Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 2

Advertisement

praveenraj

Well-known member
Member
"கைஸ் ஒரு சின்ன சிக்கல்" - இளங்கோ.

"என்ன டா?" - விவான்

"வாட் ஹேப்பெண்ட்?" - மிருதுளா

"ஏக்சுவல்லி குட் நியூஸ் தான். ஆனா..."

"புரியற மாதிரி சொல்லித் தொலையேன்டா?" - தியானேஷ்

"அது பாரு... பார்வதி..."

"பாருக்கென்ன ?" - ஜிட்டு

"நான் அப்பா ஆகப் போறேன்"

"இளங்கோ வாழ்த்துக்கள்" - நித்யஸ்ரீ

"வெல்கம் டு தி பேரெண்ட்ஸ் அஸோஸியேஷன் டா மச்சி" - விவான்

"கங்கிராட்ஸ் டா இளங்கோ பாரு..."- ஜிட்டு

"ஆமா இதுல என்ன சிக்கல் இருக்கு?" - தியானேஷ்

"ஆமா என்ன சிக்கல்?" - ஹேமந்த்

"அது இப்போ தான் ஈவினிங் கன்பார்ம் ஆச்சு. அது தான் ட்ராவெலிங்...?"

"அதெல்லாம் கவலையே வேணாம் விடு மச்சி. நான் கூடவே இருந்து பார்த்துக்கறேன்" - நித்யஸ்ரீ

"இல்ல நித்யா டாக்டர் ட்ராவல் வேணாம்னு..."

"டேய் நானும் ஒரு டாக்டர் தான்டா. ஐ யம் டாக்டர் நித்யஸ்ரீ mbbs. மறந்துட்டய்யா?"

"ஹே ஆமாயில்ல?"
"என்னது ஆமாயில்லையா? டேய் சத்தியமா நான் டாக்டர் தான் டா..."

"மச்சான் வேணாம் ஊருக்குள்ள நிறைய போலி டாக்டர் சுத்துறாங்க பார்த்துக்கோ" - ஜிட்டு

"@@@$$$%%%^^^&&&"- நித்யஸ்ரீ

"ஏம்மா கொஞ்சமாச்சும் டாக்டர் மாதிரி பேசேன். ஊர்ல குழாயடி சண்டை போடுற பொம்பள..."

"நீ இன்னைக்கு எப்படி எங்க கூட வந்துடறேனு பாக்குறேன்" - நித்யஸ்ரீ

"ஆமா நீ எப்படி வரேன்னு பாக்குறோம்" - மிருதுளா

"டேய் லூசு மாதிரி கண்டதைப் பேசாதீங்க. மச்சான், ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல ac 3 tier தான் புக் பண்ணியிருக்கு எதுனா எமெர்ஜென்சினா கூட நித்யா இருக்கா. ஜாலியா வாங்க மச்சி. யோசி முடிவெடு சீக்கிரம்..." விவான்.

"வரோம் கைஸ். இன்னும் 20 மினிட்ஸ்ல அங்க ஸ்டேஷன்ல இருப்போம்."

"ஹாப்பி டா" - தியானேஷ்

"ஹாப்பிபிய்ய்ய்ய்" - செபா

"ஆமா எல்லோரும் எங்க எங்க இருக்கீங்க? ப்ளீஸ் டூ லெட் மீ நோவ்" - ஹேமந்த்

"ஹோட்டல்ல - நானும் நித்தியாவும்" - விவான்

"கேப்ல பச்சையப்பாஸ் கிட்ட"- ஜிட்டு

"நானும் ஸ்டேஷன்ல இறங்கிட்டேன்" - தியானேஷ்

"நாங்களும் கிளம்பிட்டோம்" - இளங்கோ-பாரு.

"நானும் கிளப்பிட்டேன்" -செபா

"நீ மட்டுமா அப்போ ஜெசிந்தா?" மிருதுளா

"அதை நீ அவ கிட்ட தான் கேட்கணும்" - செபா

"புரியல?"

"இந்த மாதிரி எல்லோரும் டூர் போறோம்னு சொன்னேன். சரினும் சொல்லல இல்லைனும் சொல்லல சோ நான் எதையும் கண்டுக்கவில்லை."

"செபா விளையாடாதா" - விவான்

"நிஜமா மச்சான். ஐ யம் நாட் ஜோக்கிங்."

"டேய் என்னடா இவன் யாரோ மூணாவது மனுஷன் மாதிரி பேசுறான்?"- தியானேஷ்

"இருங்க நான் பேசுறேன் ஜெஸ்ஸி கிட்ட..." - நித்யஸ்ரீ

"அதுக்கு அவசியமே இல்ல" - செபா.

"புரியல?"

"மேடமும் எங்கேயோ வெளிய போறாங்களாம். ஏதோ ஆஃபிசியல் விஷயமா..."

"எங்க?"

