Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 19

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 19
அபியின் உள்ளம் உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது, மற்றவர்களின் ஆராவாரம் இல்லாத ஒதுக்குபுறமாக இருந்த இடத்தில் அமர்ந்து தனக்குள்ளேயே மனம் குமைந்து கொண்டிருந்தாள்..
“என்ன தைரியம் இருந்தாள் அவன் என்னை தொடுவான்.. ? அதுவும் எவ்வளவு ஆணவம்..எகத்தாளம் ? ஆனால் நானும் இப்படி வெட்கமில்லாமல் நடந்துகொண்டிருக்க வேண்டுமா? அதுவும் அவனது குணம் பற்றி எல்லாம் தெரிந்த பிறகும்.... இவ்வளவு நடந்த பின்பும் அவன் பழைய அருணாக இருக்க கூடாதா என்று அவள் மனம் ஒருபுறம் ஏங்கி தவித்தது..
அவள் என்ன வேண்டுமானால் ஆசைப்படலாம் ஆனால் உண்மை மாறிவிடாதே என்று ஏக்கத்துடன் பெருமூச்சுவிடும் போது, இப்போதும் அவனுக்காக பரியும் தன் மீதே அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது…
எவ்வளவு முயன்றும் மனம் அமைதியடையாமல் திரும்ப திரும்ப அன்றைய நிகழ்விலேயே உழன்றுகொண்டிருந்தது…
"அவன் ஏன் அப்படி நடந்துக்கிட்டான்.. நானும் ஏன் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம இருக்கேன்..? இதுக்கு தான் இந்த பார்ட்டிக்கு வரமாட்டேன்னு சொன்னேன் யாராவது கேட்டாங்களா..?”
இப்படி பலவாறு சிந்தனை ஓட தன்னிலே மூழ்கி இருந்தபோதும், ரொம்ப நேரம் இப்படியே அமர்ந்திருக்க முடியாது திரும்ப சென்று எல்லோரையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும், குறிப்பாக அவனை.. என்பதும் உறைக்க வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றாள் அபி, பிறகு பார்ட்டி முடியும் வரை அவனை பார்ப்பதை முழுவதுமாக தவிர்த்தாள்.. இருந்தும் அவனை பார்க்க நேரிட்ட ஓரிரு சமயங்களிலும் அவனது குறுகுறு கண்களில் தெரிந்த விஷமம் அவளை மேலும் எரிச்சலடைய செய்தது..
பூர்ணாவும் விக்கியும் இந்த பனிப்போரை கண்டும் காணாதவர்கள் போல் இருந்தனர் ,எல்லாரும்கிளம்பும் சமயம்
"மச்சான் ,உங்களை ட்ராப் பண்ணிட்டு பூர்ணா வீட்டுக்கு போக லேட் ஆகிடும், அதனால நீங்க ரெண்டு பேரும் கம்பெனி கேப்ல போய்டுங்க..” என்று கூறிவிட்டு அவர்கள் மறுத்து எதுவும் கூறும்முன் இருவரும் கிளம்பி சென்றுவிட்டனர்…
இரவில் தனியாக இவனுடன் ஒரே காரில் பயணம் அதுவும் அவன் ஸ்பரிசத்தின் வாசம் இப்போதும் அவள் அங்கமெங்கும் படர்ந்து இம்சிக்கும் இந்த சமயத்தில் அவனுடனான தனிமை.. தனக்கு பெறும் போராட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அபிக்கு..
அவள் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள், அருண் அவளது அருகில் அமர்ந்து டிரைவரிடம் முகவரியை கூறிவிட்டு வசதியாக பின்னால் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டான்..
