Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 6

Advertisement

praveenraj

Well-known member
Member
திப்ருகார்க் எக்ஸ்பிரஸ் ஆனது எழும்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தது. லாங் டிஸ்டன்ஸ் ட்ரெயின் என்பதாலும் முழுக்க முழக்க ரிசெர்வ் செய்யப்படும் ட்ரெயின் என்பதாலும் மூன்றே வகையான பெட்டிகள் மட்டுமே இருக்கும். 2 ac, 3 ac, மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் வகைகள் மட்டுமே. இந்த ட்ரைனின் மொத்த பயண நேரம் இரண்டரை நாட்கள். அதாவது கிட்டத்தட்ட அறுபது மணிநேரம் எவ்வித தடையும் தாமதமும் இல்லாமல் சென்றால். அங்கிருக்கும் எல்லோருக்கும் இது ஒரு புது அனுபவமே. வெளியுலக தொடர்புகள் ஏதுமின்றி முழுவதும் ரயிலின் உள்ளேவே அங்கிருக்கும் பயணிகள் மட்டுமே ஒரு உலகமாய் இருக்கப்போகிறேது அடுத்த மூன்று நாட்களுக்கு.
பயணங்களே சுகமென்னும் போது இப்படியொரு ரயில் பயணம் நிச்சயம் அலாதி சுகம் தானே? அதும் முழுக்க முழுக்க நண்பர்கள் புடைசூழ. அதும் எல்லோரும் நீண்ட நாட்கள் கழித்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களாக கடைசியாக பிரிந்து சென்று அதற்கு பிறகு எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் கடமைகளில் மூழ்கி விட என்னதான் இடையில் பலமுறை சந்தித்திருந்தாலும் அது எல்லாம் கூட சில டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸோடு தானே? விவான் - நித்யா திருமணம், இளங்கோ - பார்வதி திருமணம், செபாஸ்டின் - ஜெசிந்தா திருமணம் என்று இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டுமே அவர்களால் சந்தோசமாக இருக்க முடிந்தது. ஏனெனில் இளங்கோ தாயின் இறப்பு, தியா தந்தையின் இறப்பு, தியானேஷ் நிச்சயம் நிறுத்தப்பட்டது, தங்களுடன் படித்த ஹரிபாபுவின் துர்மரணம் என்று இப்படி பல நிகழ்வுகளில் மீண்டும் சந்தித்துக்கொண்டாலும் அந்தந்த நிகழ்வின் சுற்றம் கருதி அவர்களால் பழையபடி மகிழ்ச்சியாக இணைய முடியவில்லை. மேலும் எல்லோரும் ஒவ்வொரு திசைக்கு சென்று விட்டார்கள். என்னதான் இப்படி ஒரு கெட் டுகெதர் பிளான் செய்தாலும் சொன்னபடி எல்லோராலும் வந்து கலந்துக் கொள்ள முடியவில்லையே?
வாழ்க்கை தான் எத்தனை விந்தை? சிலரோடு நாம் 24 *7 என்று வருடக்கணக்கில் இருந்திருக்கிறோம். மகிழ்ந்திருக்கிறோம். ஆர்ப்பரித்து இருக்கிறோம். ஆனால் இன்று நம்மால் அவர்களுடன் இருந்த அந்த பொன்னான நினைவுகளை மட்டும் தானே மீட்டெடுக்க முடிகிறது? காலம் எல்லோருக்கு சில கடமைகளையும் பொறுப்புகளையும் வழங்கியிருக்கிறது. அப்படி காலத்தின் சுழற்சியில் எல்லோரும் சுழன்றுக்கொண்டு தானே இருக்கிறோம்?
இதோ இப்போது இவர்கள் செல்கிறார்களே இந்த பயணம் சுமார் மூன்று வருடங்களாக பிளான் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இது ரயில்வே ஸ்டேஷன் வரை வரவே எத்தனை தடைகளை மீறி தாண்டவேண்டியதாக போனது தெரியுமா? ஓகே இதுபற்றிச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. பிறகு சொல்கிறேன்.
