Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-20

Advertisement

praveenraj

Well-known member
Member
.அங்கே ஹேமா முகத்தைத் தொங்கப்போட்டு அமைதியாக இருக்க, கோவித்துக்கொண்ட குழந்தையை சமாதானம் செய்வதைப்போல மௌனி அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே நுழைந்த ஜிட்டுவின் கண்களில் இதெல்லாம் பட அவனோ அவர்களையே பார்த்தான்.

இவனைப் பார்த்ததும் மௌனி பேசிக்கொண்டிருந்ததை நிறுத்த, ஜிட்டு எதையும் பேசாமல் ரெஸ்ட் ரூமிற்குப் போனான்.

'அப்பப்பா ரொம்ப நேரம் இப்படி யூரின் அடக்கிட்டு ரிலீஸ் பண்றதுல என்ன சுகம்! என்ன சுகம்!' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு அந்த நிலையையும் அனுபவித்துக்கொண்டிருந்தான்.

"ஹேமா, ப்ளீஸ் ப்பா. எல்லோரும் என்ன நினைப்பாங்க சொல்லு? இப்படியா குழந்தை மாதிரி அடம் பிடிப்ப?"

"நீ உண்மையிலே என்னை மன்னிச்சிட்ட தானே?"

மௌனி கிட்டத்தட்ட இந்தக் கேள்வியை ஆயிரமாவது முறை கேட்கிறாள். "நீயும் என்கிட்டே பல முறை இந்தக் கேள்வியைக் கேட்டுட்ட நானும் சொல்லிட்டேன்"

"இப்ப சொல்லு. ப்ளீஸ் எனக்காக"

"உன்னைப் பார்க்கும் வரை நிச்சயமா நான் கல்யாணம் குடும்பம் இதெல்லாம் நெனச்சிக் கூட பார்த்ததில்லைடா. எனக்கு யாருமில்லை. என்கிட்டே ஒண்ணுமில்ல. ஏதோ என் அன்றாட தேவைக்குத் தான் நான் வேலைக்குப் போறேன். பட் நான் ஆசைப் பட்டதைக் காட்டிலும், நான் எதிர்பாத்ததை, இன்னும் சொன்னா நான் எதிர்பார்க்காததையும் நீ தான் உன் மூலமா தான் ஹேமா எனக்குக் கிடைச்சது. கிடைச்சிட்டு இருக்கு. ஐ ஹேவ் டு தேங் யூ. என் மேலையும் அன்பு அக்கறை சாப்பிடியானு கேட்கவும் உரிமையா கண்டிக்கவும் எல்லாத்துக்கும் மேல எனக்குன்னு ஒரு வீடு, ஆம் வீடுங்கறது கல்லு மண்ணு இல்ல, அது ஒரு அட்டாச்மென்ட். இப்படி நிறைய நிறைய உன்னால தான் ஹேமா எனக்குக் கிடைச்சது. கிடைக்கிறது. உனக்கு என்னைப் பிடிக்காத போதே நான் யாருனு தெரியாத போதே என் மேல அக்கறை அன்பு வெச்ச அப்பா அம்மா ஹரிணி, அண்ட் இதெல்லாம் எனக்குக் கிடைக்கக் காரணமா இருந்த என் ஹேமா உனக்கு நான் எப்படி தேங் பண்ணுவேனு தெரியில?"

"கிஸ் கொடு"

"ஹான்?"

"தேங்க்ஸ் எல்லாம் வேணாம் கிஸ் கொடு" என்னும் போது தான் பிஸ் அடித்து முடித்து ஜிட்டு வெளிய வந்தான்.

மௌனி கிஸ் செய்ய நெருங்க ஜிட்டு வரவும் அவள் விலகி நின்றாள்.

"நான் எதையும் பார்க்கல. எதையும் கேட்கல. ஏன்னா நான் ஒரு ஜென்டில் மேன்" என்று திரும்பி நின்று ரயில் பாடியைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவன் சென்றான்.

அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மௌனி. அவன் சென்றதும் அவளின் இடையைப் பிடித்து இழுத்தவன் முத்தம் வைக்கப் போக,

"டேய் சீக்கிரம் வாங்கடா. கதைக்காக எல்லோரும் வெயிட்டிங்" என்று எட்டி ஜிட்டு சொல்ல, "இப்பயும் நான் எதையும் பார்க்கல. யூ கண்டினு" என்றவன் மூச்சை இழுத்து விட்டு, 'சரி பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான். எங்கிட்டயும் பல்லு இருக்கு. பக்கோடாவும் இருக்கு. ஆனா சாப்பிட தான் முடியில?' என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு வர அங்கே ஒரு குழந்தை,

"மாம் ஹி இஸ் ஸ்பீக்கிங் அலோன். யூ செட் ஸ்பீக்கிங் அலோன் இஸ் எ மேட். இஸ் ஹி எ மேட்?" என்று ஜிட்டுவைப் பார்த்துச் சொல்ல, (அம்மா அவர் தனியா பேசுறாரு. தனியா பேசுனா பைத்தியம்னு நீங்க தான் சொன்னீங்க. அப்போ இவரு பைத்தியமா?)

'ச்சே இந்த குழந்தைக் கூட என்னைப் பைத்தியம்னு சொல்லுது. ஓ காட்! என் மேல உனக்குக் கருணையே இல்லையா?' என்று பிரேம்ஜி போல கையைப் பிதுக்கி அவன் பாட்டிற்குச் சென்றான்.

............................................................

அதற்குள் இஸ்மாயில் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

"சொல்லுங்க அம்மா என்ன விஷயம்?"

"நம்ம பரூக் மூலமா ஒரு அலைன்ஸ் வந்திருக்கு இஸ்மாயில். அவங்க பொண்ணுக்கு உடனே நிக்கா பண்ணணுமாம். என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியில"

அவனுக்கு ஏனோ தொண்டை அடைத்தது. அவன் இந்த ஆபிஸ் வந்தது முதல் (கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளியில்) வந்தவள் தான் பெனாசிர். ஏனோ அவளின் அந்த எதார்த்தம், என்ன தான் தானும் முஸ்லீம் குடும்பமாய் இருந்தாலும் அவள் கொஞ்சம் லிபெறலாக இருந்தாள். அது அவனுக்குப் பிடித்திருந்தது.

இஸ்மாயில் நிறைய கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். அவன் வாப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்ன செய்ய அவனுக்குப் பிறகு இன்னொரு குழந்தை வேண்டுமென்று பார்க்க தன் அன்னையால் முடியாது என்ற நிலை வர இன்னொரு நிக்கா செய்துக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்த குடும்பத்தில் இருந்து விலகினார். கடைசியாக முத்தாலக்கில் முடிந்தது. இவனை வளர்க்க படிக்க வைக்க எதற்கும் அவர் உதவ வில்லை. தன் அன்னைப் பட்ட கஷ்டங்களை எல்லாம் உடனிருந்துப் பார்த்தவன். அதனாலே பொறுப்பாக படித்து இன்று ஒரு நல்ல இடத்தில் பணியும் புரிகிறான்.

திடீரென தன் வீட்டின் முன்பு சிலர் வந்து பணம் கேட்க அப்போது தான் புரிந்தது, தன் தந்தை தொழிலை விரிவுபடுத்துவதற்காக நிறைய கடன்களை வாங்கி அதை செலுத்தமுடியாமல், செய்த தவறுகள் புரிந்து திடீரென யாரிடமும் சொல்லாமல்புனித பயணம் சென்று விட்டார்.

இந்த நிலையில் கடன்காரர்கள் அவரின் இரண்டாவது மனைவி அவரின் மகள் வீட்டில் கேட்க அங்கே எந்த பதிலும் இல்லாததால் இங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. திருமண வயதில் இருக்கும் அந்த பெண்ணிற்குத் திருமணம் கூட செய்யாமல் எதையும் சேர்த்தும் வைக்காமல் சென்றுவிட்டார். இவன் அன்னைக்கு அதிக கோவம் வந்து எல்லோரையும் துரத்திவிட, ஏனோ தன் தந்தைச் செய்த தவறுகளுக்கெல்லாம் இவன் பிராயச்சித்தம் செய்ய முடிவெடுத்தான். அது இவன் அன்னைக்கே பிடிக்கவில்லை இருந்தும் எதையும் இவன் கேட்கவில்லை. கடனை அடைத்து அந்த பெண்ணிற்கு நிக்காஹவும் செய்து விட்டு இப்போது பெனாசிரின் முடிவுக்காக காத்திருக்கிறான்.(இவன் இன்னும் இவன் காதலை அவளிடம் சொல்லவேயில்லை. ஆனால் உணர்த்திக்கொண்டு இருக்கிறான்.)

