Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-05

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-05
ஊர் மக்கள் சலசலன்னு பேச... இதையெல்லாம் கேட்டு பல்லைக் கடித்துக்கொண்டு சிவா பார்க்க... பார்த்துக் கொண்டிருந்த பார்வை யாரை நோக்கி...கண்ணத்தில் கையை வைத்து ஒரமாக உட்கார்ந்திருந்த நம்ம வேலுவை நோக்கி...

எல்லாத்துக்கும் காரணம் நீதான்டா சித்தப்பா பார்வைகளால் திட்ட...
சத்தியமா எனக்கு ஒண்ணும் தெரியாது என்று கைகளால் சைகை செய்தான்...பாவிமக என்னை இவன்கிட்ட மாட்டிவிடறதுக்கே வந்திருக்கா....ஐந்து நாட்கள் முன்னாடி என்னாச்சு என்று வேலு விட்டத்தை தலை நிமிர்த்தி பார்க்க...

பாப்பா ஏன்டா இப்படி கண்கலங்க உட்கார்ந்திருக்க... ஏதாவது சாப்பிடுறீயா சொல்லுடா... எனக்கு மனசு கஷ்டமாயிருக்கு பாப்பா...

சித்தப்பூ நான் சொன்னா நீ தாங்க மாட்டே, எனக்கு சின்ன பிரச்சனை..
இந்த சிவா பையன் திட்டிட்டானா... உங்க அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திட்டானா...

இல்ல...
பின்னே ஏன்டா அழுற என்று அவள் கண்ணை துடைத்தான் வேலு...

நீ உன் மனச திட படுத்திக்கோ வேலு...எனக்கு ஹார்ட்ல ஒட்டை இருக்கு...
ஐயோ பாப்பா என்ன சொல்லுற... சினிமாவுல வர மாதிரி நீ செத்துடுவியா...

இல்ல... அது பெரிய ஒட்டை... எனது இப்பதான் சின்ன ஒட்டை வந்திருக்குன்னு கண்டுபிடிச்சேன்...டாக்டர் சொன்னாங்க அந்த ஒட்டையை அடைச்சிடலாமா...சரியா போயிடுமா.. ஆனா லேட்டா ஆச்சு சங்கு தான்.

“அவள் முகத்தை பார்த்து...என்ன பாப்பா இது உனக்கு போயி இப்படியா என்னால தாங்க முடியல.. உடனே உங்க அப்பாகிட்ட சொன்னீயா.”.

“இல்ல சித்தப்பூ , எங்க அப்பா என்மேல உயிரே வச்சிருக்காரு.. இப்படி என் நிலைமை தெரிந்தா அவருக்கு பி.பீ அதிகமாயிடும்.. என்னால அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா.”

“வீட்டில முதல்ல சொல்லனும் பாப்பா.”

“வேணா சித்தப்பூ.. இது சின்ன விஷியம்தான்..டெல்லியில ஆபரேஷன் ரெடி பண்ணிட்டேன் அங்கே என் அத்தை இருக்காங்க சித்தப்பூ.. அவங்க பார்த்துப்பாங்க... இரண்டு நாள் தான் திரும்பி வந்திருவேன்...யாருக்கும் தெரியாம போனோம் சித்தப்பூ..”.

எப்படிடா போவே...நம்ம சிவாகிட்ட ஐடியா கேட்கலாமா..

ஐய்யோ குடியே கெட்டிச்சி போ... மனதில் நினைத்து... “அவன் இதுக்கு ஒத்துக் மாட்டான்...”

என்ன செய்யலாம்... சித்தப்பூ கையை பிடித்து...” நீ தான் உதவி செய்யனும்...”

“நானா...”

“ம்ம்ம்... இப்ப மாடல் எக்ஸாம் நடக்குது, அதனால பாதி நாள்தான் காலேஜ்.. நான் தினமும் இரண்டு செட்டா டிரஸ் எடுத்திட்டு வந்து ஒரு பெரிய பேக்கல வச்சிறேன். அதை உன் கேன்டின்ல வச்சிக்கோ.”

வியாழக்கிழமை எக்ஸாம் எழுத்திட்டு இங்கிருந்து எஸ் ஆயிடுறேன் ... ஒகேவா...
“சரி பாப்பா...”