கால் மணிநேரத்தில் ரயில் இங்கிருந்து புறப்பட்டுவிடும். அதற்குள் அவர்களை முதலில் ரயிலில் ஏற்றிவிடலாம். அவர்களுக்கு எல்லாம் 3 ac யில் டிக்கெட் புக் செய்திருந்ததால் நான்கு கம்பார்ட்மெண்டில் அவர்களுக்கான இருக்கைகள் இருந்தது. சோ முதலில் ஆண்கள் ஒரு கம்பார்ட்மெண்ட் பெண்கள் ஒன்று என்று முடிவெடுக்க பிறகு ஆளாளுக்கு ஏறி அங்கே சென்று முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று ஏறினார்கள்.
ட்ரைனில் எப்போதும் இப்படி பல்க்காக டிக்கெட் புக் செய்தால் நிச்சயம் சில விஷயங்களில் சொதப்பிவிடுவார்கள். முக்கியமாக டிக்கெட் ஒன்றாக இருந்தாலும் இருக்கைகள் ஒன்றாக இருக்காது. அதே போல் மாறிமாறி இருக்கும். அதைப்போல ஒரு கம்பார்ட்மெண்டில் மட்டும் 5 இருக்கைகளை ஒதுக்கி மற்றவர்களைப் பிரித்து மீதமிருந்த மூன்று கம்பார்ட்மெண்டில் இடம் ஒதுக்கப்பட்டிருக்க பெண்கள் ஐவரும் (நித்யா, பார்வதி, இதித்ரி, மிருதுளா, மௌனிகா) கூடவே இளவேனிலும் அதில் ஐக்கியமாகினர். மற்ற இருக்கைகளில் மற்றவர்கள் மாறிமாறி அமர்ந்தனர். எப்படியும் இதே போல் மற்றொரு கூட்டம் வேறெங்காவது ஏறும். அவர்களிடம் சொல்லி மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
ஆண்கள் மீதமிருந்த மூன்று கம்பார்ட்மெண்ட்டில் அவர்களுக்குள் ஜோடிஜோடியாக ஏறிக்கொண்டனர். இளங்கோ, விவான், தியானேஷ் மூவரும் ஒன்றாக ஏற, துவாரா விவியன் செபாஸ்டின் ஆகியோர் ஒன்றில் ஏற, ஹேமந்த் மற்றும் ஜிட்டன் ஒன்றில் ஏறிக்கொண்டனர்.
.................................................................
இதே போல் அங்கு அனேஷியா அண்ட் டீமும் ரயிலில் ஒன்றாக ஏற முயற்சிக்க அவர்களுக்கும் இப்படியே மாறிமாறி சீட்டை ஒதுக்கியிருந்தனர். லோகேஷ் இஸ்மாயில் இருவரும் இரு சீட் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்ள அது இளங்கோ விவான் தியானேஷ் இருந்த கம்பார்ட்மெண்ட் ஆக இருந்தது.
ஹேமந்த் ஜிட்டன் இருந்த கம்பார்ட்மெண்டில் ஜெசிந்தா, பெனாசிர், ரேஷா மூவரும் ஏறிக்கொண்டனர்.
அவர்களோடு அங்கே ஒரு கும்பலும் ஏறியது. அதில் பல பெண்கள் சில ஆண்கள் என்று இருக்க அவர்களும் மாறிமாறி ஏறிக்கொண்டனர்.
..................................................................
ஜெசிந்தா தங்களுடைய கம்பார்ட்மெண்டில் ஏறியவுடன் அவளைக் கண்டுக்கொண்ட ஹேமந்த் உடனே நித்யாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தான். "ஜெஸ்ஸி இன் அவர் கம்பார்ட்மெண்ட்" என்று,
"செபா?" என்று பயந்த ஸ்மைலியை நித்யா தட்ட,
"அவன் இங்க இல்ல. துவாரா கூட இருக்கான். நோ ஒற்றீஸ்..." என்று பதிவிட,
"சரி நான் காலையில அங்க வரேன். அவகிட்ட பேசிப்பார்க்கறேன்" என்றாள் நித்யா.
