Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-8

Advertisement

praveenraj

Well-known member
Member
அங்கே துவாரா, விவியன், செபாஸ்டின் மூவரும் அவர்களுக்கான கம்பார்ட்மெண்டில் ஏறி அவரவர் இருக்கைக்குச் சென்றனர். அம்மூவரில் இருவர் இதுவரை தங்கள் வாழ்வில் நடந்ததை நினைத்து வருந்திக்கொண்டு இனிமேல் தங்கள் வாழ்வில் எமோஷன்ஸ்கு வழி விடுவதே இல்லை என்று மனதை நன்கு இறுக்கிப் பூட்டிக்கொண்டு இருக்க மற்றொருவனோ இந்த தனிமையான வாழ்க்கை எப்போது முடியும்? தன் வாழ்வில் புதியவைகள் எப்போது நுழையும்? இதுவரை தன்னைத் துரத்தும் தனிமைக்கு இப்பயணத்திலாவது ஒரு முற்றுப் புள்ளி வந்துவிடாதா என்று மனத்தினுள்ளே ஏங்கிக்கொண்டு இருந்தான். எதையும் அவ்வளவு சுலபத்தில் வெளியே காட்டிக்கொள்ளும் சுபாவம் அவனுக்கு இல்லை. அவனுக்கு இல்லை என்பதைக் காட்டிலும் அவன் விரும்புவதில்லை.
இங்கே பெரும்பாலும் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு சாரர்களுக்கு தங்கள் மீது அனுதாப பார்வையோ, இரக்கமோ மற்றவர்கள் செலுத்துவது துளியும் பிடிக்காது. அவர்கள் அதை அடியோடு வெறுப்பார்கள். மற்றொருவர்கள் அதை வெறுப்பதைப் போல் நடிப்பவர்கள். அவ்வளவே. அவர்கள் ஏன் நடிக்க வேண்டும்? காரணம் வெகு சாதாரணம், தங்களுக்குகென்று யாருமில்லை. தான் இந்த பாசம், இரக்கம், அக்கறை இதை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று வெளியே சொல்ல கூச்சம் தயக்கம். இது தான் காரணம். செபாஸ்டின், துவாரகேஷ் இருவரும் முதலில் சொன்ன ரகம். விவியன் இரண்டாவது ரகம்.
அவனுக்கு நினைவு தெரிந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகிலிருந்து அவன் தேடுவது, நாடுவது எல்லாம் அன்பு மட்டும் தான். அந்த அன்புக்காக அவன் ஏங்காத நாட்களில்லை. உண்மையான அன்பைத் தேடிச் சென்றவன் பிறகு அன்பில்லை என்றால் கூட பரவாயில்லை வெறும் அனுதாபமாவது கிடைக்குமா என்று ஏங்குகிறான். 2004 டிசம்பர் 26 உலகையே உலுக்கிய சுனாமி பேரலை அவனையும் உலுக்கியது. 25 கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு மறுநாள் ஞாயிறு என்பதால் வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க குடும்பத்தோடு சென்று சரி அப்படியே நாகப்பட்டினம் சென்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்க வந்த ஆழிப்பேரலை தன்னைத் தவிர்த்து தன் மொத்த குடும்பத்தையும் ஆட்கொண்டுவிட்டது. 12 வயது சிறுவனாய் தாய் தந்தை இரு தங்கைகள் என்று இருந்த அக்குடும்பம் இன்று அவன் ஒருவன் மட்டும் குடும்பமாய் இருக்கும்படி செய்துவிட்டது. விவியனும் துவாரகேசும் பக்கத்துபக்கத்து வீட்டினர். அதைத்தவிர எவ்வித உறவும் இல்லை. 7 வயது வரை ஒன்றாகவே சுற்றித் திரிந்தவர்கள் பின்னர் படிப்பின் காரணமாய் துவாரகேஷ் விட்டு சென்றுவிட விடுமுறைக்கு அப்பப்போ வந்து தங்கள் நட்பை நீர்த்துப்போக விடாமல் வைத்துக்கொண்டனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தன் பெரியப்பா சித்தப்பா, மாமா என்று பலர் தன்னைப் பார்த்துக்கொள்வதாய் சொன்னாலும் யாருமே அவனை அவர்களோடு வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது தான் உண்மை. அவனை ஹாஸ்டெலில் சேர்க்க முடிவெடுக்க அவன் வாழ்க்கை திசைமாறியது.
