Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா பகுதி - 6

Advertisement

பகுதி - 6

தன்னிலிருந்து மருதவேலை பிரித்தெடுத்த பாண்டியன். "பேச்சு, பேச்சு தான் இருக்கணும், மீறி உன் கை என் மீது பட்டது. அப்புறம், கை இருக்காது எதுக்கும் ...... எதுக்கும் என்ற வார்த்தையில் .. கழுவதற்கு என்ற மறைபொருளுடன் ... அழுத்திக் கூறியவன் .. சற்று இடைவெளி விட்டு ..ஜாக்கிரதை என கர்சிக்க....

அவனின் கோப முகமும், நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்த விதமும், கண்களில் தீப்பொறி பறக்க.
மருதவேலை பார்த்த விதமும்,அவன் சொன்னதை செய்வான் .. சற்று தள்ளி நின்றே பேசு..என மருதவேலின் மூளை அவரை பயப்படுத்த .. சற்று அவனிடமிருந்து விலகி நின்றார்.

அடுத்து பாண்டியன்,
"கார்ட்ஸ்" என அலறிய சத்ததில்,
மருதவேலுக்கு பின்னால் நின்றிருந்த இருவர் ..பதற்றத்துடன் பாண்டியன் முன்னே வந்து நின்றனர் ...

என்ன வேலை பார்க்கிறிங்க.. உங்களை மீறி எப்படி இந்தாளு உள்ளே வந்தான். இது தான் நீங்க வேலை பார்க்கிற லட்சணமா ...என பாண்டியன் குரல் உயர்த்த .,

இல்ல சார்.. அது வந்து .. "ச.... " ...
என பாதுகாவலர் சத்யாவை பார்த்துக் கொண்டே.... ஏதோ கூறவிழைவதற்குள்....

அவரை மேற்கொண்டு சொல்ல விடாமல் இடைவெட்டி, "சரி, சரி . இனி யாரையும், என் பெர்மிஸன் இல்லாம... வீட்டுக்குள்ள விடக் கூடாது" போங்க.... என்றவன் ...

மருதவேல்யிடம் திரும்பி .. "யாருய்யா.. நீ.?.. என் வீட்டுக்குள்ள புகுந்து .... என் சட்டையைப் பிடிக்கிற.. அவ்வளோ ....பெரிய பருப்பு?..
என அவரை தெரியாதது போல நக்கலாக கேட்டான்.


அவனின் நக்கல் குரலில், கொதித்தெழுந்த மருதவேல்.

" பொறுக்கி, பொறம்போக்கு நாயே' ., எவ்வளவு ஏத்தம் இருந்தா,
என்கிட்டயே... வாலாட்டி இருப்ப.. ரெய்டு வரது. மக்களை எனக்கெதிரா தூட்டி விடுறது.. இதுயெல்லாம் எனக்கு சப்பை மேட்டருடா... முழுசாக என்னைப் பத்தி தெரியாம என்கிட்ட மோதிட்ட ; இனி எப்படி சின்னாபின்னமா' ..
அவுறேன்னு பாருடா.... என பாண்டியனை கொல்லும் வெறியோடு மருதவேல பார்த்துக் கத்தினார் ..

அடுத்ததாக,,,,

இவ்வளவு நேரம், தந்தை தனக்காக வந்து, பாண்டியனோடு சண்டை போடுகிறார் என மனதில் நிம்மதி பரவ நின்றிருந்த .... ரதியை நோக்கி..

"இந்த பரதேசிக்கு, நீயும் உடைந்தையா?... இவன் கூட இருக்கம்ணு தான் எனக்கெதிரா..... இவன் கூட சேர்ந்துக்கிட்டு ..இவ்வளவையும் எனக்கெதிராக., பண்ணியா? ... ஒத்த பொண்ணு உன் மேல் அதீத நம்பிக்கை வைச்சதுக்கு ... என் புத்தியை
செறுப்பால அடிச்சுக்கனும்.... நம்பிக்கைத் துரோகி .." என
நெருப்புத் தூண்டுகளை வார்த்தைகளாக்கி ..ரதியின் மீது கொட்டினார் மருதவேல் .


தந்தையின் பழி சொல்லில், வேரற்ற மரம் போல், அப்படியே சுவரில், சாய்ந்து..... அழ ஆரம்பித்தாள் ரதி..

