Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 15

Advertisement

praveenraj

Well-known member
Member
அதற்கடுத்து ஒரு வாரம் இப்படியே தான் கழிந்தது. ஏனோ விவானின் இல்லாமை அவளை அதிகம் பாதித்தது. ஒரு மாதிரி மென் சோகத்தில் இருந்தாள். கடமைக்கு என்று அவள் தன் வேலைகளைச் செய்துக்கொண்டிருந்தாள். அவனின் காதலை அப்போது தான் நன்கு உணர்ந்திருந்தாள்.
"சூப்பர் அப்போ அடுத்து என்ன ப்ரோபோசா?"- பாரு
"இல்லை"
"இல்லையா?"
"அப்பயும் அவன் மேல எனக்கு காதல் வரல"
"வாட்? வரல? வரலயா?" என்று விவேக் போல கேட்டாள் மௌனி.
"ஆனால் அவனைப் பார்க்கணும்னு எனக்கு தோணிட்டே இருக்கும். அன்னைக்கு நான் உடனே ஜிட்டனைக் கூப்பிட்டேன். என் போன் அவன் எடுக்கறதில்லை"
"ஹலோ ஜிட்டன் பேசுறேன்"
"தெரியுதுடா வெண்ணை. விவான் எங்க இருக்கான்?"
"என்னங்க பண்ணீங்க அவனை? இப்படி சோகமா சுத்திட்டு இருக்கான்"
"இந்த அட்வைஸ் வெண்ண எல்லாம் வேணாம். அவன் கிட்ட போன் கொடு"
"அவன் பேச மாட்டேங்குறான்"
"சரி ஸ்பீக்கர்ல போடு"
"இங்க பாரு விவான், நான் உன்னைப் பார்க்கணும். பேசணும். ப்ளீஸ் இன்னைக்கு நயிட் ஹாஸ்பிடல் வா, அப்படி நீ ஹாஸ்பிடல் வரலனா விடியற்காலையில நான் அங்க பாய்ஸ் ஹாஸ்டல்ல இருப்பேன். மறக்காத நைட் 2 மணி"
"ஏங்க பாய்ஸ் ஹாஸ்டெல் எல்லாம் கேர்ள்ஸ் வரக்கூடாது. தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்" - ஜிட்டு
"அப்போ அவனை வரச்சொல்லு. இல்லை நான் காலையில அங்க தான் இருப்பேன். அண்ட் உன் பேரைத் தான் சொல்லுவேன். ஜிட்டு என்கின்ற ஜிட்டேந்தேர் தான் என்னை வரச் சொன்னான்னு சொல்லி உன்னைத் தான் மாட்டிவிடுவேன் பார்த்துக்கோ"
"ஏங்க இதென்ன வம்பா போச்சு? அப்படியெல்லாம் எதையும் பண்ணிடாதீங்க அவன் வருவான்"
ஒருவழியா பேசி சமாதானம் செய்து விவானை அனுப்பினார்கள். அங்கே ரூமிற்கு சென்றான். அவனைக் கண்டும் காணாமல் இருந்த நித்யா,
"யாருங்க நீங்க? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?"
அவன் கோவமாய் வெளியே போக முயல அவனை இழுத்தவள் கதவைச் சாற்றி அவனைப் பார்த்து புருவம் உயர்த்த,
"எதுக்கு வரச் சொன்னீங்க மேடம்?"
செம காண்டானவள், அவனை கட்டிப்பிடித்து "சாரி விவான், ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு ஒரு நாளும் நெனைச்சதில்லை, ப்ளீஸ் டா என்கிட்டே பேசு. நீ இல்லாம இருக்கறது ஒரு மாதிரி இருக்கு"
"டூ யூ லவ் மீ?"
