Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-21

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-21

சிவா சந்தியாவுடன் பேசிய காட்சி சக்தி மனதில் வந்து வந்து போக... கொஞ்சம் மன அழுத்தமாக இருந்தாள்... தன் கணவன் தனக்கு கிடைக்காம போயிடுவானோ.. நாம் அவனுக்கு பொருத்தமானவள் இல்லை என்று மனம் நினைக்க... இப்படியே ஒரு மாதம் சென்றது...

அன்று சனிக்கிழமை, லாவன்யாவின் அண்ணன் திருமணத்திற்குக்காக அவளுடைய கிரமாத்திற்கு சக்தி மற்றும் அவர்கள் தோழிகளை வரச்சொல்லிருந்தாள்... அடுத்த நாள் முகூர்த்தம் அன்று மதியம் அனைவரும் அவர்கள் கிராமத்திற்கு போனார்கள்..

அங்கே கல்யாண வீட்டில் மைக் செட்டில் பாட்டு போட்டிருந்தார்கள்... ஒரே கூட்டமாக இருந்தது...

மதியம் விருந்தை முடித்துவிட்டு... தோழிகள் அனைவரும் அங்கே இருக்கும் அருவி மற்றும் மலை கோவில் பார்க்க செல்லுவதாக லாவண்யா அப்பா , அம்மாவிடம் சொல்லிவிட்டு தன் டூவீலரை எடுத்துக் கிளம்பினார்கள்...வழக்கம்போல் வனி சக்தியின் வண்டியில் உட்கார்ந்தாள்...

ஏய் சக்தி ஏன்டி ரொம்ப அமைதியா இருக்கிற. ஏதாவது பிரச்சனையா , கொஞ்ச நாளா பார்க்கிறேன் நீ எதையோ யோசிட்டு இருக்க...அண்ணா ஏதாவது சொல்லிச்சா..

அதெல்லாம் ஒண்ணுமில்ல வனி, குழப்பமா இருக்குடி... சிவாவுக்கு நான் பொருத்தமா வனி... ஏதோ அவசரத்தில கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்...

இப்போ தப்பு பண்ணிட்டோமா நினைக்கிறேன். பக்கத்திலிருந்து கேட்ட இன்னோரு தோழி அகல்யா.. இப்போ ஒண்ணும் கேட்டுபோகல சக்தி.. நீ ஒதுங்கிடு நான் வச்சிக்கிறேன் என் சிவா மச்சானை....

உடனே சடன்பிரேக் போட்டாள் சக்தி... அகல்யாவை முறைத்து பார்த்துட்டு... எத்தனை முறை சொல்லியிருக்கேன் அவன் என் புருஷன் இன்னோரு முறை இப்படி பேசன கொண்ணுடுவேன்...

அப்பறம் என்னடி... அவனை விட்டுக் கொடுக்க முடியலை அவ்வளவு லவ் வச்சிருக்கே பிறகு எதுக்கு நான் பொருத்தம்மா கேட்கிற... கல்யாணமாயிடுச்சின்னா நீ தான் உன் புருஷன ஒழுங்கா பார்த்துக்கனும்...

இவர்கள் அந்த நடு ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்க எதிர்பக்கம் பெரிய வீட்டில் இருந்து சிவா சந்தியாவை இரு கையால் தூங்கிக் கொண்டு நடந்து வந்தான். சிவா பார்த்து பிடிச்சிக்கோ நான் விழுந்திட போறேன்...

இதோ கார் அங்க நிற்குது அதுல போயிடுலாம் சந்தியா... சொல்லி நிமிர்ந்து பார்க்க ரோட்டிலிருந்த சக்தியும் , வனியும் சிவாவை பார்த்தார்கள்....

சக்தி சிவாவை நேர்க் கொண்டு பார்க்க அதே நோடி சிவாவும் சக்தியே பார்த்தான்..இருவரும் அமைதியா நின்றனர்... சிவா தலை குனியவில்லை...அவனுக்கு தெரியும் தான் தப்பு செய்வில்லை என்று...

