Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 25

Advertisement

praveenraj

Well-known member
Member
"நாட்கள் அதன்படியே போனது. ஆனால் தினமும் என் மன்னிப்பிற்காக மதியமும் மாலையும் என் முன்னால் வந்து வந்து நிற்பாரு. எனக்கும் அது ரொம்ப கஷ்டமா இருக்கும். நானும் தினம் தினம் அம்மா கிட்ட இங்க நடந்ததெல்லாம் சொல்லுவேன். அவங்க தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டே இருப்பாங்க. அப்போ பொங்கல் டைம். அதுக்கும் முன்னாடி நாங்க எங்க ப்ரொஜெக்டை முடிக்க போற நிலைமை"

"வெய்ட் வெய்ட் அதெப்படி நீ திரும்ப அவன் டீமுக்கு வந்துட்டியா மௌனி?"

ஹ்ம்ம் என்று சிரித்தாள்.

"எப்படி? டேய் பிராடு உன் வேலையா?" என்று ஹேமாவை ஜிட்டு பார்க்க,

"இல்ல நானே தான்" என்று சொன்னவள் அமைதியாக

"அடிப்பாவி" என்றாள் மிரு,

"ஓகே கண்டினு"

"இறுதிக் கட்டம் ரொம்ப டெய்ட் செடுல். டிலே பண்ணா பொங்கல் லீவ் காலி. சோ எல்லோரும் தீயா உழைச்சோம். இருந்தும் சில மைனர் ஒர்க்ஸ், நான் இவரு இன்னும் ரெண்டு பேரு மட்டும் இருந்தோம். மத்தவங்க எல்லோரும் கிளம்பிட்டாங்க. போகிக்கு முன்னாடி நாள் நாங்க ஒர்க் பண்ணிட்டு எப்படியோ முடிச்சிட்டோம். அப்போ எங்க கூட இருந்த அந்த ரெண்டு பேரும் அன்னைக்கு நைட்டே ஊருக்குப் போயிட்டாங்க. அப்போ நானும் இவரும் மட்டும் தான் ஆபீஸ்லே இருந்தோம்..."

"ஹ்ம்ம் புரியுது புரியுது ஒரே ரொமான்ஸ் தான் போல, ஹேமா ஹ்ம்ம்" என்று சொன்ன ஜிட்டுவை எல்லோரும் கொலைவெறியில் பார்க்க ஹேமாவோ அக்கினியாய் முறைத்தான்.

"போங்க அண்ணா நீங்க ரொம்ப அடல்ட்டா பேசுறீங்க"

"என்னது இது அடல்ட்டா?"

எல்லோரும் மீண்டும் முறைக்க, "சரி சரி உடனே முறைச்சிடுவீங்களே, டேய் எங்க உன் முகரக்கட்டைய காட்டு. நீயெல்லாம் அதுக்குச் சரிப்பட்டு வந்திருக்க மாட்ட" என்று சொன்னவன், "என்ன தான் பண்ணான் சொல்லேன் மௌனி. நீ வேற இப்படி கேப் விடுற, இந்த செபா பையனெல்லாம் காலேஜ்லேயே அப்படி இப்போலாம் சொல்லவே தேவையில்லை ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறான். என்னடா செபா?" என்று சிரிக்க நங்கென்று தன் விரலால் அவன் மண்டையை பதம் பார்த்தான் செபா.

எல்லோரும் சிரிக்க, "சொல்லித் தொலையேன்ம்மா"

"நீ எங்கப் போவ மௌனி?" என்றான் ஹேமா,

"ஹாஸ்டெலுக்கு
"

"இல்ல பொங்கல் லீவுக்கு?"

"ஹாஸ்டல்ல தான் இருப்பேன் சார்" என்று சிரித்தாள். அவனுக்கு ஒரு மாதிரி ஆக, "நீ என்கூட ஊருக்கு வரியா மௌனி? அம்மாக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருக்கும். கூடவே சந்தோஷமாவும் இருக்கும்..."

இதை அவள் எதிர்பார்க்கவில்லை."இல்ல அது..."

"ப்ளீஸ் மௌனி. என்கூட வா..."

