Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-31

Advertisement

praveenraj

Well-known member
Member
'வா இதி டார்லிங் இந்த பசங்க எல்லோரும் எப்போ பாரு ஊர்த் திருவிழா மாதிரி கூட்டமா இருந்து நம்ம ப்ரைவசியை கெடுக்குறாங்க. அது மட்டுமா எல்லோருக்குமே நம்ம ஜோடி மேல பயங்கர பொறாமை. இந்த விவான் நித்யாக்கு எங்க அவர்களைவிட நாம பெஸ்ட் கபில் அவார்ட் வாங்கிடுவோமோனு பயம், இந்த ஹேமா மௌனிக்கு எங்க அவர்களைவிட நாம பெஸ்ட் லவ்வர்ஸ் ஆகிடுவோமோனு பயம், இந்த இளங்கோ செபா,விவி எல்லோருக்கும் அவர்களைவிட நான் அதிக ஃபேன்ஸ் வெச்சியிருக்கேன்னு பொறாமை டார்லிங். போதாக்குறைக்கு நான் வேற பார்க்க அப்படியே சினிமா ஸ்டார் மாதிரி சார்மிங்கா இருக்கேனா அதுனால பாய்ஸ் எல்லோருக்கும் பொறாமைடா.நீ வா டார்லிங் அவங்க எல்லோரும் நம்மள பிரிக்க வேணும்னே என்னைப்பற்றி உன்கிட்ட கோல் மூட்டிவிடுறாங்க. நீயும் அதுங்க சொல்றதையெல்லாம் நம்பி என்னை இந்த இன்னோசென்ட் பாயை சந்தேகப்படுற. நீ வா டார்லிங் கிட்ட வா' என்று இதித்ரியை முத்தமிட நெருங்க ஏதோ கொஞ்சம் வெப்பத்தை உணர்ந்தவன்,'இதி நீ ஹாட்டுனு (hot) தெரியும் அதுக்குன்னு இவ்வளவு சூடா இருக்க?' என்று முத்தமிட,"ஐயோ ஐயோ" என்று உதடு வெந்துபோக அலறியடித்து எழுந்தவன் எதிரில் கையில் லைட்டரோடு ஹேமா,விவான்,இளங்கோ,விவி நால்வரும் நிற்க, "அய்யய்யோ வாய் எரியுதே வாய் எரியுதே! ஏன்டா கிறுக்குங்களா? இப்படியா நெருப்பை வாயில வெப்பீங்க?"

"உன் வாய்க் கொஞ்சம் நீளம் போல.எப்படியெப்படி நீ பார்க்க அப்படியே சினிமா ஸ்டார்? என்னது எனக்கும் நித்யாவுக்கும் அப்படியே உன்னைக்கண்டு பொறாமை! நீங்க பெஸ்ட் கபிலோ?" ஹேமா 'பொங்கென்று' அவன் வாயில் குத்தி,"எப்படியெப்படி என்னையும் மௌனியும் விட நீங்க பெஸ்ட் லவேர்ஸ்னு எங்களுக்குப் பொறாமையா?" இளங்கோ விவி இருவரும் சிரிக்க இளங்கோ அவன் மண்டியிலே கொட்டி,"அப்படியே இவரு பர்சனாலிட்டில அதிகம் அதுனால எங்களுக்குப் பொறாமையா? ஒரு லவ்வேரை எப்படி சமாதானம் செய்யணும்னு கூட தெரியாத நீ பெஸ்ட் கபிலா?"

"நிப்பாட்டுங்கடா இடியட்ஸ். நான் என்ன நேர்லையா சொன்னேன்? எல்லாம் கனவு தானேடா"

"அதெப்படிடா கனவுல கூட நீ எங்களை அவுட் பர்பார்ம் பண்ணலாம்?"

"இதோட பின்விளைவுகளைப் பற்றித் தெரியாம பேசுறீங்க?"

"என்ன பெரிய பொடலங்கா பின்விளைவு?"

"எனக்கு சூடு வெச்சது மட்டும் என் ஃபேன்ஸ்கு தெரிஞ்சது இந்த ரயில் ஓடாது. ஊரே கலவரத்துல மிதக்கும். ரத்த ஆறு ஓடும் .எனக்காக என் பேன்ஸ் எல்லோரும் தீக்குளிப்பாங்க (ஏங்க அப்படியா? சொல்லவேயில்லை!) இந்தியாவே ஸ்தம்பித்து போகும்"

"ஓ அப்படியா? பின்விளைவுகளை நாங்க பின்னாடி பார்த்துக்கறோம், இப்போ நீ முன் விளைவுகளைப் பார்க்கறியா?"