அருணின் இந்த செய்கை அபிக்கு ஆச்சர்யமாக இருந்தது, அவள் காரசாரமான விவாதத்தை எதிர்பார்த்தாள், ஆனால் அவன் இப்படி அமைதியாக உறங்குவது அவள் எதிர்பாராதது, சொல்லப்போனால் அதற்கு அவள் நிம்மதியாக உணர்ந்திருக்க வேண்டும், ஆனால் உண்மையில் அவன் எதுவும் பேசாமல் இருப்பதும் ஏமாற்றமாக தான் இருந்தது.. தான் என்னதான் எதிர்பார்க்கிறோம் என்று அவளுக்கே குழப்பமாக இருக்க, தன் மனமே தனக்கு புரியாத புதிரான அலுப்பில் அவளும் கண்களை மூடிக்கொண்டாள்..
சுமார் ஒரு மணிநேர பயணத்திற்கு பின் கார் ஓரிடத்தில் வெகு நேரம் நின்றது, அபி கண் விழித்து என்ன ஆயிற்று என்று சுற்றும் முற்றும் பார்த்தாள், ஒரே இருட்டாக இருந்தது மேலும் இவர்களுக்கு முன்னாள் சென்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது..
அவள் கேள்வியாக அருணை நோக்கும் போது அவன் "என்ன ஆச்சுங்கண்ணா..?" என்று டிரைவர் இடம் விசாரித்து கொண்டிருந்தான்..
“போலீஸ் செக்கிங் மாதிரி இருக்கு சார்..” என்றார் அவர் ..அதே நேரம் ஒரு கான்ஸ்டபிள் இவர்களின் காரின் அருகில் வந்து, “காரோட போபர்ஸ் ஐ எடுத்துட்டு சார வந்து பாருங்க..” என்று விட்டு போனார்..
எனவே டிரைவர் இறங்கி வெளியே சென்றார், போனவர் திரும்பி வர நேரம் ஆனதால் என்ன ஆயிற்று என்று பார்பதற்காக அருணும் சென்றான்..
சற்றும் தூரம் தள்ளி போலீஸ் ரோந்து வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது அதன் அருகில் டிராபிக் போலீஸ்சார் அந்த வழியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை இட்டு கொண்டிருந்தனர்..
அருண் அங்கு சென்ற பொது இவர்களது டிரைவர் அந்த காவலரிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது..
அருண் அவர்களருகில் சென்று, “என்னாச்சு சார்..” என்றான்..
“பார்த்தா தெரியலை..? செக் பண்ணிட்டு இருக்கோம்..” என்று எரிந்து விழுந்தார் அந்தக்காவலர்..
“சார் பேப்பர்ஸ்லாம் சரியா இருக்கு.. கஸ்டமர் வெயிட் பன்றாங்க சார் ப்ளீஸ் விடுங்க..” என்று கெஞ்சினார் டிரைவர்..
“யோவ் பேபர்ஸ்லாம் சரியா இருந்தா அனுப்பிடணுமா..? சீக்கிரமா போய் என்ன கிழிக்க போற..? பேசாம ஓரமா போய்நில்லு..” என்று மரியாதையில்லாமல் பேசினார் அந்த இன்ஸ்பெக்டர்..
அவர் அடுத்த வண்டிக்காரனிடம் செல்ல தொடங்கவும் அந்த டிரைவர்,
“சார் லேடீஸ் இருக்காங்க.. கொஞ்சம் சீக்கிரம் விடுங்க சார்..” என்று கேட்டார்..
உடனே அவன் புறம் திரும்பிய அந்த இன்ஸ்பெக்ட்டர்,
“லேடீஸா.. யாரு எங்கே வர சொல்லு..” என்றார் ஆர்வம் காட்டி…
“எதுக்கு சார் வரணும்..? அதான் பேப்பர்ஸ்லாம் சரியா இருக்குல்ல விடுங்க சார்..”என்றான் அருண்..
“நீ ரொம்ப பேசுற…என்ன தண்ணி அடிச்சிருக்கியா..? ஊதிக்காட்டு..” என்றார் அதிகாரமாக..
“நான் எதுக்கு சார் ஊதிக்காட்டணும்..? நான்தான் டிரைவ் பன்ணலையே..” என்றான் எரிச்சலுடன்..