"ஓகே"
"ஆமா செபாஸ்டினுக்கு தெரியாது தானே ஜெஸி இங்க இருக்கறது?"
"இல்ல, தெரியாது."
"சரி அவனை உங்க கம்பார்ட்மெண்ட் உள்ள விடாத..."
"சரி நான் துவாராக்கு மெஸேஜ் போட்டுடறேன்..."
"டன்."
"ஹே நித்து நாம ஒன்னும் ட்ரைனுக்கு பாம் வெக்கலையே?"
கோவமாக ஸ்மைலியை அவள் பதிவிட
"இல்ல நித்து எனக்கு என்னமோ நாம ரெண்டு பேரும் ஒரு சதித்திட்டம் போடுறமாதிரியே தோணுது... அதுதான் கேட்டேன்..."
"விடு அப்படியே செஞ்சாலும் தப்பில்ல ஹேமா. நாம நல்லதுக்கு தானே செய்யுறோம்?"
"சரி சரி காலையில பாப்போம். அண்ட் அங்க உங்க கம்பார்ட்மெண்ட் சேஃப் தானே?"
"ரெண்டு மூணு லேடிஸ் தான் இருக்காங்க. நோ ப்ரோப்லேம்."
"எதுனாலும் உடனே கால் பண்ணு..."
"டேய் நாம எல்லோரும் ஒன்னாவே ட்ராவல் பண்ண முடியாதா?"
"காலையில யாராரு எங்க போறாங்கன்னு பார்த்து மாத்திடலாம். tt கிட்ட பேசலாம் இல்லைனா கரெக்ட் பண்ணிடலாம். நைட் மட்டும் அட்ஜஸ்ட் ப்ளீஸ்..."
"ஓகே டா. குட் நைட்."
"ஹே மௌனி என்ன பண்றா?"
"இந்தா மா மௌனிகா... உன் ஆளலால உன்னைப் பிரிந்து இருக்கவே முடியலையாம்... வேணுனா அவனை இங்க வரச் சொல்லட்டா...?" என்று நித்யா கலாய்க்க,
"ஓ ஓ அப்படியா சங்கதி? நித்து அப்போ வா நாம கம்பார்ட்மெண்ட் மாறிடலாம். நாம யாருக்கும் கரடியா இருக்கக் கூடாது?" என்று மிரு சொல்லி கண்ணடிக்க,
"அக்கா ப்ளீஸ் கிண்டல் பண்ணாதீங்க..."
அதற்கு மிரு, இதித்ரி இருவரும் மேலும் அவளை வம்பிழுக்க அந்த கம்பார்ட்மெண்ட்டே கொஞ்சம் கலகலவென இருந்தது.
அந்த சத்தத்தில் தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி யாரென பார்த்தாள் அனேஷியா. அங்கே ஐந்து பெண்கள் அதும் கிட்டத்தட்ட தன் வயதை ஒத்த பெண்கள் இப்படி ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு ஏனோ அனேஷியாவுக்கும் அவர்களுடன் சென்று ஐக்கியமாக வேண்டுமென துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். பின்னே இரவு நேரம் நாமாக சென்று பேசினால் யாராயினும் தவறான எண்ணம் தானே வரும் என்று நினைத்து காலையில் சென்று அறிமுகம் ஆகிக்கொள்ளலாம் என்று நினைத்து கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
தங்களையே யாரோ நீண்ட நேரமாக நோட்டமிடுவதாய் உணர்ந்த இதித்ரி சட்டென திரும்பி அனேஷியாவைப் பார்க்க அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. சிரிக்கலாமா இல்லை வேண்டாமா என்று நினைத்து சிறு புன்னகையை தவழ விட, இதித்ரியோ சட்டென திரும்பிக்கொண்டு அருகிலிருந்த பார்வதியிடம் ஏதோ முணுமுணுத்தாள்.