அவனின் கோவம் எல்லாம் ஒன்று தான், கடவுள் இருக்கிறது என்றால் அப்போ கடவுளை தரிசிக்க வந்த என் குடும்பத்தை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை? சரி எல்லோரையும் ஒன்றாகவே கூட்டிச்சென்றிருக்கலாம் அல்லவா? அதும் செய்யாமல் தன்னை மட்டும் தனித்து விட்டு எல்லோரையும் அழைத்துக்கொண்டதன் காரணம் என்ன? அவனுக்கு அதன் பின்னர் வேண்டியதெல்லாம் வெறும் அன்பு பாசம் மட்டும் தான். ஆனால் அதும் கிடைக்காமல் போனதால் ஒரு வெறுப்பு. ஆனால் அவன் அதற்காக எல்லாம் மனம் தளரவில்லை. மீண்டும் தன் வாழ்வில் உண்மையான அன்பு தேடிவரும் என்றும், அந்த நாளுக்காக அவன் காத்திருக்கிறான்.
என்னதான் துவாரா அவனோடு இல்லாவிடினும் அவர்கள் நட்பு அதன்பின்னர் இன்னமும் பலம் தான் ஆனது. சொல்லப்போனால் துவாரவின் வாழ்க்கை தான் விவியனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அப்படியே இருந்தவன் ஸ்கூல் முடித்து பிசிக்ஸ் இளநிலை முடித்து முதுநிலையும் முடித்து இன்று ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பிசிக்ஸ் ப்ரொபஸராக இருக்கிறான். அதன் பின்னர் துவாரா-விவியன் இருவரும் ஒன்றாக இல்லாவிடினும் அவர்கள் நட்பு பலமாகவே இருந்தது. துவாராவுடன் படித்த எல்லோருக்கும் விவியன் நன்கு பரிச்சயம். துவாரா தன் நண்பர்களோடு இப்பயணம் மேற்கொள்ளப் போகிறான் என்று தெரிந்ததுமே விவியனும் சம்மதித்து விட்டான்.
அவனுக்கான தேடல் எல்லாம் ஒன்று தான். அன்பு. தூய அன்பு. தனக்கென்று ஒருவர். குறிப்பாக ஒருத்தி. தன்னை நன்கு புரிந்துக்கொண்டவள். அவன் இழந்ததையெல்லாம் திரும்ப கிடைக்க செய்யும் அளவுக்கும் (நிச்சயம் கிடைக்காது தான். ஆனால் அவை தந்துக்கொண்டிருக்கும் வலி மறைந்தாலே அவையெல்லாம் மீண்டும் கிடைத்ததற்கு சமம் தானே? நம்மை கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் விஷயம் இனி நம்மை கஷ்டப்படுத்தாமல் இருப்பதே வெற்றி தானே?) ஒருத்தி. அவனுக்கும் அவன் சொந்தத்தில் பலர் கடமைக்கென்று சில பெண்களைக் காட்டி திருமணம் செய்துக்கொள்ள சொன்னாலும் யாரிடமும் அவனுக்கு அந்த உணர்வு இதுவரை தோன்றிடவில்லை.
