Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-27

Advertisement

praveenraj

Well-known member
Member
யாழியிடம் மென்னகை (மென்மையான புன்னகை என்பதன் blended பார்ம் தான் மென்னகை) புரிந்தபடியே அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்த துவாராவை விட்டால் கொன்றே விடுமளவுக்கு முறைத்துக்கொண்டு இருந்தாள் சரித்திரா. தன்னையே ஒருமாதிரி பார்க்கும் சரித்திராவைப் பார்த்த யாழினி,"என்ன விவா உன் ஃபிரண்ட் இப்படி முறைக்கிறாங்க?"
விவான் திருதிருவென முழித்தவன்,"அடி க்ரதாகி இப்படி இவன்(துவாரா) முன்னாடியா உளறுவ" என்று மனதில் அவளை அர்ச்சித்தவன்,"அவங்க என் ஃப்ரெண்ட்னு யாரு சொன்னா உனக்கு?"
"நீதானே அவங்க கூட அங்க தனியா பேசிட்டு இருந்த?" என்றதும் போச்சு ஒவ்வொன்னா அவிழ்க்கிறாளே என்று மீண்டும் அவளைத் திட்டியவன்,"சும்மா பார்த்துப் பேசக் கூடாதா? டின்னர் இவர்களுக்கும் சேர்த்து ஆர்டர் செய்யச் சொன்னாங்க" என்று சமாளிக்க,
"ஆனா நீ தான் போன்ல யாருகூடயோ பேசுனீங்களே?"(நல்லவேளை கீர்த்தியிடம் பேசியது அவளுக்குத் தெரியவில்லை, இல்லையேல் டோட்டல் டேமேஜ் ஆகியிருக்கும்) இப்போது என்ன சொல்வதென்று புரியாமல் இருக்க,"ஏய் யாழி அவங்க போன் டவர் இல்லைனு வந்தாங்க" என்று துஷி எடுத்துக்கொடுக்க,
"டேய் நீயே எனக்குப் பின்னாடி தான் வந்த. உனக்கெப்படி இது தெரியும்?"
"ஹாம் நீ தான் அங்கேயிருந்து துவாராவைப் பார்க்க முன்னாடி போயிட்ட தானே அப்போ சொன்னாங்க"
சம்திங் ராங் என்று உணர்ந்துக்கொண்ட துவாரா அதை வெளிக் காட்டாமல் அமைதியாக மீண்டும் யாழியிடம் பேசினான். இப்போது தான் சரித்திரா விவான் இருவருக்கும் சீரான மூச்சு வர, இதையும் நோட் செய்துகொண்டான் துவாரா.
"சரி நாங்க எங்க கம்பார்ட்மெண்ட் போறோம்" என்று துஷி எழ,"டேய் எனக்கு இந்த கம்பார்ட்மெண்ட் உனக்குத் தான் வேற" என்று சொன்னவள் சரித்திராவின் இடம் தான் தனது என்று சொல்லவும், இப்போது அவள் துவாராவைப் பார்த்தாள்.(ஏற்கனவே சொல்லிட்டேன் சரித்திராக்கு அடுத்த கம்பார்ட்மெண்டில் தான் சீட். துவாரா தான் இங்கேயே இருக்கச் சொன்னான்)
"யாழி அவங்க தாத்தாக்கு இந்த கம்பார்ட்மெண்ட். சோ நீங்க மாறிக்கோங்க" என்று சொன்னவன் "ப்ளீஸ்" என்று முகம் சுளிக்க,
"சே எங்க போனாலும் இந்த எருமை(துஷி)கூடத்தான் ட்ராவல் பண்ணனும் போல" என்று சலித்துக்கொண்டவள் செல்ல அவளை முறைத்துக்கொண்டுச் சென்றான் துஷி.
"டேய் வெச்சிட்டு வாங்க நாம சாப்பிடணும்" என்றவன் நைசாக நித்யா கம்பார்ட்மென்டுக்கு எஸ் ஆகினான் விவான்.பின்ன துவாரா அடுத்து அவனைத் தான் கேட்பான் என்று அவன் அறிவானே,
"ஓகே சரித்திரா பை"
"பை"
"டேய் விவான் நில்லு"
"என்னடா?"