"ஐயோ லவ் இல்லடா சின்னப் பையா" என்று சொல்ல அவன் கோவமாய் வெளியேற பார்க்க, "விவா ப்ளீஸ் விவா புரிஞ்சிக்கோ. எனக்கு உன்னைப் பிடிக்கும். நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்"
அவன் முகம் சோகமாக, "ப்ளீஸ் தினமும் பழையபடி வாடா, பேசுடா"
"நான் வந்தா தான் நீ தப்புத்தப்பா" என்று முடிக்கும் முன்னே மீண்டும் அணைத்தாள். "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியில விவான். உன்கூட நான் ஹேப்பியா இருக்கேன். அதுக்குன்னு லவ் பண்றியான்னு கேட்காத. ப்ளீஸ் ப்ளீஸ் பழையபடி வாடா"
ஏனோ விவானுக்குமே இந்த ஒரு வாரம் அவளைப் பார்க்காமல் ஒரு மாதிரி தான் இருந்தது. மீண்டும் பழையபடி இருவரும் ஃப்ரண்ட்ஸ் ஆகினர். ஆனால் இப்போது விவானை நித்யாவிற்கு அதிகம் பிடித்திருந்தது. அவனோடு அவள் ரொம்ப ஷேப்பாக (safe) இருப்பதாய் உணர்ந்தாள்.
மீண்டும் நாட்கள் அதே போல் போனது. அன்றும் அவள் இரவு முடித்து வெளியே வந்தவள் விவானை அழைக்க முடிவெடுக்க அவன் நேற்று டோர்னமென்ட் போனது நினைவு வர அவனைத் தொந்தரவுச் செய்ய விரும்பாமல் அவளே சென்றாள்.
விவான், துவாரா இருவரும் ஷெட்டில்காக் பிலேயர்ஸ். இதுபற்றி இளங்கோ பார்வதி போர்சன் வரும் போது பார்ப்போம்.
ரூமிற்கு சென்றவள் கதவைத் திறந்து லைட் போட அலறியவள் நடுங்கிக்கொண்டே வெளியே வந்து விவானை அழைத்தாள். அவன் முதல் ரிங்கில் எடுக்காமல் போக இரண்டாவது முறை போனை எடுத்தவன் அவள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்து, "நித்தும்மா. 10 மினிட்ஸ் 10 மினிட்ஸ்ல வந்துடறேன். பயப்படாதா..."
"ப்ளீஸ் வா விவான் எனக்கு பயமா இருக்கு"
"வந்துட்டன் வந்துட்டேன், நித்தும்மா நீ அங்கேயே இரு உள்ள போகாதா"
"ம்ம்ம் லைன்லேயே இரு டா பயமா இருக்கு"
"லைன்ல தான் இருக்கேன். வந்துட்டேன்"
விவான் நித்யா சொன்னதைக் கேட்டு பதறிய படியே சென்றான். அவன் அங்கே சென்று வண்டியை நிறுத்தி இறங்க அதுவரை பயத்தில் அழுது நடுங்கிக் கொண்டிருந்தவள் வேகமாய் அவனை நோக்கி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ அவள் உடல் நடுக்கமே சொன்னது அவள் எவ்வளவு பயத்தில் இருக்கிறாள் என்று, இவன் அவளை எவ்வளவு தேற்றியும் அவள் அழுதுக்கொண்டே பயத்தில் நடுங்கியபடியே இருக்க, ஏனோ அவள் முகத்தைப் பிடித்து அவளின் இதழில் இதழ் ஒற்றியெடுத்து "அழாதா நித்தும்மா நான் வந்துட்டேன், ஒன்னுமில்ல" அவளைத் தேற்றி அங்கேயே நிற்கவைத்துவிட்டு அவன் முன்னே அடியெடுக்க
"விவா வேணாம்டா ரொம்ப கொடூரமா இருக்கு"
அவன் துணிந்து உள்ளே செல்ல உள்ளே அபர்ணாவின் நாக்கு வெளியே வந்து கண் முழி பிதுக்கி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தாள். விவானுக்கே ஒரு மாதிரி இருந்தது. இப்போது நித்யாவின் நிலை அவனுக்கு தெளிவாக புரிந்தது. வெளியே வந்தவன் உடனே போலீஸ்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு தங்கள் கல்லூரி மருத்துவமனைக்கே போனும் செய்தான். அவளோ, மிகுந்த பயத்தில் இன்னும் அதிலிருந்து வெளியே வராமல் குழப்பத்தில் இருந்தாள். விவான் உடனே இளங்கோவை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு, "டேய் நீயும் செபாவும் மட்டும் வாங்கடா. ஜிட்டன் வேணாம். துவாராவுக்கு விஷயமே தெரியப்படுத்த வேணாம் சரியா?"
