Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 18

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 18

“நோ பூர்ணா.. நான் வரலை, நைட் பார்ட்டினா லேட் ஆகும், இது சரியா வராது நான் வரலை..”
“கம்ஆன் அபி…டோன்ட் பீ எ ஸ்பாயில் ஸ்போர்ட்.. இது கம்பெனி அரேஞ்ச் பண்ற பார்ட்டி, டின்ஸ்போர்ட் ப்ரொவைட் பண்ணுவாங்க, நம்ம டீம் மட்டும் இல்லை நெறைய டீம் வருவாங்க, கிராண்டா இருக்கும், அதுமட்டும் இல்லாம சர்மா சார் வைக்கற பார்ட்டி நீ வரலைனா அவரை இன்சல்ட் பண்றமாதிரி ஆகிடும் பார்த்துக்கோ ..”

அவளுடைய முன்னனுபவத்தின் காரணமாக அபி அப்போதும் தயங்கினாள்.
"என்ன பூர்ணா இதுக்கு வேற எதுவும் வழி இல்லையா..?”
“இங்க பாரு.. எல்லாரும் பார்ட்டி அட்டென்ட் பண்ணனும்னு விவேக் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு, நீ வரலைனா அவருகிட்ட பேசிக்கோ..”
என்று அவளை மடக்கினாள் பூர்ணா..
அபிவேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டாள்,
"சரி வரேன் ஆனா சாரீலாம் கட்டிட்டு வரமாட்டேன்..”
“அது டிரஸ் கோட் அபி, லேடீஸ் லாம் சாரீல வரணும், ஜென்ட்ஸ்லாம் சூட்னு ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க, அதை ஃபாலோபண்ணிதான் ஆகணும், நோ அதர் எஸ்க்கியூஸஸ்..”
“என் கிட்ட சாரீ இல்லை..”
என்று சப்பையாக காரணம் கூறி மறுத்தாள் அபி..
“இல்லைனா புதுசா வாங்கு.. இங்க பாரு இப்படி மொக்கையா ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு நீ சாரீல வராம இருந்த.. அப்புறம் நானே உன்னை தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ..”
என்று மிரட்டிவிட்டு சென்றாள் பூர்ணா…
பார்ட்டியில் என்ன நடக்குமோ என்று அப்போதே அபியின் உள்ளம் தடதடக்க தொடங்கியது.
“செம பார்ட்டிடா …மஹாபலிபுரம் GRT ரிசார்ட்ல வைக்கறாங்க… ரொம்ப கிராண்ட்டா இருக்கும்னு பேசிக்கிறாங்க நம்ம HR மனோஜ் சும்மா காசை வாரி இரைக்கறானாம்… மச்சான் மதியம் கெளம்பறோம்… அங்க போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுறோம் அப்புறமா ஈவினிங் ஆறு மணில இருந்து பார்ட்டி சும்மா கலைகாட்டும்.. பொண்ணுங்களாம் அப்படியே தேவதை மாதிரி சாரீல நாமலாம் பிரின்ஸ் சார்மிங் மாதிரி சூட்ல.. அடடடடா..நெனைச்சி பார்த்தாலே சும்மா கிழி..தான் போ..” என்று விக்கி அவன் போக்கில் பார்ட்டியை பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தான்..
“டேய் ஓவரா படம் ஓட்டாத டா அடங்கு.. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை நான் வரலை..” என்றான் அருண் அசுவாரஸ்யமாக
“டேய் பொண்ணுங்க சும்மாவே புடவை காட்டினா அழகு.. இதுல அந்த பார்ட்டி அட்மாஸ்பியர்ல, மூன் லைட் எபெக்ட்ல காண்டில்லாம் பாத்தவச்சி வேற லெவல்ல இருப்பாங்கடா.. உனக்கு அபியை புடவைல பார்க்கணும்னு ஆசை இல்லைன்னு சொல்லு..” என்றான் சவால் விடும் தொனியில்..
“ஆமா இப்ப அது ஒன்னுதான் குறைச்சல், நானே செம காண்டுல இருக்கேன் மரியாதையா ஓடி போய்டு ..”