"இவங்களை ஏற்கனவே உனக்குத் தெரியுமா?"
"அப்போ உனக்குத் தெரியாதா?"
"நான் கேள்விக் கேட்டா நீ திரும்ப பதில் கேள்வியை என்கிட்டயேக் கேட்கற?"
"நிஜமா உனக்குத் தெரியிலையா?"
அவன் முறைக்க,
"சரித்திரா.ஸ்டேட் லெவல் சாம்பியன், நேஷனல் லெவல்ல தமிழ்நாட்டை பேட்மிட்டன்ல ரெப்ரெசென்ட் பண்ணாங்களே?"
சட்டென்று திரும்பி அவளை ஒரு பார்வையில் அளவெடுத்தான். u17 u19 (அண்டர் 17,19- 17 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பேட்மிட்டன் போட்டி)சாம்பியன் சரித்திரா?"
அவள் சிரிக்கவும் கூடவே அவனும் சிரித்தான். இப்போது விவானும் சிரித்து, "அவங்களே தான்"
"அதுதானே உங்களை நான் எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு ஃபீல். எங்கன்னு தான் ஞாபகமே இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்" என்று துவாரா சொல்ல,
'அடப்பாவி எனக்கு 10 வயசுல இருந்து உன்னைத் தெரியும்டா' என்று மனதில் சலித்துக்கொண்டவள், வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு புன்னகையைச் சிந்தினாள்.
"ஆமா இப்போ ஸ்டேட் லெவல் மேட்ச் தொடங்கப் போகுதில்ல? இப்போ போய் நீங்க ட்ராவல் பண்றீங்க?" என்று இழுக்க,
"லைஃப்ல மேட்சை விட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கு. அதுக்காகவும் போகணும் தானே?" என்று சொல்ல,
இப்போது அவள் தாத்தாவிற்கு எல்லாமும் புரிந்தது. பலமுறை அழைத்தும் தன் மகனை,அவள் தந்தையைப் பார்க்க வரமாட்டேன் என்று சொன்னவள் இம்முறை அவளாகவே அழைத்து வந்துள்ளதன் அர்த்தம் புரிந்தது.ஒருபுறம் இது சந்தோசம், மறுபுறம் 'அப்போ உண்மையில் உன் தந்தை மேல் உனக்குக் கொஞ்சம் கூட பாசம் இல்லையா?' என்று சொல்ல, 'அது சரி. அவன் பண்ணதுக்கு அவனுக்கு இது தேவை தான்' என்று நினைத்துக்கொண்டவர்,அமைதியுடன் சரித்திராவைப் பார்க்க அவரின் பார்வைப் பொருளை உணர்ந்தவள் தலை குனிந்தாள்.
விவான் போக, துவாரா அமைதியாக யோசனையில் ஆழ்ந்தான். அவனுக்கு இன்னும் நிறைய சந்தேகங்கள் இருந்தது. இருந்தும் பொறுமையாகக் காத்திருந்தான்.
சரித்திரா எழுந்து அந்தப்பக்கம் கதவோரம் போக இவனும் பின்னால் போனான்.
....................................................
ஒரு வழியாக மௌனியை சமாதானம் செய்த ஹேமா அவளை அழைத்துக்கொண்டு வந்து அமர அங்கே நித்யா-அனேஷியா-சித்தாரா-மிரு-விவியன்-தியா அமர்ந்து கதைபேசிக்கொண்டிருக்க இளவேனில் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தாள்.
"என்னப்பா சமாதான உடன்படிக்கையெல்லாம் எல்லாம் கையெழுத்து ஆகிவிட்டதா?" என்று கேட்டு கண்ணடித்தாள் நித்யா,
"ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆச்சு ஆச்சு"
மௌனியோ இளவேனிலைத் தூக்கிக்கொண்டு அவளோடு விளையாடிக்கொண்டு இருந்தாள்.
கட்டாக் வர உணவும் வாங்கப்பட்டது. நித்யா போன் பண்ண அப்போது வந்த விவான், அவன் உட்பட துஷி, யாழ், துவாரா, சரித்திரா அவள் தாத்தா எல்லோருக்கும் வாங்கிக்கொண்டுச் சென்றான்.