யோசித்தவள்,"ஓகே. என்ன ஆனாலும் என்னால தான் நீங்களும் உங்க அம்மாவும் பேசாம இருக்கீங்க. நான் அதைச் சரிபண்ணனும். நான் வரேன் சார்"

"மௌனி"
என்று எதையோ சொல்ல வந்தவன்,"சீக்கிரம் ரெடி ஆகிடு. டிக்கெட் போட்டுடுறேன். நைட்டே கிளம்பிடலாம்"

"ஹ்ம்ம்"


"அடச்சேய் இவ்வளவு தானா? நான் கூட என்னவோ ஏதோனு நெனச்சிட்டேன்" ஜிட்டு

இதித்ரி இப்போது அவனை முறைக்க, "நீ கண்டினு ஒவ்வொரு தடவையும் உனக்குச் சொல்லனுமா?"

அன்னைக்கு பஸ்ல போனா ரெண்டுபேருக்கும் பக்கத்துக்குப் பக்கத்துக்கு சீட். நான் ஜன்னல் ஓரம் உட்கார்ந்த்துகிட்டேன். அவரு என் பக்கத்துல உட்கார்ந்து வந்தாரு. திடீர்னு என் மேல தூங்கி விழுந்தாரு,

"நல்லா பார்த்தியா? தூங்கியெல்லாம் விழுந்திருக்க மாட்டான், நாயி வேணும்னே விழுந்திருக்கும், கண்டினு. சப்பா என்ன முறை முறைக்கிறானுங்க எல்லோரும்?" என்றான் ஜிட்டு.

அப்போ வண்டியை ஒரு மோட்டல்ல நிறுத்துனாங்க. இறங்கிச் சாப்பிட்டு மீண்டும் ஏறி உட்கார்ந்தோம், அப்போ திடீர்னு என் கையைப் பிடிச்சுக்கிட்டு,

"மௌனி நீ இதை நம்புவியா நம்ப மாட்டியானு எனக்குத் தெரியில. ஆனா இந்த ரெண்டு மாசமா என் மனசுல அதிகமா நான் நெனச்சது உன்னைத்தான். கண்டிப்பா உன் மன்னிப்புக்காக மட்டுமில்ல,அதுக்கும் மேல ஏதோ ஒன்னு எனக்கு உன்கிட்ட இருந்து வேணும்னு சொல்லிட்டே இருக்கு. எனக்கு என்னனு புரியில, ஆனா இப்போ புரியுது, இப்போ உன்கூட பக்கத்துல தூங்குனேன் பாரு, ஒரு நிம்மதி. ஒரு ப்ளிஸ் (bliss) எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு மௌனி. எப்ப இருந்துலாம் எனக்குத் தெரியில, ஆனா கண்டிப்பா உன் மேல பரிதாபப் பட்டோ இல்லை நீ என்னைத் திட்டுனதுக்கு பழிவாங்கவோ இல்லை உன்னால தான் மீண்டும் நான் என் அம்மா கிட்ட பேசப்போறதுக்காகவோ எல்லாம் நான் சொல்லல. இதோ இப்போ நீயும் நானும் இப்படிப் பக்கத்துப் பக்கத்துல உட்கார்ந்து ஒன்னா ட்ராவல் பண்றோமே... இது எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு இது லைப் லாங் வேணும்னு தோணுது..."

"நீ என்னை இன்னும் மன்னிக்கவே இல்லை. அது
எனக்கும் தெரியும். அதுனால தான் இப்போ கேட்குறேன் எனக்கு உன் மன்னிப்பு மட்டும் வேணாம். உன் சம்மதமும் வேணும். எதையும் கேட்டு வாங்கக் கூடாது. அதிலும் காதலை கண்டிப்பா கேட்கக் கூடாது. நான் என் விருப்பத்தைத் தான் சொன்னேன். நீ நல்லா யோசிச்சு ஒரு பதில் சொல்லு. அன்னைக்கு நம்ம கிட்ட அப்படி பேசுனானே இவனை நம்பி எப்படினு யோசிச்சனா ஒண்ணே ஒன்னு சொல்றேன், அந்த ஹேமா அன்னிக்கு நீ அழுதிட்டு உன் atm கார்டை என் கையில கொடுத்திட்டுப் போனப் பாரு அப்போவே செத்துட்டான். கண்டிப்பா ப்ரோமிசா. உண்மையிலே அன்னைக்கு உன்னை ஹர்ட் பண்ணனும்னு தான் நெனச்சேன். அதுனால தான் அப்படிப் பேசவும் செஞ்சேன். ஆனா நீ பெருசா எடுத்துக்க மாட்டேன்னு நெனச்சேன்.அதுக்கு நீ அழுவணு நான் நினைக்கல மௌனி. நீ அழுதது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அப்போ என் அம்மா என்னை அடிச்சது கூட எனக்குத் தெரியில.என் எண்ணம் எல்லாமும் உன் மேலயே தான் இருந்தது"