"உடனே வரோம்டா"
இவன் நித்யா அருகில் சென்று அமர அவன் தோளில் சாய்ந்துக்கொண்டவள், "ஈவினிங் கூட நல்லா தான்டா பேசிட்டு போனேன். இப்படி பண்ணிட்டாளே? எனக்கு ரொம்ப பயமா இருக்கு விவான். அவங்க வீட்டுக்கு நான் என்ன சொல்வேன்? நான் தான் தப்பு பண்ணிட்டேன் ரெண்டு மூணு நாளா டல்லா இருந்தா நான் தான் கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன். ஒருவேளை நான் பேசியிருந்தா இன்னைக்கு இப்படி ஆயிருக்காதோ?"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நித்திமா. உனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல நித்யா. அவ கோழை. எந்த ஒரு பிரச்சனையையும் பேஸ் பண்ணனும்"
அதற்குள் போலீஸ் வந்துவிட ஆம்புலன்சும் வந்துவிட போலீஸ் உள்ளே சென்று பார்வையிட்டனர். செபா, இளங்கோ இருவரும் வந்துவிட்டனர். செபாவை அழைத்தவன் "கொஞ்சம் தண்ணியும் ஜூஸும் வாங்கிட்டு வாடா. ரொம்ப டையேர்ட்டா இருக்கா"
போலீஸ் வந்து இவளிடம் விசாரிக்க, இவள் பயப்பட விவான் தான் இவளுக்காக நடந்ததையெல்லாம் சொன்னான். சில குறுக்கு விசாரணை எல்லாம் முடிய அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியப்படுத்த எல்லாம் முடிய பொழுதும் விடிந்தது. நித்யா தான் ரொம்பவும் சோர்வாக குழப்பமாகவே இருந்தாள். என்ன தான் டாக்டராக இருந்தாலும் நெருங்கியவர்கள் என்று வந்தால் பயமும் அழுகையும் தான் வரும்.
செபாவை அழைத்து உள்ளே இருக்கும் நித்யாவின் திங்க்ஸை (டிரஸ் ) எல்லாம் எடுத்துவரச் சொல்லிவிட்டு அருகே இருந்த ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்து அவளை அழைத்துச்சென்று ரெப்பிரேஷ் ஆகம்படி சொன்னான். அவர்களை இவன் அனுப்பி வைக்க இளங்கோவை அழைத்து "மச்சி இன்னைக்கு நான் மேட்சுக்கு வரலன்னு துவாரா கிட்ட சொல்லிடு. அண்ட் இது சூசைட்னு மட்டும் அவன் கிட்ட சொல்லிடாத ஆக்சிடென்டுனு சொல்லு. நான் நித்யா கூடவே இருக்கேனு சொல்லிடு. ஓகே?"
"சரிடா. அடுத்து என்ன பிளான்?"
"இவ ரொம்ப பயந்துட்டா. பேசாம இன்னைக்கே வீட்டுக்கு அனுப்பி வைக்கணும். யோசித்தவன் மிரு வீட்டு மேல் போர்சன் சும்மா தானே இருக்கு? (மிருவும் லோக்கல் பொண்ணு தான். லோக்கல் மீன்ஸ் இதே ஊரு. டேஸ்ஸ்காலர்)
"ஆமாடா"
"சரி நான் நித்யாகிட்ட பேசிட்டு சொல்றேன்" அதற்குள் நித்யாவின் வீட்டிற்கும் விஷயம் தெரிந்து அவளை ஊருக்கு வரச் சொன்னார்கள். அன்று முழுவதும் நித்யாவுடனே இருந்தான் விவான். அவளை பீல் செய்யாதவாறு எவ்வளவோ முயற்சித்தான்.
