Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-03

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-03
சரியாக 11.15 மணிக்கு ஆறு பெண் தோழிகளோடு கேன்டின் உள்ளே நுழைந்தாள் சக்தி.

“சிவா வந்துட்டாளுங்க” , நீ போய் கவணி சித்தப்பூ...

எல்லோரும் மூனாவது டெபிளில் உட்கார, அவர்கள் அருகே வந்தான் வேலு, “ஹாய் சித்தப்பூ ஆடர் எடுத்துங்க” என்று சக்தி ஆரம்பித்தாள்..

“என்னடி சாப்பிடுறீங்க, முதல்ல 6 சமோசா, ஏய் 4 எக் பப்ஸ் சொல்லுடி ஒருத்தி கூற”, சரி என்று உள்ளே சென்றான் வேலு.

சிறிது நாழிகையில் அவர்கள் கேட்டதை டெபிளில் வைத்தான் வேலு.

“சித்தப்பூ இவளுக்கு சமோசா வேணாமா நாலு சமோசாக்கு பதில் 2 எக் பப்ஸ், 6 வெஜ் பீட்ஸா, அதை கொண்டு வந்தான், இந்த பீட்ஸா வேணாம்மா 3 சமோசாவே கேட்றீங்கா வயிறு சரியில்லையாம் சித்தப்பூ...ஹீஹீஹீ சிரித்தாள், சீக்கீரம் டைம் ஆயிடுச்சு. ஹாங் இந்த இரண்டு பப்ஸ் எடுத்துட்டு அதுக்கு பதில் வெஜ் ரோல் எடுத்துட்டு வாங்க.”
ம்ம் சாப்பிட்டுக் கொண்டே “பில் எவ்வளவு ஆச்சு சித்தப்பூ”.

“இரு நீ மாத்தி மாத்தி கேட்டு எல்லாம் மறந்துப்போச்சு பொறு யோசிக்கிறேன் “…மண்டையில் பேனாவை தட்டிக்கொண்டே யோசித்தான் வேலு ,முதல்ல என்ன ஆடர் செஞ்சா....

“நான் சொல்லுறேன் சித்தப்பூ நாங்க சாப்பிட்டது 3 சமோசா, 2 எக் பப்ஸ், 2 பீட்ஸா, மொத்தம் 190 ரூபாய் பத்து ரூவா டிப்ஸ் எடுத்துக்கோ சித்தப்பூ”...

இவளுக்கு பாரேன் கொழுப்பை டிப்ஸ் தரியா நீ,
“அப்படியா பில்லு எடுத்துட்டு வருவான் எங்க ஆளு.”

“ம்ம் அது யாரு சித்தப்பூ உன் ஆளு எனக்கு தெரியாம இந்த காலேஜில... சீக்கீரம் வரச்சொல்லு டைம் ஆகுது”.

அவர்கள் அருகில் வந்தான் சிவா, ஐய்யோ இவனா எப்ப வந்தான் சக்தி பயத்த வெளியே காட்டாத சமாளி..”மொத்தம் நீங்க 470 ரூபாய்க்கு சாப்பிட்டு இருக்கீங்க....”

“என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு 3 சமோசா, 2 எக் பப்ஸ், 2 பீட்ஸா இதுக்கா இவ்வளவு பணம்”.

“நீ அத மட்டுமா சாப்பிட்ட,ஏன் மாத்தி மாத்தி ஆடர் செய்யற.ஒருவாட்டி ஆடர் செஞ்சத ஏன் வேற எடுத்திட்டு வர சொல்லற”,

“நான் என்ன செய்யறது சமோசா சாப்பிட்டேன் நல்லாவேயில்ல சரி பப்ஸ் சாப்பிட்டு பார்க்கலாமே ஆடர் செஞ்சா, அதுக்கு சமோசாவே பட்டரா இருக்கு. சரி இந்த பீட்ஸானாச்சும் நல்லா இருக்கும்மா நினைச்சு அதை எடுத்துட்டு வரச்சொன்னேன்.. கடைசியில அதுவும் நல்லாவேயில்ல. உன் கேன்டின்ல்ல தண்ணீ மட்டும்தான் நல்லாயிருக்கு மிஸ்டர் பால்கார்”.