அவ்வளவு தான் அனேஷியாவும் தலையை கவிழ்த்துக்கொண்டு மீண்டும் அவளின் புத்தகத்தில் மூழ்கினாள். ஆனால் இப்போது தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதைப் போல் உணர்ந்து நிமிர அவர்கள் ஐவரும் கூட்டமாக சேர்ந்து இவளை முறைத்துக்கொண்டிருந்தனர். வேகமாக அனேஷியா தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். மௌனி தான் ஏதோ பயம் கொண்டவளாய் (அவள் இயற்கையிலே கொஞ்சம் பயந்த சுபாவம்) "நாம வேணும்னா பசங்க யாரையாவது இங்க வரச் சொல்லலாமா?" என்று கேட்க
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. படுத்து தூங்குங்க எல்லோரும்..." என்று சொல்லி விளக்கை அணைத்து உறங்கினர்.
....................................................................
இஸ்மாயில் தான் அவனுக்கு தூக்கம் கண்ணைக் கட்டுவதாக சொல்ல லோகேஷ் ஏதோ யோசனையில் இருந்தான். அவனை அழைக்க அப்போதும் அவன் கண்டுக்கொள்ளாமல் இருக்க, அவனை உலுக்கினான்.
"சொல்லு இஸ்மாயில்?"
"என்ன யோசனையெல்லாம் பலமாக இருக்கு? என்ன விஷயம்?"
"இல்ல ஒண்ணுமில்ல..."
"எதையும் யோசிக்காத லோகேஷ். தூங்கு. எதுனாலும் காலையில பார்த்துக்கலாம்."
அவனின் யோசனைகளைப் புரிந்ததனால் தான் இஸ்மாயில் அவனின் மனதை மாற்ற இப்படி சொல்லிவிட்டு அவனும் கண் அயர்ந்தான்.
லோகேஷுக்கு தான் ஒரு மாதிரியான உணர்வு. பொதுவாகவே அவன் ரொம்ப கலகலப்பானவன். ஆனால் கொஞ்சம் ஈகோ கொண்டவன். நல்ல வேலையாள். எப்படியும் இந்த ப்ராஜெக்ட் நம் கையில் தான் வருமென்று கனவுக்கோட்டை கண்டிருந்தவனுக்கு அதை கலைக்கும் விதமாய் வந்து சேர்ந்தாள் அனேஷியா. அவளின் திறமைகள் மீது இவனும் சந்தேகமில்லை. ஆம் அவள் திறமைசாலிதான். ஆனால் தன்னைவிடவா? என்ற கேள்வி தான் அவனுக்கு அவளைக் கண்டாலே ஒரு வெறுப்பு தோன்றக் காரணம். இப்போது அதில் இந்த ப்ராஜெக்ட் கையைவிட்டு போனதும் ஒரு கோவம். அதிலே இன்று மாலை தன் கொலீக்ஸ் எல்லோரும் அவளிடம் பேசியது நினைக்கையில் இன்னும் ஆத்திரம் வந்தது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு அன்றோ? கருவினான். நானும் பார்க்கிறேன் எப்படி இந்த ப்ராஜெக்ட் நல்ல படியா முடியுதுனு என்று தவறான வழியில் சிந்தித்தான்.

