Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்சத்திர காட்டில்...(E1)

Advertisement

Yagnya

Tamil Novel Writer
The Writers Crew
283நட்சத்திர காட்டில்...


"யேச்சீ!!!" என்ற சிணுங்கலுடன் தரையில் ஒரு மிதி மிதித்தபடி பாவாடையை சற்று உயர தூக்கியவளாய் படிகளில் துள்ளி ஏறிக்கொண்டிருந்தாள் அந்த சிவப்பு பாவாடைக்காரி.

அவளை கடந்தவளாய்.. அவள் செயலில் ஏற்பட்ட சிறு முறுவலுடன் அச்சிறு வீட்டினுள் நுழைந்தேன்.

கதவு திறந்தே கிடக்க முற்றத்தில் செருப்பை கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். அன்னம்மாவின் குரல் அடுப்பங்கரையிலிருந்து ஒலித்தது.

அந்த கொல்லம் செங்கல் தரையில் சேலையை இழுத்து செருகியவளாய் அடுப்படியில் தரையில் கால் நீட்டி அமர்ந்தவளாய் காய் நறுக்கிக் கொண்டிருந்தாள்.

"ஏட்டி என்ன அங்கயே நின்னுட்ட??" என்றவளின் குரலில் அடுப்படியினுள் நுழைந்த கணம் என் பார்வையை விழுங்கிக் கொண்டது அந்த கூரிய வளைவுடன் நின்ற அறுவாமனை!!

அதையெடுத்து சமையல் மேடைக்கடியில் இருந்த அம்மிக்கல்லின் மேல் வைத்தவள் ஒதுங்க வைக்கத் துவங்கினாள்.

அவளருகே அமர்ந்த பின்னரே உறைத்தது வெளிக்கதவை சாத்தாமல் வந்துவிட்டது.

'தொறந்துதான் கெடந்ததோ??'

"அனு! ஏட்டி அனு!"

"ம்ம்ம்.." என்ற சிறு முனகலே அவளிடம்.

நான் எழுந்துவிட சட்டென படிகிறது அவள் கவனம் என்னில்!!

அவள் பார்வைக்கு பதிலாய்,

"கதவு தொறந்தே கெடக்கு!! திருட்டுப்பய பயம் கெடயாதா??" என்றேன் ஏனெனில் அவ்வீட்டின் அமைப்பே அப்படிதான். வாசலில் இருந்து பின்கட்டுவரை நேராய்..வரிசையாய் நிற்பதால் அடுப்படியிலிருந்து வாசல்கதவு மிக தெளிவாகவே தெரியும்.

"அது கெடக்கட்டும்!! திருட்டுப்பயலா?? நீ வேற.." என்றவளின் முகமும் குரலும் நொடிப்பொழுதில் மாறின.

'அதென்ன அது?? அவ மொகத்துல... பயமா??'

ஏனெனில் அன்று காலையில் அக்கிராமத்தினுள் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே உள்ளுக்குள் சிறு நெருடல்தான்! ஏனோ எல்லாரிடமும் எதுவோ வித்தியாசமாகப்பட்டது.. நன்றாக பேசிக்கொண்டிருப்பவரும் திடீரென அமைதியாவது வினோதமே!!

அவளை துருவ எண்ணினேன்.

"அப்ப வேறெதுவாது பயமிருக்கா என்ன??" என்றதுதான் தாமதம். அதிர்ந்து நிமிர்ந்தவளின் பார்வையில் யப்பாஹ்!!

"என்னாச்சு அனு??" அதற்குமேல் என்னாலும் தொடர முடியவில்லை இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை.

பெருமூச்சொன்றை வெளியிட்டவள்,

"கருப்பன் வேட்டைக்கு போவும்போது வழில போவக்கூடாதுனு நம்ம ஆச்சி சொல்லும்.. கேட்றுக்கியா??"

'எதுக்கு...சம்பந்தமேயில்லாம??'

"கேட்றுக்கேன்ப்ள!! அனா அதுக்கும்.."

"சம்பந்தமிருக்கு!"

"..."

"ரொம்ப காலத்துக்கு முந்தி! கிட்டத்தட்ட அம்பது அறுவது வருசம்னு வச்சுக்கோயேன்! இல்ல அதுக்கும் முந்திதான்! இந்த கிராமத்துல பாதி பேரு... ஒரே நாள்ல ஒருத்தருக்கொருத்தர வெட்டிட்டும் குத்திட்டும் செத்துட்டாங்களாம்!"

"ஓஹ்...அதுக்கு??"

