Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-11

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-11
காலேஜ் முடிந்து சக்தியும் சிவாவும் காரில் போய்கொண்டிருந்தார்கள் ...
சிவா உன்கிட்ட பேசனும்...
கார் ஒட்டிக்கொண்டே என்ன... பார்வையால் கேட்டான்...

அப்பா உன்கிட்ட என்னைய கல்யாணம் செய்ய கேட்டாரா...

ம்ம்ம்...
நீ ஏன் என்னை வேணாம் சொன்னே

இதென்ன கேள்வி...பிடிக்கல அப்போ கல்யாணம் வேணாம் தொணிச்சு... அதான் முடியாது சொன்னேன்...

கொஞ்சம் கூடவா என்னைய பிடிக்கல..நான் பார்க்க நல்லாயில்லையா...

அழகை வைத்து யாரேன்னா வாழ்க்கை துணையை ஏற்றுப்பார்களா... மனசுக்கு பிடிக்க வேண்டாமா...நிறைய அழகான பொண்ணுங்க பிரப்போஸ் செஞ்சிருக்காங்க... எல்லாரையும் கல்யாணம் செஞ்சிக்க முடியும்மா....

ஆனாலும் உங்கப்பா செம கேடி டி... சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கிட்டாரு...

சக்தி சிவாவை முறைத்து பார்க்க...பின்னே உங்க அப்பாகிட்ட போன் செஞ்சி சக்தி வீட்டை விட்டு போறேன் சொல்லுறா...நான் பஸ் ஸ்டான்டிலிருந்து கூட்டிட்டு அக்கா வீட்டுக்கு போறேன் முன்னாடியே சொல்லிட்டேன் ...எல்லாத்தையும் கேட்டு அந்த பஞ்சாய்த்துல ஒரு வார்த்தை பேசல என்னையை எப்படியோ மாப்பிள்ளை ஆக்கலாம் பார்த்தாரு...

ஐய்யோ ஊர் உலகத்தில மாப்பிள்ளையே இல்லாம உன்னைய புடிச்சாரு பாரு... எல்லாம் என் தலையெழுத்து...

இப்போ என்ன வேற எவளையோ கல்யாணம் பண்ணிட்ட மாதிரி பேசற...பிடிக்கல சொல்லி உனக்கு தானே தாலி கட்டினேன்...

பிடிக்காத ரிஜக்ட் செஞ்ச என்னை ஏன் கட்டிக்கிட்ட...

லூஸாடி நீ... அப்பவும் நான் பிடிக்கல தானே நின்னேன்..நீதான்டி நாங்க இரண்டு வருஷம் லவ் செய்யறோம்...டைலாக் அடிச்ச...

எனக்கு அப்ப தெரியாதே...எங்க அப்பா உன்னை மாப்பிள்ளையா பார்த்தது...

சரி முடிஞ்சி போன கதையை ஏன் பேசற...பசிக்குதா

இல்ல இப்பதான் கேன்டின்ல பப்ஸ், ஜூஸ் குடிச்சேன்...ஹோட்டல் போறோம்மா...

காருக்கு பின்னாடி இருக்கிற கவரை எடு சக்தி...

ஹய் கிப்ட்டா சிவா...ம்ம் பிரிச்சு பாரு...இவ்வளவு வையிட்டா இருக்கு பார்சலை பிரித்து பார்த்தாள்... அடப்பாவி முதன்முதலா பொண்டாட்டிக்கு இந்த கிப்ட்டா சிவா வை மனதில் திட்டிக்கொண்டே...

என்ன அப்படி ஷாக்காயிட்ட சக்தி.. செகன்ட் இயர் புக்ஸ்...நானே போய் வாங்கிட்டு வந்தேன்...

புக்கை பிரித்து பார்த்தால் முதல் பக்கத்தில் சக்திபிரியா என்று அழகாக எழுதியிருந்தான்...

அதை தன் விரலால் தடவி விட்டு...

“என் பெயர் இவ்வளவு அழகா
என்று நீ உன் கையால் எழுதுபோது தான் தெரிகிறது”.....

அய்யோ சக்தி கவித கவித பின்ற போ மனதில் நினைத்து வெளியே தன்னை அறியாமல் சிரித்தாள்...

என்ன நினைச்சு சிரிக்கிற...

ஒண்ணுமில்ல சிவா...காரை ஒரு வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு... இறங்கு சக்தி..நம்ம ராமநாதன் ஸார் வீடு...

விருந்துக்கு கூப்பிட்டிருக்காரா...நல்ல ஸார் தான் சிவா...

உள்ள வா...அவர்கிட்ட அகௌன்ட்ஸ்,காமர்ஸ் டியூசன் சொல்லிருக்கேன் சக்தி..நல்லா சொல்லித்தருவார்.. டூ ஹவர்ஸ் கிளாஸ்...நான் வந்து கூட்டிட்டு போறேன்..ஓகே வா...

நான் எல்.கே.ஜீ இருந்து இதுவரை டியூசனே போனாது இல்லடா...பல்லை கடித்து மெதுவாக பேச...