"அன்னைக்கு நைட்ல இருந்து இப்போவரை எனக்கு நிம்மதி இல்ல. i feel restless. ஒரு பாரம் அழுத்தம் . நீ உன் முடிவை நல்லா யோசிச்சுச் சொல்லு, குட் நைட்" என்றவன் அமைதியாக படுத்துக்கொண்டான்.

மௌனிக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. ஹேமா இப்படிப் பேசுவான் என்று அவள் நினைக்கவில்லை. அவன் திருந்திவிட்டான்.அவன் செய்தது தவறு என்று உணர்ந்தும் விட்டான் என்று அவளுக்கும் தெரியும். ஆனால் தன்னை காதலிக்கிறேன் என்று சொல்லுவான்னு அவள் கனவிலும் நினைக்கவில்லை. இது அவளுக்கு ஒரு மாதிரி இருக்க அப்படியே யோசனையில் மூழ்கினாள். அப்போது மீண்டும் தூக்கத்தில் ஹேமா அவள் மீதே சாய்ந்தவன் இம்முறை அவள் கைகளை நன்றாக பற்றிக்கொண்டு இன்னும் உரிமையாய் அவள் மீது சாய்ந்து உறங்கினான்.மௌனி தான் ஒரு முடிவுக்கு வர முடியாமல் நிறைய குழப்பினாள்.

மறுநாள் காலை ஹேமாவும் மௌனியும் அவர்கள் வீட்டிற்குப் போக அதை அவன் பெற்றோரே எதிர்பார்க்கவில்லை. அவன் வருவது ஹரிணிக்கு மட்டும் தான் தெரியும். ஏனோ மௌனியை அவனுடன் பார்த்ததும் அவன் அன்னைக்குப் பெரிய ஆச்சரியம் தான். ஹேமாவிடம் பேசியிருந்தால் அவரே அவளை அழைத்து வரச் சொல்லியிருப்பார். ஆனால் அவனிடம் தான் அவர் பேசுவதில்லையே
.

"ஹாப்பி போகி" என்று சொன்னவன் நேராக தன் அன்னையிடம் சென்று,"அம்மா இந்த போகியில உன் பையன் அவன்கிட்ட இருந்த எல்லா பழைய எண்ணங்களும் தூக்கிப்போட்டு புதுசா வந்திருக்கேன். ப்ளீஸ் பேசும்மா. அண்ட் இன்னொரு முடிவும் எடுத்திருக்கேன்..." என்றவன் திரும்பி மௌனியைப் பார்த்துவிட்டு,"நான் மௌனியை விரும்புறேன்.அவளை கல்யாணம் செஞ்சிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன். இதுக்கும் நீங்க தான் சம்மதம் சொல்லணும்" என்று சொல்ல எல்லோருக்குமாச்சரியம். அவன் அன்னை திரும்பி மௌனியைப் பார்க்க,"நான் அவ கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். இனி அவ முடிவு தான்"

இப்போது அவன் தந்தை தங்கை உட்பட எல்லோரும் மௌனியைப் பார்க்க, அவளுக்கோ என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தவள், "அம்மா நான்...என்னைப் பற்றி எனக்கே எதுவும் தெரியாது. ரெண்டு நாள் குழந்தையா அந்த ஆஸ்ரமத்துக்கு கொண்டு வரப்பட்டேனாம். அதைத்தவிர எதுவும் எனக்கு என்னைப் பற்றி தெரியாது" என்று நிறுத்த,

ஏனோ தாங்கள் விரும்பியதையே தங்கள் மகனும் விரும்பியுள்ளான் என்று நினைத்த அவர்கள் உடனே அவளுக்கு எஸ் சொல்ல, அந்த போகி அவள் வாழ்வில் இருந்த எல்லா இருளுக்கும் விடைகொடுத்து புதியதொரு விடியலை ஏற்படுத்தியது.