ஏனோ யாழ் இங்கே வரமாட்டாள் என்று உணர்ந்த மௌனிக்கு ஒரு நிம்மதி. ஹேமா முறைத்தான். திருதிருவென விழித்த அவள் சிரித்தாள்.
"என்ன ரகசியமா பேசுறீங்க? கண்ணால காதலா?"
"ஒண்ணுமில்ல அக்கா" என்றாள் மௌனி. இளங்கோ பாரு வர எல்லோரும் சாப்பிட ஆயத்தமானார்கள்.
"அவன் எங்கடா?" - மிரு
"யாரு" என்று தெரிந்தும் தெரியாததுப் போல் கேட்டான் இளங்கோ.
"ஜிட்டு-இதித்ரி" என்றதும் அவனும் பாருவும் சிரிக்க நடந்ததைக் கூறினார்கள்.
"ஏன்டா எல்லோரும் அவனை இப்படிப் படுத்தறீங்க?" - நித்யா
"ஹா ஹா நல்ல கதையா இருக்கே? ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப் பட்டதாம்" என்றாள் மௌனி
"என் தங்கம் என் உரிமை மாதிரி ஜிட்டுவை கலாய்ப்பது என் உரிமை. அதை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று நித்யா சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
இதித்ரி சரியாக வர பின்னாலே வந்தான் ஜிட்டு. அங்கே சாப்பாட்டைப் பிரித்துக்கொண்டிருந்த இளங்கோவின் கையிலிருந்ததைப் பிடுங்கியவன் அவன் பாட்டிற்குச் சாப்பிட ஆரமித்தான்.
"என்ன பார்க்குற? எல்லாத்தையும் பண்ணிட்டு சோறு கேட்குதா உனக்கு?"
சிரித்தவன்,"நானா அந்தப் பொண்ணு யாழைப் பார்த்துச் சிரித்தேன். என்கிட்டயா அவ 'அந்த'..."என்று சொல்லும் முன்,"மூடு அவளே ஒரு தடவைத் தான் சொன்னா. நீங்க ஓயாம சொல்லிட்டு என் டார்லிங்கை வெறுப்பேத்திப் பார்க்கறீங்க" என்று அப்படியே இதித்ரிக்குத் தூண்டில் போட்டான்.
"ஆமா அண்ணா நீங்க எப்படி இதித்ரியைப் பிடிசீங்க?"
"ஹா ஹா யூ நோ வாட் இதித்ரியை நான் பிடிக்கல. அவ தான் என்னைப் பிடிச்சா" என்று சொன்ன ஜிட்டுவை இதித்ரி நித்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"என்னைப் பார்த்ததும் அவ விழுந்துட்டா"
"ஏன் அண்ணா? சகுனமே சரியில்லையா?"
"ஏ ஃபூல்(fool) அந்த விழுந்துட்டா இல்ல. காதல்ல விழுந்துட்டா"
"ஓ!"
"அப்புறோம்?"
"அப்புறோம் என்ன? நான் போற இடத்துல எல்லாம் வந்து என்னை விடாமல் சைட் அடிச்சிட்டே இருந்தா"
"பார்ரா"
"யூ நோ வாட்? இப்போ மாதிரி எல்லாம் இல்ல. அப்போல்லாம் நான் ராஜ குமாரன் மாதிரி இருப்பேன்"
"எது தேவயானி புருஷன் ராஜகுமாரன் மாதிரியா?" என்றான் தியா
"பிரின்ஸ்டா பிரின்ஸ்"
"ஓ"
"என் அழகுக்கும், சார்முக்கும் (charm - வசீகரம்) பொண்ணுங்க என் பின்னாடியேச் சுத்துனாங்க"
அப்போது சரியாக ஹேமா வாயிலிருந்ததைத் துப்பி, "கருமம் கருமம்"என்று சொல்ல
"என்னடா கருமம்?"
"பொய்யினாலும் ஒரு அளவு வேணாமா? இதுக்குப் பேர் சாம்பாராம்? என்னமா உடுறாங்க பாரு ரீல்" என்று சொல்ல,
"ஏய் நீ சாம்பாரைத் தானே சொன்ன?"
"கண்டிப்பா கண்டிப்பா டெபென்னெட்ல்லி. ஏன்டா உனக்கு என்ன தோணுச்சு?"