சோ அவன் தேடல் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. அவனுக்கான கம்பேனியன் (companion -துணை ) தான் இன்னும் அவன் கண்ணில் படவேயில்லை. ஒருவேளை இப்பயணத்தின் முடிவில் அவன் அவளைக் கண்டுப்பிடிக்கவும் செய்யலாம். மதம், ஜாதி, அந்தஸ்து என்று குறுக்கியவட்டத்தில் அவன் அவனுக்கானவளைத் தேடவில்லை. அவனுக்கு பிடித்தவர் யாராயினும் சம்மதம் என்ற மனோபக்குவதுடனே இருக்கிறான். கிடைப்பாளா? கண்டிப்பாக கிடைக்கும். பல தடைகளைத் தாண்டி கைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு நேரலாம். அவன் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவே! ஆனால் அவன் தான் ஆல்ரெடி தயாராக உள்ளானே.
நினைவுகள் எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் என்று நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா? நாம் நேசித்தவர்கள் நம்மை நேசிக்காமல் போகலாம், ஏன் நம்மை வெறுக்கவும் செய்யலாம். ஏன் நம்மை விட்டு பிரியவும் செய்யலாம். ஆனால் அவர்களோடு நாம் சேர்த்த ஞாபகங்கள் என்றும் மாறாது. அதை நினைக்கையில் எப்போதும் பிளிஸ் (bliss -பேரின்பம் ) தான்.
விவியன் ஒரு கிபோர்டு பிளேயர். அவனுக்கு இசை ரொம்பவும் பிடிக்கும். இந்த மாதிரியான பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் அவனுக்கு புதிய ட்யூன் உருவாக வாய்ப்பளிக்கும். சோ அவன் தனிமையாக சென்று மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான்.
............................................................
அவர்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு 24 வயது மதிக்கதக்க பெண் ஏறியிருந்தாள். பாவம் அவள் தன் முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொண்டு இருந்ததால் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவளும் வாழ்க்கை தந்த சில வலிகளை மறக்க தான் பயணித்துக்கொண்டிருக்கிறாள். இவள் 'பயணங்கள் முடிவதில்லை' குரூப்பையும் சேர்ந்தவளில்லை, அனேஷியா டீமும் இல்லை. தனி பயணி.
பாடல் கேட்டுக்கொண்டிருந்தவன், உன் பெயரைச் சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே...
உன் பேரைச் சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடுச் சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்னப் பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே
சித்தாரா சித்தாரா சித்தா சித்தாரா சித்தாரா சித்தா
சித்தாரா சித்தாரா சித்தா
சித்தாரா சித்தாரா சித்தா
மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளைப் போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளைப் போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ உடல் வேறோ
விதியா விடையா செடி மேல் இடியா
செல்லாதே செல்லாதே
உன் பேரைச் சொன்னாலே…
பாடலை முணுமுணுக்க, அதில் ஒலித்த சித்தாரா .. சித்தாரா வில் ஒருகணம் தன்னை யாரோ அழைப்பதாய் நினைத்து எழுந்துப் பார்க்க அங்கே நம் விவியன் காதில் ஹெட்போனுடன் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டதுமே, "என் பேர்ல பாட்டா? என்ன பாட்டிது?" மேலும் அந்த ராகம் ஹம்மிங் மென்மையாக இருக்க உடனே அவளுக்கும் இந்த பாடலைக் கேட்கவேண்டுமென்று தோன்றியது. ஆனால் பாடல் தெரியாதே? அவளும் உடனே தன் மொபைலில் இருந்து கூகுளிக்க, இரண்டு மூன்று சஜஷன் காட்டியும் அது யாவும் அந்த பாடலில்லை.
அவளுக்கும் 'என்னைப்போல்' "பாட்டோஅம்னிஷியா" "சாங் சிசோபர்னியா" என்று ஒரு புதிய வியாதி இருக்கும் போல. (அதுதாங்க, இந்தமாதிரி புது பாடல்களைக் கேட்டால் உடனே அதை டவுன்லோட் செய்து சலிக்கும் வரை ரிப்பீட் மோடில் கேட்க வேண்டும் என்ற ஒரு கொடிய மனநோய்) இப்போது அந்த கொடிய நோய் அவள் மனதை அதிகமாக தாக்கிக்கொண்டிருக்கிறது. உடனடியாக அந்த பாடல் என்னவென்று அறிந்துக்கொண்டே தீரவேண்டும் மேலும் அதைக் கேட்கவும் வேண்டும். மண்டையெல்லாம் ஒருவித வலி, கூலுளையே குழப்பிக்கொண்டிருந்தாள் சித்தாரா. பாவம் அதும் என்ன தான் செய்யும் தன்னால் முடிந்தளவுக்கு சஜஷன் காட்டியும் அந்த பாடல் மட்டும் வரவில்லை.
