Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 14

Advertisement

praveenraj

Well-known member
Member
ஜிட்டு இதைச் சொல்ல நித்யாவும் பழைய நினைவுகளுக்குச் சென்றாள்.
அன்று கொஞ்சம் குட்டையாக கையை வயிற்றில் வைத்துக்கொண்டு முனகிக்கொண்டே வந்தவனைப் பார்த்ததும், "என்ன ரொம்ப வலிக்குதா?"
"ஆமா டாக்டர். ரொம்ப வலி, பிரசவ வலி மாதிரியே இருக்கு டாக்டர்"
"சூப்பர் அப்போ பிரசவம் பார்த்திட வேண்டியது தான்" என்றவள் "எத்தனை மாசம்?"
ஏற்கனவே செம வயிறு வலியில் இருந்தவன் இவளின் இந்த எள்ளல் பேச்சில் இன்னும் காண்டாகி, "உங்க கால்ல வேணுனாலும் விழுறேன் டாக்டர் கொஞ்சம் காப்பாத்துங்க ப்ளீஸ்"
"உயிர் மேல அவ்வளவு ஆசையா?"
"பிஸ் பிஸ்" என்று அவளை கண்ணடித்து கிட்ட அழைத்தான் ஜிட்டு. முதலில் அவனின் செய்கையைத் தவறாக புரிந்துகொண்ட நித்யா முறைக்க,
"ஐயோ கொஞ்சம் கிட்ட வாங்க" அவளும் தயங்கியே கிட்ட வர,
"என்ன ஆனாலும் சரிங்க கன்னிப்பையனா மட்டும் செத்துடவே கூடாதுங்க. ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க" என்று கெஞ்ச, ஏனோ அவனின் பேச்சு நடவடிக்கை எல்லாம் பார்த்தவள், 'இவன் உண்மையிலே 'டம்மி பீஸ்'தான் போல' என்று நினைத்து அவனை கட்டிலில் படுக்கவைத்து சட்டையை விலக்க அவன் வயிறோ பானையைப் போல வீங்கி இருந்தது.
"என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கு? இதென்ன தொப்பையா? இல்ல வயிறா?"
"வயிறு தாங்க வயிறுதாங்க"
கொஞ்சம் செக் செய்தவள், "என்ன சாப்பிடீங்க?"
"இட்லி தான் சாப்பிட்டேன்"
"இட்லி சாப்டேவா இப்படி ஆச்சு?"
அதுவரை அங்கே வெறும் பிசிக்கலாக மட்டும் இருந்தவன் இப்போது தான் முதல் வார்த்தையை உதிர்த்தான், "13 இட்லி சாப்பிட்டா இப்படி தாங்க இருக்கும்"
இதுவரை பேசாதவன் இப்போது பேச அவனை இப்போது தான் பார்த்தாள் நித்யா.
"ஓ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாளா?" என்று எல்லோரும் மீண்டும் நித்யாவை வார, ஏனோ வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.
"நித்யா உனக்கு வெட்கமெல்லாம் கூட படத்தெரியுமா நித்யா?" என்று மிரு, ஹேமா எல்லோரும் வார , இன்னும் சிவந்துப்போனாள் பெண்ணவள்.
"அப்புறோம் என்ன ஆச்சு சொல்லுங்க சொல்லுங்க ப்ளீஸ்?" - மௌனி
"வாட் 13 இட்லியா? என்ன சொல்றீங்க?" என்றாள் நித்யா.
"யாரு அதிகமா சாப்பிடுறாங்கனு ஒரு பெட் எங்களுக்குள்ள, அதுல ஜெயிச்சான் அதுனால..." என்று விவான் இழுக்க,
"ஏன்டா டேய் இது என்ன வயிறுனு நெனச்சியா இல்ல குப்பைத் தொட்டினு நெனச்சியா? அறிவில்லை?" அவளோ அவனை கண்டமேனிக்குத் திட்ட,
"நீங்க என்ன வேணுனாலும் திட்டுங்க ஆனா வயிறு வலியை குணப்படுத்திட்டு திட்டுங்க ப்ளீஸ்"
"பேசாம வயித்தை கிழிச்சு எல்லாம் வெளிய எடுத்துடலாமா?"