அதே சமயம் அபியும் அருணை காணாமல் காரில் தனித்திருக்க முடியாமல் அவனை தேடி அங்கு வந்து சேர்ந்திருந்தாள்..
“இங்க பாரு.. ஓவரா பேசினா ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்..” என்று அருணை மிரட்டினான் அந்த இன்ஸ்பெக்டர்..
அதற்குள் அபியின் மீது பார்வையை பதித்தவன் "யாருடா இந்த பொண்ணு தள்ளிட்டு வந்தியா ?” என்றான் ஏளனமாக..
அருணுக்கு ரத்தம் கொதித்தது கைமுஷ்டி இறுகியது, அந்த இன்ஸ்பெக்டர்ரின் கேவலமான வார்த்தை மற்றும் பார்வை சகிக்காமல் அபி அருணின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டு அவன் முதுகின் பின்னால் முடிந்த அளவு மறைவாக நின்றாள்..
“நீ எதுக்கு அபி வெளிய வந்த..?” என்று அவளை அடிக்குரலில் எரிந்து விழுந்தான் அருண்..
“மரியாதையா பேசுங்க சார், வீ ஆர் டீசென்ட் பீப்பிள், கம்பெனி பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்..”என்றான் அருண்முடிந்த அவ்வளவு அமைதியான குரலில்..
“டீசென்ட் பீப்பிள்ஆ..? உங்களை மாதிரி படிச்சவங்க தான்டா ஈசிஆரையே நாறடிக்கிறீங்க..” என்றான் எகத்தாளமாக..
“இந்த பொண்ணு யாருன்னு சொல்லு இல்லை நடங்க ஸ்டேஷன்க்கு..”
நொடியும் தயங்காமல், “இது என்னோட ஒய்ஃப்..” என்றான் அருண்.
அபி அதிர்ந்துபோய் அவனை பார்த்தாலும் மறுப்பாக எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்..
அந்த இன்ஸ்பெக்டர் அபியிடம் "என்னமா இவரு சொல்றது உண்மையா..?” என்று விசாரிக்கவும்,
அபிக்கு அப்போதுதான் பேச வாய்வராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல் ஆனது..
அவள் எதுவும் கூறும் முன் அருண் இடையிட்டு..
“ஹலோ இன்ஸ்பெக்டர், இது என்னோட ஒய்ஃப் நாங்க ரெண்டுபேரும் இன்போடெக் சொலுஷன்ஸ்ல ஒர்க் பண்றோம், இது என்னோட Id கார்டு உங்களுக்கு சந்தேகமா இருந்தா எங்க கன்ட்ரி ஹெட் சர்மா சார்க்கு கால் பண்றேன் அவரு கிட்டயே பேசுங்க..” என்றான்..
சர்மா பெயரை கேட்டதும் அந்த இன்ஸ்பெக்டரிடம் ஒரு அற்புத மாற்றம் தெரிந்தது ,அவ்வளவு நேரம் அலட்சியமாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று மரியாதையாக பேசத்தொடங்கினார்..
“சார்..நீங்க சர்மாசார், கம்பெனில வேலை செய்யறீங்களா..? இதை முதல்லயே சொல்லி இருக்கலாமே.. சர்மா சாரும் ஐஜி யும் கிளோஸ் பிரெண்ட்ஸ் ஆச்சே.. சார் நீங்க தப்ப எடுத்துக்காதீங்க நாங்க எங்க கடமையைதான் செய்யறோம்..” என்றார் வினயமாக
"அதுக்காக ஃபேமிலியா வர்றவங்க கிட்ட இப்படிதான் இன்டீசென்ட்டா நடந்துப்பீங்களா..?” என்றான் அருண் காட்டமாக..
“சாரி சார்.. மேடம் நீங்க எதையும் மனசுல வச்சிக்காதீங்க..” என்றான் மீண்டும் பதூசாக..