5. இளங்கோ
அந்த கேங்கிலே ஒரு மாபெரும் படிப்பாளி என்றால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருபவன் இளங்கோ தான். அதனாலே அவனை செல்லமாக கிண்டல் செய்ய இளங்கோ அடிகளே என்று கவிஞரோடு ஒப்பிட்டு கலாய்ப்பர்கள . அப்பா அம்மா மற்றும் ஒரு அக்க . இதுதான் இவன் குடும்பம். அப்பா நன்றாக படித்து அப்போதே அரசாங்க உத்யோகத்திற்கு முயற்சித்து இன்று ஒரு தாசில்தாராக பணிபுரிகிறார். வசதிக்கு ஒன்றும் பெரிய பஞ்சமில்லை தான். அம்மாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அம்மா அப்பா எல்லோரும் ஓரளவுக்கு ஜாலி டைப் தான். இவனுக்கும் காதல் திருமணம் தான். ஆனால் இவனது காதல் ஒரு வித்தியாசமான நிகழ்வு. ஆம் இவன் வேறு கல்லூரி பார்வதி வேறு கல்லூரி. ஆனால் காதல் திருமணம். எப்படி ? ஒருவரை காதலிக்க பலமுறை சந்தித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரே ஒரு சந்திப்பு போதுமானது. அதற்கு எடுத்துக்காட்டு தான் இவன் காதல். இவன் காதலுக்கும் ட்ரைனுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
இவர்களின் காதலுக்கு பெரிதும் உதவியது விவான் மற்றும் துவாரகேஷ் தான். பின்னே ஸ்போர்ட்ஸில் பெரிதும் நாட்டமில்லாதவன் ஜோனல் ஸ்போர்ட்ஸ் மீட்டிங் நடக்கும் பாருவின் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்துள்ளனர்.
கல்லூரி முடித்தான். கேம்பஸிலே ஒரு வேலையும் கிடைத்தது. சொல்லப்போனால் இவர்களின் கேங்கில் முதலில் பிளேஸ் ஆகியதே இளங்கோ தான். நல்ல mnc. நல்ல ஜாப். கூடவே பாருவுடன் காதல். காதல் திருமணமாக மாற இப்போது வாழ்வின் அடுத்தகட்டத்திலும் புகுந்துவிட்டனர்.
6. பார்வதி
பார்வதி ஆக்சுவல்லி இவர்களின் செட் இல்லை. இளங்கோ விவான் இவர்களை விட ஓராண்டு ஜூனியர். வீட்டிற்கு மூத்த பெண . ஒரு தங்கை. அப்பா ஜாலி தான் ஆனால் அம்மா பயங்கர ஸ்ட்ரிக்ட். ஒருவழியா அம்மாவின் டார்சரில் இருந்து தப்பிக்க சொந்த ஊரிலே நல்ல காலேஜ் கிடைத்தும் மாட்டேன் என்று சொல்லி வெளியூர் வந்து படித்து அப்படியே இளங்கோ மீது காதலில் விழுந்து கடைசியில் அரேஞ்ட் மேரேஜ் ஆகி திருமணம் செய்துகொண்டாள். அதெப்படி இளங்கோ காதல் திருமணம் பார்வதி அரேஞ்ட் மேரேஜ் என்று கேட்கிறீர்களா? முதலில் காதல் தான் செய்தனர். ஒரு லக்கனத்தில் ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவன், ஒருவன் (இளங்கோ ) காதல் திருமணத்தை அரேஞ்ட் மேரேஜ் ஆக்கலாம். ஆக்கினான். ஆக்கினான் என்பதைக் காட்டிலும் ஆக்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் நண்பர்கள் புடைசூழதிருமணம் நடந்தது. இப்போது பேரெண்ட்ஸ் ஆகும் வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. ஒரு வருட ஜுனியர் என்பதாலே எல்லோரும் இவளுக்கு அண்ணா தான். அதும் அடிக்கடி தன்னை பார்க்க வரும் இளங்கோ கூடவே அழைத்துவரும் விவான் கொஞ்சம் க்ளோஸ் அண்ணா. அதனால் நித்யாவும் குளோஸ் ஆக இப்பொது விவானைக் காட்டிலும் நித்யா ரொம்ப தோஸ்த் ஆகிவிட்டாள்.
அந்த கேங்கிலே தான் மட்டும் ஜூனியர் என்பதால் எல்லோருக்கும் ரொம்ப பேவோரைட் ஆனவள். நித்யா போல் அடாவடியும் இல்லை அதற்கென்று மௌனிகா போல் பயந்த சுபாவமும் இல்லை.