அவன் நிற்கும் அந்த நோடியை பார்த்த சந்தியா ,சிவாவின் கண்ணத்தில் முத்தமிட்டாள்...

சந்தியா என்று சிவா கத்த... சக்தி தன்னையே வெறுத்து அவனை பார்த்தாள்... உனக்கு என்னை பிடிக்கவில்லையா சிவா என்று...

அதை கண்டுக்கொள்ளாமல்...சந்தியாவை காரில் ஏற்றினான்... கார் வேகமேடுத்தது...

அங்கேயே நின்றாள் சக்தி...வனி அவளின் தோளை தட்டி...தலையை வலதும், இடதும் ஆட்டினாள்...நாம்ம வீட்டிக்கு போலாம் சக்தி என்றாள்...

லாவண்யாவிடம் அவசர வேலை சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.. வழி முழுவதும் சக்தி பேசவில்லை. வனிதா தான் அவள் நிலைமை மாற்ற பேசிய படியே இருந்தாள்... சக்தி அண்ணா அப்படி கிடையாது நீ மனசில தப்பா நினைக்காதே...

ம்ம் என்று தலையை ஆட்டினாள்... வீடு வந்து சேர்ந்தார்கள். உள்ளே ஹாலில் உட்கார்ந்தாள்... சக்தி ஒண்ணும் இருக்காது புரியுதா...

தெரியும் வனி நீ பயப்படாதே... சிவாவை பற்றி எனக்கு தெரியும்... ப்ரண்ட்ஸ் வேற மாதிரி பேசுவாங்க நான் அதை காதில வாங்கல...இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே சிவா உள்ளே நுழைந்தான்... எவ்வளவு வேகமாக காரை ஒட்டிக்கொண்டு வந்தான்.. எங்கே சக்தி தன்னை தப்பாக நினைப்பாளோ...

இவர்கள் பேசுவதை கேட்டு அப்பா என்னை புரிஞ்சிக்கிட்டா.. சிவாவை பார்த்து வனி நான் கிளம்பறேன் சொன்னாள்...

சிவா சோபாவில் உட்கார... சக்தி எழுந்து சிவாவுக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு ரூமிற்கு சென்றாள்...

அவன் அமைதியாக காபியை குடித்து விட்டு தன்னை நிதானப்படுத்தினான்... பத்து நிமிடம் கழித்து உள்ளை சென்றான்... பெட்டில் அவள் எங்கோ வெறித்து பார்த்தப்படி உட்கார்ந்திருந்தாள்..

சக்தி என்று அவன் கூப்பிட திரும்பி பார்த்தாள்...

என்ன சிவா...நீ வனி கூட பேசினதை கேட்டேன்... உனக்கு என் மேல நம்பிக்கையிருக்கு தானே...

ஸ்யூர்...அவள் பக்கத்தில் அமர்ந்து கையை பிடித்தான்...

எப்படி நம்பாம்ம இருக்க முடியும் நீ என்னையே பக்கத்தில விட்டதில்ல... இன்பெக்ட் நான் டிரஸ் இல்லாமல் நின்னா கூட உனக்கு என்மேல எந்த உணர்வு வராது... ஏன்னா உனக்கு என்னை பிடிக்காது....

ஆனா சிவா, நான் மனசார சொல்லுறேன் அந்த பொண்ணை பிடிச்சிருந்தா அந்த பொண்ணோடே வாழ்ந்துக்கோ நான் கிளம்பி போயிடுறேன்...

அவள் பேசப் பேச கையை விட்டான் , போதும் நிறுத்து... என்ன பேசிவிட்டாள்... வேறொரு பெண்ணோட என்னை ஒப்பிட்டு... அவளை பார்த்தால் எனக்கு எந்த உணர்வுமும் இல்லையென்று..

