Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-06

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-06
கேன்டின் பின்பக்கத்தில் உள்ள மரத்தின் அடியில் ... சக்தி, சிவாவும் நிற்க.. எதுக்கு என்ன வரச்சொன்ன பால்கார்...

ம்ம் அது..உங்கிட்ட கொஞ்சம் பேசனும்....சிவா தயங்க..

என்ன...அவள் கையை பற்றினான்.. தீடிரென்று அவள் கையை பிடிக்கவும்.. என்னாச்சு இவனுக்கு கையை விடுவிக்க முயல.. சிவாவின் பிடி அழத்தமாக இருந்தது... நான் உன்னை காதலிக்கிறேன்..

என்னது... நீயா..

ம்ம் உன்ன வேற ரொம்ப திட்டினேன்னா... அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....உனக்கும் என்னை பிடிக்கும் தெரியும் சக்தி... ஹா ஹா பெயர் சொல்லி கூப்பிடுறான்.

அவள் கையை இழுக்க சிவாவின் மேலே ஒட்டி நின்றாள்... அவள் கை சில்லிட்டு போக.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

ஏன் உன் உதடு துடிக்குது சக்தி பயமா இருக்கா... இல்ல என்று தலையை ஆட்ட பின்ன ஏன் துடிக்குது...நான் அடக்கவா சக்தி மெல்லிய குரலில் கிசுகிசுக்க...எப்படி என்று யோசிக்கும்போதே அவள் இதழை சிறை செய்தான் தன் இதழ்களால்...
சக்தி கண்கள் தானாக சொக்க... முத்தத்தின் மயக்கத்தில் தன்னை மறந்து நின்றாள்...அவன் அவளின் இதழை விடுவிக்க...

பால்கார் என்றாள்...
என்னது பால்காரனா சொல்லி அவள் கண்ணத்தில் ப்ளாரு என்று அரை விட.. அம்மாமாமா.... அலறிக்கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்தாள்.

தன் கண்ணத்தில் கையை வைத்து.. என்ன கனவு இது... இந்த சிவாப்பையனை போய்...ச்சே..தண்ணீர் எடுத்து குடிக்க...

உன் மனசல அப்படியொரு எண்ணம் இருக்கபோய் தானே கிஸ் வரைக்கும் வந்திருக்கு.. அவள் மனசாட்சி அவளிடம் வாதிட..

மண்ணாங்கட்டி, அவனை போய் நினைப்பேனா... யாராவது தெரிஞ்சே கிணத்தில விழுவாங்களா...ஒரு பக்கம் அவள் எண்ணங்கள்.. ஏன் அழகாதான் இருக்கான்...எப்படி கிஸ் அடிச்சான்...

அதுக்குன்னு ராட்சஸன் கூட குடும்ப நடத்த முடியுமா..இன்னிக்கு அவன்கிட்ட சண்டை போட்டதால அந்த ஞாபகம் அப்படியே கனவா வந்திருக்கு...நமக்கு அவனுக்கு என்ன சம்பந்தம், நாளைக்கு நான் எஸ்ஸாக போறேன்... அப்பறம் இந்த ஊருக்கு மூன்னு வருசம் கழிச்சிதான் வரபோறேன்....நான் இருக்கிற நிலைமையில இந்த கனவு அவசியமா இந்த ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை...

நாளை பொழுது எனக்கானதா இருக்குனும் கடவுளே...தூங்க ஆரம்பித்தாள் சக்தி...
--------
அடுத்த நாள் மதியம்...வேலுக்கு சக்தியிடமிருந்து போன் வர... வேலு விழுப்புரம் முழுக்க ஒரே கலாட்டாவா இருக்கு....யாரோ ஆளுங்கட்சி அமைச்சர் கைதாம்.. அதனால அவங்க கட்சி ஆளுங்க பந்த் பண்ணறாங்க.. கடையெல்லாம் அடைச்சிட்டாங்க.. பஸ் ஓடாது..என்னால வர முடியாது நான் விழுப்புரத்தில தங்கிக்கிறேன். நீ சீக்கீரம் கிளம்பு.. எல்லா இடத்திலயும் பிரச்சனை வேலு...

இதை கேட்வுடன் வேலு தொண்டை அடைக்க...மச்சான்...சிவா எனக்கு பயமாயிருக்கு..
நீ நம்ம வீட்டுக்கு போயிடு சித்தப்பூ ...

அதுயில்ல சிவா.. நான் சொன்னா திட்ட மாட்டியே...என்று சக்தி சொன்ன அனைத்தையும் சிவாவிடம் சொன்னான்...

லூஸாடா நீ எத்தனை முறை சொல்லியிருப்பேன்...அவ எப்படி ஏமாத்திருக்கா பாரு...அங்கே வேலு தேம்பி தேம்பி சொல்ல...ஏன்டா அழுவற... அவளுக்கு ஹார்ட்ல ஒட்டையெல்லாம் இல்ல

மச்சான் இரண்டு மணிக்கு நான்தான் ஆட்டோவல ஏத்தி விட்டேன்... இன்னேரம் விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கும்.. சென்னைக்கு போயி பிளைட்ல போறாதா சொல்லிச்சு..

என்னது எந்த பஸ்ஸூம் போகாது...ஏன்டா நீயூஸ் ஒரு மணியிலிருந்து போடாறாங்க அதை கூட பார்க்க மாட்டியா...அவள ஏன்டா ஆட்டோவல ஏத்திவிட்ட.. வயசு பொண்ணு..

