Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-15

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-15

சிவா தன் போனில் சக்தியை அழைக்க...மூன்று ரிங்கில் அவன் காலை அட்டன் செய்தாள்...

சக்தி எங்க இருக்க..

ம்ம், வீட்டுக்கு வந்திட்டிங்களா ... நான் உன் மாமனார் வீட்டில இருக்கேன் சிவா..

மாமனார் வீடா..ஓஓ உங்க அப்பாவிட்டுக்கு போயிருக்கியா... உன்னை ஹோட்டலுக்கு கூட்டுட்டு போகலாம் பார்த்தேன்..நீ இல்ல சரி விடு வேற நாள் போகலாம்...

என்னது ஹோட்டலுக்காக...என்ன பாவா சொல்லுற உன்மையாவா... கல்யாணமாகி இன்றுதான் வெளியே போகலாம் என்று அழைக்கிறான்...

பாவா போகலாம் நான் வரேன்...ம்ம்

இவ வர அரைமணி நேரமாவது ஆகும்... சரி குளிச்சுட்டு ரெடியாகலாம்... நம்ம ரூமிலே சுகந்திரமில்ல..இன்னிக்கு ஃப்ரியா குளிக்கலாம்...பனியன் கூட பாத்ரூமில போடறாத இருக்கு என்று தன் ஆடையை கலைத்து டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு தன் உடமை கண்ணாடியில் பார்த்து தாடி வளர்த்துடுச்சு தனக்குத் தானே சொன்னான்...

பாவா சொல்லி சக்தி உள்ளே ஒடி வர, இவன் திரும்ப தன் விழியை அகல விரித்து சிவாவின் உடம்பை ரசித்து பார்த்தாள்..

ச்சே... தலை முடியை கொதிவிட்டு, அதுக்குள் எப்படி வந்த சக்தி கதவ தட்டிட்டு வர வேண்டியது தானே...

என்னது நீ கதவை திறந்து போட்டு இப்படி தரிசணம் குடுப்ப, நான் கதவை தட்டிட்டு வரனும்மா... நான் கார்டனல இருந்தேன் நீ பார்க்கல...

ஆனா சும்மா சொல்ல கூடாது...சிக்ஸ் பேக் சூப்பர் சிவா...செமயா இருக்க பாவாவாவா...இழுக்க...

சரி நான் குளிச்சுட்டு வரேன்... பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்... கதவின் மேல் சாய்ந்து கொண்டு அப்பாடா தப்பிச்சேன் விழுங்கற மாதிரி பார்க்கிறா...சிவா கன்ட்ரோல் பண்ணிக்கோ...

போ போ வெட்கம் வந்திடுச்சு உனக்கு...சக்தி வெளியில் இருந்து கத்த...

குளித்து முடித்து வெளியே வந்தான்...அவனுக்கு ஏற்ற மாதிரி அழகான வெளிற் ப்ளூ கலரில் ஒயிட் கற்கள் பதிக்கப்பட்ட சுடிதார் அணிந்து தேவதை மாதிரி வந்தாள்... எப்பவும் லைட்டா மேக்கப் போடுவாள்... அடர்த்தியான மேக்கப் போட மாட்டாள்... எப்படியிருக்கு சிவா...

ம்ம் நல்லாயிருக்கு...

இருவரும் காரில் போய்க்கொண்டிருக்க...சக்தி நீ சொன்ன ஐடியாவிற்கு தான் டிரீட் ,அந்த ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர் வொர்கட் ஆயிடுச்சு...

அப்படியா..இதென்ன பிராமாதம் இதை விட....அவள் சொன்ன விஷியத்தை கேட்டு ஒட்டும் வண்டியை நிறுத்தி விட்டு சக்தியின் கண்ணத்தில் ஒரு அரை விட்டான்...

ஏன்டா அடிச்ச...

எப்படி பேசற பொண்ணாடி நீ...வாயை திறந்த அவ்வளவுதான் சொல்லிட்டேன்

செல்லில் தன் முகம் பார்த்து...நல்ல வேளை லைட்டா தான் அடிச்சான் ரோஸ் பவுடர் போட்டு டச் சப்பு செஞ்சிக்கினோம்...

எப்படி நீ இந்த மாதிரி பேசுவ படிக்கிற பொண்ணுதானே நீ...உங்க அம்மா வயிற்றில் எப்படி நீ பொறந்த...

நீ எப்படி பொறந்தியோ...அப்படி பெரிசா கேள்வி கேட்கிறான்...

என்ன சொல்லிட்டேன் இப்படி சிலுத்துகிறான்...மக்களே நீங்களே நியாயத்தை கேளுங்க... பத்து நிமிடம் முன்னாடி...