அன்றைய இரவு நித்தியாவிற்கு ஊருக்கு போக பஸ்சில் டிக்கெட் புக் செய்து அவளை ஒருவாறு சமாளித்து தேற்றி அவளை சென்ட் ஆப் (send off - வழியனுப்ப) செய்ய கூட்டிச்சென்றான். பஸ்ஸில் ஏறி அவளை உட்காரவைத்துவிட்டு இவன் கீழே நின்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க, அவளும் ஏதோ யோசனையிலே தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். பஸ் புறப்படபோகும் போது அவன் டாட்டா சொல்ல அவள் கண்கள் ஏனோ அவனிடம் எதையோ எதிர்பார்த்தது. முதலில் அதை புரியாமல் விழித்த விவான் டாட்டா சொல்ல பஸ் புறப்பட்டதும் நித்யாவிற்கு அழுகை வந்தது. ஒரு 100 மீட்டர் கூட பஸ் சென்றிருக்காது உடனே நிற்க விவான் ஏறினான் அதில். விவனைப் பார்த்ததும் அவள் மனதில் இருந்த பாரம் குறைந்ததைப் போல் உணர்ந்தாள் நித்யா. வந்தவன் அவளுக்கு அருகில் அமர்ந்தான். பஸ் புறப்பட்டது.
அவளும் எதையும் பேசாமல் அவனின் தோளில் ஆதரவாய் சாய்ந்தாள். அவன் நெற்றியில் முத்தம் வைத்தவன் அவள் தோளில் கைப்போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டான். ஏனோ அந்த கதகதப்பில் அப்படியே உறங்கியும் போனாள். விவான் இளங்கோவிற்கு இதைத் தெரியப்படுத்த ஏனோ இது ஒர்க் அவுட் ஆகுமா என்ற குழப்பம் இளங்கோ உட்பட அவன் நண்பர்கள் எல்லோருக்கும் இருந்தது மட்டும் நிச்சயம்.
விவானின் வீட்டிலிருந்து ஒரு பிரச்னையும் இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியே அவன் தந்தைக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் விவானின் தாய் எப்படியும் சம்மதிக்க வைத்துவிடுவார் தான். ஆனால் நித்யாவின் வீட்டில்? அதைவிட முக்கியம் நித்யாவும் விவானை விரும்புகிறாளா என்று இன்னும் யாருக்குமே புரியவில்லை. இதுதான் அவர்களின் குழப்பம்.
காலை வண்டி கும்பகோணம் செல்ல, அவளை எழுப்பியவன், "நித்தி ஊரு வந்திடுச்சு எதையும் போட்டு குழப்பிக்காம நல்லா ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஊருக்கு வா. நீ மிரு வீட்டுல இனி தங்கிக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. பேச சொல்லிட்டேன். எப்படியும் ஓகே சொல்லிடுவாங்க. இல்லனாலும் பார்த்துக்கலாம். அதையே நினைச்சிட்டு குழம்பிக்காத நித்யா. வீட்டுல இருந்து உன்னை அழைச்சிட்டு போக வராங்க இல்ல?"
ஆமா என்று அவள் தலை ஆட்ட,
"சரி நீ போ. நான் இறங்கி பிரெஷ் ஆகிட்டு ஊருக்கு போய்க்கிறேன். சரியா?"
நித்யாவிற்கு இப்போது விவான் மீது ஆச்சரியம் கோவம் எல்லாம் ஒருசேர வந்தது. 'எந்த மாதிரி அன்பு இது? எனக்கு ஒன்று என்றால் இவ்வளவு செய்கிறானே? நான் கேட்காமலே என்னோடு வந்துவிட்டான். எனக்கு தங்குவதற்கு இடமும் பார்த்துவிட்டான்" அவளுக்கு அதிக குற்றயுணர்ச்சி குழப்பம் எல்லாம் வந்தது. வண்டி பஸ் ஸ்டாண்ட் நெருங்க, "நான் அங்க உட்கார்ந்துக்கறேன் நித்யா. பை" அவன் விலக ஏனோ ஏதோ ஒரு உந்துதல் அவனை கட்டிப்பிடித்தவள் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து தேங்க்ஸ் சொல்ல, மீண்டும் அவளுக்கு முத்தம் வைத்தவன், "இது என் கடமை நித்திம்மா பை" என்று அவன் விலகி அமர்ந்துக்கொண்டான்.
