Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-21

Advertisement

praveenraj

Well-known member
Member
"சரி அப்போ அப்போ எங்க இருக்கீங்கன்னு அப்டேட் பண்ணுங்க ஓகே?"

"கண்டிப்பா" என்று மெசேஜ் செய்தனர்.

அவன் மெசேஜ் செய்ததும் விவான் அவனுக்கு அழைத்தான்,

"என்னடா விஷயம்?" என்ற திவேஷிற்கு,

"அது வந்து..."

"சொல்லுடா" என்று சொல்ல அவனோ இன்று நடந்ததை (விவான் துவாராவை அடித்ததை ஏனோ உண்மையான வருத்தத்துடன் தான்) சொல்ல,

"லூசாடா அவன்? சரி அவன் தான் லூசுன்னா நீயும் அப்படியே நடந்திருக்க?"

"என்ன பண்ணச் சொல்ற? அமைதியா இருக்கணுமா?"

"மச்சான் எதுனாலும் அவனை இங்க வரவெச்சு பேசலாம். காரியத்தைக் கெடுத்துடாத சொல்லிட்டேன்"

"பார்ப்போம். சரிடா, ஆமா நீ ஏன் டல்லா இருக்க? என்னாச்சு?" என்ற விவானுக்கு,

"அது ஒண்ணுமில்ல மச்சான் கொஞ்சம் ஒர்க் டென்ஷன்"

அவன் சமாளிப்பது விவானுக்கும் நன்கு புரிந்தது, பின்னே அவனைப் பற்றியும் நன்கு அறிந்தவன் தானே விவான்? இன் பேக்ட் துவாராவை எவ்வளவு பிடிக்குமோ எவ்வளவு நெருக்கமோ திவேஷும் அவ்வளவு நெருக்கம் தான்.

"மச்சான் ஃபீல் பண்றியாடா?"

"டேய் நீங்க எல்லாம் எப்போ வருவீங்கன்னு காத்திருக்கேன் மச்சான். யாழும் துஷியும் வராங்கயில்ல?"

"ஆம் காலையில போன் பண்ணான்"

"சரிடா பை வெக்கறேன்"

.......................................................................

தான் வருத்தப்பட்டதும் எதற்காக வருத்தப்படுகிறேன் என்பதை விவான் அறிவான் என்று திவேஷும் உணர்ந்தான்.

மூச்சை நன்கு இழுத்துவிட்டான்.

விவான் திவேஷுடன் பேசிவிட்டு வைக்க உடனே அவனுக்கு அழைப்பு வந்தது. கீர்த்தனாவிடம் இருந்து தான்...

"சொல்லுடா என்ன விஷயம்?"

"அண்ணா அது வந்து..."

"என்னம்மா என்ன ஆச்சு?"

"துவாரா சாப்பிட்டானா?"

"இல்ல" என்றவன் அதன் பின் நடந்ததைச் சொன்னான்.

அந்த பக்கம் பதிலில்லை,

"கீர்த்தி கோவமா? நான் உன் அண்ணனை அடிச்சிட்டேன்னு கோவமா?"

"ஒரு பக்கம் சந்தோசம். மறுபக்கம் பெருமை. கொஞ்சம் சோகம்"

"புரியில?"

"யாருமே அவன் கிட்ட இதைப்பற்றி பேச முடியாது. நீங்க பேசுனத்துக்கு சந்தோசம். எனக்காக நீங்க உங்க பெஸ்ட் ஃப்ரண்ட அடிச்சத நெனச்சு பெருமை. அடிபட்டது என் அண்ணனு நெனைக்கும் போது சோகம்..."

விவானுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "என்ன விஷயம்டா?"

"இப்போ தான் அண்ணா கவனிச்சேன். நாளைக்கு தான் திதி. அவனுக்கு எப்படியும் தெரிஞ்சியிருக்கும். இன்னும் சாப்பிட வேற இல்லைனு சொல்றீங்க. கொஞ்சம் சாப்பிட வெச்சிடுங்க அண்ணா. நாளைக்கு பொழுது விடிஞ்சா சாயுற வரை தண்ணிக்கூட குடிக்க மாட்டான். உடம்பு கெட்டுப் போயிடும்"

ஏனோ விவானுக்கு இப்போது கீர்த்தனாவின் நிலையை நினைக்க ரொம்பவும் வலித்தது. "கீர்த்தி நீ நாளைக்கு...?" அவனுக்கு மிகுந்த தயக்கம்,

"வழக்கமா இருப்பேன். இந்த வருஷம் முடியாது. பாப்பா இருக்கா வயித்துல. சோ..."