"போதுமாடா? இவ்வளவு தான் எங்க லவ் ஸ்டோரி.ஆளை விடுங்க" என்றான் ஹேமா,

"தம்பி மீதியை யாரு சொல்லுவா?"

"என்னடா மீதி? அப்புறோம் எங்க வீட்டுல ஓகே சொல்ல, நானும் கொஞ்சம் அங்க ஒர்க் பண்ணிட்டு ஜிம் ஆரமிக்க பேப்பர் போட்டுட்டு வந்தேன். என் அப்பா கொஞ்சம் பணம் தர, அம்மா நகை, அப்புறோம் மௌனி அவ சேவிங்ஸ் கூடவே லோன் எல்லாம் போட்டுக் கொடுத்தா. அப்புறோம் இவளும் அங்க ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டு வந்துட்டா"

"ஹரிணி படிச்சு முடிச்சுட்டா. அவளுக்கு அலையன்ஸ் பார்த்திட்டு இருக்கோம். அவளை செட்டில் செஞ்சிட்டா உடனே எங்க மேரேஜ் தான். ஓகேவா? இந்த சமயத்துல தான் இதோ இவன் (விவான்) எல்லோரும் டூர் போலாமான்னு கேட்டான் கிளம்பி வந்துட்டோம்"

"ஹேய் மௌனி அதெப்படி இவன் கேட்டதும் ஓகே சொல்லிட்ட?"

"ஆக்சுவல்லி அந்த இன்சிடெண்டுக்குப் பிறகு எனக்கு இவரு மேல நல்ல அபிப்ராயம் இல்லைதான். ஆனா அடுத்த நாள் காலையில அவர் பேசும் போதே புரிஞ்சது அவர் உண்மையிலே சாரி கேட்கறாருனு, கூடவே எனக்கு அம்மா அப்பா ஹரிணி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு திடீர்னு அப்படிக் கேட்டதும் இவர் நல்லா தூங்கிட்டாரு. நான் யோசிச்சிட்டே வந்தேன். எனக்கும் இவரைப் பிடிச்சதுனால தான் திரும்ப அவர் டீம்ல நான் சேர்ந்தேன். அண்ட் இவரு மாறிட்டாருனு எனக்குப் புரிஞ்சது. எல்லோருக்கும் சம்மதம் எல்லோரும் ஹேப்பி நானும் ஹேப்பி"

"சரி அவன் பேசுனத்துக்கெல்லாம் அவன் மேல உனக்குக் கோவமே இல்லையா?"

"இதுவரைக்கும் என்கிட்ட நிஜமாவே 100 முறைக்கு மேல அதை நினைத்து ஃபீல் பண்ணி சாரி கேட்டிருப்பாரு. ஏன் இன்னைக்குக்கூட, ஜிட்டு அண்ணா நீங்க பாத்ரூம் வந்திங்களே அப்போ இது தான் நடந்தது"

"ஓ!"

"ஏய் அப்போ வெறும் மன்னிப்பு மட்டுமா நடந்தது ? வேற எதுவும்" என்று முடிப்பதற்குள் ஏனோ மௌனி முகம் சிவந்தது, ஹேமா ஜிட்டுவைக் கொட்ட,

"ஸ்டாப் இட் நான்-சென்ஸ், இது என்ன மண்டையா இல்லை மைதானமா? எல்லோரும் கொட்டிக்கொட்டி விளையாட? எப்படி வீங்கியிருக்குத் தெரியுமா?"

அவன் பேசுவதை யாரும் கண்டுக்கொள்ளாமல் எல்லோரும் இவங்களுக்கு ஒரு ஓபோடுங்க என்றதும்,

ஓ என்று பலமாய் சப்தம் வர வண்டியும் புவனேஸ்வரை வந்தடைந்தது.