மீண்டும் எட்டிப் பார்த்தாள். அவன் இன்னமும் பாடல் தான் கேட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் வேறுப் பாட்டு. சென்று அவனிடமே என்ன பாடலது என்று கேட்டுவிடலாமா? என்று ஒருகணம் எழுந்து நின்றே விட்டாள். எப்படி கேட்பது? அதும் இந்த இரவு நேரத்தில். யாரென்றே தெரியாத ஒரு புதிய ஆடவனிடம்? என்னவென்று கேட்பது? "நீங்கள் கேட்ட பாடலைச் சொல்ல முடியுமா? நானும் கேட்கவேண்டும்" என்றா கேட்பது? அப்படிக் கேட்டால் அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? பைத்தியமா இவள் என்று நினைத்துவிட்டால்? திரும்பி பார்க்க அந்த கம்பார்ட்மெண்ட்டே கிட்டத்தட்ட தூங்கி வழிந்தது. சரி இப்படி தெரியாமல் நமக்கு நாமே குழம்பி, அதிகமாக யோசித்து நம்மை நாமே வருத்திக்கொண்டு இந்த மண்டைவலியில் இருப்பதற்கு பதிலாக அவனிடமே நேராகச் சென்று கேட்டே விடலாம் என்று அவனை நெருங்குகிறாள்...
.................................
ஜிட்டு திரும்பி திரும்பி படுக்க பாவம் பசிவேறு எடுத்தது. அருகில் பார்க்க அங்கே ஹேமந்த் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அங்கே ஜெசிந்தா மட்டும் தூங்காமல் ஏதோ யோசனையிலே வியாபித்துக்கொண்டிருந்தாள். பெனாசிர், ரேஷா இருவரும் உறங்கிவிட்டனர்.
இவன் பையைத் தேட அதில் எதுவுமில்லை. சரியென்று ஹேமந்த்தின் பையைத் திறக்க அதிலும் எதுவுமே இல்லை. "ஆஹா, இப்படி கண்ட நேரத்தில் பசி வயித்தை பிடுங்குகிறதே" என்று யோசித்தவன் குறுக்க நெடுக்க நடந்தான். சரி நேராக பேன்ட்ரியே சென்று வாங்குவிடலாம் என்று யோசிக்க ரயில் கொஞ்சம் ஸ்லோவ் ஆவதைப் போல் உணர்ந்தவன் என்ன செய்யலாம் என்று மணியைப் பார்த்தான். வேர் இஸ் மை ட்ரைனைப் பார்க்க இன்னும் 5 நிமிடத்தில் நெல்லூர் சென்றுவிடும் என்று காட்ட, கையை பிசைந்துக்கொண்டு நின்றான்.
ஜிட்டுக்கு ஒரு கெட்டப் பழக்கம் உண்டு. அதாவது அவன் பசி தாங்கவே மாட்டான். பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே ஜிட்டனுக்கு எல்லாமும் பறந்து போய்விடும். அவன் கிட்டத்தட்ட கும்பகர்ணனைப் போல. கும்பகர்ணனை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் உடனே அவனுக்கு சாப்பிட வேண்டும். சாப்பிட்டுவிட்டால் உடனே தூங்க வேண்டும். இப்போது எடுக்கும் பசிக்கு என்ன செய்வதென்று புரியாமல் பார்க்க அங்கே தனியாக உறங்காமல் இருக்கும் ஜெசிந்தா மீது பார்வைப் போனதும் மனம் ஏனோ பாரமானதாய் ஒரு உணர்வு அவனுக்கு.
