திசை மாறா காதல்

Advertisement

Kani Dev

New member
Member
அனைவருக்கும் வணக்கம் ,

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. என் பெயர் கனி தேவ்.. வேறு தளங்களில் சில நாவல்களை எழுதி இருக்கிறேன் . உடல்நிலை காரணமாக தற்காலிகமாக பதிவுகள் தொடர முடியாமல் போய்விட்டது . இருந்தாலும் , சிறு நம்பிக்கை, மீண்டெழுவேன் என்று .. அதன் தொடக்கமாக கனவு பட்டறை போட்டியில் பங்கெடுத்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைப்பு வந்தது போட்டியில் கலந்துக் கொண்டேன் .

" திசை மாறா காதல்.. ", தலைப்பிற்கு ஏற்றார் போல் இது முழுக்க முழுக்க காதல் கதை தான் . என்ன..! சற்று மாறுபட்ட கோணத்தில் அமைந்த காதல் கதை இது .

அதனால் மக்களே.. தொடர்ந்து என் நாவலை படித்து.. தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து, ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்..

இப்படிக்கு
உங்கள் தோழி
கனி தேவ் 💕💕

இதோ இனி நம் உலகிற்குள்...

திசை மாறா காதல்

❤️ பகுதி - 1 ❤️

யார் அவனோ ?
அது நள்ளிரவு வேளை. கருங் கொண்ட இருள்.. புவி முழுவதையும் தன் வசம் செய்து இருக்க.. அங்கே நிழல்களுக்கும் இடம் இல்லாமல் போனது.

எங்கும் இருட்டு.. எதிலும் கருமை.

மனித மனதில் பயத்தை மட்டுமே விதைக்க கூடிய இடமாக இருந்தது.

விண்ணை முட்டும் உயர்ந்த அடர்ந்த மரங்களுக்கும், மண்டிக் கிடக்கும் புதர்களுக்கும் இருப்பிடமாக , அவ்விடம் இருக்க. வீசும் ஊதற்காற்று அவள் மேனியை அதீத குளிரால் நடுங்கச் செய்து இருந்தது. கொடுமையிலும் கொடுமையாக மஞ்சள் நிலவிற்கும் அம்மரங்கள் வழி விடவில்லை.

அத்தகைய பெரிய காட்டிற்குள் நடுவே , தனித்து தன்னந்தனியாளாக நின்று இருந்தாள் சுடர் ஒளி. அப்பேதையின் மேனி எங்கும் அச்சம் பரவி இருந்தது.

' அவளுடன் வந்தவர்கள் எங்கே சென்றார்கள்..? ' , என்று அவளுக்குத் தெரியவில்லை. 'அவள் எப்படி தனித்து இங்கு வந்தாள்..', என்று முற்றிலுமாக அவளுக்குப் புரியவில்லை. தடதடக்கும் இதயத்தை இறுக்கிப் பிடித்தவாறு பெரும் தவிப்புடன் நின்று இருந்தாள்.

சுடர் ஒளி , இருப்பத்தியாறு வயதிலிருக்கும் யுவதி . அவள் பெயருக்கு ஏற்றார் போல் ' என்றும் புன்னகை ', என்ற சுடரை தன் இதழ்களில் ஒளிர வலம் வருபவள். ஆனால், இந்த நொடி , அவள் முகத்தில் அப்பிய பீதியிலும் , முத்து முத்தாக அரும்பிய வியர்வைத் துளிகளாலும் , தன் ஒளி இழந்து மிரண்டவளாக காணப்பட்டாள் .

ஊசி இலை காட்டில் எங்கோ.. ஒலித்த ஓநாயின் ஊளைச் சத்தத்தால் , அதிகமாக கிடு கிடுத்தவளுக்கு.. பின்னால் ஏதோ கரிய உருவம் நெருங்கி வருவது போன்ற அச்சுறுத்தும் நினைப்பையும் தடுக்க முடியவில்லை.. மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று உரசி.. சலசலத்து வீசும் குளிர் காற்றினாலும் , அவளது வியர்வை நிற்காது.. தொப்பலாக நினைந்த நிலையில் நின்றிருந்தாள் .

' நான் தைரியமானவள்..', என்று பீற்றிக் கொள்வதற்காக , நக்கல் அடித்துக் கொண்டு நண்பர்களோடு பார்த்த பேய் படங்களின் நினைவுகள் வேறு அதிகமாய் வதைக்க.. எந்த பக்கத்தில் இருந்து என்ன வருமோ.. என்ற பயமும் அதிகமாக அவளை வாட்ட , பின்னால் திரும்பிப் பார்க்கவும் அஞ்சியவளாக நடுங்கிக் கொண்டிருந்தாள் .