"எங்க விட்டேன்?"
"கருமம் கருமம்"
"ஹேய் அது அவன் சொன்னது. நான் எங்க விட்டேன்?"
"உங்க அழகுக்கும் சார்முக்கும் பொண்ணுங்க உங்க பின்னாடியேச் சுத்துனாங்க"
"ஆம் கரெக்ட்"
"அப்படி ஒரு நாள் தான் அந்த கல்யாணமண்டபத்துல நான் இருக்கும் போது எல்லோரும் என்னையேப் பார்க்கறாங்க. பொண்ணுங்க எல்லாம் என் பின்னாலே சுத்துறாங்க. நான் அப்படியே சாக் ஆகிட்டேன்"
"ஏன்?"
"கல்யாணப் பொண்ணு கூட என் பின்னால் சுத்துச்சி..."
"எடு செருப்பை நாயே" என்று நித்யா கோபப் பட,
"ஹேய் பேச்சு பேச்சா தான் இருக்கனும். சரி கல்யாணப் பெண்ணத் தவிர"
"அப்புறோம்?" என்று சிரித்துக்கொண்டே மௌனி கேட்க,
"ஏய் ஏன் சிரிக்கிற? நீ சிரிக்கறதைப் பார்த்தா எல்லோரும் என்ன நினைப்பாங்க? என்னமோ நான் ரீல் உடுற மாதிரி தானே நினைப்பாங்க?"
"சரி சரி சொல்லுங்க"
"என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு எல்லோரும் ஒரே டார்ச்சர்"
"அப்புறோம்"
"என் அழகுக்கும் அறிவுக்கும்...இந்தியாவுல"
"அண்ணா சார்மை விட்டுடீங்க" - மௌனி
"கரெக்ட். என் சார்ம்க்கு இந்தியாவிலே ஏன் உலகத்துலயே பொண்ணு இல்ல"
"அப்போ பேசாம அவதார் பட ஹீரோயினை கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு மேக் அப்பே வேணாம். அப்படியே இருப்ப ஏலியன் மாதிரி" என்றான் செபா
"சுத்த நான் சென்ஸ் மாதிரி பேசாதடா. அப்போ பார்த்து இதோ இந்தப் பொண்ணு (இதித்ரி) திடீர்னு என் முன்னால வந்து, என் கால்ல விழுந்து நான் உங்களைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அழுகை"
எல்லோரும் இப்போது இதித்ரியைப் பார்க்க அவளோ எதுவும் பேசாமல் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்க,
"கைஸ் கல்யாணம் ஆகாமலே டைவர்ஸ் பண்றதை நீங்க எங்கயாவது பார்த்திருக்கீங்களா?"- தியா
"இல்லையே? அதெப்படி கல்யாணம் ஆகாம டைவர்ஸ்?"- பாரு
"இன்னைக்குப் பார்ப்பீங்க" -தியா
"நீங்க சொல்லுங்க அண்ணா. அப்புறோம் உங்க கால்ல விழுந்து ஒரே அழுகை, அப்புறோம்?"
"சரி கழுதை ஆசைப்பட்டதுனு பொழச்சிப்போனு" என்று சொல்லும் போதே இதித்ரி அவள் தந்தைக்கு அழைத்து,
"அப்பா நீங்க யாரோ மாப்பிள்ளை ஜாதகம் வந்ததுன்னு சொன்னீங்களே.எனக்கு ஓகே" என்று முடிப்பதர்குள் "இதி சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் இதி. நீ இது தான் சாக்குன்னு ஜகா வாங்கிடாத இதி" என்று அவள் போனைப் பறிக்க அதுவோ யாருக்குமே கால் போடப்படாமல் இருந்தது.
அவள் இப்போது பார்க்க, சுற்றி எல்லோரும் சிரித்தனர். "ஏன்டா வாய்... வாயில்லைனா உன்ன எல்லாம் ஒரு பையன் மதிக்க மாட்டான்"
"சும்மா ஒரு எண்டெர்டைன்மென்ட்"
"ச்சி போ, போய்ச் சாப்பிடு"
எல்லோரும் சிரிக்க அனேஷியா பாரு மௌனி மூவரும் விழுந்து விழுந்துச் சிரித்தனர்.