பசிக்காக எழுந்தவன் முதலில் எதையாவது கொரித்துவிட்டு பின்பு அவளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று நினைத்து நேராக நித்யாவின் கம்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தான். பின்னே அவளிடம் நிச்சயம் எதாவது இருக்கும் என்று நம்பி அங்கே சென்றவன் விளக்கு அணைத்து இருந்ததால் தன் செல் போன் டார்ச்சில் மெதுவாக அங்கே உறங்குபவர்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். முதலில் ஒரு முகத்தில் டார்ச் அடிக்க அது மிரு என்றதும் அடுத்திருந்தவர் மீது வெளிச்சம் பட அது மௌனி. அடுத்துப் பார்க்க இதித்ரி இருந்தாள். ஏனோ அவளைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ செய்தது அவளை நோக்கி குனிய அவன் முகத்தில் ஏதோ விழுந்தது. அவன் உணர்வதற்குள் அவனின் கழுத்தை யாரோ பிடித்து "நித்யா எழுந்தரி எழுந்தரி பவாரியா கொள்ளைக்காரன்" என்று குரல் வர முதலில் விழித்த மௌனி இப்படி அவன் முகம் மூடப்பட்டு யாரோ அவனை பிடித்திருப்பதைக் கண்டு கூச்சலிட மற்றவர்களும் எழுந்தனர்.
விழித்த நித்யா என்னவென்று உணர அதற்குள் திருடன், கொள்ளைக்காரன் என்று அனேஷியா கத்த, (ஆமாங்க ஜிட்டுவின் முகத்தில் பெட்ஷீட்டைப் போட்டு அவனை பிடித்திருப்பது அனேஷியா தான்) நித்யா எழுந்து அவன் முகத்தில் தன் பலம் கொண்டு ஓங்கி ரெண்டு குத்து குத்தினாள். உடனே தைரியம் வந்தவர்களாய் மிரு, இதித்ரி, மௌனி மூவரும் அவனை அட்டாக் செய்தனர். பார்வதி தான் சற்று பயந்து அமைதியாக நின்றுக்கொண்டிருந்தாள். அந்த சப்தத்தில் சிணுங்கிய இளவேனிலை தன் மீது தூக்கிப் போட்டுகொண்டு அவளை உறங்கவைத்துக்கொண்டிருந்தாள் பார்வதி.
அடித்தாங்க முடியாதவன் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே முட்டிப்போட்டு சரிந்தான். அது அங்கிருந்தவர்களுக்கு இன்னும் வசதியாக போக கைகளால் அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது கால்களால் அடிக்க கையை கூப்பி அவர்கள் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தவன் மீது கொஞ்சம் பச்சாதாபம் வர அவனை அடிப்பதை நிறுத்திய மகளிர் படை அவன் முகத்திலிருந்த பெட்ஷீட்டை விலக்கினார்கள்.
அங்கே தலையைக் கவிழ்த்து முகமெங்கும் வாங்கிய அடிகளால் சற்று வீங்கி சிவந்து இருக்க கண்கள் பாட்டுக்கு கலங்கி நிற்க, ஜிட்டனைக் கண்டதும்,
"டேய் எருமை நீதானா?" - நித்யா
"லூசாடா நீ?"- மிரு
உடனே இதித்ரி தான் அவனோடு குனிந்து அவன் அருகில் அமர்ந்து, "பேபி, ஆர் யூ ஓகே பேபி? ஆச்சிக்சோ என்னது முகமெல்லாம் சிவப்பா இருக்கு?'
அந்த வலியிலும் அழுதுக்கொண்டே, "நீ ஏன்டி... நீ முன்னப் பின்ன ரத்தத்தைப் பார்த்ததே இல்லையா?" என்று கோவமாய் ஆனால் அடிபட்டு பாவமாய் சொல்ல,
அவனை இந்தக் கோலத்தில் பார்த்ததுமே எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது. இருந்தும் அதை அடக்கிக்கொண்டு, |"டேய் லூசு இந்த நேரத்துல உனக்கென்னடா வேலை இங்க?" என்று கோவமாய் வினவினாள் நித்யா.