"அப்போ நாங்க போலாமா..” என்றான் அருண்
“நீங்க போங்க சார்..”என்று டிரைவரிடம் எல்லா பேப்பர்ஸையும் திருப்பி கொடுத்தார் அவர்..
காருக்கு திரும்பி வரும் வழியில் அபி "அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட எதுக்கு என்னை உன்னோட ஒய்ஃப்ன்னு சொன்ன..?” என்று கேட்டாள்..
“வேற என்ன சொல்றது அவன்கிட்ட? அந்த ஆளு எப்படி பேசினான் பார்த்த இல்ல…?”
“ஏன் சிஸ்டர் னு சொல்றது..?”
“உன்னை என்னோட சிஸ்டர்னு சொல்லனுமா..?
”என்று அவளை நேராக பார்த்து கேட்டான் அருண்.. அந்த பார்வையின் தீவிரத்தை தாங்க முடியாமல் அபி கண்களை விலக்கிக்கொண்டாள்.
அப்போதும் “ஃபிரெண்ட்னு சொல்ல வேண்டியது தானே..” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் அபி..
“இப்ப வாய் கிழிய பேசு.. அங்க அந்த ஆள் கேட்டப்பவே சொல்லி இருக்க வேண்டியதுதானே, இப்ப வந்து என் மேல பாயுற..?
சரி இரு, இப்பவே போய் நீ என் ஒயிஃப் இல்லைன்னு அந்த ஆள் கிட்ட சொல்லிட்டு வரேன்..”
என்று அருண் வேகமாக திரும்பவும், சட்டென்று அவன் கையை பற்றி அவனை தடுத்து நிறுத்தி,
"ஹே அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அவன் மூஞ்சியும் முழியும் சீக்கிரம்வீட்டுக்கு போனால்போதும்..” என்று பேச்சை முடித்தாள் அபி
காரில் ஏறியமர்ந்து கதவை டொம் மென்று சாத்தினாள், அருண் அவளது செய்கையை கண்டு லேசாக சிரித்துக்கொண்டே அவனும் காரில் அமர்ந்தான்.. இருவரும் வீடு வந்து சேர்ந்து அவரவர் பிளாட்டுக்குள் நுழையும் நேரம் ,
அருணின்குரல் அபியை தேக்கி நிறுத்தியது "அபி அந்த ஆகாஷ் கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு அவன் கேரக்டர் சரி இல்லைனு கேள்வி பட்டேன்..” என்று எச்சரித்தான்.
“அதை நீங்க… சொல்ல வேண்டாம்..” என்றாள் அவள் பட்டென்று,
அருணுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறியது…
தனது வீட்டினுள் செல்ல எத்தனித்தவளை ஒரே இழுப்பில் தன் புறம் திருப்பி நிறுத்தி
"என்ன சொன்ன?” என்று அவன் அழுத்தமாக கேட்டதில் அபிக்கு பக்கென்றிருந்தது..
இருப்பினும் சமாளித்து கொண்டுஅலட்சியமாக முகம் திருப்பினாள்,அவனும் விடாமல் திரும்ப அவளை இழுத்து நிறுத்தினான்..
"என்னை பார்த்துசொல்லுஅபி, “அதை நீங்க சொல்ல வேண்டாம்”ன்னா என்ன அர்த்தம்..” என்று அவள் கூறிய வார்த்தையை அப்படியே திரும்ப கூறினான்..
“நான் என்ன பண்ணனும், யார் கூட பேசணும்ன்னு நீங்க சொல்ல வேண்டாம்ன்னு அர்த்தம் போதுமா..” என்றாள் ஏளனமாக, தன்னை அவன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றபடி..
“இல்லை.. நீ அந்த மாதிரி தொனில சொல்லல, நான் அந்த ஆகாஷ என்ன குற்றம் சொன்னேனோ அதே குற்றசாட்டை நீ என் மேல வைக்கற அப்படி தானே..?”
“நீங்க அப்படி நெனச்சிகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை..”