அவளின் அழுகையை; வெற்றுப் பார்வை பார்த்து விட்டு .. மருதவேலை
நோக்கிய பாண்டியன் ... "யோவ், நான் மட்டும் தான் ... உன்னை . பழி வாங்க .. ஒவ்வொன்னா... பண்ணிட்டு இருக்கேன்.. இதுல இவ ஒண்ணும், கூட்டு கிடையாது ... உன்னை காப்பாத்த .. குறுக்கே வந்து .. ஐ மீன் .. உன் சொத்தை காப்பாற்ற .. இங்க இருக்குறா.... என்.. .... என ஏதோ கூற வந்து.....
சிறிது இடைவெளி விட்டவன். இங்கிருந்து .. இவளை கூட்டிட்டு, போ, பெரிசு.,, அப்புறம் இன்னொரு பெரிய்ய ஆப்பா... உன்னோட மொத்த சாம்ராஜ்ஜியமே தரைமட்டமா' ... ஆகுற மாதிரி ....நீ எந்த வகையிலுமே எந்திரிக்க முடியாதபடி உனக்கு செதுக்கி வைச்சுருக்கேன் ... முடிந்தால் கண்டுபிடி. நாலு நாளைக்குள்ள ..... கண்டுபிடிச்சாலும், சரி; இல்லைனாலும் சரி.. 5-வது நாள் உன்னோடது எல்லாம்,
என்னோடது "....என மருதவேலின் முக மாறுதலைப் பார்த்துக் கொண்டே ..கூறினான்.

அவன் கடைசியாக கூறியது ....
மருதவேலின் மண்டைக்குள் .. முன்னுக்கு வர .. முன்னே சொன்ன .. மகள் பற்றிய விஷ்யமும், பழி வாங்க தான் .என்ற பதமும்...... பின்னுக்குத் தள்ளப்பட்டு .. " பெரிய ஆப்பு...உன் சாம்ராஜ்ஜியம் எனக்கு .." வார்த்தைகள் கோர்வையின்றி, மருதவேலின் மனதில் உலா வர... இன்னும் மீள முடியாதபடி என்னடா பண்ணி வைச்சுருங்க.. என பெருங்குரலெடுத்து கத்தினார் ..


பாண்டியனோ... நகைத்துக் கொண்டே சென்று, ஹால் சோபாவில்,கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக அமர்ந்து, தன் காலைப் பார்த்து, "யோவ், நீ என்
காலுல விழுந்து கேட்டாக் கூட சொல்ல மாட்டேன்" என்று பலமாக சிரித்தான்...


சாதாரணமானவன்.. ஏதோ தொழில் பொறாமையில் சின்ன, சின்ன இடையூறு செய்கிறான்.. நேர்ல
மிரட்டிப். பார்க்கலாம், இல்லனா .. ஆளை வைச்சு கை, காலை உடைத்து பயப்படுத்தலாம்.. என நினைத்து வந்தவருக்கு ... கடைசியாக அவன் சொன்ன தோரணை, வெறும் வெற்று மிரட்டல் இல்லை என்பது சந்தேகமின்றி தோண.,,,,,


இவனிடம் இனி இதைப் பற்றி கேட்டு பயன் ஒன்றும் இல்லை, என்று ... முடிவெடுத்தவர் ....இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த, சத்யாவின் கன்னத்தில் அறைந்து .. " மொத பிரச்சனை அப்போவே.... தீர விசாறினு
சொன்னேன்.... ஒண்ணுமில்லனு சொன்ன .. அடுத்தடுத்த பிரச்சனையின் போது, ஏதுதேதோ... காரணம் சொல்லி, உடம்பு முடியாம இருந்த நான் உன்னை..... பார்த்துக்க
சொன்னதுக்கு ... படுபாவி இப்ப இங்க கொண்டு வந்து நிறுத்திட்ட .. அனாதை நாய்யிக்கு ஆதரவு கொடுத்து, சோறு போட்டு வளர்த்ததற்கு நன்றி கடன்
செலுத்திட்டடா ... என்று விட்டு ..இவ்வளவு நேரமாக அசையாமல் அமர்ந்திருந்த வானதியை உக்கிரமாகப் பார்த்தார் ... எங்கே தன் சொத்துக்கு .....இவளாலும், பாண்டியனாலும் ....ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று .... ..

அவளோ, இவ்வளவு நேரமாக ,, அங்கு நடக்கும் போரை கவனிக்காமல் ... தன் மனதினுள் ...