ஏனோ இப்போது தான் விவான் நார்மல் ஆனான். "சரிடா நீ எதையும் நினைச்சு ஃபீல் பண்ணக் கூடாது ஓகே?"

"முயற்சி பண்றேன்"

"அப்பாக்கு?"

"நான் எதையும் சொல்லல. ஆனாலும் தெரியும்னு நினைக்கிறேன். தெரியிலனா சந்தோசம். பார்ப்போம்..."

"சரிம்மா நான் வெக்கறேன்"

"அண்ணா அவனைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க..."

"அவன் மேல உனக்கிருக்கும் இந்த அக்கறை அவனுக்கு இல்லையேடா?"

"அதெல்லாம் நிறைய இருக்கு. காலையில கோவமா பேசிட்டு, பக்கத்துக்கு வீட்டு அக்காக்கு போன் பண்ணிச் சொல்லியிருப்பான் போல, இப்போ வர இங்கதான் இருந்தாங்க. அப்போவே புரிஞ்சது"

"அப்புறோம் எதுக்கு அப்படிப் பேசணும்? பிறகு கவலையும் படனும்?"

"உங்க ஃப்ரண்ட பத்தி உங்களுக்குத் தான் தெரியும். என்னைக்கேட்டா?"

"சரி நான் பார்த்துக்கறேன். தைரியமா இரு. நைட் கூப்பிடுறேன்"

"சரிண்ணா"

"ஏனோ விவானுக்கு துவாரா மீது இதுவரை இருந்த கோவமெல்லாம் விலகி ஒரு வித பரிதாபம், இரக்கம் வந்தது. கூடவே தான் சற்று பொறுமையாக நடந்துக்கொண்டிருக்க வேண்டுமோ?" என்று நினைத்தவன் ஒரு வித குழப்பத்தில் வந்து அமர.

"ஹ்ம்ம் ஹ்ம்ம் கண்டினு தி ஸ்டோரி" - ஜிட்டு

எல்லோரும் விவானைப் பார்த்ததும் ஏதோ சரியில்ல என்று மட்டும் புரிந்தது.

"என்ன ஆச்சு விவா?" - இளங்கோ

நித்யா அவனை உலுக்க, நினைவுக்கு வந்தவன், "என்ன?"

"அதை நீ தான் சொல்லணும். என்ன ஆச்சு? திவேவிடம் தானே பேசுன..."

"இல்ல கீர்த்தி போன் பண்ணா..."

"போச்சுப்போ இப்போ என்ன பண்ணான் அவன்?" - ஹேமா

ஒரு மாதிரி இயலாத பார்வையைப் பார்த்தான் விவான்.

"என்ன விவா? என்ன ஆச்சு?" - நித்யா

"விவி அவன் சாப்பிட்டானா?"

"யாரோ சொன்னாங்க பசியெடுத்தா தானா சாப்பிடுவானு... விடு நாய்க்கு பட்டா தான் தெரியும்" என்று செபா கேசுவலாய் சொல்ல, இன்னும் கோவமாய் முறைத்தான் விவான்,

"இங்க பாருங்க. அவனை நான் என்ன வேணுனா சொல்லுவேன். ஆனா யாரும் அவனை எதாவது சொன்னா எனக்குக் கெட்ட கோவம் வரும்" என்று கடுமையாக வந்தது வார்த்தை.