இப்போது தன் அன்னையிடம் "நான் வந்து முடிவைச் சொல்லுகிறேன்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான். மனம் பெனாசிர் பக்கம் போனது.

.............................

"ஆனா என்னம்மா?"

"டேய் அவங்க பொண்ணு அவங்க கிட்ட கொஞ்சம் டைம் கேட்டு இருக்காளாம். இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் வேணாம்னு. அவங்களும் கொஞ்சம் டைம் எடுத்துக்கச் சொல்லி இருக்காங்களாம்"

ஏனோ இதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வற்றி, "ம்ம்"என்று சோர்ந்தான் துஷ்யந்த்.

மகனின் ம்ம்மிலே அவருக்குத் தெரிந்தது அவர் மகனின் மனநிலை. இருந்தும் என்ன செய்ய முடியும்?

"கண்ணா சாப்பிட்டியா?|

"ஹாம்"

"துஷி. என்ன ஆச்சுன்னு இப்போ முகத்தைத் தூக்கி வெச்சிட்டு இருக்க?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அம்மா"

"நான் உன்கிட்ட என்ன சொன்னேன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு?"

"என்ன சொன்ன?"

"இப்போ போன் பண்ணதும் ஒன்னு சொன்னேன்"

"என்னம்மா சொன்ன?" அவனோ கடுப்பாகக் கேட்க,

"என் மருமக வீட்டுல பேசிட்டேன்னு தான் சொன்னேன்"

"அது தான் அவங்க அவ முடிவை எடுத்தா தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்களே?"

"அப்படியே உங்க அப்பா மாதிரியே தத்தியாவே இருடா"

"அம்மா இப்போ எதுக்கு அப்பாவைத் திட்டுற?"

"எல்லா வீட்டுலையும் பையன் அம்மா பையனா தான் இருப்பாங்க. இங்க தான் உல்ட்டாவா இருக்கு. பையன் அப்பா பக்கமும் பொண்ணு என் பக்கமும்"

"இப்போ எதுக்கு சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுற?"

"என் மருமகள்", மருமகள் என்பதைக் கொஞ்சம் அழுத்திச் சொல்ல லேட்டா பல்ப் எரிந்தது துஷிக்கு,

"அம்மா சீரியஸ்லி?"

"அன்னைக்குக் கல்யாண மண்டபத்துல எப்போ அவளைப் பார்த்தேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் இந்த பொண்ணை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு. அது போலவே பழம் நழுவி பால்ல விழுறதுப் போல அவங்க அப்பா நம்ம அப்பாக்கு..."

"வெய்ட் வெய்ட். அதென்ன நம்ம அப்பா? உன் அப்பாவா என் அப்பாவா?"

கடுப்பானவர், "உன் அப்பா தான். ஒரு ப்ளோல வந்துடுச்சி விடேண்டா"

"சரி கண்டினு"

"அவங்க அப்பாவும் உங்க அப்பாவும் தூரத்துச் சொந்தமாம்"

"எவளோ தூரம்?"

"என்ன கிண்டலா?"

"எப்படிச் சொந்தம்னு சொல்லும்மா"

"டேய் அது எனக்கே ஓரளவுக்குத் தான் தெரியும்"

"பரவாயில்லை சொல்லு"

"உங்க அப்பாவோட அம்மாச்சியும் அவங்க அப்பாவோட தாத்தாவும் சித்தப்பா பசங்க பெரியப்பா பசங்களாம். அதாவது உன் தாத்தா வந்து அவ தாத்தாக்கு அத்தைப் பையன். உன் அப்பா வந்து அவ அப்பாக்கு..."