"இத்தனை வருடங்களாக தன்னை அன்போடும், நெஞ்சத்தில் உயிர்யென தாங்கி. வளர்த்திய தந்தை.. எங்கே போனார்..
உலகமே. என்னை தவறாக கூறியிருந்தாலும்.. பெற்ற தாயிடம், ஒரு பெண் அத்தகைய வார்த்தையை,,, கூறி இருந்தால், இப்படி தன் மகள் பேசுபவள் இல்லையே, அப்படியிருக்க..... ஏன் இப்படி கூறினாள் :,,,,, என, அதை ஆராயந்து, அவள் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளா?... என ஏன்? சிந்திக்கவில்லை. அவருடன் தான் அனைத்து பிரச்சனைகளையும் ..சரி செய்ய பாடுபட்டேன் .... நொடியில்.. அனைத்தையுமே மறக்க என்ன காரணம்.. என தன்போல் கண்ணீரை சிந்தியவாறு, யோசித்துக் கொண்டிருந்தாள் வானதி ..

அப்பொழுது தந்தை அழைத்த ..' நாச்சி" என்ற சப்தத்திற்கு நிகழ்காலம், வந்தவள்.. தந்தை தன்னை புரிந்து, கூட்டி செல்ல கூப்பிடுகிறாவென்று.. அவசரமாக எழுந்து அவரருகே நின்றாள் மலர்ந்த முகத்துடன் ..

இதை கவனித்த பாண்டியன் முகத்திலோ, "ஒரு கசந்த முறுவல் வெளிப்பட்டு மறைந்தது "...

"இவன் எனக்கு எதோ பெரிய ஆப்பு வைச்சுருக்கானாம்.. நான் பாரு திரும்ப முட்டாளா... உனக்கிட்ட சொல்லுறேன் .. உன் ஆசை காதலன் .. அவன் போட்ட திட்டம் உனக்குத் தெரியாமையா இருக்கும். நெஜமாவே .. உங்கம்மா.. உன்னை எனக்கு ெ பத்திருந்தா... என் இரத்தம் உன் உடம்பில் ஓடுனா.. சொல்லு, இவன் என்ன பண்ணி இருக்கான் எனக்கு எதிராக ?... தான் பேசும் தரம் தாழ்ந்த வார்த்தைகள், மூலம் தன் மகளின் மனதிலிருந்து தான் தந்தை ஸ்தானத்திலிருந்து, இறங்கி....' பண வெறி' பிடித்த அரக்கனாக மாறிக்கொண்டுயிருப்பது... அறியாமல் ரதியை பற்றி உலுக்கினார் ..

தன் தந்தைக்கு... மகள்பாசம், மகளின் மனம், மகளின் நலன்,மனைவியின் மானம் .. இது எதுவுமே முக்கியமில்லை அவருடைய சொத்திற்கு முன்.. என்ற முடிவுக்கு வந்தவள்.. கண்மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ..

"எனக்கு எதுவும் தெரியாது"..... என்றவள் அப்பா என்ற வார்த்தையை முழுங்கி இருந்தாள்..

"பெத்த அப்பனை விட....உனக்கு ஆம்பிளை சுகம் பெரிசா .. போச்சா.. பார்த்துக்கிறேன்.. உங்க இரண்டு பேரையும், என்றவர் ..பாண்டியன் முன் சென்று, "என்னைப் பத்தி முழுசா தெரியலை உனக்கு.. கூடிய சீக்கிரம்... நான் யாருனு காட்டுறேன்" ... என கத்தி விட்டு வெளியேறினார்..

அப்பொழுது,சத்யா.. ரதியையும், பாண்டியனையும் பார்த்து, செய்கையில் ஏதோ .. செய்ய ... அவனை அடிக்க பாண்டியன்எழுவும், விருட்டென்று மறைந்தான் சத்யா..

இவர்களின் செய்கையை, ரதி பார்த்திருந்தாலும்; அவளின் மனமோ?.. ....தனக்கு உயிர் கொடுத்த உறவு, பொய்த்துப் போனதில், உள்ளம் துடிதுடித்துக் கொண்டிருந்தது தரையில் போட்ட மீனாக.. தந்தையின் பாசம் எனும் சுவாசம் இழந்து ..

அப்போது, அவளருகே வந்த பாண்டியன், அவளின் கைப்பற்றி; ஒன்றை கூற..... அதில் சித்தம் தெளிந்து தூக்கி வாரி போட.... நிமிர்ந்தாள் ...

._ பகை தொடரும்......
Nirmala vandhachu ???
 
போன epii களுக்கு - லைக்ஸ் .ஹார்ட், காமெண்ட் போட்ட.... அனைத்து....அன்பு வாசக நெஞ்சங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...
??
போன epii களுக்கு - லைக்ஸ் .ஹார்ட், காமெண்ட் போட்ட.... அனைத்து....அன்பு வாசக நெஞ்சங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...
Nice??
 
Top