Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 15)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-15

வைர அட்டிகை, மோதிரம் .. தங்ககாப்பை நான் தான் உனக்கு அணிவித்தேன்.. என் அன்னை தான் உனக்கு....
." வானதி நாச்சியார்" .. என்ற என் தந்தையின் அன்னை, பெயரை .. எங்கள் குலம் செழிக்க... அதாவது .... ... நகை அணிவித்து .. எங்கள் குலப் பெயரை வைத்து .. என அவன் முழுதாக முடிப்பதற்குள் . ... " மடீர் " என .. அவன் பின்னந்தலையில் ..யாரோ ?... அடித்தார்கள் ...

சுற்றுப்புறம், மறந்து தன் , வேதனையை.... ரதியிடம் கொட்டிக் கொண்டிருந்தவன்..... இன்றைய அதீத மன உளைச்சலால் தன் பின்னே.. வரும் ஆபத்தை.... நிதானிக்க தவறியிருந்தான் பாண்டியன் ...

தன் மண்டையில் ..தீடிரென்று. பளிச்சென்று .. மின்னல் தாக்க.. அதனால் உண்டான ..வலியில் .... மண்டைக்குள் புகம்பம் ... வெடிக்க.... பின்னந்தலையில், கையை வைத்து . அழுத்தியவாறே .... "ஏய் " என்ற அலறலுடன் .... தன்னை தாக்கியது யார்?.. என பாண்டியன், திரும்ப....

அங்கே, 'பாவை' வெண்கல அலங்கார சிலையை, தலைகீழாகப் பிடித்தவாறு, கொலை வெறியோடு நின்றிருந்தார். மருதவேல் ..


உனக்கு நான் தான் நகை, அணிவித்தேன்.. என்று அவன் ...கூறிய... வார்த்தைகளில் ... அந்நாளைய நினைவுக்கே.. சென்று... இருவரின், குழந்தைப் பருவத்தை மனக்கண்ணில் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் .... பாண்டியனின் . ஏய் ... என்ற சத்தத்தில், திடுக்கென்று, தூக்கி வாரிப் போட.. கற்பனை கலைந்து.... நிமிர்ந்து பாண்டியனைப் பார்த்தாள் ....

அங்கே., இரத்தம் வழியும், முகத்தோடும், பின்னந்தலையில் அழுத்திய கையோடும், மருதவேலை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்... அவன்..

, தன் தந்தை தான் அவனை அடித்து .. காயப்படுத்தி விட்டார் .. என இரத்தம் வழியும் அவனின் .... தோற்றத்தில் ....கலங்கிய இதயத்தோடு, கண்கள் குளமாக... அவனை நோக்கி... ஓடிச் சென்றவள் ... அவன் தோளைப் பற்ற முயல, அதற்குள், அவளின் கைகளைப் பற்றி, தன் பின்னே., நிறுத்தியிருந்தார்.. மருதவேல் ..

இரத்தம் வழிய..... நின்று இருந்த பாண்டியனைப் பார்த்தும்..... தன் தந்தையின் கோர.. முகத்தையும் பார்த்து...... சிலையாக நின்றிருந்தவளின் ..முன்..
சொத்திற்காக ரதியை ஏதாவது ... செய்து விடுவாரோ .. என எண்ணி... அவரைத் தள்ளி விட்டு ... அவளுக்கு அணையாக நின்றான்.,,, தன்னை மீறி தான் அவளைத் தொட வேண்டும் ... என்னும் பொருளில், நெஞ்சை நிமிர்த்தி .. மருதவேலை...
அந்நிலையிலும், தீயாக முறைத்தான் .. பாண்டியன் ..

மருதவேல்,..,,,,"இத்தனை வருஷம் கழிச்சி ..வந்து ..அவ....மகன்னு...
சொன்னா.. வாப்பானு.. தாம்பூலம் .. வைச்சு .. அழைப்பேனா?... அன்னிக்கே .. உன்னைத் தேடி..கொன்னுயிருக்கனும் °." பச்.." என்று சலித்தவர்.,,இப்போ .. சரி பண்ணிடறேன்.. என்றவர் .. சட்டென்று.. வேட்டியில்..மறைந்து வைத்திருந்த... கத்தியை எடுத்து ..பாண்டியனை குத்த வர..

அவரின் .. பார்வையை வைத்தே .. அடுத்ததாக .. அவர் செய்யவிருக்கும் " செயலை அனுமானித்தவன்,,, பட்டென்று .. அவரருகே . ... சென்று....கத்தியைத் தட்டி விட்டு .. அவரின் ... கழுத்தைப் பற்றி.. சுவரோடு சாத்தி.. தூக்கியிருந்தான்.