“டேய் சும்மா நடிக்காதடா இங்க என்ன சொல்லுது..? “அபி.. அபி..” னு சொல்லுதா..?
என்று அருணின் இதயத்தில் கைவைத்து கேட்டான் விக்கி..
“அதெல்லாம் ஒன்னும் சொல்லலை அங்க ஒரே நிசப்தமா இருக்கு..” என்றான் அருண்..
“நாங்க நம்பிட்டோம்..” என்று கேலிசெய்தான் விக்கி..
“டேய்..இப்ப என்னதான்டா வேணும் ஏன் இப்படி என்னை தொல்லை பண்ற?” என்றான் அருண் அலுப்பாக..
“நீ பார்ட்டிக்கு வரேன்னு சொல்லணும்”
“சரிடா வரேன் போதுமா..? உயிரை வாங்காம போய் தொலை..”
என்று ஒருவழியாக சம்மதித்தான் அருண்..
அடுத்த நாள் பார்ட்டி என்ற நிலையில் எப்படி அங்கு போவது என்று விக்கி அருண், பூர்ணா மற்றும் அபி நால்வரும் கேன்டீனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..
“அங்க போறதுக்கு மொதல்ல ஆபீஸ் வந்து இங்க இருந்து போலாம்னு சொல்றாங்கடா.. ஆனா எப்படியும் பார்ட்டி முடிய லேட் ஆகும் சோ என்னோட கார்லேயே போய்டலாம் திரும்பி வர ஈஸியா இருக்கும்.. நான் பூர்ணாவை பிக் அப் பண்ணிட்டு உங்க பிளாட்ஸ்க்கு ஒரு 2 மணிக்கு வரேன் ரெடியா இருங்க சரியா..” என்றான் விக்கி அருணிடம்
“அதை ஏன் என்கிட்ட சொல்ற..? அவங்க கிட்ட நீயே சொல்லிடு நான் வந்தா அவங்க கார்ல வரமாட்டாங்க, அதனால நான் என்பைக்ல வந்துடறேன் நீங்க அவங்கள கார்ல கூட்டிட்டு போங்க..” என்றான் அருண் எரிச்சல் மண்டிய குரலில்..
“யாரும் ஓவரா சீன் போடா வேண்டாம் விக்கி..நான் உங்க கார்லையே வரேன் வேற யார் கூட வந்தாலும் எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை..”என்றால் அபி அதே எரிச்சலுன்..
“யாரு சீன் போடுறா..? நீயா இல்லை நானா..?”என்று அருண் அவளை நேராக பார்த்து கேட்கவும்..
இருவரும் கோபமாக ஒருவரையொருவர் முறைக்க ,
“சரி சரி நாம நாலு பேரும் விக்கியோட கார்ல போறோம் தட் ஈஸ் பைனல்..” என்று நிலைமையை சீராக்கினாள் பூர்ணா..
மஹாபலிபுரம் ரிசார்ட்டில் பார்ட்டி தொடங்கியது..
அருணும் விக்கியும் பார்ட்டி ஹால்லுக்குள் நுழைந்தனர் இருவரும் ஒன்று போல் டார்க் சாக்லேட் நிற ஸ்லீவ் லெஸ் கோட் மற்றும் பான்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை பொருத்தமான டை என்று மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தனர்…
அந்த பரந்த விசாலமான ஹால் முழுவதும் அந்த கால பால் ரூம் முறையில் அலங்கரிக்க பட்டிருந்தது.. உயரமாக அமைக்க பட்ட மேற்கூரை அதில் தொங்க விடப்பட்ட ஒளிரும் அலங்கார விளக்குகள், பகட்டான தரை விரிப்பு அழகாக வடிவமைக்கப்பட்ட மேசைகள் பிரெஞ்சு டைப் ஜன்னல்கள் வழியே காணக்கிடைக்கும் மஹாபலிபுரம் சிற்ப கோவில்கள் அதையும் தாண்டிய ஆழியின் பிரம்மாண்டம் என்று அந்த இடமே ஏதோ கனவுலகம் போன்ற மாயையை தந்தது ,இருவரும் ஒருகணம் பிரம்மித்து போய் அந்த இடத்தை ரசித்தனர்…
“மச்சான் சான்ஸ்சே இல்லைடா.. இங்கிலீஷ் மூவில வர்ற மாதிரி செட்டிங் பண்ணி இருக்காங்க..” என்று வியந்தான் விக்கி.. அருண் ஆமோதிப்பாக தலையசைத்தான்..
இருவரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பார் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்..
“டேய் அருண்.. உலகத்துல இருக்கற எல்லா பிராண்ட் சரக்கும் இங்க இருக்கு ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணேன்..” என்றான் விக்கி..
அருண் மறுப்பாக தலையசைத்து தன் கையில் ஒரு ஜூஸ் கிளாசை எடுத்து உயர்த்தி காட்டி இதுவே போதும் என்பது போல் சைகை செய்தான்..
“டேய், உன்னை எல்லாம் என் பிரெண்ட்னு சொல்றதுக்கே வெக்கமா இருக்கு.. தண்ணி அடிக்காதவன்லாம் ஒரு மனுஷனாடா..?”
"நான் மனுஷன் இல்லை.. மஹான் போதுமா ?”
என்று கூறி ஆசிர்வதிப்பது போல்கையை உயர்த்தினான் அருண்..
பிறகு சுற்றும் முற்றும் கண்களை ஒட்டியவாறு.. “எங்கேடா யாரையும் காணோம்..?” என்றான் அவன்..
"டேய்.. உன்னோட ஆளு வரலைனா அதை மட்டும் கேளுடா.. அதை விட்டுட்டு இவ்ளோ பேர் இருக்கற ஹால்ல யாருமே இல்லாத மாதிரி ஃபீல் குடுக்கற..?”
“நான் யாரையும் கேட்கலை நம்ம டீம்ல யாரையும் காணோமேன்னு கேட்டேன்..”
என்று சமாளித்தான்..
“வருவாங்கடா.. நான் கூட பூர்ணா சாரீல எப்படி இருப்பான்னு திங்க் பண்ணி பார்க்குறேன் ஆனா இமாஜின் பண்ணவே முடியலைடா.
"திங்க் பண்றதுக்கெல்லாம் மூளை வேணும் டா விக்கி,உன்கிட்ட இல்லாததுக்கு ட்ரை பண்ணா எப்படி கிடைக்கும்..”
என்று அவன் காலை வாரினான் அருண், பதிலுக்கு விக்கி முறைக்க..வாய் விட்டு சிரித்தபடி எதேர்சையாக வாயிலின் புறம் பார்த்தவன் அப்படியே உறைந்து போனான்..

பூர்ணா அரை மணி நேரமாக அபி உடைமாற்ற சென்ற அறையின் கதவை தட்டிக்கொண்டிருந்தாள், அபியோ வெளியே வந்தபாடில்லை "ஒரு நிமிஷம் பூர்ணா..” என்றே சொல்லி கொண்டிருந்தாள்
“இதுக்கு மேல பொறுக்க முடியாது.. இப்ப நீ வெளிய வரியா இல்லை நான் உள்ள வரவா..” என்று பூர்ணா பொறுமையிழக்கவும் அபி கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது..
அபி வெள்ளை நிறத்தில் அழகாக ஆரி வேலைபாடுசெய்யப்பட்ட அழகான கருப்பு நிற டிசைனர் சேலையை உடுத்தி இருந்தாள்..
அவளை பார்த்து "வாவ்..” என்று அதிசயித்தாள் பூர்ணா.. “அபி.. புடவைல செமையா இருக்க டீ" என்று பாராட்டினாள்..
“நீயும் புடவையில் ரொம்ப அழகா இருக்க, உன்னோட சாரீ கூட ரொம்ப அழகா இருக்கு பூர்ணா.." என்று அபியின் அவளது ஆடையை ரசித்தாள்..
பூர்ணா கருப்புநிறத்தில் பெரிய டிசைன் கொண்ட புடவை அணிந்திருந்தாள்..