பல்லை கடித்துக்கொண்டே “நீ ஒண்ணுமே சாப்பிடல...நீ என்னன்ன சாப்பிட்டியோ அது கேமிராவில பதிவாயிருக்கு காட்டவா”.

“நாங்க வரோம்டி…” வனியை தவிர எல்லோரும் நழுவி சென்றார்கள்.இந்தா உன் பில் 470 ரூவா..அவளிடம் நீட்ட.

தப்பு என்மேலயில்ல வேலுக்கு, கணக்கு ஒழுங்கா போட தெரியில பால்கார்.

“என்ன எப்ப பார்த்தாலும் பால்கார் , பால்கார் ஏலம் போடுற விட்டேன்னா வை கண்ணம் பழுத்துடும்”.

“இதென்டா வம்பா போச்சு, பூவிக்கிறவங்களை பூக்கார் , மீன் விற்கிறவங்களை மீன்கார் தான் சொல்லுவோம்”.

சிவா ,இதோ வனி கூப்பிடற மாதிரி அண்ணா சொல்லு.
“அண்ணாவா என தன் முகத்தை சுளித்து.. சுமாரான பிகரையே அண்ணா சொல்ல மாட்டேன், நீ வேற காலேஜ் டாப் பிகரு. உன்னை போய் அண்ணா கூப்பிட்டா என் கொள்கை என்னாவது. வேனும்னா உன் பெயரை சொல்றேன். ஷிவ்வா” என்று கீழ் உதட்டை கடித்து கூறினாள்.

“அவள் உதட்டை கடிப்பதை பார்த்து வேணாம் நீ ஏதோ மாதிரி சொல்லுற.அப்படி பெயர சொல்லாத...”

இவ பேசிட்டே இருப்பா,வனியிடம் திரும்பி ,”இப்ப என்ன கிளாஸ் வனிதா.”

தன் தலையை தாழ்த்திக் கீழே பார்த்து சொன்னாள்...அக்கௌன்ட்ஸ் அண்ணா...

“ஏன் கிளாஸ் போகாத இந்த பொண்ணோட சுத்தற, நீ எந்த மாதிரி சூழ்நிலையில படிக்கிற தெரியுமில்ல,இதோ இவளுக்கு படிக்கனும் அவசியமில்ல அப்படின்னு மேதாவி நினைக்கும். உன் படிப்புதான் உனக்கு வாழ்க்கை தெரியாதா”.

“சாரி அண்ணா இனிமே இந்த தப்ப செய்ய மாட்டேன், நான் ஒழுங்க கிளாஸ் போறேன்”, சக்தியை அங்கே விட்டு கிளம்பினாள்.

இப்ப சக்தியிடம் திரும்பி...ம்ம் கேன்டின் விட்டு வெளியே போடி.
“ஹலோ இது என் காலேஜ் மைன்ட் இட்”.

“இது உனது மட்டுமில்ல மொத்தம் ஐந்து பார்ட்னர் சேர்ந்தது தான் இந்த காலேஜ் அது தெரியுமா உனக்கு”. முறைத்துக் கொண்டே வெளியே சென்றாள் சக்தி. நம்மளால தான் வனி படிக்கல என்ற மாதிரி பேசுறான்... வனிய எப்படியாவது பாஸ் செய்ய வைக்கனும்...
வகுப்பறையில்,” ஏய் வனி ஏன்னடி அழற”...அண்ணன் சொல்லறது தான் சரி சக்தி..
பெரிய அண்ணன் அவனெல்லாம்... ஆமாம் இந்த காலேஜிலே நீ மட்டும்தான்டி அவனை அண்ணே சொல்லுற, எப்படி திட்டுறான் பாரு.