"நிறுத்து. தெரியாம கேட்டுட்டேன். எனக்கு அவ என்ன வேணும்? அது மட்டும் சொல்லு"

"அவ உனக்கு மாமா பொண்ணு தான் ஆகணும். ஆனா டைரக்ட் சொந்தம் இல்ல. கொஞ்சம் சுத்தி வளைச்சு"

"அது தான் தெரியுதே நீ சுத்துன சுத்து. அப்போ அவ எனக்கு முறைப் பொண்ணு தான் ரைட்?"

"ஆமாடா"

"அப்போ பேசிக் கல்யாணம் செஞ்சி வைங்க"

"டேய்?"

"பின்ன இந்த மாதிரி முறைப்பொண்ண எல்லாம் கண்ணிலே காட்டாம உன் அண்ணன் பையன் இல்ல அவரு தங்கச்சி பையன்னு முறையெல்லாம் பசங்களாவும், என் பெரிப்பா என் சித்தின்னு எல்லோருக்கும் பொண்ணுங்களாவும் பொறந்து எந்த பொண்ணப் பார்த்தத்தாலும் அக்கா தங்கைனு சொல்லிச் சொல்லி என்னை வெறுப்பேத்திடீங்களே?"

"அதுக்கென்னடா பண்ண முடியும்? ஏன் நம்ம பூர்ணா இல்ல உன் அக்கா பொண்ணு தானே?"

"என்ன வெறுப்பேத்துரையா? இப்போதான் அவ ஒன்னாம் க்ளாஸ் சேர்ந்து இருக்கா. அவ வளர்ந்து பெரிய பொண்ணு ஆகி நான் அவளைக் கல்யாணம் பண்ணனும்னா நேரா அறுபதாம் கல்யாணம் தான் எனக்கு நடக்கும்"

"சரி சரி அது தான் உனக்கும் ஒரு பொண்ணு வந்துட்டா இல்ல. ரிலாக்ஸ்"

"சரி எங்க போயிருக்காளாம்?"

"அது ஏதோ ......."(தெரிந்தே தான் பிளாங்க் பண்ணி இருக்கேன். சொல்றேன் யாருன்னு. எங்க முடிஞ்சா கண்டு பிடிங்க.எப்படியும் கண்டு பிடிச்சிருப்பீங்க)

"அப்படியா ஓகே"

"நீ எப்போ கிளம்பற?"

"ஈவினிங்மா"

"யாரு விவான் கூடயா?"

"ஆமாம்மா"

"பாரு அவனுக்குக் கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு. நீ?"

"அம்மா அப்புறோம் நானும் மாதவன் மாதிரி பேசிடுவேன்"

"அதென்ன மாதவன்?"

"பிரியமான தோழி படத்துல மாதவனை அவர் அண்ணி அப்பா இன்னும் வேலைக்குப் போலையா? உன் வயசு பசங்க எல்லாம் வேலைக்குப் போயிட்டாங்கனு சொல்லுவாரு. அதுக்கு மாதவன் கொடுக்கும் பஞ்ச் அது"

"என்னடா அது?"

"வேணாம் உனக்கு ஒரு மாதிரி ஆகிடும்"

"பரவாயில்லை சொல்லு"

"உங்க வயசு ராமசாமி குப்பு சாமி எல்லாம் டிக்கெட் வாங்கிட்டாங்க. நீங்க மட்டும் ஏன் இன்னும் டிக்கெட் வாங்குலனு கவுன்டர் கொடுப்பாரு"

"அடப்பாவி நான் உயிரோட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?"

"பாரு ஜஸ்ட் பார் பன். இதுக்குத் தான் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்"

"சரி சரி. ரொம்ப பீல் பண்ணாத சீக்கிரம் போயிடுறேன்"

"அம்மா. ஜோக்க ஜோக்கா தான் எடுக்கணும். போ உன் கூட நான் பேசமாட்டேன்"

"டேய் சும்மா தான்டா நானும் சொன்னேன்"

"நிஜமா?"

"உங்க அப்பாவை டார்ச்சர் பண்ணாம அவ்வளவு சீக்கிரத்துல நான் போக மாட்டேன்"

"சுந்தரேசா அப்போ அவ்வளவு சீக்கிரத்துல உனக்கு விடுதலை இல்லையா?"

"எனக்கும் தான்"

"போம்மா அப்பா பாவம்"

"சரிடா பை"

"அம்மா அப்பா எங்க?"