"டேய் உங்களை உங்களை..." என்று கடுப்பானான் ஜிட்டு.

வண்டி புவனேஷ்வரை நெருங்கும் போது மணி 07 .10. இன்னும் 40 நிமிடங்களிலே கட்டாக் சென்றுவிடும் என்பதால் இரவு உணவை அங்கே ஆர்டர் செய்திருந்தனர். நித்யா தான் விவானிடம் சென்று பாப்பாவை வாங்கிவிட்டு அவனிடம் கொஞ்சம் பேசி நார்மல் செய்து விட்டு வருமாறு சொன்னாள். பின்னே நாளைக்கு அவன் ரொம்பவும் டிப்ரெஸ்டாக தான் இருப்பான். விவானும் அங்கே போக அப்போது இளவேனில் நடுவில் அமர்ந்திருக்க அவளுக்கு இருபுறமாக துவாராவும் சரித்திராவும் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர். தந்தையைப் பார்த்ததும்,"ஐ அப்பா" என்று சொன்ன இளவேனிலைத் தூக்கியவன் அந்த பெரியவரிடம் அமர்ந்தான்.

அவன் கண்களோ சரித்திராவைப் பார்க்க அவளோ இவன் பார்ப்பதை துவாரா பார்த்துவிடுவானோ என்று பார்க்க அவனோ இளவேனிலில் காலை பிடித்துக்கொண்டு அவள் பாதத்தில் கூச்சம் ஏற்படுமாறு விரலால் வருடிக் கொண்டு அவளோடு விளையாடிக்கொண்டிருந்தான். இளவேனிலும் காலை விலக்க போராட சிரித்துக்கொண்டே இருந்தாள்.

நினைவுக்கு வந்தவன், "வாடா அம்மு அம்மா கூப்பிட்டாங்க. அங்கப் போலாம்" என்று இளவேனிலைத் தூக்கிப் போக அங்கே அந்த கம்பார்ட்மெண்டில் முன்னாடி நின்றுகொண்டிருந்த செபாவிடம் கொடுத்துவிட்டு அவன் மீண்டும் இங்கே வந்தான்.

அவன் வருவான் என்று அறிந்த சரித்திராவும் அதற்கேதுவாய் அவள் கம்பார்ட்மெண்டில் இருந்து தள்ளி அடுத்த கம்பார்ட்மெண்ட் ஜாயின் ஆகும் இடத்தில் நிற்க அவள் நினைத்தது போலவே வந்தான் விவான்.

"சரித்திரா எப்படி இருக்க?"

சிரித்தாள். அந்தப் புன்னகையே அவள் மகிழ்ச்சியைச் சொன்னது. அவள் விவானிடம் பேசிக்கொண்டிருக்க திரும்பி எங்கே துவாரா வருகிறானா என்று பார்க்க அவனும் தூரம் அங்கேயே அமர்ந்து அவளைப் பார்த்தான். இவள் புன்னகையைப் பூத்தாள். அவனும் குறுநகைச் செய்தான்.

சரியாக அப்போது அவளுக்கு அழைப்பு வந்தது, 'கீர்த்தி' என்று அவளின் செல்லின் டிஸ்பிலேயில் வர அதை விவானுக்குக் காட்டியபடியே ஸ்பீக்கரில் போட்டாள்.

.........................................................

வண்டி புவனேஷ்வரில் நிற்க, துஷியும் யாழினியும் அங்கே மிரு கைக் காட்டும் கம்பார்ட்மெண்ட் நோக்கி ஏறினார்கள். துஷியை அங்கிருப்பவர்களுக்குத் தெரியும் ஆனால் யாழினியை வெகு சிலருக்குத்தான் தெரியும். நித்யா, விவான், மிரு, தியா ஆகியோருக்கு மட்டும்.

"ஹாய் பட்டிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஆம் மீட் மிஸ் யாழினி. என்னைப் பிடிச்சிருக்கும் ஏழரை. ஆனால் எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்தே" என்று சொல்ல இளங்கோ, ஹேமா, தியா, செபா, ஜிட்டு உட்பட எல்லோரும் சிரித்தனர். ஏன் அனேஷியாவும் சிரிக்க,

"ஓகே கைஸ் எல்லோரும் எங்களுக்கு ஒரு ஓ போடுங்கப்பா. இதெல்லாம் நாங்களா கேட்கணும்? நீங்களே செய்யணும்" என்றாள் யாழினி.

