தேன் சிந்துமோ மேகம் - அறிமுகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் வாசகர்களே,

நான் தேவி. தமிழ் நாவல் தளத்தில் எனது நான்கு கதைகள் வெளியாகியுள்ளன.

கனவுப் பட்டறை 2026 போட்டியில் தேன் சிந்துமோ மேகம் எனும் தலைப்பில் எழுத இருக்கிறேன். இன்றைக்கு அறிமுகம் மட்டுமே.

நாயகன் - எழிலன்
நாயகி - நிலவழகி

கதையினைப் பொறுத்தவரை கல்லூரிக் காதலில் ஆரம்பித்து, திருமணம், பிரிவு பின் மீண்டும் சேர்தல் எனும் வகையறா தான். பெரியதான டுவிஸ்ட், டர்ன்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். படிக்க இதமாக இருக்கும் கதை. எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் இந்த கதையின் போக்கில் கதாப்பாத்திரமாகவே வருகிறார். அவரை உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

போட்டி அறிவித்ததும் எழுத ஆரம்பித்தேன் தான். ஆனால் வரிசையாக வீட்டில் விசேஷங்கள், கோவில் விழாக்கள் என வெளி வேலைகளில் மூழ்கி விட்டேன். எப்படியும் எழுத வேண்டும் என கடைசி நாளன்று பெயர் கொடுத்தேன்.

இப்போதும் காலக் கெடுவுக்குள் முடிக்கத் தான் முயற்சி செய்கிறேன். இல்லை என்றாலும் தொடர்ந்து எழுதி முடித்து விடுவேன்.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் வரும் புதன் முதல் அத்தியாயங்கள் பதிவிடுகிறேன்.

படித்துக் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.

நட்புடன்
தேவி
 
Last edited:
தேன் சிந்துமோ மேகம்
தவிப்பின் மொழியை
தகர்ந்த உறவை
தள்ளி வைத்த பாசம்
துளிர் விட்டது
தென்றலாக வீசும் நேசத்தில்......

தோற்றது கோபம்
தொடர்ந்தது காதல்
தெளிந்த மனங்கள் சேர்ந்து
தேனாய் இனித்தது
தாம்பத்தியம் மலர்ந்தது.....
 

Advertisement

Advertisement

Back
Top