மலர்ந்து சிரித்த பூர்ணா லேசாக முகம் சுருங்கினாள்..
"ஹே, இன்னும் ஏன் இந்த பின்னலை போட்டிருக்க லூஸ் ஹேர் ஆ விடு நல்லா இருக்கும்..”என்று அவளது பின்னலை பிரித்துவிட்டு, அபியின் அடர்ந்த கூந்தலை அவளது முதுகில் படரவிட்டாள்..
"நௌ இட் ஈஸ் பர்ஃபெக்ட்.. வா போலாம்..” என்று அவளை அழைத்துக்கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றனர்..
அருணுக்கு அபியின் அழகை காண கண்கள் போதவில்லை, இமைக்கவும் மறந்து விழிவிரிய பார்த்திருந்தான், அபி புடவையில் இவ்வளவு அழகாக இருப்பாள் என்று அவன் கற்பனை செய்தும் பார்க்கவில்லை, அவளை பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது ,அவனை விட்டால் சலிப்பில்லாமல் ஒரு நாள் முழுக்கக்கூட பார்த்திருப்பான் போல தோன்றியது..
அபி ஒயிலாக நடந்து வந்து இவர்களின் டேபிளில் அருணுக்குநேர் எதிரில் அமர்ந்தாள், அவனை பாராமலேயே தன் கன்னங்கள் சூடாவதை உணர்ந்தாள்..அவனது பார்வை அவளையே ஊடுருவுவதை நன்றாக உணரமுடிந்தது.. அவள் உள்ளே நுழைந்ததுமே அருணின் பார்வையை கண்டுகொண்டாள், அவன் தன்னை பார்த்து மலைத்து போனதும் வெளிப்படையாக ஜொள்ளுவதும் அவளை றெக்கையில்லாம் பறக்க செய்தது.. அவளது நிலையும் ஒன்றும் குறைந்தது இல்லை, தூரத்து பார்வையிலேயே அருணின் செதுக்கியது போன்ற உருவத்தை கண்டு இதயம் தடதடக்க தொடங்கி இருந்தது..
இருப்பினும் அவளது உள்ள கிளர்ச்சியை மறைத்து சாதாரணமாக நடக்கவேண்டி இருந்தது வேறு அவளுக்கு பெரும்பாடாக இருந்தது..
“கடவுளே.. என்ன ஆச்சு எனக்கு..? நான் இப்படி நடந்துக்ககூடாது, திரும்ப இவனது வலையில் சிக்கக் கூடாது.. அவன் என்னை பாதிக்கவிட கூடாது..” என்று மனதை கட்டுக்குள் வைக்க போராடிக்கொண்டிருந்தாள்..
தூரத்தில் பார்த்தே சொக்கிப்போனவளுக்கு அருகில் பார்க்க நேர்ந்த போது மேலும் தடுமாறித்தான் போனாள்.. அபிக்கு தன் மீதே நம்பிக்கை குறைய தொடங்கி இருந்தது அவனை நிமிர்ந்து பார்ப்பதையும் தவிர்த்து இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்..
ஒருவரை ஒருவர் பாராட்டுதல் கிண்டல் செய்வது என்று சகஜமான பேச்சின் பின்னர் விக்கியும் பூர்ணாவும் ட்ரிங்க்ஸ் சாப்பிட என்று சொல்லி சென்றுவிட, அபி அருணுடன் தனித்து விடப்பட்டாள்.. அவளது படபடப்பு மேலும் அதிகரித்தது.. அவனை பார்ப்பதை கவனமாக தவிர்த்து அந்த பக்கமாக இன்னிசைக்கு நடனமாடுபர்களை பார்க்கும் சாக்கில் வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.. ஆனால் அருண் எதை பற்றியும் கவலை படாமல் ஏதோ அந்த இடத்தில் இவர்களைத்தவிர யாருமே இல்லாதது போல கண்கொட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.. அவன் அபியின் கண்களை சந்திக்க ஆவலாக காத்திருக்க அவளோ அவனை இப்போதைக்கு ஏறெடுத்து பார்ப்பாள் போல தெரியவில்லை..