ஊரும் வர அவளை அழைத்து செல்லஅவளின் தம்பியும் வந்திருந்தான். ஏனோ இப்படி அவனை வீட்டிற்கு கூட கூப்பிட முடியாத தன்னுடைய நிலையை நினைத்து நித்யாவிற்கு தன் மீதே கோவம் வந்தது. அவனையே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டுப் போனாள . அவன் சிரித்து அவளுக்கு டாட்டா காட்டிவிட்டு ரெப்பிரேஷ் ஆகி அடுத்த பஸ் பிடித்து சென்னைக்கு கிளாம்பினான்.
ஒரு வாரம் கழித்து அவள் சென்னை வர அவளுக்காக மிருவின் வீட்டில் மேல் போர்சனில் இடம் இருந்தது. அவள் எவ்வளவு சொல்லியும் அவர்கள் வாடகை வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அதிலிருந்து பழையபடி நித்யா மாற மிரு இளங்கோ செபா விவான் ஹேமா துவாரா ஜிட்டு தியா ஏன் பாருவின் கதை தெரிந்து அவளோடும் நெருங்கிய வட்டத்திற்குள் வந்துவிட்டாள்.
தன் மீது விவான் காட்டும் அன்பு அவளுக்கு நன்கு புரிந்தது. மெல்ல மெல்ல அவன் அவளையே அறியாமல் அவள் மனதிற்குள் புகுந்தான். இடையில் விவானின் பர்த்டே வர இவளே மிருவிடம் சொல்லி அன்றிரவு அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கேக் எல்லாம் வெட்டினாள். கிட்டத்தட்ட எல்லோருக்கும் நித்யாவின் மனதும் புரிந்தது ஆனால் அவள் அதை வெளிப்படையாக சொல்லவே இல்லை.
இடையில் வீட்டிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவளுக்கு அலைன்ஸ் வந்துள்ளது என்றும் நல்ல இடமென்றும் சொல்ல இனம்புரியாத பயம் அவளுக்கு வந்தது மட்டும் நிச்சயம். பின்னே இப்போது தானே விவான் மூன்றாம் ஆண்டு இரண்டாம் செமஸ்டர், அவனுக்கு இப்போது தான் 20 ஆகிறது. அவளுக்கோ 23.
நாட்கள் அப்படியே போக அவளின் இன்டெர்ன்ஷிப் பீரியடும் முடிவுக்கு வர தயாராகியது. விவானும் மூன்றாம் ஆண்டு இறுதியிலிருந்தான். ஆனால் அவளுக்காக இன்னமும் எல்லாம் பார்த்துப்பார்த்து தான் செய்தான்.
இன்டெர்ன்ஷிப் முடிந்து சிறிது காலம் எங்கேயாவது ரூரல் (rural - கிராமம்) அல்லது அண்டர்டெவெலப்பட(underdeveloped - வளர்ச்சியடையாத) இடங்களில் கொஞ்ச காலம் பணிபுரிய வேண்டும். அவளுக்கு ஊட்டி அருகில் ஒரு மலைவாழ் கிராமம் கிட்டியது. இந்த விஷயத்தை அவள் யாரிடமும் சொல்லாமல் மிருவின் பெற்றோரிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
மிருவின் பெற்றோர்களுக்கும் அவளின் நிலை நன்கு புரிந்தது. அவள் விவானை காதலிக்கிறாள . ஆனால் இது நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பே இல்லை என்றும் மேலும் தன் வீட்டில் இதற்கு ஒருக்காலும் ஒற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் நினைத்து அவள் யாரிடமும் சொல்லாமல் விடைப்பெற்றாள். போகும் இடத்தைக் கூட யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டாள். விவானுக்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் காட்டிய அக்கறை அன்புக்கு மிக்க நன்றி என்று லெட்டர் எழுதிக் கொடுத்துவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
இது எல்லோருக்கும் அதிர்ச்சி. விவானுக்கோ பேரதிர்ச்சி. நாட்கள் அப்படியே போனது விவான் தான் ஒரு மாதிரியே இருக்க பின் எல்லோரும் சேர்ந்து அவனை நார்மல் ஆக்கினார்கள். அவன் ஊருக்கு போவதையே விட்டுவிட்டு இங்கேயே இருந்தான்.