"தெரியில"

"என்ன விளையாட்டுரையா செபா? நீ அவ ஹஸ்பண்ட். கொஞ்சமாச்சி பொறுப்பா பதில் பேசு" - மிருதுளா

"இதைக் கூட அவ என்கிட்ட சொல்லல. நான் இன்னைக்கு கிளம்பறேன், வரையானு கேட்க போன் பண்ணா அவ எடுக்கவேயில்லை. சோ அவ கொலீக் கிட்ட விசாரிச்சேன். அவங்க தான் சொன்னாங்க எங்கேயோ அஃபிசியலா போறாங்களாம்..."

"எங்க டா?"

"தெரியில"

"செபா எனக்கு வர கோவத்துக்கு உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியில. என்னடா பதில் பேசிட்டு போற... பிடிக்குதோ பிடிக்கலையா. நீங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைப். அட்லீஸ்ட் ஃபார் எ நேம் ஷேக். சோ கொஞ்சமாச்சு பொறுப்பா பதில் பேசு. இப்படி ஏனோ தானோனு பேசுனனு வெய் அவ்வளவு தான் மரியாதை இருக்காது"- இளங்கோ

செபா லெப்ட் தி குரூப் "பயணங்கள் முடிவதில்லை"

"டேய் என்னடா அவன் லூசா என்ன?" - நித்ய ஸ்ரீ

"எனக்கு ஒண்ணுமே புரியல" -தியானேஷ்.

"ஆமா இப்போ இவ்வளவு நேரம் என்ன நடந்துச்சு?"-ஜிட்டு

"நேரங்கெட்ட நேரத்துல கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத ஜிட்டா" - நித்யஸ்ரீ

"ஹே நிஜமா என்ன நடந்ததுனு எனக்கு புரியல"

"இப்போ என்னடா பண்றது?" - ஹேமந்த்

"எனக்குமே ஒன்னும் புரியல..." தியானேஷ்

"இரு நான் அவனுக்கு கால் பண்றேன்" - விவான்

"ஹே ஜெசிந்தா நம்பர் யாராச்சி கொடுங்க நான் வேணுனா பேசிப்பார்க்கறேன்" - மிருதுளா

"இப்போ பேசி என்ன பிரயோஜனம்? அவங்க எங்க இருக்காங்கன்னே தெரியல" - இளங்கோ

"இது என்னடா புது பிரச்சனை? இப்போ எப்படி டா ஜாலியா கிளம்பறது? பீலிங் சேட்" - தியானேஷ்

"பார்த்துக்கலாம் இருங்க. மிருதுளா கால் பண்றா அவங்களுக்கு" - ஹேமா.

"அவனையும் கூப்பிட்டு பேசுங்கப்பா ப்ளீஸ்" - நித்யஸ்ரீ

"ஆம் நான் கூப்பிடுறேன்" - ஹேமந்த்

"இல்ல நீ வேண்டாம் ஹேமா... டேய் ஜிட்டா நீ அவனுக்கு கால் பண்ணு. என்ன ஆனாலும் சரி அவன் இன்னும் 15 நிமிஷத்துல இங்க இருக்கனும்" - நித்யஸ்ரீ

"ஹ்ம்ம் பண்றேன்" - ஜிட்டா

"ஆமா துவாரகேஷ் எங்க? ஆளே காணோம். எந்த சப்தமும் இல்ல?"- இளங்கோ.

"ஆமாயில்ல. துவாரா கூட நம்ம விவியனும் ஆளே காணோம்."- ஹேமா.

"இல்லையே விவியன் கால் பண்ணானே காலையில. அவங்க ரெண்டு பேரும் ஒன்னாவே கிளம்பறோம்னு சொன்னாங்க"

"அவங்களுக்கு யாராச்சும் கால் பண்ணுங்கப்பா ப்ளீஸ்" - நித்யஸ்ரீ

"ஆம் இரு கூப்பிடுறேன்" - இளங்கோ

"ஹலோ விவியனா?"

"சொல்லுங்க இளங்கோ..."

"எங்க இருக்கீங்க ஜீ? ஆளே காணோம்..."

"வந்துட்டு இருக்கேன்"

"இருக்கேனா?"

"சாரி சாரி இருக்கோம்."

"அப்பாடா,நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்."

"எங்களைப் பத்தி நீங்க கவலைப் படவேணாம். இன்னும் 10 மினிட்ஸ்ல நாங்க அங்க இருப்போம்."

"டேய் அவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்களாம்..." என்றான் இளங்கோ.
"சரி சரி..."

"ஜிட்டா செபா என்ன சொல்றான்?"

"மச்சி ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ்" - மிருதுளா

"என்ன?"

"ஜெசிந்தாவும் திப்ருகார்க் எக்ஸ்பிரஸ்ல ட்ராவல் பண்ணப் போறாங்களாம்..."