பொறுமை இழந்தவனாக அருண்…
"அபி..” என்று மெதுவாக அழைத்தான்.. அவனது குரலில் உடல் சிலிர்த்தது அபிக்கு.. பேர் சொல்லிகூப்பிடும் போது எப்படி பார்க்காமல் இருப்பது..?
மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
அவளது கண்களின் வழியாக அவள் இதயத்தை படித்தவனுக்கு அவளது நிலை நன்றாக புரிந்தது ,குறுநகை இதழ்களில் தாண்டவமாட "அதான் உள்ளுக்குள்ள அவ்ளோ இருக்குல்ல அப்புறம் எதுக்கு நடிக்கணும்?" என்று நினைத்துக்கொண்டான்..
அவனது குறும்பு சிரிப்பை கண்டவளுக்கு அவனிடம் தன் உள்ளத்தை காட்டிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தில் "என்ன..” என்று மிடுக்காக கேட்க முயன்றவளுக்கு குரல் வெறும் காற்றாக தான் வெளிவந்தது..
அருண் வெடித்து சிரித்துவிட்டான்.. அவள் அவனை கோபமாக முறைக்க அதுவும் ஏனோ அவனுக்கு கன்னத்தை பிடித்துகிள்ள வேண்டும் போல மிகவும் கியூட்டாக தான் தெரிந்தது.. ஆனால் அவளது நிலையை அறிந்து அவளை மேலும் சீண்டவேண்டாம் என்று முடிவெடுத்து சாதாரணமாக பேசினான்..
"ஏதாவது சாப்பிடுறியா ?" என்று கேட்டான்..
"ஆரஞ்சு ஜூஸ்.. "
"ஓகே இரு நான் போய் எடுத்துட்டு வரேன்..”
என்று எழுந்து சென்றவனை பாதியில் நிறுத்தி
"அருண் ஒன்லி ஆரஞ்சு ஜூஸ்..” என்று அழுத்தி கூறினாள்..
“ஓகே..ஓகே..” என்று சிரித்துவிட்டு போனான் அருண்..
அவனை விட்டு விலகாமல் காந்தம் போல் அவள் கண்களும் கூடவே பயணித்தது வேக நடையுடன் ஆண்மையே உருவாக அவன் நடந்து செல்வதை மையலுடன் பார்த்திருந்தாள்.. அவளை சுற்றி ஆயிரம் வயலின்கள் இசைப்பது போல் இருந்தது
அப்போது நல்ல இனிமையான நாதத்தில் அபஸ்வரம் தட்டியது போல நித்யா கண்களில் பட்டாள். அவள் அருணிடம் வந்து உற்சாகமாக பேசத்தொடங்கினாள் ஏதோ தன்னுடைய புடவையை காட்டி அவனிடம் அபிப்ராயம் கேட்பது போல தெரிந்தது ,அருணும் புன்னகையுடன் அவளை பாராட்டுவது போல இருந்தது..
"இந்த நித்தியை நான் எப்படி மறந்தேன்..” எங்கோ கனவுலகில் பறந்துகொண்டிருந்தவளுக்கு திடீரென்று இறக்கை மறைந்து தலை குப்புற மண்ணில் விழுந்தது போல இருந்தது …
அப்போது அவளது எண்ணஓட்டத்தை கலைப்பது போல் " ஹாய் அபி வாட் எ சர்ப்ரைஸ்..” என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் ஆகாஷ்..
அபி ‘நீ யாருடா..’ என்பதை போல திகைத்துப்போய் அவனை பார்க்க..