ஏனோ யாழினியின் இந்தப் பேச்சு சிலருக்குப் பார்த்ததும் அவளைப் பிடிக்க பலருக்கு அவளை பார்க்கவே சகிக்காமல் இருந்தது. அந்த பலரில் நித்யா மிரு தவிர எல்லா பெண்களும் இருந்தனர்.

மௌனி,இதித்ரி,பார்வதி மூவருக்கும் இவளால் ஏதேனும் கலகம் வருமோ என்று நினைத்து அஞ்ச அதேபோல் ஜிட்டு, ஹேமா, இளங்கோ, செபா நால்வரும் வாயில் ஜொல் வராத குறைதான் அவளையே 'பே 'வென பார்க்க இதித்ரி பொறுக்காமல் அருகில் நின்ற ஜிட்டுவின் மண்டையில் கொட்ட பாய்ஸ் எல்லோரும் நினைவுக்கு வந்தனர்.

பெண்களின் பார்வையை வைத்தே அவர்களின் எண்ணங்களை உணர்ந்த யாழ், "இங்க யாரு யாரு பேரா இருக்கீங்க சொல்லுங்க" என்றதும், அவரவர் தத்தம் ஜோடியைச் சொல்ல, "ஓ யங் மேன் அப்போ நீ மட்டும் தான் இங்க சிங்கிளா?" என்று செபாவைப் பார்த்துப் கேட்க,

"ஐயோ அவனுக்கு கல்யாணமே ஆகிடுச்சு. அவன் வைப் கூட..." என்று சொல்ல வந்த ஜிட்டுவின் காலை சமயோஜிதமாய் மிதித்தான் ஹேமா. "இதோ விவியும் சிங்கிள் தான்" என்றான்,

"ஏன்டா? ஒன்னு மிதிக்கறீங்க இல்ல கொட்டுறீங்க. ஏன்டா?" என்றவன் புரிந்து "அவன் வைப் அவனுக்காக வெய்டிங்ன்னு சொல்ல வந்தேன்" என்று சொல்ல ஏனோ செபாக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பது அவன் முகத்திலே தெரிந்தது.

"கைஸ் எல்லோரும் என்னை வில்லி மாதிரி பாக்குறதைக் கொஞ்சம் நிறுத்துங்கப்பா. கொஞ்சம் ஸ்டைலா பேஷனா முடியெல்லாம் வெட்டி ஜீன்ஸ் டீ ஷர்ட்னு போட்டு வந்தா உடனே நான் அடுத்தவ ஆளை கரெக்ட் பண்ற கேரக்ட்டருனு நெனச்சிட வேண்டியது இல்ல?" என்று பெண்களைப் பார்த்து, குறிப்பாக மௌனி, பாருவைப் பார்த்துக் கேட்க இவளின் இந்த வெளிப்படையான பேச்சில் அவர்கள் ஆடித்தான் போனார்கள்.

"உங்களைச் சொல்லி தப்பில்லை, இந்த தமிழ் சீரியல் எடுக்கறாங்க பாரு அவனுங்களைச் சொல்லணும், ச்சி எனக்கு அவ்வளவு மட்டமான டேஸ்ட் இல்ல" என்று சொல்ல இப்போது ஆண்களும் கூட அவளை விந்தையாய்ப் பார்க்க,

"நான் யாழினி.ஃப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் யாழி, இல்லை இனி. நீங்க எப்படி வேணுனாலும் கூப்பிடலாம். யாழினாலும் ஓகே இனிநாலும் ஓகே இல்லை யாழினினாலும் ஓகே"

"ஏன்டி வந்ததும் வராததுமா இப்படியா பேசுவ எருமை மாடே" - துஷி அவளைத் திட்ட

"சாரி லேடிஸ் இவ கொஞ்சம், இல்ல இல்ல ரொம்ப மாடர்ன். தப்பா எடுத்துக்காதீங்க" என்று சொல்ல அப்போது தான் பாரு, இதி, மௌனி முகத்தில் ஒரு தெளிவு வந்தது.

