Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-25

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-25

அன்று அவள் செய்ததை நினைத்து சிரித்துக்கொண்டான், இந்த பாட்டுல வருவது போல் நீயில்லாம என்னால வாழ முடியாதுடி. நீ என்னை கல்யாணம் செய்யலைன்னா நான் என்ன ஆயிருப்பேன்.

நீ காதலிக்க வரவேண்டாம்...

என்னிடம் வம்பு செய்ய வா.....

நீ சொன்ன பொய் கூட

என் கோபத்தில் கரைந்து போய்விட்டதடி....

என் கண்கள் உன்னை எதிர்ப்பார்க்க

என்னிடம் மறைந்து விளையாடுகிறாய்....

தூக்கத்தையும் பசியும் மறந்தேன்

உன்னை மறக்கவில்லையடி....

எப்போது என்னிடம் வந்து சேருவாயோ

அன்று என் உயிர் வாழும்மடி...... (கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்க பீளிஸ்)

பின்னாடியே ஜீப்பில் நான்கு பேர் இறங்கி சும்மா நின்ற செல்லப்பனிடம் வம்பு வளர்க்க, அதை கேட்க போன பரதா மேல் கையை வைத்தார்கள்.

இதை பார்த்த பூவரசு கையை முறுக்கி யாருடா நீ , எங்க மாமா மேல கைய வைக்கிற முகத்தில் குத்து விட, மற்ற மூவரும் பூவரசனை அடிக்க வந்தார்கள்.

பூவரசன் அனைவரையும் அடித்து துவைத்தான், இந்த ஊரிலும் சண்டையா நினைத்து ஒருவனை பிடித்து யாருடா நீங்க கேட்க, பரதனை தள்ளிவிட்டு நால்வரும் ஜீப்பை எடுத்த சென்றுவிட்டார்கள்.

விடு மாப்பிள்ள எவனோ டூரிஸ்ட் ஆளுங்க போல.

இல்ல சார் இவங்கள பார்த்தா டூரிஸ்ட் ஆளுங்க போல தெரியல-செல்லப்பா.

சரி கிளம்பலாம் வாங்க, இப்பவே மதியம் ஆயிடுச்சு, காரில் ஏறி அடுத்த ஊருக்கு சென்றார்கள்.

கதவை திறந்து மாதவன் உள்ளே வந்தான், சுந்தரியை பார்த்து இப்ப எப்படிம்மா இருக்கு,

இன்னும் பிவரா இருக்கு டாக்டர் முடியில.

சுந்தரி மருந்து வாங்கிட்டுவர சொல்லிருக்கேன், இங்க கிடைக்காதாம், ஊருக்குள் போகனும்மாம்.

டாக்டர், மாமாவ காண்டாக்ட் செய்ய முடிஞ்சதா,

இல்லம்மா இங்க போன் சிக்னலே கிடைக்கல மழையா வேற இருக்கு, நைட் ஒரு வண்டி வரும்மா அதுல போய்தான் போன் செய்யணும். நீ முதல்ல சாப்பிடு.

அண்ணா, மாமா என்னைய நினைச்சி பயப்படும், ரொம்ப கஷ் டப்படும்.

புரியுதுடா நம்ம சூழ்நிலை பாரு கவனமா இருக்கணும், இன்னிக்கு நைட் எப்படியாவது உங்க மாமாகிட்ட பேசிடுவேன். ஓகே வா கொஞ்சமாவது சாப்பிடுடா.

சரி என்று தலையை ஆட்டினாள், மதியம் மணி மூன்று, அதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது. வானம் இருட்டிவிட்டது. அந்த கிராமத்தை அடைந்தார்கள்.25 வீடுகள் மட்டும் இருந்தது, ஓட்டுவீடு, குடிசை போன்ற வீடும், அரசாங்க கட்டிக்கொடுத்த வீடும் நான்கு , ஐந்து இருந்தது.

ரவி, குமாரிடம் சென்றி விசாரித்தார்கள், அண்ணா யாருமே வெளியவே வரல மழை வேற ஆரம்பிச்சிருச்சு. ஓண்ணும் புதுசா ஆளுங்களும் இல்ல ரவி கூற.

உடனே குமாரு, அண்ணா ஒரு ஆள் மருந்து வாங்கி வந்து தலைவர்க்கிட்ட கொடுத்தான். சின்ன பண்டல் மாதிரி இருந்தது.

அப்போ சுந்தரி இங்கதான் இருக்கா, பரதா செல்லப்பா வா போயி அந்த ஊருர் தலைவர்கிட்ட பேசலாம்.

தலைவர் காளையனை பார்த்தார்கள். சிமென்ட் வீட்டின் உள்ளே, வாங்க என்ன வேனும் உங்களுக்கு.

நான் சேலத்திலிருந்து வரேன், இங்க இரண்டு டாக்டர் காணமா போயிட்டாங்க அவங்கள தேடி தான் வந்தோம். இங்க இருங்காங்களா ஐயா.

அப்படி யாரும் ஊருக்குள்ள வரலேப்பா , வந்தா சொல்லுறேன் தம்பி. நீங்க கிளம்பலாம்.

என்ன பூவரசு இப்படி பேசறாரு, செல்லப்பா மற்றவர்களும் வெளி யே செல்ல, மாமா அவங்களுக்கு பணத்தை செட்டில் பண்ணிட்டு வா மாமா.