"லூசு நம்ம கூட தானே வராங்க" - ஹேமந்த்

"இல்லடா. அவங்க அவங்களோட டீமோட இருக்காங்களாம்."

"புரியல?" - நித்யஸ்ரீ

"அபிஸியல் விஷயமா தான் போறாங்களாம். ஆனால் நம்ம கூட."

"சரி சரி. இந்த மெஸேஜை டெலீட் பண்ணிடுங்க. செபாவையும் அவங்களையும் சேர்த்து வைக்கணும். இதுதான் நம்ம அடுத்தகட்ட பிளான். என்ன ஓகேவா?"- இளங்கோ

"சூப்பர் டா!"

"நல்லது."

"டேய் ஜிட்டா செபா கிட்ட பேசிட்டையா?" - தியானேஷ்

"ஆம் மச்சி. வாரானாம்."

"என்ன தான்டா பிரச்சனை அவங்களுக்கு?"...

ஓகே அல்மோஸ்ட் எல்லா கேரெக்டர்களையும் அறிமுக படுத்தியாச்சினு நினைக்கிறன். ஆம் இன்னும் ஒரு கொஞ்சம் மட்டும் மிஸ் ஆகலாம். அதும் வந்திடும். இப்போ கதை இதுதான். இவர்கள் யாரு ? என்ன செய்கிறார்கள் ? எதற்காக இந்த பயணம்? அவர்களுடைய பிரச்சனைகள் என்ன? அதை அலசுவதே இந்த கதை.
இருந்தும் ஒரு டீட்டெய்லிங். விவான் - நித்யஸ்ரீ, இளங்கோ- பார்வதி, செபாஸ்டின் - ஜெசிந்தா இவர்கள் ஜோடிகள். துவாரகேஷ், விவியன், தியானேஷ், ஜிட்டேந்திரன், மிருதுளா, ஹேமந்த், திவேஷ், துஷ்யந்த்,அனேஷியா, ரேஷா, இஸ்மாயில்,பெனாசிர், சித்தாரா, இதித்ரி, யாழினி, சரித்திரா,மௌனிகா, இதித்ரி கூடவே இளவேனில். இளவேனில் விவான் நித்யஸ்ரீயின் குழந்தை. இவர்கள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள். எப்படி? அவர்களுக்குள் இருக்கும் சம்மந்தம் என்ன?

மொத்தம் இரண்டு குழுக்கள் பயணிக்கிறது. பயணங்கள் முடிவதில்லை என்ற வாட்ஸ்ஆப் குழு மெம்பர்கள், அனேஷ்யா தன்னுடைய டீம்.இவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள் ? பார்ப்போம். ஒவ்வொருத்தவர்களின் பின்புலம் அவர்கள் படிப்பு, வேலை,குடும்பம், லட்சியம் , காதல்... அவர்களின் ஸ்ட்ரெஸ் என்ன? அதற்கான பதிலை இந்த பயணம் தந்ததா? என்பதே இந்த நட்பென்னும் முடிவியில்...

ஹேமந்த் மற்றும் மிருதுளா இருவரும் மற்றவர்களுக்காக காத்திருந்தனர்.

"டேய் மொத்தம் எத்தனை மணிநேரம் ட்ராவல் டா நமக்கு?"

"60 மணிநேரம்" என்றவன் அவளைப் பார்த்து புன்னகைக்க,

"ஐயோ..."

"ஹே ரிலாக்ஸ். நாங்கயெல்லாம் இருக்கோம் தானே. ஒன்னும் பிரச்சினையில்ல..."

"பிரச்சனையே நீங்கயெல்லாம் இருக்கறது தான்."

"தியாவும் ஜிட்டுவும் வரேன்னு சொன்னானுங்க இன்னும் காணோமே..." என்று ஹேமந்த் சாதாரணமாக தான் சொன்னான். ஏனோ சிந்தையில் ஏதோ உதிக்க திரும்பி மிருதுளாவைப் பார்க்க, அவளோ வலிகளை நிரம்பிய பார்வையைச் செலுத்தி முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள்.

ஹேமந்த்திற்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. பேச்சை மாற்ற எண்ணி, "மிரு சாப்டையா நீ?"

இல்லை என்று முதலில் தலையாட்டியவள் பிறகு ஆமாம் என்பதைப்போல் தலையை ஆட்ட,

"என்னாச்சி மிரு? ஏன் இப்படி ஸ்ட்ரேஞ்ஜா ஆ பிஹேவ் பண்ற?"

"ஏன் உனக்கு எதுவும் தெரியாதா என்ன?"

"இன்னுமா நீ அதையெல்லாம் மறக்கலை?"

"அது நான் செத்தாக்கூட நடக்காது" என்றவளின் தீவிரத்தில் என்ன பதிலுரைப்பது என்றே புரியாமல் தவித்தான் ஹேமந்த். ஆனால் ஒன்று நிச்சயமாக அவனுக்கு புரிந்தது. இந்தப் பயணம் நல்லபடியாக முடிவதில் நிச்சயம் பல தடைகளைக் கடந்து தான் வரவேண்டும் என்று. அவனுக்கு தெரியாது அதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறதென்று...