பயத்தின் உச்சத்தில் இருந்தவளின் அருகே , திடீரென ஒலித்த வித்தியாசமான சத்தத்தில் , பின்னங்கால் பிடரியில் தெறிக்க.. அக்கம் பக்கம் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஓடத் தொடங்கி விட்டாள் .

பாவம் , அவள் கால் அருகே இருந்த.. அந்த பெரிய தவளை சுடரின் நிலையை உணராது.. அதன் இணையை அழைப்பதற்காக கரைதல் ஒலியை ஓங்கி எழுப்பியது என்று அவளுக்கு யார் கூறுவது !

அவள் உயிரை வெளியே எடுத்து விடுவது போல் , மிக அருகில் கேட்ட மாறுபட்ட ஒலியை ஆராயும் எண்ணம் , கடுகளவும் இல்லாதவளாக கண் மண் தெரியாமல் , விழுந்து புரண்டு ஓடியவள் , மறந்தும் விழிகளையும் திறக்கவில்லை..

ஒரு கட்டத்திற்கு மேல் சுடர் ஒளியின் கால்கள் வலுவிழந்து, மூச்சும் அதிகமாக வாங்கிய பிறகே.. இரு முட்டிகளையும் குனிந்த நிலையில் பற்றிக் கொண்டவளாக சற்று தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு நிமிர , நிமிர்ந்தவளின் விழிகள் மேலும் அகலமாய் விரிந்து தெறித்து விழுவது போலானது .

மிகப் பெரிய மாளிகை.. " இங்கே இது எப்படி.. ", என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படியே அவளுடைய ஒரு மனம் ஆராய்ச்சியில் ஈடுபட , மற்றொன்றோ , " இங்கே இருந்து போய் தொலை டீ.. ", என்று அவசரப்படுத்தியது .

அம்மாளிகை மிகவும் பழமையானதாக இருந்ததாலோ.. என்னவோ.. வயோதிகரின் மேனியை அலங்கரத்த கிழிசல் ஆடை போல் துகில் உரிந்த நிலையில் , வெளிப்புற சுண்ணாம்புப் பூச்சு , ஆங்காங்கே.. உரிந்து தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த இருட்டிலும்.. அந்நிலையில் , அக்கட்டிடத்தை கண்டவளுக்கு , செதுக்கப்பட்ட கரும்பாறை போலவே காட்சி அளித்து‌ பிரம்மிக்க செய்ததோடு , அதன் எழிலும் கம்பீரமும் தொலையாததாகவே தோன்றச் செய்தது.

கட்டடக்கலையை பற்றி விரும்பி படித்து, அந்த துறையிலேயே வேலைப் பார்ப்பவளுக்கு , கண்முன் வியப்பை ஏற்படுத்தும்.. அந்த பிரம்மாண்ட பழைய மாளிகையை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாதவாளாய் , பயம் வெகுவாக ஆட்டுவித்த போதிலும் , உள்ளே சென்று பார்க்க பெரிதும் விரும்பினாள் .

எச்சரிக்கும் மனத்தை துச்சமாக தூக்கிப் போட்டவள் . பரபரத்த கால்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டவளாக , உள்ளே செல்ல தீர்மானித்த போதிலும் , சுடரின் இதயம் ரயில் இன்ஜினை விட வேகமாக தட தடக்க.. அவளது இதயத்தின் ஓசையும் புது ஒலியாய் இருட்டில் எதிரொலித்து , மேலும் பயமுறுத்தியது .

ஒருவாறு , அவற்றை அலட்சியம் செய்து , குருட்டு தைரியத்தை வருவித்தவளாக , ஓர் அடி எடுத்து வைப்பதற்காக.. இடது காலை தூக்கிய கணம் , பின்னிருந்து ஒற்றை வலிமையான கரம்.. அவளுடைய வலது தோளை , மிக அழுத்தமாக பற்றிக் கொள்ள...

" ஆ.. ஆ.. ", என்று அலறியவாறு , திடுகென்று விழிப்பு ஏற்பட்டு மெத்தையில் அமர்ந்துவிட்டாள். அரை விநாடி , சுற்றத்தை மறந்து.. காய்ந்த தொண்டையை எச்சிலை விழுங்கி நனைத்த பிறகே.. இருக்கும் இடம் புரிய.. திரு திருத்தவளாக விழிகளைச் சுழற்றி சோர்வாகவே ஆராய , அதன் பிறகே, இதுவரை தான் கண்டது அனைத்து கனவு என்று தெளிவாக புரிந்துக் கொண்டாள் .