“அண்ணா மட்டுமில்லடி தெய்வம்...நான் இங்க படிக்க வரேன்னா... அண்ணாதான் காரணம்.”

“என்னடி சொல்லற”, கண்களை விரித்து பார்த்தாள் சக்தி.

“ம்ம்ம்... எனக்கு அப்பா,அம்மா இல்ல சக்தி அண்ணா பரணி மட்டும்தான் , என்னைவிட அண்ணா பத்து வருஷம் பெரியவங்க. என்னை பார்த்துக்க ஆளில்லாததால அண்ணி மஞ்சுவ கல்யாணம் செஞ்சாங்க. நாங்க வசதியில்லாத குடும்பம், முதல்ல ஸ்கூல் அனுப்பல அண்ணி, அப்பதான் சிவா அண்ணா இந்த ஊருக்கு வந்தாங்க, அவங்க மாட்டு பண்ணையில தான் அண்ணா வேலைக்கு சேர்ந்தாங்க.நான் பத்தாவது முடிச்சவுடன் எங்க அண்ணி அவங்க தம்பிக்கு என்னை கல்யாணம் செஞ்சிடலாம் பரணிக்கிட்ட கேட்டாங்க. எங்க அண்ணா பொண்டாட்டி பேச்சை அப்படியே கேட்கும்... அவங்க தம்பி பயங்கர குடிக்காரன்”.

அப்ப நான் சிவா அண்ணாகிட்ட சொன்னேன். சிவா அண்ணா நேரா என் அண்ணிக்கிட்ட கூட்டிட்டு போனோங்க. உன் பொண்ணா இருந்தா நீ கொடுப்பியா கேட்டாங்க. எங்கிட்ட பணமில்ல இவள எப்படி கல்யாணம் செய்யறது எங்க அண்ணி சொன்னாங்க.
“இவ என் தங்கச்சி , நான் இவளை படிக்க வச்சிடுவேன்.. அவ படிச்சி முடித்து அவ வாழ்க்கையை தேர்ந்தேடுப்பா. நீ அவளுக்கு எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லன்னு சொன்னார்.அப்பறம் இப்ப காலேஜ் படிக்க வைக்கிறார். அழதுக் கொண்டே சொன்னாள். தினமும் அண்ணி ஏதாவது பிரச்சனை கொடுப்பாங்க சக்தி...எப்படா காலேஜ் வருவோம் இருக்கும்”.

“சரிடா வனி அழாத, இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் , படிப்பு முடிச்சு நல்ல வேலைக்கு போவே நானே உனக்கு வாங்கிதரேன். ஒகேவா. சிரி ப்ளீஸ்... இந்த அழு மூஞ்சி நல்லாவே இல்ல”.

இரண்டு நாள் சென்று...கேன்டின் வெளியே நின்று சக்தி.,

“அண்ணா.... வேலு அண்ணணா...”.என்று கூப்பிட

“யாருருரு!!!...யாரு என்ன அண்ணா கூப்பிடது.
“நான்தான் சக்தி அண்ணா..”. முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, நான் உள்ளே வரலாமா..
“நீயா வாம்மா...”

சுமாரான பிகரையே அண்ணா சொல்லமாட்டேன் சிவாகிட்ட சொன்னே...சக்தியை பார்த்து கேட்டான்.

பயபுள்ள உஷாரா இல்ல இருக்கான். “அது பாசத்த காட்டுறாங்க பாரு அவங்கதான் அண்ணா. உன் கண்ணுல பாசத்தை பார்க்கிறேன் சித்தப்பூ”.
“ம்ம் அப்படியா தெரியுது...”