என்ன செய்ய என்று யோசிக்கும் போதே விவியன் வாட்ஸ் அப்பில், "எங்க இருக்கீங்க ஹேமந்த் ஜி?" என்றதும்,

"இங்க ஒரு ஏடிஎம் இருக்கும் பாருங்க" என்னும் போதே ஹேமந்த் துவாரகேஷைப் பார்த்துவிட அவன் கைதூக்கியதும் இருவரும் அவர்கள் அருகில் சென்று விட நால்வரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விசாரித்துக்கொண்டனர். ஆனால் மிருவின் முகத்தில் உள்ள கவலையைப் பார்த்தவன் என்னவென்று அவள் அறியாவண்ணம் ஹேமந்தைக் கேட்க,

"மச்சி ச்சூச்சூ பயங்கர அர்ஜென்ட் வா போலாம்..." என்று இழுக்க, விவியனும் கூட வர,

"ஜி நீங்க இங்க இருங்க மிரு கூட. நாங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறோம் நீங்க வருவீங்களாம்" என்று விவியை மிருவோடு விட்டுவிட்டு துவாராவை இழுத்துச் சென்றான் ஹேமந்த்.

"இல்ல விவியன். நீங்களும் வேணுனா போங்க நான் பார்த்துக்கறேன்..." - மிரு.

விவியன் அடியெடுக்க, "ஹே நீ அப்படியே மேரிகோம் பாரு. யாராச்சும் வந்தா பாக்ஸிங் பண்ணிடுவ..."என்று எள்ளலாய் சொல்லி "ஜி நீங்க இருங்க நாங்க வந்துடுறோம்" என்று ஹேமந்த் சொல்லிவிட்டு துவாராவைக் கூட்டிச்சென்றான்.

விவியனும் மிருவும் இப்போது தனித்து விடப்பட்டு விட என்ன பேசுவது எப்படி பேசுவது என்று புரியாமல் இருவரும் நின்றுக்கொண்டிருந்தனர். பின்னே இவன் தான் விவியன் என்றும் துவாராவின் கொலீக் மற்றும் சிறுவயது முதல் நண்பன் என்று தான் அவளுக்குத் தெரியும். அதே நிலை தான் விவியனுக்கு, இவர் தான் மிரு என்று அழைக்கப்படும் மிருதுளா என்றும் இன்டிரியர் டெகரேட்டர் என்றும் கூடவே துவாராவின் நெருங்கிய தோழி என்று மட்டும் தான் தெரியும். இதைத் தவிர இருவருக்குமே எதுவும் தெரியாது. சொல்லப்போனால் இவள் எப்படி துவாராவுக்கு இவ்வளவு நெருக்கம் ஆனால் என்று கூட விவியன் ஆச்சரியப்பட்டிருக்கிறான். பின்னே சிறுவயது முதலே அதிக கூச்சசுபாவம் கொண்டவன் தன் தங்கையிடம் கூட அவ்வளவு நெருக்கம் காட்டாதவன் எப்படி இவளிடம் இவ்வளவு சகஜமாய் பேசுகிறான் என்று அவனுக்குள் நிறைய கேள்விகள். இருந்தும் என்னதான் துவாரா தன் நெருங்கிய தோழன் என்றாலும் எல்லோருக்கும் பெர்சனல் பக்கங்கள் என்று ஒன்று உள்ளதே.

ஒருவேளை மிருவைப் பற்றி எதையுமே சொல்லாமல் மறைத்திருந்தால் விவியனே நேரிடையாக கேள்விக் கேட்டிருப்பான், இவள் யாரென்று... ஆனால் சுமார் 6 - 7 வருடங்களாய் மிருவைப் பற்றி அவ்வப்போது சொல்லியிருப்பவனிடம் என்னவென்று கேட்பது? எப்படிக் கேட்பது ? மோரெவர் துவாரா சுபாவமும் அப்படித் தானே. அதிகம் யாரிடமும் பேசமாட்டான் . தானுண்டு தன் வேலையுண்டு என்று மட்டும் இருப்பான். ஆனால் இது வெளியுலகத்தில் மட்டுமே. அவன் கிளோஸ் ஷர்கிலில் கொஞ்சம் ஜாலி ஆனவன் தான். என்ன அவனின் பிரச்சனைகள் முழுவதும் தெரிந்துக் கொண்டவன் இவன் தானே. பக்கத்து பக்கத்து வீடு. ஒன்றாக விளையாடி ஊர் சுற்றி என்று பொழுதைக் கழித்தவர்கள் தான். என்ன நடுவில் அந்த சம்பவத்தினால் பல வருடங்கள் பிரிந்துச் சென்றவன் மீண்டும் இப்போ சுமார் 6 வருடங்களாய் மீண்டும் நட்பை புதுப்பித்துக்கொண்டவர்கள். சரி எப்படியும் இந்த பயணத்தில் இதற்கான விடையும் கிடைத்துவிடும். அப்படியே கிடைக்காவிடின் நாமே கேட்டுவிடுவோம். இது நட்பிற்குள் இருக்கும் ஒரு சின்ன ஊடல். பொறாமை. எனக்கு கிளோஸ் நண்பனாய் இருப்பவன் என்னைத் தவிர பிறரிடமும் கிளாஸாக இருக்கும் போது ஏற்படும் அந்த உணர்வு. அது மிருவைக் காட்டிலும் விவான் மீது இவனுக்கு இருக்கும் நட்பு அடிக்கடி அவனுக்கு பொறாமையை உண்டுச் செய்யும்.