அதான் சக்தி நீ போய் அவள பாரேன்... எங்கனா மாட்டிக்க போறா நீ வேற கலவரம் சொல்லுற.

நீ முட்டாள்தனமா செஞ்சா நான் என்ன செய்ய முடியும்..

சிவா பீளீஸ் சிவா... இந்த ஒரு முறை மட்டும்...பாவம்டா அந்த பொண்ணுக்கு ஏதோ வீட்டுல பிரச்சனை போல... கொஞ்சம் பாரேன்..

சரி வை...பஸ் ஸ்டான்ட் நோக்கி வண்டியை விட்டான் .. அங்காங்கே போலிஸ் நிற்க... அவர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்...

எந்த பஸ்ஸூம் வெளியே போகவில்லை....அங்கே தேடி பார்த்தான்.. சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர்.. அவர்களிடம் கேட்டான்.ஸார் சென்னை பஸ் ஏதாவது போச்சா...
இல்லப்பா கலவரம் என்றதால எந்த பஸ்ஸூம் போகலை.... எங்கே போயிருப்பா...மெயின்ல ரோட்ல போக முடியாது. பக்கத்து சந்து வழியாக வண்டியை ஓட்டினான். ஆள் நடமாட்டம் இல்லாததால் அந்த இடமே விரிச்சோடி இருந்தது. கொஞ்சம் தூரம் சென்றவுடன்.. நான்கு பசங்க மத்தியில் ஒரு பெண் நிற்க... அவர்கள் பக்கம் வண்டியை விட்டான்.

அவன் வண்டி சத்ததில் நால்வரும் திரும்பி பார்க்க. வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான்.. அவர்களை தள்ளி ஒடி வந்தாள் சக்தி. சிவா.... என்று கூப்பிட்டு. அவன் கையை பிடித்தாள். அவள் கை நடுங்கிக்கொண்டே இருந்தது... இறுக்கமாக பிடித்தான்...அவள் பயத்தை போக்க...

என்னாச்சு...

இந்த பசங்க...என்னை...என்னை... வம்பு பண்ணுறாங்க..சிவா.

அவர்களை நோக்கி சிவா அடியெத்து வைக்க..

ஏய் அவன் புருஷனா இருக்கலாம் , வாடா போயிடலாம் என்று நான்குபேரும்...இரு வண்டியில் தொத்தி சென்றனர்..

வண்டியில ஏறு .....

நான் ஊருக்கு வரல சிவா...நான் எங்க அத்தை வீட்டுக்கு போகபோறேன்...
பிரச்சனை பார்த்து பயந்து போறே... அப்படியென்ன உன் பிரச்சனை..

கண்களில் கண்ணீர் கலங்க... அது என் பர்சனல்,எங்க குடும்பப் பிரச்சனை உனக்கு ஏன் சொல்லனும்.

அது உன்னுடைய விருப்பம்... இன்னிக்கு எப்படியும் போக முடியாது எல்லா இடத்திலயும் கலவரம் நடக்குது.. நம் ஊருக்கே போக முடியாது...

வா இங்க என் அக்காவீடு இருக்கு அங்க ஸ்டே பண்ணிக்கலாம்...ம்ம் பாக்கெட்டிலிருந்து மோதிரத்தை எடுத்து இந்தா உன் மோதிரம்...

நான் பணம் செட்டில் செய்யல .வேணாம் என்று தலையை ஆட்ட..

வச்சிக்கோ என்று அவள் கையை பிடித்து ,மோதிரத்தை தந்தான். உங்கப்பா பணம் கொடுத்திட்டாரு...வாங்கிக்கொண்டாள்...

கிளம்பலாமா......வண்டியில் இடைவெளியிட்டு உட்கார்ந்தாள்...இருவரும் கிளம்பினார்கள்... சிவா ரொம்ப தூரமா உங்க அக்கா வீடு...

டைரக்டா போனா சீக்கரம் போகலாம்... மெயின் ரோட்ல போகமுடியாது சந்துசந்தா தான் போகனும்..அரைமணி நேரம் ஆகும்...

சிவா எனக்கு ரொம்ப பசிக்குது... இங்க வந்து சாப்பிட்டுக்கலாம் கிளம்பி வந்தேன்... அட்லிஸ்ட் தண்ணீ இருந்தா கூட பரவாயில்ல. தொண்டை அடைக்குது...

ஒரு தெருவில கடைக்குலே வீடு இருந்தது. அந்த வீட்டு கதவை தட்டி சிவா ஜூஸ் பாட்டில் வாங்கினான்...தேங்க்ஸ் சிவா என்று வாங்கி குடித்தாள்.பிறகு சிறிது நேரத்தில் பங்களாவில் நுழைந்தார்கள்...

சிவா இதென்ன கலெக்டர் வீட்டிக்குள்ள போறோம்...
-----தெறிக்க விடுவான்...
 
Hi very nice, எழுதியிருக்கிறத பாத்தா நிறைய இருக்க மாதிரி இருக்கு, ஆனால் content ரொம்ப கம்மியா இருக்கு பா??
 
Hi very nice, எழுதியிருக்கிறத பாத்தா நிறைய இருக்க மாதிரி இருக்கு, ஆனால் content ரொம்ப கம்மியா இருக்கு பா??
நன்றி sis,next epi big sis,thk u for ur comments
 
Top