"ஏங்க வீட்டுக்கு ஒரே பையன்க" என்றவன் அப்போதுதான் திரும்பி தன்னுடன் வந்த விவானைப் பார்த்தான்.
விவானோ இவன் யாரோ என்ற எண்ணத்தில் கன்னத்தில் கையை வைத்து நித்யாவை இன்ச் இன்ச்சாக ரசித்துக்கொண்டிருந்தான். என்ன சொல்ல சில பேரைப் பார்த்ததும் ஏன் எதற்கு என்ற காரணமே இல்லாமல் பிடித்துபோகுமல்லவா? அப்படித் தான் இருந்தது விவானுக்கும் நித்யாவைப் பார்த்தது முதல். அவனெண்ணமெல்லாம் நித்யாவின் மீதே இருக்க தான் எதற்கு வந்தோம் என்பதையே மறந்து போயிருந்தான். நித்யா வயித்தை கிழித்துவிட வேண்டியது தான் என்றதற்கு கூட எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த விவானைப் பார்த்து,
"டேய் எப்பா, இப்படினு தெரிஞ்சிருந்தா நான் வேற யாரையாவது கூட்டிட்டு வந்திருப்பேனே? ஏழுமலையானே என்னை இதே உடம்போட இதே உயிரோட இந்த ஹாஸ்பிடல்ல இருந்து வெளிய கூட்டிட்டுப் போயிடு டா" என்று புலம்ப,
"ஏய் ச்சி வாயை மூடு. மாத்திரை கொடுக்குறேன் சரியாகணும் இல்லைனா எனிமா தான் கொடுக்க வேண்டிவரும். பார்த்துக்கோ"
"எனிமானா?"
"உன் ரெக்டலத்துல (rectum ) ப்ளுய்டு விட்டு"
"ரெக்டம்ன்னா?"
முறைத்தவள், "உன் அனஸ் (anus ஓட, anus நா என்னனு தெரியுமா?"
அவனுக்கு ஒருமாதிரி ஆக, "ஏங்க இப்படியெல்லாம் இண்டீசெண்டா பேசாதீங்க"
"உன்னை..." என்றவள் கோவத்தில் அவனின் தலையில் கொட்டினாள்.
"டேய் விவானு விவானு என்னை ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போடா" என்று அவன் புலம்ப, வேறு வழியில்லமல் அவனுக்கு மயக்க ஊசியைச் செலுத்தினாள்.
கண்கள் சொருவ, "மச்சான் நான் சாக போறேன். என்னை கொலைபண்ணிட்டா. என் சாவுக்கு இவ தான் காரணம்" என்று சொல்லி அவன் மயங்க, அப்போது தான் சுயம் பெற்றான் விவான்.
"டேய் ஜிட்டா டேய் ஜிட்டா? என்னங்க பண்ணீங்க என் ஃப்ரண்டா? அவன் மயங்கிட்டான்"
"என்ன இவ்வளவு நேரம் கோமால இருந்தீங்களா?"
இப்போது அவளின் ஐ கான்டேட்டில் மீண்டும் தொலைய பார்த்தவன் அவள் விலகிச் செல்ல வேகமாய் சென்று அவளின் கரம் பற்றினான்,
திடுக்கிட்டு அவள் திரும்ப,
"எனக்கு ஒரு பதில் சொல்லிட்டுப் போங்க"
"டேக் ஆப் யூவர் ஹேண்ட்ஸ்" அவனும் கையை எடுக்க,
"நித்யா இன்னொரு பேசென்ட் வந்திருக்காங்க" என்று நர்ஸ் சொல்ல, நித்யா நல்ல பேரு என்று நினைத்தவன் அப்போது ஜிட்டனைப் பார்த்து, மீண்டும் அவளை நோக்கி சென்றான். அவள் வேறு ஒரு பேஷண்டை பார்க்க இவனும் அவள் பின்னே நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"உங்களை யாரு இங்க வரச் சொன்னது?"
"சாரிங்க, அவனுக்கு என்ன ஆச்சு?"