பொணம் தின்னி பேயே!.. இன்னும் .. முதுகுல குத்துற பழக்கம் போல இல்ல உனக்கு.. எப்படி போகும்.. பணம்னா.. நீ பிணத்தைக் கூட... தின்னும்.. மிருகம்டா.. எப்படிடா.. சோறு போட்டு.. உன்னை வாழவைச்ச..என் அப்பாவை .. துடிதுடிக்க..கொல்ல முடிந்தது.என் அம்மாவை .. என.... மேற்கொண்டு சொல்ல முடியாமல்.தழுதழுத்தவன்.


10-வருஷத்துக்கு முன்னமே... உன்னை துண்டு, துண்டா.. வெட்டிப் பொலிப் போட்டு இருப்பேன் ... அப்படி செய்தா?... என் தெய்வத்தோட... வளர்ப்பு ... பொய்யா போயிடகூடாதுனு .தான் ... அதை செய்யவில்லை..... அதுக்குப் பதிலாக..... இந்த சொத்தை... முழுவதும் உன்கிட்ட... இருந்து... பறிச்சாவே.. நீ நடைப்பிணம்டா.. இதைவிட சிறந்த தண்டனை வேறு இல்லைடா உனக்கு -என்று கர்ஜித்து விட்டு,

தன் கைக்கடிகாரத்தின் ..மூலம் .. ஆபத்து ஒலியை எழுப்ப... அது வீடு முழுவதும் போட்ட.. பீப் .. சத்தத்தில் .. மார்னிட்டர் மூலம் ... பாண்டியன் எங்கிருக்கிறான் .. என....
லொக்கேஷேனைப் பார்த்து... துப்பாக்கி ஏந்திய கார்ட்ஸ்கள் தப, தப வென....மேலே ஓடி வந்தார்கள். ..

மேலே,...வந்த வேகத்தில் ... ஒருவர் ...இரத்த வெள்ளத்தில் நின்றிருந்த பாண்டியனைப் பிடித்துக் கொள்ள.. .. அவனின் இந்த நிலைக்கு காரணமான .. அவனுக்கு ..எதிரே நின்றிருந்த மருதவேலை இருவர் .. பிடிக்க .. 5-வது ... நபர் .. மருத வேலை சுட.. துப்பாக்கியை நீட்ட..

" டோண்ட்ஷுட் " .. எனக் கத்தினான் பாண்டியன்

அவனின் " கட்டளைக்கு கீழ்படிந்தவர்,, துப்பாக்கியை கீழே, இறக்கி.. அடுத்து . "என்ன செய்ய " என்பது போல்...பாண்டியனைப் பார்த்தார் ..

என்னோட வக்கீல் வரும் வரை ..வீட்டு காவலில் வையுங்க... எந்த சூழ்நிலையிலும் .. அடிக்கவோ ..
மிரட்டவோ .. செய்யாதீங்க. .என்றவன். தன்னை ...பிடித்திருந்தவரிடமிருந்து ..விடுவித்து ..

ரதியிடம் தள்ளாடியபடியே சென்றவன். "உன்னை தவறாக பேசியதற்கும், மிரட்டி கையெழுத்து வாங்கியதற்கும்". .. என்ைன மன்னிச்சுடு.. எனக் கூறிக் கொண்டே... எப்போதும், போல் .. எதையோ எதிர்பார்த்தப்படியே ..அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே .. அவளின் காலடியில் மயங்கிச் சரிந்தான்.

மயங்கியவனை.. தன் மடித்தாங்கி ..
" அழகா".. என தன் மனதில் உறுப்போட்ட.. அவனுக்காக.. காதலாக ..வைத்த செல்லப் பெயரைச் சொல்லி .. அந்த வீடே .. அதிரும் படி கத்தியிருந்தாள் .... வானதி நாச்சியார்.

- xxx -
அந்த 3 - பாதையின் மையத்தை ... நோக்கி சத்யா..யோசனையுடன் .. நடந்துக் கொண்டிருக்க... அவன் பின்னே.. புயல் போல் வந்த ஜீப் .. சற்று வேகத்தை குறைத்து .. ஒட்டிக் கொண்டே அதை செலுத்தியவன்."எரும.. சத்யா.. ஓடி வந்து .. ரன்னிங்கல... பின்னாடி ஏறு... எனக் கத்த.. பழக்கப்பட்ட குரலில் .. சத்யா.. ஓடி வந்து .. ஜீப்பில் பாய .. அடுத்த நொடி.. ஜீப் வேகமெடுக்க - அவனை இடிக்க வந்த .. லாரி .. Lார்கெட் மிஸ்ஸான .. பதற்றத்தில் ..வேகத்தைக் குறைக்க முடியாமல், பாதையின் ஒரத்தில் இருந்த மரத்தில் இடித்து ..நிறுத்தப்பட்டது .. கூட்டம் கூடுவதற்குள்... லாரி டிரைவர் .. இறங்கி .. ஓட்டமெடுக்க ... பைக்கில் வந்த போலிஸ்ஸால் .. பிடிக்கப்பட்டு ..ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்பட்டான்..