என்னடி டா போடுற..பல்லை உடைச்சிடுவேன்...சிவா முறைக்க அதற்குள் ராமநாதன் அவர்களை வீட்டின் உள்ளே அழைத்தார்..ஸார் நீங்க பார்த்துங்க..நான் டூ ஹவர்ஸ்ல வரேன்..

அவன் பசிக்குதா கேட்க சொல்லே சுதாரிச்சிருக்கனும் சக்தி..அவனை பார்த்து பல்லை இளிச்சே...வீட்டுக்கு வாடா சிவா...

இரண்டு நாள் சென்று...இரவு சிவா தன் ரூமிற்கு வந்தான்...ஸ்லிவ்லெஸ் ஷர்ட் திரீ பை போர்த் பேண்ட் போட்டிருந்தாள்...பெட் சுற்றி புக்ஸ் நோட்டை பரப்பிருந்தாள் இரண்டு நாள் டியூசன் போயிட்டு வந்தா இந்த அலப்பறை. சக்தி நான் பிரஷ் அப் ஆயிட்டு வரதுக்குள் பெட் மேலே இருக்கிறது கீளீயர் ஆயிருக்கனும்...

எல்லாத்தையும் அடுக்கி வைத்துவிட்டு ஒரு புக் மற்றும் நோட்டில் எழுதிக்கொண்டிருந்தாள்...
பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான்...ஸ்போர்ட்ஸ் மாடல் பனியன் ஷார்ட்ஸ் போட்டிருந்தான்...முகத்தை துண்டால் துடைத்து...சக்தி... அம்மா அடுத்த வாரம் அக்காவீட்டுக்கு போறாங்க...நீ அம்மாகிட்ட சமைக்க கத்துக்கோ...

அத்தை ஏற்கனவே சொல்லிட்டாங்க சிவா..நான் காபி போட கத்துக்கிட்டேன்...

அப்படியா...எனக்கு ஒரு காபி எடுத்துட்டுவா... பைவ் மீனிட்ஸ் சிவா துள்ளிக் கொண்டு ஒடினாள்..

கையில் காபி கப்போட வந்தாள்...இந்தா சிவா...வாங்கி குடித்தான்..எப்படியிருக்கு சிவா நாட் பேட்...ஆனா ஏன் பாதி கப் காபிதான் கொடுத்த... கொஞ்சமா இருக்கு...அவன் குடித்து முடிக்கிற வரை அமைதியாக நின்றாள்..

அதுவா சிவா...காபி போட்டேனா நல்லாயிருக்கா டவுட் வத்திடுச்சா..அதான் படியேற சொல்ல கொஞ்சம் கொஞ்சமா டேஸ்ட் பார்த்தேனா..பாதி கப் காபி காலியாடுச்சு...

அவளை அதிர்ந்து பார்த்தான் எச்சி செஞ்ச காபியா...

ஏன் அவ்வளவு ஷாக்கு..ஷாக்க குறை...புருஷன் எச்சில் அமிர்தமுன்னா... பொண்டாட்டி எச்சில் தேவாமிர்தம்.எப்படி இப்பதான் ஷேர்இட்ல பார்த்தேன்...எப்படியிருந்திச்சி சிவா தன் ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டாள்..

ம்ம் போய் படி...சிவா லேப்டாப்பில் கவனம் செலுத்த அமைதியாக சென்றது...சிறிது நேரத்தில் நிம்மதியா இருக்கானே இப்படியிருக்க கூடாதே எதாவது யோசி சக்தி உன்னால முடியும்...

தன்னையே பார்ப்பதுபோல் சிவாக்கு தோன்ற சக்தியை திரும்பி பார்த்தான். அவள் அமைதியாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள்...ச்சே ச்சே வீனா சந்தேகப்பட கூடாது நல்ல பொண்ணு சக்தி...தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் சிவா...

சிவ்வா...ம்ம்ம்... எனக்கு இந்த பார்ட்னர் ஷிப் பாடம் புரியில சொல்லித் தரீயா ப்ளீஸ்...சரி எந்த ப்ராப்பளம் தெரியில..என்று அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்... சிவா அதை விளக்க ஆரம்பிக்க...அவள் அவனை கவனித்தப்படியே அவன் தோள்களை உரச...

டக்கென்று பாடத்தை நிறுத்தினான்...இவ டச் செஞ்ச மாதிரி இருந்துச்சு தப்பா யோசிச்சோமா...திரும்ப கணக்கை தொடர..மறுபடியும் தன் தோள்களை உரசினாள்..

ஏய் என்ன பண்ணுற...ம்ம்..சிவ்வா...தோளும் தோளும் உரசினா பத்திக்குமா பார்க்கிறேன்...பஞ்சும் நெருப்பும் உரசினா பத்திக்குமாமே...என்ன...ஏதாவது உனக்குள்ள பார்ம் ஆகுதுதா...

ம்ம்ம்...நறுக்குன்னு அவள் தலையில் கொட்ட...பத்திக்கிச்சா...

அய்யோ கார்டூன் படத்தில வரும்மாதிரி வீங்கிப்போச்சே...டேய் ஏன்டா இப்படி அடிச்சே...உன்ன

அவளின் ஒரு கையை பின்னால் முறுக்கி, என்னடி செய்வ சொல்லு... இன்னொரு முறை வாடா போடா சொன்னே வாயை தைச்சிடுவேன்...