"முன் விளைவா? அப்படின்னா?"

அவன் முகத்தில் பெட்ஷீட்டைப் போட்டு எல்லோரும் மொத்து மொத்து என்று மொத்திவிட்டு ஓட இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெனாசிர், இஸ்மாயில், ஜெசி உட்பட எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். துஷியும் சிரிக்க, கொஞ்சம் பேக்வார்ட் போலாம்.

துஷியைக் கிண்டல் செய்துவிட்டு வேகமாய் ஓடிவந்த யாழ் ஒரு பெரிய லைட் ஹவுஸின் மீது மோதியதைப்போல் உணர நிமிர்ந்துப் பார்க்க லோகேஷ் தான் கோவமாய் முறைத்துக்கொண்டு நின்றான்.

"அறிவில்லை இப்படித் தான் பின்னால பார்த்து ஓடிவருவாங்களா?"

"உனக்கு அறிவில்லை? அதுதான் நான் பின்னால பார்த்து ஓடிவரேன்னு தெரியுது தானே? நீ முன்னால தானே பார்த்து வர நீ ஒதுங்கி நிற்க என்ன?"

"என்னை வந்து இடிச்சதுமில்லாம இப்படி திமிரா வேற பேசுற? கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதா?"

"மேன் கிட்ட மேனர்ஸ் காட்டலாம் உங்ககிட்ட எப்படி?"

பல்லைக்கடித்தவன் கையை ஓங்க அதைப் பிடித்தவள்,"நீயும் வேணுனா பின்னாலே பார்த்துட்டு வந்து என்னை மோது.அதைவிட்டுட்டு கையை ஓங்குற வேலையெல்லாம் கூடாது" என்று சொல்லிவிட்டு,"எனிவெய்ஸ் சாரி" என்று சென்றாள்.

அதுவரை துஷி சொன்ன எதையும் நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்த பெனாசிர் இஸ்மாயில் இருவரும் அவனைக் கொஞ்சம் நம்புவதைப் போல் பார்க்க,"நம்புங்க எனக்கு அவளைத் தெரியும். நான் அவளைப் பார்க்கணும்" என்று சொல்ல,

"அவ குளிக்கப் போயிருக்கா"

"ஓ அப்படியா தள்ளுங்க நானும் போறேன்"

"வாட்?"

"ஏங்க இவ்வளவு ஷாக்? சும்மா ஜோக் ஜோக். டேக் இட் ஈஸி லைப் இஸ் கிரேஸி"

இன்னமும் அவர்கள் முறைக்க,

"ஐ அம் துஷ்யந்த். ப்ளீஸ்" என்று இவன் கையை நீட்ட இஸ்மாயில் கைக்கொடுத்தான் பெனாசிர் முறைத்தாள்.

"ஓகேங்க ரேஷு டார்லிங் வரட்டும் நீங்களே அவ கிட்ட எல்லாமும் கேளுங்க என்னையை அவளுக்குத் தெரியுமா இல்லையானு அவ சொல்லுவா. அப்புறோம் முடிவு பண்ணுங்க" என்றவன் தன் இருக்கைக்கு வர,

"என்ன பாய் ஃப்ரண்ட்? சமாதானம் செஞ்சாச்சா?"- யாழ்

கடுங்கோவமாய் முறைத்தான்.

"சீக்கிரம் குளிச்சிட்டு வா நாம சாப்பிடலாம்"

"ஏன் நீ குளிக்கலையா?"

"அட ஆடு மாடெல்லாம் தினம் குளிக்குதா? வெதர் கூட சில்லுனு தான் இருக்கு. நான் மதியமா குளிப்பேன். இல்ல குளிக்காம கூட இருப்பேன். உனக்கென்ன? வா சாப்பிடபோலாம்"

"டிபன் ரெடியா?"

"ஆம் தியானேஷ் ஆர்டர் பண்ணிட்டாராம். இன்னும் 15 மினிட்ஸ்ல வந்திடுமாம்"

சரி சாப்பிட்டு வந்து டீல் செய்யலாம் என்று அவர்கள் ரெடி ஆகினர்.