"டேய் அவன் சும்மா தானே சொன்னான். ரிலேக்ஸ்..." - ஹேமா

"சரி பாப்பா எங்க நித்யா?" - விவான்

"தூங்குறாடா"

"கொடு அவளை"

"இப்போ எதுக்குத் தூங்கும் பாப்பாவைக் கேட்குற?" - மிரு

"காலையில அடிச்சிட்டு வந்தான் இல்ல? இப்போ சமாதானம் பண்ணனும். இளா இருந்தா அது ரொம்ப சுலபம்" என்று நித்யா சொல்ல,

விவா பாப்பாவைத் தூக்க, உறக்கத்திலிருந்தஅவளோ சிணுங்கினாள். பிறகு தந்தையின் வாசம் உணர்ந்து அமைதியாக,

"கொஞ்ச நேரம் கழிச்சுப் போலாமே?" - விவி

"இப்போவே போகணும். சாப்பிட வெக்கணும். நாளைக்கு வேற அவன் சாப்பிடமாட்டான்"

"ஏன்?" என்ற மௌனிக்கு,

"அவன் அம்மா இறந்த நாள்"

மௌனி மற்றும் இதித்ரியைத் தவிர எல்லோருக்கும் தெரியும்.

"எப்படி இறந்தாங்க?" - மௌனி

"சூசைட்" - விவா

இது விவி, நித்யா தவிர எல்லோருக்கும் அதிர்ச்சி. அவன் இளாவைத் தூக்கிக்கொண்டு துவாராவை நோக்கிச் சென்றான்.

கனத்த மௌனம்.

"இதனால தான் அவன் அப்பாக்கிட்ட பேசுறதில்லையா?" என்ற ஹேமாக்கு

ஆமாம் என்பதைப்போல் விவி தலையை ஆட்டினான்.

...........................................................

விவான் இளாவைத் தூக்கிக்கொண்டு அங்கே போக, ஏனோ விவானைப் பார்த்ததும் சரித்திராவிற்கு கோவம் வந்தது. பின்ன இவன் அடித்ததை நேரில் பார்த்தவளாயிற்றே,

எதுவும் பேசாமல் இவன் இளவேனிலை இறக்கிவிட அவளோ, "து மாமா" என்று சொல்லி அவனின் போர்வையை இழுத்தாள்,

அவன் விழிக்காமல் போக இளவேனில் திரும்பி தன் தந்தையைப் பார்க்க அவனோ கையை வைத்து எழுப்பச் சொல்ல அவ்வாறே செய்தாள் அந்த மழலை.

பூப்போன்ற கைகளால் கோலமிடுவதை உணர்ந்தவன் விழித் திறக்க அருகில் நின்ற இளவேனிலைப் பார்த்தவன் சிரித்தபடியே தூக்க அவள் அவன் மார்பில் அமர்ந்தவள் வரும்போது தன் தந்தை அறிவுறுத்தியதை நினைவுபடுத்தி சாப்பாட்டை எடுத்து நீட்டினாள்.

அவளுக்கு முத்தம் வைத்தவன், "அப்புறோம் சாப்பிடுறேன் குட்டி தங்கம்"

"இப்போவே மணி 4 ஆக போகுது. ஒழுங்கா சாப்பிடு" - விவான் கோவமாய் எங்கேயோ பார்த்துச் சொன்னான்.

திரும்பி விவானைப் பார்த்தவன், எதையும் சொல்லாமல், "தூங்கலையா குட்டி நீங்க?'

"நான் தூங்கிட்டுத் தான் இருந்தேன். அப்பா தான் எழுப்பி கூட்டிட்டு வந்தாங்க" என்று சொல்ல,

"உன் தூக்கத்தைக் கெடுத்துட்டானா குட்டி? சரி நீ என் மேல தூங்கு..." என்றதும்

"சாப்பிட்டு எனக்குக் கதை வேணும்..." என்றாள் இளவேனில்.

"சொல்லிட்டா போச்சு"

"டேய் முதல சாப்பிடு. அப்புறோம் கதை சொல்லலாம்" என்று அவன் சாப்பாட்டை பிரித்து நன்றாக உள்ளதா என்று பார்க்க அது டைட்டா பேக் செய்து இருந்ததால் நன்றாகவே இருக்க அவன் நீட்டினான்,

துவாராவும் எதையும் பேசாமல் சாப்பிட அமர, "இளா இங்க வா. மாமா சாப்பிடட்டும்" என்ற விவானுக்கு,

"நீ இங்கேயே உட்காருடா தங்கம்"

விவான் அவன் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

"உங்க அப்பாவை அந்த பக்கம் திரும்ப சொல்லுடா. அப்புறோம் எனக்கு வயிறு வலிக்கும்" என்று துவாரா சொல்லவும்,

"அப்பா திம்புப்பா து மாமா வயிறு வலிக்குதாம்" என்றாள் இளவேனில்.