“இல்லை நீ அப்படி தான் மீன் பண்ண..”
என்றான் அவளை குற்றம்சாட்டும் பார்வையில் நிறுத்தி
அவன் கண்களை தயக்கமின்றி எதிர்கொண்டு "ஆமாம் அப்படி அர்த்தத்துலதான் சொன்னேனே வெச்சுக்கோங்க இப்ப என்ன ?ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்..” என்று விட்டெறியாக மொழிந்துவிட்டுஅவன் கைகளை உதறிவிட்டு அவனை கடந்து செல்ல முயன்றபோது அவனது குரல் அவளை நிறுத்தியது..
"எதை வச்சி நீ அப்படி சொல்ற அபி ?"
என்று விடாமல் கேட்டான்அருண்
"இதென்னடா வம்பா போச்சி..”என்று நினைத்துக்கொண்டு
"உனக்கு எந்த விளக்கமும் தரவேண்டிய அவசியம் எனக்கில்லை..”
"இல்லை அவசியம் இருக்கு ,நீ பாட்டுக்கு என் மேல கேவலமான ஒரு பழி போட்டுட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்து போய்ட முடியாது.. எனக்கு நீ விளக்கம் தந்தாக வேண்டும்.. அதை தெரிஞ்சிக்கற உரிமை எனக்கு இருக்கு
..”
அபி அலட்சியமாக தலை சிலுப்பவும்,
“அவ்ளோ அலட்சியம் வேண்டாம் அபி ,சொல்லு என்னோட எந்த செய்கை உன்னை இப்படி நினைக்க வைச்சது..?” அவன் காரணம் தெரிந்து கொள்வதில் குறியாக இருந்தான்.
தன் கைப்பிடியில் இருந்த அவளது கையை வலிக்குமாறு இருகப்பற்றினான், அபி வலியில் முகம் சுளித்தாள்..
“காரணம் தானே வேணும்..? இந்த கேட்டுக்கோ, நீ ஒரே நேரத்துலஅந்த நித்தி கிட்டயும் என் கிட்டையும் ரெட்டைவேஷம் போடலை..?” என்று போட்டு உடைத்தாள்..
"வாட்?”
இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத அருண் திகைத்துப்போனான், அவனது பிடி தானாக தளர அபி தனது கையை விடுவித்து கொண்டாள்..
“ஆஹா ரொம்ப நடிக்க வேண்டாம், நீ அந்த நித்திகிட்ட ஐ லவ் யூ சொல்லி கொஞ்சி குலவினதை நானே நேர்ல பார்த்தேன், இல்லைன்னுசொல்லி என்னை ஏமாத்த முடியாது..”
“சோ இது தான் காரணம்.. இவ்வளவு நாளாக அபி எதற்கு பேசாமல் இப்படி பண்றான்னு யோசிச்சி யோசிச்சி மூளை குழம்பி நிம்மதியில்லாமல் தவியா தவிச்சதுக்கு காரணம் தெரிஞ்சிடுச்சி..” ஆனால் அவன் மனம் நிம்மதி அடைவதற்கு பதிலாக ,மேலும் காயப்பட்டு போனதை போல் உணர்ந்தான்..
“இவ்வளவுதானா அபி நீ..?” என்பது போல் அவளை பார்த்தான்..
அருண் தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது என்று அவமானத்தில் கூனி குறுகி போவான் அல்லது ஏதேனும் சப்பை கட்டுகட்டி தன்னை நியாப்படுத்திக்கொள்ள பார்ப்பான் என்று எதிர்பார்த்த அபிக்கு அவன் இப்படி ச்சீ.. என்பது போல் அவளை வெறுப்புடன் பார்த்தது பேரதிர்ச்சியாக இருந்தது..