ஐயா, இங்க பாருங்க, தன் பேக்கிலிருந்து கல்யாண போட்டோவை காட்டினான். இவ என் பொண்டாட்டி, உங்கிட்டதான் இருக்கா தெரியும். இதோ இங்க காயுதே அந்த சுடிதார் சுந்தரிது தான்.நான் நாலு நாளா அலையுறோம். தயவு செய்து சொல்லுங்க. , என்று அவர் கையை பிடித்தான்

அந்த போட்டோவை பார்த்த காளையன் பக்கத்திலிருந்த ஆளின் காதில் ஏதோ கூற, அந்த ஆள் உள்ளே போய் மாதவனை அழைத்து வந்தான்.

பூவரசனை மாதவன் பார்த்து நீங்க என்று கேட்க.

நான் சுந்தரியோட மாமா, அவ புருஷன் என்று முறைத்தான். இங்க பாருங்க என் சுந்தரி எங்கடா என்னாச்சு அவளுக்கு, கோபமாக மாற.

சார் வாங்க என்று உள்ளே அழைத்து சென்றான் தோட்டபக்கம் ஓட்டு வீடு இருந்தது. மழையில் நனைந்தார்கள், வீட்டின் கதவை திறந்தான் மாதவன்.

கயற்று கட்டலில் படுத்திருந்தாள் மெல்லிய காட்டன் புடவை உடுத்திருந்தாள், முகம் பொலிவில்லாமல், தலை வராமல், கண்கள் சோர்வாக இருந்தது. கதவை திறக்கமும் சத்தத்தை கேட்டு கண்கனை திறந்து பார்த்தாள்.

பொம்மிமி என பூவரசன் கத்த ,பூவா சொல்லி எழுந்து நின்று முடியாமல் கீழே விழுந்தாள் பொம்மி.

ஓடி சென்று அவளை தூக்கி நிறுத்தினான். பொம்மி இங்க பாரு என்னடி இப்படியிருக்க அவள் முகத்தை கையில் ஏந்தினான்.

மாமா என்று அவள் சொல்ல, கட்டி அனைத்தான், இதை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியே, சார் சுந்தரிக்கு வைரல் பிவர் சரியாயிடும் இப்பதான் இன்ஞ்சக்ஸன் போட்டேன், பயப்படாதிங்க.

சரியா சாப்பிடாதனால சத்து இல்லாது போயிடுச்சு.

சுந்தரி என்று பரதா அழைக்க , பரதாவை பார்த்து தலை அசைத்தாள்.. எங்கள பயமுறுத்திடம்மா, சரி மாப்பிள்ள நீ சுந்தரியை பாரு நான் அக்காகிட்ட விஷியத்த சொல்லிடுறேன் சிக்னல் கிடைக்குமா தெரியில நான் பாத்துக்கிறேன்.

அனைவரும் இவர்களுக்கு தனிமை தந்துவிட்டு சென்றுவிட. மெல்ல நிமிர்ந்து தன் பூவாவை பார்த்தாள், ஷேவ் செய்யாத மிகவும் களைந்த உடம்பு, மாமா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும் போல. கட்டிலில் இருந்து எழுந்தாள். அவள் கையை பிடித்து உட்கார வைத்தான்.

மாமா என்று அவள் அழ, முகத்தை கையில் ஏந்தினான்.

சாரி மாமா நான் உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன். எங்க உன் பார்க்காம போயிடுவேனோ பயந்துட்டேன் என்று கேவி அழ.

அவள் முகம்ம முழுக்க முத்தமிட்டான். மூக்கும் மூக்கும் உரசி, எத்தனை நாள் என்ன அழ வைக்கனும் ஆசைப்பட்ட.

சாரி மாமா.

பேக்கிலிருந்து டிரஸை வெளியே எடுத்தான், இந்த புடவை வேண்டாம் , நைட் பேண்ட் புதுசா வாங்கினேன் கொடைக்கானல்ல போட்டுக்கோ. அவள் கையில் கொடுத்தான்.

அதை வாங்கி உள்ள மறைவான இடத்தில் சென்று மாற்றினாள்.

ஏய் நான் ஹெல்ப் பண்ணவா. அவள் டிரசை மாற்றிக்கொண்டு வர.

என்னடி ஆச்சு உனக்கு நான் உன் புருஷன் , கல்யாணம் ஆயிடுச்சு, எல்லாமே முடிஞ்சிடுச்சு, ஞாபகமிருக்கா இல்லையா. எல்லாம் மறந்திடுச்சா.

சுந்தரி பூவரசனை பார்த்து முறைக்க , எல்லாம் ஞாபகம் இருக்கு.

அப்பறம் என்னடி ஓவரா பீலீம் காட்டற.

தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து அவள் .தலையை வாரினான். சிறிய டவலை தண்ணீரில் நனைத்து முகத்தை துடைத்தான். நெற்றியில்ல என்ன அடிபட்டிருக்கு பொம்மி.

அது மாமா காருல இடிச்சுட்டு மயங்கிட்டேன், அப்பறம் சரியா நினைவே வரல. இரண்டு நாள் முழுவது மயங்கியே இருந்தேன் மாமா.

சரி நீ தூங்கு நான் பரதாவ பார்த்துட்டு வரேன்.மழை நின்னுடுச்சுன்னா ஊருக்கு கிளம்பலாம் ம்ம் ஓகேவா.





 
nice ud

why madhavan did not call poova and tell that she is safe

is something fishy about him
 
சுந்தரி கிடச்சுட்டா
அருமை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
லஷு?
 
Top