தன் பேக்கிலிருந்து டிராவல் பேக்கை எடுத்து இரண்டு செட் துணியை வைத்தாள்.,,
“என்ன பாப்பா எல்லாம் ரெடியா எடுத்துட்டு வந்திட்ட...”

“ம்ம்... இன்னும் டூ டேஸ் தான இருக்கு...”

அடுத்த நாள் இதேபோல் டிரஸ் சிறிய பையில் பணம் எடுத்து வைத்தாள்...
“என்ன பாப்பா ... அதான் ஒண்ணு ஆகாது சொன்னீயே.. முகத்தை இப்படி தூக்கி வைச்சிருக்கியே...”

“என்ன செய்யறது தெரியலை சித்தப்பூ..”

“இப்ப மூட் மாறனும்.. பாட்டு பாட வா... இல்ல நம்ம சர்வர் ரகு டான்ஸ் ஆடுவான் ஆட சொல்லட்டா..”

ம்ம்ம் சூப்பர்... இரண்டு டெபிளையும் ஒண்ணாக சேர்த்து செல்லில் பாட்டை போட்டு ஆடுனார்கள்... அங்கே கேன்டினில் வேலை செய்யும் ஆறு பேர் அதில் இரு பெண்மணிகளும்... சுற்றி கையை தட்ட கச்சேரி ஆரம்ப மானது..

“பாப்பா இப்ப நீ டான்ஸ் ஆடு...”

ஆடிட்டா போச்சி.. என்ன பாட்டுக்கு ஆடலாம். “வாத்தி கம்மிங் பாட்டு” .. மேலே ஏறி சக்தி ஆட...

கடைசி இசைக்கு வேலு மற்றும் கேன்டின் ஆட்களும் ஆட... வண்டியை விட்டு உள்ளே நுழைந்தான் சிவா.

சக்தி டெபிளில் ஆடிவதை பார்த்து ரௌதிரமாகி ...”ஸடாப் இட்” கத்த... ஐய்யோ முதலாளி என்று ஆளுக்கு ஒரு பக்கம் ஒட...

சிவாவை பார்த்த சக்தி மேலிருந்து குதித்து தடுக்கி சிவாவின் மேலே விழ..இதை எதிர்பார்க்காத சிவா பேலன்ஸ் தாங்காம இருவரும் கீழே விழுந்தார்கள்.

இறுக்கி அனைத்து சிவாவின் மேல் படுத்திருந்தாள் சக்தி விழுந்த வேகத்தில் அவன்..மெல்ல தன் முகத்தை நிமிர்த்தி யார் மேல படுத்திருக்கோம் என்று பார்க்க... என்ன பார்வை இது...உயிர் வரை தீண்டுதே..அவள் இமைக்காமல் அவனை பார்க்க..ஐயோ என்னடா கண்ணு சிவக்குதே...

“ஏய் எரும எழுந்திருடி.. சொகுசா மேலே படுத்திருப்பியா,எழுந்துருடி..”
“பால்கார்... தெரியாத மேலே விழுந்துட்டேன்...

“தெரிச்சே தான் விழுந்தே அவனை தள்ளி விட்டு எழுந்தாள். அவன் பாக்கெட்டின் மேல் லிப்ஸ்டிக் கரை...ச்சீ இதுல்ல கிஸ் வேற செய்யற...”

“என்னது ச்சீய்யா.. நானும் போனாபோகுது பார்த்தா... நீ தான்டா என் இடுப்பை பிடிச்சிட்டு இருந்த...”

நீ மேல விழுந்தா, நான் எதை பிடிக்க... மொத்தல்ல டெட்டால் போட்டு கையை கழுவனும்.அவளை கடந்து போக. அவன் சட்டையை பிடித்து இழுத்தால்... இதையெல்லாம் வேடிக்கை பார்த்து நின்றான் வேலு..

சட்டையிலிருந்து கையை எடுடி...நீ எப்படி சொல்லுவ என் ஹிப்ப பிடிச்சு நீ பிசையில்..
இல்ல... பொய் சொல்லாதடா...