'நானும் இத முன்னாடியே வெத்தல ஆச்சி சொல்லி கேள்விபட்றுக்கேன் சின்ன வயசுல...அதாவது இங்கருந்து போறதுக்கு முன்னாடி'

"இன்னைக்கு அதே நாள்!!" என்றவளின் பார்வையில் அப்பட்டமாய் வழிந்தது பய உணர்வு!!

"வ்வாட்ட்??!!" என்று புரியாத பாவனை என்னிடம். நிச்சயம் இதை நம்ப நான் ஆளில்லை!!

"நெசமாத்தான்ப்ள!! கொஞ்ச நாளாவே எல்லாம் வித்தியாசமா இருக்கு... வெத்தல ஆச்சி சொன்னது வச்சு பாத்தா.. எல்லாம் மறுபடியும் நடக்கும்..."

" மொதல்ல அந்த வெத்தல ஆச்சி எங்க??" என்று எழ முயற்சித்த என்னை தடுத்து நிறுத்தியது அவள் கரம்.

"ஆச்சி செத்துபோச்சுட்டி..."

"...."

"ரெண்டு நா முன்னாடி..."

"ஸோ?" எனக்கு இப்பவும் நம்பிக்க வரல. வெத்தல ஆச்சிக்கு வயசு அப்படி தொன்னூறுக்கு மேல!!

"பாரு இத்தன நாளு ஊரு பக்கமே வராதவ... இன்னைக்குனு ஏன் வந்த?? அதுதான் இழுத்துட்டு வந்துருக்கு!!"

என்று மூக்குறிஞ்சியவளை காண காண எழுகிறது என்னுள் அட அசடே!! என்ற எண்ணம்!!

"எது??"

"அதான்ப்ள... அந்த சாபம்! அதான் இழுத்துட்டு வந்துருக்கு!!"

முந்தி பாத்த படமொன்னு மனசுல ஓடுச்சு. திருடன் ஒருவனின் தலை கொய்யும் மன்னராட்கள் அவனை அப்படியே குழியில் தள்ளி புதைத்துவிட.. அவர்கள் கவனித்தில் படாமல் போகிறது அங்கு விளையாடிக்கொண்டிருந்த இரு சகோதரிகள்!! அதில் ஒருத்தி அவனது தலையை மட்டும் எடுத்துச் சென்றுவிட அதன் பின் அந்த ஆவி அவள் அடிமை!! தலையில்லா உருவமொன்று இரவு நேரத்தில் வந்து சிலர் தலையை கொய்ய பின் வரும் விசாரணைகளில் தெரிய வருகிறது இந்த பின்கதை!! ஆங்கிலப்படம் அது!! பெயர்கூட சரியாய் நினைவில் இல்லை இப்பொழுது.

என் சிந்தனை ஒருபுறமிருக்க கவனம் சிதறுகிறது காணும் காட்சியினால். அத்தனை நேரம் சிறு சலசலப்புடன் கிடந்த தெருவினில் திடீரென அமைதி!! இது அசாத்திய அமைதி.. வாசலுக்கெதிரே வருகிறார் ஒரு நடுத்தர வயதுடைய மனிதர். வெள்ளை வேட்டியை மடித்து கட்டியிருக்க மேலுக்கு சட்டை எதுவுமின்றி.. கையில் ஒரு அறுவாளுடன் வீட்டினுள் நுழைகிறார்.

அடிக்கிறது அபாயமணியொன்று என் மனதினுள்! ப்ரோகிராம் செய்ததைபோல நடப்பவரைக்கண்டு.

அவர் அவருணர்வில் இல்லை என்பது தெளிவு! ஆனால் அதைவிட முக்கியம்..

முதல் அறை கட்டிலில் படுத்திருந்த பையனிடம் விரைகிறது என் கவனம்.. கூடவே நானும்!!

"எழுந்துரு!! தம்பீ!! ஏலே எழுந்துரு!!" என்ற என் குரல் அவன் செவியில் விழவே இல்லை போலும். அப்படி படுத்துக்கிடந்தான். ஆனால் கண்விழித்து!!

அவனை நோக்கி ஓங்கிய அறுவாளில் என்னுள்ளத்திலோ குதிரை பந்தயமே!!

"யோவ்!! என்ன பண்ற!?" என்று என்னை மீறி விழுகிறது வார்த்தைகள். இருந்தும் அது அவரை கலைக்கவில்லை.

பட்டென நினைவில் ஆடியது, 'ஹீ இஸ் ஹிப்னாட்டைஸ்ட்!!' என்ற குரல்தான்.