விவியனுக்கும் இங்கே பயணிக்கும் மற்றவர்களுக்கும் ஒரே பாலமாய் இருப்பவன் துவாரகேஷ் தான். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற நாடோடிகள் பாணி தான்.

இருவரும் இருவேறு சிந்தனையில் இருக்க, "என்னடா பேசி அறிமுகம் ஆகிட்டிங்களா?" - துவாரா

இவர்கள் இருவரும் ஆடு திருடியவர்களைப் போல திருதிருவென விழிக்க,

"பேசிக்கிடீங்களா இல்லையா?"

இருவரும் மறுப்பாக தலையாட்ட, "ஐயோ ராமா தண்டங்கடா நீங்க ரெண்டு பேரும், ஹே விவி இது மிஸ் மிரு என்கின்ற மிருதுளா. மிரு இவன் விவியன் ஆண்டிரூஸ். என் கொலீக். என் சின்ன வயசுல இருந்து ஃபிரன்ட். ரொம்ப பழக்கம். பக்கத்து வீடு."

அவள் தலையாட்ட, "சரி வா அவங்க வர வரைக்கும் எதாவது சாப்பிடலாம்..." என்று அவளை அழைத்துச் சென்றான்.

"இல்ல துவாரா. நான் வரல..." என்று முடிக்கும் முன்னே அவள் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தவன் அழைத்துச் சென்றான். இது ஹேமந்த்திற்கு சாதாரணமாய் பட விவியனுக்கோ சந்தேகத்தை மேலும் தூண்டியது.

மௌனத்தைக் கலைக்க , "ஜி அப்புறோம் நீங்க என்ன மேஜர்?"

"msc. அப்புறோம் நீங்க வாங்க போங்க ஜி இதெல்லாம் வேணாம். விவினே கூப்பிடுங்க ஹேமந்த்."

"பாரேன் நல்ல கதையா இருக்கு. நீங்க மட்டும் வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க?"

பரஸ்பரம் சிரித்துக்கொண்டவர்கள், "சரி ஹேமந்து எங்க வேற யாரையுமே இன்னும் காணோம்..."

"தெரியல விவி. வரேன்னு தான் சொல்லுச்சுங்க. இதுங்கள எல்லாம் கிளப்பி கூட்டிட்டு போகறதுக்குள்ள ஒரு அவதார் படமே எடுத்துடலாம் போல..." என்று சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டு ஐக்கியமாகினர்.