அவன் யார் என்பது உறைக்கவே சிறிது நேரம் பிடித்தது அவளுக்கு, மரத்துப்போன மூளையை தட்டி நினைவிற்கு கொண்டுவந்து
"ஹாய் ஆகாஷ்..” என்றாள்வேண்டா வெறுப்பாக
அதற்குள் அவளது அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தவன்
"நாம இவ்ளோ சீக்கிரம் இப்படி ஒரு பார்ட்டில மீட் பண்ணுவோம்னு நெனைக்கவே இல்லை.. யூ நோ வாட்.. நீ அவ்ளோ அழகா இருக்க.. கண்டிப்பா இதை எனக்கு முன்னாடியே நெறைய பேர் சொல்லி இருப்பாங்க கரெக்ட்டா..” என்று விட்டு ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டவன் போல் சத்தமாக சிரித்தான்..
அபிக்கு அவனது பேச்சு, சிரிப்பு எதுவுமே சகிக்கவில்லை.. அதற்குமேல்அவன் அருகில் அமர்ந்தது வேறு அவளுக்கு மிகவும் அருவருப்பாக இருக்க சிறிது தள்ளி அமர்ந்து வேறுபுறமாக பார்வையை திருப்பிய போது அங்கே அருணின் அனல் கக்கும் விழிகளை சந்திக்க நேர்ந்தது…ஒருகணம் உடலில் சிறு நடுக்கம் உண்டானது.. ஆனால் மறுகணமே அந்த நித்தி அவன் பக்கத்தில் தொற்றி கொண்டுநிற்பதை கண்டு உடல் விறைத்தாள்..
முகம் கடுக்க அவளது கண்களிலும் அனல் பறந்தது ,பிறகு ஆகாஷின் புறமாக திரும்பி அழகாக சிரித்தாள்..
திடீரென்று ஆகாஷ் அவள் முன் ஒற்றைக்காலில் மண்டியிட்டு மேலை நாட்டு பாணியில் ஒருகையை அவள் புறமாக நீட்டி அவளை நடனமாட அழைத்தான்.. அவனது பாவனை சுற்றிலும் இருந்த மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவே பலர் ஆர்வமாக இவர்களின் புறம் பார்த்தனர்.. அபிக்கு மிகவும் தர்மசங்கடமாகிப்போனது..
"ஆகாஷ் என்ன இது..? எல்லாரும் பாக்குறாங்க எந்திரிங்க ப்ளீஸ்..” என்று அடிக்குரலில் கெஞ்சினாள்
“நோ.. நீ என்னோட டான்ஸ் பண்ணியே ஆகணும்.. சும்மா ஒரு டூ மினிட்ஸ் ப்ளீஸ்..” என்று பிடிவாதமாக எழும்ப மறுத்தான் ஆகாஷ்..
அபிக்கு ஓங்கி கன்னத்திலே ஒன்று வைக்கலாமா என்று இருந்தது ,முயன்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள் , எல்லாரும் பார்க்க காட்சி பொருளாக இருப்பதையும் அவள் விரும்பவில்லை, அதுமட்டுமில்லாமல் இது போல நாகரிகமாக கேட்கும்போது பார்ட்டி மேனர்ஸ்காக ஆடுவதுதான் முறை என்றும் உணர்ந்தாள், வேறு வழியில்லாமல் பல்லை கடித்து சகித்துவிட்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று முடிவெடுத்தாள்..
இந்த நாடகம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அருண் கொதித்துக்கொண்டிருந்தான், ஆத்திரத்தில் கையிலிருந்த கண்ணாடி கிளாஸ் உடைந்துவிடும் அளவுக்கு அதை அழுந்த பற்றி இருந்தான்..
அவனுடைய அபியை அவன் எப்படி இன்னொருவனுடன் ஆட விடுவான்.. ?
அபி ஆகாஷின் கையில் தன் கையை வைக்க இருந்த சமயம்..
அடுத்த நொடி வேகமான ஒரு கையிலுப்பில் அவள் அருணின் இரும்புப்பிடியில் இருந்தாள்.. அவன் அவள் இடையை தன் நீண்ட கையால் சுற்றி வளைத்து தன் புறமாக சேர்த்து அணைத்தபடி ,அதிர்ந்து விழித்த ஆகாஷிடம் “சாரி நண்பா.. அபி என்னோட டான்ஸ் பண்ண போறா..” என்று விட்டுஅதன் பிறகு அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அவளை அழைத்துக்கொண்டு நடனமாட சென்றான்..