ஜிட்டு எழுந்து குளிக்கப் போக அப்போது அங்கேயிருந்த ஜெசி இவனைப் பார்த்துச் சிரிக்க,"ஹா ஹா அது ஒண்ணுமில்ல எனக்குக் கொஞ்சம் உடம்பு வலி. அதுக்கு தான் எல்லோரும் சேர்ந்து எனக்கு மசாஜ் பண்ணிவிடுறாங்க. நீங்க ஒன்னும் தப்பா நெனைக்க வேணாம்" என்றதும்,

சிரித்துக்கொண்டே அவள் தலையாட்ட,

"தெரிஞ்சிடுச்சா? எல்லாம் தெரிஞ்சிடுச்சா?" என்று இவன் 'காஞ்சனா' ஸ்டைலில் கேட்க ஜெசி சிரித்தாள்.

"ஹே ஹே அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"

"உங்களுக்குக் கோவமே வராதா அண்ணா... அண்ணான்னு கூப்பிடலாமில்ல?"

"தாராளமா..." சிரித்தவன்,"சின்ன வயசுல எல்லாம் என்னைக் கிண்டல் பண்ணா நான் ரொம்ப அழுவேன்.அப்போ தான் என் மிஸ் சொன்னாங்க, நீ எப்படி எடுத்துக்கறங்கறதுல தான் எல்லாமே இருக்கு ஜிட்டு.ஜாலியா எடுத்துக்கோ எதையும் மூளைக்கும் ஏத்தாத மனசுலையும் வெச்சுகாதான்னு சொன்னாங்க.அன்னையில இருந்து நான் இப்படித் தான்.நோ ஒற்றீஸ்,டேக் இட் ஈஸி தான். நோ ப்ரோப்லேம்"

"கிரேட் அண்ணா"

"இப்போ என்னைக் கிண்டல் பண்ற இவங்க தான் ஏன் அடிக்கற இவங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எ ஃப்ரண்ட் இன் நீட் இஸ் எ ஃப்ரண்ட் இன்டீட் போல அவங்க எனக்கு எவ்வளவு சப்போர்டிவ்னு யாருக்கும் தெரியாது. மூணு வருஷத்துக்கு முன்னாடி என் அம்மாக்கு ஹார்ட்ல திடீர் ப்ராப்ளேம். ஆபரேஷனுக்கு 7 லட்சத்துக்கு மேல ஆச்சு. நான் கேட்காமலே அவங்க எல்லோரும் தந்தாங்க. அண்ட் இன்னைவரைக்கும் நான் யாருக்கும் அதைத் திருப்பித் தரல. யாருமே அதை என்கிட்ட கேட்கவுமில்லை, நான் கொஞ்ச பணத்தைத் திருப்பத் தந்தபோது இதே மாதிரி ஆனா சீரியஸா அடிச்சானுங்க. மூடிட்டு இனிமேல் இந்த பணத்தை fd ல போட்டு சேர்த்துவைனாங்க. எல்லோருக்கும் இப்படியெல்லாம் கிடைக்கமாட்டாங்க.நான் ரொம்ப லக்கி"

"சூப்பர்"

"இவனுங்களைப் பற்றிச் சொன்னா சொல்லிட்டேப் போலாம். அதைவிடு உன் மேட்டரு என்ன? நீ இங்க இருக்கறது செபாக்குத் தெரியாது தானே? அதெப்படித் தெரியும்? உனக்கே நான் சொல்லித்தான் தெரியும். ரகசியம் ரகசியமாத் தான் இருக்கனும். டோன்ட் ஒர்ரி. அண்ட் நான் உன்கிட்டச் சொன்னதை நீ யார்கிட்டயும் சொல்லக் கூடாது. நமக்குள்ளேயே இருக்கனும்" என்று சொல்லிவிட்டு ஜிட்டு சென்றான். ஏனோ முன்னால் சொன்னதிற்குக் கொஞ்சம் உணர்ச்சிவச பட்டவள் பின்னால் சொன்னதை நினைத்து அவனின் அந்தக் கள்ளங்கபடமற்ற இன்னொசென்ஸை நினைத்துச் சிரித்தாள்.

"என்ன ஜெசி இப்போதான் நீ அழகா இருக்க. நீ இப்படியே சிரிச்சிட்டே இருந்தா சூப்பரா இருக்கும் தெரியுமா? அதைவிட்டுட்டு அழுதிட்டே இருந்தா பார்க்கவே சகிக்கல" என்றாள் பெனாசிர்.