விவான் அமைதியாக கதவின் ஓரம் வந்தான். இதையே ஒரு மாதிரி ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள் சரித்திரா. 'அடிக்கிற கைதான் அணைக்கும் போல?'

சாப்பிட்டு முடித்து ரெஸ்ட் ரூம் போனவன், ஏனோ அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஒருவேளை காலையில் நடந்ததை இவர்கள் பார்த்திருப்பார்களோ என்று நினைத்து வருந்த,

"ஹி ஏட்" என்று செய்தி அனுப்பினாள் சரித்திரா.

விவான் அங்கு வரவும் துவாரா மீண்டும் அங்கு வரவும் சரியாக இருந்தது.

துவாரா இளவேனிலுக்கு கதை சொல்ல, சரித்திரா ஓரமாய் போக விவானும் பின்னாலே போனான்.

.......................................................................

இப்போது கீர்த்தியே துவாராவை அழைத்தாள். அவன் எடுக்கலாமா வேண்டாமா என்று இருக்க, "மாமா போன் கீர்த்தி கீர்த்தி" என்று சொல்ல அட்டென்ட் செய்தான்,

"சாப்பிட்டியா?"

"ஹ்ம்ம்"

"உனக்கு கோவம் வந்தா என்மேல காட்டு. சாப்பாட்டுல காட்டாத. நான் எதுக்கு இருக்கேன்?" என்று கோவமாய் வந்தது வார்த்தை.

"ஹே கீர்த்திம்மா என்னை மன்னிச்சுடு"

"நான் எதையும் பேச மாட்டேன். எனக்கு எந்த மன்னிப்பும் வேணாம். இனி நான் எதையும் சொல்லவும் மாட்டேன்."

"பையன் வந்துட்டான்னா?"

"டேய் இங்க வா மாமா பேசணுமாம்" என்று தன் மகனை அழைத்தாள் கீர்த்தி.

கொஞ்சநேரம் பேசியவன் அழைப்பைத் துண்டித்தான்.

அவனின் போன் வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தாள் இளவேனில். அதையே பார்த்துக்கொண்டு இருந்தான் துவாரா.

விவான் முன்னால் வந்தான் பின்னாலே சரித்திராவும் வந்தாள்.

"வா போலாம்" என்று இளாவை அழைக்க,

"நான் இங்கேயே இருக்கேன்..." என்றாள்.

"சரி நான் அங்கே போறேன்" என்று விவான் சென்றுவிட இளவேனிலிடம் விளையாடிக்கொண்டு இருந்தான் துவாரா.

......................................................................

"பாப்பா எங்க விவா?"- நித்யா

"துவாரா கூட இருக்கா" என்றவன் வந்து மீண்டும் நித்யாவின் மடியில் படுத்துக்கொண்டான்.

விவான் சென்றதும் ,

"என்ன ஆச்சு?" என்று பார்வதி கேட்க

"என்ன என்ன ஆச்சு?"

"துவாரா அம்மாக்கு?"

"தெரியில. திடீர்னு அன்னைக்கு ஈவினிங் ஸ்கூல்ல இருந்து வந்தான். அவங்க..."

அதன் பிறகு எல்லோருக்கும் அந்த கதை கேட்க வேண்டும் என்ற எண்ணமே சென்றுவிட்டது.

பாரு மற்றும் மிரு படுக்க, மற்றவர்கள் போன் நோண்டிக்கொண்டு இருந்தனர்.

அனேஷியாவும் கண்களை மூடி படுத்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரம் அப்படியே போக "சாய் சாய்" என்று விற்கும் சப்தம் கேட்டு பாரு தலை வலியென்று சொல்ல எல்லோரும் வாங்கி பருகினர். விவான் தூங்கிவிட நித்யா அவன் தலைமுடியை கோதிக்கொண்டே வேடிக்கை பார்த்தாள்.

விவி, ஹேமா, செபா, தியா, ஜிட்டு, இளங்கோ எல்லோரும் சாய் குடித்துக்கொண்டே அமைதியாக இருந்தனர்.