அப்படியா சிவா எங்கிட்ட இந்த மாதிரி நிறைய ஐடியா இருக்கு எப்படி சொல்ல...ஹாங்...கையை ஆட்டி பால் முதல் பலான விஷியம் வரை....

ம்ம்...என்னது பலான விஷியமா சிவா அவளை பார்க்க...

நீ சின்ன பையனா இருக்க தம்பி..மேட்டர் விஷியத்தை சொன்னேன்... உனக்கு ஸ்டார்டிங் டிரபிள் நினைக்கிறேன்... கவலை படாதே இந்த சக்தி அதை கிளியர் செய்யறேன்..இப்ப நீ மட்டும் ஒகே சொல்லு...நம்ம போற ஹோட்டல்ல ரூம் போட்டு டிசைன் டிசைனா ஹனிமூன் கொண்டாடிக்கலாம்....இதுதாங்க நடந்தது.

கண்ட கண்ட வெப் சீரிஸ் பார்த்து...யூ டிப் சேனல கண்டத பார்த்து கேட்டு போய் அலையற...இதுல இந்த எருமைக்கு பெருமை வேற பால் முதல் பலான விஷியம் வரை ஐடியா தரலாம்...

அவள் காதை ஒரு கையால் திருகி இனிமே இப்படி பேசுவியாடி...அத கூட அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்...ஆனா தம்பின்னு கூப்பிட பாரு... கொழுப்பு ஏறி போயிருக்குடி உனக்கு...

கார் ஒரு பிரபலமான நகைக்கடை முன் நிறுத்த..இறங்கு சக்தி என்றான்...

கடைக்கு சென்று அவளுக்கு ஏற்கனவே ஆர்டர் செஞ்ச சிம்பளாக கழுத்தை ஒட்டிய படி இருக்கும் வைர நெக்லஸ் வாங்கி கொடுத்தான்...

பிடிச்சிருக்கா சக்தி..வேணா என்றால் வேற மாற்றிக்கொள்ளலாம்... நல்லாயிருக்கு சிவா... இப்ப எதுக்கு சிவா நம்மகிட்ட தான் நகையிருக்கே...

இல்ல நீ எப்பவும் கிராண்டா போட மாட்டிறே...சிம்பளா எதுவுமில்ல அதான் வாங்கினேன்....

என்னமோ போ...அடிக்கிற இப்போ நகை வாங்கி தர ஒண்ணும் புரியில...

இது ஏற்கனமே வாங்கியது தான் நீ நடுவுல வாயை வச்சிட்டு சும்மாவா வந்தே...அதான் எதிர்பாராத அடி..

.......

சிவா இந்த ஹோட்டலுக்கு நான் நிறைய முறை வந்திருக்கேன், நல்லாயிருக்கும்..

சிவா உள்ளே பேமலி சூட்டில் உட்கார...ஏன் சிவா நாம இரண்டு பேரு தான் வேற இடத்தில உட்காரலாம்...

வேணா இங்கே உட்காரு...அவன் எதிர்பக்கம் உட்கார்ந்தாள்....

செஃப் சிவாவிடம் சிரித்த முகத்தோடு வர...சிவா தம்பி எப்படியிருக்கீங்க... அம்மா நல்லாயிருக்காங்களா...

நல்லாயிருக்கோம் ரவிண்ணா...அதற்குள் அங்கே வேலை செய்யும் அனைவரும் சின்னய்யா வந்திருக்காங்க...என்று அவர்களிடம் வந்தனர்...

ஒவ்வொருத்தரும்...எப்படியிருக்கீங்க சின்னய்யா என்று கேட்க...எதுவும் புரியாமல் அவர்களை பார்த்தால் சக்தி...

எல்லாரும் அவர்களை சூழ்ந்து திருக்க...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி அண்ணா...இவங்க தான் என் ஒய்ப் சக்திப்ரியா.

அப்படியா தம்பி வணக்கம்மா என்றார்...

அண்ணே ஊர்ல கல்யாணம் நடந்திடுச்சி யாரையும் கூப்பிட முடியில...இந்தாங்க இதுல ஒரு லட்சம் இருக்கு எல்லோருக்கு பிரிச்சி கொடுங்க என்றான்...

ஒகே தம்பி என்று பேக்கை வாங்கிக் கொண்டார்...

ஆடர் கொடுக்க மெனுக்கார்டை சக்தியிடம் கொடுத்தான்...நீங்களே சொல்லுங்க என்றால்...அவளுக்கு பிடித்த சிக்கன் பிரியானி, லாலி பாப்,சிக்கன் பிரைட் ரைஸ் சிக்கன் வெரைட்டியாக சொன்னான்...அண்ணா ஸ்பெஷல் ரோஸ் மில்க்...