என்ன சொன்னே சக்தி... எனக்கு உன்மேல எந்த உணர்வுமில்ல... நன்றி சக்தி நீ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட...உன்மேல நான் வைத்த அன்பு, பாசம், காதல் எல்லாமே என் பேச்சில்ல இருக்காது என்னுடைய செயலில் இருக்கும்... நீ மேலோட்டமா சினிமாவுல வர காதல் மாதிரி சில மணி நேரத்தில வாழுற... நான் என் வாழுநாள் முழுக்க வாழுனும் நினைக்கிறேன்.. அது என் மனைவி, என் மூச்சி, என் உயிர் சக்திக்கிட்ட மட்டும்தான்.... அவன் கண்கள் கலங்க...

அந்த ஒரு நிமிடம்.. சக்தி அவனை பார்த்து... அய்யோ எவ்வளவு பெரிய வார்த்தை பேசிவிட்டோம்..

சாரி சிவா...சிவா..சிவா.. அவன் முகத்தை அந்தப்பக்கம் திருப்பினான்.. சிவா என்னை இரண்டு அடி அடிச்சிடு.. சாரி சிவா... சக்தி கெஞ்ச..

இனிமே எங்கிட்ட பேசாதே ... இத்தோட உனக்கும் எனக்கும் எதுவுமில்ல...திரும்பி படுத்துக்கொண்டான்...

இனிமே இப்படி பேச மாட்டேன் சிவா..ப்ளீஸ் இந்த ஒரு டைம் மன்னிச்சிடு... அன்னிக்கு ஹோட்டல்ல உன் அத்தை பொண்ணு என் மாமனை உன்கிட்ட இருந்து விரட்டிட்டு நான்தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லிச்சு...

அப்பறம் போன மாசம் நீயும், அந்த சந்தியாவும் காபி டேல சிரிச்சி பேசிட்டு இருந்தே...நான் உன்னை சிரிச்சு பார்த்ததேயில்ல சிவா... எப்பவுமே நீ சிடுசிடுன்னு இருப்ப.. பசங்களும் சொன்னாங்க நீயும் அந்த சந்தியாவும் லவ் பண்ணிங்க.. அதான் கொஞ்சம் எமோஷனலா பீல் செஞ்சிட்டேன்...

எல்லாவற்றையும் கேட்டு சிவா அமைதியாகவே படுத்திருந்தான்... எதுவும் பேசவில்லை...அவன் பக்கம் சென்று சிவாவின் கையை பிடித்து வேணா அடி சிவா உன் ஆத்திரம் தீரும்வரை.. கையை வெடுக்கெண்று இழுத்துக் கொண்டான்..

லைட்டை ஆப் செய்துவிட்டு பெட்சீட்டை தலைவரை முடிக் கொண்டான்..இவனின் செயலை பாரத்து அதிர்ந்தாள்.. எழுத்து பெட்டின் அடுத்தப்பக்கத்தில் படுத்துக் கொண்டாள்...

போடா இனிமே நான் சாரி கேட்க மாட்டேன்...தேம்பி தேம்பி அழுதாள் ஒரு மணிநேரம் கழித்து தூங்கிவிட்டாள்...

அவளின் சீரான மூச்சு சுவாசம் கேட்டு திரும்பி அவளை பார்த்து படுத்தான்...இவள் கண்ணத்தில் கண்ணீர் காய்ந்திருந்தது.. ரொம்ப அழுதிருப்பாள் போல மூக்கெல்லாம் சிவந்திருந்தது...

அவள் முடியை சரி செய்து அவள் தலையை தலையனை மீது சரியாக வைத்தான். பிறகு பெட்ஷீட் போர்த்தி விட்டான்...