"அங்க வெய்ட் பண்ணுங்க வரேன்" என்று அவள் சொல்ல இவனும் வெளியே நின்றான். அப்போது அவளின் போன் எடுத்துக்கொண்டு வந்த நர்ஸ் அவனிடம் கொடுத்துச் சென்றதும் அவன் பார்க்க நிறைய மெஸேஜ் நோட்டிபிகேஷன்ஸ் எல்லாம் வந்தது. சரியாக அவன் லாக் பண்ண போக, "ஹேப்பி பர்த்டே நித்யா. நித்யஸ்ரீ" என்று மெசேஜ் பார்த்தவன், மீண்டும் திரும்பி அவளைப் பார்க்க அவளோ கர்மசிரத்தையாய் அந்த பேஷண்டை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மனம் எங்கும் அலையடித்தது மட்டும் நிச்சயம்.
அவள் வர அப்போதும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அருகில் வந்தவள்,
"மிஸ்டர் யாரு அவன் சுத்த பைத்திய காரனா இருக்கான்? 13 இட்லி திண்ணு இருக்கான்? நைட் நேரத்துல, தொனதொனனு பேசிட்டே இருந்தான்.அதுதான் கொஞ்சம் மயக்க ஊசி போட்டன். விழிக்கட்டும் சரியாகிடும். பார்க்கலாம்" என்று அவள் போன் கேட்க,
"விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே நித்யா" என்றான் விவான்.
சீரியஸாக பேசிக்கொண்டிருந்தவள் முன்பு இப்படி பேசியவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுத் தான் போனாள் நித்யா.
இருந்தும் கர்டெசிக்காக "தேங் யூ"
"வெறும் தேங்க்ஸ் தானா?"
"பின்ன என்ன வேணும்?"
"இவ்வளவு அழகா இருக்கீங்க ஒரு காஃபீ குடிப்போமா?"
சிரித்தவள், "சரி வாங்க" என்று அவனுடன் சென்றாள். (அவளுக்கும் ஒரே தலை வலி அதனால் தான் ஓகே சொன்னாள்)
அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், "கமான் சொல்லுங்க"
"என்ன?"
அவனின் நடவடிக்கைகளை வந்ததிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்தவள் "ஐ லவ் யூ" என்றதும்,
அவன் ஆச்சரியப்பட,,
அவன் தவறாக எடுத்துக்கொண்டதை நினைத்து உடனே மறுக்கும் விதமாய், "அது தானே சொல்லப் போறீங்க? என்ன கண்டதும் காதலா? கூட கூட்டிட்டு வந்தவன் அந்த அலறு அலறுறான் விடாம என்னையே சைட் அடித்துக்கிட்டு இருக்க?"
"அவ்வளவு அழகுங்க நீங்க"
அவனின் இந்த பதிலில் அவளையே அறியாமல் வெட்கம் வர, கட்டுப்படுத்திக்கொண்டு, "பேரு என்ன?"
"விவான். எஞ்சினீரிங் செகண்ட் இயர்"
"உங்க பேரு இல்ல மிஸ்டர், பேசென்ட் பேரு"
"அந்த நாயி பேரா? ஜிட்டு"
"என்ன பேரு இது ஜிட்டு பிட்டுனு?"
"நல்லா காமெடி பண்றீங்க"
முறைத்தவளைக் கண்டு, "ஜிட்டேந்திரன்"
"செகண்ட் இயர்னு தானே சொன்ன?"
"ஆமா""
நான் மெடிசின் முடிச்சிட்டு இன்டெர்ன்ஷிப் இருக்கேன். உன்னைவிட மூணு வயசு பெரியவ தெரியுமா?"
"சோ வாட்? சச்சின் அஞ்சலி, அபிஷேக் பச்சன் ஐஷ்வர்யா ராய், ஏன் நம்ம தனுஷ் ஐஸ்வர்யா வரை முன்னுதாரணம் நெறய பேரு இருக்காங்க. சோ நோ ப்ரோப்லேம்"
"நிறைய சினிமா பார்ப்பியோ?"
"லுக். நான் ஐ லவ் யூ எல்லாம் சொல்ல மாட்டேன்" என்றதும் அவள் கொஞ்சம் மூச்சை இழுத்துவிட,
"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் நித்யா? என்ன சொல்ற?"