“உனக்கு ஒண்ணு தெரியும வேலுண்ணா... பொறந்திலிருந்து இந்த அண்ணன் பாசத்தை பார்க்காத பாவிண்ணா நான். பாசமலர் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை, பத்து முறை பார்த்திருப்பேன். இந்த மாதிரி ஒரு அண்ணா நமக்கு கிடைக்கிலையே ஏங்கியிருக்கேன். உங்கள பார்த்தவுடன் இந்த கடவுள் வேலுவை அனுப்பிச்சிட்டான் நினைச்சேன். ஆனா நீயும் என்னை வெறுத்திட்ட அப்படிதானே.

...ம்ம் அப்படியில்ல சக்தி...எங்கம்மாவுக்கு நான் ஒத்தபுள்ள சக்தி...நமக்கு ஒரு தங்கச்சி பாப்பாயில்லையே நானும் அழுதிருக்கேன்... நான் உன்ன பாப்பா கூப்பிட்டா..

அப்படியே கூப்பிடு அண்ணா அது என் பாக்கியம். அண்ணா நான் இன்னும் சாப்பிடேவேயில்ல,பசிக்குது அண்ணா வயிற்றில் கையை வைத்து.. தன் கண் இமையை அடித்து பாவமாக கேட்க.

ஐயோ! என் சக்தி பாப்பா சாப்பிடலையா.. வா உட்காரு நான் போய் மீல்ஸ் எடுத்துட்டு வரேன். வந்த சாப்பாட்டை கேப் விடாமல் சாப்பிட்டாள்.

சக்தி உனக்கு மட்டும்தான் அண்ணா , இந்த காலேஜில மற்ற பொண்ணுக்கு கிடையாது.சரியா... ம்ம்ம் , சாப்பிடும்போது புரையேர...அவள் தலையில் தட்டிவிட்டு மெதுவா சாப்பிடு பாப்பா..

“ஏன் பாப்பா எப்ப பார்த்தாலும் சிவாகிட்ட சண்டைக்கே போறே... அவன் ரொம்ப நல்லவன்டா...இது மட்டும் உன்கிட்ட எனக்கு பிடிக்காதது. நீங்க இரண்டுபேரும் ஜோடியா நின்னாவே”.

ஐயோ, சித்தப்பூ உன் வாய்ல அப்படி சொல்லாதே, அப்படி நினைக்கவும் நினைக்காதே.. கனவுல கூட எனக்கு ஒத்துவராது..
ஏன்ம்மா..

அவன் சட்டைக்கு கஞ்சி போடறதுமில்லாத வயித்துக்கும் மூனு டம்பளர் ஊத்திக்குவான் போல விரப்பாவே இருப்பான். ஏன் உனக்கு இந்த விஜய்,அஜித், சூர்யா,தெலுங்கு ஆக்டர் விஜய் தேவர்கொண்டா,நிவின் பாலி...அவங்க எல்லாம் கண்ணுக் தெரியிலையா... அவங்களுக்கு ஜோடி சேர்த்து பாரு...

“பாப்பா அவங்களுக்கு எல்லாம் , கல்யாணம் ஆயிடுச்சே என்ன பண்ணறது..”.
“விடு... எனக்கு ஒருத்தன் இனிமேவா பிறக்க போறான். ஆல்மோஸ்ட் வைட்டிங்கல இருப்பான்”.

சக்தி நீ வழக்காம சித்தப்பூன்னே கூப்பிடு, சிவாகிட்ட எதுவும் சொல்லாதே, அவன் திட்டுவான்...உன்னை நம்ப கூடாது சொல்லிருக்கான் பாப்பா...

கேடிப் பையன் எப்படி பிட்டு போட்டு வச்சிருக்கு மனதில் ஓடவிட்டு...சரி “சித்தப்பூ நான் வரேன்”. போகும் அவளை நிறுத்தி...இரு இரு இன்னிக்கு நம்ம கேன்டின்ல ரோஸ்மில்க் போட்டிருக்கான் சிவா. குடிச்சிட்டு போ சக்தி பாப்பா”.

-----தெறிக்க விடுவான்
 
சக்தி பாப்பா பாவம் சித்தாப்பூ..விட்டுருமா...???
 
Top