நித்யா யாருக்கும் சொல்லாமல் ஊட்டிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய மலைக்கிராமத்தில் சேர்ந்திருந்தாள். அவளின் வருகை தெரிந்து அங்கே பணிப்புரியும் மலைவாழ்மக்கள் அவள் தங்க ஒரு இடத்தைக் காட்டினார்கள். அதுவோ பெரிய அவுட்ஹௌஸ் போல இருந்தது. அவள் மறுத்தும் இது அவளுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது. அவளும் அப்போதிருந்த குழப்பத்தில் எதையும் யோசிக்காமல் அங்கே தங்கிவிட்டாள்.
அப்படியே பேசிப்பழக அந்த எஸ்ட்டேட் முதலாளி அம்மா லலிதாக்கு ஒரு நாள் இரவு சற்று உடல்நிலை சரியில்லாமல் போக அங்கே சென்று அவரைப் பார்த்து குணப்படுத்தினாள் நித்யா. அதிலிருந்து இருவரும் பரஸ்பரம் நல்ல ரிலேஷன்ஷிப்பிற்கு வந்தனர . இதுவரை யாரிடம் தன் மனதை சொல்லமுடியாமல் தவித்தவள் அவரிடம் எல்லாமும் சொன்னாள்.
"இதுல என்னம்மா தப்பு ? உனக்கும் பிடிச்சிருக்குனா அப்போ ஓகே சொல்ல வேண்டியது தானே?"
"புரியாம பேசாதீங்க அம்மா. அவன் ஓகே சொல்லிட்டான். ஆனா அவன் பேரண்ட்ஸ்? அவங்க இதுக்கு ஒதுக்கணும் இல்ல? அதுமில்லாம என் வீட்டுல கண்டிப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. உங்ககிட்ட சொல்ல என்ன? என்வீட்டுல கண்டிப்பா கேஸ்ட் பார்ப்பாங்க. அதும் என்னைவிட சின்ன பையன்னு சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க"
அவர்கள் இருவரும் நல்லா நட்பில் போக தினம் தினம் இரவு விவானுடன் பழைய நாட்களையே நினைவுப்படுத்தி அவளை வாட்டியது. இதற்கு நடுவில் மீண்டும் திருமணத்தைப் பற்றி தன் வீட்டில் பேச்செடுக்க சற்று கோவமாகவே இப்போதைக்கு முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டாள். அவள் கோவமெல்லாம் சில விஷயங்கள் தான். 'முதலில் ஏன் விவானை விட நான் முன்னால் பிறந்தேன்? இரண்டாவது அப்புறோம் ஏன் அவனை நான் பார்த்தேன்? அவன் ஏன் என்னை இப்படி உருகியுருகி காதலிக்கனும்? இப்போது நானும் அவனை காதலிக்கிறேன் ஆனால் அதை ஒற்றுக்கொள்ள தைரியமில்லாமல் இப்படி மறைந்து வாழவேண்டும்?' அவளுக்கு நிறைய குழப்ப அந்த ஒரு வருட ட்ரைனிங் முடியும் காலமும் நெருங்கியது.
எல்லாம் தெரிந்து விவான் தனக்கு அழைப்பான் என்று நினைத்துக்கொண்டிருக்க அங்கே இருந்து வந்த இந்த 10 மாத காலத்தில் ஒருமுறைக் கூட அவன் இவளை அழைக்கவில்லை. 'அப்போ நீ என்னை உண்மையிலே லவ் பண்ணலியா டா சின்னப் பையா போடா' என்று தினம் தினம் மருகினாள்.
இதற்கு நடுவில் அன்று மிக தீவிரமாக பேஷண்டை பார்க்க ஒரு கேம்பில் இருக்க அவளுக்கு அழைப்பு வந்தது. யாரென பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள் நித்யா,
"ஹலோ"
எதிர்புறம் பதிலில்லை.