அவனின் கேள்வியில் செம கடுப்பானவள், "அவுட். போடா வெளிய"
என்னமோ மூட் அவுட் ஆகிவிட்டாள். தலையில் கையை வைத்து அமர, அவள் நாசிக்கு காபியின் நறுமணம் வர, கண்களைத் திறந்தாள். அவள் முன்னே காஃபி இருக்க அருகே விவான் இருந்தான்.
அவள் பேச வாயை எடுக்க, "ப்ளீஸ் உன் பர்த் டே அதுவுமா நான் உங்களை மூட் அவுட் பண்ண விரும்பல. காஃபீ குடிங்க"
அவளும் எடுத்து பருகினாள். கொஞ்சம் ரிலேக்ஸ் ஆனவள் "தேங்க்ஸ்"
"நோ மென்ஷன்"
"காஃபீக்கு இல்ல உன் பர்த் டே விஷுக்கு"
அவன் முகம் புன்னகை பூக்க,
"வெய்ட் வெய்ட் வெய்ட். உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் இல்ல. சும்மா தான் சொன்னேன். இதுனால வீணா ஆசையை வளர்த்துக்காத"
"நோ ப்ரோப்லேம் நித்யா. உன்னைப் பார்த்ததுமே எனக்கு பிடிச்சது. அதுனால நான் சொல்லிட்டேன். ஆனா உனக்கு என்னை இப்போ தானே தெரியும். பொறுமையா பழகலாம்"
"விவான்? ரைட்?"
"பார்த்தியா ஒரே தடவை சொன்ன என் பேரை கரெட்டா ஞாபகம் வெச்சியிருக்க. தட்ஸ் ஆல்"
"லுக் எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. போதுமா?"
"பொய் சொல்லாத நித்யா"
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய,
"எப்படி சொல்றே?"
"நான் இருக்கும் போது உன்னை யாரும் தூக்கிட்டு போக விட மாட்டேன்"
"ஹ்ம்ம் போடா கடுப்படிக்காத. பார்த்தானாம் லவ்வாம். போய் அரியர் வெக்காம டிகிரி வாங்குற வழியைப்பாரு"
"யூ டோன்ட் ஒர்ரி நித்யா நான் நல்ல ரேங்க் ஸ்டுடென்ட் தான்"
கோவம் கொண்டவள், "வா அந்த நாயை டிஸ்சார்ஜ் பண்ணா நீ போயிடுவ இல்ல? வா"
"இன்று போய் நாளை வருவேன்"
அங்கே செல்ல அவனுக்கு கொஞ்சம் நினைவு திரும்ப, கண்களைத் திறந்தவன்,
"விவானு இது சொர்க்கமா இல்லை நரகமா டா?"
"தேவதைகள் இருக்குமிடம் நிச்சயம் சொர்கமே" என்று நித்யாவைப் பார்த்தபடியே விவான் சொல்ல, நித்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது. ஏனோ தெரியவில்லை விவானிடம் முழுக்கோபத்தை அவளால் காட்ட முடியவில்லை. ஒருவேளை இதே வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவள் ருத்திர தாண்டவம் ஆடியிருப்பாள். ஆனால் இன்று அமைதியா இருந்தது அவளுக்கே ஆச்சரியம் தான். 'இன்று என் பிறந்த நாள் சோ அவனைத் திட்ட முடியவில்லை' என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் நாளை முதல்?