வேலைக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டதால் சிலகாலம் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் (செபாஸ்டின் வேலைசெய்யும் அதே நிறுவனம்) பணிபுரிந்தாள். தற்சமயம் கொஞ்சம் செபாஸ்டினுடன் உரிமையாய் அண்ணனாய் பழகுகிறாள். தனக்கு நிறைய உதவிகளை செய்துவரும் செபாஸ்டினின் வாழ்க்கை இப்படி உள்ளதே என்ற ஆற்றாமை இவளுக்கு உண்டு. தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் உறவை சரிசெய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். இதே நிறுவனத்தில் அதே செபாவின் சிபாரிசில் மௌனிகாவும் பணிபுரிகிறாள்.
இயல்பிலே கொஞ்சம் பாசக்கார பெண். அதும் தன் வாழ்வில் இளங்கோ கிடைக்க பெற்றபின் அவன் மூலமாய் கிடைத்த உறவுகளை அதிகம் மதிப்பாள். அங்கிருக்கும் எல்லோரையும் உரிமையாய் அண்ணனாய் நினைத்து பழகுவாள். அதனாலே பார்வதி எல்லோருக்கும் 'பாரு' தான்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இப்போது அனேஷியா டீமில் இருபவர்களைப் பார்ப்போம்.
இஸ்மாயில் :
ஒரு ஆர்தோடக்ஸ் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் இஸ்மாயில். வீட்டில் ரொம்பவும் கண்டிப்பு. இருந்தும் எல்லாம் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது அந்த நாள் வரை. அவர் தாய்க்கு இனி குழந்தைகள் பிறக்காது என்று தெரிந்ததும் அவர் வேறொரு துணையை தேர்ந்தெடுத்து அவர் இன்னொரு திருமணம் செய்துக்கொண்டார்.மிகுந்த சிரமப்பட்டு தான் இஸ்மாயிலை வளர்த்தெடுத்தார் அவன் அன்னை. அவரின் உழைப்பில் படித்து இன்று அந்த பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறான். கொஞ்ச நாட்களில் அவன் தந்தை நிறைய கடன்களை வாங்கி அதை செலுத்த முடியாமல் திருந்தி புனித பயணமாக மெக்காக்கு புறப்பட்டு விட்டார். அவர் விட்டுச் சென்று சுமார் மூன்று வருடங்கள் ஆகும். அவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண்ணுக்கு கூட திருமணம் செய்துவைக்காமல் சென்றுவிட என்னதான் தன் தந்தையையும் அவரின் இரண்டாவது மனைவியையும் ஏன் அவர் மகளையும் கூட பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி கடந்த வருடம் தான் அவரின் பெண்ணுக்கு நிக்ஹா முடித்து செட்டில் செய்துவிட்டான். வீட்டில் இவனுக்கும் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் தான் முடியாது முடியாது என்று மறுத்துக்கொண்டிருக்கிறான். காரணம் பெனாசிர் என்று வேறு தனியாக சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறன்.
இவன் சொன்னால் இவன் அன்னை ஒன்றும் மறுக்க போவதில்லை தான். ஆனால் இத்தனை வருடங்களாக தன்னோடு பணிபுரியும் (இரண்டு வருடங்கள் மூன்று மாதம்) பெனாசிரிடம் தன் காதலைச் சொல்லிவிட சரியானதொரு சந்தர்ப்பத்தை வேண்டிக் காத்துக்கொண்டிருக்கிறான். அப்படி இருந்தவனுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு தான் இந்த டிரிப். எப்படியாவது திரும்ப சென்னை மண்ணில் காலை வைக்கும் முன் பெனாசிரிடம் தன் மனதை சொல்லிவிட வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறான்.