அனேஷியா தன்னுடைய குழுவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்து விட நேராக உள்ளே சென்றவர்கள் இன்னும் ரயில் வராததால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.
"மேடம், நீங்க வேணுனா வெளிய எங்கேயாவது ரெஸ்ட் எடுங்க நாங்க கூப்பிடுறோம்" - இஸ்மாயில்
"இல்ல இஸ்மாயில். நோ ப்ரோப்லேம். அண்ட் நீங்க என்ன பேர் சொல்லியே கூப்பிடலாமே. நோ பார்மாலிட்டீஸ்."
"அப்படியில்ல மேடம். என்னதான் நீங்க என்னவிட சின்னவங்களா இருந்தாலும் என்னைவிட பெரிய பதவியில் இருக்கீங்க. சோ அது முறையில்லை..."
அவள் ஒரு குறுநகையைத் தவழ விட அருகிலிருந்த ரேஷா ஏனோ சிந்தனையில் இருக்க, "ஆமா ஜெசிந்தா எங்க இஸ்மாயில்?"
"பெனாசிரும் அவங்களும் ரெஸ்ட்ரூம் போயிருக்காங்க மேடம்."
"அப்போ லோகேஷ் எங்க?"
அவர் தயங்க,
"என்ன இஸ்மாயில் இன்னும் வரலையா?"
"வந்துட்டே இருக்காரு மேடம்."
"திஸ் இஸ் நாட் பேர். அவரு மட்டும் என்ன ஸ்பெஷலா?"
"இல்ல மேடம். அவர் சீனியர்..."
"ரிமெம்பெர் இஸ்மாயில் இங்க நான் தான் சீப். எனக்கு கீழ தான் நீங்கயெல்லாம் வரீங்க. ஞாபகமிருக்கட்டும்." என்று வழக்கத்திற்கும் மாறாக பொருமினாள் அனேஷியா.
"இதோ போன் பண்றேன் மேடம்."
அவன் அழைக்க அவனோ எடுக்கவேயில்லை. இதை எப்படி இவரிடம் சொல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார் இஸ்மாயில்.
பெனாசிரும் ஜெசிந்தாவும் பேசியபடியே வெளியே வந்தனர்.
அவர்கள் அனேஷியா முகம் சிவந்திருக்கக் கண்டு என்ன என்று சமிக்ஞை செய்ய அவர் சொன்னவுடன் அமைதியாக அமர்ந்தனர்.
ஏனோ இஸ்மாயில், ஜெசிந்தா, பெனாசிர் மூவரும், "ச்ச ஒழுங்கா பழைய பிளான் படியே நடந்திருந்தா இப்படி ஆகியிருக்குமா?" என்று யோசித்தனர்.
ஒரு சின்ன அறிமுகம் : இஸ்மாயில், பெனாசிர், ஜெசிந்தா, லோகேஷ் நால்வரும் கடந்த 5 வருடங்களாய் சூர்யா இன்ஸயிட்ஸ்யில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு இளந்தலைமுறைகளில் சீனியர் மற்றும் அனுபவசாலி என்று லோகேஷ் தான் இருந்தார். ஆனாலும் அவர்களை ஒரு குழுவில் சப்-ஆர்டினெட்டாக தான் செய்துக் கொண்டிருக்க திடீரென சைட் இன்ஸ்பெக்ஷ்ன ஹெட் வேறு கம்பனிக்கு தாவ எப்படியும் லோகேஷ் தான் அந்த பதவிக்கு பணியமர்த்த படுவார் என்று காத்திருக்க அதிர்ச்சியாய் அதற்கு இண்டெர்வியூ நடத்தப்பட அதில் தேர்வாகி வந்தவள் தான் அனேஷியா. வரும் போது சாதாரணமாக வந்தவள் phd முடிக்க அவளின் இந்த அபரீதமான வளர்ச்சியைக் கண்டு லோகேஷ் பொறாமைக் கொண்டான். ஒரு ஈகோ. ஆயினும் இருவரும் தனித்தனியே தான் வேலை செய்துக் கொண்டிருக்க இந்த ப்ராஜெக்ட் ஹெட்ஆகா முதலில் லோகேஷ் தான் பரிந்துரைக்க பட எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. கடைசிநேரத்தில் அனேஷியா தலைமையில் இது முடிவாகிவிட லோகேஷ் அவளுக்கு கீழே வேலை செய்யும் நிலை வர அவனுக்கு இதில் பயங்கர கோவம்.
என்னதான் அவள் ஹெட் என்றாலும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே வேலைதான். பொதுமக்களின் கருத்துக்களையும் அபிப்ராயத்தையும் கணக்கெடுத்து அதை திரட்டும் வேலைதான். இருந்தும் ஒரு ஈகோ.
இதில் ஏனோ இஸ்மாயில், ஜெசிந்தா, ரேஷா, பெனாசிர் எல்லோருக்கும் வருத்தம் தான் தான். வரவில்லை என்று முதலில் சொன்னவள் பின்பு வருவதாக சொன்னது ஏனோ அவள் வேண்டுமென்றே லோகேஷை பழிவாங்குவதாய் தெரிந்தது. இந்த பயணம் முடிவாகும் போதே இவ்வளவு தடங்களா ? ஆண்டவா காப்பாத்தேன் என்று எல்லோரும் வேண்டிக்கொண்டிருக்க அனேஷியாவுக்கு தன் செல்போன் சிணுக்க,