"ஐயோ அக்கா அப்போ உங்களுக்கும் லவ் அட் பர்ஸ்ட் சைட்டா?"- இதித்ரி
"கண்டிப்பா இல்ல. நான் அவன் காதலை உணந்ததே வேற ஒரு சமயத்துல தான். இன்னும் சொல்லப் போனால் அது நடந்து ஒரு 6 மாசத்துக்கு அப்புறோம் தான் ஐ பெல்ட் தட் ஐ ஹேவ் சம் பீலிங்ஸ் டூவேர்ட்ஸ் ஹிம்" (எனக்கும் அவன் மேல் அதே உணர்வு இருக்கிறது என்று நான் உணர்ந்தது)
"அப்புறோம் என்ன ஆச்சு? மறுநாளும் விவான் வந்தாரா?" - மௌனி
"ஏம்மா ஒருத்தன் சீரியஸா ஹாஸ்ப்பிட்டல அட்மிட் ஆயிருந்தானே அவன் என்ன ஆனானு உங்கள்ள யாருக்குமே கேட்கத் தோணுல தானே?"- ஜிட்டன்
"அது தான் குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கியே அப்புறோம் என்ன?" - இதித்ரி
"அடுத்த நாளும் அவன் இதோ இதை (ஜிட்டுவை சுட்டிக் காட்டி) கூட்டிட்டு வந்தான். நான் ஒன்னும் பெருசா கண்டுக்கல. அப்போ தான் அன்னைக்கு ஒரு நாள் நைட் இவன் வரும் போது ஒரு எமர்ஜென்சி கேஸ். ஆக்சிடென்ட், நிறைய பிளட் லாஸ்..."
"செக் பண்ணி பார்த்தா ரேர் பிளட்" (பாம்பே பிளட் குரூப் இது மிகவும் அரிதிலும் அரிதான ரத்த வகை)
"அந்த பிளட் எங்க கிட்ட ஸ்டாக் இல்ல. அப்போ தான் எனக்கு இவன்(விவான்) ஞாபகம் வந்தது. இவனை கூப்பிட்டு பிளட் கொடுக்கச் சொன்னேன்"
"வெய்ட் வெய்ட் வெய்ட். விவான் பிளட் குரூப் எப்படி உங்களுக்குத் தெரியும்?"- பாரு
"அதுவா? எங்க காலேஜ்ல எல்லா டிபார்ட்மெண்டும் இருக்கும், சோ நாங்க அடிக்கடி பிளட் கேம்ப் (blood camp) போடுவோம். அப்போ தான் இன்ஜினியரிங் காலேஜ்ல கேம்ப் போட்டோம்"
"இவங்க எல்லோரும் பிளட் கொடுக்க வந்தாங்க (ஆக்சுவல்லி பிளட் கொடுத்தா அன்னைக்கு od தருவோம். கூடவே ஜூஸ் பிஸ்கட் சர்டிபிகேட் எல்லாமும் கிடைக்கும்) அப்போ தான் நாங்க பிளட் குரூப் தெரியாதவங்களுக்கு செக் பண்ணுவோம். அப்போ விவான் வந்து எனக்கு ஏதோ புது மாதிரி பிளட் குருபாம். சின்ன வயசுல டாக்டர் சொன்னாருனு என்கிட்டே சொன்னான். அப்போ தான் நாங்க செக் பண்ணிட்டு விவானு குரூப்பை கன்பார்ம் பண்ணிட்டு அப்போதைக்கு அவனை பிளட் கொடுக்க வேணாம்னு சொல்லி அனுப்பி வெச்சோம். ஏன்னா தேவை படும் போது வாங்கிக்கலாம்னு. ஓகே வா பாரு?"
"டன். கண்டினு"
"அன்னைக்கு நைட் அவனை பிளட் கொடுக்க வெச்சேன். எனக்கு அன்னைக்கு எங்க சீப் டாக்டர் கிட்ட இருந்து பாராட்டு கிடைச்சது. அதை அவனுக்கு ஷேர் பண்ண பிளட் கொடுத்திட்டு இருந்த அவன்கிட்ட போனேன்"
"அப்போ லவ் சொல்லிடீங்களா?"
"நான் அவனை அப்போ லவ்வே பண்ணலியே. அப்போ தான் அவனும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ப்ரெண்ட்ஸ் மீன்ஸ் என் க்ளோஸ் சர்க்கிள்ல அவன் வந்தான்"
"ஓ திட்டி அனுப்பிச்ச ஆளு இப்போ ஃப்ரண்ட். சூப்பர் அடுத்து?"
"அன்னைக்கு ஒரு நாள் தான் அவன் லவ்வை நான் உண்மைனு நம்புன நாள்"
"என்னாச்சு?"