.................
ஜெசியிடம் பேசிவிடலாம் என்று எண்ணி சென்றவனை அவன் தந்தை அழைக்க ஜெசியிடமும் எதையும் பேச முடியாமல் கடுப்பாய் வெளியேறினான். ஏனோ ஜெஸியின் முகத்திலே அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் என்று உணர்ந்தவன்,"ஆனால் எனக்கு?" அவனுள் நிறைய குழப்பம். என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவனுக்கு மீண்டும் சேவியர் அழைத்தான்.
"என்ன செபா பேசுனையா?"
"........."
"டேய் செபா"
"உன்ன, நீயெல்லாம் ஒரு ஆளுன்னு நீ சொன்னப் பேச்சைக் கேட்டேன் பாரு என்னைச் சொல்லணும்"
"என்னடா ஆச்சு?"
அவன் நடந்ததைச் சொல்ல,
"முட்டாள். அப்போ அந்தப் பொண்ணைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா? அவ வீணா ஆசையை வளர்த்திக்கப் போறாடா"
"அப்போ உனக்கு அந்தப் பொண்ணு தான் முக்கியம் இல்ல? நான் எக்கேடோ கெட்டுப்போறேன் வெய்"
"டேய் டேய் டேய், செபா உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ஏன் இப்படி இருக்க? சொல்லு"
"என்னடா சொல்லணும் உனக்கு? உனக்குத் தெரியாதா உன் மாமாவைப் பத்தி? கொஞ்சமாவது ப்ரீயா சுதந்திரமா இருக்க முடியுமாடா ? எப்பப் பாரு எதைப்பாரு ஒரு அட்வைஸ் ஒரு தத்துவம். ஒத்துக்கறேன் அவரு தனியா சுயமா யாரு தயவும் இல்லாம வளர்ந்தவர் தான். அதுக்குன்னு எங்களை இப்படி டார்ச்சர் பண்ணுவாரா? இதைக் கேட்கவும் முடியாது. ஏன்னா கேட்கறதுக்கு முன்னாடியே ஒரு டைலாக் வரும், 'உங்களுக்காவது நல்லது எது கெட்டது எதுன்னு பார்த்துச் சொல்ல நான் இருக்கேன், எனக்கெல்லாம் யாரும் ஒருநாளும் இப்படிச் செய் இப்படி செய்யாதேன்னு சொன்னதில்லைனு' ஆரமிச்சிடுவாரு, ஒத்துக்கறேன் அவரும் நிறைய கஷ்டப்பட்டு தான் இன்னைக்கு இப்படி இருக்காரு. அதுக்குன்னு அதிகமா கேர் பன்றேன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணுறாருடா"
"ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யுறது தப்பில்லை தான். ஆனா. ஒரு சாக்லேட் தெரியாம சாப்பிட்டா போதும், அது என்ன சாக்லேட் இது நல்ல ஃபிராண்ட் இல்ல இது சாப்பிட்டா உடம்பு கெட்டுடும் அப்படி இப்படினு பேசி கடைசியில எனக்கு அந்த சாக்லேட் சாப்பிடுற ஆசையே போயிடும். இன்னும் சொல்லப்போனா ஏன்டா அதைச் சாப்பிட்டோம்னு நெனச்சு பீல் கூட பண்ணுவேன். நான் தப்பு சொல்லலடா இதெல்லாம் தான் பெத்தவங்க கடமை, ஆனால் அதை ஆறு வயசுல பண்ணாரு ஓகே பதினாறு வயசுலயும் பண்ணாரு ஓகே இருவத்தாறு வயசுலையுமா?"
"நேத்து என்ன நடந்தது தெரியுமா? அந்தப்பொண்ணு அவ அப்பாகிட்ட தைரியமா சொல்றா... எனக்கு இவன் ஓகே பரவாயில்லைனு. என்னால அவரு சொல்றதுக்கு வெறும் உம் மட்டும் தான்டா கொட்ட முடிஞ்சது. அவ என்னையே ஒரு மாதிரி பார்த்திட்டு இருந்தா..."