சுடர் மெத்தையில் அமர்ந்த நிலையிலேயே , கைகளால் முகத்தை மூடிக் கொண்டு , ' உஃப்.. உஃப்.', என்று காற்றை வெளியேற்றி தன்னை ஆசுவாசம் செய்த பிறகும்.. அக்கனவில் இருந்து அவளால் சிறிதளவும் வெளி வர முடியவில்லை . விழித் திரைக்குள் மின்னியவை அனைத்து உண்மையான நிகழ்வுகள் போலவே இருந்தது .

மடக்.. மடக்.. என்று அருகே இருந்த நீரை எடுத்து அவசரமாக குடித்தவளாள்.. இதுவரை, கண்ட காட்சிகளில் இருந்து விடுபட முடியாமல் போனதாய்.. எத்தனை மணிநேரமாக திக்.. திக்.. என்ற நிலையில் , கனவில் மூழ்கி இருந்தாளோ தெரியவில்லை. ஆனாலும் , அவளுக்கு இந்நொடி வரை , கடுகளவும் அதன் தாக்கம் குறைந்து இருக்கவில்லை என்பது பரிதாபத்திற்கு உரியதாய் ..

ஏனெனில் , இப்பொழுதுள்ள நேரத்தை அறிந்துக் கொள்ளவும் , அவளுக்கு அச்சமாக இருந்தது . 'இந்நேரத்திற்கு மணி சாமத்தை கடக்கவில்லை என்றால் உடலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் அவள் உயிர் நிச்சயம் பறி போய்விடும்..' என்றே அவளுக்கு தோன்றியது.

ஆனாலும் , அவளது கண்கள் அடங்காமல் தயக்கத்துடன் கடிகாரத்தை ஏறிட , அது அதிகாலை ஐந்து முப்பது என்று காண்பித்த பிறகே.. சுடரின் உயிர்மூச்சு நெஞ்சுக்குழிக்குள் நிம்மதியாக அமர்ந்துக் கொண்டது.

" ச்சே.. ச்சே.. என்ன கனவு டா இது.. மணி தெரிஞ்சுக்கவும் ஈரக்குலைய நடுங்க வச்சிட்டுச்சு.. ச்சே.. இப்பவும் ஓடின ஃபீல் குறைய மாட்டேங்குதே.. ஆ... ஹா... வெறும் கனவு.. கனவுக்கா.. இன்னும் இந்த ஹார்ட் இவ்ளோ ஸ்பீடா துடிக்குது . அம்மாடி.. ", என்று தன் நெஞ்சில் கை வைத்து ஆராய்ந்தவளால் , அதன் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாது போகவே.. தன் பின்னந்தலையை தட்டிக் கொண்டு அதிலிருந்து மீள துடித்தவளாக , பொத்தென்று மெத்தையில் வீழ்ந்தாள் .

" உஃப்.. ஜஸ்ட் ட்ரீம் சுடர்.. ஜஸ்ட் ட்ரீம்.. ரிலாக்ஸ்.. நல்லவேளை , அந்த கௌசிகா.. இங்கே இல்லை... இருந்திருந்தா , என் கதி அதோகதிதான்.. ஒரேயடியாக ஓடியே எடுத்திடுவா.. " அவள் உச்சந்தலையில் தட்டிக் கொண்டே , தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாலும் , அந்த தொடுகை.. அவளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது .

" அது யாராக இருக்கும்.. ", என்று மூளையை தீவிர கசக்கி கொண்டு இருந்தாள் .

அந்த தடிமனான கரத்தின் அழுத்தமான பிடிப்பு .. அவளை ஆபத்தில் இருந்து காக்க பற்றியதோ ! அல்ல.. மொத்தமாக விழுங்குவதற்கு பற்றியதோ..!

ஒளியின் கனவில் கூட ஒளியிழக்கச் செய்த கரத்தின் சொந்தக்காரனை நிஜத்தில் அவள் சந்தித்தால்.. !

ரட்சகனோ.. ராட்சசனோ..
யார் அவனோ ?

- கனவுகள் தொடரும்..

இப்படிக்கு
உங்கள் கனி தேவ் 💕💕
 
Thriller story ku than romba nala waiting. innaki nenga kuduthutenga romba thanks
 
Advertisement

Advertisement

Back
Top