"ஹலோ ஹூ இஸ் திஸ்?"
அவள் கோவமாக போன் எடுத்து பார்க்க அதில் 'சின்னப் பையன்' என்று இருக்க அவளுக்கு ஒருமாதிரி திகைப்பு மீண்டும் காதில் வைத்து, "விவா, டேய் விவான்? போடா ஏன்டா இப்படி பண்ண? ஒரு தடவைக் கூட எனக்கு போன் பண்ணனும்னு உனக்கு தோணலை தானே? அப்போ நீ என்னை உண்மையா லவ் பண்ணல? நீ லவ் பண்றனு சொன்னதெல்லாம் பொய் தானே? போடா" என்று அவள் அழ,
"நித்யா இந்த எல்லோ கலர் ஸரீ உனக்கு சூப்பரா இருக்கு நித்திம்மா"
குனிந்து பார்த்தவள் உடனே சுற்றிமுற்றி பார்த்தாள். "எங்கடா இருக்க?"
"கண்டுபிடி"
மீண்டும் சுற்றிமுற்றி பார்த்தவள், "சொல்லுடா ப்ளீஸ்"
"அப்படியே கொஞ்சம் பின்னாடி திரும்பு"
அவள் திரும்ப அவன் தூரமாய் நின்று ஹாய் காட்ட வேகமாய் அவனை நோக்கி ஓடியவள் அவனைப் பார்த்த சந்தோஷத்தில் சுற்றம் மறந்து அவன் இதழை சிறைச்செய்தாள். இது விவானுக்கே ஆச்சரியம் தான். இருந்தும் நல்ல விஷயங்களை அனுபவிக்கனும் ஆராயாக் கூடாது என்பதால் அவன் அமைதி காக்க அவனை விட்டவள் அவன் கன்னத்தில் ஓங்கி இரண்டு வைத்தாள். திடுக்கிட்டவன் முழிக்க, "என்ன மறந்துட்ட தானே? போடா, ஐ லவ் யூ".என்று அழுதவள் அவனை கட்டிப்பிடித்தாள். அப்போது விவான் பின்னாலிருந்து லலிதா அம்மாவும் ராஜசேகரும் வர அவர்களைக் கண்டவள் விலகி, "அம்மா இதுதான் விவான். நான் சொன்ன சின்னப் பையன்" என்று 'அவர்களுக்கே' அவர்கள் பெற்ற மகனை அறிமுகம் செய்தாள்.
"என்னடா சின்னப் பையா எப்படி இருக்க? நான் கூட நம்பவில்லை. யாருடா இவன் இப்படி பெரிய பொண்ணை லவ் பண்றானேனு நெனச்சேன், சீரியசுலி தங்கம் டா"
நித்யாவிற்கு எல்லாம் புரிந்தது. ஆனாலும் சில புரியாத விஷயத்தை நினைத்து விவானைப் பார்க்க,
"எனக்குத் தெரியும் நித்திம்மா நீயும் என்ன லவ் பண்ற ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குதுனு அதுதான் என் அப்பாகிட்ட சொல்லி அவர் ஃப்ரண்ட் மூலமா எங்கெங்கோ பேசி உன்ன இங்க என் ஊருக்கு ட்ரைனிங் வர வெச்சேன். ஆனாலும் நீ என்கிட்டே சொல்லிட்டு வருவேன்னு நெனச்சேன். நீ சொல்லாததுனால ஒருவேளை உனக்கு என்மேல லவ் இல்லையோனு நெனச்சு பயந்தேன். ஆனா நீ இங்க வந்து என் அம்மாகிட்டவே என்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்க?" என்று சொல்லி அவன் கண்ணடிக்க,