"நான் இன்னும் எலிஜிபிள் சிங்கிள் தான். எனக்கும் எலிஜிபிள் சிங்கிள் தான் வேணும். சோ ஆல் யுவர் ஆள்ஸ் ஆர் ரிஜெக்டெட்"

"அப்போ இவன்" என்று செபாவைக் காட்டிக் கேட்ட ஜிட்வை முறைத்தான்,"அடுத்தவ ஆளே வேணாம்னு சொல்றேன் இதுல இன்னோரு பொண்ணோட புருஷன்: என்று ஜிட்டுவைப் பார்த்துச் சொன்னவள், "என்ன ப்ரோ உட்கார்ந்தே பேசுறீங்க. எழுந்து நில்லுங்க: என்று சொல்ல,

எல்லோரும் இப்போது சிரிக்க, "அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்" என்று கூட்டத்திலிருந்து சப்தம் வர, (பின்ன ஜிட்டு தான் கொஞ்சம் இல்லை இல்லை ரொம்பவும் குட்டையாச்சே!) "இவனுங்க தான் கிண்டல் பன்றானா நீங்களும் பண்றீங்க பாரு"

பிஸ் இங்க வாங்க என்று கண்ணடித்துக் கூப்பிட்டவள் "குட்டையா இருக்கவங்க தான் 'அந்த' விஷயத்துல செம ஸ்ட்ரோங்கா இருப்பார்களாம் அப்படியா?" என்று கண்ணடித்துக் கேட்க, அவனோ பே வென அவளைப் பார்த்துக்கொண்டிருக்க, "துஷி நம்ம கம்பார்ட்மெண்ட் எது?" என்று கேசுவலாய் அடுத்த கேள்வியைக் கேட்க, "இந்தா" என்று தன் போனை நீட்டியவன்,"போ நான் வரேன்" என்று சொல்லிவிட்டு,

"சாரி கைஸ், எஸ்பிஷியலலி பொண்ணுங்க எல்லோரும் ப்ளீஸ் அவளைத் தப்பா எடுத்துக்க வேண்டாம். அவ சுபாவம் அப்படி. அண்ட் நீங்க நெனைக்கிற மாதிரி அவ கெட்டவளோ இல்ல அடங்காபிடாரியோ எல்லாம் இல்ல கொஞ்சம் வாய் நீளம், டோன்ட் மைண்ட். அண்ட் உங்க ஆளுங்களுக்கு எல்லாம் நான் கேரெண்டீ, சோ ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு அவனும் போக,

நின்றவன்,"நித்யா விவான் எங்க?"

"அவன் எங்கேயோ போனான் பாரு" என்று சொல்லிவிட்டு அமர இப்போது பெண்கள் மூவரும் (மௌனி - பாரு - இதித்ரி)யோசனையில் இருக்க நித்யா தான் "சில் கேர்ள்ஸ் நீங்க கூட பரவாயில்ல. என் கல்யாணத்துல பண்ணா பாருங்க அலப்பறை. ஐயோ" என்று நிறுத்த எல்லோருக்கும் என்ன என்று அறிய ஆர்வம் வந்தது.

.........................................................................................................................................

அங்கே கீர்த்தி - விவான் - சரித்திரா மூவரும் பேசிக்கொண்டிருக்க பின்னாலிருந்து வந்த யாழி விவான் முதுகில் ஒன்று வைக்க அலறியடித்துக் கையை ஓங்கியவன் யாழியைக் கண்டு அமைதியாக,

"டேய் நான் தான். ஏன் இவ்வளவு கோவம்?" என்று சொல்ல இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தான் விவான். பின்னாலே வந்த துஷி இவர்கள் நிற்கும் தோரணையைப் பார்த்து இங்கேயும் ஏழரையைக் கூட்டிவிட்டாள் என்று உணர்ந்தவன் "என்னடிப் பண்ணித் தொலைச்ச?"