"கொஞ்சம் பேங்க் வரை போறேன்னு போனாரு ஏன்?"

"இல்ல சும்மா தான்"

"என்ன விஷயம்?"

"வாழ்க்கையிலே அவரு சொந்தத்துல எனக்கு நடந்த ஒரே நல்லது இது தான்"

"மை சன் எனக்கு அந்த பாக்கியம் கூட இல்ல"

"ஹா ஹா ஹா அது உன் தலைவிதி சாந்தி. அடுத்த ஜென்மத்துல வேணுனா என் அப்பாக்கு நல்ல தம்பி தங்கை கிடைக்கும்னு வேண்டிக்கோ"

"அப்படி ஒரு வாய்ப்புனா உங்க அப்பாவே எனக்கு வேணாம்னு வேண்டிப்பேன்"

"யூ புரூட்டஸ்"

"எஸ் எஸ். யாழி வரா தானே?"

"எஸ் அவ இல்லாமலா? பை"

"பைடா கண்ணா. ட்ரெயின் ஏறிட்டு கால் பண்ணு"

"ஹ்ம்ம்..."

................................................................................

மாலை 4 மணியாக செபாஸ்டின் தன் ஆஃபிசில் பர்மிசன் சொல்லிவிட்டு அவள் சொன்ன அந்த இடத்திற்குச் செல்ல தயாராகி தன் பைக்கை எடுக்க, சரியாக அது அவன் காலை வாரியது.

ஏற்கனவே மனம் சலனப்பட்டு இருக்க இதுவேறு அவனை இன்னும் வருந்தச் செய்தது மீண்டும் ஆஃபிஸ் வந்து தன் கொலீக் பைக்கை வாங்கிக்கொண்டு அவன் போக ட்ராபிக் வடிவத்தில் மீண்டும் சோதனை.

அடித்துப் பிடித்து செபா போக அதற்குள் நான்கு முறை ஜெசி அழைத்துவிட்டாள். ஒரு முறை மட்டும் எடுத்தவன் வந்துகொண்டே இருப்பதாய்ச் சொல்ல, அடுத்த மூன்று அழைப்புகளை அவன் ஏற்க வில்லை. பின்னே சுற்றி ட்ராபஃக் போலீஸ் அதும் ஹெல்மட்டுக்கு எல்லோரையும் வளைத்து வளைத்து பிடித்துக்கொண்டு இருக்க இவனோ அதனால் எடுக்கவேயில்லை.

அங்கே ஜெசியின் பொறுமை காற்றில் பறந்துக்கொண்டு இருந்தது. நேரம் 05 . 20ஐ நெருங்க அவள் கோவமாய் வெளியே வர அப்போது தான் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் அவள் நாயகன்.

அவனோ அவளை இன்னும் பார்க்காமல் இருக்க இவளோ அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டு நிற்க இவள் தான் ஜெசி என்று தெரியாமல் அவன் உள்ளே நுழைந்தான். அவளோ தன்னைப் பார்த்தும் சாரி கேட்காமல் செல்கிறானே எவ்வளவு திமிர் என்று எண்ணி வெளியேற முயல அவளுக்கு அழைப்பு வந்தது.

அவன் தான் அழைத்தான். இவள் கோவத்தில் எடுத்து காதில் வைக்க,

"எங்க இருக்கீங்க?"

ஏனோ இவளுக்குக் கோவம் வர,"ஏன் என்னைப் பார்த்தும் பார்க்காமல் போனீங்களே அப்போ தெரியில்லையா?"

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன சொல்றீங்க?"

"இப்போ வெளியில என்னை க்ரோஸ் பண்ணித் தானே போனீங்க?"

அவனோ திரும்பி வெளியேப் பார்க்க அவளோ உக்கிரமாய் அவனைப் பார்த்தாள்.

அது அவனுக்கு எல்லாம் தவறாகவே காட்டியது. 'ஹை அட்டிடுட்' (attitude) இவன் எதையும் பேசாமல் அவளைப் பார்க்க அவளோ இவன் இப்போதுக்கூட லேட் ஆனதுக்கும் போன் எடுக்காததிற்கும் சாரி சொல்ல வில்லை என்று கோவமாய் வெளியேற மீண்டும் அழைப்பு வர பார்த்தால் அது அவளின் தந்தை.