சட்டையிலிருந்து கையை எடுடி...மாட்டேன் சாரி கேளு என்றாள்...ப்ளாரு அவள் கண்ணத்தில் அரைவிட...அவள் கை சட்டையிலிருந்து விலகி...தன் வலது கண்ணத்தில் வைத்தாள்...சிவாவை அடக்கினான் வேலு , மச்சான் பாப்பா பாவம் அடிக்காதே...திமிறிக்கொண்டே அவளிடம் சென்றான்.

கேன்டின்ல கூத்தா அடிக்கிற..போயி வெளியே கயிரு கட்டி டான்ஸ் ஆடு..தன் இடும்பை ஆட்டிக் காட்டி, போறவன் வரவன் காசு போடுவான்...

டேய்.. வாயை மூடுடா... என்னோட சாபம்டா... உனக்கு வர பொண்டாட்டி உனக்கு அடக்காத ஒடி போவாடா...

ஓ அப்படியா உனக்கு வர புருஷன்...உன் தலையில கல்ல தூக்கி போடுவான்டி...
நிறுத்து.. எனக்கு வர புருஷன், என் ஒரு முத்தற்காக நாய் மாதிரி என் காலையை சுத்திருப்பான்டா... உன்ன மாதிரியில்ல சைக்கோ..

போயிடுடி எங்கிட்ட அடி வாங்கியே சாகபோற...

போகாத உன்கிட்ட குடும்பமா நடத்த போறேன்... தெரிஞ்சே யாரென்னா குழியில விழுவாங்களா போடா...முகத்தை திருப்பி சென்றாள்.

ச்சீ சட்டை நாசாமா போயிடுச்சி, உள்ளே இருந்து வேற சட்டையை மாற்றினான்..போட்டிருந்த சட்டையை வேலு கையில் கொடுத்து உள்ளே வச்சிடு சித்தப்பூ.. எனக்கு வெளியே வேலையிருக்குன்னு சென்றான்...

மல்லிக்கா இந்த சட்டையை மடிச்சி உள்ளே வை...மல்லிக்கா சட்டையை எடுத்து போயி செல்பை திறக்க... இங்கே ஏதோ பேக் இருக்கு ..அந்த டிரவல் பேக்கில் பத்திரமாக மடித்து வைத்தாள்

......
அன்று மாலை கருணாகரன் இல்லத்தில்.... என்ன முடிவு எடுத்திருக்க சக்தி தன் அக்கா அவளிடம் கேட்க..

என்ன முடிவை எதிர்பார்க்கிற தேவி....அம்மா கொஞ்சம் வெளியே வா..
சக்தி கத்த வெளியே வந்தாள் கோதை... இவர்கள் இருவரும் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று தெரியும்...

தேவி ... இதை பற்றி அப்பா பேசட்டுமே... அது அவ வாழ்க்கை தேவிம்மா நீ புரியாதா பேசாதே...

ம்மா ... அக்காவுக்காக செய்ய மாட்டாளா..உன் பொண்ணு

சக்தி... தேவியை முறைத்து அக்காவுக்கு என்ன வேணாலும் செய்யலாமா தேவி.. உன் புருஷன் நல்ல ஏமாத்திறான் உன்னை..

மாமாவ பத்தி தப்பா பேசாத... எனக்கு குழந்தை வேண்டும்...

குழந்தை வேனும்னா தத்தெடுத்துக்கோ... அதவிட்டு உன் புருஷன் கூட படுத்துக்க சொல்றீயா..

சக்தி என்ன வார்த்தை பேசற... தேவிம்மா இவ சின்ன பொண்ணு.. நீ ரூமுக்கு போ சக்தி என்று அவளை அனுப்பிவிட்டாள். தன் பெரிய மகளை கோவித்து கொள்ள முடியவில்லை.. அவளுக்கு அறிவுரை சொன்னாலும் தேவி ஏற்கவில்லை...அப்படி மூளையை செலவை செய்திருந்தான் தயா...

முதல்ல கருணா வந்தவுடன் இதைப்பற்றி பேசனும் என்று முடிவெடுத்தாள் கோதை...
-----தெறிக்க விடிவான்.
 
நல்லா இருக்கு சக்தி கலாட்டா
தேவி லூசு ஏமாளி
இவங்களுக்கு பயந்து தான்
ஊரைவிட்டு போப்போறளா
 
Top