அவன் அனுப்பிய மெஸேஜையே முப்பத்தி ஐந்தாவது முறையாகப் பார்த்தாள் ஜெசி.

......................................................

குளிக்கச் சென்ற ரேஷாக்கு பழைய நாட்கள் எல்லாமும் நினைவுக்கு வந்தது.

அந்த மழை நாளில் தன் ப்ராஜக்ட் கைடை அவரின் வீட்டிற்குச் சென்று சந்திக்க முற்படுகையில் அவனும் தனக்கு முன்னால் தமிழில் பேசிக்கொண்டே பைக் ஓட்டிச் செல்ல ஆட்டோவில் சென்றவள் திடீரென தமிழ் குரலைக் கண்டு அவனைத் தேட, ரெயின் கோட் அணிந்து கொண்டு பைக்கில் மழையை அவன் ரசித்துக்கொண்டே செல்ல ஏனோ அவனோடு தானும் சென்றால் நன்றாக இருக்குமே (அதாவது மழையில் பைக்கில்) என்று நினைத்து ஆட்டோவின் ஜன்னலில் அவனைப் பார்த்தபடியே சென்றவளை அவனும் பார்த்துவிட்டுத் தான் சென்றான். கொஞ்ச நேரம் ஏதேதோ யோசனையில் போக அவனும் தன்னோடே வருவதைப் பார்த்து இவள் யோசிக்க அதே ப்ரொபெஸர் வீட்டின் முன்பு இறங்கினான் அவன். ரெயின் கோட்டை கழட்டிவிட்டு ஹெல்மெட்டையும் கழட்டி விட்டு தலையை ஆட்ட அவனோடு அவன் கேசமும் சேர்ந்து ஆட அதைக் கைகளில் கோதியவன் கண்ணாடியில் தலை வாரிவிட்டு அவன் முன்னே செல்ல இவளும் சென்றாள். இருவரும் அருகருகே நின்று பெல் அடிக்கவும் கதவைத் திறந்தார் அவர்.

"ஹே ரேஷா வா வா வெல்கம்"

"டேய் துஷி நீயும் வாடா"

திரும்பி பார்த்தவள் 'ஒருவேளை இவன் இவர் மகனோ?' என்று யோசிக்க, அவனோ அப்போது தான் 'இவள் தமிழ் பெண்ணா?' என்று அவளை அளந்தான்.

இருவரும் வீட்டிற்குள் செல்ல,"ஆண்ட்டி, டிரஸ் ஈரமாகிடுச்சு. கொஞ்சம் டவல் கிடைக்குமா?"

"தரேன்டா. நீ மழையில நனைஞ்சது மட்டும் உன் அம்மாக்குத் தெரிஞ்சது, இதுதான் என் பையனை நீ கைட் பண்ற லட்சணமா? உன்னை நம்பி அனுப்பினேன் பாருனு" குதிகுதியென குதிச்சிடுவா...

"நான் சொல்ல மாட்டேனே ஆண்ட்டி" என்று சொன்ன உடனே தும்பினான் துஷ்யந்த்.

"ஆனா தும்மல் காட்டிகொடுத்திடுமே?இரு" என்று அவர் செல்ல அவளோ இவ்வளவு சாதரணமா உரையாடும் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னே அவளைப் பொறுத்தவரை அந்த கைட் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆளாச்சே?

*******************

பெனாசிரும் இஸ்மாயிலும் அனேஷியாவைப் பார்க்க அந்த கம்பார்ட்மென்டுக்கு வந்துவிட இருவரையும் பார்த்து,"வெல்கம். குட் மார்னிங் இஸ்மாயில், குட் மார்னிங் பெனாசிர்" என்றவளுக்கு,

அவர்களும் பதிலுக்கு "குட் மார்னிங்" சொல்லிவிட்டு அவளை ஒருவித சங்கோஜத்துடன் பார்க்க,

"என்ன ஆச்சு? எனி ப்ரோப்லம்?"

"அதெல்லாம் இல்ல மேம். அது வந்து... சாரி நாங்க உங்களை நேத்து முழுக்க கண்டுக்கவே இல்ல. அது..."