அந்த அமைதியைக் கலைக்கும் பொருட்டு ஒரு அழைப்பு வந்தது. ஏனோ எல்லோரும் திரும்பி சப்தம் வரும் திசையைப் பார்க்க அது வேறு யாருமில்லை நம்ம தியானேஷ் தான். போனை பார்த்ததுமே அவனின் முகம் அஷ்டக் கோணலானது.

"யாருடா?" - ஹேமா

"எடுத்துப் பேசேன்டா" - இளங்கோ

விவியன் தான் என்னவாக இருக்கும் என்று ஓரளவுக்கு யூகித்துச் சிரிக்க, விவான் தான் அந்த சப்தங்கள் எதுவும் கேட்காமல் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றிருந்தான். சும்மாவே பயங்கர கடுப்பில் இருந்தவனுக்கு நித்யா அவன் தலையை கட்டுல் செய்ய அது அவனுக்கு இன்னும் சுகமாய் இருக்க அப்படியே உறங்கிப்போனான். (cuddle - ஹக் ,கிஸ், கையைக் கோர்த்துக்கொள்வது, தலையைக் கோதுவது ஆகியவற்றின் வாயிலாய் அன்பைச் செலுத்துவது என்று பொருள்).

மிரு தான் திருதிருவென விழித்தாள். என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோ என்று அவள் இருக்க (நேற்று இரவு நடந்த ட்ராமா அவளுக்குத் தெரியாது. நெஞ்சு வலி டிராமா)

"ஹலோ" என்று இவன் சொல்ல

"ஊருக்குப் போனதுமே என்னைய மறந்துட்ட இல்ல? என்னைய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியும் உனக்கு ஊருக்குப் போறது தான் முக்கியம்?"

"......................"

"டேய் ஏதாவது பேசேன்டா. ஓ அதுக்குள்ள அந்த மகாராணி உன்னை மயக்கிட்டாளா? இல்ல அவகிட்ட எதாவது உத்தரவு வாங்கணுமா?"

"என்ன விஷயம்?" (அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்டான்)

"ஏன்டா ஒரு போன் கூட பண்ணல. அம்மா எப்படி இருக்கன்னு கூட கேட்கல"

"கொஞ்சம் நிறுத்தறீங்களா? உங்க ட்ராமா நெஞ்சு வலி கதை எனக்குத் தெரியும்"

அந்தப்பக்கம் சப்தம் இல்லை,

"அசிங்கமா இருக்கு. வைங்க போனை..."

"டேய் டேய் நல்லா கேட்டுக்கோ, அந்தக் குடும்பத்துல இருந்து மட்டும் பொண்ணு எடுத்த அப்புறோம் நடக்கிறதே வேற? இல்ல நான் நாளைக்கே தரகர் கிட்ட சொல்லுறேன் ஒரு நல்ல குடும்பத்து ஜாதகம்..."

எழுந்து தூரம் வந்தவன், "நல்லா கேட்டுக்கோங்க, மிருதுளாவைத் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களுக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும். அண்ட் உடனே எதாவது ட்ராமா போட நினைக்காதீங்க, இப்போ இருக்குற நிலைமைக்கு உங்களுக்கு உண்மையிலே நெஞ்சு வலி வந்தாக்கூட நான் அண்ணா அண்ணி யாருமே நம்ம மாட்டோம். அப்புறோம் மர்கயா தான்" என்றதும்

"டேய்... நான் உன் அம்மாடா"

"அதுனால தான் பொறுமையா சொல்லுறேன். போய் ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்க. அண்ட் என் மேல இருக்கும் கடுப்பை அங்க அண்ணிகிட்ட காட்டிடாதீங்க. ஏன்னா நேத்து நீங்க பண்ண கூத்துல அண்ணியும் கொலைவெறியில இருக்காங்க. அவ்வளவு தான்"

"என்ன எல்லோரும் என்னைய மிரட்டறீங்களா?"

"சே சே உண்மைய சொல்றேன். இப்போ உனக்கு ஏதாவது ஆச்சுன்னா கூட என்னால உடனே எல்லாம் வர முடியாது வெய்ங்க போன"

அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இதுவரை அம்மா பேச்சைக் கேட்டு மிருதுளா என்னைவிட்டு தூரம் சென்றதே போதும். இனியும் வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்க, செபா தான் அவன் முதுகில் கையை வைக்க "என்னடா ஆச்சு?"