"நாங்க கொஞ்சம் நல்லா ஃப்ரண்ட்ஸ் ஆனோம். அவன் மூலமா எனக்கு துவாரா, இளங்கோ, மிரு, இதோ இவன் (ஜிட்டு) எல்லோரும் கொஞ்சம் க்ளோஸ் ஆனோம். அடிக்கடி நானும் இவனுங்க கூட வெளிய சுத்த ஆரமிச்சேன். ட்ரீட், பர்த் டே சில சமயம் மூவிஸ் கூட. அப்போகூட எனக்கு விவான் மேல எந்த பீலும் வரல.
"ஐயோ அப்பயும் வரலையா? அப்போ விவான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க போலயே?" -மௌனி
"இல்ல நிறைய கஷ்டப்படுத்தியிருக்கேன்" ஏனோ இப்போது நினைத்தாலும் நித்யாவிற்கு தன் மீதே கொஞ்சம் கோவம் வந்தது.
"நான் இவங்க கூடவே சுற்றுவதைப் பார்த்த என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் என்னைய கேலி பண்ணுவாங்க. அதுல அபர்ணா முக்கியம். என் க்ளோஸ் ஃப்ரண்ட். என் ரூம்மெட்டும் கூட"
"ஏனோ அவ தான் என்னைய அடிக்கடி கேட்டுட்டே இருப்பா, நீ அவனை லவ் பண்றயா நித்யானு?" நானும் அவ கேட்கும் போதெல்லாம் சிரிச்சு இல்லனு சொல்லிடுவேன். அவ ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருந்தா. மெடிக்கல் ஸ்டுடென்ட் தான். எங்க செட். அடிக்கடி அவன் கூட வெளிய போயிட்டு வருவா. என்னமோ கொஞ்ச நாளா அவ டல்லா இருந்தா"
"அன்னைக்கு ஒரு நாள் சும்மா பேசும் போது என்னைய ரொம்பவும் குழப்பிவிட்டுட்டா. இந்த பசங்களே இப்படித்தான் சும்மா சும்மா நம்ம பின்னாடி சுத்துவானுங்க, அவனுங்க நோக்கமே வேற. ஆல் தெய் வாண்ட் இஸ் எ பிஸிக்கல் ரிலேஷன் ஷிப் (உடல் ரீதியான தேவைகள்) கேர்புல்லா இருன்னு என்னைய கொஞ்சம் கொழப்பி விட்டுட்டா"
"விவானும் என் பின்னாடியே தினம் தினம் வருவான். பாவம் அவன். நான் எப்பயும் நைட் ஷிபிட் தான் ஒர்க் பண்ணுவேன். சோ ஈவினிங் 6 மணிக்கு போனா நைட் 2 மணிக்கு தான் என் ஷிபிட் முடியும். எங்க ரூம் வந்து ஹாஸ்பிடல்ல இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். அதுல முக்கால் வாசி எங்க கேம்பஸ்குள்ளேயே இருக்கும். சோ நான் தைரியமா தான் வந்துட்டு போவேன். ஆனா அந்த ரெண்டு மூணு மாசமா எனக்கு தினம் துணைக்கு ஒருத்தன் வருவான்"
"பார்ரா அவ்வளவு லவ்வா விவானுக்கு?"
"ஆம். அவங்க ஹாஸ்டல் வாட்ச்மேனை கரெக்ட் பண்ணிட்டு சரியா 2 மணிக்கு ஹாஸ்பிடல் வருவான். நானும் டூட்டி முடிஞ்சு வெளிய வருவேன், என்கூடவே பொடிநடையா என் ரூம் வரைக்கும் வந்து என்ன விட்டுட்டு திரும்ப ரூமுக்கு போவான்"
"எது நைட் ரெண்டு மணிக்கா?"
"ஆமாம்." ஏனோ நித்யா முகத்தில் ஒரு கர்வம்,
"எனக்கும் அவனை நெனச்சா கொஞ்சம் பாவமா இருக்கும். எனக்காக இப்படி மெனக்கெடுறானேனு ஏன்னா அப்போ கூட எனக்கு அவன் மேல எந்த ஒரு பீலும் வரல"
"அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் எப்பயும் போல பேசிட்டு வந்தோம், அப்போ பார்த்து நான் சும்மா இல்லாம, "விவான் உனக்கு எதுக்கு என்னைய பிடிக்கும்னு?" கேட்டேன்"
"சத்தியமா காரணம் தெரியில நித்யா. ஆனா எனக்கு உன்னைப் பிடிக்கும் அவ்வளவு தான்."