"ஹே சில். இதெல்லாம் ஒரு மேட்டரா? அண்ட் உங்களுக்கு எல்லாம் ஓகே தானே? அங்க ஒன்னும் ப்ராப்லம் இல்லைதானே?"

அப்போது அங்கிருந்த மிருவும் பாருவும்,"அதெல்லாம் ஒன்னுமிருக்காது. அங்க தானே ஜிட்டுவும் ஹேமாவும் இருக்காங்க. என்னங்க அவங்க எதாவது?" என்று பாரு இழுக்க,

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் ப்ராப்லம் இல்ல" என்றாள் பெனாசிர், இப்போது தான் தெரிந்துக்கொண்டாள் ஹேமந்த்தின் பெயரை. அவர்கள் இவர்களைப் பார்க்க,

"உங்க ஹெட்டை நினைத்து நீங்க ஒன்னும் கவலைப்படவேணாம். அவங்களை நாங்க பத்திரமா பார்த்துக் கொள்கிறோம்.நோ ப்ரோப்லம், நாங்க இருக்கோம்" என்று கோரஸாக சொல்ல பெனாசிர் உட்பட அனேஷியாவும் சிரித்தனர். பின்பு கொஞ்சம் கேசுவலாய்ப் பேசிவிட்டு பெனாசிரும் இஸ்மாயிலும் சென்றனர்.

"பார்ரா அவ்வளவு பெரிய ஆளா நீங்க? உங்களைத் தேடிவந்து விசாரித்துவிட்டு போறாங்க?" என்று மிரு அனேஷியாவைக் கிண்டல் செய்ய,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் இந்த ப்ராஜெக்ட் ஹெட். அதுனால" என்று சிரிக்க அங்கே செல்லும் பெனாசிர் இஸ்மாயில் கூட அனேஷியாவின் இந்த மாற்றத்தை நினைத்து அதைப்பற்றிப் பேசிக்கொண்டுப் போனார்கள்."எனக்குத் தெரிந்து இவ்வளவு பிரீயா கேசுவலாய் அவங்களை நான் பார்த்ததே இல்லை இஸ்மாயில்" என்று அவள் சொல்ல அதற்கு அவனும் ஆமோதித்தான்.

அதற்குள் இதியும் வந்துவிட அவர்கள் நால்வரும் ரெடி ஆகிக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

"எனக்கு எப்போடா அசாம் போய்ச் சேருவோம்னு இருக்கு" - இதி

"ஏன் உனக்கு இந்த ட்ராவல் பிடிக்கலையா?"

"அப்படியில்ல நல்லா தான் இருக்கு. ஆனாலும் நேத்து ஒரு நாளே ரொம்ப ரொம்ப மெதுவா போச்சு. வழக்கமா வேலைலேயே 10 -14 மணிநேரம் போயிடும். காலையில எழுந்து ரெடி ஆகி ஆபிஸ் போய்த் திரும்பி மாலை வந்து ஒரு மாதிரி பரபரப்பாவே போயிடும். ஆனால் அல்மோஸ்ட் 35 ஹவர்ஸ் மேல நாம இந்த ட்ரெயின்லேயே இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு. நல்லாத்தான் இருக்கு ஆனாலும் ஒருமாதிரி..."

"எஸ். ஒரு பரபரப்பாவே இருந்து பழகிட்டு இப்போ வித்யாசமா இருக்கு" என்று சொன்னவர்கள், அப்படியே அவரவரின் வீடு மற்றும் அவர்கள் பெற்றோரின் நினைவுகள் வர எல்லோரும் தங்கள் வீட்டிற்கு அழைத்தனர்.

நித்யா அப்போது தான் இளவேனிலைக் குளிப்பாட்டிவிட்டு தூக்கிவர தன் தந்தைக்கு அழைத்து அவர் அழைப்பை எடுக்காததால் அமைதியாக இருந்த அனேஷியா,"குட்டி இங்க வாங்க நான் டிரஸ் பண்ணிவிடுறேன்" என்று சொல்லி இளவேனிலை அழைத்து உடைமாற்றிவிட நித்யாவும் ரெடி ஆக அதற்குள் விவானின் அன்னை அழைத்துவிட அவருடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

லேடிஸ் எல்லோரும் இங்கே ரெடி ஆக பாய்ஸ் எல்லோரும் அங்கே ரெடி ஆகிவிட்டு வர அப்போதுதான் ஜிட்டு கேட்டான்,"டேய் துவாரா?"