"முடியில டா. அப்பா இறந்து ஆறு வருஷம் ஆச்சு. எப்பயோ நடந்ததெல்லாம் மனசுல வெச்சிட்டு இன்னைக்கு பழிவாங்குறாங்க"

செபாக்கும் ஓரளவுக்கு விஷயம் தெரியும். "சரி மிரு என்ன சொல்றா?"

"தெரியில"

"பேசிப்பாரேன்"

"என்னனு?"

"எதாவது"

"மச்சான் சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது"

"சொல்லு"

"நீயேன் ஜெசிகிட்ட பேசிப்பாக்கல?"

கடும் கோவம் வந்தவன் மீண்டும் வந்து அவன் இருக்கையில் அமர்ந்தான்.

.............................................................

வெளியேவே நின்றுக்கொண்டு இருந்த ஜெசியிடம் எப்படியாவது பேசி கல்யாணத்தை நிறுத்த சொல்லலாம் என்று எண்ணி, "கொஞ்சம் உள்ள வாங்க பேசலாம்"

"இப்போ என்ன டைம் தெரியுமா?"

"தெரியும். நீங்க சொன்ன டைம் இல். ஐ அம் லேட்"

"ஓ! சரி நான் சொன்ன டைம் இல்லல சோ நான் போறேன்"

'அப்பாடா இவளே போறேன்னு சொல்றா அப்போ கல்யாணம் நின்றும்' என்று ஒரு கணம் நினைத்தவன், 'ஒருவேளை போய் ஏதாவது ஏடாக்கூடமா வத்தி வெச்சிட்டானா? ஐயோ' என்றவன்,

"ஏங்க கொஞ்சம் நில்லுங்க"

"மிஸ்டர், உங்களுக்கு மேனர்ஸ் கூட தெரியாதா?"

"என்ன மேனர்ஸ் தெரியிலன்னு நெனைக்கறீங்க?"

"டைம் கீப் அப் பண்ணல, ஓகே போன் பண்ணி இன்பார்ம் ஆச்சும் செஞ்சி இருக்கனும். அதும் இல்ல. வந்த போனையாவது அட்டென்ட் பண்ணியிருக்கணும். அதும் இல்ல, சரி லேட்டா வந்துட்டு பார்த்தும் கண்டுக்காம போனா என்ன அர்த்தம்? அட்லீஸ்ட் இவ்வளவு நேரத்துல ஒரு சாரியாச்சும் சொன்னீங்களா?" என்று அவள் பொறியவும்,

"அதே தான் நானும் கேட்கறேன், யாரு என்னனு தெரியாம திடீர்னு போன் பண்ணி நீங்க ப்ரீயா பிசியானு கூட கேட்காம, உங்க இஷ்டத்துக்கு ஒரு இடத்தையும் சொல்லி டைமும் சொல்லி வாங்கனு சொன்னா எப்படி? அவனுக்கும் வேலை இருக்குமா வரமுடியுமா? எதையும் கேட்காம, சரி அதையும் மீறி போன் பண்ணீங்கனு எடுத்து அட்டென்ட் பண்ணேன் இல்ல? வரேன்னு தானே சொன்னேன்? அடுத்தடுத்த கால் எடுக்கலான புரிஞ்சிக்கணும் போலீஸ் இருக்கும் ட்ராபிக் இருக்கும்னு, டைம் என்ன? இது ஈவினிங் பீக் ஹவர் ட்ராபிக். நான் எங்க ஒர்க் பண்றேன்? என் இடத்துக்கும் இதுக்கும் எவ்வளவு தூரம் தெரியுமா? அண்ட் என்ன சொன்னீங்க கண்டும் காணாமல் போனேனா? நான் உங்கள இப்போ தான் பார்க்கறேன்..."

"ஏன் என் போட்டோ அனுப்பலையா உங்க வீட்டுல?'

"அனுப்பனாங்க..."

"அப்போ யார் தப்பு இது?"