"எனக்கு வயித்தைப் பசிச்சதா அதுதான் உங்க கிட்ட எதாவது இருந்தா வாங்கிட்டு போலாம்னு வந்தேன்" என்று சொல்ல,
"எரும... அப்போ எங்களை எழுப்ப வேண்டியது தானே?"
"அதுக்கு தான் இது நீங்கலானு பார்க்க மூஞ்சில டார்ச் அடிச்சி பார்த்தேன், அப்போ தான் யாரோ என் முகத்துல போர்வையைப் போர்த்தி திருடன், இல்ல இல்ல பவாரியா கொள்ளைக்காரன்னு சொன்னதும் நான் உண்மையிலே கொள்ளைக்காரங்க வந்துட்டாங்கனு அமைதியா இருந்தேன். ஆனா நீங்க எல்லோரும் உடனே சரமாரியா தாக்க ஆரமிச்சுடீங்க, வாயில யாரோ ஒரு குத்து விட்டீங்களே அப்போ இந்த போர்வைவேற வாயில போயிடுச்சி, அதுதான் கத்தக்கூட முடியில, சரி சரிந்து விழுந்தா நிறுத்துவீங்கன்னு சரிந்து விழுந்ததுமே எல்லோரும் இப்போ அவங்கவங்க காலை யூஸ் பண்ண ஆரமிச்சுட்டிங்க" என்று அழுதான் ஜிட்டன். பின்னே ஊமைக்குத்தாக அல்லவா குத்திவிட்டார்கள்.
"ஆனா ஒன்னு"
"என்னடா?"
"ஆனாலும் சிங்கப் பெண்ணுங்க தான் நீங்கயெல்லாம், என்னா அடி" என்று சொல்லி அவன் கைகால்களில் அவனே தேய்த்துக்கொள்ள எல்லோரும் இப்போது பலமாக சிரித்தனர். ஆனால் இதித்ரிக்கு தான் அதிக கோவம் வந்து முறைக்க அனைவரும் அமைதியாகினர்.
"ஆமா எந்த புண்ணியவதி அது என்னை பின்னால இருந்து அட்டாக் பண்ணது?" என்று திரும்ப அங்கே அனேஷியா தான் இவன் பேசுவதையும் அவர்கள் பேசுவதையும் கண்டு அவசரப் பட்டுவிட்டோமோ என்று குற்றயுணர்ச்சியில் திருதிருவென முழிக்க,
"என்ன அனி? பார்த்திருக்கலாம் இல்ல?"என்று நித்யா கரிசனமாய் வினவ, இப்போது இதித்ரி, மௌனிக்கு அனேஷியா மீது கடும் கோவம் வந்து முறைத்தனர்.
அவளோ இப்போது என்ன செய்வதென்று புரியாமல் இருக்க, "ஏம்மா புண்ணியவதி நீ என் முஞ்சில போர்வையைப் போட்டு கும்மனது கூட தப்பில்ல, அதென்ன பவாரியா கொள்ளைக்காரன்? என் மூஞ்சைப் பார்த்தா பவாரியா கொள்ளைக்காரன் மாதிரியா இருக்கு?"
"ஐயோ சாரி அண்ணா, நான் வேணும்னே எதுவும் பண்ணல, நான் திரும்பிப் படுத்தேனா அப்போ சரியா நீங்க கதவைத் திறந்து உள்ளே வந்தீங்க. யாருடா அது திடீர்னு இந்த கம்பார்ட்மென்டுக்கு வரது. ட்ரெயின் கூட இன்னும் நிக்கலையே என்று உங்களை அப்செர்வ் பண்ணேனா அப்போ நீங்க ஒவ்வொருத்தருடைய மூஞ்சில டார்ச் அடிசீங்களா எனக்கு அது நீங்க என்னமோ தப்பா செய்யுற மாதிரி தோணுச்சு அதுதான் உடனே என் போர்வையை எடுத்து" என்று சொல்லி நிறுத்த,
இப்போது அனேஷியா சொன்னதைக் கேட்டதும் பெண்கள் எல்லோருக்கும் அவள் மீதிருந்த கோவம் போனது.