"அவன் காலையிலே எழுந்து குளிச்சி ரெடி ஆகிட்டான். விடுங்க அவனா நார்மல் ஆகட்டும்" என்று சொன்னான் விவி.

"செபாவைக் காணோம்?"

"அவன்..." என்ற விவான் ஹேமாவையும் இளங்கோவையும் பார்க்கவும் தியா, ஜிட்டு, விவி மூவரும் புரியாமல் விழிக்க,

"மச்சான் சொல்லு உன் மச்சானைப் பத்தி" என்று ஹேமாவாய் வம்புக்கு இழுத்தான் இளங்கோ.

"எனக்கு நல்லா வாயில வரும்" என்றான் ஹேமா.

"பாவம்டா அவன். நைட்டெல்லாம் ஒருமாதிரியே இருந்தான்" - விவி

"விடுங்க இருக்கட்டும்"

"டேய் அப்புறோம் ஜெஸியும் அழுதுகிட்டே இருந்தாடா" - ஜிட்டு

"ஓ!"

"என்ன ஓ? நான் தான் செபா இந்த ட்ரைன்ல தான் இருக்கானு சொல்லிட்டேன். அவனை சாயங்காலம் வரை காக்கவிட்டு சொல்லிடுவோமா?" என்று ஆர்வமாய்க் கேட்ட ஜிட்டுவைப் பார்த்த ஹேமந்த்,

"முதல்ல இவனை கவனிக்கணும்" என்று விவானைப் பார்த்துச் சொல்ல,

"உங்களுக்கெல்லாம் கொஞ்ச கூட அவன் மேல பாசமே இல்ல. எல்லோரும் இப்படி ஜோடி ஜோடியா சுத்துறீங்களே அவன் மட்டும் தனியா இருக்கானே அவனையும் சேர்த்துவைக்கணும்னு ஆசையில்லையா? பாருங்க விவி கூட ஆளை கரெக்ட் பண்ணிட்டாரு" என்று சொல்ல,

"அவன் ஏன் தனியா இருக்கனும்? அவனுக்கு ஜோடி இருக்கு" - விவான்

"கரெக்ட் இப்போதான் என் வழிக்கே நீங்க வரீங்க. வாங்க ஜெஸியும் இங்க தான் இருக்கானு போய்ச் சொல்லுவோம்"

"அவன் அதைச் சொல்லல மிஸ்டர் ஜிட்டேந்திரன்"

"அப்போ என்ன ஜோடி?"

"மச்சான் அவன் மட்டும் எதுக்கு ஆள் இருந்தும் தனியா இருக்கனும்? பேசாம உன்னையும் இதித்ரியையும் பிரிச்சு விட்டுட்டா அப்போ அவனுக்கு கம்பெனிக்கு நீயும் இருப்ப தானே? என்ன விவான் இதைத்தானே சொல்ல வந்த?" - இளங்கோ

"கககபோ மச்சி. கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விகொண்டாய்" என்று சொல்ல,

"ஓ அப்போ இதுவரை ஒரு லவ் பேர்ட்ஸை பிரிச்சு விளையாண்டது பத்தாதா? அப்புறோம் உங்களுக்கு என் அணியில இருந்து சாபங்கள் வரும்"

"அதுதான் ஏற்கனவே வந்துடுச்சே. பரவாயில்லை நீ உன் நண்பனுக்கு ஜோடியா இரு"

"அடப்பாவிங்களா அப்போ நான் கண்ட பகல் கனவு பலிச்சிடுமாடா? இதி டார்லிங் நான் உடனே உன்னை மீட் பண்ணனும்" என்று ஓடப் பார்க்க பாய்ஸ் எல்லோரும் சிரித்தனர்.

"மச்சான் பசிக்குதுடா..."

"வந்திடும் வந்திடும்" என்று சொல்ல அதற்குள் நித்யாவிடமிருந்து விவானுக்கு அழைப்பு வர அவன் செல்ல, சித்தாராவிடமிருந்து விவிக்கும், மௌனியிடமிருந்து ஹேமாக்கும், பாருவிடமிருந்து இளங்கோகும் வர,"டேய் மச்சான்களா இவங்க ஏதோ நம்ம வெச்சு காமெடி பண்ற மாதிரியே தோணுதே?" என்று சொல்ல எல்லோரும் அங்கே நித்யாவின் கம்பார்ட்மென்டுக்கு விரைந்தனர்.