"இல்ல ஏதாவது ரீசன் இருக்கணுமே? சொல்லு"
"யோசித்தவன், சிரித்துக்கொண்டே, நீ அவ்வளவு அழகு"
"ஓ"
"என்ன ஓ?"
"அழகா இருக்கறதுநாலா தான் என் பின்னாடி சுத்துற. அப்படித்தானே?"
"அப்படினும் சொல்ல முடியாது நித்யா. எனக்கு உன்னைப் பிடிக்கும்"
"எவ்வளவு நாளைக்கு?"
"புரியில?"
"என் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ற வரைக்குமா?"
"என்ன சொல்ற?"
"இல்லடா இந்த பசங்க எல்லாம் பொண்ணுங்க பின்னாடி சுத்தி அவங்களை அடைஞ்சிட்டு அப்புறோம் விட்டுட்டு ஓடிடுவாங்களே அப்படியா?" என்று சாதாரணமாகத் தான் கேட்டாள்,
அதுவரை அவள் கூடவே வந்துக்கொண்டிருந்தவன் அப்படியே நின்றுவிட்டான். அவனைக் காணாமல் திரும்பிய அவள் அங்கே அவன் உடைந்து போன முகபாவத்தில் நின்றுக்கொண்டிருக்க ஏனோ அவன் கண்கள் கலங்கியிருந்தது,
"ஏ விவான் ஏன்டா நின்னுட்ட? வா" என்று நெருங்கி அவனை அவள் தொட அவள் கையை உதறிவிட்டான்,
"சோ அப்போ இவ்வளவு நாள் இவன் எப்போ அந்த மாதிரி பண்ணுவான்னு பயந்திட்டு இருந்த ரைட்?"
"டேய் இல்லடா நான்..."
"ஏன் நித்யா இந்த மூணு மாசமா நான் உன்கூட பழகுறேன் என்மேல உனக்கு ஒரு பேசிக் டிரஸ்ட் (trust -நம்பிக்கை) கூட வரல இல்ல? அப்போ இவ்வளவு நாள் என்கூட நீ சகஜமா இருக்கற மாதிரி நடிச்சிட்டு இருந்திருக்க அப்படி தானே?"
நித்யாக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனெனில் இது நாள் வரை அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்ததில்லை. ஆனால் தன் தோழி சொன்னதில் இருந்து எதற்காக இவன் தன்னை விரும்புகிறான் என்று தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருந்தது உண்மை. ஆனால் இப்படி அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஏதோ ஜாலியா அவனை கிண்டல் செய்வதற்காக அவள் கேட்டுவிட்டாள். சொல்லப்போனால் சந்தேகம் இல்லை. ஆனால் எதற்கும் தீர்த்துக்கொள்ளலாம் என்று தான் இதைக் கேட்டாள். ஆனால் அவன் இவ்வளவு சீரியஸான இதை எடுத்துக்கொள்வான் என்றோ இல்லை இது இவ்வளவு அபத்தமான கேள்வி என்றோ அவளுக்கு சட்டென தோன்றவில்லை.
ஏனோ இப்போது விவானை நேருக்கு நேராக பார்க்கவே நித்யாவிற்குத் துணிவில்லை. அவள் தயங்கி, "இல்ல விவா அது..."
"போதும் நித்யா. நீ என்னை லவ் பண்ணலனாக் கூட பரவாயில்லை உன்கூட இப்படி கொஞ்சம் டைம் ஸ்பென்ட் ச்சீய் இந்த மாதிரி கொஞ்சம் நடந்துட்டே பேசினா எனக்கு என்னமோ உலகத்தையே ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோசம் கிடைக்கும். அதுமில்லாம நீ தினமும் நைட் டூட்டி தான் பார்க்கற. நம்ம காலேஜ் கேம்பஸ் பரவாயில்ல, ஆனா அந்த தெரு கொஞ்சம் மோசம். குடிகாரனுங்க இருப்பானுங்க. என்னைக்கு அந்த டெல்லி நிர்பயா ரேப் பத்தி படிச்சேனோ அப்போ இருந்து எனக்கு ஒரு பயம். நீ வேற பெரிய தைரியசாலின்னு நெனச்சிட்டு தனியா போவ, ஆனா உன்னை நெனச்சிட்டு நீ பத்திரமா போனியான்னு நெனச்சி நெனச்சி எனக்கு தூக்கமே வராது. அதுக்காக டெய்லி நைட் 2 மணிக்கு அலறாம் வெச்சிட்டு வாட்ச்மேனுக்கு காசு கொடுத்துட்டு உன்கூட வந்து உன்னை பத்திரமா வீடு வரை விட்டுட்டு போறதுல ஒரு சந்தோசம். நிம்மதி." ஏனோ அவன் சுக்கு நூறாய் உடைந்திருந்தான்.