“நான் ஏன் இல்லைன்னு பொய் சொல்ல போறேன்..? ஆமா நான் நித்தி கிட்ட லவ் யூ சொன்னேன்தான் ஆனா அதுக்கு அப்புறமும் நான் சிலது சொன்னேன் ,அதையும் நீங்க பொறுமையா இருந்து கேட்டிருந்தா இந்த ப்ராப்ளமே வந்திருக்காது பெரியவங்க சரியா தான் சொல்லி இருக்காங்க ஒட்டுகேக்குறவங்க சரியானத கேக்க மாட்டாங்கன்னு ,அட்லீஸ்ட் ஒட்டுகேக்குறதையாவது முழுசா கேட்டிருக்கலாம் அதுலயும் அரைகுறை..” குரலில் ஏளனதோடு பேசினாலும் அதன் பின்னால்இருந்த அவன் வலி அவளை திகைக்கவைத்தது, அவன் மரியாதை பன்மையில் தன்னிடம் பேசுவதே ஏதோ நெஞ்சில் கத்தியால் குத்துவது போல்இருந்தது அவளுக்கு சட்டென்று அவர்களுக்கிடையேயான தூரம் பன்மடங்கு அதிகரித்ததாக தோன்றியது..
முதன் முறையாக தான் தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணி கலங்கினாள்.. நான் தான் தப்பாக புரிந்துகொண்டேனா நான் பார்த்த காட்சிக்கு வேறு ஒரு கோணம் இருக்குமோ என்று எண்ணி குழப்பத்துடன் அவனை பார்த்தாள்..
அவனது கண்கள் வெளிப்படுத்திய மிதமிஞ்சிய வலி அவனது மனதிற்குள் எந்த அளவு வேதனை படுகிறான் என்பதை உணர்த்தியது ,ஒரு நொடி எல்லா பேதங்களையும் மறந்து அவனை அப்படியே அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும்போல மனம் துடித்தது, ஆனால் அதற்கான தகுதியை தான் இப்போது இழந்துவிட்டோமோ என்ற அச்சமும் ஒருபுறம் எழுந்தது.
“சோ உங்களை பொறுத்தவரைக்கும், நான் ஒருஜொள்ளு, ரெட்டைவேஷம் போடுறவன், பொம்பளை பொறுக்கி.. அப்படித்தானே..” என்று கேட்டுக்கொண்டே இனம் புரியாத பார்வையுடன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்துவைக்க, அபிக்கு உள்ளே குளிர்பரவியது, அச்சத்தில் தானாக கால்கள் பின்னடைந்தது, ஆனால் அதற்குமேல் போக இடம் இல்லாமல் அவள் முதுகு சுவரில் தட்டியது, அவன் இரையை விழுங்கும் பாம்பினை போல் தன் முழுஉயரத்திற்கும் நிமிர்ந்து அவளது உருவத்தைமறைத்தவாறு தன் கைகளிரண்டையும் அவளின் இருபுறமும் வைத்து சிறை பிடித்தான்..
அவள் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்..
"ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற அபி?உன்னை பொறுத்தவரைக்கும் நான் இப்படி பட்ட ஆள் தானே?”என்றான் உதட்டில் ஏளன வளைவுடன் ..
“அருண் ப்ளீஸ் தள்ளு..” என்று அவனை தள்ள முயன்றாள்..
ஆனால் அவளது கையை பற்றி அவளை அசையவிடாமல் செய்து அவள் முகம் நோக்கி குனிந்தான், அபி தன்னை விடுவித்துக்கொள்ள எவ்வளவு முயன்றும் அவன் இரும்பு பிடி தளர்வதாயில்லை, கடைசியில் அவள் கைகள் சோர்ந்து சரணடையும் சமயம் அவன் அவளை விட்டு விலகினான்..
“நீ என்னை பற்றி தப்பா நெனைக்கறதால நான் தப்பானவன் ஆகிட மாட்டேன், ஐ நோ.. ஹூ ஐ அம்.." என்று விட்டு திகைத்து நின்றவளை சட்டை செய்யாமல் தன் வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து சாத்திக்கொண்டான் அருண்..
தொடரும்
 
Top