அனியிடம் ரெடி ஆன இளவேனில் அப்போது அங்கே வந்த சித்தாராவிடம் விளையாட "நீங்க எல்லோரும் இங்க இருக்கீங்க எங்க அவங்க எல்லாம்?" என்று பாய்ஸை கேட்டாள் அவள்.

"எல்லாம் இப்போ வருவாங்க பாரு" என்று சொல்ல எல்லோரும் என்ட்ரி கொடுத்தனர்.

நித்யா விவானிடம் அன்னை அழைத்ததாய்ச் சொல்ல அப்படியே எல்லோரும் அவரவர் வீட்டில் பேசினார்கள். கீர்த்தியும் விவானை அழைத்தாள்.

"சொல்லு கீர்த்தி"

"அண்ணா அவன் என்ன பண்றான்?"

"குளிச்சிட்டு அமைதியா உட்கார்ந்திருக்கான்"

"............"

"நீ சாப்பிட்டியா?"

"ஹாம்"

"அப்பா?"

"அவரும் சாப்பிட்டாரு. அவருக்கு எதுவுமே தெரியாது. நானும் சொல்லல..."

"சரி விடு. எல்லாம் நல்ல படியா நடக்கும்" என்று சொல்ல வண்டி துர்காபூர்(மேற்கு வங்கம்) ரயில் நிலையம் வந்தடைய அவர்கள் ஆர்டர் செய்த உணவும் வந்தது.

எல்லோரும் சாப்பிட ஆரமிக்க பாரு தான், "ஜிட்டு அண்ணா உண்மையைச் சொல்லுங்க நீங்க எப்படி இதித்ரியை கரெக்ட் பண்ணீங்க?"

"மச்சி சொல்லவே இல்ல நீ இதித்ரியை கரெக்ட் பண்ணிட்டியா மச்சி?" என்று ஏழரையை இழுத்தான் ஹேமா.

'ஆஹா இவனுங்க எடுத்த சபதத்தை நிறைவேத்தாம இருக்க மாட்டானுங்க போலயே' என்று நினைத்தவன், பேச்சை மாற்றும் விதமாய்,"டேய் செபாவையும் சாப்பிட கூப்பிடுங்கடா" என்று சொல்ல,

செபாவை விவி இழுத்துக்கொண்டு வந்தான்.

"செபா அண்ணா வந்தாச்சு. இப்போ சொல்லுங்களேன்"

எல்லோரையும் திரும்பி பார்க்க இப்போது எல்லோரும் ஏதோ தெரிந்துக்கொள்ளும் ஆவலில் அவனைப் பார்க்க, "இவங்க விடமாட்டானுங்க போலயே?"

"ஹ்ம்ம் சொல்லுங்க ப்ளீஸ்"

"நீயும் இளங்கோவும் எப்படி கல்யாணம் பண்ணீங்க? அதைச் சொல்லு நான் என் கதையை பின்னாடி சொல்றேன்"

"அதெல்லாம் செல்லாது செல்லாது. முதல பெரிய மனுஷன் தான். சோ நீங்க தான்"

"நான் எப்போடா சொன்னேன் பெரிய மனுஷன்னு?"

"யாருக்கு பேன்ஸ் க்ளபெல்லாம் இருக்கோ அவங்க தான் பெரிய மனுஷன்"

"ஆமா எங்களைவிட நீங்க பெஸ்ட் கபிலாமில்ல? சொல்லு" என்றாள் நித்யா.

"ஏ நித்யா இவ (பார்வதி) கேட்கறானா அதுல ஒரு நியாயம் இருக்கு. ஏன்னா இவளுக்கு எதுவும் தெரியாது. ஆனா நீயும் கலாய்க்கிற பாரு?" என்றவன்,

"ஏன்டா அதுக்குள்ள எல்லாமும் சொல்லிடுவீங்களா? என்னைய மாட்டி விடுறதுல அவ்வளவு சந்தோசம் எல்லோருக்கும்?" என்று விவான்,ஹேமா,இளங்கோ,விவி நால்வரையும் பார்த்தான் ஜிட்டு.

"இப்போ கதையை சொல்ல போறீங்களா இல்லையா?"

"சாப்பிட்டு சொல்லலாமா ப்ளீஸ்?"