சரி விடு கை வலிக்குது...இப்பகூட பார் என்னைய ஒட்டி கட்டிக்கிட்டு நீதான் இருக்க...இப்படி நீ ரொமன்ஸ் பண்ணிட்டு...என்மேல பழியை போடுற.

அடங்க மாட்டியாடி... நான் பாடத்த சொல்லித் தரேன்...உன் புத்தி இப்படி போகுது மாடு..மாடு

சிவா மாடுன்னு சொல்லாத... அந்த கோமாதா தான் நமக்கு சோறு போடுது.... சிவா அப்படியே ஒரு நிமிஷம் இங்க பாரேன் கேட்டு அவனிடம் இனைந்து மொபைலில் செல்பி எடுத்துக்கொண்டாள்..

ஏய் இந்த டிரஸ்லியா...ஹிம் ஹானிமூன் கப்புள்போல இருக்கோம்..சிவாவின் முகம் சிவப்பாக... ஹப்பா நீ டென்சன் ஆயிட்ட இப்பதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும் குட் நைட்....

சிறிய லைட் வெளிச்சத்தில் அவள் முகத்தையே பார்த்திருந்தான் சிவா.சக்தி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்... அவள் முகத்திற்கு முன்னே விழுந்த முடியை ஒதுக்கி காதிற்கு பின்னால் விட்டான்..ராட்சஸி அடங்குதா...
......
அடுத்த நாள் காலையில், வேலு, கண்ணத்தில் கையை வைத்து சக்தி திட்டுவதை கேட்டுக்கொண்டிருந்தான்... நீயெல்லாம் ஒரு அண்ணாவா ,தங்கச்சி கஷ்டம் புரியுதா ஏதாவது ப்ளான் பண்ணு...அண்ணி காபி என்று மோகன் கேட்க..இதோ எடுத்துட்டு வரேன் மோகன்..உள்ளே காபி போட சென்றாள்...

திரும்பி காபி எடுத்துவந்து மோகனிடம் கொடுக்க...அப்போ டிவி செனலில் வாலி படத்தின் காட்சி ஒடியது...சிம்ரன்,அஜீத்திடம் ஏன் தெரியாது சொன்னே...அப்பதான் அவ எனக்கு சொல்லிக் கொடுப்பா...இதைபார்த்து சக்தியும் வேலுவும் ஹை பை கொடுக்க..
புரியுதா சக்தி...புரிச்சிடுச்சு...சித்தப்பூ...

சிவா சாப்பிட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து ஷூவை மாட்டினான்...சக்தி எனக்கு வேலையிருக்கு உன்னை டியூஷனிலிருந்து பிக்கப் பண்ண முடியாது... பேசாம நீ ஆக்டிவா எடுத்துட்டு போறீயா...

நானா...எனக்கு வண்டி ஒட்ட தெரியாது சிவா...

என்ன வண்டி ஒட்ட தெரியாதா..நீயெல்லாம் சென்னையில்ல படிச்சேன் வெளியே சொல்லிக்காதே...

எங்க காரு இருத்துச்சு அதிலே போயிடுவேன்...

சரி கார் ஒட்ட தெரியுமா...இல்ல என்று தலையை ஆட்ட...நல்லா உங்கப்பா வளர்த்து வச்சிருக்கார்...சாய்ந்தரம் நான் வந்து சொல்லித்தரேன் அடுத்த வாரத்திலிருந்து நீயே டூவிலர் ஒட்டனும்....சிவா கிளம்ப..

எப்படி சக்தி சூப்பரா நடிக்கிற... ஏதோ பையன் மாட்டினான்

சித்தப்பூ நீ நினைக்கிற மாதிரி இல்ல ....உன்மையா எனக்கு வண்டி ஒட்ட தெரியாது...நான்தான் அவன்கிட்ட மாட்டினேன்...
------தெறிக்க விடுவான்.
 
இந்த புள்ளய சமாளிக்க
சிவா ஒரு மாட்டு பால
முழுசா குடிக்கனும்
 
அருமையான பதிவுகள்....

கதை நல்லா விருவிருப்பா & ஜாலியா போகுது..

சக்தி...அவன் இப்போது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று தான சொல்றான்....அதை நீ கவனிக்கவேயில்ல பாரு.....

சிவா ஏதோ பெரிய போஸ்டிங் கில் தான் இருக்கான்...ஏதோ ரகசியம் வைச்சிருக்கீங்க சிஸ்....
 
அருமையான பதிவுகள்....

கதை நல்லா விருவிருப்பா & ஜாலியா போகுது..

சக்தி...அவன் இப்போது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று தான சொல்றான்....அதை நீ கவனிக்கவேயில்ல பாரு.....

சிவா ஏதோ பெரிய போஸ்டிங் கில் தான் இருக்கான்...ஏதோ ரகசியம் வைச்சிருக்கீங்க சிஸ்....
Thk u சரியா guess பண்ணிட்டாங்க but slight different sis....
 
Top