அபிக்கு முதலில் அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிதுநேரம் பிடித்தது ஒருவாறு சுதாரித்து அவனிடம்இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முனைந்தால் அவனது பிடி உடும்பாக இருந்தது.. நடனமாடும் இடத்தை அடைந்ததும் ஒரு வேக இழுப்பில் அவள் முகத்தை அவனுக்கு நேராக கொண்டுவந்தான் இதை சற்றும் எதிர்பாராத அபி நிலைதடுமாறி அவன் மேல் விழாமல் இருப்பதற்காக அவன் தோளை பற்றினாள்…
மிக அருகில் பூர்ண சந்திரனை போல் ஒளிர்ந்த அபியின் முகத்தை ரசித்தான் அருண்..
அபியோ விழிகளில் கோபக்கணைகள் கொண்டு அவனை தாக்கினாள்..
“பாரு அருண்.. நோ வே ஆன் எர்த் ஐ அம் கோயிங் டு டான்ஸ் வித் யூ , சோ டேக் யுவர் டர்ட்டி ஹன்ட்ஸ் ஆப் மீ..”என்று கடித்தபற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள் ..
ஆனால் ஒரு நமுட்டு சிரிப்புடன்..
“ஏன் அந்த ஆகாஷ் கூட ஆடணும்னு ஆசையா இருந்தியோ..?”என்றான் ஏளனமாக..
“அருண் நீ லிமிட் தாண்டி போற.. இங்க எல்லார் முன்னாடியும் சீன் கிரியேட் பண்ணவேண்டாம்னு பார்க்குறேன் சோ ப்ளீஸ் லீவ் மீ..” முடிந்த அளவு பொறுமையை இழுத்துப்பிடித்து..
“விடணுமா..? சரி..” என்றவன் அவளது இடையை சுற்றி இருந்த கையை தளர்த்தி அவளை தன்னை விட்டு வேகமாக தள்ளியவன் மீண்டும் சுண்டியிழுத்து அவள் தன்னிடம் வரும்படி செய்தான்.. இம்முறை அவளை பின்னாலிருந்து அணைத்து அவள் காதோரம் குனிந்து காதுமடல்களை லேசாக முத்தமிட்டு, “சாரீல நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா.?” என்று கிசுகிசுத்தான்..
அவனது தொடுகையில் அபிக்கு உயிர்வரை சிலிர்த்தது, இருப்பினும் அவனது அடாவடிதனைத்தையும் அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை..
அருணுக்கும் தான் ஏன் இப்படி நடந்துகொள்கிறோம் என்று புரியவில்லை,ஆகாஷை அபியுடன் பார்த்த கணத்திலிருந்து நேராக சிந்திப்பதையே மறந்தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தன் வசமிழந்து நடந்து கொண்டான்..
அபி கோபத்தில் அவன் கையின் மீது தன் நகத்தை கொண்டு அழுத்தினாள், ஆனால் அவன் அதை சிறிதும் சட்டை செய்யவில்லை மாறாக அவளது கையுடன் சேர்த்து அவளை மேலும் தன்னுடன் இழுத்து அணைத்தான்.. அவள் உதட்டைக் கடித்து தன்னை கட்டுப்படுத்தினாள்..
அவள் மீது தன்னுடைய தாக்கத்தை அறிந்து கர்வம் கொண்டான் அருண்.. ஆனால் அதேசமயம் அவன் நிலையும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, அபியின் அருகாமையில் தன்வசமிழந்து தவித்துக்கொண்டுதான் இருந்தான்...
அபி கஷ்டப்பட்டு எச்சில்விழுங்கி வறண்ட தொண்டையை நனைத்துக்கொண்டு பேசினாள்..
“அருண் இப்ப நீ என்னை விடலைன்னா அப்புறம் நான் சத்தமா கத்தப்போறேன் பார்த்துக்கோ..”
“அப்படியா சரி கத்து.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு உண்மையா ஓத்துக்கோ..”
“என்ன உண்மை..?”