நித்யாவிற்கு தான் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது, அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்து அவனை நெருங்கி அவன் கையைப் பிடிக்க,
அதை உதறியவன், "அன்னைக்கு உன்ன முதமுதல்ல பார்த்த அப்போ தெரியாம உன் கையை பிடிச்சதுக்கே நீ அவ்வளவு முறைச்ச, அதுல இருந்து நான் உன்ன நெருங்கி கூட வரத்தில்ல"
"இல்ல விவான் நான் அதை மீன் பண்ணல, என் ஃப்ரண்ட் தான் என்னைய குழப்பிட்டா. ஐ அம் சாரி விவான்"
அவன் ஏனோ அங்கிருந்த சேரில் அமர்ந்தவன், (பார்க் மாதிரி வழிநெடுக சேர் இருக்கும்) "ப்ளீஸ் என் முன்னாடி நிக்காத போயிடு. அண்ட் ஒரே ஒரு ரெக்வஸ்ட், இனிமேல் நைட் ஷிபிட் வராத, ஏன்னா நான் இனி உனக்குத் துணையாய் வர மாட்டேன். போ"
நித்யாவிற்கு தான் ஒரு மாதிரி ஆகா அவனை நெருங்க,
"போ நித்யா என் முன்னால நிக்காத ப்ளீஸ்... எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா இருக்கு. போயிடு" என்று அவளைப் போகச் சொன்னயவன் அங்கேயே இரவு தூங்கிவிட்டான்.
ரூம் போன நித்யாவிற்கு தான் மிகுந்த மனவுளைச்சலாக இருந்தது. அவ்வாறு சொன்ன போது அவன் கண்களில் தெரிந்த வலி ஏனோ அவளுக்கும் ரொம்ப வலித்தது. ஒரு நல்ல ப்ரெண்ட மிஸ் பண்ணிட்டமோனு அவளுக்கு ரொம்ப குற்றயுணர்ச்சியாக. நாளை அவனிடம் பேசி மன்னிப்பு கேட்கலாம் என்று நினைக்க மறுநாள் முதலவன் வருவதையே நிறுத்திவிட்டான்.
இவள் எவ்வளவோ மெசேஜ் பண்ணியும் அவனிடம் இருந்து பதிலில்லை . அடுத்த நாள் இரவு அவள் போக அங்கே அந்த தனிமை அவளுக்கு அவள் தவறை அதிகம் சுட்டிக்காட்டியது. வழக்கமாய் உறக்கத்திலிருக்கும் வாட்ச் மேன் அன்று விழித்திருந்தார்.
"என்னமா உன் கூட தினமும் வரும் பையன் ஊருக்கு போயிட்டானா?'
அவள் புரியாமல் பார்க்க,
"இல்லை நான் வெளிய போறேன். இனி தினமும் நான் நைட் போன் பண்றேன், அந்த பொண்ணு ரூம் போனதும் எனக்கு ஒரு போன் பண்ணிடுங்கனு சொன்னான். அதுதான்" என்று அவர் சொல்ல அவருக்கு போன் வந்தது,
"ஆம் இப்போ தான் போறாங்க" என்றதும் அவள் ஏனோ கண்ணீரோடு ரூம் போனாள்.
விவான் நித்யாவின் போர்சன் பிடிக்கிறதா? இதொரு மாறுபட்ட முயற்சி அதான். இன்னும் ரெண்டு எபில இவங்க லவ் முடிஞ்சிடும். நன்றி
 
Top