ஜீப்பில் .. ஏறிய சத்யா. ஏண்டா.. நீயே ஒரு .. யுகாண்டா பன்னி... இதுல ....நீ.. என்னை.. எருமைனு .. சொல்லற .. போலிஸ் வேலையை விட்டுட்டு .. .. ஓடுற ஜீப்பில் .. ஏற சொல்லி வித்தை காட்டுற.... புது தொழில... பார்க்க ஆரம்பிச்சுட்டியா?.... என முன்னவனை ஓட்ட..

ஏன்? நக்கல் அடிக்க மாட்ட.. ஒரு நிமிஷம், நான் லேட்டா... வந்திருந்தா.. பப்பரப்.ே பனு .. லாரி அடிச்சு..மேலோகம் போயிருப்ப.... நக்கலாக...கூறினாலும் அவனின் .. குரலில் மெல்லிய பதற்றம் இருந்ததைக் கண்டுக்கொண்ட .. சத்யா.. உடனடியாக ..இது மருதவேல் வேலை எனப் புரிய .. உனக்கெப்படிடா.. தெரியும்.. இந்த விசயம்". . என்றிருந்தான்..

வீரா .. (வீரேந்திரன்... இவனுக்கு வீரா ) தான்.. மருதவேலுக்கு .. இன்னிக்கு தான் ..கட்டம் கட்டி ..நீங்க இரண்டு பேரும் ... காட்டு .. காட்டுனு . காட்டப் போறிங்கன்னும் ..


நீ..அந்தாளுகூட கார்ல போகும்.. பேசினதையும் ... காரை விட்டு இறங்கியதையும் .. ப்ளுடுத் வழியாக கேட்ட.... பாண்டியன்..... நீ ...அந்தாளை . காட்டுன .. காட்டுல .. காரை விட்டு நீ இறங்கினதுமே ....உன்னைப் போடப் போறான்னு.. என்னை.. உன்னை ..... பின் தொடர சொன்னான்.


நான் .. உன் மொபைல் லொக்கேஷன் மூலமா .. நீ ... இருக்கிற இடத்துல.. போலிஸ்ஸை.. வாட்ச் பண்ண சொல்லிட்டு .. அடிச்சி .. பிடிச்சி.. வந்தேன் .. ஜஸ்ட் .. மிஸ்.." என்று நண்பனை காத்த மகிழ்ச்சியில்.. ஜோக்கோடு..... தான் ...வந்த தகவலை கூறினான்.

அப்போது.... அவனின் அலைபேசி, அழைக்க... அதில் .... பாண்டியன் அடிப்பட்டு ..மருத்துவமனையில் .
சேர்க்கப்பட்ட செய்தி ....பாண்டியனின் கார்ட்ஸ் மூலம் சொல்லப்பட்டதும் .. காரை ஓரமாக நிறுத்தியவன்.,,,

போனை அணைத்து விட்டு .. தலையில் அடித்துக் கொண்டே ."ஒரு நண்பனை காப்பாத்திட்டு. ஒருத்தனை
உயிருக்குப் போராடவிட்டுட்டேன்.. நான் எல்லாம் என்ன ஏ.சி.பி.....சத்யா.... என பதறினான். ஏ சி பி .மாறன் ....

பின் இருவரும் ... பதறி மருத்துவமனைக்கு வர ... அங்கே., தலையில் அறுவைச் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது..பாண்டியனுக்கு ..

ஆப்ரேஷன் தியேட்டருக்கு .முன்.மாறனும், சத்யாவும்.. நின்றிருக்க .. ஏதேட்சையாக சத்யா திரும்ப.....அங்கிருந்த சேரில்.. அமர்ந்து... தன் கையிலிருந்த பாண்டியனின் ... இரத்தத்தைப் பார்த்து.. கதறிக் கொண்டிருந்த ..ரதியிடம் ஓடினான் சத்யா.,,,
அவளின் கசங்கிய தோற்றத்தில் .... மனம் வலிக்க...." நாச்சி "என சத்யா அழைக்கவும்...

ஆப்ரேஷன் ரூம் ...கதவைத் திறந்து வெளியே... வந்த மருத்துவர் ..
மாறனிடம் ..பாண்டியன். ரிலேஷன்ஸ் எனத் தயங்கமாக கேட்க .. என் ப்ரெண்ட்டு தான் சொல்லுங்க ... அவன் ... எப்படி இருக்கிறான்?.... என மாறன் ... அவரின் தயக்கத்தில் .. பயத்தோடு.. மருத்துவரைப் பார்த்துக்கேட்டான்.

மருத்துவர் வெளியே வந்ததிலிருந்து .. உயிரைக் கையில் பிடித்தப்படி அவரின் பதிலுக்காக ...அவரையே பார்த்திருந்த ரதி.. மருத்துவர் கூறிய பதிலால் .. மயங்கிச் சரிந்தாள் ....


- xx - காதல் தொடரும் ..
 
Last edited:
Top