அவன் அவளை தன்புறமாக திருப்பி அவளது முதுகில் ஆடை மறைக்காத மென்மையான மேனியில் தன் கையை வைத்து அழுத்தி அவளை தன்னோடு சேர்த்துஅணைத்தான்..
“என்னோட தொடுகை உன்னை பாதிக்குதுன்னு ஒத்துக்கோ, என்னை உன்னால தவிர்க்க முடியாதுன்னு ஒத்துக்கோ..”
அபி மேலும்அதிர்ந்து போனாள் என்ன ஆயிற்று இந்த அருணுக்கு ?
“இப்படி கண்ணை அகலமா விரிக்காத அபி.. உன்னோட தோல்வியா ஒத்துக்கோ ஸ்வீட் ஹார்ட்..”
“அது கனவுலயும் நடக்காது, உன்னோட தொடுகை என்னை எந்த விதத்துலயும பாதிக்கலை, உண்மையா சொல்லனும்னா எனக்கு அருவருப்பாவும் ஊசிகுத்துறமாதிரியும் இருக்கு..”

அருண் உதட்டில் ஏளன வளைவுடன் “நீ சொல்றது பொய்ன்னு என்னால நிரூபிக்க முடியும் மை டியர்..” என்றான்..
“ஸ்வீட் ஹார்ட், டியர் என்ன மாதிரியான வார்த்தை பிரயோகம் இது?” என்று மனதில் நினைத்தாள் அபி..
அவன் அவள் முகம் நோக்கி குனியவும் அவள் வெறுப்புடன் வேறுபுறமாக முகம் திருப்பினாள்..
ஒரு சிறு விசையிழுப்பில் அவளை மீண்டும் தன்னை நோக்கி திருப்பினான், அந்த வேகத்தில் அபியின் கூந்தல் அவள் முகத்தில் விழுந்து அவள் பார்வையை மறைக்க, அவன் மென்மையாக தன் விரல்களால் விலக்கி காதோரம் செருகினான் அப்போது அவன் விரல் நுனி பட்டு அவள் மேனி எங்கும் மயிர்க்கூச்செரிந்தது ,அபி கண்ணை மூடி பெரிய மூச்சுகளை விட்டு தன் தடதடக்கும் இதயத்தை கட்டுப்படுத்தினாள் ..
“லீவ் மீ அருண் ..” என்றாள் காற்றாகிவிட்ட குரலில்..
“ஐ ஆல்ரெடி லெஃப்ட் யூ டியர்..” என்று அருணின் நகைக்கும் குரலில் சட்டென்று கண் திறந்து பார்த்தவள், அவள் மட்டும் தனியாக நின்றிருப்பதை கண்டாள், அவன் அவளை விட்டு தூர தள்ளி தன் மார்பின் குறுக்கே கைகட்டி உள்ளார்ந்த சிரிப்பில் உடல் குலுங்க நின்று கொண்டிருந்தேன்..
அபியின் முகம் நொடியில் அவமானத்தில் சிவந்தது அப்படியே பூமி பிழிந்து தன்னை விழுங்கிவிடாதா என்று ஏங்கினாள்..
இப்போது தெள்ள தெளிவாக காட்டிவிட்டாள் அவனுடைய அருகாமை தன்னை எந்த அளவு பாதிக்கிறது என்று..
“ஏன் இந்த மானங்கெட்ட மனது அவன் ஏமாற்றுக்காரன் என்று தெரிந்தும் அவன் பின்னாலேயே செல்கிறது..” என்று உள்ளுக்குள் கண்ணீர் வடித்தாள் அபி..
தொடரும்
 
மிகவும் அருமையான பதிவு,
கலாராணி பாஸ்கர் டியர்
 
Last edited:
அபி பாவம்ப்பா
இவளுக்கும் அருணுக்கும் ஊடால அந்த நித்யாவைக் கொண்டு வந்து இப்போ ஆகாஷ் பொறுக்கியின் பக்கம் அபி சாய்கிறாள்
இதெல்லாம் நல்லாயில்லை, கலா டியர்
 
Last edited:

Advertisement

Top