"அதைவிடு உன் பேச்சைக்கேட்டு அந்தப் பொண்ணைப் பார்க்கபோனேன். அந்த வீணாப்போன ஆடிட்டர் பார்த்துட்டான். உடனே போன் வருது உன் மாமா கிட்ட இருந்து, 'எதுக்கு அந்தப் பொண்ணு ஒர்கிங் ஹவர்ஸ்ல போய்ப் பாக்கறன்னு? அவ அதுக்கும் மேல இருக்கா, அன்னைக்கு மீட் பண்ணப் போகும் போது ட்ராபிக், லேட் ஆகிடுச்சு. அதுக்கு காரணம் கூட என்னைச் சொல்லவிடாம நீ சொன்னா நம்ப மாட்ட 15 நிமிஷம் அந்த ரெஸ்ட்டாரெண்ட் வாசல்ல நின்னு பேசினோம்"
"அவளை நான் தப்பு சொல்லல.அவ இண்டிபெண்டெண்ட் பொண்ணு தான். நல்லாவும் இருக்கா, பேசுவும் செய்யுறா, ஆனா எல்லா விஷயத்துலையும் என்னை டாமினேட் செய்யுறா. நான் ஒன்னும் மேல் சாவுனிஸ்ட் (ஆணாதிக்கவாதி) இல்ல. ஆனா ஈவென் ஐ டோன்ட் வாண்ட் டு பி டாமினேட்டட் எய்த்தேர்( என்னை கண்ட்ரோல் பண்றதும் எனக்குப் பிடிக்கல) இன்னும் எப்படிச் சொல்ல, இவ என் டைப் பொண்ணு இல்ல. என் அப்பாக்கு ஏத்த மருமகள் ஆனா எனக்கு? என்னால ஒரு காஃபி குடிக்கும் நேரம் கூட அவக்கூட சேர்ந்து இருக்க முடியல. இதுல லைஃப் லாங் எப்படிடா?"
"டேய் இதைத் தான் அந்தப் பொண்ணு கிட்ட பேசி புரியவைனு சொன்னேன்"
"அவ எங்க என்ன பேசவிட்டாங்கறேன்? பர்கர் நல்லா இருக்கும்னு வாங்கிட்டு வந்து தரா"
"ஏன்டா பர்கர் எல்லாம் ஒரு பிரச்சனையாடா?"
"பர்கர்ல இல்லைடா பிரச்சனை. எனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன வேணும்னு கேட்கக் கூட அவ தயாரா இல்ல, அது தான் பிரச்சனை"
"சரி மச்சி இப்படிப் பண்ணுவோம்"
"செம காண்டுல இருக்கேன். நீ வேற கடுப்பைக் கிளப்பாத..."
"பேசாம அந்தப் பொண்ணுகிட்ட கொஞ்சம் வெளிய மீட் பண்ணனும்னு சொல்லிக் கேளு"
"அவ ஃப்ரண்ட்ஸ் கூட அவளுக்கேத்த அடிமைனு சொல்றாங்கடா"
"டேய் அதெல்லாம் சும்மா ஃப்ரண்ட்ஸ்குள்ள கலாய்க்கறதுடா, இதெல்லாமாடா பிரச்சனை?"
"மச்சி ஒரு நிமிஷம் லைன்ல இரு" சேவியருக்கு அழைப்பு வந்தது, பேசிவிட்டு மீண்டும் லைனுக்கு வந்தவன்,
"என்னடா?"
"இல்ல மச்சி அது"
"என்னனு சொல்லித் தொலை"
"வர 10ஆம் தேதி உங்களுக்கு என்கேஜ்மெண்டாம்" அவன் திக்கித் திணறிச் சொல்ல,
"யாரு போன் பண்ணா?"
"அம்மா"
"சம்மந்தப்பட்ட எனக்கே இன்னும் எந்த விஷயமும் வரல, இப்போ புரியுதா என் பிரச்சனை?"
"சரிடா அந்தப் பொண்ணு நம்பர் அனுப்பு நான் பேசிப்பார்க்கறேன்"
"எதுக்கு? உன் பேச்சைக்கேட்டு அவளை மீட் பண்ணப் போனதுனால இவ்வளவு சீக்கிரம் என்கேஜ் மென்ட் நடக்குது. நீ பேசி நாளைக்கே கல்யாணம் நடக்கவா?"