"ஹ்ம்ம்"

எல்லோரும் சாப்பிட்டனர். அப்போது இளங்கோ எதேர்ச்சையாக இடிக்க சாம்பார் ஜிட்டுவின் சட்டையில் கொட்டியது. உடனே,"அட கொடுமையே இதுங்க கூட சதி பண்ணுதே?" என்று முனகியவன்,

"அன்னைக்கு இதோ இதுங்க ரிசெப்சன்" என்று விவான் நித்யாவைச் சுட்ட,

"என்னது இதுங்களா?"- நித்யா

"சரி சரி இவங்க ரிசெப்சன்"

"அண்ணா இப்போ சொல்லப்போறது உண்மைதானே?" - பாரு

"இருந்தாலும் நேத்து நான் சொன்னதெல்லாம் நம்புனா ஒரே ஆள் நீ தான்.ஐ லைக் யூ. இப்போ சொல்றது தான் உண்மை."

"சொல்லுங்க"

"அன்னைக்கு இவங்க ரிசெப்சன். அது ஆரமித்து நடக்க அப்போ அந்த மணமேடையில் இருந்த ac சரியா ஒர்க் செய்யாம போக இவன் என்னை அனுப்பி அந்த பார்ட்டி ஹால் மேனேஜர் கிட்ட சொல்லச் சொன்னான். நானும் அவசரமா கீழ வர அப்போ பார்த்து இதோ இவன் என்று தேட, சாரி அவன் இங்க இல்ல துவாரா என்னைக் கூப்பிட்டான். நானும் அவன் கூப்பிட்டானேன்னு பின்னாடித் திரும்ப இறங்கும் போது கால் ஸ்லிப் ஆகிடுச்சு..."

"நான் சொல்றேன் நான் சொல்றேன்" என்ற பாரு,"உடனே நீங்க கால் ஸ்லிப் ஆகி தடுமாற அப்படியே கீழ விழ போக அப்போ எதிர்ல இதித்ரி வர நீங்க அவங்க மேல விழ உடனே அவங்களும் சேர்ந்து கீழ விழ,உடனே 'தம்தன தம்தன ராகம் வரும் புது தாளம் வரும்னு' பேக் கிரௌண்ட்ல சாங் வந்திருக்குமே? கரெக்ட்டா?"

பாரு சொல்லும் போதே நித்யா ஹேமா,இளங்கோ,விவான் நால்வரும் சிரிக்க,

"சொல்லுங்க அண்ணா அதுதானே நடந்தது?"

"இருந்தாலும் நீ என்ன ரொம்ப நம்புற, ஐ லைக் யூ அகைன்.ஆனா அது நடக்கல"

"ஐயோ அப்போ என்ன தான் நடந்தது?"

"நான் திரும்ப என் கால் ஸ்லிப் ஆக, நான் தடுமாற அதுக்குள்ள அடுத்த காலை எடுத்து வைக்க அதுவும் தடுமாற அப்படியே ஸ்லிப் ஆகி அங்கேயே நான் விழ அந்த ஸ்டீப் ஸ்டேர்ஸ்ல(செங்குத்தான படிக்கட்டில்) அப்படியே ரோலிங்க்லேயே நான் கீழ போக சட்டுனு எதிர்ல ஒரு கால் தெரிய இனியும் ரோல் ஆகக்கூடாதுனு அதை நான் பேலன்சுக்கு பிடிச்சு எழுந்தா..." என்றதும்

"அச்சச்சோ!" என்று வாய் ஃபீல் பண்ணாலும் அவள் சிரிக்க, கூட எல்லோரும் சிரிக்க,

"அங்க தான் நின்னுட்டு இருந்தா இதித்ரி"

"பரவாயில்லையே ஃபர்ஸ்ட் மீட்டிங்லேயே கால்ல விழுந்து சரண்டேர் ஆகிட்டிங்களே?" என்று அவள் சொல்ல,

"இந்த லட்சணத்துல நான் இவரு கால்ல விழுந்து எனக்கு வாழ்க்கை பிச்சைப்போடுங்கனு வாழ்க்கை பிச்சைப்போடுங்கனு கெஞ்சிக்கேட்டேன்னாம்!" என்று இதித்ரி சிரித்துக்கொண்டே சொல்ல எல்லோரும் மீண்டும் வயித்தைப் பிடித்துக்கொண்டு சிரித்தனர். (பயணங்கள் முடிவதில்லை ...)
 
Top