Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாழம்பூ வாசத்தில் நான்

Advertisement

தாழம்பூ வாசம் நீ.......

@kavipritha பொதுவாகவே நீங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கதையில் கொண்டு வரும் விதம் என்னை ஈர்க்கும்.... அத்தகைய பண்பு செழித்து இக்கதை நாயகி நாயகன் கதை போலில்லாமல் குடும்பத்தின் கதையாகவே காட்சி தருகிறது...

மூர்த்தி...தன் பிள்ளைகளின் நலன் பேணும் விதமாகட்டும் தவறுகளைச் சுட்டும் விதமாகட்டும் அவர் நல்லதொரு தந்தையாக மாமனாராக மனதில் நிற்கும் அதே வேளையில் கோபத்தை மனைவி மேல் காட்டி சாதாரண கணவராகவும் உருவம் பெறுகிறார்?......

காமாட்சி...அன்னையாக மட்டுமன்றி பாட்டி,மனைவி, மாமியார் என எல்லா நிலைகளிலும் அவரது பாங்கு சிறப்பாய் இருந்தது.
லிங்காவுக்கும் அவருக்குமான வசனங்கள் அனைத்துமே ரசிக்கத்தக்கவையாய் இருந்தன.....

இளா.... பொறுப்பான தலைமகனாய் இருந்தும் தோல்விகளில் துவண்டு போய் தீர்வு தேடாது தப்பிக்க முயன்றவன்..அவரின் மீண்டெழுதல், லதாவின் மீதான நேசத்தை உரிமையை வெளிப்படுத்தும் இடங்கள், தம்பியின் நல்வாழ்க்கை பற்றிய அக்கறை என அனைத்தும் தங்கள் எழுத்தில் படிக்கையில் அருமையாய் இருந்தது......

லதா....கணவனது அச்சாணியாய் அவர் இருந்தும்கூட கணவனின் தொழில்சரிவும் அதைக்கொண்டு கணவன் எடுக்கும் முடிவுகளும் விலகலை உண்டாக்கிய போதும் அதை சரி செய்து கொள்ளும் விதம் இயல்பாய் இருந்தது....‌..சக்தியைக் கிண்டல் செய்யும் லதா....பொறுப்பைத் தாங்கி நிற்கும் லதா...என அவரது அத்தனை பரிமாணங்களுமே அழகுதான்....

காவ்யா...சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் கூட அண்ணனிடம் தங்கையாய் வம்பிழுக்கையில் அண்ணியிடம் நட்பு பாராட்டுதலில் கவனிக்க வைத்த கதாபாத்திரம்....

லிங்கா.....சுவப்னாவை ஒருதலையாய்க் காதலித்து தன் சுவப்னங்கள் கலைக்கப்படுகையில் பொறுப்புடன் நடந்துகொண்டவன்....சக்தியை நிச்சயதார்த்த விழாவில் நடத்திய விதத்தில் மிகுந்த கோபத்தை வரவழைத்த அவன், கல்யாணத்தில் நடந்து கொண்ட விதத்தில் ஆச்சரியமூட்டினான்....தந்தையிடமான உண்மை விளம்பலும் தாயிடமான குறும்புப்பேச்சுகளும் நல்புதல்வனாய் அவனைக் காட்டின....சக்தியுடனான உறவை செம்மைப்படுத்திய விதம், உண்மைகளை மறைக்காத வெளிப்படைத்தன்மை,காதலாய் அவளைத் தாங்கும் மனம் எனக் கணவனாக அவனது செய்கைகள் அனைத்தும் உங்கள் எழுத்தில் படிக்கையில் அருமையாய் இருந்தது.....

சக்தி.... தாமுவின் மகள் லிங்காவின் ப்ரியாவாய் மாற்றம் பெறுவதை மிக அழகாய் இயல்பாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்....அவளது அழுத்தமும் காதலும் ....லிங்காவை இழுத்தது போல் என்னையும் ஈர்த்தது....

தாமு...மருமகன் மேல் அளவிலா பாசமும் நம்பிக்கையும் மரியாதையும் கொண்ட மாமனாராய் ரசிக்க வைக்கிறார்......

அம்மு...எனை இக்கதையில் சக்திக்கு அடுத்து மிகவும் ஈர்த்த பாத்திரம்....சின்னப்பா விடம் அம்மா அப்பாவிடம் சிற்றன்னையுடன் என அவளது இருப்பு கூட கதையை வண்ணமயமாக்குகிறது.......
இறுதியாய் இந்த 29 எபி....குழந்தைகள் ஆட்சி செய்த எபி....கால் வலியைப் போக்கும் லிங்கா எனக் கணவனாய்ச் சிறக்கும் வேளையில் தீபக்கைக் கண்ணசைவில் மிரட்டும் தந்தையாயும் ஈர்க்கிறார்......மூன்று பிள்ளைகளுக்கு அன்னையைக் காரணமாக்கியாயிற்று....சக்தி ஆசைப்படும் நாலாவது பிள்ளைக்கு என்னச் சொல்லி சமாளிப்பான் என யோசிக்க வைத்து விட்டான்..."நாம் இருவர் நமக்கொருவர்"லிங்காவின் கவனத்துக்கு.......மொத்தத்தில் அருமையாய்க் கதை நகர்த்திய உங்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்........வேகமான அதிக இடைவெளி இல்லாப் பதிவுகள் தந்தமைக்கு மிக்க நன்றி
P.s: அமுதங்களால் நிறைந்தேன் இன்னும் கூட பொருத்தமாய் இருந்தது....தலைப்பைப் பார்த்த பின்புதான் பாடலைக் கேட்டேன்....lovely..
linga to Sakthi while she was in college

மரகத ராகங்கள்
மணிவிழும் தீபங்கள்
மறந்திடுமா நம் கோலங்கள்

Sakthi to linga

பார்வை போகிற தூரம் நீ இன்றி யார் வேண்டும்....
பாவை ஊன் உயிர் எங்கும்
உன்னோடு ஒன்றாகும்...

Linga to sakthi

ஒரு கரை நீயாக
மறுகரை நீயாக
கரை புரண்டே ஆறாகினோம்

அமுதங்களால் நிறைந்தேன்.....
super(y)
 
Top