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் மாதவி.

" ஓகே அபிநயா அப்போ நீங்க மேடம் கூடயே போயிடுங்க... நான் இப்படியே என்னுடைய ஹோட்டலுக்கு போறேன்." என்றான் கார்த்திக்.

ஒரு சிறு தலையசைப்போடு இருவரும் கார்த்திக்கிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப, காரில் போகும்போது அபிநயாவை பார்த்து கேட்டாள் அந்த டாக்டர்.

" என்ன ஆச்சு அபிநயா உங்ககிட்ட ஏதோ ஒரு பெரிய மாற்றம் இருக்கிற மாதிரி தெரியுது. ஏன் கேக்கறேன்னா உங்களுடைய இயல்பான சிரிப்போ கண்ணுல தெரியும் துடிப்போ எதுவுமே இல்லை. ரொம்ப டயர்டா இருக்கீங்க நீங்க சொல்ல முடியாத ஒரு சோகத்தில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தெரியுது. நான் ஒரு மனோதத்துவ டாக்டர் என்பதால் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சிருச்சு அதனால தான் கேட்டேன். அதுக்காக நீங்க சொல்லித்தான் ஆகணுமுன்னு ஒன்றும் கட்டாயம் இல்லை. என்றாள் டாக்டர் மாதவி.

யாராவது இப்படி கேட்க மாட்டார்களா? என்று எண்ணிக்கொண்டிருந்த அபிநயாவுக்கு ஒரு வடிகால் கிடைத்தது போலிருந்தது டாக்டர் மாதவியின் பேச்சு. ஆனாலும் எல்லா விஷயத்தையும் சொல்லி விட முடியாது என்று எண்ணியவள் அந்த கேள்வியை மட்டும் முன்வைத்தாள்.

"என் மனம் எப்பொழுதும் காரணம் இல்லாத விஷயங்களை எண்ணி யோசித்து கொண்டே இருக்கிறது. இதை சரி செய்வது எப்படின்னு தான் தெரியல...டாக்டர்."

"நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது அபிநயா...அப்படிப்பட்டவர்கள்
அடுத்தடுத்து ஒரு வேலையை நியமித்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்திலிருந்து வந்ததும் குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும். பின் ஏதாவது புத்தகம் படிக்க வேண்டும். இது போல வைத்து கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் தான் இப்படி அலை பாய்கிறது என்றால் இலக்கு வைத்து கொள்ளுங்கள். அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் முடித்து விட்டால் இன்று பிடித்தமான புத்தகத்தை அதிக நேரம் படிக்கலாம். இது போல இலக்கு வைத்தால் நேரத்திலும் வேலையிலும் தான் கவனம் இருக்கும்‌.

ஆனால் ஒரு மணி நேரத்தில் முடிக்க கூடிய வேலையை அரை மணிநேரத்தில் முடிக்க வேண்டும் என்று இலக்கு வைக்க வேண்டாம்‌. இதனால் வேலையின் தரமும் குறையும், மன அழுத்தமும் அதிகரிக்கும்.!!"

டாக்டரோட அட்வைஸ் கேட்டு சற்று திருப்தியுற்றவள் காரின் பின் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினாள்.

சீராக சென்று கொண்டிருந்த கார் திடீரென்று ப்ரேக் போட பேலன்ஸ் இன்றி முன்னிருக்கையில் படீரென்று மோதிக்கொண்டாள். முன் நெற்றியில் லேசாக அடிபட்டு விட நெற்றியை தடவியபடி நிமிர்ந்தவள்.

எதிரில் நின்ற கார் மீது, டாக்டர் மாதவி ஓட்டிட்டு வந்த இந்த கார் மோதி நின்றிருந்தது.

காரிலிருந்து கீழே இறங்கிய டாக்டர் மாதவியை பிலு பிலு என்று பிடித்துக்கொண்டு சத்தமாக கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் அங்கு நெட்டையாக நின்றுகொண்டிருந்த ஒருவன். ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தவள் காரில் இருந்து கீழே இறங்கி டாக்டரை திட்டிக் கொண்டிருந்தவன் யாரென்று பார்த்தாள். கத்துவதை நிறுத்திவிட்டு அவனும் இவளைப் பார்க்க, ஒரு நிமிடம் பேச்சற்று போனாள் அபிநயா.

காரணம் அங்கே நின்று கத்திக் கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல சாட்சாத் வேழவேந்தனேதான்.
 
Last edited:
இந்த வேழவேந்தன் ஏன் அடிக்கடி அபிநயாவின் ரூட்டில் கிராஸ் பண்ணுறான்?
என்ன காரணம்?
நிச்சயம் முடிந்த பின்னாடி கூட கார்த்திக்கிடம் சேலை வாங்க அபிக்கு என்ன தயக்கம்?
இந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் இப்போ எதுக்கு வந்தாள்?
அவள் பங்குக்கு இன்னும் கொஞ்சம் குட்டையைக் குழப்பவா?
 
Last edited:
Top