இதித்ரி தான் ஜிட்டனின் மண்டையில் மீண்டும் நங்கென்று ஒரு குட்டு வைத்து, "ஏன்டா லூசு? இப்படியா பண்ணுவ? லைட் போட்டிருக்கலாம் தானே? இல்லைனா எனக்கு கால் பண்ணியிருக்கலாம் தானே? மூஞ்சில ஏன்டா டார்ச் அடிச்ச?"
"சரி எதுக்கு வீணா எல்லோரையும் டிஸ்டர்ப் பண்ணனும்னு" என்று அவன் இழுக்க,
"இந்த நேரத்துல என்னடா பசி உனக்கு எரும?"
"பசியெல்லாம் சொல்லிட்டு வராது" என்று சொல்ல மீண்டும் எல்லோரும் அவன் பதிலில் சிரித்தனர். அனேஷியா தான் என்ன செய்வதென்று புரியாமல் குற்றயுணர்ச்சியில் இருக்க அதை புரிந்தவளாய் நித்யா தான்,
"அனி பரவாயில்ல விடு. சில். அதெல்லாம் அவன் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டான்" என்று உண்மையிலே அனேஷியாவை சமாதானம் செய்ய சொல்ல,
"பரவாயில்லையா?" என்று ஜிட்டு கத்த,
திரும்பி அவனைப் பார்த்து முறைத்தாள் நித்யா.
"அடிக்கவும் செஞ்சிட்டு முறைக்கவும் செய்யுறீங்களா? நீங்க யாருமேல கையை வெச்சியிருக்கீங்க தெரியுமா? ஒரு அரசு ஊழியன் மேல, இந்தியாவே கொதிக்கும்" என்று அவன் சீரியஸாக சொல்ல,
"அவன் அப்படி தான் நேரங்காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு இருப்பான்" என்று நித்யா சொல்ல, அப்போதும் அனேஷியாவுக்கு முகம் ஒரு மாதிரியே இருந்தது. அவனை நோக்கி கீழே அமர்ந்தவள்,
"அண்ணா என்னை மன்னிச்சிடுங்க... நான் வேணும்னே எதையும் பண்ணல, ஐ யம் எக்ஸ்ட்ரீமிலி சாரி" என்று சொல்ல இப்போது இதித்ரிக்கு இன்னமும் கோவம் வந்தது. "பண்றதெல்லாம் பண்ணிட்டு சாரி சொன்னா எல்லாம் சரியா?" என்று அவள் கோவமாய் கத்த,
"ஏன்டி என்னமோ உனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுற? கரெட்டா குறிப்பார்த்து 'அந்த' இடத்துல எட்டி எட்டி உதைச்சது நீ தானே?" என்று அவன் கேட்க இப்போதும் மிருக்கு அவளையும் அறியாமல் பலத்த சிரிப்பு வந்துவிட எல்லோரும் சிரித்தனர்.