உங்களுக்கு ,அதே சொல்லிடுங்க சிவா...

சிவா தம்பிக்கு சிக்கன் பிடிக்காதும்மா..எனக்கு தெரியும் தம்பியோட பேவரைட் நான் கொண்டுவரேன்...அவர் செல்ல.

அவன் கண்ணாடி தடுப்பை பார்த்துக் கொண்டு, சக்தி என் பக்கத்தில வந்து உட்காரு...

ஏன் இங்கே இருக்கேன்...

உட்காருன்னு அழுத்தி சொல்ல...எழுந்து வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள்...

கதவை திறந்து உள்ளே ஒரு கூட்டமே வந்தது... யார் இவங்க வந்தவர்களை சக்தி பார்க்க...அங்கே போட பட்ட இருக்கைகள் நிரம்பின...

கடைசியில் நுழைந்த வயதான பெண்மனி சிவா என்று அழைக்க...

பாட்டி...எழுந்து நின்று சக்தியை கண்களால கூப்பிட்டான் அவள் எழுந்துவுடன் இருவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்...

எங்கிட்ட கூட சொல்லலியே சிவா..உன் கல்யாணத்தை கூட பார்க்க இந்த கிழவிக்கு குடுப்பினை இல்லை...

பாட்டி தீடிரென்று நடந்திடுச்சி...

பாட்டியின் பக்கத்தில் அமர்ந்த அவன் அத்தை நிர்மலா ஆனா உன் ரவுடி மாமன் வந்திருப்பானே...

அத்தை கலக்டர் இனியன் சொல்லுங்க...

நிர்மலா முகத்தை திருப்ப...புள்ள கல்யாணமாயிடுச்சு வாழ்த்தி பேசு நிர்மலா...

சரிம்மா...அந்த பக்கம் சிவாவின் சித்திகள்...எப்படி இருக்க சிவா ,இவதான் உன் பொண்டாட்டியா...

ஆமாம் சித்தி...எப்படியிருக்கா...சக்தி இவங்க என் சங்கரி சித்தி,உமா சித்தி..

அழகாக தேவதை மாதிரியிருக்கா சிவா உனக்கேத்த ஜோடி உமா சொல்ல...

சுமாரா தான் இருக்காங்க...எங்க அத்தான் முன்னாடி கம்மிதான்...யாரு இப்படி பேசறது நிமிர்ந்து சக்தி பார்க்க...கூறிய இளம்பெண்ணோ சிவாவின் அத்தை மகள் நிவேதா...

சிவா தன் கையால் சக்தியை அனைத்து என் கீயூட் பேபி மை ஒய்ப்...மை ஏஞ்சல் நிவி என்றான்.

அவனையே பார்த்தாள் சக்தி...இவ்வளவு உறவுகளா பயம் வந்துவிட்டது...அவள் முழிப்பதை பார்த்து அவள் கையை அழுத்தி பிடித்தான்...கண்களால் பயப்படாதே என்றான்...

என்ன அண்ணா அண்ணி பேச மாட்டாங்களா...என்று தன்னை அறிமுகப்படுத்தினான் சிவாவுடைய சித்தப்பா பையன் கார்த்திக், ஏன்டா பாலா வரல...

அண்ணா அவனுக்கு சடன்னா ஆபிஸ் வொர்க் அதான் வரல...

நிவி சிவாவையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்தாள்...என்ன இந்த பொண்ணு இப்படி பார்க்குது....

எங்களை ஏன்டா கல்யாணத்துக்கு கூப்பிடல...நாங்க எல்லாம் கோவமா இருக்கோம் உன்மேல...

அது நாங்க இரண்டு வருஷமா லவ் பண்ணோம் சந்தர்ப்பம் சூழ்நிலையில தீடிர் நடந்திடுச்சு சித்தி...

இந்த சிவா பையனை கடந்திபோய் சாய்ச்சிடா பெண்சிங்கம் சக்தி என்றாங்க... பாட்டி சொல்ல

யாருடா நம்ம டைலாக்கை திருப்பி விடுறது- சக்தி

சிவா ஹா ஹான்னு சிரித்து ,பாட்டி விழுப்புரம் வரைக்கு ரீச்சாயிடுச்சா... என் பொண்டாட்டியோட வீரச்செயல்....

திருவிழாவில காணாம போன குழந்தை மாதிரி சக்தி முழித்தாள்...

-தெறிக்க விடுவான்.
 
???
 
Top