"சொல்லுங்க டேடி."
"வேர் ஆர் யு பேபி?"
"எக்மோர்"
"இதெல்லாம் உனக்கு அவசியமா அனி?"
"டேடி ப்ளீஸ்."
"ஓகே. பி ஷேப். கேர்புள்"
"யா. யு டோன்ட் ஒர்ரி."
ஏனோ இருவரும் கொஞ்சம் மௌனமாய் இருந்து அமைதியாகினர்.
"டேட்..."
"ஹ்ம்ம்..."
"ஜாலியா இருக்கனும். என்னைப் பத்தி எந்த கவலையும் வேணாம்..."
"இது தேவை தானா?"
"நிச்சயமாப்பா..."
"ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிற?"
"ஆகணும்."
"ஆகலைனா?"
"எனக்குத் தெரியில..."
"அப்பா சொல்றதைச் செய்யணும்." ஏனோ இப்போதும் அதில் அதிகாரம் இல்லை. ரெகுஸ்ட்டாக தான் இருந்தது.
யோசித்துக்கொண்டே இருந்தாள்
"அப்போ மௌனம் சம்மதம் தானே?"
"சரிப்பா." அதில் ஒலித்த இயலாமை வலி ஏனோ அவரையும் தாக்கியது.
"ஏறிட்டு எனக்கு மெஸேஜ் பண்ணனும் சரியா?"
"ஹ்ம்ம்."
இதுவரை இருந்த கோவம் போய் மனம் ஒரு வருத்தத்தில் இருந்தது. இதை எதிரே அமர்ந்திருந்த ரேஷா இஸ்மாயில் இருவரும் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தனர்.
ஜெசிந்தா பெனாசிர் இருவரும் தத்தம் கனவுலகத்தில் இருக்க, இஸ்மாயிலைத் தொடர்புக் கொண்ட லோகேஷ் இன்னும் 15 நிமிடத்தில் வந்துவிடுவதாக சொன்னதும் தான் எல்லோருடைய முகத்திலும் சந்தோசம் வந்தது. ஆனால் அனேஷியா மனமோ இதைக் கேட்காமல் ஒரு வித யோசனையில் இருந்தது. தன் தந்தை கேட்ட கேள்வி தான் காரணம்...
ஒரு வேளை ஒர்க் அவுட் ஆகலைனா ? சிலருக்கு கனவு என்றுமே கனவாகத்தான் இருக்கும்!
......................................................................................................................................................................................
மிருதுளாவை அழைத்து பேசிக்கொண்டிருந்தவன், "மிரு வீட்டுல ஓகே சொல்லிடுவாங்க தானே?"
"ஹ்ம்ம்" தலையை மட்டும் ஆட்டினாள்.
"அப்புரோமென்ன?
"இது நான் மட்டும் சம்மதிச்சா நடக்குற விஷயமா?"
...........
"தியாவும் சம்மதிக்கணுமே... அதுமில்லாம அத்தை..."
"எல்லாம் நல்லா நடக்கும். டோன்ட் ஒர்ரி."
"ஆமா கீர்த்தனா எப்படி இருக்கா?"
"ஹ்ம்ம் சந்தோசமா இருக்கா. கேரியிங்"
"நிஜமா?"
"ஆமா."அவன் சிரித்தான். அதில் உண்மையான சந்தோசம். இவனை இத்தனை வருடங்களில் இவ்வளவு சந்தோசமாய் இவள் பார்த்ததேயில்லை...
"அப்போ சித்து?"
"அவருக்கென்ன ஸ்கூல் போறாரு"
"அதுக்குள்ளயா?"
"ஹே பிலே ஸ்கூல் தான்."
"அதானே. நான்கூட எனக்கு வயசாகிடுச்சோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்" என்று அவள் சீரியஸாக சொல்ல,
துவாரா சத்தம் போட்டு பெருஞ்சிரிப்பு சிரித்தான். ஒருகணம் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப்பார்த்துச் சென்றனர்.
இதை பார்த்த விவியன் ஹேமந்த் இருவரும் ஆச்சரியம் கொண்டனர். சிரிப்பவனையே பெ வென பார்க்க ஹேமந்த்தின் முதுகில் ஓங்கி குத்தப்பட சட்டென இம்பல்ஸ் வர திரும்பி கையை ஓங்கிவிட மௌனிகாவைப் பார்த்தவன் கை கீழிறங்க அவன் கை ஓங்களில் கொஞ்சம் மிரட்சி நிறைய சந்தோசம் தவிப்பு எல்லாம் சேர்த்துக் பார்த்தவளை என்ன செய்வதென அமைதியாக இருக்க இவர்களின் இந்த ஃபிரீஸ்சை கண்டு விவியன் அமைதியாக நிற்க, "ஹ்ம்ம்க்கும்" என்று செய்ததும் இருவரும் நார்மலுக்கு வந்தனர்.
விவியன் யாரென தெரியாமல் மௌனி பார்க்க, ஹேமந்த் பார்வையை திருப்பிக் கொண்டு என்ன கண்ணுடி என்று உள்ளுக்குள் ரசித்தவன் சுயம்பெற்று, "இவர் விவியன் துவாரா ஃபிரண்ட்"