"ஐயோ பேபி உனக்கு...?" என்று உண்மையான அதிர்ச்சியில் இதித்ரி கேட்க,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல கையை பலமா வெச்சி தடுத்துட்டேன்" என்று அவன் கையைக் காட்ட, நித்யா அதற்குள் தன்னிடம் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து அவனுக்கு முதலுதவி செய்ய எல்லோரும் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவனோ அங்கிருந்த குட்டே பிஸ்கட் எடுத்து சாப்பிட,
"எருமை அது பாப்பாக்கு டா. இரு வேற தரேன்" என்று அதைப் பிடுங்க போக,
"ஏன்டி அந்த மிதி மிதிச்சயில்ல போடி தரமாட்டேன்" என்று அவன் சாப்பிட்டான். ஒருவழியாக அவனுக்கு எல்லாமும் சரிபார்த்துவிட்டு சுற்றி அனைவரும் அமர,
அவனே அனேஷியா முகம் வாடியிருக்கக் கண்டு, "இங்க பாருமா உன் சமயோஜிதம் ஓகே, உன் வேகம் அடுத்தவங்களுக்கு சோகமாகிட கூடாது பி கேர்புல்" என்று சொன்னது தான் தாமதம் அவள் கண்கள் கலங்க எழுந்து நடந்தவள், "திரும்பி சாரி அண்ணா" என்று சொல்லி சென்று தனியாக அழுதாள். "ச்சே இந்த அவசரம், அவசரப்புத்தி தான் எத்தனை தடவை பட்டாலும் போகமாட்டேங்குதே" என்று அவள் மீதே கோவத்தில் இருந்தாள்.
இங்கே அவன் மெல்ல தத்தி தத்தி நடக்க, "டேய் பேசாம நீ இங்கேயே படு, அதுதான் அடுத்த சீட் காலியாக இருக்கே" என்ற நித்யாக்கு,
"அம்மா தாயே, நீங்க பண்ண வரைக்கும் எல்லாம் போதும்" என்று சொல்லி அவன் நடக்க இதித்ரி தான் அவன் பின்னாலே சென்றாள்.
"ரொம்ப வலிக்குதாடா?"
"ஆமா" அவனை லாவகமாக மறைவாக இழுத்தவள் அவன் கன்னத்தில் இச்சொன்று வைத்தாள். இது ஜிட்டனே எதிர்பார்க்கவில்லை. அவன் ஆச்சரியத்தில் உறைந்து நிற்க, அந்த இச் சப்தம் தான் அங்கிருந்தவர்களுக்குக் கேட்க எல்லோரும் ஓ என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
"உன்கிட்ட இருந்து ஒரு முத்தம் வாங்கணும்னா நாயடி பேயடி வாங்கணுமில்ல?" என்று அவன் அவளைச் சீண்ட,
"போடா முட்டாள் பேபி"
"ப்ளீஸ் ப்ளீஸ் இன்னொன்று கிடைக்குமா?"
"கொஞ்சம் செலவாகுமே பரவாயில்லையா?"
"பரவாயில்ல"
"நித்யா"
"எதுக்குடி இப்போ அவளைக் கூப்பிடுற?"
"பின்ன திரும்ப அடிவாங்குனா தானே கிஸ் கொடுக்க முடியும்?"
"எம்மா தாயே உன் கிஸ்ஸும் வேணாம் அடியும் வேணாம்" என்று அவன் வேகமாய் முன்னே நடக்க, மீண்டும் அவனை இழுத்தவள் மற்றொரு முத்தம் வைத்து அவனை அழைத்துக்கொண்டு போக முற்பட,
சிரித்தவன், "நான் போய்கிறேன் போ"
"நிஜமா?"
"நிஜமா"
அவள் திரும்பி வர அங்கே அவளை கலாய்க்க எல்லோரும் ரெடியாக இருந்தனர்.
தத்திதத்தி நடந்தவன் அவர்கள் கம்பார்ட்மெண்ட் போக அங்கே இன்னமும் தூங்காமல் ஜெசிந்தா இருப்பதைக் கண்டு அவளிடம் சென்றான்.
இங்கே வந்த இதித்ரியை சுற்றி நித்யா, மௌனி, பாரு, மிரு அமர அனேஷியா தான் இதைக் கேட்டு சிரித்தாலும் அவன் சொன்னதை நினைத்துக்கொண்டிருந்தாள். "உன் துடிப்பு அடுத்தவங்களுக்கு தடிப்பு வந்துவிடக்கூடாது" அதுயேனோ அவளுக்கு ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. (பயணங்கள் முடிவதில்லை...)
 
Top