லோகேஷ் :
மிடில் கிளாஸ் பையன். நல்ல திறமைசாலி தான். ஆனால் கொஞ்சம் பொறாமை குணமும் கொண்டவன். ஸ்கூல் காலேஜ் ஆபிஸ் என்று எதிலும் தனக்கான ஒரு இடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அதன்படியே படித்தும் mba முடித்ததும் இங்கே வேலைக்கு சேர்ந்தான். அடுத்த தலைமை தனக்கு தான் என்னும் வேளையில் திடீரென உட்புகுந்தாள் அனேஷியா. இவனால் அவளின் வெற்றிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அவளின் வெற்றிகளை இவனின் தோல்விகளாய் பார்க்க தொடங்கியதால் இந்த வினை. போதாகுறைக்கு முதன்முதலில் அனேஷியாவைப் பார்த்ததுமே அவளின் மீது மையலும் கொண்டான். ஆனால் அவளோ ரொம்ப பொலைட்டாக அதை மறுத்தும் விட்டாள். சொல்லப்போனால் இவன் தான் அவளின் ஒர்கிங் ஸ்டைலை மாற்றியவனே . இவன் பிளிர்ட் செய்வது தெரிந்ததால் தான் எல்லோரிடமும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்துக்கொள்ள தொடங்கினாள். அது பார்பவர்களுக்கு அவள் அதிகார திமிரில் இருப்பதாய் தோன்றியது.
ஆயினும் அவள் மீதிருக்கும் காதல் குறையவில்லை. ஆனால் தனக்கும் மேலே இருப்பவள் இடம் சென்று தன் காதல் சொல்ல அவன் விரும்பவில்லை. எப்படியாவது அவளைக் காட்டிலும் மேலே சென்று அவளிடம் காதலைச் சொல்ல துடித்துக்கொண்டிருக்கிறான். அதேநேரம் அவளை வீழ்த்தி அந்த தலைமை பொறுப்பை அடையவும் காத்திருக்கிறான்.என்ன சொல்ல காதலும் உண்டு , பொறாமையும் உண்டு, வெறுப்பும் உண்டு.
அனேஷியா
வீட்டிற்கு ஒரே பெண். கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பவே எலைட் கிளாஸ். அழகுப்பதுமை. அழகு மட்டுமில்லாமல் அறிவும் திறமையும் கொண்டவள். இயற்கையிலே கொஞ்சம் இரக்ககுணம் கொண்டவள். ஆனால் சில காரணங்களால் அவள் இப்போதெல்லாம் அடிக்கடி கடுமை காட்ட நேரிடுகிறது. இதன் காரணமாக இப்போதெல்லாம் பேசுவதையே குறைத்துக்கொண்டாள். தானுண்டு தன் வேலையுண்டு என்று மட்டும் இருக்கிறாள். தாய் மிக சமீபத்தில் தான் தவறினார். புற்றுநோய் இருந்து அதை கவனிக்க தவறி கடைசி கட்டத்தில் கண்டுபிடித்து குணபடுத்த முடியாமல் நேர்ந்த மரணமது. வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் தந்தைக்கு தான் இவளுக்கு விரைவில் ஒரு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சிக்கிறார்.ஆனால் அவளின் மனதை அறியாதவராகவோ இல்லை புரிந்துக்கொள்ள முடியாதவராகவோ இருந்திருந்தால் இந்நேரம் எப்படியாவது தன் மகளுக்கு ஒரு திருமணம் நடத்தி வைத்திருப்பார். பாவம் எதிலும் மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காதவர் இப்போது இது சம்மந்தமான அவளை நிர்பந்திக்க முடியாமல் திணறுகிறார்.