'அப்ப இது எல்லாமே யாரோடவோ ப்ளான்!!' என்ற எண்ணம் எழ. கணப்பொழுதில் விருட்டென அவர் கையிலிருக்கும் அறுவாளை பிடிங்கினேன். பிடிங்கிய மறுகணம் என்முன் இருவர்!! அதாவது நின்றிருந்தவரும் அவரையே ஒத்த.. இல்ல கிட்டத்தட்ட அவரோட க்லோன் போல ஒரு உருவம்!! இது மாயையா??

உள்ளுணர்விற்கு செவி சாய்த்தவளாய் வலதுபுறமிருந்த உருவத்தில் இறக்கினேன் அந்த அறுவாளை!! நினைத்தது போலவே மாயமாய் மறைந்திருந்தது.

'ஸோ... ஐ வாஸ் ரைட்!!'

திடீரென ஒரு குரல்.. அலறல் குரல் என்னை கலைத்தது... எனக்கு மிகவும் பழக்கமான... என்னுயிர் தொடும் குரல்!!

'அம்மா!?' சுற்றுமுற்றும் அலைபாய்கிறது என் பார்வை. பின்பே ஒன்று உரைத்தது. அம்மா எப்படி இங்கே?? நான் மட்டுந்தானே வந்தேன்.. என்ற எண்ணமிருக்க என்னை நோக்கி பாய்கிறது ஒரு வாள்!!

நொடிப்பொழுதில் உணர்ந்தவளாய் பின்னோக்கி சரிந்தேன்.

எழுந்து நின்றால் அம்மா! கண்முன்... ஆனால் ஒருவர் பின் ஒருவராய்.. அத்தனை பேர் ஒரே உருவில்.. இதில் யார் அம்மா?? எது மாயை??

கண்மூடி நின்றவளினுள் விழுகிறது ஒரு எண்ணம்.. இப்பொழுது இது உணர்வுக்களுக்கான விளையாட்டா?? நேருக்நேர் நின்று பலத்தால் வெல்ல முடியாததை உணர்வில் அடித்து வெல்லும் முயற்சியா?? அப்போ நான் நினைச்சதுபோல இது சாபமும் கெடையாது ஒரு மண்ணும் கெடையாது!! யாரோட லாபத்துக்காக விளையாடற விளையாட்டு!! அதுவும் பல உயிர்களோட விளையாடற விளையாட்டு!!

கண் விழித்தேன்.. அதே உருவங்கள்தான்.. ஆனால் இப்பொழுதுதான் நான் வேறுகோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டேனே!

கணப்பொழுதில் முகத்தில் குறும்புத்தனத்தை தத்தெடுத்தவளாய்.. "எலிக்குட்டீ!!!" என்றேன் கிண்டலாய்.

பட்டென பதில் வந்தது வலப்புறத்திலிருந்து, "நீ போடி சுண்டெலி!!" எதிர்ப்பார்த்ததுதானே!

ஆனால் நான் எதிர்ப்பாராத ஒன்று நான் கண்டுக்கொண்டேன் என்று தெரிந்த மறுகணமே உருவங்கள் மாயமாகின..

"ஸ்மார்ட் மூவ் ஸ்வீட்ஹார்ட்!!" என்று காற்றில் மிதந்து வந்த குரலில் காதுமடல்கள் இரண்டும் சிலிர்த்து நிற்க இதழோரம் வளைந்தது ஏளனமாய்.

'அண்ட் ஐ வாஸ் ரைட்!!'

"சரியான ஆளத்தான் அனுப்பிருக்காங்க!! வெய்ட்டிங் ஃபார் யூ வாரியர்!!" என்றவனின் குரலில் அத்தனை நேரம் கையிலிருக்கும் வாளை குறுக்காக பிடித்தபடி தயார் நிலையில் நின்றிருந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பி நின்றேன்.

"த கேம் இஸ் நவ் கோயிங் டூ பீ இண்ட்ரஸ்டிங்!!" என்றான்.

"ஹோப் ஸோ!"

தொடரும்.......



################

மக்களே!!!!!!

நானே நானே!! மீண்டும் நானே!!

சில்லுனு ஒரு காஃபியோட வரலாம்னு நினைச்சேன்.. :p வழக்கம்போல வேறொரு கதையோட வந்துருக்கேன்..மினி சீரீஸ்!! :D

நட்சத்திர காட்டில் அலையவிட்டாய்..
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்..

இங்க யார் அலையறாங்க..எத தொலைச்சிட்டுனு பார்ப்போமா மக்களே??


Don't forget to pen down your thoughts makkale!! :
 
உங்களுடைய "நட்சத்திரக்
காட்டில்"-ங்கிற அருமையான
அழகான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யஞ்ஞா டியர்
 
Last edited:
Top