அப்போது தான் நித்யாவிற்குப் புரிந்தது. 'அடிக்கடி தன் மகனைப் பற்றி பேசும் லலிதாம்மா அவன் பெயரையோ இல்லை புகைப்படத்தையோ கூட சொன்னதில்லை காட்டியதுமில்லை. ஆனால் தன் பெண் போலவே அவளை கவனித்துக்கொண்டார். ஒவ்வொன்றாய் யோசித்தாள். அவளுக்கு இங்கே வந்ததுமே அவுட் ஹவுஸ், சாப்பாடு என்று எல்லா ஏற்பாடுகளும் அவள் கேட்காமலே கிடைத்ததை நினைத்து அவளுக்கு சந்தோச படுவதா இல்லை இவ்வளவு காதலுக்கு நான் என்ன செய்தேன்? அவனை காயம் மட்டும் தானே படுத்தியுள்ளேன்' என்று நினைத்து அவள் வருந்த, விவான் தான் அவள் மனதைப் படித்து அவளை அணைத்தான். அவனை விலக்கியவள் நிமிர்ந்து ராஜசேகரைப் பார்க்க,
புரிந்தவர், "முதல்ல அவன் இதைப்பற்றி என்கிட்டே சொல்லும் போது சத்தியமா எனக்கு இதுல உடன்பாடில்லை. இருந்தும் அவன் சந்தோஷத்துக்காக உன்னை இங்க வரவெச்சேன். ஆனா உன்னை இந்த 10 மாசமா பார்த்ததுல சத்தியமா சொல்றேன் எனக்கு இதுல சம்மதம். விவான் எங்களுக்கு முதல் குழந்தை இல்ல. அவனுக்கு முன்னாடி மூணு முறை எங்களுக்கு மிஸ்கரேஜ் (கருச்சிதைவு) ஆகிடுச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு தான் விவான் கிடைச்சான். சோ அவன் சின்ன வயசுல இருந்து ரொம்ப செல்லம். அதும் அவன் அம்மாக்கு அவன் என்ன சொல்றானோ அது தான் வேத வாக்கு. அவன் உன்னைப்பற்றி சொன்னதும் யோசிக்காம உன் சந்தோசம் தான் முக்கியம்னு அவங்க அம்மா ஓகே சொல்லிட்டா. ஆனா எனக்கு தான் உண்மையிலே இதுல சந்தோசம் இல்ல. அப்புறோம் எல்லாமும் எங்களுக்குத் தெரியும். அதும் இப்போ இவ்வளவு நாளா உன்னைப் பார்த்ததுல எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நித்யாம்மா"
நித்யாவிற்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னமும் அவள் ஆச்சரியத்தில் இருந்து வெளிவரவில்லை. 'இவ்வளவு பெரிய பணக்காரன் சகல வசதிகலும் கொண்டவன். அவன் கண்ணசைத்தால் அவனுக்கு சேவகம் செய்ய நூறு பேர் வருவார்கள் அவனா எனக்காக தினம் தினம் இரவு காவல் வேலை பார்த்தான்?இவ்வளவு லவ் பண்ண முடியுமா? அவளுக்கு இன்னமும் நம்பிக்கை இல்லை'
"சரிடா நாங்க போறோம் நீங்க லன்ச்க்கு வாங்க. மதியம் பேசலாம். நித்யாம்மா நீ பயப்படாத உங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்க வேண்டியது விவான் அப்பா வேலை" என்ற லலிதா அம்மா திரும்பி ராஜசேகரைப் பார்த்துவிட்டு சென்றார். அந்த பார்வையின் அர்த்தம் சம்மதம் வாங்க வேண்டும் என்பது தான். அவரோ திருதிருவென விழித்தார். நித்யாவை அழைத்துக்கொண்டு விவானும் சென்றுவிட்டான்.
"அப்பா சான்சே இல்ல. என்னால இன்னமும் நம்ப முடியில"- மௌனி
"சத்தியமா அப்போ என்னாலையும் அதை நம்ப முடியில. அதை நம்பவே எனக்கு கொஞ்ச நேரம் ஆச்சு அப்பா..." ஏனோ இப்போ நடந்ததைப்போல பிரமிப்பில் மூச்சை இழுத்துவிட்டாள் நித்யா.
"அப்புறோம் என்ன டும்டும்டும்மா?"
"அங்க தான் ட்விஸ்ட். எங்க வீட்டுல தான் பிரச்சனையே..."(பயணங்கள் முடிவதில்லை)
 
Top