தெரியும் என்பதைப் போல் அவள் தலையசைத்தாலும் இன்னும் அவள் கண்கள் மிரட்சியுடனே இருந்தது...
இது மௌனிகா என் ஃபியான்சி.
ஓ என்று ஆச்சரியப்பட்டவன் கையைக் கொடுக்க அவளும் பதிலுக்கு கை கொடுத்தாள்.
விவியனின் இன்னும் சந்தேகம் தீரா பார்வையைக் கண்டவன், "நம்ம கூட தான் ட்ராவல் பண்ண போறாங்க..." என்றான்.
"இஸ் இட்?"
"ஆம்."
"வீட்டுல எப்படி ஒத்துக்கிட்டாங்க? அவ்வளவு தாராள மனம் கொண்டவர்களா?"
ஏனோ விவியனைப் பார்த்து கண்ணைக் காட்டினான் ஹேமந்த்.
அது புரியாமல் விழித்தவனிடம், "அண்ணா எனக்கு யாருமில்லை. நான் ஆர்பன்" என்றாள். ஏனோ இது ஹேமந்தை குத்த உரிமையாய் அவளின் கையைப் பிடித்து, "இல்ல என் வைப்" என்றான்.
நிமிர்ந்து கர்வமாய் பார்த்தாள்.
விவியனுக்கு ஏனோ மௌனிகாவின் மீது பரிவும் ஹேமந்த்தின் மீது கர்வமும் வந்தது.
"நான் உன் அண்ணன்னா அப்புறோம் நீ எப்படி ஆர்பன் ஆவ?"
கண்ணிமைகளை வேகமாய் மூடி சிமிட்டி அவனைப் பார்த்தவளை ஆதரவாய் அணைத்தான் ஒரு சகோதரனாய்...
அங்கே பேசிக்கொண்டிருந்த மிருவும் துவாராவும் இவர்களை நோக்கி வந்தனர்.
துவராவும் மிருவும் ஹேமந்த் விவியனை நோக்கி வர துவாராவைக் கண்ட மௌனிகா "ஐ துவ"ரண்ணா என்றவள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஏனோ ஓடிச் சென்று இடம் பொருள் மறந்து ஹகிக்க அவனும் வாஞ்சையாய் அவளை அணைத்து விடுக்க, "எப்படி இருக்கீங்க?"
"எனக்கு என்னடா ஐ யம் குட். நீங்க எப்படி இருக்கீங்க மேடம்?"
"நானும் ஆல்வேஸ் குட்"
இவ்வளவு உரிமையாய் துவாராவிடம் பழகுபவளை ஏனோ சற்று பொறாமையுடன் பார்த்தாள் மிரு.
ஹேமந்த் சிரித்தபடியே மௌனிகா என்றதும் சட்டென அவளுக்கு விளங்க வில்லை. "யாரு?'
"மிஸ்ஸஸ் மௌனிகா ஹேமந்த்" ஆகா போறவங்க
ஓ என்றவள் முகத்தில் சந்தோசத்தோடு மௌனியைப் பார்க்க அவளும் சிரித்து வைத்தாள்.
"நான் மிருதுளா. உன் ஆளோட காலேஜ் மெட்."
"அப்படியா?"
அதிலே புரிந்தது தன்னைப் பற்றி ஹேமந்த் எதுவும் அவளிடம் சொன்னதில்லை என்று. செல்லமாய் கோவமாய் ஹேமந்தை முறைத்தாள்.
அதைப் புரிந்துக்கொண்டவன், "நான் சொல்லல தான். ஆனாலும் என் லைப்ல ஒரு முக்கியமான ஆள்." என்றான்.
"நல்லா ஐஸ் வெய்..."
அவன் ஹி ஹி என்று அசடு வழிய பயணங்கள் முடிவதில்லை சிணுங்கியது.
"மச்சான்ஸ் எங்கடா இருக்கீங்க?"- செபாஸ்டின்
அதைப் பார்த்த விவி, மிரு இருவரும் சிரித்து அவனுக்கு வழி சொன்னார்கள்.
மணியைப் பார்த்தவன் ஞாபகம் வந்தவனாய் விவானுக்கு அழைக்க, நித்யா தான் எடுத்தாள்.
"சொல்லு துவா"
"எங்க தாயீ இருக்கீங்க?"
"ரூம்ல தான்"
"டைம் ஆச்சி வாங்க."
"இதோ இதோ பாப்பாவுக்கு ட்ரெஸ் மாட்டிட்டு இருக்கோம்."
"இருக்கோமா இருக்கானா?"
"இருக்கார்."
"ஐயோ" என்றவன் நெஞ்சைப் பிடித்து, "இப்படி திடீர் திடீர்னு ஷாக் எல்லாம் கொடுக்கப்படாது நித்து"
"என்ன பண்றது கிரகம் புருஷனா போயிட்டான், என் பொண்ணுக்கு அப்பாவாவும் ஆகிட்டான்..." என்று சொல்ல,
அவன் குபீரென சிரிக்க,
அவளும் சிரித்து வைத்தாள்.
 
நிறைய கதாபாத்திரங்கள்.. nice update..
கவலை வேண்டாம் அடுத்த இரண்டு அத்தியாயங்களில் எல்லோரையும் அறிமுக படுத்திவிடுகிறேன்.நன்றி
 
Nice ud
Kootukar serumpol, payangara thamase, ( kalakalapuku panjama?)Ingay periya pattalame irruku .jolly ah thane irrukum.
 
Top