"என்கூடவே வந்த ஒரு பன்னியைத் தான் தொலைச்சேன்" என்று அவனை மறைமுகமாய்ச் சுட்டிக்காட்ட, புரியாமல் விழித்தான் துஷி.

"உன்னைத் தான் பன்னினு சொல்றா இவ" என்று விவான் புரியவைக்க, "ஏன் டி கொஞ்சநேரம் கூட சும்மா இருக்க மாட்டியா? எப்பப் பாரு எதாவது செய்யவேண்டியது" என்று சொல்ல இங்கே லைனில் இருந்த கீர்த்தி, "அண்ணா" என்று அழைக்க,

"சரி நீங்க போங்க, நான் வரேன்" என்றவன் கீர்த்தியிடம் பேசினான்.

..................................................................

"டேய் மச்சான் வாடா கார்ட்ஸ் விளையாடலாம்" என்று அழைத்தான் இஸ்மாயில்.

"இல்ல நான் வரல"

"டேய் உன்னால எங்க எல்லோருக்கும் நிம்மதி இல்ல. ப்ளீஸ்டா வாடா" என்று அழைக்க ரேஷா, பெனாசிரும் சேர்ந்து அழைக்க, அவன் வந்தான்.

இவர்கள் இங்கே விளையாட ஆரமிக்க அப்போது அருகிலிருந்த ஒருவரும் வருவதாகச் சொல்ல அவர்கள் எல்லோரும் விளையாடினர்.

.....................................................................

முன்னால் சென்ற யாழி அங்கே அமர்ந்திருந்த துவாராவின் கையைப் பிடித்து நிற்கவைத்து ஹகித்தாள். பின்னாலே வந்த துஷியும் அவனுடன் சிரித்துப் பேச அங்கேயே அமர்ந்த மூவரும் பேச ஆரமித்தனர்.

அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த ஆடவர்கள் சிலர் அவளை நோட்டமிட எதையும் கண்டுக்காமல் இருந்தாள் யாழி.

விவானும் சரித்திராவும் பின்னாலே வந்தார்கள். ஏனோ துவாராவின் அருகில் அமர்ந்திருக்கும் யாழியைக் கண்டதுமே ஒரு வித கோவம் பொறாமை பொசசிவ் சரித்திராவை ஆட்கொள்ள வேகமாய்க் கோவமாய் வந்து அமர்ந்தாள் சரித்திரா. அந்தப் பக்கம் அமர்ந்த விவானும் அவர்ளுடன் கொஞ்சம் கதையளர்ந்தான்.

.........................................................................

"அக்கா இவளும் நம்ம கூடத்தான் வருவாளா?" என்றாள் மௌனி.

நித்யாவுக்குப் புரிய கண்களால் ஹேமாவுக்கு ஜாடைக் காட்டினாள். ஹேமா அவளை அழைத்துச்செல்ல, இளங்கோ பாருவை அழைத்துச் செல்ல, "இதி யூ டோன்ட் ஒர்ரி. நான் அவங்க மாதிரியெல்லாம் கிடையாது. ராமன் மாதிரி" என்ற ஜிட்டுவிற்கு, "ஏன்டா அவ எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாலே உன்கிட்ட நீ 'அந்த' விஷயத்துல ஸ்ட்ராங்கு சொல்லுவா நீயும் அமைதியா நிக்குற?"

"என்னை என்ன பண்ண சொல்ற இதி? அப்படிச் சொல்லும்போது இல்லைனு சொல்லச் சொல்றியா என்ன? அது எனக்கு ரொம்ப அசிங்கம்" என்றதும், கோவமாய் அவள் சென்றுவிட, அனேஷியா தான் சிரிப்பதா இல்லை சீரியசாக எடுப்பதா என்று யோசித்தாள்.

"நல்லா இருந்த ஜோடி மூன்றையும் பிரிச்சிட்டு போயிட்டாங்க அவங்க" என்ற அனேஷியாவுக்கு,

"விடு நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும்" என்றாள் நித்யா.

"இங்க வாங்க குட்டி" என்று இளவேனிலை அழைத்தாள் அனேஷியா. அவளுடன் கொஞ்சம் கொஞ்சிப் பேசி விளையாடினாள். (பயணங்கள் முடிவதில்லை)
 
Top