"என்னமா மீட் பண்ணிட்டியா?"

"இல்லப்பா இப்போ தான் வந்திருக்கேன்" என்று சொல்ல ,,

"சரி பார்த்துப் பொறுமையா பேசிட்டு வா. ஒன்னும் அவசரமில்லை" என்று அவர் கட் செய்ய அவளோ திரும்பி அவனைப் பார்க்க, அவனோ 'என்னைப் பார்த்தும் ஒரு சிரிப்பைக் கூட உதிர்க்கவில்லை' என்று கோவத்தில் இருக்க, அவன் அண்ணன் அழைத்து, "என்னடா மீட் பண்ணிட்டியா?"

"இல்ல அதுக்குத் தான் வந்திருக்கேன்"

"சரி பார்த்துப் பேசு. அப்பாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே? எனக்கெல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவே இல்லை. யூஸ் வைஸ்லி (use wisely -தவறவிட்டு விடாதே வாய்ப்பை )

"ஏன் ?"

"அப்புறோம் என்கேஜ்மென்ட் மேரேஜ்னு ஒரே பிசி ஆகிடும். பேச சான்ஸ் கிடைக்காது"

"நான் இன்னும் ஓகேவே சொல்லல"

"பட் அந்தப் பொண்ணு பிடிச்சிருக்குனு தானே மீட் பண்ணவே வந்திருக்கு. அண்ட் நீ ஓகே சொல்லுவன்னு தானே உன்னைத் தனியா மீட் பண்ண அப்பா அலோ பண்ணாரு"

"நீ வை நான் கூப்பிடுறேன்"

"டேய் டேய்"

அவன் எழுந்து வந்து ஜெசியைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்தாள்.

"உள்ள வாங்க உட்காந்துப் பேசலாம்"

அவளோ எதையும் பேசாமல் தன் கைக்கடிகாரத்தில் டைம் பார்த்தாள்.

'தான் தாமதமாய் வந்ததைத் தான் சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறாள்' என்று அவனுக்குப் புரிந்தது, அவள் அட்டிடுட் மேல் அவனுக்கு இன்னும் இன்னும் கோவம் வந்தது.

அவளோ எதையும் பேசாமல் நின்றாள். இவனோ, 'இவ கிட்டயே பேசி நோ சொல்லச் சொல்லிடலாம். இல்லைன்னா நேரா கல்யாணம் தான் செஞ்சி வெச்சிடுவாரு எங்க அப்பா' என்று முழித்து பேச ஆரமிக்க,

....................................................................


அங்கே அசாம் கௌஹாத்தியில் தன் ஆபிஸ் அறையில் அமர்ந்து சில கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருத்தவன் தலை வலிக்கிறதே என்று மணியைப் பார்க்க அது மூன்றைக் கடந்து இருந்தது. இன்னும் அவன் லன்ச் சாப்பிடவில்லை.

காலையில் தாமதமாக எழுந்தது, இரவின் தூக்கமின்மை, காலையில் இருந்து கொஞ்சம் அதிகப்படியான வேலை, இன்னும் லன்ச் சாப்பிடாதது, தன் அன்னையிடம் 10 நாட்கள் டைம் கேட்டது, எல்லாவற்றுக்கும் மேல் 'அவள்' மற்றும் 'அந்த' விஷயம் இரண்டும் அவனைப் பாடாய்ப் படுத்துகிறது.

"வேர் ஆர் யூ கைஸ்?" என்று பயணங்கள் முடிவதில்லை வாட்ஸ் அப் குரூப்பில் மெசஜ் தட்டினான் திவேஷ்.

"பெர்ஹாம்புர் (ஒடிசாவில் கிழக்குப் பகுதி) இன்னும் ஒன் ஹவர் ல வந்திடுவோம்"

"சோ அப்போ ரெண்டு ஸ்டேட் தாண்டிடீங்க ரைட்?"

"எஸ். தமிழ்நாடு,ஆந்திரா கடந்து ஒடிஷாக்குள்ள நுழையப் போறோம்"

"சாப்டாச்சா?"

"எஸ்" (பயணங்கள் முடிவதில்லை...)

image
 
Top