அதற்குள் உள்ளே வெளியே இருந்தவர்கள் இவர்களைப் பார்க்க, "கொஞ்சம் உள்ள உட்கார்ந்து பேசலாமா?" என்றான்,

அவளுக்கு இதற்கு மேல் இங்கே நிற்க வேண்டுமா என்று தோன்ற பே'சாம பிடிக்கலைனு சொல்லிடலாம், எதுக்கு இவன் கிட்ட பேசிட்டு? ஆனா ஆளு நல்லா தான் இருக்கான்' என்று அவள் யோசிக்க,

அவன் நேராய் உள்ளே சென்று அமர்ந்தான்.

அவளும் பின்னாலே வந்து அமர்ந்தாள்.

பேரர் வர, "ஸ்ட்ராங்கா காஃபீ"

"ரெண்டா சார்?"

"எனக்கு டீ இஞ்சி ஏலக்காய் போட்டு"

ஏனோ அவன் முழிக்க, "ஒரு காஃபி ஒரு டீ " என்றான்

இருவரும் அமைதியாக இருந்தனர். 'சாரி கேட்கறாளா பாரு' என்று அவனும்,

'இப்போ கூட சாரி சொல்றானா பாரு?' என்று அவளும் நினைக்க, ஆர்டர் வந்தது.

இருவரும் எடுத்து பருகினர், "சரி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" - செபா

"எதைப் பற்றி?"

"இந்த மேரேஜ் ப்ரோபோசல் பற்றி..."

"நான் நிறைய யோசிக்கணும். அவசரப்பட்டு தப்பா முடிவு எடுத்திடக் கூடாது" என்று அவள் சொல்ல (ஆக்சுவல்லி அவசரப் பட்டு நோ சொல்லிவிடக் கூடாது என்ற அர்த்தத்தில் சொல்ல, பின்னே அவனைப் பற்றி எதையும் தெரியாமல் நாம் பாட்டிற்கு வர சொல்லிவிட்டோம் பாவம் நமக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருப்பான் போல என்று அவள் யோசிக்க )

"அதே தான். யோசிச்சு தான் முடிவு சொல்லணும் " ('எங்கே இவள் எஸ் சொல்லிவிடுவாளோ' என்று அவன் யோசிக்க, ஏனெனில் அவளிடம் வந்த போது இருந்த அந்த ஆக்ரோஷம் இப்போது இல்லை,அவன் பயமெல்லாம் 'இவள் டாமிநேட்டிங் கேரக்டர் என்றும் ஒருவேளை இவ கிட்ட நாம சிக்கிட்டோம் அவ்வளவு தான். ஏற்கனவே அப்பா ஒருபக்கம், தப்பித்தவறி இவள் வந்தா நான் க்ளோஸ்' என்று அவன் நினைக்க ,,)

"உங்களைப் பற்றி நீங்க சொல்லுங்க?"- ஜெசி

"என்னப் பற்றி தான் உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமே" (இவளுக்கு எல்லாமும் தெரியும் போல என்ற எண்ணத்தில் அவன் சொல்ல, ஏனெனில் அவன் புகைப்படத்தை அவள் பார்த்திருப்பதால்)

"நீங்க என்ன விராட் கோலியா இல்ல ஷாருக்கானா? எல்லாம் தெரிஞ்சிருக்க? (இது தான் ஜெசி. ரொம்ப கேசுவலாய் பேசுபவள் தான்)

'உன்னப் போய் ஒருநிமிஷம் நல்லவனு நெனச்சேன் பாரு' என்று மனதில் அவன் கருவினான். (தன்னைப் பற்றி தெரிந்துக்கொள்ள தான் ஒன்றும் பிரபலம் இல்லை என்று தன்னை இன்சல்ட் செய்வதாய் நினைத்தான்)

இப்போது இருவர் வீட்டில் இருந்தும் அழைப்பு வர, அவள் எடுத்து பேசினாள்,"ஆம் பேசிட்டோம்" என்று சொல்ல

இவனும் "ஆம் பேசிட்டோமென்று" சொல்ல,

"அப்போ என்ன முடிவு பண்ணியிருக்க?" என்று ஜெஸியின் தந்தை கேட்க, "அவ்வளவு மோசமில்லை" என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல (தன் தந்தையுடன் கொஞ்சம் ஜோவியலாய் பேசுவாள். அதை சுற்றம் மறந்து அவன் முன்னாலே சொல்லிவிட)

"சரி அப்போ அடுத்த மாசம் கல்யாணம் வெச்சிடலாமா?" - செபாவின் தந்தை வினவ இப்போது என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தான் செபா.

