ஆம் ஐந்தாம் மாதம் இப்படி தான் சீர் செய்வார்கள். 5,7,9மூன்று முறை செய்வதுண்டு. முதல் முறை மாமியார் பூமுடிப்பார், இரண்டாவது முறை நாத்தனார் முறை உள்ளவர்கள், மூன்றாவது முறை வளைகாப்பு தாய் வீட்டு வைபவம். ஒரு சாஸ்திரத்துக்கு போடும் வளையல் அவ்வளவு தான். வளைகாப்பு தான் வெகு விமரிசை.5th மாத வைபவம் இப்படியும் நடப்பதை தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
வளைக்காப்புக்கு முந்தைய வைபவம் தானே இது? வளையல் போடறது சித்ரான்னங்கள் செய்வது எல்லாமே வளைகாப்பு மாதிரியே தான் நடக்குமா? இல்ல வேற எதுவும் தனித்துவம் இருக்கா?
சாதாரணமா வளைகாப்புக்கு போடும் வளையல்களை பிரசவத்துக்கு முன் தானே கழட்டுவாங்க. அது தான் 5-ஆவது மாதமே வளையல்கள் அடுக்கி மறுபடியும் 7 அல்லது 9-ஆவது மாதத்தில் இன்னொரு முறை வளையல் அடுக்குவாங்களா?
//இவ்வளவு details கேட்பியான்னு கோவிக்காதிங்க. மாறுபட்ட பண்பாட்டு வழக்கம் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் . அவ்வளவு தான்//
மன்னரோட ஊசி குத்தும் ஆற்றல் முதல் முறையா அண்ணிக்கு ஆதரவா அடுத்தவங்களுக்கு பாயுது.
அண்ணி Happy. இதுவரைக்கும் வலிக்க வலிக்க ஊசி வாங்கிகிட்ட அண்ணிக்கு இன்னிக்கு தான் மைத்துனன் பேச்சுத்திறனில ஒளிஞ்சுருக்கும் பாரபட்சமில்லாத நியாயம் புரிஞ்சுருக்கும்.
எங்க பக்கம் இப்படி தான்ஐந்தாம் மாதம் செய்முறை இப்போதான் கேள்விப்படுகிறேன்
அப்படி எங்களுக்கு வழக்கம் இல்லைஐந்தாம் மாதம் மருந்து கொடுப்பாங்க...
எத்தனை update கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்![]()