"அப்போ நீயே பேசு"
"டேய் உனக்கு என் ப்ரோப்லேம் புரியுதா புரியலையாடா?"
"டேய் அது..."
"உனக்கு யாருடா சேவியர்னு பேரு வெச்சா? அட்லீஸ்ட் அந்த பேருக்காவது என்னை சேவ் பண்ணிவிடுடா ப்ளீஸ்"
"டேய் அது, இரு எனக்கு இன்னொரு லைன் வருது நான் கூப்பிடுறேன்"
"யாரு?"
"அவ தான்"
"சூப்பர் அப்போ நான் சொல்றதைக்கேளு"
"நீ கொஞ்சம் அமைதியா இரு. நானே பேசுறேன்"
"டேய் என்ன பேச போற?"
"பேசிட்டுச் சொல்றேன்"
"டேய் டேய் டேய்..."
"ஹலோ"
..................................................
"மச்சி நாம மட்டும் ஏன் மச்சி இங்க சாப்பிடுறோம்? வா எல்லோரும் அங்கப் போலாம்" என்றாள் யாழ்
"ஏன் இதுவரை நீ உடைச்சதெல்லாம் பத்தாதா? ஆணிலே கையை வெச்ச முதல் டெட் பாடி நீ தான்" என்றான் துஷி
"நான் என்ன பண்ணேன்?"
"ஏன்டி நல்லா இருந்த ஜோடிங்களைக் கொஞ்சநேரத்துல பிரிச்சியிருப்ப"
"இந்தப் பசங்களே இப்படித் தான். ஒரு பொண்ணைப் பார்த்திடக் கூடாதே உடனே வழியவேண்டியது. என்னமோ காணாததைக் கண்டமாதிரி"
"ஏய் உனக்கு ஓவர் வாய்டி"
"இல்லன்னா உங்க மத்தியில எல்லாம் நிம்மதியா வாழ முடியுமா?"
"எம்மா தாயே ப்ளீஸ் சாப்பிடலாம்"
துவாரா தவிர எல்லோரும் சாப்பிட, "நீயேண்டா சாப்பிடல?" - யாழ்
"நான் ஈவினிங் தான் லஞ்சே சாப்பிட்டேன். கொஞ்சம் நேரம் ஆகட்டும்"
சரித்திராவும் சாப்பிடாமல் இருக்க, "நீங்க ஏன் சாப்பிடலையா?" துஷி
"இல்ல நானும் அப்புறோம் சாப்பிடுறேன்"
விவான் துஷி இருவரும் அவர்கள் இருவரையும் பார்த்தனர்.
துஷியின் அன்னை அழைக்க,
"சொல்லுமா"
"என்னடா பார்த்துட்டியா என் மருமகளை?"
அதற்குள் அவனிடமிருந்து போனைப் பறித்த யாழ், "ஆண்ட்டி யாரந்தப் பொண்ணு?இவனும் சொல்லவே மாட்டேங்குறான்"
"அவனே சொல்லட்டும்"
"ஆண்ட்டி நீங்களா சொன்னா மரியாதை. நானா கண்டுபிடிச்சேன் இந்த யாழைப்பத்தி உங்களுக்கே நல்லா தெரியும்"
அதற்குள் மீண்டும் போனை பறித்த துஷி, "7 .30 -9 எமகண்டம், நான் நைட் கூப்பிடுறேன் நீ வைம்மா" என்று வைத்துவிட்டான்.
"டேய் துவாரா முந்தியெல்லாம் கொஞ்சம் கலகலப்பா தானே இருப்ப. இப்போல்லாம் ஏன் இப்படி உர்ர்ர்னு இருக்க?"- யாழ்
இந்தப்பக்கம் யாழின் தொடையைக் கிள்ளினான் விவான்.
"என்னடா?"
'ஐயோ இவ சிக்னல் கூட புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே?' என்று நொந்தான் விவான்.
"இவளையெல்லாம் ஏன்டா கூப்பிட்டு வந்த எருமை மாடே?" என்று துஷியின் காதுகளில் ஓதினான் விவான்
"நான் எங்கடா கூப்பிட்டேன். அதுவே வந்திடுச்சு"
அவள் துவாராவிடம் பேசப் பேச இங்கே சரித்திராவுக்குக் கோவம். 'இவ்வளவு நேரம் உர்ருனே இருந்தான் இப்போ மட்டும் பேசுறான்' என்று அவள் கோவம் அவளுக்கு.
இவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க, "சரிடா நான் போய்த் தூங்குறேன். ரொம்ப டையேற்டா இருக்கு" - துஷி
"சரி விவா அங்க போய் அவனுங்களைக் கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டு தூங்கலாம்" என்ற யாழை இழுத்துக்கொண்டுப் போனான் துஷி.
விவான் அங்கேயே அமர்ந்தபடி படுக்க, அவனுக்கு அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்தவன் "இந்தா அம்மா பேசணும்னு சொன்னாங்க" என்று துவாராவிடம் கொடுத்தான்.
"சொல்லுங்க அம்மா" அவன் பேச தூரம் சென்றுவிட பின்னாலே வந்தாள் சரித்திரா.

"என்னை விடுடா ராஸ்கல் என்னடா பண்ற?" என்று அவளை இழுத்துக்கொண்டு போன துஷியிடம் அவள் விளையாட அதற்குள் அங்கே இருந்த பெனாசிர், ரேஷா, லோகேஷ் இஸ்மாயில் நால்வரும் இவர்களை நோக்கி வந்தனர்.
...................................................................
அங்கே கெளஹாத்தியில் பணியை முடித்துவிட்டு ஆறுமணிபோல் வீட்டிற்குச் சென்ற திவேஷ் குளித்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து அமர்ந்தான்.
பிலே லிஸ்ட் ஆன் செய்ய,
மார்கழி திங்களல்லவா ...
மதிகொஞ்சும் நாளல்லவா ...
இது கண்ணன் வரும் பொழுதல்லவா ..
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடைபெறும் உயிரல்லவா ..

என்ற பாடல் ஒலிக்க அவன் மனமோ எங்கெங்கோ சென்றது. அந்தக் கண்கள் அந்த பாப் கட் ஹேர் ஸ்டைல் எல்லாமும் கண்முன் தோன்றியது.
"ஹே திவேஷ் நில்லுடா" என்ற குரல் காதிலே ஒலித்துக்கொண்டு இருக்க அந்த சிந்தனைகள் மறையும் வண்ணமாய் அவனுக்கு அழைப்பு வந்தது.
அஃபிஷியல் அழைப்பு.
.......................................................
அங்கே ஜிட்டன் சொன்னக் கதையைக் கேட்டு எல்லோரும் சிரிக்க, "எம்மா இதி நான் விலாட்டா சொன்னதெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கிட்ட, ஐயோ ஐயோ" என்று அவன் சொல்ல
"அப்போ நீங்க சொன்னதெல்லாம் பொய்யா அண்ணா?" - பாரு
"ஏன்டி அவன் தான் அண்ட புளுகு ஆகாச புளுகு புளுக்கறான் நீயும்?"
"ஸ்டாப் இட் அப்போ உண்மையிலே என்ன தான் நடந்தது?"
"அதை நான் சொல்றேன் பாரு" - நித்யா
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"அவன் சொன்னானே ஒரு கல்யாணம் அது வேற எதுவுமில்லை என் கல்யாணம் தான்"
"ஓ அந்த மணப்பொண்ணே நீங்க தானா?"
"அதுக்குத் தான் செருப்பைக் கேட்டீங்களா அக்கா?" - சித்து
"ஹ்ம்ம்"
"என்ன என்ன அப்படியே இவரு மொகர கட்டைக்கு அந்த மண்டபமே..."
"அக்கா சார்மிங் பிரின்ஸ்..."
"மூஞ்சி. நல்லா சோளக் காட்டு பொம்மை மாதிரி ஒரு மூஞ்சு. இப்பவே இப்படி இருக்கானே அப்போ நாலு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருப்பான்னு யோசிங்க"
"எதுக்கு யோசிக்கணும்? இரு போட்டோவே எடுத்துடலாம் 18 வயசுல இருந்து"- செபா
"அதெப்படிடா என்னை கலாய்க்கறதுனா மட்டும் ஊரே ஒன்னு கூடிடுறீங்க?" (பயணங்கள் முடிவதில்லை ,,)
 
Top