உலகத்தையே அறிந்திருக்கும் தனக்கு தன் தந்தையின் விருப்பத்தை மட்டும் அறியாமளா இருப்பாள்? இவளுக்கும் ஆசை இல்லையா என்ன? நாம் சில விஷயங்களை கடந்து வந்த பிறகு தான் நமக்கு தோன்றும், இதை நாம் இவ்வாறு கையாண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே? இன்னும் சுலபமாக இதைச் செய்திருக்கலாமோ என்று நினைப்போம் அல்லவா? அப்படி தான் அவளும் நினைக்கிறாள். ஒருமுறை என்றால் சரி, அதே தவறை இருமுறை செய்துவிட்டாளே? என்ன செய்ய? அவளுக்கு இந்த பயணம் மிகவும் முக்கியம். இனி தன்னுடைய வாழ்க்கையையே மாற்ற போகும் அதி முக்கியமான பயணமிது. அவள் பொதுவாக டென்ஷன் ஆகமாட்டாள . ஆனால் அதிக டென்ஷனோ படபடப்போ இருந்தால் புத்தகங்களில் தன் மனதை நிலை நிறுத்துவாள். இன்றும் அதனால் தான் புத்தகங்களில் மூழ்கியிருக்கிறாள்.
எல்லோருக்கும் ஆசைகள் நிறைய இருக்க தான் செய்யும். ஆனால் அவை யாவும் நிறைவேறிடுமா? அப்படி நிறைவேறினாலும் அது அவ்வளவு சுலபமில்லை தானே?
ரயில் அது பாட்டிற்கு தன் வேகத்தைக் கூட்டியது. இன்னும் மூன்று மணிநேரத்தில் நெல்லூர் சென்றடையும். பயணக் களைப்பின் காரணமாய் சிலர் உறங்கிவிட இன்னும் சிலரோ தங்கள் ஆசைகள் எல்லாமும் நிறைவேறுமா? இத்தனை வருட வலிகளுக்கு சில விமோசனங்கள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
ரிசெர்வேட் கம்பார்ட்மெண்ட் என்பதாலும் இரவு நேரம் என்பதாலும் ரயில் பேன்ட்ரியில் அவ்வளவு கூட்டமில்லை. ஒருவர் 'சாய்' விற்றுக்கொண்டு செல்ல அனேஷியா பிளாஸ்கில்அதை வாங்கி வைத்துவிட்டு ஏதோ யோசனையில் இருக்க தலைவலியால் எழுந்த நித்யா 'சாயை' கூப்பிடும் முன்னே அது சென்று விட என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள். அனேஷியா தான் வாங்கி வைத்திருந்த பிளாஸ்கில் இருந்து வேண்டுமா? என்று வினவ, நித்யாவிற்கு பயங்கர தலைவலியால் அவளால் மறுக்கவும் முடியவில்லை அதற்காக எப்படி முன்பின் தெரியாதவர்களிமிருந்து வாங்குவதென்று முழித்துக்கொண்டிருந்தாள்.
....................................
அங்கே கீர்த்தனா பல வித குழப்பத்தில் இருந்தாள். எப்படியாவது தன் அண்ணன் (துவாரகேஷ்) வாழ்க்கையில் மாற்றும் வந்து விடாதா? திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட மாட்டானா? என்ற தவிப்பில் ஆழ்ந்தாள். அவளுக்கு தான் நிறைய நிறைய வலிகள். தங்கள் தந்தை வேறு உடல் நலம் குன்றி இருக்கிறார். அவருக்கு ஏதேனும் ஆகும் முன்னே எப்படியாவது தன் அண்ணனை தன் தந்தையிடம் பேச வைத்துவிட வேண்டும் என்று மருகுகிறாள். கூடவே தன் தந்தை இருப்பதற்குள் அவருடைய மகனின் திருமணத்தையும் பார்க்க வைய்த்துவிட வேண்டும் என்றும் முயல்கிறாள். இரண்டும் அவ்வளவு சுலபமாக நிகழ்ந்துவிட கூடிய காரியமில்லை என்பது அவளுக்கு மட்டும் தெரியாதா என்ன? ஆனால் நடத்தி வைத்துவிட வேண்டுமே? (பயணங்கள் முடிவதில்லை...)
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த மூன்று நாளுக்கு எந்த அப்டேட்ஸும் வராது. ஞாயிறு மாலை மீண்டும் சந்திப்போம். நன்றி
 
Top