சிவா எப்போதும் இவள் உறங்கிய பின்புதான் தூங்குவான்... இன்று சக்தி தூக்கவில்லை கண்ணை மூடி உணர்ந்தாள்...தன் கணவன் தினமும் இப்படி செய்கிறான் கண்ணில் கண்ணீர் மூட்டிக் கொண்டு வந்தது,
அடுத்த நாள் காலையில் காபி போட்டு டைனிங் டேபிளில் வைத்தாள்...சிவா எதுவும் பேசவில்லை காபியை குடித்துவிட்டு.. வேலை செய்யும் மல்லிகாவிடம் டிபனை எடுத்து வைக்குமாறு சொல்லிவிட்டு குளிக்க போனான்.

இவன் கோவம் போகாதா கடவுளே... கிளாஸிற்கு செல்லாமல் கேன்டினுக்கு சென்றாள்...

பாப்பா என்று ஒடி வந்தான் வேலு...

உடனே தன் சித்தப்பூவிடம் அழுது தீர்த்தாள்... நான் தப்பு பண்ணிட்டேன் அண்ணா.. சிவா என்னையை வேறுத்து விட்டான்..

பாப்பா நீ பைத்தியமா.. கணவன் மனைவிக்குள் சண்டை வரும்தான்... அதெல்லாம் சீக்கரம் மறைஞ்சிடும். அதுவும் சிவா சான்ஸேயில்ல...

இல்ல சித்தப்பூ ரொம்ப கோவம்மா இருக்கான் என்கிட்ட பேசவேயில்ல மூக்கை உறிஞ்சிக்கொண்டே பேசினாள்..

சக்தி இங்க அண்ணாவ பாரு.... இந்த அழு மூஞ்சி சக்தி எங்க சிவாகிட்ட வேலைக்காது... யாருக்கு அடங்காத சக்திதான் சிவாவுக்கு பிடிக்கும்... புரியில..

நம்ம கேன்டின்ல நீ எப்போ ரோஸ்மீல்க் கேட்டியோ அடுத்த நாளில் இருந்து ரோஸ்மீல்க்...நீ ப்யூட்டி பார்லர் கோர்ஸ் முடிச்சிருக்கயில்ல... அதுக்குதான் நம்ம காம்ப்ளக்ஸ்ல காஸ்மெடிக்ஸ் செக்ஷ்ன்..

அத விடு இவனுக்கு சிக்கனே பிடிக்காது... மட்டன்தான் பேவரட் அதையே விட்டுட்டான் நம்ம வீட்டில தினமும் சிக்கன்தானே... அக்காகிட்ட உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்ய சொல்லி தினமும் சாப்பாடு எடுத்திட்டு வருவான்.

தன் கண்களை அகல விரித்தாள்.. ஆமாம் சித்தப்பூ நான்தான் எதுவும் கவனிக்கலை.. அன்னிக்கு நான் பாட்டிய பார்க்க போக சொல்ல எந்த நகையும் போடல... இவன் பார்த்து பார்த்து அழகா வாங்கி தந்தான்...

சக்திக்கு முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு பிரகாசமா எரிந்தது.. இவ்வளவு காதல் வச்சிருக்கிற சிவாவை நான் ஏன்விட்டு போனோம். காதல் என்பது ஒருவருக்கு ஒருவர் தொட்டு பேசுவதால் வருவதில்லை என்று தெரிந்துக் கொண்டாள்....

மாலை கார் எடுத்து வந்தான்... அதில் அவள் ஏறினாள்.. இருவரும் பேசவில்லை ட்யூஷனுக்கு ராமநாதன் வீட்டில் விட்டான். படிப்பில் கவனம் செலுத்தினாள்.. ராமநாதனுக்கு ஆச்சரியம் இன்னிக்கு சக்தி படிப்பதை பார்த்து...

இப்படியே இரண்டு மாதம் சென்றது... ஏதோ ஒரு சில வார்த்தைகள் மற்றவர் முன்னிலையில் மட்டும் பேசுவான் சிவா.

-தெறிக்க விடுவான்
 
Nirmala vandhachu ???
 
Top