"இல்லப்பா அது வந்து... அதுக்குள்ள..." என்று இழுக்க,(அதாவது இப்போது தான் பேசியுள்ளேன் இன்னும் கொஞ்சம் பேசிப்பார்த்து சொல்லிவிடுகிறேன் என்று நினைத்து, எப்படியும் நோ தான் சொல்ல போறோம் அப்புறோமென்ன என்று அவன் யோசிக்க )

"டேய் அதெல்லாம் எங்க வேலை. ஓ அண்ணன் கல்யாணத்துல உனக்கு வேலை வெச்ச மாதிரி இப்பயும் வெச்சிடுவேன்னு நெனைக்கரிய ? முட்டாள் இப்போ நீ தான் டா மாப்பிள்ளை, உனக்கு எந்த வேலையும் இல்ல"

'என்னது கல்யாணமா?' என்று செபா மனதால் அதிர்ந்தான்.

அவளோ எதிரில், "யோசிச்சு சொல்றேன்ப்பா" என்று சொல்வதைக் கேட்ட செபா தன்னால் இப்படி தன் மனதில் நினைப்பதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லையே என்று எண்ணி வருந்த,

"என்னடா?" என்று அவர் பாட்டிற்கு, "உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிட்டேன் வெய் எல்லாம் ஓகே. அம்மாவும் உடம்பு முடியாம இருக்காங்க, சரி அந்த பொண்ண பத்திரமா அனுப்பி வை. கேப் புக் பண்ணு. நீயே பே பண்ணு"

அவனுக்குத் தொண்டை வரை வந்த நோவை வெளியில் சொல்ல முடியவில்ல."ஹ்ம்ம் ஹ்ம்ம் "என்றவன் சொல்ல, 'இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் கைட் செய்கிறேன் என்று நினைத்து என் இண்டிபெண்டன்ஸில (சுதந்திரம் ) மூக்கை நுழைக்கறீங்க' என்று அவனுக்கு கோவம்,

அவளோ எதிரில் பேசிவிட்டு இவனைப் பார்க்க, அதற்குள் பில் வந்துவிட அவள் பே செய்து விட்டாள்.

இங்கே இவன் தந்தை, "ஆமா பில் நீதானே கொடுத்த?"

திருதிருவென முழித்தவன்,

"என்ன செபாஸ்டின்?" என்ற அவரின் கர்ஜனை குரலுக்கு,

"இல்லப்பா நீங்க பேசிட்டு இருக்கும் போது அவங்களே..." என்று இழுக்க,

செம கோவம் அவருக்கு, "ஒவ்வொரு விஷயமும் நான் சொல்லிட்டே இருக்கணுமா செபாஸ்டின்? உனக்கே இது தெரியவேணாம்? ஏன் அந்த பொண்ணு கொடுக்கும் போது தடுத்து நீ கொடுத்திருக்க வேண்டாமா?" என்று பேச,

ஏனோ இந்த மாதிரி தன் தந்தையின் அதீத கேர் என்று நினைத்து தன்னை தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொள்கிறாரே என்று அவனுக்கு ஆதங்கம்.

இவரோ, "பாரு செபாஸ்டின் உனக்குக் கல்யாணம் செய்ய போறேன். இன்னமும் இப்படி ஏனோதானோனு இருக்க கூடாது "என்று அட்வைசை பொழிய எதிரில் அவள் இவனையே பார்க்க நீண்ட நேரமாய் தான் "ம்ம்ம்" மட்டுமே கொட்டுவதைப் பார்த்து என்ன நினைப்பாள் என்று நினைக்கையில் ஏனோ அவனுக்கு அவன் நிலையே ரொம்ப அவமானமாய் இருந்தது. இப்படியும் பேரெண்ட்ஸ் இருக்காங்க. நான் தப்பு சொல்லல, பட்,


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ! ( பயணங்கள் முடிவதில்லை )
 
Top